وما أرسلناك إلا كافة للناس
சமீபகாலமா உலகம் முழுவதும் அதிகரித்து வருகிற ஒரு பெரும் அவலம். Mob Attack கும்பல் வன்முறை.
மக்கள் ஒரு குழுவாக இணைந்து எந்த சட்டத்திற்கும் பயப்படாமல் தனி மனிதர்களை அல்லது அமைப்புக்களை கண்மூடித்தனமாக தாக்குவது.
இது மனித சமூகத்தின் மிகப்பெரிய அவலமாகும்.
இத்தகைய தாக்குதல்குறித்து ஆராய்ச்சி செய்த சூசெக்ஸ் பல்கலை கழகத்தை சேர்ந்த JOHN DRURY இப்படிக் கூறுகிறார்.
'When the mobs are looking for witches to burn, nobody's safe'
கும்பல்கள் எரிக்க மந்திரவாதிகளைத் தேடும்போது, யாரும் பாதுகாப்பாக இல்லை
இது 2004 ம் ஆண்டில் எழுதப்பட்ட கருத்து. அப்போது மக்களை ஏமாற்றும் மந்திரவாதிகளை அடையாளம் காணும் பொது மக்கள் ஆத்திரத்தில் அத்தகையோரை எரித்துக் கொன்றனர்.
அப்போது அவர் இப்படி குறிப்பிட்டார்.
இப்போது அதை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். மாட்டுக்கறி வைத்திருப்பவர்களை காணும் போது, சரியாக சமபளம் தராத நிறுவன மேலாளர்களை காணும் போது, அதிகாரத்திற்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர்களை காணும் போது அதை பிடிக்காதவர்கள் எரியூட்ட முயற்சி செய்வார்கள் எனில் யாரும் பாதுகாப்பாக இல்லை என்றும் மாற்றிக் கொள்ளலாம். எல்லாம் சரி தான்.
இன்றைய சூழல் மனித வாழ்கையை அநீதியாக பாதுகாப்பற்றதாக மாற்றி வருகிறது. மிகவும் கவலைப்பட வேண்டிய விஷம் இது.
2017 ம் ஆண்டு ஜூன் மாதம் ராய்ட்டர் நிறுவனம் வெளியிட்ட ஒரு ஆய்வு “2010 லிருந்து அப்போதுவரை மாட்டுக்கறி வன்முறையில் 28 இந்தியர்கள் கொல்லப் பட்டார்கள். அதில் 24 பேர் முஸ்லிம்கள். 124 பேர் காயமடைந்துள்ளனர் என்கிறது. அதே அறிக்கை 2014 மோடி அரசு பதவியேற்ற பிறகே இத்தகைய வன்முறையில் அரங்கேறத் தொடங்கின என்கிறது. (விக்கீபீடியா)
(A number of incidents
of violence have occurred. According to a June 2017 Reuters report, citing a data journalism website,
a total of "28 Indians – 24 of them Muslims – have been killed and 124
injured since 2010 in cow-related violence". The frequency and
severity of cow-related violence have been described as
"unprecedented".[7] The report stated that "Almost all
of the 63 attacks since 2010 involving cow-related violence were recorded after
Modi and his Hindu nationalist government came to power in 2014".)
2014 ஜனவரி 14 ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் ஹர்தா மாவட்ட கிக்ரியா ரயில் நிலையத்தில் பசு பாதுகாப்பு படையினர் கவ் ரக்ஷா சமிதியினர் ஒரு முஸ்லிம் தம்பதியை பையில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி தாக்கினர்.
2016 மார்ச் 18 ம் தேதி ஜார்கண்ட் மாநிலத்தில் கால்நடை வியாபாரிகளான 32 வயது அன்சாரியையும் 15 வயது இம்தியாஸ் கானையும் பசுக்கலை கொல்ல கடத்தியதாக கூறி கொலை செய்தனர்.
2016 ஜூலை 11 ம் தேதி குஜ்ராத்தி மாநிலத்தில் இறந்து போன ஒரு மாட்டை உரித்துக் கொண்டிருந்த 4 தலித்களை ஆறுபேர் கொண்ட ஒரு கும்பல் சங்கிலியால் கட்டி வைத்து இரும்புக் கமபிகளால் கடுமையாக தாக்கியது.
2017 ஜூலை 17 ம் தேதி கர்நாடக மாநிலம் சிகமங்களூரில் மாட்டுக்கறி சாப்பிட்டதாக கூறி பஜ்ரங்தள் அமைப்பைச் சார்ந்தவர்கள் ஊனமுற்ற ஒருவர் உட்பட நான்கு தலித்தகளை கடுமையாக தாக்கினர்.
