இந்திய முஸ்லிம்களுக்கு
பாதிப்பில்லையா ?
குடியுரிமைச் சட்டத்திற்கு
ஆதரவாக கருத்து பேசுகிறவர்கள் இந்தச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்களுக்கு எந்த பாதிப்புமில்லை
என்று கருத்து சொல்லி விட்டு போராட்டக்காரர்கள் தவறாக வழிநட்த்தப்படுகிறார்கள் என்று
கூறிவிடுகின்றன.
இச்சட்டத்தை எதிர்ப்போரின்
வாதங்களுக்கு எந்த பதிலையும் கூறாமல் போகிற போக்கில் இப்படி கருத்துச் சொல்கிறவர்கள்
பாஸிஸ்டுகளே!
திரு ரஜினிகாந்த
அந்தப் பட்டியலில் சமீபத்தில் சேர்ந்து கொண்டார்.
மக்கள் கனிசமாக
திரண்டு ஒரு போராட்டத்தில் இறங்கியிருக்கிற போது ஜனநாயக நாட்டில் அதற்கு எதிராக கருத்துச்
சொல்வதற்கு உரிமையுண்டு என்றாலும் போராட்டக்கார்ர்களை இழிவுபடுத்துவதற்கு யாருக்கும்
உரிமை கிடையாது.
மக்கள் தவறாக வழிநட்த்தப்படுகிறார்கள்
என்றால் அந்த மக்கள் யார் ?
நாட்டிலுள்ள ஆர்
எஸ் எஸ் சித்தாந்திகள் அல்லாத அனைத்து கல்வியாளர்கள், சட்டவல்லுநர்கள், மாணவர்கள் அறிவியல்
அறிஞர்கள் மதகுருமார்கள் அனைத்து மதங்களையும் சார்ந்த ஆண்கள் பெண்கள் என மக்கள் திரண்டு
இந்தப் போராட்ட்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில்
நேற்று உரையாற்றிய ஆர் ஜேடி எம்பி மனோஜ் , தமிழகத்தின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி
திரு ஹரி பரந்தாமன் போன்றோர் “ சுதந்திர இந்தியாவில் இப்படி மக்கள் அனைவரும் ஒன்று
திரண்ட ஒரு போராட்டத்தை கண்டதில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
மத்திய அர்சு கொண்டு
வந்துள்ள ஒரு சட்டத்தை எதிராக இத்தனை மாநில அரசுகள் எதிர்த்ததில்லை. சுமார் 15 மாநிலங்கள்
இச்சட்டத்தை எதிர்த்துள்ளன.
சுமார் ஆயிரம்
அறிஞர்கள் ஒன்று திரண்டு இச்சட்ட்த்திற்கு எதிராக கையெழுத்திட்டு மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளனர்.
என் ஆர் சியை நாடு
முழுவதும் கொண்டுவருவோம் என்று மார்தட்டிப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் தனது டிவிட்டை
அழித்து விட வேண்டிய நிர்பந்தத்தை. இப்போராட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன.
இப்படி ஒரு போராட்டத்தை
தவறானது அல்லது பீதியை கிளப்புகிறார்கள் என்று சொல்வது எந்த வகையில் அறிவுடமையாகும்
?
இதில் இன்னொரு
கேள்வியிருக்கிறது.
அமைதியாக போராடுகிற
மக்களை தடுத்து காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. துப்பாக்கி சூடு நடத்தி
17 வயதுக்குட்பட்ட சிறுவர்களை கூட கொன்று குவிக்கிறது. தில்லியில் பகல் நேரத்தில் மூன்று
முறை சிவிலியன்கள் துப்பாக்கியோடு பொது இடத்தில் தோன்றி துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள்.
இவற்றை எல்லாம் நடந்த்த்தாகவே கண்டு கொள்ளாமல் போரட்ட்த்தை மட்டும் குறை கூறுகிறவர்கள்
எந்த வகை நியாயாவான்கள் என்பது ?
இவர்கள் பாஸிஸ்டுகள்
அல்லாமல் வேறு யாராக இருக்க முடியும் ?
போராட்டத்தை இழிவு
படுத்த பரப்பப்படும் இன்னொரு தகவல்,
இந்தச் சட்டத்தால்
இந்திய முஸ்லிம்கள் பாதிக்கப் பட மாட்டார்கள். இன்னும் சில பேர் இந்தியர்கள் யாரும்
பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறுகிறார்கள். நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி
இதை மீண்டும் கூறியிருக்கிறார்.
