வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 15, 2020

இந்த நூற்றாண்டுக்கும் தேவைப்படும் மனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

 

يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير 

இந்த  நூற்றாண்டுக்கும் தேவைப்படும் மனிதப் புனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

நமது இன்றைய வாழ்வியலில் ஜாதீயம். இனப்பாகுபாடு, தேசிய இனங்களின் பெருமையின் அடிப்படைகளில் மக்களுக்கிடையே பெரிய அளவில் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. படித்தவர்களும் ஆட்சியாளர்களும் பகிரங்கமாக இப்பாகுபாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். மானுடம் மீண்டும் கற்காலத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் எழுகிறது.

சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வெளிவந்தது. பகிரங்கமாக ஒருவர் பேசுகிறார். நாய்களில் கூட ஜாதி இருக்கிறது. ஜாதி பார்த்துத்தான் சேர விடுகிறார்கள். மனிதர்களிலும் அப்படித்தான்.

இந்தியாவிலும் அமெரிக்கவிலும் அப்பட்டமாக மக்களுக்கிடையே சமநீதீ மீறப்படுகிறது.

 முஸ்லிம்கள் கருப்பர்கள் என்றால் காவல்துறை மற்றும் நீதி மன்றங்கள் கூட அநீதி இழைக்க தயங்குவதில்லை.

 ஆனால் இது தவறானது என்பதை மனித குலத்துக்கு நன்மையை போதித்த எவரும் அறிவுறுத்த மறக்கவில்லை.

 சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி

என்று நலவழி எனும் நூலில் அவ்வையார் கூறினார்.  

மிக் அற்புதமான் செய்தி இது

மனிதர்களில் ஆண் பெண் என் இறைவன் வைத்தது இரண்டே ஜாதி. இதில் பெருமை எதில் எனில் ?

யார் தன்னிடமிருப்பதை அடுத்தவர்களுக்கு கொடுத்து வாழ்கிறாரோ அவர் பெரிய மனிதர். கொடுக்காதவர் தாழ்ந்தவர்.

இதே போல முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் பிரகடணப் படுத்தினார்கள்.

عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم فتح مكة فقال يا أيها الناس إن الله قد أذهب عنكم عبية الجاهلية وتعاظمها بآبائها فالناس رجلان بر تقي كريم على الله وفاجر شقي هين على الله والناس بنو آدم وخلق الله آدم من تراب قال الله يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير - ترمذي 

 மக்கா வெற்றி பெற்ற நாள் என்பது இஸ்லாமின் வெற்றித் திருநாள்.

 கவனிக்கவும் : இந்த இட்த்தில் முஸ்லிம் உயர்ந்தவர் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று பெருமானார் பொத்தம் பொதுவாக  கூறவில்லை.

 ஒரு சரியான தலைமையின் அருமையான வழிகாட்டுதல் இது. மக்கள் தமது இயல்பால் பிரித்துக் கொள்ளக் கூடிய இரண்டே பிரிவு நல்லவர் கெட்டவர் என்பதாகும். ஆண் பெண் பாலினத்தில் கூட உயர்வு தாழ்வு இல்லை.

 இங்கே கவனிக்கத்தக்க மிக முக்கிய அம்சம்

 உலகின் பல தலைவர்களும் மானுட சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் மிக அருமையாக பேசியிருக்கிறார்கள்/

 ஆனால் அதை நிலை நாட்டியவர் என்ற பெருமைய மனித வரலாற்றில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஒருவரையே சாரும்.

 விவேகானந்தர் கூறுகிறார்

 மனிதர்களுக்கிடையே சகோதரத்துவத்தை நிலைவாட்டுவதில் வெற்றி கண்ட மனிதர் உலகில் முஹம்மது நபி யை போல வேறெவரும் இல்லை

 There is a wonderful chapter on ‘Mohammed and Islam’ in a book titled Teachings of Swami Vivekananda, which has a moving 30-page introduction by British writer Christopher Isherwoood. 

 what he says: “Mohammed – the Messenger of equality

 Mohammed by his life showed that amongst the Mohammedans there should be perfect equality and brotherhood. There was no question of race, caste, colour or sex. The Sultan of Turkey may buy a Negro from the mart of Africa, and bring him in chains to Turkey; but should he become a Mohammedan, and have sufficient merit and abilities, he might even marry the daughter of the Sultan. Compare this with the way in which Negroes and the American Indians are treated in this country (the United States of America)! And what do Hindus do? If one of your missionaries chances to touch the food of an orthodox person, he would throw it away.”

