வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 04, 2021

நெருக்கடிகளை தீர்த்து வைத்த மிஃராஜ்

கடந்த ஆண்டு மிஃராஜ் நினைவுக் கூட்டங்கள் நடக்கவில்லை.

இந்த ஆண்டு அல்லாஹ் தவ்பீக் செய்திருக்கிறான்.

வரலாறு காணாத ஒரு பெரும் நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட முடியவில்லை. சுமார் ஒரு வருடம் கடந்த பிறகும் கூட. 

ஒவ்வொரு வீட்டிலும்  இந்த நெருக்கடியின் தொடர் விளைவு ஏதோ ஒரு வகையில் இருக்கிறது.  

ஆனால் நெருக்கடிகள் நிலைப்பதில்லை. நிச்சயம் ஒரு நாள் அது முடிவுக்கு வரும்.

திருக்குர் ஆன் கூறுகிறது.

وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ

(உங்களையும் உங்களைப் பற்றிய விஷயங்களையும் நாம் சோதனைக்குள்ளாக்கியே வருவோம்)

 நெருக்கடிகள் ஒரு சோதனை தான் . ஆனால் அவை  நமது தகுதியை உலகறியச் செய்வதற்கானவை

. حَتَّى نَعْلَمَ

அல்லாஹ்வுக்கு எதுவும் புதிதல்ல. இந்த உலகிற்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே.

 நெருக்கடிகளின் போது என்ன தகுதி வெளிப்படும்

الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ

1.   நம்மால் எவ்வளவு தூரம் சகித்துக் கொள்ள முடிகிறது.

2.   நெருக்கடிகளுக்கு எதிராக நாம் எந்த அளவு போராட தயாராகிறோம்.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கையில் நெருக்கடிகள் மிகுந்த காலம் அவர்களுடைய 50 வது வயது.

 அவர்களுடைய பாதுகாப்பு அரணாக இருந்த அபூதாலிப் இறந்தார். அவர்தான் பெருமானாருக்கு கார்டியனாக இருந்தார். அன்றைய மக்கத்து அரபுகளின் வழக்கத்தில் ஒரு கார்டியனுக்கு கீழ் இருப்பவர்கள்  தான் பாதுகாப்பாக இருக்க முடியும். அபூதாலிபுக்குப் பின் மக்காவின் தலைவராக பொறுப்பேற்ற அபூலஹ்பு பெருமானாரைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டான். பெருமானாரின் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளானது.

அவசியம் ஒரு ஆதரவுக்கரம் தேவைப் பட்டது. அதற்காகவே அவர்கள் தாயிப் நோக்கி பயணமானார்கள்.

 தாயிப் மக்காவிலிருந்து 85 கீமி தொலைவிலிருக்கிற தோட்டங்கள் நிறைந்த  நகரம், மக்கத்து தலைவர்கள் பலருக்கும் அங்கு தோட்டங்கள் இருந்தன.

 தாயிபில் அப்து யாலைல் , மஸூத் ஹபீப் என்ற மூன்று சகோதரர்கள் தலைவர்களாக இருந்தனர்.

 

அவர்கள் மூவரும் பெருமானாரை மிக ஏளனமாக நடத்தினர்.

 فردوا عليه ردًّا منكَرًا، وسَخِروا منه واستهزءوا به؛ قال له أحدهم: هو يَمْرُط (أي: أُمَزِّق) ثيابَ الكعبة إنْ كان الله أرسلَك. وقال الآخَر: أمَا وجَدَ الله أحدًا يرسله غيرك؟ وقال الثَّالث: والله لا أكلِّمك أبدًا، لئن كنتَ رسولاً من الله كما تقول، لأنتَ أعظمُ خطرًا من أن أردَّ عليك الكلام، ولئن كنتَ تكذب على الله (وحاشا رسول الله من الكذب وهو الصادق الأمين) ما ينبغي لي أن أكلِّمك!

 நீ நபி என்றால் கஃபாவின் திரையை நான் கிழிப்பேன் என்றான் ஒருவன். மற்றவன் அல்லாஹ்வுக்கு வேறு யாரும் கிடைக்கவில்லையா என்றான். மூன்றாமவன் நீ நபியாக இருந்தால் உன்னிடம் பேச் எனக்கு தகுதியில்லை. நீ பொய்யனாக இருந்தால் உன்னிடம் பேசுவது எனது தகுதிக்கு இழுக்கு என்றான்.

 பெருமானாரின் பரிசுத்த தன்மையை அறிந்திருந்தும் கூட அவர்கள் இவ்வாறு கூறியதன் காரணம் என்ன ? வரலாறு கூறுகிறது.