இது அப்பட்டமான
பொய்யாகும்.
போராட்டக் காரர்களான
நம்முடைய வாதம் என்ன வென்றால் ?
இந்தச் சட்டம்
இந்திய முஸ்லிம்களை மட்டுமல்ல, இந்தியர்கள் ஒவ்வொருவரையும் நேரடியாக பாதிக்க கூடியதாகும்
எப்படி என்றால்
?
இது இந்திய மக்களான
நம்முடைய உரிமைகளுக்கு உத்தரவாத அளிக்கிற அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையை தகர்க்கிறது.
சி ஏ ஏ சட்டம் முஸ்லிம்களைத் தவிர மற்ற மதத்தினருக்கு குடுயுரிமை வழங்கப்படும் என்கிறது.
இது மதச்சார்பற்ற இந்தியா என்ற அரசியலமைப்பின் முகத்தை சிதைக்க கூடிய திட்டமாகும்.
இந்ந்திய ஆரசியலமைப்பை இந்துராஷ்டிரா அரசியலமப்பாக்கும் முயற்சியாகும்.
மதச்சார்பற்ற இந்தியாவை
நேசிக்கும் எந்த குடிமகனையும் சி ஏ ஏ சட்டம் பாதிக்கும்.
மத்தியில் ஆட்சியில்
இருக்கிறவர்கள், இந்திய அரசியலமைப்பிற்கு விசுவாசமானவர்கள் அல்ல. அவர்களிடம் வேறு ஹிட்டன்
அஜெண்டா மறைமுக திட்டம் இருக்கிறது என்பது
வெள்ளிடை மலை போல உலகிற்து தெரிந்த உண்மையாகும்.
இந்த உண்மையை கவனிக்காமல் போராட்ட்த்திற்கு எதிராக கருத்துப் பேசுகிறவர்கள்
கண்ணிருந்தும் குருடர்களாக தங்களை ஆக்கிக் கொண்டுவிட்டவர்கள ஆவார்கள்.
இப்போராட்ட்த்தில்
முஸ்லிம் மதகுருமார்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்று புதிதாக குற்றச் சாட்ப்படுகிறது.
முஸ்லிம் மதகுருமர்கள்
அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் அச்சப்பட மாட்டார்கள்.
إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ
الْعُلَمَاءُ إِنَّ اللَّهَ عَزِيزٌ غَفُورٌ ) فاطر/28 .
என்பது மட்டுமல்ல
நீதிக்காகவே தவிர வேறு எதற்காகவும் போராட வரமாட்டார்கள் என்பதும் வரலாற்றில் நிரூபிக்கப்
பட்ட சத்தியங்களாகும்.
أبو محمد عز الدين عبد
العزيز بن عبد السلام
ஹிஜ்ரீ 7 ம் நூற்றாண்டில் மகத்தான்
அறிஞர்
الملقب بسلطان العلماء وبائع الملوك وشيخ الإسلام،
நீதிபதியாக காழி இருந்தவர்
வரலாற்றில் நடந்த ஒரு கொடுமை . டமாஸ்கஸின் மன்னராக இருந்த சாலிஹ் இஸ்மாயீல் என்பவர் சிலுவையுத்தக்கார்ர்களுக்கு ஆதரவாக இருந்தார். சிலுவை யுத்தக் கார்ர்கள் டமாஸ்கஸீல் உணவுப் பொருட்களையும் ஆயுதங்களையும் டமாஸ்கஸில் வாங்கிக் கொள்ள அனுமதித்தார். எகிப்திலிருந்து சிலுவை யுத்தக்கார்ர்களுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த அய்யூ மன்னர்களூக்கு எதிராக இந்த காய் நகர்த்தலை அவர் மேற்கொண்டார்.
அறிஞர் இஜ்ஜிப்னு அப்தில்லாஹ் அதை பகிரங்கமாக எதிர்த்தார். பிரஞ்சுக்கார்ர்களுக்கு ஆயுதம் விற்பதை ஹராம் என்று அறிவித்தார். மன்னருக்கு எதிராக டமாஸ்கஸின் புகழ்பெற்ற உமய்யா ஜாமியா மஸ்ஜிதில் உரையாற்றினார்.
