வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 18, 2021

கோப மேலாண்மை

)இது தேர்தல் நேரம். பல கட்சிக்காரர்களும் நம் வாசலுக்கு வருவார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. நமக்கு பிடிக்காதவர்கள் வந்தால் அதை வெளிப்படையாக காட்டக்கூடாது. அது கண்ணியம் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. அது வீரமும் அல்ல. விவேகம் அற்ற செயல். 

நமது விருப்பத்தையும் கோபத்தையும் வாக்களிப்பதில் மற்றவர்களை வாக்களிக்க வைப்பதில் காட்ட வேண்டும். அதுவே கோபத்தை வெளிப்படுத்தும் சரியான வழி.)

இன்றைய உலகு இயந்திர மயமாகிவிட்டது. மனிதர்கள் கூட இயந்திரங்களை போலவே நடந்து கொள்கிறார்கள்.  நன்மைகள் உறவுகள் எல்லாவற்றையும் ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்ர்த்து விட்டு மக்கள் ஓடிக்க் கொண்டிருக்கிறார்கள்.

முன்னொரு காலத்தில் சிவகாசியில் பட்டாசு வெடித்து 5 பேர் மாண்டார்கள் என்று செய்தி வருமானால் அது குறைந்தது ஒரு வாரத்திற்கு பேசப்படும். உதவிகள் ஆறுதல்கள் காரணங்கள் என பரபரப்பாக பேசப்படும். தலைப்புச் செய்திகளில் இடம் பெறும் . இப்போது அப்படி ஒரு செய்தி வருமானால் அது பத்ரிகைகளில் ஒரு மூலையில் பிரசுரிக்கப் படுகிறது. சில மணி நேரங்களுக்கு மேல் அந்தச் செய்தி நிலைப்பதில்லை.

எந்தப் பெரிய விசயங்களும் இப்படித்தான் நம்முடைய கவனத்தை அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை.

அன்பு இரக்கம் கருணை உதவி கவனித்தல் போன்ற அனைத்திற்கும் சில  குறிப்பிட்ட நிமிடங்களை ஒதுக்கி விட்டு விரைந்து கொண்டிருக்கிறோம்.

இந்தச் சூழலில் கோப உணர்ச்சியை மேலாண்மை செய்வது குறித்து சுய முன்னேற்றம் பற்றி சொல்லித்தருகிற அறிஞர்கள் அதிகம் பேசுகிறார்கள். (எமோசனல் இண்டலிஜென்ஸீ)  

இன்றைய மனிதனுக்கு மிக தேவையான ஒன்றாக அது இருக்கிறது என்கிறார்கள்.

சாலையில் வாகனத்தில் செல்கிற போது பக்கத்தில் வருகிற சைக்கிள் காரன் நியாயமே இல்லாமல் “சாவுகிராக்கி”  என்று உன்னைப் பார்த்துச் சொன்னால்,  வெயிலில் சுமைகளோடு அலைகிற அவனது நிலையை எண்ணிப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து நகர்ந்து விடுங்கள். அலுவலகத்தில் உனக்காக நிறையப் பணிகள் காத்திருக்கின்றன. அதை ஞாபகத்தில் வைத்துக் கொள். இறங்கி நின்று சண்டை போடாதே!  இறங்கி சண்டை போட்டால் உனது நேரமும் வீணாகி விடும். மனோ நிலை கெட்டு விடும்  . உனது தரமும் தாழ்ந்து விடும்! எங்கே கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பதை நீ புரிந்து கொள்ள முடியாவிட்டால் உன்னால் ஒரு நிர்வாகியாக அல்ல சாதாரண மனிதனாக கூட நிம்மதியாக வாழ முடியாது என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இன்று கட்டணம் கொடுத்து நாம் கேட்கிற அறிவுரைகளை திருக்குர்ஆன் இன்னும் அருமையாக விலையின்றி உலகிற்கு உபதேசம் செய்கிறது.

