வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 04, 2021

விமர்சனங்களை வென்றவர்

கடந்த  வாரத்தில் தமிழகம் முழுவதிலும் முஸ்லிம்கள் கொதிப்படைந்தனர். பாஜக கட்சியை சேர்ந்த ஒருவர் பேசியது அவர்களை கடும் கோபத்திற்கும் கவலைக்கும் உள்ளாக்கியிருந்த்து.

இந்த கோபத்திற்கான ஒரு முக்கியமான நியாயத்தை நாம் தெரிவிக்க விரும்புகிறோம்.

குறிப்பிட்ட நபர் முஹம்மது நபியை கேவலப்படுத்தி விட்டார் என்பதற்காக முஸ்லிம்கள் கோபப்பட வில்லை.

ஏனேனில் அந்தப் பூரண நிலவை ஒரு போதும் எவராலும் கறைப்படுத்த முடியாது.

அவர் முஹம்மது. எப்போதும் எல்லாக்காலத்திலும் எதிரிகளாலும் கூட புகழப்படுபவர் என்று அதற்குப் பொருள்.

அல்லாஹ் நபியின் பெயரை எப்படி அமைத்திருக்கிறான் பாருங்கள். முஹம்மது என்று சொல்லி விட்டு வேறு குறை எதுவும் கூறினால் கூறியவன் அல்லவா பேதையாகவும் முட்டாளாகவும் தெரிவான்?

முஹம்மது நபியை குறைப்படுத்தும் முயற்சிகள் எதுவும் மோசமாக தோற்றுப் போகும் என்பதுதான் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகால வரலாறு.

இந்த உலகில் நிரூபிக்கப் பட்ட பல உண்மைகள் உண்டு. அதிலொன்று. முஹம்மது நபியை ஆராய்ச்சி செய்கிற எவரும் அவரை பாராட்டாமல் இருந்ததில்லை. பெருமானாரை குறை பேச முற்படுகிற எவரும் இழிவடையாமல் இருந்ததில்லை. அது போப்பாண்டவராக இருந்தாலும் கூட.

முஹம்மது நபியை களங்கப்படுத்தும் முயற்சியை அணு அளவிலும் விட்டுவைக்காத முஸ்லிம் சமுதாயம் அவரைப் பற்றிய கருத்து விவாதங்களுக்கு எப்போதும் தயாராக இருக்கிறது.

அவரை தீவிரமாக எதிர்தவர்கள் அந்த சத்திய தரிசனத்தை நேரிட்டுக் கணட நிமிடச் சருக்கில் சரணாகதி அடைந்தனர் என்பதுதான் வரலாறு. உமர் ஒரு உதாரணம் போதாதா? ஒரு கவிஞன் சொன்னது போல் முஹம்மது என்ற நன் மலரை வெட்ட வந்த விரல்களே அந்த மலருக்கு காம்பாக மாறிவிடவில்லையா?

எதிர்ப்பு எங்கே வலுவாக இருக்கிறதோ அங்கே பலமான தளத்தை அமைத்துக் கொண்டது தான் முஹம்மது நபியின் தனிச்சிறப்பு.

முஹம்மது நபி (ஸல்) தனது ஊர் மக்களிடம் உங்களது உறவினன் நான். அந்தக் காரணத்தினாலேனும் என் வழியில் செல்ல என்னை அன்மதியுங்கள் என்று கோரிய போது அதைக் கூட ஏற்க மறுத்தனர் அம்மக்கள். ஆயினும் முஹம்மது நபி (ஸ்ல்) அவர்களது வாழ்வில் குற்றம் கண்டு பிடித்து அவரை தரம் தாழ்த்திட அவர்கள் முறசிக்கவில்லை.

முஹம்மது (ஸல்) தனது பிரச்சாரத்தின் தொடக்க முயற்சியாக கஃபா ஆலயத்தின் அருகே இருந்த சபா குன்றின் மீதேறி சப்தமிட்டு பஹ்ர் குடும்பமே! அதீ குடும்பமே! கஃபு குடும்பமே ! இந்த மலைகனவாயினூடே உங்களை தாக்குவதற்கு ஒரு படை வரப்ப்போகிறது என்று நான் சொன்னால் அதை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்டார். அதற்கு அம்மக்கள் சொன்ன வார்த்தையை வரலாறு பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கிறது. நஅம்! மா ஜர்ரப்னா அலைக்க இல்லா சித்கன்ஆம்! நம்புவோம்! நீர் உண்மையாளர் என்பது தான் எங்களது அனுபவம்என்று அம்மக்கள் கூறினர். தனது சொல்லை ஏற்கச் செய்வதற்கான பீடிகியை அமைத்துக் கொண்ட பிறகு முஹம்மது ஸல்) தனது பிரச்சாரத்தை எடுத்துரைத்த போது இதற்குத்தானா எங்களை அழைத்தாயா என்று கடிந்து கொண்ட அம்மக்கள் கடைசி வரை நபிகள் நாயகத்தின் நம்பகத் தன்மையில் குறை பேசவே இல்லை.