وذلك سنة 638هـ. وزيادةً على ذلك، أذن إسماعيل للصليبيين بدخول
دمشق لشراء السلاح لقتال المسلمين في مصر، فغضب العز بن عبد السلام،
وبدأت الجولة الأولى
باستفتاء العز في مبايعة الفرنج للسلاح، فقال: «يَحْرم عليكم مبايعتهم، لأنكم
تتحققون أنهم يشترونه ليقاتلوا به إخوانكم المسلمين»، ثم صعد منبر المسجد الأموي
الكبير، وذمَّ موالاة الأعداء، وقبّح الخيانة، وشنّع على السلطان، وقطع الدعاء له
بالخطبة، وصار يدعو أمام الجماهير بما يوحي بخلعه واستبداله، ويقول: «اللهم أبرم
لهذه الأمة أمراً رَشَداً، تُعِزّ فيه وليَّك، وتُذِلُّ فيه عدوَّك، ويُعمَل فيه
بطاعتك، ويُنهى فيه عن معصيتك»، والناس يبتهلون بالتأمين والدعاء للمسلمين، والنصر
على الأعداء
இதற்காக மன்னர் அவரை பொறுப்பை விட்டு நீக்கினார். அவருக்கு மரண தண்டனை அளிக்க உத்தரவிட்டார்.
பொறுப்பிலிருந்து விலக்க பட்ட்தை சாதாரணமாக ஏற்றூக் கொண்ட அறிஞர் இஜ்ஜு டமாஸ்கஸில் வாழ்வது சிரம்மான போது எகிப்தில் குடியேறினார்.
எந்த நிலையிலும் சத்தியத்தை விட்டுக் கொடுக்க அவர் ஒப்புக்கொள்ள வில்லை.
உலகம் முழுவதிலும் ஆலிம்களின் வரலாறுகளில் இத்தகைய வாழ்க்கை செய்திகள் தான்
நிறைந்திருக்கின்றன.
இந்தியாவில் பிரிட்டிஷ் கார்ர்களுக்கு – ஆங்கிலப் படையினருக்கு எதிராக செயல்பட
பலரும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்த நேரத்தில்
பிரிட்டிஷ் படையினரை முதலி எதிர்க்க துணிந்தவர்கள் ஆலிமகளேயாவார்கள்.
1856-இல் இந்திய ராணுவத்தில் புதிய என்ஃபீல்டு துப்பாக்கியைப்
பிரிட்டீஷார் அற்முகம் செய்தனர். ஆத்துப்பாக்கியில் அடைக்கப்பட்ட தோட்டாக்கள் எள்தாக
வெளியேறுவதற்காக பன்றிக் கொழுப்பும் பசுக் கொழுப்பும் அத்தோட்டாக்களில் தடவப்பட்டது.
தோட்டாக்கள் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய பின், அத்ஆதாட்டாக்களைப் பொதிந்திருந்த
மேலுறைத் தகடுகளைப் பல்லால் கடித்து இழுத்துதான் வெளியில் எறிய வேண்டும். அப்போது அதில்
தடவப்பட்டிருந்த பன்றி – பசுக் கொழுப்பு வாயில்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.
இஸ்லாமியருக்கு பன்றிக் கொழுப்பு விலக்கப்பட்ட(ஹராம்)
கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள் அடைக்கப்பட்ட
எனடஃபீல்டு துப்பாக்கிகளை முதன் முதலாக வங்காளத்தில் முகாமிட்டிருந்த 19-வது படைப்பிரிவில் பயன்படுத்தி பரிசோதிக்க ஆங்கில அரசு தீர்மானித்தது.
இந்த போராட்ட்த்தை தூண்டிவிட்டத்தில் ஆலிம்களே முக்கியப்
பங்கு வகித்தனர். காரணம் இதில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிரான் வெளிப்படையான அத்துமீறல்
இருந்த்து.
இதுபற்றி இந்துதுதுவாவின் தந்தை வீரசாவர்க்கர், எழுதுகிறார்
1857-இல்…தேசயாத்திரை செய்வதாக் கூறிவந்த சன்னியாசிகளும் பக்கிரிகளும் மௌலவிகளும் பண்டிதர்களும்
ஒவ்வொரிடத்திலும் ரகச்யமாக ஜனங்களுக்கு சுதந்திர யுத்தத்தைப் பற்றி போதித்துச் சென்றனர்.
