வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 11, 2021

பொறாமைத் தீ


يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ * إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ [الشعراء: 88، 89]

மனித குணங்களில் மிகக் கெட்ட்து பொறாமை.

 பொறாமை என்றால் அடுத்தவர்களுக்கு கிடைத்திருக்கிற நன்மைகள் கிடைக்கக் கூடாது என்று ஆசைப்படுதாகும்.

 அதன் தீமையை நெருப்போடு பெருமானார் (ஸல்) அவர்கள் ஒப்பிட்டார்கள்.

أبي هريرةإياكم والحسد؛ فإنَّ الحسد يأكل الحسنات كما تأكل النارُ الحطبَ

 தமிழிலும் பொறாமையை தீ யோடு இணைத்துச் சொல்லும் பழக்கம் இருக்கிறது.

தீ எவ்வாறு அஞ்சத் தகுந்த்தோ பொறாமையும் அதே அளவில் அஞ்சத் தகுந்தது.

 வானத்தின் முதல் குற்றம் பொறாமையால் விளைந்தது. இபுலீஸுக்கு ஆதம் அலை அவர்கள் மீது ஏற்பட்ட பொறாமை

 பூமியின் முதல் குற்றமும் பொறாமையால் விளைந்தது. ஆதம் அலை அவர்களின் மகன் காபீலுக்கு சகோதரன் ஹாபீலுக்கு கிடைத்ததன் மீது பொறாமை கொண்டதால் கொலை நிகழ்ந்த்து.

 இன்றளவும் காபீலின் குணத்தோடு பணத்திற்காக பதவிக்காக குடும்ப பெருமை அறிவுத்திறமைக்காக பொறாமை கொள்ளும் காபீலின் வாரிசுகள் அமைதியான உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள்.

 பொறாமையின் உச்சபட்ச தீமை என்னவெனில் எந்த நன்மையையும் உணரவிடாமலும் அனுபவிக்க விடாமலும் தடுத்து விடும்.

 முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் அத்தனையும் பொறாமையின் வெளிப்பாடே

 அன்றைய அபூஜஹ்ல் களிலிருந்து இன்றையை அபூஜஹ்ல்கள் வரை பொறாமை காரணமாகவே எதிர்க்கிறார்கள் .

 وعن إبن عباس ومجاهد وغيرهما قالوا (حسدوا محمد صلى الله عليه وسلم على النبوة وحسدوا أصحابه على الإيمان به ولا زالت آثار حسدهم تظهر يوما بعد يوم


 மனிதர்களுக்கு எதிரான மிகப் பெரிய ஆயுதம் பொறாமை

அதே மனிதர்கள் தங்களையே அழித்துக் கொள்கிற ஆயுதமும் பொறாமை தான்.

 அதனால் பொறாமை கொள்வதிலிருந்தும் விலகிக் கொள்ள வேண்டும். பொறாமைக்கு ஆளாவதிலிருந்தும் விலகிக் கொள்ளவேண்டும்.

 யார் மீதும் எதற்காகவும் பொறாமை கொள்ளக்கூடாது,

 பொறாமை கொள்பவன் எத்தகைய உயரத்திலிருந்தாலும் கீழ் நோக்கி விழுவான்.

 அஜாஜீல் என்ற பெயரோடு – طاووس الملائكة    என்ற அடை மொழியோடு சொர்க்கத்தில் உலா வந்தவனை இபுலீஸ் – மல்வூன் ஆக ஆக்கியது பொறாமையே!

 ஈமானை அழித்தும் விடும்

 الحسد ينافي الإيمان:- لأن الإيمان يأمر صاحبه بالتسليم لأفعال الله. فلو حسد العالم أو العابد أو الصالح فإن ذلك يدل على ضعف إيمانه؛ ولهذا قال رسول الله صلى الله عليه و سلم: (لا يجتمع في جوف عبد مؤمن غبار في سبيل الله وفيح جهنم ولا يجتمع في جوف عبد الإيمان والحسد).


பொறாமை என்பது அல்லாஹ்வோடு போட்டி போடுவது

நீ அவனுக்கு எப்படிக் கொடுப்பாய என்று கேட்பது போன்றது

 وقال عبدالله ابن مسعود: (لا تعادوا نعم الله. قيل له ومن يعادي نعم الله، قال: الذين يحسدون الناس على ماآتاهم الله من فضله يقول الله تعالى في بعض الكتب: (الحسود عدو نعمتي متسخط لقضائي غير راضٍ بقسمتي.....