வரலாற்றில் ஒரு பேரதிசயமாக முஹம்மது நபியின் பிரதான எதிரியாக இருந்த அபூஜஹ்ல் நீ பொய் சொல்கிறாய் என்று கூறமாட்டேன்! ஆனால் உன்னை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது. என்று நபிகள் நாயகத்திடம் கூறினான். முஹம்மது நபி வாழ்ந்த காலத்தில் அவரை சூழ்ந்திருந்த சமுதாயம் அவரது வாழ்வின் மீது எந்தப் பழிச் சொல்லையும் சொல்லவில்லை.

இறைத்த்தூதர்களைப் பற்றி அனுபவமின்மை காரணமாக மக்காவின் மக்கள் நபி (ஸல்) பற்றி, கவிஞராக இருப்பாரோ! மந்திரவாதியோ! ஒரு வேலை இதுவும் ஒரு வகை சித்த பிரமையே! என்றெல்லாம் பேச முற்பட்டார்கள் என்றாலும் அப்படிக் கூட அவர்களால உறுதியாக பேச முடியவில்லை.

மக்காவின் செல்வாக்கு மிக்க செல்வந்தர் வலீது பின் முகீரா நபிகள் நாயகத்தை குறை சொல்லும் வார்த்தைய கண்டுபிடிப்பதற்காகவே தன்னுடைய வீட்டில் ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். நபிகள் நாயகத்தின் எதிரிகள் ஒன்று கூடினர். கவிஞர்” “மந்திரவாதி” “சித்தபிரமை பிடித்தவர்என் ஒன்றன்பின் ஒன்றாக பழிச் சொற்கள் கூறப்பட்டன. வலீது அவை ஒவ்வொன்றையும் மறுத்தார். முஹம்மதுவிடம் இந்தக் குறை இல்லை. இதை சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று அனைத்தையும் நிராகரித்தார்.. கருத்துச் சொன்னவர்கள் கடுப்படைந்தனர், நீங்களாவது ஒன்றை சொல்லுங்கள் என்றனர். வலீது சொன்னார். முஹம்மது விசயத்தில் நீங்கள் எதைச் சொன்னாலும் அது எடுபடாது. பொய்யென்று தெரிந்து விடும். மா அன் தும் பிகாயீலீன பிஸய்யின் பீஹி இல்லா உரிப அன்னஹூ பாதில்)

ஒரு உத்தமரை வார்த்தையால் ஊனப்படுத்தும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. அல்ல. தங்கத்தை உரசிப் பார்த்த பொற்கொல்லனின் தீர்ப்பாக முஹம்மது நபியின் யோக்கியதாம்சத்தை நிறுவும் சான்றாக அமைந்தது.

  عن ابن عباس - أن الوليد بن المغيرة اجتمع ونفر من قريش وكان ذا سن فيهم، وقد حضر المواسم فقال: إن وفود العرب ستقدم عليكم فيه وقد سمعوا بأمر صاحبكم هذا فأجمعوا فيه رأيا واحدا ولا تختلفوا فيكذب بعضكم بعضا، ويرد قول بعضكم بعضا.

فقيل: يا أبا عبد شمس، فقل، وأقم لنا رأيا نقوم به.

فقال: بل أنتم فقولوا وأنا أسمع.

فقالوا: نقول كاهن؟

فقال: ما هو بكاهن رأيت الكهان.

فما هو بزمزمة الكهان.

فقالوا: نقول مجنون؟

فقال: ما هو بمجنون، ولقد رأينا الجنون وعرفناه فما هو بحنقه ولا تخالجه ولا وسوسته.

فقال: نقول شاعر؟

فقال: ما هو بشاعر قد عرفنا الشعر برجزه، وهزجه، وقريضه، ومقبوضه، ومبسوطه، فما هو بالشعر.

