உலகம் சந்தித்த
மிகப் பெரும் சோதனைகளில் ஒன்று கோரோனோ
மக்கள் அடைந்த
- அடைந்து கொண்டிருக்கிற துயருக்கு அளவே இல்லை.
ஏராளமானோர் உயிரிழந்தனர்.
வாழ்வாதாரத்தை இழந்தனர். பலநூறு கிலோ மீட்டர்கள் நடந்து சென்று வீடு சேர்ந்தனர். பல
நடுத்தர வர்க்கத்தினர் ஏழைகளாகிவிட்டனர்.
இந்த நேரத்தில்
நம்முடைய நாட்டில் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி செய்த அரசுகள் மக்களுக்கு உதவி
செய்தனவா ? உண்மையாக பாதுகாத்தனவா ? என்பது
பெரும் கேள்விக்குரியாகும்.
அதிர்காரத்தைப்
பயன்படுத்தி மக்களை – மக்களுடைய உரிமைகளை முடக்கிப் போட்டார்களே தவிர வேறெதையும் செய்யவில்லை.
தடுப்பு மருந்து
விசயத்தில் கூட நியாயமாக நடந்து கொள்ள வில்லை என்பதே ஆய்வாளர்களின் குற்றச் சாட்டு.
95 சதவீதம் பாதுகாப்பான
பைஜர் நிறுவனத்தின் மருந்தை விட்டுவிட்டு 84 சதவீதம் மட்டுமே பாதுகாப்பான பாரத் பயோடெக்கின்
மருந்தை பரிந்துரைத்ததில் அரசியல் இலாபக் கணக்கு இருக்கிறது என்கிறார்கள்.
மாநில அரசு கொரோனோ
நோயாளிகளை கணக்கிடுவதிலும் கவனிப்பதிலும் வெறும் அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகிறது.
நோயாளிகளை கவனித்ததாக சொல்வதில் செலவுக்கணக்கு மட்டுமே அதிகரித்திருக்கிறது. சொல்லும்படி
எந்த முன்னேற்ற நடவடிக்கையும் இல்லை.
அரசு அறிவித்த
கணக்கை விட அதிகப்படியாக 36 சதவீதம் பேருக்கு கொரோனோ வந்து போய்விட்டது என்கிறது பத்ரிக்கை
தகவல்.
விலைவாசி வானளாவ
உயர்ந்து கொண்டிருக்கிறது. 400 ரூபாயுக்கு விற்ற கேஸ் சிலிண்டர் இப்போது 900 ஆயிரம்
ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
பெரும் பணக்காரர்களுக்கு
சலுகைகளை காட்டுகிற அரசு ஏழை எளிய மக்களை திட்டமிட்டு கசக்கிப் பிழிந்து வருகிறது.
இவர்களுக்கு இரக்கமே
இல்லையா என்று கேட்குமளவு அரசுகளின் அதிகார ஆட்டம் தலைவிரித்தாடுகிறது.
மேற்கு வங்க முதலமைச்சர்
மம்தா பானர்ஜி கூறுகிறார். நான் ஏழு முறை எம்
பி ஆக இருந்திருக்கிறேன் .இரண்டு முறை முதலமைச்சராக இருந்திருக்கிறேன். இப்போது இருக்கிற
பிரதமர் மோடியை போல கொடூரமான ஒரு பிரதமரை பார்த்ததில்லை என்கிறார்.
இத்தகைய சூழலில்
தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடக்க இருக்கிறது.
ஒரு ஜனநாயக நாட்டில்
மக்கள் தங்களது அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்துவதற்கு மிகச் சரியான நேரமும்
வழிமுறையும் தேர்தல் தான்.
அந்த ஜனநாயக கடைமையை
நிறைவேற்ற நாம் தயாராக வேண்டும்.
ஓட்டுப்போடுவது மார்க்க கடமை
முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஓட்டுப் போடுவது ஜனநாயக கடமை மட்டுமல்ல சமயக் கடமையுமாகும். ஒட்டுப்
போடுவதும் நன்மையை பெற்றுத்தருகிற ஒரு இபாதத் ஆகும்.