அவ்வாறாக புரட்சித்தீ எங்கும் பரவுவதற்கான டுறைகள் வெகு சதந்திரமாக் கைக் கொள்ளப்பட்டன.
அந்தப் மௌல்விகள் ஒவ்வொரு நகரத்திறு;கும் கிராமத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகையில், அவர்களுக்குப்பின் ஏராளமான தொண்டர்கள் பிச்சைக்காரர்கள் (பக்கீர்கள்) போல் வேசம்
போட்டுக் கொண்டு கூட்டம் கூட்டமாய்ச் சென்று தீவரப் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.
அவர்கள் பிச்சை எடுப்பவர்களாக வீட்டுக்கு வீடு சென்று ஜனங்களின் ஹிருதயத்தில் சுதந்திர
உணர்ச்சியையும் தேச பக்தியையும் குமுறி எழும்படி செய்தார்கள்ழூ. -என்று வியந்து தன்
நூலில் வடித்துள்ளார்.
இதனால் பெர்ஹாம்பூர், மீரட் ராணுவ முகாம்களில் இருந்த ஏராளமான இஸ்லாமிய வீரர்கள் பிறசமய வீரர்களுடன்
இணைந்து என்ஃபீல்டு துப்பாக்கிகளைத் தொடமாட்டோம் என்று கலகம் செய்தனர்.
(எரிமலை பக்கம். 63-64)
ஆலி முஸ்லியார்
1921-இல் மலபார் மாப்பிள்ளைக் கிளர்ச்சியின் போது, கேரளாவில் எர்நாடு, வள்ளுவநாடு, பகுதிகளை ஒருங்கிணைத்து
கிலாபத் இராஜ்யம் என்ற தனி சுதந்திர அரசை அலி முஸல்லியார் பிரகடனப்படுத்தினார். இவ்வரசக்கென
கிலாபத் கொடி, கிலாபத் நாணயம், கிலாபத் ராணுவம் ஏற்படுத்தி தனி முத்திரையுடன் கூடிய சாகச ஆட்சியை, ஆங்கிலேயரை ஆதரித்த சமஸ்தாங்களின் எல்லைகளுக்குள்ளேயே நடத்திக்காட்டினார்.
அப்துல் ஹமீது பாக்கவி.
கதராடை அணியாத மணமகனின் திருமணத்தில் உலமாக்கள்
(மார்க்க அறிஞர்கள்) கலந்து கொள்ள மாட்டோம்.- சுதந்திரப் போராட்ட வீர்ர்
மௌலானா அப்துல் ஹமீது பாக்கவி அறிவித்தார்.
மௌல்வி செய்யது அஹ்மதுல்லாஹ் ஷாஹ்.
சென்னையில் பிறந்து வளர்ந்து உத்திரப் பிரதேசத்தில்
வாழந்தவர்.புரட்சி விதையை நாடெங்கும் விதைப்பபதந்காக வடஇந்தியாவின் பல பகுதிகளில் யாத்திரை
செய்தவர்.லக்னோவில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பகிரங்கமாக
சுதந்திரப் பிரச்சாரம் செய்தார். ‘’ஆங்கிலேயர்களைக் கொன்று குவித்து தேசத்திலிருந்து அவர்களை ஒழித்தாலன்றி நாம் நம்
தாய் நாட்டையோ மதங்களையோ பாதுகாக்க முடியாது’’ - உன்றார். ஆங்கில அரசு
வதித்திருந்த பல தடைகளை மீறி இவ்விதம் பிரச்சாரம் செய்ததற்காக அவர்மீது ராஜத்துரோக
குற்றம் சாட்டி, ஆங்கில அரசு அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது.
(வீரசாவர்க்கர்,எரிமலை,பக்கம்.65.)
அவர் கைது செய்யப்பட்டு பைசாபாத் சிறையில்
அடைக்கப்பட்டார். 1857 - இல்நடந்த சிப்பாய் கிளர்ச்சியின் போது சிறைச்சாலையை
உடைத்து சிப்பாய் போராளிகள் இவரை விடுவித்தனர். சுpறந்த ராணுவ யுத்த நிபுணரான
அஹமதுல்லா ஷாஹ் தனக்கென ஒரு சிறுபடையைத் திரட்டி, லக்னொவின் ஒரு பகுதியைக்
கைப்பற்றி ஒரு குட்டி அரசையே நடத்தினார்.