قالوا: فنقول هو ساحر؟

قال: ما هو بساحر قد رأينا السحار وسحرهم فما هو بنفثه ولا بعقده.

قالوا: فما نقول يا أبا عبد شمس؟

قال: والله إن لقوله لحلاوة، وإن أصله لمغدق، وإن فرعه لجنىً فما أنتم بقائلين من هذا شيئا إلا عرف أنه باطل،

தங்களது ஊர்கார்ரும் மரியாதையான குடும்பத்தவரும் நாணயமிக்கவருமான முஹம்மது (ஸல்) அவர்களை ஒன்று சேர்ந்து கொன்று விடலாம் என்று தீர்மாணித்தவர்கள் கூட முஹம்மது (ஸல்) வை பழிச் சொல்லுக்கு ஆளாக்கவில்லை.

ரோமப் பேரரசர்சர் ஹிர்கல் பாரசீகத்திடம் பெற்ற வெற்றிக்கு பரிகாரமாக பாலஸ்தீனத்திற்கு நடை பயணம் வந்திருந்த போது, அங்கு முஹம்மது நபியின் கடிதம் அவருக்கு கிடைத்தது. முஹம்மது நபியை பற்றி விசாரிப்பதற்காக அவர் மக்காவிலிருந்து வந்திருக்கும் வியாபாரக் குழுவை அழைத்தார். மக்கத்து எதிர்களுக்கு நபிகள் நாயகத்தை பழி தீர்க்கும் ஒரு முக்கிய வாய்ப்பு கிடைத்தது. அப்போதும் கூட அவர்கள் முஹம்மது ஸல் அவர்கள் மீது அவர்கள் பழி கூறி ஒரு வார்த்தை கூறவில்லை.

முஹம்மது என்றால் புகழுக்குரியவர் என்று பொருள், அந்த பொருளுக்கேற்பவே முஹம்மது (ஸல்) வாழ்ந்தார்.

ஆனால் முஹம்மது (ஸல்) அவர்களின் வரலாற்றின் மீதும் களங்கத்தை பூசும் முயற்சியை ஐரோப்பிய கிருத்துவர்களே முதன் முதலாக ஆரம்பித்தனர். சிலுவை யுத்தங்களின் போது இந்த வகையான தூற்றுதல் பெருந்தூரலாக இருந்தது. தம் மனம் போனபடிக்கு நாயகத்தை பழித்துப் பேசினர். அவரைப் போர் வெறியர் என்றனர்- பெண்ணாசை கொண்டவர், மோசடியாளர், என்றனர் சகிப்துத்தன்மை அற்றவர் என்றனர்.

அன்றிலிருந்து இன்றுவரை இந்த குற்ற இயல்புகளை அனைத்திற்கும் ஐரோப்பியர்களே பிறப்பிடமாக இருந்தனர். கீழ்த்தரமான, ஒழுக்கக்கேடு நிறைந்த குரூரமான செயல்களுக்கு இன்று வரை ஐரோப்பிய கிருத்துவ மேற்குலகை தவிர வேறு உதாரணம் இல்லை. இன்னும் சொல்வதானால் உலகிற்கு கொடுப்பதற்கு அவர்களிடம் இவற்றை தவிர வேறு எதுவும் இல்லை.

முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றி குறை  பேசியவர்களின் கருத்துக்கள் பலவும் அவர்களுடைய மன விகாரத்தின் வெளிப்பாடாக அமைந்ததே தவிர, அதில் ஆத்திரமும் பொறாமையும் பொங்கி வழிந்ததே தவிர அதில உண்மை துளியும் இருக்கவில்லை.

அதனால் தான் அவர்கள் கூறிய குற்றச் சாட்டுக்கள் எதுவும் காலத்தின் காதுகளில் பதியவே இல்லை.

முஹம்மது நபியின் வரலாற்றின் வழக்கப்படி, அவருக்கு எதிரான குற்றச் சாற்றுகளுக்கு எதிர் தரப்பிலிருந்தே மறுப்புச் சொல்லப்பட்டது. முஹம்மது நபிக்கு எதிரான கருத்துக்களை கருத்து ரீதியில் சந்தித்து நறுக்கான பதில்களை முஸ்லிம் சமூகம் முன்வைக்கத் தவறவில்லை. ஆனாலும் முஸ்லிம் அல்லாத பிற சிந்தனையாளர்களின் தளத்திலிருந்து தரப்பட்ட பதில்கள் முஹம்மது நபியின் வாழ்வில் சத்திய வெளிச்சத்திற்கு சான்றாக அமைந்தன.

