வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 18, 2021

Safe side பேணுதலான வாழ்வு

إِنَّ الَّذِينَ هُمْ مِنْ خَشْيَةِ رَبِّهِمْ مُشْفِقُونَ * وَالَّذِينَ هُمْ بِآيَاتِ رَبِّهِمْ يُؤْمِنُونَ * وَالَّذِينَ هُمْ بِرَبِّهِمْ لَا يُشْرِكُونَ وَالَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ أَنَّهُمْ إِلَى رَبِّهِمْ رَاجِعُونَ * أُولَئِكَ يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَهُمْ لَهَا سَابِقُونَ [المؤمنون: 57 - 61]

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ: ( اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ )

ரமலானை வரவேற்க நாம் தயாராக வேண்டும் என்பதை இந்த துஆ உணர்த்துகிறது.

கடந்த ஆண்டு ரமலானின் இன்பங்கள் எதையும் நாம் அனுபவிக்க முடியாமல் போய்விட்ட்தை எண்ணிப்பார்த்தால் இந்த துஆ நமது அடிமனதிலிருந்து ஒரு வகை அச்சத்தோடு வெளிவரும்.

ரஜப் ஷஃபானை இந்த உணர்வோடு கடந்து செல்வோம்.

அல்லாஹ் ரமலானின் பரிபூரண பாக்கியங்களை வழங்குவான்.

கொரோனோ நோய்த் தொற்று எச்சரிக்கையோடு வாழ நம்மை பழக்கி இருக்கிறது.

இலேசாக காய்ச்சல் அடித்தாலே ஒரு அலார்ட் வருகிறது.

பொதுவெளியில் யாராவது உச் என்று தும்மினால் அருகிலிருப்பவர்கள் மெதுவாக நகர்ந்து விடுகிறார்கள்.

நமது முகங்களுக்கு முகக் கவசம் பழகிப் போய்விட்டது.

கைகளை கழுவுவதும் சானிடைஸர் பய்னபடுத்துவதும் சிறு குழந்தைகளுக்கு கூட பழகிவிட்டது.

கொரோனோ நோய்த்தொற்றுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு மருத்துவர் முகக் கவசத்தோடு நோயாளிகளைப் பார்த்தார். ஒருவர் அவரிடம் கேட்டார். நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டீர்களே பிறகு ஏன் இந்த மாஸ்க் ?

டாக்டர் சொன்னார். இந்திய தயாரிப்பான கோவேக்ஷின் தடுப்பூசி 84 சதவீதம் தான் பாதுகாப்பானது. 16 சதவீதம் அதிலும் ரிஸ்க் இருக்கிறது. அந்த 16 பேரில் நான் ஒருவனாகி விடக் கூடாதல்லவா ? அதற்காகத் தான் மாஸ்க் என்றாறாம்..

நாம் எதற்கும் கொஞ்சம் எச்சரிக்கையாக பேணுதலாக இருப்போம். என்ற இந்த  Safe side மனப்பான்மை புத்திசாலிகளின் அடையாளாமாகும்.

 ஒரு ரமலானை வரவேற்க காத்திருக்க ரஜப் ஷஃபான் மாதங்களில் நாமும் Safe side மனப்பான்மையுடன் இருப்போம். அது ஈமானின் அடையாளமாகும்.

இந்த Safe side என்பதை இஸ்லாமிய வழக்கில் ورع பேணுதல் என்று குறிப்பிடுவார்கள்.

இந்த Safe side  உடலை பாதுகாத்துக் கொள்வது மட்டுமல்ல. உள்ளத்தையும் ஈமானையும் பாதுகாத்துக் கொள்வதற்கானதாகும்.

இஸ்லாமிய வாழ்வு என்பது எல்லா நிலையிலும் இந்த Safe side மனோ நிலையை வலியுறுத்துகிறது. 

لا تقربا هذه الشجرة

وَلَا تَقْرَبُوا الزِّنَا ۖ

وَلَا تَقْرَبُوا الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ ۖ

وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ 

  عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ -وأَهْوَى النُّعْمَانُ بِإِصْبَعَيْهِ إِلَى أُذُنَيْهِإِنَّ الْحَلَالَ بَيِّنٌ، والْحَرَامَ بَيِّنٌ، وبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ فَقَدِ اسْتَبْرَأَ لِدِينِهِ، وعِرْضِهِ، ومَنْ وقَعَ فِي الشُّبُهَاتِ وقَعَ فِي الْحَرَامِ، كَالرَّاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى، يُوشِكُ أَنْ يَقَعَ فِيهِ، أَلَا وإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلَا وإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ، أَلَا وإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ، وإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ، أَلَا وهِيَ الْقَلْبُ. مُتَّفَقٌ عَلَيْهِ.