 முஸ்லிம்கள் மத்தியில் சரியான சமத்துவமும் சகோதரத்துவமும் இருக்க வேண்டும் என்பதை முஹம்மது தனது வாழ்க்கையால் காட்டினார். இனம், சாதி, நிறம், பாலினம் என்ற கேள்வி எதுவும் இல்லை. துருக்கியின் சுல்தான் ஆப்பிரிக்காவின் மார்ட் என்ற ஊரிலிர்நுது  ஒரு நீக்ரோவை வாங்கி, அவரை சங்கிலியால் துருக்கிக்கு அழைத்து வரலாம்; ஆனால் அவர் ஒரு முஸ்லிமாகி, போதுமான தகுதியும் திறன்களும் இருந்தால், அவர் சுல்தானின் மகளை கூட திருமணம் செய்து கொள்ளக்கூடும். இந்த நாட்டில் (அமெரிக்கா) நீக்ரோக்கள் மற்றும் அமெரிக்க இந்தியர்கள் நடத்தப்படும் முறையுடன் இதை ஒப்பிடுங்கள்!

இந்துக்கள் என்ன செய்கிறார்கள்? அவர்களில் ஒரு உயர்ஜாதி நபரின் உணவைத் சாமானியன் தொட்டு விட்டால், அவர் அதைத் தூக்கி எறிவார்.

 விவேகானந்தர் மேலும் கூறுகிறார்

 As he told the Americans, “As soon as a man becomes a Mohammedan, the whole of Islam receives him as a brother with open arms, without making any distinction, which no other religion does. If one of your American Indians becomes a Mohammedan, the Sultan of Turkey would have no objection to dine with him. If he has brains, no position is barred to him. In this country, I have never yet seen a church where the white man and the Negro can kneel side by side to pray.”

 இந்த நாட்டில் (அமெரிக்காவில்) வெள்ளயர்களும் கருப்பர்களும் இணைந்து மண்டியிடும் ஒரு சர்ச்சை கூட நான் பார்க்க வில்லை. ஆனால் ஒரு அமெரிக்க இந்தியர் முஸ்லிமாகி விட்டால் அவர் தகுதியுடைய்வராக இருந்தால் அவர் துருக்கி மன்னருடன் அமர்ந்து உணவருந்த எந்த் தடையும் இருக்காது.

 “It is a mistaken statement that has been made to us that the Mohammedans do not believe that women have souls…I am not a Mohammedan, but yet I have had opportunities for studying them, and there is not one word in the Koran which says that women have no souls, but in fact it says they have.”

 பெண்களுக்கு ஆன்மா இல்லை என்று முஸ்லிம்கள் கூறுவதாக கூறிகின்றனர். நான் ஒரு முஸ்லிம் அல்ல. ஆனால் இஸ்லாமை படிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இஸ்லாமிலோ குர் ஆனிலோ எங்கும் அப்படி கூறப்படவில்லை. அவர்களுக்கும் ஆன்மா இருப்பதாகத் தான் கூறப்பட்டுள்ளது.

  விவேகானந்தர் 20 ம் நூற்றாண்டில் மறைந்தவர். அவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் உருவாக்கிய சகோதரத்துவம் சமத்துவத்தின் எதார்த்த சாட்சிகளை பார்த்து விட்டுத்தான் துருக்கி சுல்தான் களின் பெயரைப் பயன்படுத்திப் பேசுகிறார்.

 எனும் போது முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் மானுட சகோதரத்துவத்தையும் சமத்துவத்தை பேச்சளவில் மட்டும் அல்லாமல் செயலளவில் நடை முறைப்படுத்தியதோடு அது எப்படி நீண்ட நெடிய காலம் நிலைப் பெற்றிருக்கிறது என்பதையும்  விவாகானந்தர் உணர்த்துகிறார்.

 முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியடைந்த அன்று  இந்த ஹதீஸை சொன்னார்கள்.