மனித குலம் பொதுவாகவும் முஸ்லிம்கள் குறிப்பாகவும் கவனிக்க வேண்டிய ஒரு வாழ்வியல் வழிகாட்டுதல் இது.

குர்ஆன் கூறுகிறது

الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ (134)

சொர்க்கத்திற்குரியவர்களின் மூன்று இயல்புகள் ஒன்று الْكَاظِمِينَ الْغَيْظَ

الْكَاظِمِينَ الْغَيْظَ என்பதன் பொருள் கோபத்தை நிர்வகிகிப்பவர்கள் என்பதே!

கோபமே கொள்ளக் கூடாது என்பது இஸ்லாமின் கருத்தல்ல.

கோபம் வேண்டும் . அதுவும் அல்லாஹ் மனிதனுக்கு கொடுத்த அருள் என்பதே அறிஞர்களின் கருத்து

இரண்டு மனித உணர்வுகள் அல்லாஹ்வின் அருள்கள்

ஆசை : இது இல்லாவிட்டால் மனிதன் தனக்கு தேவையான நன்மைகளை தேடிக் கொள்ள மாட்டான்.

கோபம். : இது இல்லாவிட்டால் மனிதன் தனக்கு தீங்கிழைப்பவற்றிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மாட்டான.

எனவே கோபமே குற்றமல்ல. அது இயற்கையானது. அது வேண்டும்.

عن أبي هريرة ـ رضي الله عنه أن النبى صلى الله عليه وسلم قالاللهم إنما محمد بشر يغضب كما يغضب البشر، وإنى قد اتخذت عندك عهدا لن تخلفنيه فأيما مؤمن آذيته أو سببته أو جلدته فاجعلها له كفارة وقربة تقربه بها إليك يوم القيامة.

அல்லாஹ்விற்காக கோப்படுவது அவசியம், அது ஈமானின் அடையாளம்.

பெருமானார் (ஸல்) அவர்கள் மார்க்கத்திற்கு முரணான விசயங்களை கேள்விப்படும் போது முகம் சிவக்குமளவு கோபப்படுவார்கள்.

عن عائشة رضي الله عنها قالت((دخل عليَّ النَّبي صلى الله عليه وسلم، وفي البيت قرام فيه صور، فتلوَّن وجهه، ثم تناول الستر فهتكه، وقالت قال النَّبي صلى الله عليه وسلم: من أشد النَّاس عذابًا يوم القيامة الذين يصورون هذه الصور

அதிக நேரம் தொழ வைக்கிறார்.

عن أبي مسعود رضي الله عنه، قال((أتى رجل النَّبي صلى الله عليه وسلم فقال: إني لأتأخر عن صلاة الغداة من أجل فلان مما يطيل بنا، قال: فما رأيت رسول الله صلى الله عليه وسلم قطُّ أشد غضبًا في موعظة منه يومئذ، قال: فقال يا أيُّها الناس، إنَّ منكم منفِّرين، فأيُّكم ما صلى بالنَّاس فليتجوز فإنَّ فيهم المريض، والكبير، وذا الحاجة

 وعن أبي سعيد الخدري قال((كان النَّبيُّ صلى الله عليه وسلم أشدَّ حياءً من العذراءِ في خِدْرها ، فإذا رأى شيئًا يكرهه، عرفناه في وجهه، ولما بلَّغَه ابنُ مسعودٍ قَولَ القائل: هذه قسمةٌ ما أريد بها وجه الله، شقَّ عليه صلى الله عليه وسلم، وتَغيَّر وجهه، وغَضِبَ، ولم يَزِدْ على أنْ قال: قد أوذِيَ موسى بأكثرَ من هذا فصبر

 1.   அல்லாஹ் ரஸூலுக்காக தீனுக்காக நாமும் கோபப்படனும்.

நம்முடைய குடும்பத்தாருக்கு இது புரிய வரும் என்றால் நம் வீட்டில் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்காது.

