வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 01, 2020

தலைகுனிவும் தலை நிமிர்வும்

 அயோத்தியில் உள்ள பாபர் மஸ்ஜித் 1992இல் இடிக்கப்பட்ட வழக்கில் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் விடுதலை செய்யப்படுகின்றனர் என லக்னௌ நகரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இன்றைய தீர்ப்பின்படி குற்றம்சாட்டப்பட்ட 48 பேரில் உயிருடன் இருக்கும் 32 பேரும் விடுதலை ஆகின்றனர். 

பாபர் மசூதி இடிப்பு முன்னரே திட்டமிடப்படவில்லை என்றும், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த  தீர்ப்பு. இந்தியாவின் நீதி பரிபாலன பாரம்பரைக்கு நேர்ந்த தலைகுனிவு. 

சோழ மன்னர்களில் மனு  எனும் மன்னன் கிமு 200 ஆண்டுகளில். திருவாரூரில் இருந்துகொண்டு சோழ நாட்டை ஆண்டான்.   அவனுடைய   மகன் தேரில் விரைந்து சென்றபோது துள்ளியோடிய பசுக்கன்று தேர்க்காலில் சிக்கி இறந்தது. தாய்பசு ஆராய்ச்சி மணியை அடித்து மன்ன்னிடம் புகார் கூறியது. மன்னன் நிகழ்ந்தது அறிந்து நீதி வழங்கும் அறநெறியில் கன்று இறந்தது போலவே தன் மகனைத் தேர்க்காலில் கிடத்திக் கொன்றான்

என்று கண்ணகி கூறும் கதையை சிலப்பதிகாரம் கூறு கிறது.

மகனை சிறையில் அடைக்கவோ அல்லது கன்றை ஏன் தெருவில் விட்டாய் என்று கேட்கவோ அல்லது வாகனங்களில் இத்தகைய விபத்துக்கள் சகஜம் என்று வாதிட்டுக் கொண்டிருக்கவோ இல்லை. பசுவுக்கு  கவலைக்கு மருந்து போடுவதுதான் முக்கியம் என்று கருதியதே இந்திய நீதித்துறையின் மரபு 

அந்த மரபுக்கு மாபெரும் களங்கத்தை உத்தரப்பிரதேசத்தின் லக்னோ சி பி ஐ நீதிமன்றம் ஏற்படுத்தி விட்டது. 

இது கேலிக்கூத்தான தீர்ப்பு, சமீப காலத்தில் இந்திய நீதிமன்றங்களில் உலகின் தலை சிறந்த ஜோக்கர்கள் பணியாற்று கிறார்களோ என்று கேட்க தோன்று கிறது. 

முன்பு பாபர் மஸ்ஜித் வழக்கை விசாரித்த லிபரன் கமிஷன் அறிக்கையோ  குற்றஞ்சாட்டப்பட்ட 47 தலைவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் பாபர் மசூதி இடிப்பு நிகழ்வின்போது அங்கு இருந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளது,   

"இன்று சிபிஐ நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பில் பாபர் மசூதியை சமூக விரோதிகள்தான் இடித்தார்கள் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு அந்த சமூக விரோதிகளை அழைத்து வந்தவர்களை குற்றவாளிகள் அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன் பாபரி மஸ்ஜிதின் நிலம் பற்றிய சிவில் வழக்கில் இப்படித்தான் உச்சநீதிமன்றம் கூறியது.

பாபர் மஸ்ஜித் கோயிலை இடித்துக் கட்டப்படவில்லை. பாபர் மஸ்ஜிதுக்கு கீழே கோயில் இல்லை. அங்கு தொழுகை நடந்துள்ளது என்பதற்குத்தான் ஆதாரம் இருக்கிறது. ஆனால் அந்த இடத்தில் கோயில் கட்டப்பபட வேண்டும்.

உலகமே சாட்சியாக இருக்கிற ஒரு வழக்கில் ஒலிநாடாக்கள் எல்லாம் தெளிவாக இல்லை என்று நீதிமன்றம் கூறுகிறது.

இந்தி நீதி அமைப்பை எத்தகைய விசித்திரமான வியாதி பிடித்து ஆட்டுகிறது என்பதற்கேற்ற சான்றுகள் இவை.  

சிபிஐ சரியாக வழக்கை நட்த்தவில்லை என்று பலரும் லாவகமாக குறிப்பிடுகிறார்கள்.. அது உண்மையில் நீதிமன்றங்களை காப்பாற்றும் ஒரு முயற்சி.  

எதார்தத்தில்  இந்திய நாட்டை பீடித்திருக்கிற வறட்டு இந்துத்துவ சித்தாந்திற்ற்கு நாடே அடிபணிந்து விட்டது என்பதுதான் புரிந்து கொள்ளப்பட வேண்டிய செய்தியாகும்.