ஆலம்பாக்கில் உள்ள பிரிட்டீஷ் ராணுவத் துருப்புகளுக்கு
கான்பூரில் இருந்து ஆயுதங்கள் கொண்டு வருவதை அஹமதுல்லா ஷாஹ் அறிகிறார். ஆந்த ஆயுதங்களைக்
கைப்பற்று வதற்காக 1858 ஜனவரி 15 - இல் கான்பூர் நோக்கிப் படை நடத்தினார்.
மேஜர் அவுட்ராம் படைக்கும் மௌல்வி படைக்கும்
மிகப்பெரிய மோதல் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் கையில் தோட்டா பாய்ந்து காயமடைந்தார்.
ஆனால் வீரர்கள் அவரை ஆங்கிலேயர் கையில் சிக்கவிடாமல்
ஒரு டோலியில் வைத்து லக்னோ கொண்டு வந்துவிட்டனர். தனக்கு ஏற்பட்ட காயம் பூரணமாக குணமடையுமுன்
பிப்ருவரி 15 - இல் மீண்டும் போர் முனைக்கு வந்துவிட்டார். கான்பூரில் இருந்து அவுட்ராமின் படை
தங்கியிருந்த பகுதிக்கு ஆங்கிலத் தளபதி காலின் வருவதாகத் தகவல் கிடைத்தது. காலின் வந்து
சேருமுன் அவுட்ராமை ஒழித்துவிட வேண்டுமென்ற திட்டத்துடன் தன் தாக்குதலைத் தொடர்ந்தார்.
ஆனால் மௌல்வியின் முயற்சி தோல்வியடைந்தது. என்றாலும் மௌல்வியின் இத்தாக்குதல்கள் ஆங்கிலேயருக்குப்
பெரும் அச்சத்தையும் பல சிக்கல்களையும் ஏற்படுத்தின.
அஹமதுல்லா ஷாஹ்வின் இணையற்ற தைரியத்தை ஆங்கில
வரலாற்று அறிஞர் ஹோம்ஸ் குறிப்பிடும் போது:
புரட்சிக்காரர்களின்... தலைவரான பைசாபாத் மௌல்வி
அஹமதுஷா மகத்தான சார்த்தியமும் தைரியமும் உத்வேகமும் வாய்க்கப்பெற்றவர்.ஓர்உயர்ந்த
இலட்சியத்திற்காகப் போராடும் ஆற்றல் படைத்தவர். ஒரு பெரும் ராணுவத்தையும் நடத்தும்
சக்தி பெற்றவர். என்று புகழ்ந்துள்ளார்.
(வீரசாவர்க்கர், எரிமலை., பக்கம்.354.)
அறிஞர் மௌல்வி மிர்ஜா மஹ்தீ சாலிஹ்
சிறந்த போர்க்கலைப் பயிற்சியாளராகத் திகழ்ந்த
மிர்ஜா மஹ்தீ, முஃத்தீகன்ஞ் பகுதியைத் தன் ஆளுகைப் பகுதியாகக் கொண்டவர். இவரது முஃத்தீகன்ஞ் எல்லைக்குள்
ஆங்கிலேயர் நுழைந்தால் அவர்களது தலை தப்பாது.
1858 - இல் இவரை வீழ்த்துவதற்காக கௌகாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆங்கிலப் படை மிர்ஜா
மஹ்தீயின் எல்லைக்குள் நுழைய முடியாமல் தத்தளித்தது. பல நாள் முற்றுகைத் தொடர்ந்தது.
ஒரு நாள் அதிகாலை பஜ்ரு தொழுதுவிட்டு பள்ளிவாயிலை விட்டு மிர்ஜர் மஹ்தீ வெளிவர, ஆங்கிலப் படை அவரைச் சூழ்கிறது.
தன் நபராக நின்று 20 பேரை வெட்டி வீழ்த்தி இறுதியில் எதிராளியின்
குண்டுகளை மார்பில் தாங்கி சாய்கிறார். இப்படி இந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடிய
உலமாக்கள் பலர் வீர மரணம் அடைந்தபோது, அவர்களது ஜனாஸா (இறந்த உடல்) வைப் பொதிந்த கபன்துணி முழுக்க இரத்தக்கறைப் படிந்திருந்தது
உண்மை வரலாறாகும்.