2016 ஜூலை 30 ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் முஜப்பர் நகரில் ஒரு முதியவர் தனது வீட்டு பிரிட்ஜில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அவரது குடும்பத்தை கடுமையாக தாக்கினர்.
கடந்த மாதம் பெங்களூரி ஐ போன் நிறுவனத்தில் கலவரத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒரு குழுவினர் சுமர் 480 கோடி மதிப்புள்ள சொத்துக்களை சேதப்படுத்தினர்.
இத்தகைய பட்டியல் வெகு நீளமானது.
இதில் ஒரு அதிர்ச்சி என்ன வெனில்
இக்குற்ற வழக்குகளில் சமபந்தப் பட்டவர்கள் மீது நடவடிக்கை பெரும்பாலும் எதுவும் இருப்பதில்லை. ழக்குகள் பதிவு செய்யப் பட்டாலும் கூட அவர்கள் விடுவிக்கப் படுவார்கள்.
காரணம் ஒவ்வொரு
கும்பல் தாக்குதலுக்குப் பின்னாலும் அரசியல் அல்லது மதம் அல்லது சாதீய பின்புலம் இருக்கிறது.
அந்த தாக்குதலை
அரசியல் நியாயப் படுத்துகிறது. அல்லது மதமோ சாதியோ நியாயப்படுத்து கின்றன,
இந்தியாவில் மாட்டுக்கறி
வைத்திருந்த்தாக கூறி இரண்டு பேர் கொல்லப் பட்ட போது கொலைக்கு வருத்தம் கூட தெரிவிக்காமல்
மத்திய அமைச்சர்கள் இப்படிக் கூறுகிறார்கள். “
பெரும்பான்மையான
இந்துக்களின் உணர்வுகள் மதிக்கப் பட வேண்டும்”
இத்தகைய பேச்சுக்கள் தருகிற பாதுகாப்பு காரணமாக கொடூரங்களுக்குப் பிறகு அதை விடக் கொடூரமாக கும்பல் தாக்குதல்கள் பெருகுகின்றன.
உலகம் முழுவதிலும் இந்த நிலை இருக்கிறது.
இஸ்லாம் முஸ்லிம்களை இந்த நடைமுறையிலிருந்து முற்றிலுமாக விலகி
நிற்கச் சொல்கிறது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ
شُهَدَاءَ بِالْقِسْطِ ۖ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَىٰ أَلَّا
تَعْدِلُوا ۚ اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَىٰ ۖ وَاتَّقُوا اللَّهَ ۚ إِنَّ
اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ (8)
இதன் கருத்து
ليكن من أخلاقكم وصفاتكم القيامُ لله شهداء بالعدل
في أوليائكم وأعدائكم، (192) ولا
تجوروا في أحكامكم وأفعالكم فتجاوزوا ما حددت لكم في أعدائكم لعدواتهم لكم
ஹுதைபிப்ய்யா
உடன்படிக்கையின் காலகட்டத்தில் முஸ்லிம்கள் பகுதி வழியாக மக்கா காபிர்களின் ஒரு ஆட்டு மந்தை சென்றது. நாம் ஏன் நமது அதிகாரத்தை காட்ட்டும் வகையில் அதை தாக்கி எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சிலர் நினைத்தனர். அப்போது இந்த வசனம் அருளப்பட்டது.
தங்களுக்கு என்று ஒரு நியாயத்தை கற்பித்துக் கொண்டு சட்டத்தை கையில்
எடுத்து ஆயுதம் ஏந்துகிறவர்கள் குறித்து முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிக கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
عن نافع عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال من حمل علينا السلاح فليس منا- புகாரி
பெருமானார் (ஸல்) அவர்களை ஆயுதங்களால் தாக்குகிறவர்களை அல்ல ஆயுதத்தை தூக்குபவனையே தனது சமூகத்தை விட்டு விலக்கி வைக்கிறார்கள் என்பதை கவனிக்கவும்.
இவ்வளவு கடுமையான எச்சரிக்கைகளுக்கு
என்ன காரணம் எனில் ?
ஏதேனும் ஒரு நியாயத்தை
கற்பித்துக் கொண்டு செய்யப் படும் கும்பல் தாக்குதல்கள் மனித சமூகத்தில் மிகப்பெரும்
தாக்க்தை ஏற்படுத்தி விடும். மனித வரலாறே அதனால் ஏற்பட்ட துயரத்திலிருந்து விடுபட முடியாமல்
போகும்.