முஹம்மது நபிக்காக வாதிட்டு முஸ்லிம்கள் கூறும் பதில்களில் சமய ரீதியான அணுகுமுறை மிகைத்து இருந்தது என்றால் பிற சிதனையாளர்களின் பதில்கள் முஸ்லிம்கள் சிந்திக்காத மற்றொரு கோணத்தில் வாழ்வியல் ரிதியான எதார்த்தமான பதில்களாக அமைந்தன. இதைக் கூடவா நீங்கள் கவனிக்கவில்லைஎன எதிர்ப்பாளர்களை நோக்கி கேள்வி கேட்கிற தொனியில் அவை அமைந்திருந்தன.

மக்காவில் வலீது நட்த்திய கூட்டம் எப்படி நபிகள் நாயகத்தின் வரலாற்றுக்கு எதிர்திசையிலான புதிய பரிமாணத்தை தந்ததோ அதே போல ஐரோப்பியர்களின் குற்றச் சாட்டுகளும் முஹம்மது நபியின் வாழ்வில எதிர்த்திசையிலான வலுப்படுத்தலாக அமைந்தன. அவை ஐரோப்பிய யூத காழ்ப்புணர்வின் குரூரத்தை அம்பலப்படுத்தினவே அன்றி முஹம்மது நபி புகழ் வாழ்வில் ஒரு தூசு அளவுக்கு கூட மாசுபடுத்திடவில்லை.

19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய உலகில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு எதிராக புயல் வீசிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற வீச்சு மிகுந்த சிந்தனையாளரும் அற்புதமான பேச்சாளருமான தாமஸ் Heroes and Hero-Worship என்ற தலைப்பில் உலகின் கதாநாயகர்களைப் பற்றி தொடர் உரைகள் நிகழ்த்தினார். எடின்பரா பல்கலையில் சட்டம் பயின்ற அவரது உரைகளை மக்கள் கட்டணம் செலுத்திக் கேட்டனர். அவர் எழுதிய The Heroes என்ற நூலுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது. கார்லைல் தனது உரைகளுக்கு கவிதை கதாநாயகர்க்களாக தாந்தே, ஷேக்ஸ்பியர் ஆகிய இருவரையும், கதாநாயக பாதிரியாராக மார்டின் லூதரையும், கதாநாயக இலக்கிய எழுத்தாளராக ஜான்ஸனையும் ரூஸோவையும், ஆட்சியாளராக நெப்போலியனையும் தேர்வு செய்து அவர்கள் குறித்து ஆழமான கருத்துரைகளை வழங்கினார். 1840 ம் மே 8ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கதாநாயகர் ஒரு தீர்க்க தரிசியாக என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது இந்த தலைப்பிற்கு தீர்க்க தரிசிகளின் பட்டியலிலிருந்து மோஸேவையோ இயேசுவையோ தேர்ந்தெடுக்காமல் யாரும் எதிர்பாரத விதமாக முஹம்மது (ஸல்) அவர்களை தேர்வு செய்தார்.

வெளையர்கள் கருப்பின மக்கள் மீது கொண்டிருந்த வெறுப்பைபோல் அந்த கிருத்துவ சமுதாயம் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது வெறுப்புக் கொண்டிருந்தது. தலைப்பே அவர்களை திடுக்கிட வைத்தது என்றால் தொடர்ந்து அவர் பேசிய தகவல்களில் ஐரோப்பிய மக்களுக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் காத்திருந்தன.

முஹம்மதுவுக்கு எந்த வேதச் செய்தியும் வரவில்லை என்று நையாண்டி பேசிய 17 ம் நூற்றாண்டைச் சார்ந்த Hugo Grotius என்ற டச்சு கவிஞனின் கருத்தை மறுத்து தன்னுடைய உரையை தொடங்கிய கார்லைல், “It is a great shame for anyone to listen to the accusation that Islam is a lie and that Mohammad was a fabricator and a deceiver என்று தொடர்ந்தார்.