அல்லாஹ் யாருக்கு எதை கொடுத்திருந்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும். நமக்கு எதை தராமலிருந்தாலும் அதில் ஒரு நன்மையும் நியாயமும் இருக்கும். நிச்சயமாக.

பொறாமைக்காரர்களின் பிரார்த்தனை ஏற்கப்படாது.

 روي عنه صلى الله عليه وسلم أنه قال: ( ثلاثة لا يستجيب الله دعائهم، آكل الحرام، ومخبر الغيبة ومن كان في قلبه غلٌ أو حسدٌ للمسلمين

 பொறாமையின் இறுதி முடிவு இழிவுதான்

وقيل: الحاسد لا ينال في المجالس إلا ندامةً ولا ينال عند الملائكة إلا لعنة وبغضاءً ولا ينال في الخلوة إلا جزعاً وغما ولا ينال في الاخرة إلا حزنا واحتراقاً ولا ينال من الله إلا بعدا ومقتًا،،

பொறாமை வரும் வரை தான் நன்மைகள் சாத்தியமாகும்.

وعن ضمرة بن ثعلبة قال : قال رسول الله - صلى الله عليه وسلم - :لا يزال الناس بخير ما لم يتحاسدوا " . رواه الطبراني ، ورجاله ثقات .

பொறாமை மனிதத் தன்மையை எடுத்து விடும்.

யூசுப் அலை அவர்களின் சகோதரர்கள் நல்லவர்கள் தான். நல்ல விசயத்திற்காக பொறாமை கொண்டார்கள்.

 ليوسف وأخوه أحب الى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين اقتلوا يوسف أو إطرحوه أرضا يخلوا لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين

ஆறாத் தீ

பொறாமைக் காரனின் உள்ளம் அமைதியாக இருக்காது. ஒரு பழமொழி உண்டு

الحسد جرح لا يبرح

டென்ஷன் , கவலை. தீய திட்டமிடுதல்களே பொறாமையில் மிஞ்சும்.

பொறாமை எதனால் வருகிறது.

1.   தற்பெருமை

2.   பகை

3.   சமநிலையில் இருப்பது

 பொறாமை குணம் கொள்ளாதிருக்க என்ன வழி /

 1.   அடுத்தவர்களைப் பற்றிய நன்மைகளை கேள்விப்படுகிற போது மாஷா அல்லாஹ் என்று உளமாற சொல்வது.

 அதில் இருக்கிற தத்துவத்தை உணர்ந்து கொள்வது.  

 وَلَوْلَا إِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَاء اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ إِن تُرَنِ أَنَا أَقَلَّ مِنكَ مَالًا وَوَلَدًا

 ஒரு நண்பர் புதிய வீடு கட்டியிருந்தார். அவர் அப்படி கட்ட முடியும் என்று அவருடைய நண்பர் எதிர்பார்க்காவில்லை. புதிய வீட்டை பார்த்த வுடன் என்ன மாதிரி வீடு கட்டியிருக்காண்டா என்ற எண்ணமும் கூடவே இலேசான பொறாமையுணர்வும் தோன்றும். அங்கே வீட்டில் மாஷா அல்லாஹ் என்ற வாசகத்தை பார்த்து அதை உணரும் போதுதான் அன்று சாப்பிட்ட உணவு ஜீரணிக்கும்.

 2.   அவூது பில்லாஹ்

 அறிஞர்கள் கூறுகிரார்கள் அவூது அதிகம் சொல்வது பொறாமையிலிருந்து பாதுகாக்கும். ஏனெனில் அது சைத்தானை சைத்தானாக்கிய குணம், அது வே சைத்தான் என்றாலும் மிகை இல்லை

 3.   பொறுமை

நமக்கானது நமக்கு வரும்.

 4.   கழாவில் திருப்தி கொள்வது

5.   நட்பு பாராட்டுங்கள்

 இதை பொறாமை கொள்வதை அழிப்பதற்கான மிக முக்கிய நடைமுறையாக அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்

 யார் மீதாது பொறாமை தோன்றுகிறதா அவர் மீது அன்பு கொள்ளுங்கள். நட்பு பாராட்டுங்கள்.

 ஒரு அறிஞரிடன் ஒருவர் எனக்கு அவர் மீது பொறாமை அதிகமாக இருக்கிறது என்றார். அறிஞர் அதை அழிக்க வழி சொன்னார் அவருக்கு அன்பளிப்புக்களை கொடுத்து வா !