 தாயிபில் தான் லாத் கடவுள் இருந்த்து. அதை தரிசிக்க ஆண்டு தோறும் கோடைக் காலத்தில் அரபுகள் தாயிபிற்கு வருவார்கள். அது பெரிய வருமானத்தின் வழியாக இருந்தது. அது தடைபடுமே என நினைத்தார்கள். பெருமானாரை மறுத்தார்கள்.

 ولكن أهل الطائف لَم يكونوا أشرفَ مِن سادة قريش؛ فقد ردُّوه ردًّا عنيفًا، وكيف تقبل ثقيف دعوته، وعندهم صنَمُهم المعبود المقدَّس (اللات)، الذي تزوره العرَبُ أيام الصيف الحارِّ في الطائف فتستفيد ثقيف منهم؟ أمَّا لو دخَلوا في دين الإسلام، فلن يَزورهم أحد، وسيُحرَمون من الأرباح الطائلة، فكيف تقبل ثقيف دعوتَه؟ كيف يَقْبلون دعوته وهو يدعوهم إلى مبدأ المُساواة بين العبيد والسَّادة، وإزالة تجارة الرِّبا؟

 தன்னை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. தனது வருகையைப் பற்றி மக்காவாசிகளுக்கு தெரிவித்து விட வேண்டாம் என்று பெருமானார் (ஸ்ல) கேட்டுக் கொண்டார்கள். தாயிப் வாசிகள் அதை மக்காவிற்கு ஆள் அனுப்பி தெரிவித்தார்கள்.

 அத்தோடு நிற்கவில்லை. சில நாட்கள் அங்கு தங்கியிருந்த முஹம்மது (ஸல்) அவர்கள் அங்கிருந்து விரைவாக வெளியேற வேண்டும் என்பதற்காக சாலையின் இருபுறமும் ஆட்களை நிறுத்தி பெருமானாரின் மீதும் அவரகளது வளர்ப்பு மகன் ஜைது பின் ஹாரிதா ரலி அவர்கள் மீது கற்களை எறிந்தார்கள்.

 இரத்தம் வழிய மயங்கிய பெருமானாரை ஜைது ரலி கைத்தாங்களாக அழைத்து வந்து தாயிபின் எல்லையிலிருந்த ஒரு தோட்டத்து நிழலில் அமர வைத்தார். அந்த தோட்டம் மக்கத்து தலைவர்களான உத்பா ஷைபாவிற்கு சொந்தமானது. பெருமானாரின் நிலை கண்டு அந்த எதிரிகளே இரக்கப் பட்டார்கள் . தங்களது அடிமை அதாஸிடம் திராட்சைக் குலையை கொடுத்தனுப்பி உபசரிக்கச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களின் உடலில் வழிந்தோடிய இரத்தம் அவர்களது காலில் அணிந்திருந்த தோலிலான சாக்ஸில் தேங்கியிருந்த்து. அதில் இரத்தம் உறைந்து போனதால் அதிலிருந்து பெருமானாரின் காலை சிரமப் பட்டு வெளியே எடுத்தார்கள். திராட்சையை சாப்பிட்டு சற்றே ஆசுவாசமடைந்ததும் அல்லாஹ்விடம் கையேந்தினார்கள்,

 اللَّهمَّ إليك أشكو ضَعْف قوَّتي، وقلَّة حيلتي، وهواني على النَّاس، يا أرحم الرَّاحمين، أنتَ ربُّ المستضعفين وأنت ربِّي، إلى من تَكِلُني؟ إلى بعيدٍ يتجهَّمني؟ أم إلى عدوٍّ ملَّكْتَه أمري؟ إن لم يكن بك عليَّ غضبٌ فلا أبالي، ولكنَّ عافيتك هي أوسع لي، أعوذ بنور وجهك الَّذي أشرقَتْ له الظُّلمات، وصلحَ عليه أمر الدُّنيا والآخرة مِن أن تُنْزِل بي غضبك، أو يحلَّ عليَّ سخطك، لك العُتْبَى حتَّى ترضى، ولا حول ولا قوَّة إلا بك".   

 இதுதான் சிர்திருத்தவாதியின் பொருமை.

 இந்த துஆ வை கவனியுங்கள் தன்னை அடித்தவர்களை அழிக்குமாறு பிரார்த்திக்க வில்லை. தனது பிரச்சார உத்திகள் தான் போதவில்லையோ என்று நினைத்தார்கள், அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடக் கூடாது என்று அஞ்சினார்கள்.