இந்தக்
கருத்து சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு மக்களிடையே பிரச்சாரம் செய்யப்பட்டு
வருகிறது சுதந்திரப் பெற்ற பிறகுண்டான காலகட்ட்த்தில் முஸ்லிம் அறிஞர்களில்
பிரபலமான பலரும் குறிப்பாக தில்லி தாருல் உலூம் தேவ்பந்தின் முன்னால்
ஷைகுத்தப்ஸீரும் பின்னாட்களில் பாகிஸ்தானின் தலைமை நீதிபதியாக இருந்தவருமான மொலானா
முப்தி முஹம்மது ஷபீ சாஹிப் அவர்கள் இது குறித்து மிகவும் வலுயுறுத்திப்
பேசி வதுள்ளார்கள்.
இஸ்லாமியப்பார்வையில்
ஓட்டுப் போடுவது நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதின் அந்தஸ்ததை வகிக்கிறது என
பிரபல இஸ்லாமிய சட்ட அறிஞர் முப்தீ முஹம்மது ஷபீ அவருடைய திருக்குர் ஆன் விhவுரையில்
குறிப்பிடுகிறார். (மஆரிபுல் குர்ஆன் பாகம்3 பக்கம் 71 வசன எண் 5.8)
திருக்குர்ஆன் போதிக்கிற شهادة (சாட்சியமளித்தல்) شفاعة (சான்றளித்தல்) وكالة (ஒப்புவித்தல்) அகிய
மூன்று தார்மீகக் கடமைகளின் படியுமும் ஓட்டளிப்பது முஸ்லிம்களின்
கடமை என அவர் குறிப்பிடுகிறார்.
இஸ்லாமின்
பார்வையில் ஒருவருக்கு ஓட்டுப்போடுவது “இவர்
இந்த நாட்டின் நிர்வாகப் பொறுப்பிற்கு தகுதியானவர்” என்று
சாட்சி (ஷஹாதத்) சொல்வதும். பரிந்துரைப்பதும் (ஷபாஅத்) ஆகும். அதுபோல் பொறுப்பை ஒப்படைப்பது (வகாலத்) துமாகும்.
இந்த
பொறுப்பின் அடிப்படையில் நாம் சில அம்சங்களை கவனிக்க கடமைப் பட்டிருக்கிறோம்.
1. சாட்சியை நிறைவேற்றுவது எப்படி கடமையோ அது போல
ஓட்டளிப்பதும் கடமையாகும்.
தேர்தல்
நாளை விடுமுறை நாள் என்று கருதி சும்மா இருந்து விடக்கூடாது.
படித்தவர்களும்
பண வசதி படைத்தவர்களும் வரிசையில் நின்று வாக்களிப்பதை சிரம்மாக கருதுகின்றனர்.
முன்னாள்
தேர்தல் கமிஷனர் ஒருத்தர் சொன்னார்:
“அடுத்த ஐந்து வருடத்திற்கு அரசியல் நடத்துவது
யார் என்பதை தீர்மாணிக்கிற சக்தியை நமது விரல் நுனிக்கு இந்திய ஜனநாயகம்
வழங்கியுள்ளது. “சினிமா தியேட்டரில் கூட்டம் இருக்கிறதுஎன்பதற்காக நாம் எப்போதாவது திரும்பி
வந்து இருக்கிறோமா? தடுப்பு ஊசி போடும் இடத்தில் கூட்டம் இருக்கிறது என்பதற்காக நாம்
வந்துவிடுகிறோமா? ஐந்து வருடங்களைத் தீர்மானிக்கும் வேலைக்காக
ஐந்து மணி நேரம்கூடக் காத்துக்கிடக்கலாம்..”
முஸ்லிம்களைப்
பொறுத்தவரை நாட்டிற்கு சரியான ஆட்சியாளரை அடையாளம் காட்ட சாட்சி சொல்கிறோம் என்ற
நிய்யத்தோடு வரிசையில் நிற்கிற ஒவ்வொரு நிமிடமும் சவாபிற்குரியதாகும்.
إنما الأعمال بالنيات
சும்மா
முகம் கழுவினால் அது சுத்தம் மட்டுமே!. ஒளு
என்ற நிய்யத்தோடு முகம் கழிவினால் சுத்தத்துடன் நன்மையும் சேர்ந்து கிடைக்கிறது
அல்லவா? அது போல!
· சிலர் “என்
ஒரு ஓட்டினால் என்ன ஆகிவிடப் போகிறது என்று நினைக்கின்றனர்.
· கள்ள ஓட்டுப் போடுபவர்களுக்கு இந்த எண்ணம் தான்
வாய்ப்பளிக்கிறது.
· நூறு பேர் இப்படி நினைத்தால் ஒரு நல்ல
வேட்பாளர் தோற்றுப் போய்விடுவார்.