இஸ்லாமிய வரலாற்றிலும்
அதற்கு பல உதாரணங்கள் உண்டு.
கும்பல் தாக்குதலால் இஸ்லாமிய
உலகு சந்தித்த மிகப் பெரும் கேடு உஸ்மான் ரலி அவர்களின் படுகொலை ஆகும்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களால்
அரபு தேசத்திற்கு ஒரு அற்புதமான அரசியல் கிடைத்தது. ஆரம்ப இரண்டு கலீபாக்களில் காலத்தில்
அந்த அரசு அன்றைய உலகை வியபாபித்து வந்தது.
தொடங்கிய 30 வருட்த்திற்குள் அன்றைய பூமிப் பந்தின் பாதியை இஸ்லாம் வென்றெடுத்திருந்த்து.
அப்படி என்றால் நீதி வென்றிருந்த்து என்று பொருள். மக்கள் மிக நிம்மதியாக வாழ்ந்தார்கள்.
உமர் ரலி அவர்களுக்கு சத்தியத்தை
நிலை நாட்டுபவர் என்ற ஒரு பெயர் உண்டு; அதை அவருக்கு சூட்டியது யூதர்கள் என்று ஒரு
கருத்து வரலாற்றில் உண்டு.
قال ابن سعد في الطبقات الكبرى: « قال ابن شهاب: "بلغنا أن أهل
الكتاب كانوا أول من قال لعمر الفاروق، وكان المسلمون يأثرون ذلك من قولهم،
அந்த அளவு அனைத்து தரப்பு மக்களிமும் நீதி பரிபாலிக்கப் பட்ட்து.
தமிழில் அற்புதமாக கூறுவார்கள் உமர் ரலி அவர்களின் காலத்தில் ஆடும்
சிங்கமும் அருகருகே நின்று ஒரே குட்டையில் நீர் அருந்தும்.
ஒரு பெரும் சாம்ராஜ்யமாக இஸ்லாமிய அரசின் கீழ் உலகம் நிம்மதியாக இருந்து கொண்டிருந்த்து.
உமர் ரலி அவர்களுக்குப்
பிறகு உஸ்மான் ரலி ஆட்சிக்கு வந்தார்கள். இஸ்லாம் இன்னும் கடல் கடந்து விரிவடைந்து
கண்டங்களை கடந்து சென்றது.
அந்த வெற்றிப் பாதைக்கு
விழுந்த பெரும் தடையாக ஒரு குழு
எகிப்தின் கவர்னருக்கு
எதிராக குற்றம் சுமத்திக் கொண்டு வந்த சுமார் 200 நபர்களை கொண்ட ஒரு குழு உஸ்மான் ரலி
அவர்களது வீட்டை சூழ்ந்து சஹாபாக்களின் பாதுகாப்பை கடந்து அவரது வீட்டுக்குள் சுவரேறிக்
குதித்து – பெருமானரின் பாராட்டிற்குரிய அந்த மருமனை – அவர் குர் ஆன் ஓதிக் கொண்டிருந்த
நிலையில் தலையை சீவிக் கொன்றது.
இஸ்லாமிய வரலாற்றின் ஒரு
பேரவலம் இது.
மதீனாவில் ஒரு வன்முறைக்
கும்பல் யோசிக்க முடிகிறதா ?
அந்த கும்பல் நட்த்திய
அக்கிரமங்கள் கொஞ்சமல்ல
முஸ்லிம்களின் தண்ணீர்
தேவையை தீர்த்த அவருக்கு தண்ணீர் கிடைக்க கூட கும்பல் வழி விட வில்லை. மஸ்ஜிதுன்னபவி
விரிவாக்கத்திற்கு இடம் வாங்கிக் கொடுத்த அவர் மஸ்ஜிதுன்னபவி பள்ளி வாசலில் தொழுவதற்கு
அவர்கள் அனுமதிக்க வில்லை.
ஒரு மகத்தான மாண்பாளர்
– பெருமானாரால் மதிக்கப்பட்டவர். இரண்டு மகள்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப் பட்டவர்.
மலக்குகளும் வெட்கப்படும் மாண்பாளர். புனித மிகு மதீனாவில் ஏராளமான சஹாபாக்கள் கூடியிருக்கவே
– ஹஸன் ஹுசைன் ரலி ஆகியோர் வாசலைக் காவல் காத்துக் கொண்டிருக்கும் போது சுவரேறிக் குதித்த
வன்முறைக் கும்பலின் அடவாடிக்கு பலியானார்கள்.
