இந்த உலகின் மிக நீண்டதொரு போராட்டத்தின் மூலங்களை இன்றைய இந்த ஜும் ஆவில அடையாளம் காண இருக்கிறோம்.
மனித வரலாறு சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான ஒரு போராட்டகளமாகும்.ஆதம் அலை தொடங்கி இன்று வரை.
இனி கியாமத் வரையும் தொடரும்.
இந்தப் போராட்ட்த்தில்
அசத்தியவாதிகளின் மிகப் பெரிய ஆதாரமாக இருப்பது அறிவாகும்.
ஆச்சரியமாக இருக்கிறதா
? அது தான் உண்மை.
மனிதகுலத்தின்
சிறப்பிற்கு அடிப்படையாக அமைகிற அறிவு தான் அசத்தியப் பேர்வழிகளுக்கு பெருந்துணை செய்கிறது.
இபுலீஸ் தனது அறிவை
வைத்துத் தானே வாதிட்டான்.
قَالَ مَا مَنَعَكَ
أَلَّا تَسْجُدَ إِذْ أَمَرْتُكَ ۖ قَالَ أَنَا خَيْرٌ مِّنْهُ خَلَقْتَنِي مِن
نَّارٍ وَخَلَقْتَهُ مِن طِينٍ (12)
அறிவு தேவை என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்
அறிவை மட்டுமே நம்பும் போக்கு அல்லது அறிவை முதன்மைப் படுத்தும் போக்கு எப்போதுமே அசத்தியவாதிகளின்
அடையாளமாக இருந்திருக்கிறது.
{وَقَالَ فِرْعَوْنُ يَا هَامَانُ ابْنِ لِي صَرْحًا لَّعَلِّي
أَبْلُغُ الْأَسْبَابَ (36) أَسْبَابَ السَّمَاوَاتِ فَأَطَّلِعَ إِلَىٰ
إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّي لَأَظُنُّهُ كَاذِبًا ۚ وَكَذَٰلِكَ زُيِّنَ
لِفِرْعَوْنَ سُوءُ عَمَلِهِ وَصُدَّ عَنِ السَّبِيلِ ۚ وَمَا كَيْدُ فِرْعَوْنَ
إِلَّا فِي تَبَابٍ (37)} [غافر]
அறிவியலை பிரதானமாக எடுத்துக் கொண்ட்தால் தான் கிருத்துவ சமுதாயம் தனது கொள்கைகளை பறிகொடுத்தது.
இன்றும் கிருத்துவார்கள் லட்சக்கணக்கில் நிறைய கூட்டங்களுக்கு செல்கிறார்கள் . தேவாலயங்களுக்கு வாரி வழங்குகிறார்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் பைபிளை கையிலேந்திக் கொண்டு சர்ச்சுகளுக்குச் செல்லத் தவறுவதில்லை.
ஆனால் பைபிள் சொல்லக் கூடிய கருத்துக்களில் அவர்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறது ?
கிருத்துவர்களின் ஒரு பெரிய கூட்டத்தில் பைபிள் கூறுகிற ஆதம் அலை அவர்கள் படைக்கப் பட்ட விதத்தை, மனித சமுதாயம் இப்படித்தான் உலகில் தோன்றுகிறது என்பதை உங்களில் எத்தனை பேர் நம்புகிறீர்கல் என்று கேட்ட போது பன்னூற்றுக் கணக்கானோர் கூடியிருந்த அந்த சபையில் 17 பேர் தான் நம்புவதாக கூறினர்.
இதே போலத்தான் இன்றுள்ள யூதமும், இந்து சமுதயாமும் அவர்களது வேதங்களின் வழிகாட்டல்களை விட அறிவியல் என்ன சொல்கிறதோ அதையே நம்புகிறார்கள்.
சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுதான் இவர்களுக்கெல்லாம் மனித வரலாறு.
ஆனால் முஸ்லிம் உம்மத்தில் இந்த விபரீதம் நிகழவில்லை.