 தீனையும் மானத்தையும் பாதுகாத்துக் கொள்ளும் வழி Safe side ல் இருப்பதே !\

 ஹஸனுல் பஸரீ ரஹ் கூறுகிறார்கள்.

உங்களிடம் மூன்று காரியங்கள் இருக்குமெனில் தீன் முழுமையாக கிடைத்து விடும்.

 1.   ஹராமிலிருந்து தடுக்கும் பேணுதல்

அல்லாஹ்வுக்கு பொருத்தமில்லாத எந்தச் செயலையும் செய்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை இருந்து கொண்டே இருக்குமானால் பாவங்கள் வெளிப்பட வாய்ப்பிருக்காது. குறைந்த பட்சம் பெரும் பாவங்களை தவிர்த்துவிடலாம்.

2.   மடத்தான செயல்களை தடுக்கும் கம்பீரம்

கம்பீரமான மனிதர்கள் பொருத்தமற்ற காரியங்களை செய்ய மாட்டார்கள்.

من قرأ القرآن فقد استدرج النبوة بين جنبيه إلا أنه لا يوحى إليه، لا ينبغي لصاحب القرآن أن يجد مع من وجد، ولا يجهل مع من جهل

குர் ஆனிய ஞானமுள்ளவர்கள் சாதரணமாக கோப்ப்ப் படக் கூடாது. விளக்கமில்லாதவர்களோடு அமரக் கூடாது. அது குர் ஆனிய கம்பீரத்துக்கு இழுக்கு.

3.   பிறரை துன்புறுத்தாத குணம்

என்னால் எந்த மனிதனும் துன்ப்ப் பட்டு விடக்கூடாது என்ற மனோர் நிலை ஒரு மனிதனுக்கு வருமானால் அது எவ்வளவு சிறப்பான வாழ்க்கையாக இருக்கும் ?

சின்னச் சின்ன கோபங்களுக்காக நாம் பிறரை எந்த அளவில் துன்புறுத்தி விடுகிறோம் ?

இது ஈமானிய அழகல்ல.

வாழ்க்கையில் எல்லா கட்ட்த்திலும் பேணுதலை கடை பிடிப்பது -

வணக்க வழிபாடுகளில் கொடுக்கல் வாங்கள்களில் கோபதாபங்களில் – நம்மை முத்தகீ இறையச்சமுள்ளவர் என்ற நிலைக்கு நிச்சயம் உயர்த்தும்

 பாத்திஹா அத்தியாயத்தின் ரகசியம் – இய்யாக நஃபுது இய்யாக நஸ்தஈன். நமது முழுவாழ்வின் செய்திகளையும் கொண்டது.

 يَّاكَ نَعْبُدُ  ُ}  என்ற மனோ நிலை இபாத்த்தில் வரஃ ஆகும்.

وَإِيَّاكَ نَسْتَعِين என்பது படைப்புக்களோடு உள்ள பேணுதலாகும்.

இதுவே அல்லாஹ்வின் அடிமைகளின் குணம்.

பேணுதல் நம்மை சிறந்த அடியாராக்கும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: « يَا أَبَا هُرَيْرَةَ؛ كُنْ وَرِعًا تَكُنْ أَعْبَدَ النَّاسِ، وَكُنْ قَنِعًا تَكُنْ أَشْكَرَ النَّاسِ، وَأَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ مُؤْمِنًا، وَأَحَسِنْ جِوَارَ مَنْ جَاوَرَكَ تَكُنْ مُسْلِمًا، وَأَقِلَّ الضَّحِكَ فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ». أخرجه ابن ماجة في سننه

இபாதத்துக்களை அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்ய வேண்டும்.

அவற்றையும் சரியாக பேணுதலாக செய்ய வேண்டும்.

 தொழுகை போன்ற வணக்கங்களை அதன் நேரத்தில் செய்து விடுவது. பரிபூரணமாக ஒளு செய்வது தொழுவது. ஹலாலான காசில் தர்மம் செயவது ஹஜ் செய்வது என்பது போன்ற பேணுதல்கள் இபாதத்தில் பேணுதலாகும்.

காசு பணத்தில் கொடுக்கல் வாங்களில் பேணுதலும் மிக முக்கியமானதாகும்.

பெருமானாரின் பேணுதல்

தனது படுக்கையில் கிடக்கும் பேரீத்தம் பழத்தை தர்ம்ம் செய்தார்கள்.

