வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 25, 2021

போர் ஓய்வுக் காலங்கள்

நாம் ரஜப் மாத்த்தில் இருக்கிறோம். இதற்கு ஒரு சிறப்பு.

இது புனித மாதங்களில் ஒன்று. இது ரஜப் முழர் என்றும் ரஜப் அல் அஸம்மு என்று அழைக்கப்படுகிறது.

திருக்குர் ஆன் கூறுகிறது.

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللهَ مَعَ الْمُتَّقِينَ"، 

அல்லாஹ்வின் ஏற்பாட்டின் படி மாதங்கள் 12. அதில் 4 மாதங்கள் புனித மாதங்கள்.

 அந் நான்கு மாதங்கள் எவை ?

فعَنْ أَبِي بَكْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ النَّبِيِّ، قَالَ: "إنَّ الزَّمَانَ قَدْ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللهُ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاثٌ مُتَوَالِيَاتٌ: ذُو القَعْدَةِ وَذُو الحِجَّةِ وَالمُحَرَّمُ، وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ" رواه البخاري.

 ஏன் அவை புனிதமாகின. அவை அல்லாஹ்விடம் மரியாதைக்குரியவை. அவற்றில் யுத்தம் தடை செய்யப் பட்டிருக்கிறது.  

 إن هذه الأشهر سميت حرما، لزيادة حرمتها، ولتحريم القتال فيها،

 يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ ۖ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ

காலம் படைக்கப்பட்டது முதல் இந்த நடை முறை இருந்து வருகிறது. அரபுகள் இதை கடைபிடித்தனர்.

أن العرب كانت لا تقرعُ فيه الأسنَّة، فيلقى الرجل قاتل أبيه أو أخيه فيه فلا يَهيجه تعظيما له

பெருமானார் (ஸல்) அவர்களும் இந்த நடைமூறையை அங்கீகரித்திருந்தார்கள்

  عن جابر قال: لم يكن رسول الله صلى الله عليه وسلم يغزو في الشهر الحرام إلا أن يُغْزَى، أو يَغزو حتى إذا حضر ذلك أقامَ حتىّ ينسلخ.

 பொதுவாக அரபுகள் ஹஜ்ஜு போன்ற சில பாரம்பரியங்களை சிறப்பாகவும் உறுதியாகவும் கடை பிடித்து வந்தாலும் கூட அதிலும் தங்களது சுயநலத்திற்கேற்ப சில மாற்றங்களை செய்து கொண்டனர்.

 அந்த வகையில் இந்த புனித மாதங்களின் வரிசையிலும் தேவைப்படும் போது ரஜப் அல்லது மற்ற மாத்த்தில் யுத்தம் செய்து விட்டு அந்த வருட்த்தின் புனித மாதமாக ஸபர் மாதத்தை சேர்த்துக் கொண்டனர்.

திருக்குர் அதை கண்டித்து மாற்றியது.

إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِينَ كَفَرُوا يُحِلُّونَهُ عَامًا وَيُحَرِّمُونَهُ عَامًا لِيُوَاطِئُوا عِدَّةَ مَا حَرَّمَ اللَّهُ فَيُحِلُّوا مَا حَرَّمَ اللَّهُ زُيِّنَ لَهُمْ سُوءُ أَعْمَالِهِمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ} [براءة:37]

 النسيء அதிகப்படியாக திணிப்பது.

 அது மட்டுமல்ல யுத்தம் தவிர்த்த மற்ற புனிதங்கள் பற்றி அவர்கள் எந்த கவலையும் பட வில்லை. எந்த அக்கிரமத்திற்கும் குறை வைக்க வில்லை.

 ஒரு தடவை சஹாபாக்கள் ரஜப் மாதம் என்று அறியாமல் ஒரு ஒரு சண்டையில் ஈடுபட்ட போது அதை மக்காவின் காபிர்கள் பெரிது படுத்தினார்கள். முஹம்மது புனித மாதங்களின் விதியை மீறி விட்டார் என்று குற்றம் சுமத்தின் அதை பரப்பினர்.

 அப்போது அதற்கு பதிலடியாக அல்லாஹ் கூறினான்.  

   يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ ۖ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ ۖ وَصَدٌّ عَن سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِندَ اللَّهِ ۚ وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ ۗ

இந்த ஹதீஸில் அது விரிவாகப் பேசப்படுகிறது. இது யுத்தம் அனுமதிக்கப் பட்ட பிறகு. பத்று யுத்தத்திற்கு முந்தைய சூழ்நிலை.

 عن ابن عباس وعن مرة ، عن ابن مسعود( يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير ) وذلك أن رسول الله صلى الله عليه وسلم بعث سرية ، وكانوا سبعة نفر ، عليهم عبد الله بن جحش الأسدي ، وفيهم عمار بن ياسر ، وأبو حذيفة بن عتبة بن ربيعة ، وسعد بن أبي وقاص ، وعتبة بن غزوان السلمي حليف لبني نوفل وسهيل بن بيضاء ، وعامر بن فهيرة ، وواقد بن عبد الله اليربوعي ، حليف لعمر بن الخطاب . وكتب لابن جحش كتابا ، وأمره ألا يقرأه حتى ينزل بطن ملل فلما نزل بطن ملل فتح الكتاب ، فإذا فيه : أن سر حتى تنزل بطن نخلة . فقال لأصحابه : من كان يريد الموت فليمض وليوص ، فإنني موص وماض لأمر رسول الله صلى الله عليه وسلم . فسار ، فتخلف عنه سعد بن أبي وقاص ، وعتبة ، وأضلا راحلة لهما فأتيا بحران يطلبانها ، وسار ابن جحش إلى بطن نخلة ، فإذا هو بالحكم بن كيسان ، والمغيرة بن عثمان ، وعمرو بن الحضرمي ، وعبد الله بن المغيرة . وانفلت [ ابن ] المغيرة ، [ فأسروا الحكم بن كيسان والمغيرة ] وقتل عمرو ، قتله واقد بن عبد الله . فكانت أول غنيمة غنمها أصحاب النبي صلى الله عليه وسلم

 முகீரா தப்பி ஓடினார். இருவர் கைதியாக பிடிக்கப் பட்டனர். அம்ரு பின் ஹழ்ரமீ கொல்லப்பட்டார்

فلما رجعوا إلى المدينة بالأسيرين وما أصابوا المال ، أراد أهل مكة أن يفادوا الأسيرين ، فقال النبي صلى الله عليه وسلم" حتى ننظر ما فعل صاحبانا " فلما رجع سعد وصاحبه ، فادى بالأسيرين ، ففجر عليه المشركون وقالوا : إن محمدا يزعم أنه يتبع طاعة الله ، وهو أول من استحل الشهر الحرام ، وقتل صاحبنا في رجب . فقال المسلمون : إنما قتلناه في جمادى وقيل : في أول رجب ، وآخر ليلة من جمادى وغمد المسلمون سيوفهم حين دخل شهر رجب . فأنزل الله يعير أهل مكة( يسألونك عن الشهر الحرام قتال فيه قل قتال فيه كبير ) لا يحل ، وما صنعتم أنتم يا معشر المشركين أكبر من القتل في الشهر الحرام ، حين كفرتم بالله ، وصددتم عنه محمدا صلى الله عليه وسلم وأصحابه ، وإخراج أهل المسجد الحرام منه ، حين أخرجوا محمدا صلى الله عليه وسلم أكبر من القتل عند الله 

திருக்குர் ஆன் மக்காவின் காபிர்கள் எதார்த்தமாக நடந்து விட்ட ஒன்றை பெரிது படுத்திய போது நீங்கள் செய்வதெல்லாம் நியாயம் தானா என்ற நோக்கில் திருக்குர் ஆன் கேள்வி எழுப்பியதே தவிர புனித மாதங்களின் அந்தஸ்தை இரத்து செய்யவில்லை.

இதுவே இஸ்லாமிய அறிஞர்களின் நிறைவான தீர்ப்பாகும்.

எனவே புனித மாதங்கள் என்பது இப்போதும் தொடர்கின்றன என்பதே இஸ்லாமிய நிபுணர்களின் கருத்தாகும்.