முஸ்லிம் சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கல்விக் கூடங்களில் டார்வினின் தியரி போதிக்கப் பட்டாலும் கூட அதை அவர்கள் ஒரு கருத்தாக காதில் ஏற்றிக் கொள்கிறார்களே தவிர இதயத்திற்குள் அனுப்புவதில்லை.
ஏனெனில் அந்த இதயத்தில் ஈமான் என்கிற நம்பிக்கை குடி கொண்டிருக்கிறது.
எங்காவது ஒரு முஸ்லிம்கள் ஒன்று கூடியிருக்கிற
இடத்தில் இது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியது அல்லது அல்லாஹ் கூறியது என்று சொன்னால்
அதை நூறு சதவீத முஸ்லிம்களும் ஏற்றுக் கொள்வார்கள். எவரும் அதை மறுத்துப் பேசமாட்டார்.
அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படாத மாமிசத்தை உண்ணக் கூடாது என்று ஒரு முஸ்லிமிடம் கூறப்பட்டால் அவர் உலகின் எந்த மூலையிலிருந்தாலும் அதற்கு அடி பணிந்து விடுவார். ஒரு பெயர் சொல்றதுனாலே என்னப்பா பெரிய மாற்றம் வந்து விடப் போகிறது என்று கேட்க மாட்டார்.
இது போலவே ஒவ்வொரு காரியத்திலும்
அக்கா மகளை கல்யாணம் செய்யக் கூடாது. பதிலின்றி கிடைக்கிற இலாபம் வட்டி கூடாது. ஹராமானவை கொண்டு மருத்துவம் கூடாது. என்று சொல்லப்படுகிறவை அனைத்திலும்.
முஸ்லிம் முதலில் நம்புகிறார். பிறகு அதன் வழியில் அறிவை செலுத்துகிறார். அவரது ஈமான் பாதுகாப்பாக இருக்கிறது. சின்னக் குழந்தையிடம் கூட.
அல்ஹ்மதுலில்லாஹ். மாஷா அல்லாஹ்.
இந்த மனோநிலையில் நம்மை வைத்திருப்பதற்காக அல்லாஹ்வுக்கு கோடானு கோடி நன்றி செலுத்துகிறோம். இப்படியே வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இஹ்தினஸ் ஸீராத்தில் முஸ்தகீம் என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.
முஸ்லிம்களின் நம்பிக்கையை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எப்படிப் பக்குவப்படுத்தினார்கள் என்பதை கவனியுங்கள்.
ஒரு முறை நபித்தோழர்களிடம் ஒரு நிகழ்வை விவரித்துக் கொண்டிருந்தார்ர்கள்.
ஒரு யூத விவசாயி நிலத்தில் உழுது முடித்த பிறகு
காளையோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். மிகவும் களைப்பாக இருந்தது. உடனே காளை மீது ஏறிக் கொண்டான். அது திமிரியது. அதை
அவன் அடித்தான். அப்போது காளை அவனை நோக்கித் திரும்பி நான் இதற்காக படைக்கப்படவில்லை
என்றது. குதிரை கழுதை கோவேறு கழுதை போன்று நான் சவாரிக்கானவனல்ல . எனது வேலை உழுவது.
அதை செய்து விட்டேன். என் மீது சவாரி செய்யலாமா என்று . அந்த விவசாயி வியந்து நின்றான்.
இந்த செய்தியை பெருமானர் (ஸல்) அவர்கள் சொல்லிக் கொண்டிருந்த போது முனாபிக்குளில் சிலர் ட் தலையை குனிந்து. ஒருவரையொருவர் ஜாடையாக பார்த்துக் கொண்டு சிரித்தனர். இதை கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் . இதை அல்லாஹ் எனக்கு கூறினான் .நான் இதை நம்புகிறேன். அபூபக்கரும் உமரும் அவர்ர்களோடு இருப்பவர்களும் இதை நம்புகிறார்கள் என்றார்கள்.