في الصحيحين عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنِّي لَأَنْقَلِبُ إِلَى أَهْلِي، فَأَجِدُ التَّمْرَةَ سَاقِطَةً عَلَى فِرَاشِي، فَأَرْفَعُهَا لِآكُلَهَا، ثُمَّ أَخْشَى أَنْ تَكُونَ صَدَقَةً، فَأُلْقِيهَا»

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ الحَسَنَ بْنَ عَلِيٍّ، أَخَذَ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَجَعَلَهَا فِي فِيهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالفَارِسِيَّةِ: «كِخْ كِخْ، أَمَا تَعْرِفُ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ؟»



சஹாபாக்களின் பேணுதல் – தனக்கு வரவேண்டியதை கொண்டு வந்தவர் தப்பான சம்பாத்தியத்திலிருந்து கொண்டு வந்திருக்கிறார் என்பதை அறிந்து வாந்தி எடுத்த அபூபக்கர் ரலி அவர்கள்

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: «كَانَ لِأَبِي بَكْرٍ غُلاَمٌ يُخْرِجُ لَهُ الخَرَاجَ، وَكَانَ أَبُو بَكْرٍ يَأْكُلُ مِنْ خَرَاجِهِ، فَجَاءَ يَوْمًا بِشَيْءٍ فَأَكَلَ مِنْهُ أَبُو بَكْرٍ، فَقَالَ لَهُ الغُلاَمُ: أَتَدْرِي مَا هَذَا؟ فَقَالَ أَبُو بَكْرٍ: وَمَا هُوَ؟ قَالَ: كُنْتُ تَكَهَّنْتُ لِإِنْسَانٍ فِي الجَاهِلِيَّةِ، وَمَا أُحْسِنُ الكِهَانَةَ، إِلَّا أَنِّي خَدَعْتُهُ، فَلَقِيَنِي فَأَعْطَانِي بِذَلِكَ، فَهَذَا الَّذِي أَكَلْتَ مِنْهُ. فَأَدْخَلَ أَبُو بَكْرٍ يَدَهُ، فَقَاءَ كُلَّ شَيْءٍ فِي بَطْنِهِ

பெருமானார் (ஸல் ) அவர்களில் பேணுதலில் எப்படிப் பட்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க ஆசைப்பட்டார்கள் தெரியுமா ? தங்கமே என்றாலும் வேண்டாம்

ففي الصحيحين عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ، فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى العَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ، فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى العَقَارَ: خُذْ ذَهَبَكَ مِنِّي، إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الأَرْضَ، وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ، وَقَالَ الَّذِي لَهُ الأَرْضُ: إِنَّمَا بِعْتُكَ الأَرْضَ وَمَا فِيهَا، فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ، فَقَالَ: الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ: أَلَكُمَا وَلَدٌ؟ قَالَ أَحَدُهُمَا: لِي غُلاَمٌ، وَقَالَ الآخَرُ: لِي جَارِيَةٌ، قَالَ: أَنْكِحُوا الغُلاَمَ الجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ وَتَصَدَّقَا».

இந்த பண்பாட்டின் வழி வந்த சமுதாயம் எப்படி இருந்த்து.

 இமாம் அபூஹனீபா ரஹ்) பெரிய துணி வியாபாரி. ஒரு மாலை நேரத்தில் தனது கடையை பூட்டினார். வியாபாரம் நேரத்தில் கடையை பூட்டி விட்டு எங்கே போகிறீர்கள் என்று மக்கள் கேட்டனர்.

“மேக மூட்டமாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் துணி வாங்கினால் சரியாக பார்த்து வாங்க முடியாது . அதனால் கடையை பூட்டி விட்டேன் என்றார்கள்.

 மற்றொரு சமயம் வேலைக்காரரிடம் விற்பனைக்கு துணிக் கட்டை கொடுத்தனுப்பினார்கள். ஒரு துணியி ஒரு குறை இருக்கிறது அதை சொல்லி விற்கச் சொன்னார்கள். அவர் குறையை சொல்லாமல் விற்று விட்டார். இமாம் அபூஹனீபா ரஹ் அவர் கொண்டு வந்த பணம் முழுவத்தயும் தர்மாம் செய்தார்கள்.