 பொறாமை கொண்டவனைப் பற்றி அதிகமாக குறை பேசுவோம். அதை விடுத்து அவரது நல்லியல்புகளை பாராட்டத் தொடங்கினாலும் பொறாமை குறையும்.

 பொறாமைக்குள்ளானவருக்காக பிரார்த்தனை செய்வதும் பொறாமை உணர்வை குறைக்கும்.

 ا رواه النسائي وابن ماجة أن عامر بن ربيعة مر بسهل بن حنيف وهو يغتسل فقال لم أر كاليوم ولا جلد مخبأة، فما لبث أن لبط به فأتي به رسول الله صلى الله عليه وسلم فقيل له: أدرك سهلا صريعا فقال: من تتهمون؟ قالوا عامر بن ربيعة، فقال النبي صلى الله عليه وسلم: (علام يقتل أحدكم أخاه؟ إذا رأى أحدكم من أخيه ما يعجبه فليدع له بالبركة) ثم دعا بماء فأمر عامرا أن يتوضأ فيغسل وجهه ويديه إلى المرفقين وركبتيه وداخله إزاره وأمره أن يصب عليه

பொறாமையிலிருந்து தப்பித்தல்

இதுவும் வாழ்கையில் கவனிக்கப் பட வேண்டிய ஒரு அம்சமாகும். அலட்சியமாக இருக்க கூடாது.

அதற்கான வழிகள்

படோபட்த்தையும் அதிக பந்தாவையும் தவிர்ப்பது. நிஃமத்துக்களை மறைப்பது.


عن معاذ بن جبل قال قال رسول الله صلى الله عليه وسلم "استعينوا على قضاء حوائجكم بالكتمان فإن كل ذي نعمة محسود" رواه الطبراني

 

يَا بَنِيَّ لاَ تَدْخُلُواْ مِن بَابٍ وَاحِدٍ وَادْخُلُواْ مِنْ أَبْوَابٍ مُّتَفَرِّقَةٍ وَمَا أُغْنِي عَنكُم مِّنَ اللّهِ مِن شَيْءٍ إِنِ الْحُكْمُ إِلاَّ لِلّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَعَلَيْهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ [يوسف67].

உங்களது வளம் பிறருக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை.

சூரத்துல் பலக்கை அதிகம் ஓதுவது.

قُلْ أَعُوذُ بِرَبِّ الفَلَقِ مِن شَرِّ مَا خَلَقَ * وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ * وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي العُقَدِ * وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ [الفلق: 1 -

நபி பெருமானார் (ஸல்) அவர்கள் யூதர்களின் பொறாமையிலிருந்ஹ்டு தப்பிக்க அல்லாஹ் கற்றுக் கொடுத்த அத்தியாயம் இது.

 தர்மங்களும் உபகாரங்களும்

மிகச் சிறந்த உத்தி இது

 وَلا تَسْتَوِي الْحَسَنَةُ وَلا السَّيِّئَةُ ادْفَعْ بِالَّتِي هِيَ أَحْسَنُ فَإِذَا الَّذِي بَيْنَكَ وَبَيْنَهُ عَدَاوَةٌ كَأَنَّهُ وَلِيٌّ حَمِيمٌ * وَمَا يُلَقَّاهَا إِلَّا الَّذِينَ صَبَرُوا وَمَا يُلَقَّاهَا إِلاَّ ذُو حَظٍّ عَظِيمٍ * وَإِمَّا يَنْزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ[فصلت34 - 36]

பொறாமையால் பாதிக்கப் பட்டிருப்பதாக உணர்ந்தால்

 وورد أمره لعثمان بن أبي العاص رضي الله عنه عندما شكى له وجعا يجده في جسده منذ أسلم فقال له صلى الله عليه وسلم: (ضع يدك على الذي يألم من جسدك وقل: (بسم الله ثلاث مرات): (أعوذ بعزة الله وقدرته من شر ما أجد وأحاذر) أخرجه مسلم.

تعويذ الرسول صلى الله عليه وسلم للحسن والحسين بقوله (أعيذ كما بكلمات الله التامة من كل شيطان وهامة ومن كل عين لامة)البخاري.

وقد كان جبريل يرقي النبي صلى الله عليه وسلم فيقول: (باسم الله أرقيك من كل شيء يؤذيك من شر كل نفس أو عين حاسد، الله يشفيك، باسم الله أرقيك). مسلم.

 

பொறாமை கொள்வதிலிருந்தும் பொறாமைக்கு ஆளாவதிலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக!

No comments:

Post a Comment