عن أبي هريرةَ رضي الله عنه قال: صلَّى بنا رسولُ
الله صلى الله عليه وسلم صلاةً، ثم أقبَلَ علينا بوجهه فقال: ((بينا رجلٌ يسوقُ
بقرةً إذ ركبَها، فضربها، قالت: إنَّا لم نُخلَقْ لهذا؛ إنما خُلِقْنا للحراثة))،
فقال الناس: سبحانَ الله، بقرةٌ تَكلَّمُ؟! فقال: ((إني أُومِنُ بهذا أنا وأبو
بكرٍ وعمرُ
- وما هما ثَمَّ -
அபூபக்கர் உமர் போன்ற முஃமின்களின் கூட்ட்த்தில் அல்லாஹ் நம்மைச் சேர்ப்பானாக!
மாடு பேசுமா
என்ற கேள்வி ? அறிவார்த்தமானதாக தெரியலாம்.
ஆனால் உள்ளபடி
யோசித்தால் இதற்கான பதில் என்ன ?
அல்லாஹ் நாடினால்
அதுவும் பேசும் என்பதே சத்தியம்.
இந்த உலகில்
அனைத்துக்குமான சக்தி அல்லாஹ் ஒருவனிடமே இருக்கிறது. படைப்புக்களிடம் எதுவும் இல்லை.
அல்லாஹ் நாடினால்
மரம் மட்டை கூடப் பேசும்.
கியாமத் நாளின்
நெருக்கத்தில் முஸ்லிம்களை வழிநடத்துபவர்களாக மஹ்தி அலை அவர்களும் ஈஸா அலை அவர்களும்
வரும் போது தனக்குப் பின் ஒரு யூதன் ஒளிந்திருக்கிறான் என மரம் கூறும் என நபிகள் நாயகம்
(ஸ்ல்) அவர்கள் கூறினார்கள்.
நமக்கு கண் இருக்கிறது என்று நாம் எல்லாவற்றையும் பார்த்துவிட முடிவதில்லை. காது இருக்கிறது என்று எல்லாவற்றையும் கேட்டு விட முடிவதில்லை. கை கால்கள் இருக்கின்றன் என்பதற்காக எல்லாவற்றையும் செய்து விட முடிவதில்லை. சில வற்றை அல்லாஹ் நமது கவனத்திற்கு தருவதில்லை.
தப்பத் யதா அபீலஹ்பின் அத்தியாயம் இறங்கிய பிறகு அபூலஹ்பின் மனைவி “ அர்வா ”( அவளை உம்மு ஜமீல் என்பார்கள் அரபிகள்) பெருமானை அடிப்பதற்காக ஒரு பெரிய கல்லை எடுத்துக் கொண்டு வந்தாள். அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களும் பெருமானாரும் ஓரிடத்தில் அமர்ந்திருந்தனர். உங்களை அடிக்கத்தான அவள் வருகிறாள் என்றார் அபூபக்கர் (ரலி. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்னை அவள் பார்க்க மாட்டாள். அருகே வந்த அர்வா அபூபக்கர் ரலி அவர்களிடம் எங்கே உன் தோழர் என்று கேட்டார். உனக்குத் தேவை எனில் நீ தேடிக் கொள் என்று அபூபக்கர் ரலி பதிலளித்தார்கள். அவள் பெருமானை பார்க்கவில்லை. திரும்பிச் சென்றாள்.
عن أبي موسى الأشعري «أن النبي قال: ألا أعلمك كلمة هي كنز من كنوز الجنة؟ لا حول ولا قوة إلا بالله.
இதை நம்பிய பிறகு
வேறெதையும் நம்புவது எளிதாகி விடுகிறது.
அல்லாஹ் அழைத்துச்
சென்றான் என்ற ஒற்றை வார்த்தைக்குப் பின் தயங்கி நிற்க என்ன இருக்கிறது ?
أمين أمين يا ربالعالمين
ReplyDeleteجزاكم الله خيرا كثيرا في الدارين
بارك الله فيكم وجزاكم الله خيرا في الدارين
ReplyDelete