குழந்தைகளுக்கு பத்து வயதாகும் போது அவர்களை தொழுகச் சொல்லி அடிக்கலாம் என்றார்கள் பெருமானார் (ஸல்)

  1. 2  ஒழுக்க மீறலுக்காக கோபப்படனும்.

சபிய்யா அம்மையாரை குள்ளமானவர் என்று சைகை பேசிய ஆயிஷா ரலி அவர்களிடம் பெருமானாரின் கண்டிப்பு

ن عائشة، قالت((: فقلت: يا رسول الله، إن صفية امرأة، وقالت بيدها هكذا، كأنها تعني قصيرة، فقال: لقد مزجت بكلمة لو مزجت بها ماء البحر لمزج

  1. 3   நியாயத்தை நிலை நாட்டுவதற்காக கோபப்படனும்

எதற்காக கோப்ப பட்டாலும் அதை முறையாக வெளிப்படுத்தும் போது அதில் நியாயம் இருக்க வேண்டு,

இதை கைப்பிடித்தால் வெற்றி என்றார்கள் பெருமானார் (ஸல்)

 وأما المنجيات: فالعدل في الغضب والرضا، والقصد في الفقر والغنى، وخشية الله –تعالى- في السر والعلانية

 கோபத்தை முறைகேடால வெளிப்படுத்துவது தான் இன்று அதிகமாக இருக்கிறது.  அதனால் என்ன மக்கள் செய்கிறார்கள்  

1.       உறவுகளை துண்டிக்கிறார்கள்.

2.       பார்வையில் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்

3.       புறம் பேசுகிறார்கள்

4.       இரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள்

5.       வஞ்சம் செய்கிறார்கள்

6.       அடிதடி நிகழ்கிறது.

இவை எல்லாம் தனித்தனியாக பேசினால் அதுவே தனி ஒரு பயானாகி விடும். அந்த அளவு தீமையானவை. முறையற்ற  கோபம் என்ற ஒற்றை குணம் ஏற்படுத்தும் தீய விளைவுகள் இவை.

அதனால் தான் ஒரு மனிதர் பெருமானாரிடம் உபதேசம் கேட்டு வந்த போது கோபப் படாதே என்பதை மட்டும் உபதேசமாக கூறினார்கள். அது உன்னை சொர்க்கத்திற்கு கொண்டு போகும் என்றும் சொன்னார்கள்

عن أبي هريرة رضي الله عنه أن رجلاً قال للنبي صلى الله عليه وسلم أوصني قال لا تغضب . فردّد ذلك مراراً ، قال لا تغضب رواه البخاري

 يقول أبو,الدرداء،: قلتُ: "يا رسول الله، دُلَّنِي على عمل يدخلني الجنةَ"، قال: «لا تَغْضَبْ، ولكَ الجنة»؛ (رواه الطبراني).

கோபத்திற்கு பதில் ஹூருல்ஈன்கள்

 من كظم غيظاً وهو قادر على أن ينفذه ، دعاه الله عز وجل على رؤوس الخلائق يوم القيامة حتى يخيره من الحور العين ماشاء رواه أبو داود

 கோபத்தை வெளிப்படுத்துவதில் பொறுமை காத்தால் இந்த உலகிலும் நாளை மறுமையிலும் வெற்றி பெறலாம்.

கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளயும் இஸ்லாம் கற்றுத்தந்துள்ளது.

1.   அவூது சொல்வது.

عن سليمان بن صرد قال : كنت جالساً مع النبي صلى الله عليه وسلم ، ورجلان يستبّان ، فأحدهما احمرّ وجهه واتفخت أوداجه ( عروق من العنق ) فقال النبي صلى الله عليه وسلم : إني لأعلم كلمة لو قالها ذهب عنه ما يجد ، لو قال أعوذ بالله من الشيطان ذهب عنه ما يجد رواه البخاري

சைத்தான் என்றாலே அது கோபத்தின் குறியீடுதான் . அவன் கோப்ப்பட்டு அல்லாஹ்வுக்கு மாறு செய்தான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொண்டு சொர்க்கத்திலிருந்து வீசி எறிந்தான்.