 அப்போது ஜிப்ரயீல் அலை வந்தார்கள்.

 وعن عائشة -رضي الله عنها- أنَّها قالت للنبيِّ صلى الله عليه وسلم: هل أتى عليك يومٌ كان أشدَّ من يوم أحُدٍ؟ قال: "لقَد لقيتُ من قومِك، وكان أشدَّ ما لقيتُ منهم يوم العقبة، إذْ عرَضْتُ نفسي على ابن عبد ياليلَ بن عبد كلالٍ، فلم يُجِبْني إلى ما أردتُ، فانطلقتُ وأنا مهمومٌ على وجهي، فلم أستفق إلاَّ وأنا بقرن الثَّعالب، فرفعتُ رأسي، وإذا أنا بسحابةٍ قد أظلَّتْني، فنظرتُ فإذا فيها جبريل عليه السَّلام فناداني، فقال: إنَّ الله تعالى قد سمع قول قومك لك، وما ردُّوا عليك، وقد بعث إليك ملَك الجبال لتأمره بما شئت فيهم. فناداني ملكُ الجبال، فسلَّم عليَّ، ثمَّ قال: يا محمَّد، إنَّ الله قد سمع قول قومك لك، وأنا ملَكُ الجبال، وقد بعثني ربِّي إليك لتأمرني بأمرك، فما شئت؛ إن شئتَ أطبقتُ عليهم الأخشبَيْن".

فقال النبِيُّ صلى الله عليه وسلم: "بل أرجو أن يُخْرِج الله من أصلابهم مَن يعبد الله وحده لا يُشرك به شيئًا" (متفقٌ عليه).

பொறுமை என்பதன் பொருள் இது தான்.

பொறுமை என்பது வெறும் சகிப்புத் தன்மை மட்டுமல்ல. அதை தாண்டிய தெளிவும் சிரமங்களிலிருந்து வெளியேறுகிற விவேகமுமாகும்.

 இதையும் தாண்டி தாயிப் வாசிகளின் மன்ங்களை வெற்றி கொள்வது தான் உண்மையான வெற்றி என்ற தெளிவு பெருமானாரிடமிருந்தது.

 எந்த அழிவுச் சிந்தனையும் வெற்றியாளர்களின் எண்ணத்தில் இருப்பதில்லை. இவர்களை அழித்துவிட்டால் அது அரபுலகில் தனது வெற்றிக்கு எந்த வகையிலும் உதவாது என்ற விவேகமும் பெருமானாரிடம் இருந்தது.

 சகிப்புத்தன்மை விவேகமான நடவடிக்கைகளை கொண்ட்தே பொருமையாகும்.

 தொடர் முயற்சிகள் – அல்முஜாஹித்

 ஒரு வழியாக தாயிபிலிருந்து வெளியேறிவிட்ட போதும் மக்காவிற்குள் நுழைவது அந்த மக்கத்து மண்ணின் மைந்தனுக்கு எளிதாக இருக்க வில்லை.

மக்காவில் அவர்களுக்கு செல்வாக்குள்ள ஒரு கார்டியன் தேவைப்பட்டது.

 தாயிபிலிருந்து திரும்பிய பெருமானார் (ஸல்) அவர்கள் முத்இம் பின் அதீ என்பவரின் பாதுகாப்பில் மக்காவிற்குள் நுழைந்தார்கள்.

 

( இந்த முத்இம் பின் அதீயுக்கு மூன்று சிறப்புக்கள் உண்டு.

 كان أحد الستة الذين نقضوا الصحيفة المقاطعة لبني هاشم التي كُتبت وعُلقت في الكعبة،

أجار النبي لدى رجوعه من الطائف عندما رفضت قريش دخوله إلى مكة

عندما كشفت قريش أمر بيعة العقبة الثانية وقامت بمطاردة المبايعين بعد آدائهم للحج، وتمكنت فعلاً من القبض على سعد بن عبادة ربطوه ودخلوا به إلى مكة، لكن المطعم بن عدي ومعه الحارث بن حرب خلصاه من أيدي القرشيين

ஆனால் அவர் முஸ்லிமாக வில்லை. அவரது மகன் ஜுபைர் ரலி இஸ்லாமை தழுவினார். )

 இந்த சூழலில் பெருமானாரை அல்லாஹ் மிஃராஜுக்கு அழைத்துச் சென்றான்.