சிபிஐ நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாவதற்கு முன் அத்வானியின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறைத்தண்டனை. கல்யாண்சிங்கிற்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை . பல எம் பி க்களுக்கு ஆயுள் சிறை கிடைக்க கூடும் என ஒன் இந்தியா போன்ற செய்தி ஊடகங்கள் யூகங்களை வெளியிட்ட போதே இதற்கான சாத்தியங்கள் எதுவும் இருக்காது என்பது தெளிவாகிவிட்டது.

அரசு, நிர்வாகம், நீதிமன்றம், ஊடகங்கள் என ஜனநாயகத்தின் தூண்களை அனைத்தும் காவி மயமாகியுள்ள நிலையில் இந்திய முஸ்லிம்களின் மனோ நிலை எப்படி இருக்கும் ? எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்வி மிக முக்கியமானது.

காவல்துறை அறிக்கைகளும் பதிரிகை செய்திகளும் மேலும் இந்திய முஸ்லிம்களை அவமதிக்கின்றன.

நீதிமன்ற தீர்ப்புக்களால் அவநம்பிக்கைக்குள்ளாகியிருப்பவர்கள் இந்து தலைவர்களை தாக்க கூடும் என்ற அச்சத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக  இன்றைய தி ஹிந்து தமிழ் செய்தி கூறுகிறது.

உண்மையில் இது குற்ற மனப்பான்மையின் ஒரு வெளிப்பாடே ஆகும்.

நாட்டில் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் போக்கை உணர்ந்து கொண்டிருக்கும் எவரும் இந்த தீர்ப்பால் பேரதிர்ச்சியோ பெரும் கோபமோ கொள்ள மாட்டார்கள்.

ஆளுநர்களாக பதவி பெற , அல்லது ராஜ்ய சபா எம் பி ஆக பதவி பெற நீதிமன்ற படிக்கட்டுகள் உதவுகிற போது, வெறித்தனமான் பேச்சுக்கள் கட்சிப்பதவி பெற தேர்தலில் சீட்டுப் பெறவும் உதவுகிற போது இதுவெல்லாம் சகஜமே !

இப்படி இல்லாமல் நீதி காப்பற்றப்பட்டிருந்தால் தான் ஆச்சரியம்.

அதனால் இந்திய முஸ்லிம்கள் பெரிதும் அதிர்ச்சியடையவும் இல்லை. கோபம் கொள்ளவும் இல்லை.

ஆனால் பெரும் கவலை கொள்கிறார்கள்

ஒரு பெரிய நாட்டின் நீதி அமைப்பு இப்படி சிதைந்து போவது இங்கு வாழ்கிற உலகின் பெரும் மனித சமூகத்திற்கு நல்லதல்ல.

நீதி தான் மனித வாழ்வின் மிக உயர்ந்த இலட்சியம். பக்தியை விட.

ஆச்சரியமாக இருக்கலாம். அது தான் உண்மை

மறுமை நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் பிடிக்கும் ஏழு பேரில் முதன்மையானவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நீதியை பரிபாளிப்பவரையே குறிப்பிட்டார்கள், பக்தியாளர்கள் அதற்கு அடுத்துத்தான். 

عن أبي هريرة t قالَ: قالَ رسُولُ اللَّه ﷺسَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ في ظِلِّهِ يَوْمَ لا ظِلَّ إلَّا ظِلُّهُ: إِمامٌ عادِلٌ، وشابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّه تَعالى، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌفي المَسَاجِدِ، وَرَجُلانِ تَحَابَّا في اللَّه: اجتَمَعا عَلَيهِ، وتَفَرَّقَا عَلَيهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ، وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخافُ اللَّه، ورَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فأَخْفَاها، حتَّى لا تَعْلَمَ شِمالُهُ مَا تُنْفِقُ يَمِينهُ، ورَجُلٌ ذَكَرَ اللَّه خالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ متفقٌ عَلَيْهِ.

அதனால் தான் இறைநம்பிக்கையுடைய மக்களைப் பார்த்து குர் ஆன் கூறுகிறது.

 

ا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَىٰ أَنفُسِكُمْ أَوِ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ

நீதியை பேணாத சமுதாயம் அழியும் என்பது தான் நாம் முன்பே கூறிய சிலப்பதிகார கதையின் சாரம்சமும் ஆகும்.

 

உலகில் மிக நீண்ட கொள்கை வழியை அரசாட்சியை நிறுவி வெற்றி கண்ட முஹம்மது நபி ஸல் அவர்களின் வெற்றி வரலாற்றின் பின்னணி அனைத்து தரப்பினருக்குமான நீதியை மையப்படுத்தியதாகவே இருந்தது.