இந்நான்கு புனித மாதங்களில் மூன்று மாதங்கள் ஹஜ்ஜின் தொடர்ச்சியாக வருபவை.

ஹஜ்ஜுக்கு தயாராவதற்காவும் ஹஜ்ஜை முடித்து திரும்பும் வசதிக்காகவும் அமைக்கப் பட்டவை.  

கஃதா என்றாலே இருப்பு பொருள். யுத்தம் இல்லாமல் ஹஜ்ஜுக்காக காத்திருக்கும் காலம் என்பதால் துல் கஃதா என்று பெயர் சொல்லப் பட்டது.

இடையிலுள்ள ரஜப் மாதம் ஏன் இந்த வரிசையில் சேர்க்கப் பட்டது?

உம்ராவை நிறைவேற்றும் சவுகரியத்திற்காக.

وقد ذكر بعض العلماء أن الحكمة من انفراد رجب عن الأشهر الحرم: تمكن العرب من أداء العمرة في منتصف السنة، وأن الأشهر المتواليات لأجل الحج.

ரஜப் முழர்

நபி (ஸல் ) அவர்கள் ரஜபை குறிப்பிடுகிற போது அதை ரஜப் முழர் என்றார்கள். காரணம்

 فإنما أضافه إلى مضر، ليبين صحة قولهم في رجب أنه الشهر الذي بين جمادى وشعبان، لا كما كانت تظنه ربيعة من أن رجب المحرم هو الشهر الذي بين شعبان وشوال، وهو رمضان اليوم؛ فبين، عليه الصلاة والسلام، أنه رجب مُضر لا رجب ربيعة.

 ரஜப் இடைக்காலத்தில் வருவதால் அதன் அந்தஸ்தை தவர விட்டு விடக் கூடாது என்பதில் அரபுகள் மிக கவனமாக இருந்தார்கள்.

 ரஜபில் எந்த சிறு உரசலும் இருக்காது. அதனால் ரஜப் மாதத்தை  ரஜபுல் அஸம்மு அன்று அழைத்தனர்.

 இந்த நான்கு மாதங்களிலும் யுத்தம் தடை செய்யப் பட்டிருப்பதற்கு ஹஜ் உம்ரா ஆகிய காரணங்கள் சொல்லப் பட்டாலும் இதன் முழுக் காரணம் அல்லாஹ்வே அறிவான் என்பதே அறிஞர்களின் கருத்தாகும்.

 அதே போல இந்தச் சட்டம் உலகம் முழுமைக்குமானது என்பது அறிஞர்களின் தீர்ப்பாகும்

 முஸ்லிம் சமுதாயம் இப்போது யுத்தங்களின் பிடியில் இருக்கிறது.

 எதன் பொருட்டாவது கொஞ்சம் நிம்மதி கிடைக்குமா என்று ஏங்கும் தருணத்தில் இந்த நான்கும் மாத ஓய்வு என்பது எவ்வளவு மகிமை மிக்கது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

 அல்லாஹ்வின் இந்த தீர்ப்பை – இஸ்லாத்தின் எதிரிகள் திட்டமிட்டு மீறுகிறார்கள்.

 சதாம் ஹுசேன் ஒரு ஹஜ்ஜுப் பெருநாளின் போது தூக்கிலடப்பட்டார்.

 பாலஸ்தீனில் யூதர்களின் எல்லை மீறுதல் இந்த கால கட்டத்தில் அதிகரிக்கிறது,  

 முஸ்லிம்கள் இந்த நிம்மதியை அனுபவிக்க விடக் கூடாது என்று எதிர்கள் கங்கணம் கட்டி நிற்கின்றனர்.

 அல்லாஹ் அந்த எதிர்களின் சதித்திட்டங்களை முறியடித்து மூஸ்லிம் உலகின் பாரம்பரிய நிம்மதியை வெகு சீக்கிரம் மீட்டளிப்பானாக!

 புனித மாதங்கள் என்ற இயற்கையான நடைமுறையிலிருந்து முஸ்லிம் சமுதாயம் குறிப்பாகவும் உலக மக்கள் பொதுவாகவும் அறிந்து கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய அம்சங்கள்.