· ஒரு ஓட்டின் முக்கியத்துவம் என்ன என்பதை அரசியல்
வாதி புரிந்து வைத்திருக்கிறார். அதனால் தான அவர் சந்து
பொந்துக்களில் புகுந்து கூட ஓட்டுகேட்கிறார்.
2. சாட்சியை
நிறைவேற்ற எப்படி கூலி வாங்கக் கூடாதோ அது போல ஓட்டுக்கு காசு பொருள் ஆகியவற்றை
பெறக் கூடாது.
இந்திய
ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட்டுள்ள மிகப் பெரிய பாதிப்பு 200 க்கும் 500 க்கும் மக்கள் தங்களது ஓட்டுக்களை விற்றுவருவது.
ஒரு
வாக்கை விற்பது, ஐந்து வருடங்களை விற்பதற்குச் சமமான வேதனை. அந்த
ஐந்து வருட ஆட்சியில் தவறு ஏதும் நிகழ்ந்தால், வாக்கைச் சரியாகப் பயன்படுத்தாத நாமும்தான்
அதற்குப் பொறுப்பு.
(இந்த
சட்டமன்ற தேர்தலில் பணம் பெரிய அளவில்
விளையாடுகிறது. ஒரு நண்பர் ஆளுங்கட்சியின்
சிட்டிங் எம் எல் ஏ
ஐம்பது கோடி வரை தனது
தொகுதியில் செல்விடுகிறார். அது ஒன்றும் அவருக்கு
பெரிதில்லை என்கிறார். மத்தியில்
ஆளும் கட்சியை சேர்ந்தவர்களில் ஒவ்வொரு
பூத் ஏஜெண்டுக்கும் ஒரு இனோவா கிரிஸ்டல்
கார் வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்)
3. பொய்சாட்சி
சொல்லக்கூடாது என்றால் கள்ள ஓட்டு போடக்கூடாது என்று பொருளாகும்.
பொய்சாட்சி
எப்படி நீதியை தடுமாற வைத்து விடுமோ அது போல கள்ள ஓட்டு அரசியலை தடுமாறச் செய்து
விடும்.
4. ஜாதி
இன மத அடிப்படையில் தப்பான வேட்பாளரை தேர்வு செய்து விடக்கூடாது.
தங்களுடையவர்
என்பதற்காக சாட்சியில் பிறழ்தல் கூடாது என்பது இஸ்லாமின் கடுமையான் அறிவுறையாகும்.
وَلَوْ عَلَى أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ
சில தொகுதிகளில் முஸ்லிம் பெயர் தாங்கிய அமைப்புக்கள் சில தங்களுக்கு மதத்தின்
அடிப்பைடையில் ஓட்டுப் போடுமாறு கேட்கிறார்கள். அவர்கள் அரசியல் தஜ்ஜால்கள் என்பதை
நாம் புரிந்து கொண்டு ஒதுங்கி நிற்க வேண்டும், இல்லை எனில் அது பேராபத்தாக வரும். ஈமானையும்
இழந்து அரசியலில் உள்ள மரியாதையையும் இழக்க நேரிடும்
தங்களுடையவர் என்பதற்காக தப்பானவர்களை ஆதரிப்பது இனவெறி
என்று மார்க்கம் கூறுகிறது. அது அழிவிற்கு வழி வகுக்கும் என்றும் மார்க்கம்
எச்சரிக்கிறது.
عَبْدِ اللَّهِ
بْنِ مَسْعُودٍ ِ قَالَ مَنْ نَصَرَ قَوْمَهُ عَلَى غَيْرِ الْحَقِّ فَهُوَ
كَالْبَعِيرِ الَّذِي رُدِّيَ فَهُوَ يُنْزَعُ بِذَنَبِهِ - ابوداوود -4453
அசத்தியமான ஒரு காரியத்திற்காக தன்னுடைய சமுதாயத்திற்கு
உதவுகிறவர்ன் கிணற்றில் விழுப் போகிற் ஒட்டகை அதன் வாலைப் பிடித்து
இழுப்பவனை போலிருகிறான்.