பூரண சுதந்திரம் கேட்ட முதல் இந்தியர் ஒரு ஆலிமே
1929
– ஆம் ஆண்டு டிசம்பர் 29 - இல் லாகூரில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில்தான்
இந்தியவுக்கு பூரண சுதந்திரம் வேண்டும்) என்ற தீர்மானம் முன் வைக்கப்பட்டது.
ஆனால் அதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பே பூரண
சுதந்திரமே எங்கள் பிறப்புரிமை – என்ற கோசத்தை வைத்தவர் ஓர் இஸ்லாமிய மார்க்க
அறிஞர் ஆவார்.
1921
- இல் அஹமதாபாத்தில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானத்தை
பிரதானமாக முன் மொழிந்தனர். இந்தியாவிற்கு டொமினிக் அந்தஸ்தினை அதாவது பாதுகாக்கப்பட்ட
சுதந்திரத்தினை வழங்க வேண்டும் என்பதே அத்தீர்மானம். டோமினிக் அந்தஸ்து இந்தியாவிற்கு
வழங்கப்பட்டால் ஆட்சியில் ஆங்கிலேயருடன் இந்தியரும் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகும்
என்று காங்கிரஸின் மூத்த தலைவர்கள் கருதினர்;.
மிகப்பெரும் தேசியத் தலைவரும் கிலாபத் இயக்கத்
தலைவர்களுள் ஒரவருமான மௌலானா ஹஜ்ரத் மொஹானி அவர்கள் மட்டும் இத்தீர்மானத்தை எதிர்த்து
குரல் கொடுத்தார். ஆங்கிலேயரிடமிருந்து நாம் பெறவேண்டியது பாதுகாக்கப்பட்ட சுதந்திரமான
டொமினிக் அந்தஸ்தல்ல. ஆங்கிலேயர் இம்மண்ணிலிருந்து முழுமையாக வெளியேறி இம்மண்ணின் மைந்தர்களிடம் இந்த
தேசத்தை ஒப்படைக்கின்ற பூரண சுதந்திரம் ஆகும் என்றார்.
புரண சுயராஜ்யம் (ஊழஅpடநவந ஐனெநிநனநnஉந யேவழைn) தீர்;மானத்தை முதன் முதலாக முன்மொழிந்து ஹஜ்ரத்
மொஹானி ஆற்றிய தீர்;க்கமான உரையைக் கேட்ட மாநாட்டுப் பங்கேர்ப்பாளர்கள், இம்மாநாட்டில் ஹஜ்ரத் மொஹானியின் பூரண சுயராஜ்ய
கோசம் தீர்மானமாக நிறைவேற்றப்படாதா என்ற ஆர்வத்துடன் இருந்தனர்.
ஆனால் காந்தியடிகள் இத்தீர்மானத்தை வன்மையாக
எதிர்த்தார். அதனால் ஹஜ்ரத் மொஹானியின் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் போயிற்று
ஆனால் 1929 லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் அதே பூரண சுயராஜ்யம்
கோரிக்கையை காந்திஜியே முன் மொழிந்தது வரலாறு.
இந்திய சுதந்திரப் போரட்ட களத்தில் முஸ்லிம் மதகுருமார்களின்
பங்களிப்பு என்பது எவ்வளவு தூரம் கவனிக்கப் பட வேண்டியது என்பதை சாவர்க்கரே திரும்ப
திரும்ப கூறுகிறார்
அன்றும் சரி இன்றும் சரி முஸ்லிம் மதகுருமார்கள் நாட்டிற்கு
நன்மையான நீதிக்கு ஆதரவான ஒரு போராட்ட்த்தை முன்னெடுப்பதில் முதலில் நிற்பவர்களே
அது மட்டுமல்ல வெற்றியடைபவர்களும் கூட
அது போலவே மத்திய அரசின் தற்போதைய அராஜக சட்ட்த்திற்கு
எதிஆக ஆலிம்கள் முன்னிற்கிறார்கள். அதன் நியாயத்தைப் புரிந்து கொண்டு மக்கள் அவர்களுக்கு
பின்னே திரள்கிறார்கள்’
அக்கிரமக்கார்ர்கள் தங்களை திருத்திக் கொண்டால் நல்லது.
அல்லது வரலாறு அவர்களை விரைவில் திருத்தும்
இன்ஷா அல்லாஹ்
Jazakallah Hazrath
ReplyDeleteஅருமையான பதிவு.பாரகல்லாஹ்
ReplyDeleteஅருமையான பதிவு.பாரகல்லாஹ்
ReplyDelete