மிஃராஜ் சுருக்கமாக

 خرج الإمام البُخاري -رحمه الله- في صحيحه حادثة الإسراء المعراج، حيث كان النبي -عليه الصلاة والسلام- مُستلقياً على ظهره في بيت أُمِّ هانئ، فانفرج سقف البيت، ونزل منه مَلَكان على هيئة البشر، فأخذاه إلى الحطيم عند زمزم، ثُمّ شقّا صدره، وأخرجا قلبه الشريف وغسلاه بماء زمزم، وملآه بالإيمان والحكمة؛

ثُمّ جاء جبريل -عليه السلام- للنبيّ بدابّة البُراق، وهي دابّةٌ أصغرُ من الفَرَس وأكبر من الحِمار، تضعُ حافرها عند مُنتهى طرفها؛ أي تضع خطواتها فتصل إلى مدّ بصرها، فلمّا ركبها النبي -عليه الصلاة والسلام- لم يثْبُت، حتى قال له جبريل -عليه السلام- أن يثبت، فلم يركبها أحدٌ خيرٌ منه، فثبت النبيّ، وتصبّب عرقاً، ثُمّ انطلقت بهما إلى بيت المقدس.[٩][١٠] ثُمّ عُرج بالنبيّ وجبريل إلى السماء الدُنيا، فرأى -عليه الصلاة والسلام- آدمَ -عليه السلام-، ورحّب به، وردّ عليه السّلام، وأراه أرواح الشُهداء عن يمينه، وأرواح الأشقياء عن يساره، ثُمّ صعد إلى السماء الثانيّة، فرأى فيها يحيى وعيسى -عليهما السلام-، فسلّم عليهما، ثُمّ صعد إلى السماء الثالثة ورأى فيها يوسف -عليه السلام-، ثُمّ رأى إدريس -عليه السلام- في السماء الرابعة، وهارون -عليه السلام- في السماء الخامسة، وموسى -عليه السلام- في السماء السادسة، وفي السماء السابعة رأى إبراهيم -عليه السلام-، وجميعُهم يُسلّمون عليه، ويُقرّون بنبوّته، ثُمّ صعد إلى سدْرة المُنتهى، والبيت المعمور، ثُم صعد فوق السماء السابعة، وكلّم الله -تعالى-، ففرض عليه خمسين صلاة، وبقيَ النبيّ يُراجِعه حتى جعلها خمساً، وعُرض عليه اللّبن والخمر، فاختار اللّبن، فقيل له أنّه أصاب الفطرة، ورأى أنهار الجنّة، اثنان ظاهران، واثنان باطنان، ورأى خازن النّار -مالِك-، ورأى أكَلَة الرّبا، وأكَلَة أموالِ اليتامى ظُلماً، وغير ذلك الكثير من المشاهد.

மிஃராஜ் பயணம் பெருமானாரின் அந்தஸ்து எத்தகையது என்பதை உலகிற்கு புரியவைத்தது.

 ·         அனைத்து நபிமார்களுக்குமான தலைமை

·         அல்லாஹ்வை கண்ட கண்கள்

·         அல்லாஹ்விடம் நேரடி உரையாடல்

·         தொழுகை என்ற பரிசு

 இவை அத்தனையையும் கடந்து கவனிக்கத் தகுந்த ஒரு செய்தி உண்டு.

நபி (ஸ்ல) அவர்கள் மிஃராஜிற்குப் பிறகு மேலும் உத்வேகம் பெற்றார்கள்.

அதில் பிரதானமானது.

யாருக்கும் நம்புவதற்கு சிரமமான மிஃராஜின் செய்தியை மக்காவின் மக்களுக்கு உடனடியாக எடுத்துக் கூறும் மனோ தைரியத்தை பெற்றார்கள்.

 அப்போது  காபிர்கள் நகைத்தார்கள். சில முஸ்லிம்கள் கூட சந்தேகம் கொணடு மனம் மாறினர்,  அதுவரை ஆதரவாக நின்ற முத் இம் கூட இனி உங்களுக்கு நல்ல நாள் இல்லை என்றார்.  

 அங்குதான் அந்த அதிசயம் நடந்த்து. பெருமானாரை உண்மையாக நம்பிக்கை கொண்ட மக்கள் மேலும் அதிகப் பற்றோடு அவர்களை நம்பத் தொடங்கினர்.

 இது தான் உலகின் பேராச்சரியம்.  

 இந்த உலகில் தன்னைப் பற்றி இது போல ஒரு செய்தியை கூறிய பிறகும் முஸ்லிம் உம்மத் பெருமானாரை அப்படியே நம்பியது, இப்போதும் நம்புகிறது.

 இப்போதும் ஒவ்வொரு முஃமினின் ஈமானிய வாழ்விலும் பெரும் தாக்க்கத்தை மிஃராஜ் உண்டு பண்ணுகிறது.