இஸ்லாம் பொய்யான ஒரு சமயம்; முஹம்மது ஒரு ஏமாற்றுக்காரர் என்று குற்றச் சாட்டை ஏற்பது எந்த நாகரீகமான பிரஜைக்கும் வெட்கரமானது. என்ற அவரது தொடக்கம் நேயர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது,

 Hugo Grotius கற்பனையாகவும் கிறுக்குத்தனமாகவும் சொன்ன கதைகளில் கிருத்துவ உலகம் அகமகிழ்ந்து கொண்டிருந்த்து. முஹம்மது சில புறாக்களை வளர்த்தார், அந்தப் புறாக்களுக்கு அவர் நல்ல பயிற்சி கொடுத்தார். அவை அவரது தோளில் வந்து உட்கார்ந்து அவரது காதோரம் வைக்கபடுகிற தானியங்களை சாப்பிடும், அதைதான் தனக்கு வஹி இறைச் செய்தி வருவதாக அவர் என முட்டாள்தனமாக கதை கட்டி விட்டிருந்தான்Hugo Grotius.

 இவன் மட்டுமல்ல புத்திசாலிகள் என்று தங்களைத்தாங்களே கருதிக் கொள்ளும் (?) பலரும் இப்படித்தான் உண்மைக்கு சற்றும் தொடர்பில்லாத அறிவீனமான கற்பனைகளை முஹம்மது (ஸல்) அவர்கள் விசயத்தில் நம்பியிம் பேசியும் வருகிறார்கள். இஸ்லாம் தொடர்பாக தங்களுக்குத் தாங்களே உருவாக்கிக் கொண்ட அறிவீனமான கருத்துக்களை நம்பி, பேசி, அதையே விவாதம் செய்து பரப்புவதன் மூலம் அற்பமாக சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த கிருத்துவர்கள் நிறைந்திருந்த அந்த திரளான சபையில் கார்லைல் உரத்துக் கூறினார்.

 இந்த மனிதர் விசயத்தில் இனவெறியோடு திட்டமிட்டு நாம் உருவாக்கிய இந்தப் பொய்களால் நமக்குத்தான் இழிவே தவிர ஒருபோதும் அவருக்கல்ல.

 தொடர்ந்து நபிகள் நாயகம் (ஸல் அவர்களின் நாணயம், உள்ளத்தூயமை ஆகியவற்றை கிலாகித்துப் பேசிய கார்லைல், நபிகள் நாயகத்தின் ஒரு செயலை மிக உவப்போடு குறிப்பிட்டார்.

 முஹம்மது (ஸல்) ஒரு முறை மக்காவின் தலைவர்க்களுக்கு இஸ்லாமை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஏழை கண் தெரியாதவரான அப்துல்லாஹ் பின் உம்மி மக்தி இடைமறித்து பேசினார். நபிகள் நாயகம் முகம் சுளித்தார். அப்போது அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற கருத்தில் பார்வையற்றவர் தேடி வந்த போது முகம் கடுகடுத்தார் என்ற கருத்தில் இறைவசன் அருளப்பெற்றது.

 அதற்கு பிறகு அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) தன்னிடம் வருகிறபோது அவரை நான் கண்டிக்கப்பட காரணமாக இருந்தவரே வருக என பாசத்தோடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைப்பார்கள். வெளியூர்களுக்குச் சென்ற நேரங்களில் இரண்டு முறை அவரை மதீனா நகரின் பொறுப்பாளராக நியமித்தார்கள். இந்த இரண்டு நிகழ்வுகளை எடுத்துக் காட்டிய கார்லைல் கதாநாயக தீர்க்கதரிசியின் உளத்தூய்மையும் நேர்மையும் இந்த அளவுக்கு இருந்தன என்று கூறினார்.

 நபிகள் நாயகத்தின் சத்தியத்தன்மையை எடுத்துக்காட்ட கார்லை அற்புதமான உலக அனுபவத்தின் சத்தாக அமைந்த ஒரு நியதியை எடுத்துவைத்தார்.

 முஹம்மது ஒரு ஏமாற்றுக்கார்ராக இருந்திருந்தால் 12 நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கிற – 18 கோடி மக்கள் நிழல் பெறுகிற ஒரு சமயத்தை அவரால நிறுவி இருக்க முடியாது. சரியான அடித்தளமில்லாத ஒரு கட்டிடம் சீக்கிரம் விழுந்து விடும். மோசடியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. பொய் சீக்கிரமே வெளுத்து விடும்.