 இஸ்லாமை எடுத்துரைப்பதற்காக ஒரு அழைப்பை ஏற்று நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களில் 40 பேரை பிஃரு மவூனா என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் அங்கிருந்தவர்கள் வஞசகமாகவும் கொடூரமாகவும் அவர்களை கொலை செய்தார்கள்.

 இந்த கொடுமைகளை நேரில் கண்ட ஒரு நபித்தோழர் இதைப் பற்றி பெருமானார் (ஸல்) அவர்களிடம் எடுத்துச் செல்ல மதீனாவிற்கு விரைந்து வந்தார்.  அப்போது முஸ்லிம்களை அழைத்துச் சென்ற நபரின் குடும்பத்தைச் சேர்த இருவர் மதீனாவின் எல்லையில் தங்கியிருப்பதை கண்ட போது எச்சரிக்கைகாக அவர்களை கொலை செய்து விட்டார்.  

 ஆனால் அவ்விருவரும் மதீனாவில் பெருமானார் (ஸல் ) அவர்க

சமாதான உடன்படிக்கை செய்து கொண்டிருந்த யூதர்களான பனூ நுழைர்களின் நண்பர்களாக இருந்தார்கள்.

 தனது தோழர்களின் கோடூரமான கொலை நிகழ்வில் கடும் சோகமுற்றிருந்த நிலையிலும் கூட முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தனது தோழர் எச்சரிக்கைக்காக செய்த்தை ஏற்றுக் கொள்ள வில்லை. அப்போதே உடனடியாக நடந்து விட்ட தவறுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதற்காக தனது வளர்ப்பு மகன் ஜைத் ரலி அவர்களை அழைத்துக் கொண்டு தனியாகவே பனூ நுழைர்களை சந்தித்து பிரச்சனைக்கு தீர்வு கண்டார்கள்.

 இஸ்லாம் எப்படி இந்த உலகிக் கோலோட்சியது என்பதில் உள்ள இரகசியம் இது,

 قدم أبو براء عامر بن مالك بن جعفر على رسول الله بالمدينة المنورة فعرض عليه الإسلام ودعاه إليه فلم يسلم ولم يبعد، وقال يا محمد لو بعثت رجالا من أصحابك إلى أهل نجد يدعونهم إلى أمرك رجوت أن يستجيبوا لك. فقال النبي إني أخشى عليهم أهل نجد، فقال أبو براء أنا لهم جار، فبعث الرسول المنذر بن عمرو أخا بني ساعدة المعنق في أربعين رجلا من أصحابه من خيار المسلمين، فيهم الحارث بن الصمة، وحرام بن ملحان أخو بني عدي بن النجار، وعروة بن أسماء بن الصلت السلمي، ونافع بن بديل بن ورقاء الخزاعي، وعامر بن فهيرة مولى أبي بكر مع رجال من خيار المسلمين، فساروا حتى نزلوا بئر معونة (وهي بين أرض بني عامر وحرة بني سليم) فلما نزلوا بعثوا حرام بن ملحان بكتاب الرسول إلى عامر بن الطفيل، فلما أتاه لم ينظر في الكتاب حتى عدا على الرجل فقتله، ثم استصرخ عليهم بني عامر فأبوا أن يجيبوا إلى ما دعاهم، وقالوا لن نخفر أبا براء وقد عقد لهم عقدا وجوارا.

فاستصرخ عليهم قبائل من بني سليم وهم عصية ورعلا وذكوان والقارة، فأجابوه إلى ذلك، فخرجوا حتى غشوا القوم، فأحاطوا بهم في رحالهم، فلما رأوهم أخذوا أسيافهم، ثم قاتلوا القوم حتى قتلوا عن آخرهم، إلا كعب بن زيد أخو بني دينار بن النجار، فإنهم تركوه به رمق، فارتث من بين القتلى فعاش حتى استشهد يوم غزوة الخندق.

وكان في سرح القوم عمرو بن أمية الضمري ورجل من الأنصار من بني عمرو بن عوف فلم ينبئهما بمقتل القوم إلا الطير تحوم حول العسكر، فقالا والله إن لهذه الطير لشأنا، فأقبلا لينظرا فإذا القوم في دمائهم، وإذا الخيل التي أصابتهم واقفة، فقال الأنصاري لعمرو بن أمية ماذا ترى، فقال أرى أن نلحق برسول الله فنخبره الخبر، فقال الأنصاري لكني لم أكن لأرغب بنفسي عن موطن قتل فيه المنذر بن عمرو وما كنت لأخبر عنه الرجال فقاتل القوم حتى استشهد، وأخذ عمرو أسيرا، فلما أخبرهم أنه من مضر أطلقه عامر بن الطفيل وجز ناصيته، وأعتقه عن رقبة كانت على أمه، فيما زعم، ثم خرج عمرو بن أمية حتى إذا كان بالقرقرة من صدر قناة، أقبل رجلان من بني عامر حتى نزلا في ظل هو فيه، وكان مع العامريين عهد من الرسول وجوار لم يعلمه عمرو بن أمية، وقد سألهما حين نزلا ممن أنتما، قالا من بني عامر فأمهلهما حتى إذا ناما عدا عليهما وقتلهما، وهو يرى أن قد أصاب بهما ثأرا من بني عامر فيما أصابوا من أصحاب الرسول الله، فلما قدم عمرو بن أمية على الرسول، أخبره بالخبر، فقال الرسول لقد قتلت قتيلين لأدينهما، م قال الرسول هذا عمل أبي براء قد كنت لهذا كارها متخوفا، فبلغ ذلك أبا براء فشق عليه إخفار عامر إياه، وما أصاب من أصحاب رسول الله صلى الله عليه وسلم بسببه وجواره )அல்பிதாயா வந்நிஹாயா\