 அதன் காரணமாகத் தான் நமது முன்னோர்கள் ஆண்டு தோறும் மிஃராஜை நினைவு கூறும் ஏற்பாட்டை செய்தார்கள்.

 மிஃராஜ் பெருமானாருக்கான கவுரம் மட்டுமல்ல. பெருமானார் (ஸல்) அவர்கள் மீது உலகம் கொண்டுள்ள நம்பிக்கையின் கனம் எத்தகையது என்பதற்கான சாட்சியுமாகும்.

 மிஃராஜிற்குப் பிறகு பெருமானார்  ஸல்) அவர்கள் அதிக உத்வேகத்தோடு உழைத்தார்கள். குடும்பம் குடும்பமாக பிரச்சாரம் செய்தார்கள்.

 ஆனால் மக்கா வாசிகளில் பலரும் மசியவில்லை. உங்க குடும்பமே உங்களை ஒத்துக் கொள்ளவில்லை என்று பெருமானாரை மறுதலித்தார்கள்.

 பெருமானார் (ஸல்) அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தார்கள். அவர்களது முயற்சிகளுக்கு அல்லாஹ் பெருமானார் நினைக்காத வேறு திசையிலிருந்து அல்லாஹ் வெற்றியை தந்தான்.

 மிஃராஜ் நடைபெற்ற அந்த வருடத்தில் தான் மதீனாவின் மக்கள் ஹஜ்ஜின் போது மினா மைதானத் தில் ஜம்ரத்துல் அகபாவிற்கு அருகே சந்தித்து இஸ்லாமை தழுவினார்கள். முதலில் 6 அடுத்த ஆண்டு 12 அதற்கடுத்த ஆண்டு 70 என எண்ணிக்கை கூடியது.

 அதுவே ஹிஜ்ரத்திற்கும் இஸ்லாம் இந்த உலகளாவிய மார்க்கமாவதற்கும் வழி வகுத்தது.

 மிஃராஜ் பெருமானாரின் வாழ்க்கையின் பெரும் நெருக்கடிகளுக்கு முடிவாக அமைந்தது.

அதன் பின் பெருமானார் (ஸ்ல அவர்கள் எதையும் நெருக்கடியாக கருதவில்லை.

தவ்ரு குகையில் எதிரிகள் சூழ்ந்து விட்ட செய்தியை அபூபக்கர் ரலி கூறிய போது பெருமானாரின் வார்த்தையை கவனியுங்கள்

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ, أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ حَدَّثَهُ, قَالَ:

((نَظَرْتُ إِلَى أَقْدَامِ الْمُشْرِكِينَ عَلَى رُؤوسِنَا, وَنَحْنُ فِي الْغَارِ, فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ, لَوْ أَنَّ أَحَدَهُمْ نَظَرَ إِلَى قَدَمَيْهِ, أَبْصَرَنَا تَحْتَ قَدَمَيْهِ, فَقَالَ: يَا أَبَا بَكْرٍ, مَا ظَنُّكَ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا؟)[أخرجه مسلم 

ஒரு மிஃராஜிற்குப் பிறகு இப்படி அன்றி வேறு எப்படி ஒருவர் பேசுவார் ?

மிஃராஜிலிருந்து கிடைக்கிற பாடம்

நெருக்கடிகளின் போது சரியான முறையில் பொருமை காத்து அதாவது சகிப்புத்தன்மையோடு விவேகத்தோடும் நடந்து கொண்டு நமது நல்ல முயற்சிகளை சாத்தியப் பட்ட வழியில் நாம் நமது முயற்சிகளை தொடர வேண்டும். அதில் நாம் நினைக்கிற திசையில் வெற்றி கிடைக்காவிட்டாலும் அல்லாஹ் நாம் எதிர்பாராத திசையில் நமக்கு வெற்றியை வழங்குவான்.

அது வே உண்மையான பெரு வெற்றியாக இருக்கும்.

ஈமானில் உறுதியாக இருக்கவும்

நெருக்கடிகளில் பெருமை காக்கவும்

வணக்க வழிபாடுகளை கடைபிடிக்கவும்

நல்ல முயற்சிகளை தொடர்ந்து செய்யவும்

ஈருலகிலும் வெற்றியடைவும் அல்லாஹ் தவ்பீக் செய்வானாக !

  

1 comment:

  1. நிறைய இடங்களில் பொறுமை என்ற வார்த்தைக்கு பதிலாக பெருமை என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது

    ReplyDelete