 இதே போல மற்றொரு தடவை இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களின் கடையிலிருந்த பணியாளர் ஒரு குறையுள்ள ஆடைய குறையை சொல்லிக் காட்ட மறந்து விற்று விட்டார். அப்போது இமாம் கடையில் இல்லை. விபரத்தை அறிந்ததும் வாங்கிச் சென்றவரை பற்றிய அடையாளங்களை கேட்டுக் கொண்டு அவர் கொடுத்த காசையும் எடுத்துக் கொண்டு வேகமாக அந்த மனிதரை தேடிச் சென்றார்கள். ஒருவழியாக ஊர் எல்லையில் அந்த மனிதரை கண்டுபிடித்து என் கடையில் துணி வாங்கினீரா ? அதில் இன்ன குறையிருக்கிறது என்று சுட்டிக் காட்டினார்கள். அதுவரை அந்த மனிதருக்கு அந்த குறை தெரியவில்லை. ஆச்சரியமடைந்த அந்த மனிதர் நான் கொடுத்த காசை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டார். இமாம் காசை கொடுத்தார்கள். அவர் அந்தக் காசை பக்கத்திலிருந்த தண்ணீர் தடாகத்தில் தூக்கி எறிந்தார். பிறகு சொன்னார். நான் கொடுத்த காசு போலியானது. உங்களை ஏமாற்ற நினைத்தேன் . நீங்கள் என்னை மாற்றி விட்டீர்கள். கொஞ்சம் பொறுங்கள் வீட்டிலிருந்து வேறு பணம் கொண்டு வந்து தருகிறேன் என்றார்.

 இஸ்லாமிய சந்தைகளில் இப்படியும் ஒரு காட்சி உண்டு;

ஒருவர் ஒரு கழுதையை விற்றுக் கொண்டிருந்தார். வாங்க வந்தவர் கழுதை எப்படி என்று கேட்டார். வியாபாரி சொன்னார் கழுதை எனக்கு பிடித்திருந்தால் நான் விற்பேனா ?

 மற்ற செயல்களில் பேணுதல்

 பேச்சில் பேணுதல்

 مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ 

 ﴿ أَمْ يَحْسَبُونَ أَنَّا لَا نَسْمَعُ سِرَّهُمْ وَنَجْوَاهُمْ بَلَى وَرُسُلُنَا لَدَيْهِمْ يَكْتُبُونَ

قال يونس بن عبيد رحمه الله: (إنك لتعرف ورع الرجل في كلامه).
عن أبي هريرة رضي الله عنه أن النّبيّ صلّى الله عليه وسلّم قال: «من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت».

وروى البخاري في صحيحه عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ، وَإِنَّ العَبْدَ لَيَتَكَلَّمُ بِالكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ، لاَ يُلْقِي لَهَا بَالًا، يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ».



தேவையற்ற விசயங்களிலிருந்து விலகி நிற்குதல்

 عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مِنْ حُسْنِ إِسْلَامِ المَرْءِ تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ» أخرجه الترمذي

மக்களின் மானத்தை பறிக்கிற காரியங்களிலிருந்து விலகுதல்

عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «...وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ، وَهُمْ لَهُ كَارِهُونَ، أَوْ يَفِرُّونَ مِنْهُ، صُبَّ فِي أُذُنِهِ الآنُكُ يَوْمَ القِيَامَةِ...


காய்ச்சப்பட்ட செம்பு

 وعَنْ ابْنِ عُمَرَ رضي الله عنهما قَالَ: صَعِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ المِنْبَرَ فَنَادَى بِصَوْتٍ رَفِيعٍ، فَقَالَ: «يَا مَعْشَرَ مَنْ أَسْلَمَ بِلِسَانِهِ وَلَمْ يُفْضِ الإِيمَانُ إِلَى قَلْبِهِ، لَا تُؤْذُوا المُسْلِمِينَ وَلَا تُعَيِّرُوهُمْ وَلَا تَتَّبِعُوا عَوْرَاتِهِمْ، فَإِنَّهُ مَنْ تَتَبَّعَ عَوْرَةَ أَخِيهِ المُسْلِمِ تَتَبَّعَ اللَّهُ عَوْرَتَهُ، وَمَنْ تَتَبَّعَ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْهُ وَلَوْ فِي جَوْفِ رَحْلِهِ». أخرجه الترمذي،

இது எத்தகைய safe side எண்ணிப்பாருங்கள்!

பேணுதலான வாழ்க்கையின் பலன்கள் இரண்டுز

 அறிவு பெருகும்

واتقوا الله ويعلمكم الله 

நன்மைகளுக்கான கூலி பல மடங்காகும்.

 ويعظم له أجرا

புனிதம் மிக்க ரஜ்ப ஷஃபான் மாதங்களில் ரமலான வரவேற்கும் நிய்யத்தோடு இபாத்த்துகளிலும் மற்ற வாழ்க்கை காரியங்களிலும் பேனுதலை கடைபிடிப்போம்.

 

அல்லாஹ் அதை நமக்கு safe side ஆக ஆக்கிவைப்பான்.

 

 

 

 

 

 

 

No comments:

Post a Comment