 ஒன்று

 எப்போதும் பிறருக்கு இடையூறு அநீதி இழைக்க கூடாது என்றாலும் இந்த மாதங்களில் முடிந்த அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதில் அதிக நன்மை கிடைக்கும் என்று கருதி அதிக நன்மைகளை செய்ய வேண்டும்.

 மனிதர்களின் வழக்கில் இப்படி சில நாட்களை குறிப்பிட்டால் தான் அவர்கள் அதில் கவனம் செலுத்துவார்கள் என்பதற்காகவே அல்லாஹ் இந்த ஏற்பாட்டைச் செய்தான்.

 والظلم والمعاصي محرمة في سائر الشهور والأيام، ولكن خصَّ هذه الأربعة بزيادة التحريم وتأكيده، وتشديدًا

 قال ابن عباس رضي الله عنهما: "يريد: تحفَّظوا على أنفسكم فيها واجتنبوا الخطايا، فإن الحسنات فيها تضاعف والسيئات فيها تضاعف"[الواحدي؛ الوسيط في تفسير القرآن المجيد:2/ 494]،

  وقال قتادة رحمه الله: "إن العمل الصالح والأجر أعظم في الأشهر الحرم، والذنب والظلم فيهن أعظم من الظلم فيما سواهنّ، وإن كان الظلم على كل حال عظيم، ولكن الله يعظم من أمره ما شاء كما يصطفي من خلقه صفايا"[ابن كثير؛ تفسير القرآن العظيم:1/ 148]


 இரண்டாவது.

 இது இன்றைய கால கட்ட்த்தில் அதிகம் சிந்திக்க  வேண்டிது

 மனிதர்கள் அமைதியின் மீதான ஆர்வத்தையும் தேடலையும் விட்டு விடக் கூடாது.

 சண்டையிட்டுக் கொண்டே இருப்பது அல்லது போராடிக் கொண்டே இருப்பது என்பது வாழ்க்கை அல்ல.  அதில் நியாயம் இருந்தாலும். கூட

 தலைவர்களும் மக்களை வழிநட்த்துகிறவர்களும் அதிகம் சிந்திக்க வேண்டிய விசயம் இது.

 போராட்டமே வாழ்க்கை என்று சிலர் புரட்சியாளர்கள் முழங்கியிருக்கிறார்கள் . அவர்கள் மனித சமூகத்திற்கு துன்பத்தை மட்டுமே வழங்கினார்கள்.  

நிம்மதிக்கும் ஓய்வுக்கும் தேவையான காலம் தேவை

இல்லை எனில் பூமியில் மனித வாழ்வு நசிந்து விடும்.

 அரபுகளின் புத்திசாலித்தனத்தை எண்ணிப்பாருங்கள். வாழ்கை முழுவதும் சண்டை கொள்ளை தாக்குதல்களில் ஈடுபடுவதையே தொழிலாக கொண்டிருந்தார்கள்.

 அவர்களுக்கு நிம்மதியின் தேவை புரிந்திருந்த்து. அதனால் புனித மாதங்களை இறுகப் பற்றிக் கொண்டார்கள்.

 தன்னுடைய தந்தையை உறவினரை கொன்றவரை நேரில் கண்டால் கூட எதுவும் செய்ய மாட்டார்கள்.

 நிம்மதியான காலச் சூழலிலும், சமூக அமைப்பிலும் வாழ்கிறவர்கள் அந்த நிம்மதியின் அருளையும் அமைதியின் கவுரவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

 அதில் ஒரு சிறு கீறல் விழுவதற்கு கூட சம்மதிக்க கூடாது.

 இந்த உலகின் பேருரளாக வந்த முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களைப் பாருங்கள்.