நான்கு சஹாபாக்களை கொன்று
விட்டு கடைசியாக குர் ஆன் ஓதிக் கொண்டிருந்த உஸ்மான் ரலி அவர்களை கொலை செய்தார்கள்
هاجم المتمردون دار عثمان وأصيب ذلك اليوم أربعة من شبان قريش وقتل
منهم أربعة، ثم هجموا على عثمان بن عفان فقتلوه، وهو يقرأ في المصحف فانتضح الدم
على قوله تعالى: ﴿فَسَيَكْفِيكَهُمُ اللَّهُ وَهُوَ السَّمِيعُ
الْعَلِيمُ﴾ (سورة
البقرة، الآية: 137).
وكان ذلك في يوم الجمعة الموافق 18 من شهر ذي الحجة سنة 35 هـ، وعمره اثنتان وثمانون سنة، ودفن ليلة السبت بين المغرب والعشاء في حش كوكب الذي كان قد اشتراه ووسع به البقيع.
அவரை கொன்றவர்கள் நிம்மதியாக
அவருக்கு ஜனாஸா தொழுகை நட்த்தவும் ஜன்னத்துல் பகீ கப்ருஸ்தானில் அவரை அடக்கம் செய்யவும்
கூட அனுமதிக்க வில்லை.
கும்பல் வன்முறை எவ்வளவு
கொடூரமானது என்பதை புரிந்து கொள்ள முஸ்லிம்களுக்கு இதை விட வேறு உதாரணம் தேவை இல்லை.
அந்த வன்முறை ஏற்படுத்திய
பின் விளைவுகள் பாரதூரமானவை.
ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தின்.
ஒற்றுமையை சிதைத்தது நிம்மதியை குலைத்த்து
வெற்றிப் பாதையில் பெரும்
தடைக்கல்லாக அமைந்த்து.
முஹம்மது நபி ஸல்) அவர்களாக
அல்லாஹு அக்பர் என்ற ஒற்றைச் சொல்லில் ஓரணியில் திரட்டப் பட்ட முஸ்லிம் உம்மத் அரசியல்
ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் முஸ்லிம்கள் பிளவு பட வழி அமைத்த்து.
الغوغاء قديمة في العالم العربي والإسلامي ولعل أقرب مثال لها
الغوغاء التي أجهزت على عثمان بن عفان وقتلته ثم منعت دفنه يوما كاملا وقام بعضها
بالوطء على صدره حتى كسرت أضلاعه وهو ميت، ثم حمل آخرون قميصه وعليه دماؤه مطالبين
بالثأر من قتلته ! وكذلك الخوارج الذين خرجوا على علي بن أبي طالب وحاربوه ظلما
وعدوانا ورفعوا المصاحف على رؤوس الرماح وبقي فكرهم المتطرف إلى يومنا هذا،.
அல்லாஹு அக்பர்!
இந்த கும்பல் படுகொலையின் கொடூரம் அதனால் விளைந்த தீம்மகளும் எண்ணிப் பார்க்க முடியாதவை
வரலாற்றில் ஒரு
பெரும் அவலம் என்ன வெனில் மக்கள் வரலாற்றிலிருந்து சரியாக பாடம் படித்துக் கொள்வதில்லை
என்பது தான்.
இந்த கொடூரத்திற்குப் பிற்கும் முஸ்லிம் உம்மத் பல கட்டங்களிலும் கும்பல் வன்முறை போக்க்க கை விட வில்லை.
பத்து பேர் சேர்ந்து தங்களுக்கு ஒரு நியாயம் கற்பித்துக் கொள்வார்கள்
எனில் சட்டத்தை கையில் எடுத்து கொல்ல வெறித்தாக்குதல்கள் நடத்தும் நடை முறை தொடர்ந்து
முஸ்லிம் உலகில் ஆங்காங்கே நடந்து வந்துள்ளத்த வரலாறு காட்டுகிறது. அல்லாஹு அக்பர்
என்று கூறி எந்த அக்கிரமத்தையும் நியாயப்படுத்தி விட முடியும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் அத்தக்கய ஒவ்வொரு கட்டத்திலும் முஸ்லிம் சமூகத்தின்
நிம்மதி – மரியாதை – வெற்றி – பறிபோகவே செய்திருக்கிறது. தோல்வியும் இழிவையும் சந்தித்திருக்கிறது.