2.   மொளனமாக இருப்பது.

قال رسول الله صلى الله عليه وسلم : ( إذا غضب أحدكم فليسكت ) رواه الإمام أحمد

 கோபத்தை உடனடியாக வெளிப்படுத்தாமல் சற்று நேரம் மெளானம் காத்தாலே கோபம் போய்விடும். அது சார்ந்த உண்மைகள் வெளிப்பட்த் தொடங்கும்.

 3.   இடத்தை மாற்றுவது

قال رسول الله صلى الله عليه وسلم : ( إذا غضب أحدكم وهو قائم فليجلس ، فإن ذهب عنه الغضب وإلا فليضطجع

4.   தண்ணீர் அருந்துவது ஒளுசெய்வது

5.   நிறைவாக, அல்லாஹ்வின் கோபத்தை எண்னிப் பார்ப்பது. நம் மீது அல்லாஹ் கோபப்பட்டால் ? அதற்கு எவ்வளவு காரணங்கள் இருக்கின்றன ?

முன்னோர்களின் வழிகாட்டுதல்கள்

பாயசீதுல் பிஸ்தாமி (ரஹ்) அவர்கள் மீது ஒருவன் மண்னை அள்ளி வீசீனான். அதை உதறிவிட்டு நடந்தார். கோபம் வரவில்லையா என சீடர்கள் கேட்டார்கள். அவர் கூறினார். என் தலை நெருப்பள்ளி கொட்டுவதற்குரியது,

 ஒரு நபித்தோழர பணியாளரை அடித்துக் கொண்டிருந்தார். பெருமானார் (ஸல்) கூறினார்கள் “நீ தேர்ந்தெடு அல்லாஹ்வும் தேர்ந்தெடுப்பான்

 சல்மான் பார்ஸி ரலி அவர்களை ஒருவன் சபித்தான்.

அவர் கூறினார்.   அல்லாஹ் கிருபை செய்தால் உனக்கு எதுவும் ஆகாது.

 இமாம் ஷஃவீ அவர்களை ஒருவன் குறைகூறீனான் . அவர் கூறினார்.

நீ சொல்வது உண்மையானால் அல்லாஹ் என்னை மன்னிக்கட்டும்

பொய்யானால் உன்னை மன்னிக்கட்டும். இமாம் ஷஃவி

 மல்யுத்தம் செய்து கொண்டிருந்த அலி ரலி அவர்கள் தன் மீது எதிரி எச்சிலை உமிழ்நதவுடன் எழுந்து விட்டார்கள். இதுவரை நான் அல்லாஹ்விற்காக சண்டையிட்டேன். எனக்காக சண்டையிட விரும்பவில்லை. எதிரி முஸ்லிம் ஆனார்.

 கோபத்தை நிர்வாகம் செய்யத் தெரியும் போது நாம் இங்கும் அங்கும் வெற்றி பெறலாம்.

 இது தேர்தல் நேரம். பல கட்சிக்காரர்களும் நம் வாசலுக்கு வருவார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.

நமக்கு பிடிக்காதவர்கள் வந்தால் அதை வெளிப்படையாக காட்டக்கூடாது. அது கண்ணியம் அல்ல. புத்திசாலித்தனமும் அல்ல. அது வீரமும் அல்ல. விவேகம் அற்ற செயல்.

நமது விருப்பத்தையும் கோபத்தையும் வாக்களிப்பதில் மற்றவர்களை வாக்களிக்க வைப்பதில் காட்ட வேண்டும்.

அதுவே கோபத்தை வெளிப்படுத்தும் சரியான வழி.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

 

 

 

1 comment:

  1. ஹஜ்ரத். உடற்பயிற்சி பற்றி பயான் போடவும்

    ReplyDelete