 العباس بن عبد المطلب رضي الله عنه قال: قلت: "يا رسول الله علمني شيئًا أسأله الله"، قال: «سل الله العافية» فمكثت أيامًا ثم جئت فقلت: "يا رسول الله، علمني شيئاً أسأله الله"، فقال لي: «يا عباس، يا عم رسول الله، سل الله العافية في الدنيا والآخرة

قال المباركفوري في شرح الترمذي: "في أمره صلى الله عليه وسلم للعباس بالدعاء بالعافية بعد تكرير العباس سؤاله بأن يعلمه شيئًا يسأل الله به، دليل جلي بأن الدعاء بالعافية لا يساويه شيء من الأدعية ولا يقوم مقامه شيء من الكلام الذي يدعى به ذو الجلال والإكرام، والعافية هي دفاع الله عن العبد، فالداعي بها قد سأل ربه دفاعه عن كل ما ينويه، وقد كان رسول الله صلى الله عليه وسلم ينزل عمه العباس منزلة أبيه، ويرى له من الحق ما يرى الولد لوالده، ففي تخصيصه بهذا الدعاء وقصره على مجرد الدعاء بالعافية تحريك لهمم الراغبين على ملازمته، وأن يجعلوه من أعظم ما يتوسلون به إلى ربهم سبحانه وتعالى، ويستدفعون به في كل ما يهمهم

وقال صلى الله عليه وسلم: «سلوا الله العفو والعافية، فإن أحدًا لم يعط بعد اليقين خيرًا من العافية»

போர்க்களத்தில் கூட அமைதிக்காக ஆசைப்பட பெருமானார் அறிவுறுத்தினார்கள்,

ஒரு  யுத்த்திற்காக களத்திற்கு முஸ்லிம்கள் வந்து சேர்ந்த போது எதிரிகள் ஊரைக் காலி செய்து விட்டு மலைகளில் ஒளிந்து கொண்டனர். சண்டை நடை பெறவில்லையே ஷஹீதாக முடியவில்ல்லையே என சஹாபாக்கள் ஏங்கினர். அதை புரிந்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்

عَنْ أَبِي إِبْرَاهِيمَ عَبْدِاللهِ بْنِ أَبِي أَوفَى رَضِيَ اللهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا الْعَدُوَّ، انْتَظَرَ حَتَّى إِذَا مَالَتِ الشَّمْسُ قَامَ فِيهِمْ، فَقَالَ: «يَا أيُّهَا النَّاسُ، لَا تَتَمَنَّوا لِقَاءَ الْعَدُوِّ، وَاسْأَلُوا اللهَ الْعَافِيَةَ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا، وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيوفِ»

இந்த உலகில் யுத்த மைதானத்தில் வைத்து இப்படி உபதேசித்த தலைவர் முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே யாகும்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் தத்துவம்

 உலக வாழ்வின் எதார்தத்தை புரிந்து கொண்டிருந்த காரணத்தால் தான் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா வின் போது மக்கா காபிர்களோடு சண்டையிடுவதற்கான காரணமும் வசதிகளும் இருந்த போதும் கூட அமைதியான உடன்படிக்கைக்கு ஒத்துக் கொண்டார்கள்.

 ஒரு பகைச் சூழலில் உம்ரா செய்வதை விட ஒரு நட்பான சூழலில் உம்ரா செய்வது நிம்மதியானதும் நன்மையானதும் அல்லவா ?

 அல்லாஹ் பெருமானாரின் இந்தச் சிந்தனைக்கும் பெரும் வெற்றியை வழங்கினான், ஹுதைபிய்யா உடன்படிக்கை தான் முஸ்லிம்களின் பெரும் வெற்றிகளுக்கு காரணமாக அமைந்த்து.

 

 எனவே முஸ்லிம் உம்மத் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எதெற்கெடுத்தாலும் முஷ்டியை உயர்த்திக் கொண்டு அல்லது வரிந்து கட்டிக் கொண்டு சண்டையில் இறங்குவது அல்ல . அமைதிக்காக அதிகம் பாடுபடுவதே . அமைதியை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிகம் முயற்சி செய்ய வேண்டும் என்பதே இஸ்லாமின் வழிகாட்டுதலாகும்

 போர் ஓய்வுக்காலங்கள் என்பது அமைதி - நிம்மதியின் மரியாதையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அல்லாஹ் செய்த ஏற்பாடாகும்.

 அல்லாஹ் தவ்பீக செய்வானாக!



 

No comments:

Post a Comment