இஸ்லாமை பாதுகாப்பதற்காக , முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு ஆதராவாக
என்று கும்பல்கள் களமிறங்கிய இடங்களில் கூட இந்த விபரீதம் தான் நடந்துள்ளது, எங்கும்
நன்மை எதுவும் நடந்ததில்லை
முஸ்லிம்கள் என்றில்லை யாராக இருந்தாலும் கும்பல் வன்முறைகள் சமூகத்தை பெரிதும் பாதிக்கும் என்பது தான் அல்லாஹ் இந்த உலகில் வைத்துள்ள நியதி
பாருங்கள்! அமெரிக்கா உலகில் ஜனநாயகத்தின் பெரும் சட்டாம் பிள்ளையாக இருந்த்து. உலக் ஜனநாயகத்திற்கு நாங்கள் தான் காவலர்கள் என்று கூறி மற்ற உலக நாடுகளின் பல தலைவர்களை சத்தமில்லாமல் அழித்துள்ளது. சட்டத்தின் ஆட்சி தங்களது நாட்டை போல வேறெங்கும் இல்லை என்று கொக்கரித்து வந்தது .
நேற்றைக்கு முன் தினம் அமெரிக்க தலை நகரில் கூடிய தற்போதைய அதிபருக்கு ஆதரவாக கூடிய ஒரு கும்பல் நாடாளுமன்ற கட்டிடத்தை சூழ்ந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரண்டு ஓடினர். கும்பல் நாடாளுமன்றத்தை கைப்பற்றியது. சபாநாயகர் நான்ஸீ பெலோரோஸின் அறைக்குள் புகுந்து சேதப்படுத்தியது, ஒரு ஆள் அவரது இருக்க்கையில் உட்கார்ந்து மேஜை மேல் கால் போட்டுக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். இன்னொரு நபர் நாடாளுமன்ற சபாநாயகர் இருக்கையில் உட்கார்ந்து டிரம்ப் வென்று விட்டதாக அறிக்கை படித்தார். நான்கு பேர் கொல்லப் பட்டுள்ளனர், பல காவலர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
உலகின் சட்டாம்பிள்ளையான அமெரிக்காவில் என்ன நடக்கிறது என்று புரியாமல் கடந்த புதன் கிழமை உலகமே அதிர்ச்சியில் உரைந்து போய்விட்டது.
இது
அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என்று பலரும் கூறியிருக்கிறார்கள்.
உலகம்
முழுக்க இத்தகைய கருப்பு தின்ங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
இத்தகைய
வன்முறையில் ஈடுபடுவோர் குறிப்பாக முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டியது
இத்தகைய
எந்த செயலும் அல்லாஹ்விட்த்தில் – அல்லாஹ்வின் தூதரிட்த்தில் மரியாதைக்குரியவை அல்ல.
இத்தகைய
செயலபாடுகளால் அல்லாஹ் ரஸூலின் பெருமையை ஒரு போதும் உயர்த்தி விட முடியாது
மாறாக
இது தவறான விமர்சன்ங்களுக்கு தள்ளிவிடும்.
இஸ்லாம் அல்லாத இட்த்தில் கூட இந்த குமபல் வன்முறை எதற்காக கடை பெருகிறதோ அந்த நோக்கம் ந்றைவேறாது. மாறாக அந்த நோக்கம் சிதையும் , யாருக்காக நடை பெற்றதோ அவர்கள் கேவலப்படுத்தப் படுவார்கள்.
அடுத்தாக
இதனால் ஏற்படும் பின் விளைவுகள் அசாதாரணமானவையாக – அமைந்து விடும். இஸ்லாமிய உலகு சந்தித்ததைப்
போல
ஜெர்மனி
ராஜதந்திரி பிஸ்மார்க் கூறியதும் இங்கு கவனிக்கத் தக்கது , கும்பல் வன்முறையாளர்கள்
ஒரு போதும் நிம்மதியாக இருக்க முடியாது,.
“ கும்பல் வன்முறை மூலம் ஒரு வேளை நீ அதிகார்த்தை கைப்பற்றி விடலாம் ஆனால் மறந்து விடாதே உன்னால் பாதிக்கப் பட்டவர்களில் சாபங்களால் நீ எப்போதும் நரகத்திலேயே இருப்பாய”
முஸ்லிம்கள்
– குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டிய பாடம் இது
அல்லாஹ்
நம்மையும் இந்த உலகையும் கும்பல் வன்முறையிலிருந்து பாதுகாப்பானக!
முழு
உலகிற்கும் வழிகாட்டியான பெருமானார் (ஸல்) அவர்களது வழிமுறைகளை எங்கும் எதிலும்
கடை பிடித்து வாழ தவ்பீக் செய்வானாக!
.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
ReplyDeleteமாஷா அல்லாஹ் அல்லாஹ் மேலும் மேலும் உங்கள் பணியை சிறப்பாகுவானாக..