 

அநீதியும் அக்கிரமும் நீண்ட காலம் நிலைக்க முடியாது என்ற தத்துவம் முஸ்லிம்களுக்கு ஆறுதலை தரும்.

 ஆனால் அவர்கள் தலை நிமிர,  செய்ய வேண்டிய சில கடமைகள் உண்டு.

 முந்தைய  சமுதாயம் அடைந்தது போல துன்பங்களை நீங்கள் சந்திப்பீர்கள் என பெருமானார் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளதை மறந்து விடலாகாது.

 حَدَّثَنَا  عَمْرِو بْنِ عَوْفٍ الْمُزَنِ قَالَ : كُنَّا قُعُودًا حَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَسْجِدِهِ بِالْمَدِينَةِ ، فَجَاءَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ بِالْوَحْيِ , فَذَكَرَ حَدِيثًا طَوِيلًا قَالَ فِيهِ : جَاءَكُمْ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ يَتَعَاهَدُ دِينَكُمْ لَتَسْلُكُنَّ سُنَنَ الَّذِينَ مِنْ قَبْلِكُمْ حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ وَلَتَأْخُذُنَّ بِمِثْلِ أَخَذْهِمْ ، إِنْ شِبْرًا بِشِبْرٍ ، وَإِنْ ذِرَاعًا بِذِرَاعٍ ، وَإِنْ بَاعًا بِبَاعٍ ، حَتَّى لَوْ دَخَلُوا جُحْرَ ضَبٍّ لَدَخَلْتُمْ فِيهِ

 யூத சமுதாயம் சந்தித்த வரலாற்று கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல,

 ஆனால் இன்று அவர்கல் உலகின் விருப்பத்திற்குரியவர்களாக மாறியிருக்கிறார்கள்.

 அவர்களிடமிருந்து நாம் பெற்றுக் கொள்ள பாடம் இருக்கிறது.

 சிரமாமன காலத்தில் நமது தகுதியையும் தரத்தையும் மேம்படுத்திக் கொள்வதே அதை வெற்றிக் கொள்ளும் முக்கியமான வழி

 நாம் ஒரு விஞ்ஞானியாகவோ , தொழிலதிபராகவோ,  தொழில் வல்லுனராகவோ பிறரின் தேவைகளை நிறைவு செய்கிறவர்களாகவோ ஆகிவிட்டால் பிறகு நம்மை மற்றவர்களால் நிராகரிக்க முடியாது.

 அமெரிக்காவில் யூதர்கள் நடத்தும் பள்ளிகளில் மற்றவர்கள் வெற்றி பெற 35 மதிப்பெண் போதும் என்றால் யூதர்கள் வெற்றி பெற 50 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று நிபந்தனை வைத்திருக்கிறார்கள்.

 வெறுப்பை அன்பால் தான் வெல்ல முடியும் என்பதை அழுத்தமாக் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். அதனால் வெறுப்பை உருவாக்குகிற செயல்களை எல்லா நிலையிலும் தவிர்க்க வேண்டும். இப்போதைக்கு மிக அத்தியவாசிய தேவை இது.

 அன்னை தெரஸா மேற்கு வங்கத்தின் கடை தெருவில் தனது அநாதை நிலையத்திற்கு உதவி கேட்டுச் சென்ற போது ஒருவன் அவர் முகத்தில் காரி உமிழ்தான். அதை தன் இடது கையால் துடைத்துக் கொண்டுஇது எனக்குரியது, என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்று வலது கையை நீட்டினார் என்பார்கள்.

 இஸ்லாமின் வரலாற்றில் இத்தகைய பாடங்களுக்கு பஞ்சம் எதுவும் இல்லை.

 எனவே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளால நீதி தலை குனிவுக்கு உள்ளாகியிருக்கிற சூழலில் முஸ்லிம்கள் துவண்டு விடாமல் தலை நிமிர்வதற்கான வழிகளை கடைபிடிக்க வேண்டும்.

 

 

 

No comments:

Post a Comment