 عن ابن عمر أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم فتح مكة فقال يا أيها الناس إن الله قد أذهب عنكم عبية الجاهلية وتعاظمها بآبائها فالناس رجلان بر تقي كريم على الله وفاجر شقي هين على الله والناس بنو آدم وخلق الله آدم من تراب قال الله يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير 

அன்றைய தினமே கஃபாவின் மீதேறி பாங்கு சொல்லுமாறு பிலால் ரலியை கூறினார்கள்.

 முன்பு அரபு தலைவர்களால் இழிவாக நடத்தப்பட்டவர் பிலால் ரலி. அவர் தனது கருப்புக்கால்களோடு கஃபாவின் மீதேறினார்.

 நபி (ஸல் அவர்கள் இஸ்லாமின் சகோதரத்துவத்திற்கு நடை முறை எடுத்துக்காட்டாக அதை ஆக்கினார்கள்.

 அர்ரஹீக்கும் மக்தூமிலிருந்து ஒரு சிறு பகுதி

بلال يؤذن على الكعبة

وحانت الصلاة، فأمر رسول الله صلى الله عليه وسلم بلالا أن يصعد فيؤذن على الكعبة، وأبو سفيان بن حرب، وعتاب بن أسيد، والحارث بن هشام جلوس بفناء الكعبة، فقال عتاب‏:‏ لقد أكرم الله أسيدا ألا يكون سمع هذا، فيسمع منه ما يغيظه‏.‏ فقال الحارث‏:‏ أما والله لو أعلم أنه حق لاتبعته‏.‏ فقال أبو سفيان‏:‏ أما والله لا أقول شيئًا، لو تكلمت لأخبرت عني هذه الحصباء‏.‏ فخرج عليهم النبي صلى الله عليه وسلم فقال لهم‏:‏ ‏(‏لقد علمت الذي قلتم‏)‏ ثم ذكر ذلك لهم‏.‏

فقال الحارث وعتاب‏:‏ نشهد أنك رسول الله، والله ما اطلع على هذا أحد كان معنا فنقول أخبرك‏.‏

பாங்கு சொல்வதற்காக பிலால் ரலி கஃபாவின் மீது ஏறிய போது அதைப் பார்த்துக் கொண்டிருந்த சமீபத்தில் முஸ்லிமான தலைவர்கள் பேசிக் கொண்டார்கள்/ நல்ல வேளை இந்த கொடுமையை பார்க்கமால் நமது முன்னோர்கள் இறந்து போய் விட்டனர்.

அபூ சுப்யான் சொன்னார்; நான் எதையும் பேசுவதாக இல்லை. அது அவருக்கு தெரிந்து விடப் போகிறது.

அப்போது அந்த வழியாக கடந்து சென்ற பெருமானார் (ஸல்) அவர்கள் நீங்கள் பேசியதெல்லாம் எனக்கு கேட்கவே செய்த்து என்றார்கள்,

கஃபாவை இடித்து பெரிதாக கட்டுவதற்கு தயங்கிய நபி (ஸல்) அவர்கள்

மானுட சகோதரத்துவத்தை  நிலை நாட்டுவதில் மக்காவின் தலைவர்கள்  என்ன சொல்வார்களோ என்றெல்லாம் தயங்கிக் கொண்டிக்கவில்லை.

இந்த உலகில் மகத்தான மாற்றத்த்த நிகழ்த்த உறுதி மிக்க அந்த தலைமையால் முடிந்த்து.

இன்றைய சூழலில் அமெரிக்கா ஆகட்டும் ஜெர்மனி ஆக்ட்டும் ஆஸ்திரேலியா ஆகட்டும் சமத்துவத்திற்கு எதிராக தங்களவரை உயர்த்திக் காட்டுவதில் மட்டுமே தலைவர்களாக நிலைத்திருக்கிறார்கள்.

இந்தியா இலங்கை பர்மா சீனா உட்பட உலகின் பல நாடுகளிலும் வெறுப்புணர்வே ஆட்சி செய்கிறது.

எனவே இன்றைய உலகம் முஹம்மது நபியை போன்ற ஒரு தலைமைக்குத்தான் ஏங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த தலைமையின் வழிகாட்டுதல்களை புரிந்து கொள்ளவும் பரப்பவும் அல்லாஹ் நம் அனைவருக்கும் வழிகாட்டுவானாக!

No comments:

Post a Comment