 ஐரோப்பிய சமுதாயம் மட்டுமே இன்று வரை நபி (ஸல்) அவர்களது திருமணங்களை கொச்சைப் படுத்தி வருகிறது. அவரை பெண்ணாசை கொண்டவராக சித்தரிக்க முயல்கிறது. வெட்கங்கெட்ட வாழ்கையுடையோர் உயரிய ஒழுக்கம் சார்ந்த திருமண வாழ்வை குறைகூறுவது ஏற்புடையதல்ல.இருப்பினும், தாமஸ் கார்லை ஐரோப்பியர்களுக்கு அன்றைய பாரசீக மன்னரான கிஸ்ராவின் ஆடம்பர வாழ்வையும் ரோமச் சக்ரவர்த்தியான கைஸைரின் டாம்பீகத்தையும் நினைவு படுத்திக் காட்டுகிறார். வானத்தோடு தொடர்பு கொண்டிருந்த முஹம்மது (ஸல்) அவர்களுக்கு பூமியின் மன்னர்கள் சூடிக்கொள்ளும் மகுடங்களில் அக்கறையிருக்கவில்லை என்பதை விவரிக்கிறார். சிற்றின்ப ஆசை அவரது திருமணங்களுக்கு காரணமல்ல என்பதை முஸ்லிம் அறிஞர்கள் பலவகையிலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

முதல் மனைவி கதீஜா (ரலி) இறந்த பிறகே நபி (ஸல்) 10 திருமணங்களைச் செய்தார். அன்றைய அரபகத்தில் பல பெண்களை திருமணம் செய்வது சர்வசாதாரண வழக்கமாக, குறை காணப்படாததாக இருந்தது. அப்படி இருந்தபோதும் அதுவரை ஒரு மனைவியுடனேயே வாழ்ந்தார்.

நபிகள் நாயகத்தின் 50 வயதுக்குப் பின்னரே இரண்டாவது திருமணம் நடைபெற்றது. மற்ற அதிகமான திருமணங்கள் ஹிஜ்ரி 5 க்குப்பின் நடைபெற்றன. அப்போது பெருமானார் 58 வயதை கடந்து விட்டிருந்தார். இத்தனை திருமணங்களுக்குப் பிறகும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த பல பெண்களை பெருமானார் நபி (ஸல்) ஏற்க மறுத்ததை வரலாறு காட்டுகிறது.

நபி(ஸல்) கடைசி மனைவி மைமூனா (ரலி). அவரை திருமணம் செய்து கொண்டது முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாக பல நனமைகளை தந்தது. பிற்காலத்தில் இஸ்லாத்திற்கு மாபெரிய வெற்றிகளை வாரிக்குவித்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அத்திருமணத்திற்கு பின்னரே இஸ்லாமை தழுவினார். அவருடன் மற்றொரு பிரபலமான அம்ரு பின் ஆஸ் (ரலி) இஸ்லாமைத் தழுவினர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) தன்னுடைய தோழர்களிடம் மக்கா தன்னுடைய ஈரல்துண்டுகளை நம்மிடம் வீசி விட்டது என்று கூறினார். இதற்கு ஒருவகையில் காரணமாக இருந்த மைமூனா அம்மையார் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் சித்தியாவார்.

தாமஸ் கார்லைல் மற்றவர்கள் யோசிக்காத புது வகையில் நபி(ஸல்) அவர்களின் புனித்ததை நிரூபிக்கிறார்.

முஹம்மது, அவர் மீது அக்கிரம்மாகவும் வரம்பு மீறியும் சொல்லப்படுவது போல சிற்றிண்ப ஆசை கொண்டவரல்ல. எளிய உணவு எளிய இருப்பிடம் மற்ற அனைத்திலும் எளியதை கொண்டு திருப்தி கொள்ளும் ஒரு துறவியாக அவர் இருந்தார். பல மாதங்கள் பசியால வாடிய வாழ்க்கை அவருடையது

 சத்தான உணவு, கவர்ச்சியான ஆடைகள், வசதியான தங்குமிடம், வளமான பொருளாதாரம், கவலையற்ற வாழ்க்கை ஆகியவை சிற்றின்ப உல்லாச வாழ்க்கைகு மனிதனை தூண்டுபவை. இவை எதுவும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் கிடைக்கவில்லை என்பது எதார்த்தம்.

 முஹம்மது நபி (ஸல்) சட்டப்படி பல பெண்களை திருமணம் செய்து வாழ்ந்தார்; அது அந்தச் சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்ட விசயமாகவே இருந்தது. தனது மனைவியர் அனைவரோடும் அன்பும் கருணையும் வழிந்தோட வாந்தார். இன்னும் பல பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பிக் கேட்டனர். ஆனால் அவர் பலரையும் மறுத்து விட்டார்.

 அவரிடம் உறுதிப் பத்திரமேற்று சிஷ்யைகளாக வருகிற எந்த பெண்ணின் கையையும் அவர் தொட மாட்டார் என்று அவருடைய மனைவி ஆயிஷா ரலி கூறுகிறார்.

 وقد قال صلى الله عليه وسلم لما قالت له النسوة: هلم نبايعْك يا رسول الله، قال"إِنِّي لَا أُصَافِحُ النِّسَاءَ، إِنَّمَا قَوْلِي لِمِائَةِ امْرَأَةٍ كَقَوْلِي لِا مْرَأَةٍ وَاحِدَةٍ" أخرجه النسائيُّ [4181] وغيرُه، وصححه ابن الجوزي،

உலகில் ஒரு வேடிக்கை என்னவென்றால் முஹம்மது நபி (ஸல்) அவர்களது சத்திய அம்சங்களை ஜீரணித்துக் கொள்ள முடியாதவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் அவரை காம இச்சை பிடித்தவர் என்றார்கள். அவர்களே மற்றொரு சந்தர்ப்பத்தில் அவர்களது ஆண்மையை குறை கூறினார்கள்.

 பெருமானாரின் ஆன்மை நீரூபிக்கப்பட்ட ஒன்று

 فقد أخرج البخاري في صحيحه عن أنس رضي الله عنه قال: كان النبي صلى الله عليه وسلم يدور على نسائه في الساعة الواحدة من الليل والنهار، وهن إحدى عشرة، قال -الرواي عن أنس- قلت لأنس: أو كان يطيقه؟ قال: "كنا نتحدث أنه أعطي قوة ثلاثين" وفي رواية الإسماعيلي: قوة أربعين .

 பெருமானாரின் ஆன்மையை அவர்களுடைய முஃஜிஸா எனும் நபித்துவ அற்புதங்களில் ஒன்று என்று கூறுவது முஸ்லிம்களின் வழமை

 எப்படி எனில் ?

 பைளுல் கதீரில் அல்லாமா மனாவி கூறுகிறார்.

 هي معجزة من معجزاته السنية، إذ قد تواتر تواتراً معنوياً، أنه كان قليل الأكل، وكان إذا تعشَّى لم يتغذّ وعكسه، وربما طوى أياماً، والعقل يقضي بأن كثرة الجماع إنما تنشأ عن كثرة الأكل، إذ الرحم يجذب قوة الرجل، ولا يجبر ذلك النقص إلا كثرة الغذاء، فكثرة الجماع لا تجامع قلة الغذاء عقلاً ولا طباً ولا عرفاً، إلا أن يقع على وجه خرق العادة، فكان من قبيل الجمع بين الضدين، وذلك من أعظم المعجزات فتدبر

 தனது ஒன்பது மனைவியோரோடும் பிளை குட்டிகளோடும் இறுதி வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து மறைந்தவர் முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள்

 அவர்களது வாழ்க்கையில் எந்த வகையிலும் குறைகளுக்கு அப்பாற்பட்ட்து. அது நிரூபிக்கப் பட்ட செய்தி.

இது ஒரு புறம் இருக்க இந்து ஒருவன் பெருமானாரை இழிவுபடுத்துவதாக நினைத்துக் கொண்டு பேச

 

அல்லாஹ் பெருமானாரைப் பற்றிப் பேச மக்களை எப்படி ஏற்பாடு செய்கிறான் பாருங்கள்

 சகோதரர் சீமான் ஆண்மை என்றால் என்ன என்று கேட்டு விளாசுகிறார்.

 சகோதரி சபரிமாலா இரண்டு பெண்மக்களை பெற்றெடுத்து வளர்த்தால் சொர்க்கம் செல்லாம் என்று சொன்ன புரட்சியாளரையா குறைப்படுத்த முயற்சிக்கிறாய் என்று பொங்கி எழுகிறார்.

இனி இந்த பயணம் தொடரும் .முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெருமை மேலும் பரப்பப்படும். பெருமானாரை குறை பேசியவர்கள் மேலும் சிறுமைக்குள்ளாவார்கள் 

 அதனால் முஹம்மது நபியை யாரும் குறைப் படுத்தி விட முடியும் என்று முஸ்லிம்கள் எண்ணவில்லை

 முஸ்லிம்களின் கவலை என்ன வென்றால் ?

நாட்டின் நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஒரு கீழ்த்தரமான மனிதன் சீர்குலைக்க முயற்சிக்கிறான் என்பதும், அரசும்  காவல் துறை அவனை உரிய சட்டப் பிரிவுகளில் கைது செய்ய வில்லை என்பதுமேயாகும்.

முஹம்மது நபியை யாரும் குறை பேசினால் அதனால் முஹம்மது நபிக்கு ஒரு பாதிப்பும் இல்லை. ஆனால் அப்படி பேசப்படுவதை முஸ்லிமாக பிறந்த எவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அதற்கு இரண்டு காரணங்கள்

சத்தியத்திற்காகவும் நன்மைக்காகவும் போராடக்கூடிய மனிதருக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டியது சத்தியத்தை நேசிக்கிற மக்கள் அனைவரின் கடமையாகும்.

இரண்டாவது, சமூகங்களுக்கிடையே பதற்றம் எழுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

இதுதான் இஸ்லாம். இஸ்லாத்தின் இந்த உன்னதமான நடைமுறையை குர் ஆன் இப்படி போதிக்கிறது.

لِّتُؤْمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَتُعَزِّرُوهُ وَتُوَقِّرُوهُ 

وَلَا تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا بِغَيْرِ عِلْمٍ ۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَىٰ رَبِّهِم مَّرْجِعُهُمْ فَيُنَبِّئُهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ (108)

 

இதோ இப்போது நாட்டு மக்களும் காவல்துறையும் ஒரு துறையும் ஒன்றை யோசித்துப் பார்க்கட்டும்.

முஹம்மது நபியின் ஆண்மையும் மோடி அமித்ஷா வகையறாக்களின் ஆன்மையும் என்ற தலைப்பில் அடுத்து யாராவது பேச ஆரம்பிப்பார்களானால் நிலைமை என்னவாகும் ?

எனவே தமிழக அரசும்  காவல்துறையும் சட்ட ஒழுங்கை சிதைப்பவர்கள் விசயத்தில் மிக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து தமிழகத்தின் சட்ட ஒழுங்கை பராமரிப்பதில் அக்கறை செலுத்தட்டும்.

ஒன்றை இறுதியாக மீண்டும் ஞாபகப்படுத்துகிறோம்.

முஹம்மது நபியை குறை பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசுகிற எவனும் முஹம்மது நபியை குறைப்படுத்தி விட முடியாது. அவன் சட்ட ஒழுங்கையும் அமைதியையும் குலைக்கவே முயற்சிக்கிறான் என்பதை புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

 முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோள்

இந்த  சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யார் அந்த முஹம்மது என்பது மாதிரியான தலைப்புக்களில் மாற்று மத சகோதரகளுக்கு நபி (ஸ்ல) அவர்களின் பெருமைகளை எடுத்துச் செல்வோம்.

இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவோம்.

நாம் மோடிக்கு எதிராகவோ அல்லது அசிங்கமான இந்துத்து சக்திகளுக்கு எதிராகவோ கேள்வி எழுப்புவது எளிதானது.

உங்க ஆளுகளுடைய இலட்சணம் தெரியாதா என்று எளிதில் கேட்டு விடலா.

எத்தனை பேருடைய மனைவிகள் அவர்களுடன் இல்லை. எத்தனை பேர் அடுத்தவன் மனைவியுடன் வாழ்கிறான். உங்கள் தலைவர்களுடைய மகன்களும் மகள்களும் அவர்களுக்கு பிறந்தவர்களே என்பதை டி என் ஏ எடுத்து நிரூபித்து காட்ட தயாரா என நாம் ஆவேசமாக கேள்வி கேட்கலாம்.

அதனால் நமது கோபம் அடங்கலாம்.

அதை விடச் சிறந்த்து உலக்த்திற்கு முஹம்மது நபி (ஸல்) அவர்களை அறிமுகப்படுத்துவது . சரியாக.

அதன் மூலம் அவர்களுக்கு ஹிதாயத் கிடைக்கும் வாய்ப்பு உண்டல்லவா?

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக

 

No comments:

Post a Comment