عَنْ عَبَّادِ بْنِ كَثِيرٍ الشَّامِيِّ عَنْ
امْرَأَةٍ مِنْهُمْ يُقَالُ لَهَا فُسَيْلَةُ قَالَتْ سَمِعْتُ أَبِي يَقُولُ
سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا رَسُولَ
اللَّهِ أَمِنَ الْعَصَبِيَّةِ أَنْ يُحِبَّ الرَّجُلُ قَوْمَهُ قَالَ لَا
وَلَكِنْ مِنْ الْعَصَبِيَّةِ أَنْ يُعِينَ الرَّجُلُ قَوْمَهُ عَلَى
الظُّلْمِ- إبن ماجة 3939
எனவே கொலை கொள்ளை மோசடி ஆட்கடத்தல் போன்ற குற்ற வழக்கில் ஈடுபட்ட கிரிமினல்களை முஸ்லிம்
புறக்கணிக்க வேண்டும். அவர் முஸ்லிம் வேட்பாளராக இருந்தாலும் சரி.
கத்தர்
பல்கலைகழகத்தின் ஷரீஆ துறை தலைவரும் பிரபல இஸ்லாமிய அறிஞருமான யூசுப் அல்கர்ழாவியும் தேர்தல் முறையை ஒருவகை பரிந்துறையே என்றும் அது நீதிமன்றத்தின் முன் சாட்சியம் அளிப்பதை ஒத்தது என்றும் கூறுகிறார்.
திருக்குர்ஆன்
கூறுகிறது
يَاأَيُّهَا الَّذِينَ
آمَنُوا كُونُوا قَوَّامِينَ بِالْقِسْطِ شُهَدَاءَ لِلَّهِ وَلَوْ عَلَى
أَنفُسِكُمْ أَوْ الْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ إِنْ يَكُنْ غَنِيًّا أَوْ
فَقِيرًا فَاللَّهُ أَوْلَى بِهِمَا فَلَا تَتَّبِعُوا الْهَوَى أَنْ تَعْدِلُوا
وَإِنْ تَلْوُوا أَوْ تُعْرِضُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ
خَبِيرًا(135)
مَنْ يَشْفَعْ
شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً
سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ
مُقِيتًا
நாம்
ஒரு நல்ல வேட்பாளரை தேர்வு செய்தால் அவர் செய்கிற நன்மைகள் ஒவ்வொன்றிலும் நமக்கும்
ஒரு பங்கு கிடைக்கிறது, தீயவரை
தேர்வு செய்தால்..?
தேர்தலில்
ஜெயித்த பிற்கு அவர்கள் மாறிப்போனால் அதற்கு நாம் பொறுப்பல்ல.
மந்தை
தனமாக இல்லாமல் சிந்தித்து வாக்களித்தால், யாருக்கு
வாக்களித்தாலும் அது நல்ல வாக்கு தான்.
அரபியில் تحري தஹர்ரீ என்ற ஒரு சொல் உண்டு. தேடித்தெரிதல்
என்பது அதன் பொருள்.
ஒரு புது ஊருக்கு செல்பவர் யோசிக்காமல் கொள்ளாமல் ஏதாவது ஒரு திசையைப் பார்த்து தொழுவிட்டார். பின்னர் கிப்லா வேறு என்று தெரிந்தால் அவர் திருப்பி தொழ வேண்டும்.
அதே நபர் விசாரித்து அல்லது தேடிப்பார்த்து ஒரு திசையைப் நோக்கி
தொழுதார். பிறகு அவருக்கு கிப்லா வேறு என்று தெரிந்தால்
அவர் திருப்பி தொழ வேண்டியதில்லை என்று இஸ்லாமிய சட்டம்
சொல்கிறது.
إذا شك ولا يتحري – أن
صلوته علي الفساد وإذا شك وتحري ان الصلوة علي الجواز ولو تبين الخطأء-
حاشية القدوري
சிந்தித்து, ஒன்றை நல்லதென உணர்ந்து செயல்படுவதற்கும்
சிந்திக்காமல் செயல்படுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
முஸ்லிம் வாக்களர் சிந்தித்து வாக்களித்தால் அவரது வாக்கு நாட்டுக்கு
நன்மையாய் அமையும். அவருக்கும் நன்மையை தேடித்தரும்.
மீண்டும்
திருக்குர்ஆன் மேலும் கூறுகிறது
وَلَا تَكْتُمُوا
الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللَّهُ بِمَا
تَعْمَلُونَ عَلِيمٌ
இந்த
வசனத்தின் அடிப்படையில் வாக்களிக்க செல்லாமல் இருக்க கூடாது. அது சாட்சியை மறைக்கிற குற்றமாகிவிடும்,
ஒரு வழக்கில் சாட்சி பின்வாங்கி விட்டாலோ அல்லது பிறழ்ந்த விட்டாலோ நீதி நிலை தடுமாறிப் போய்விடுமல்லவா அது போலவே ஓட்டளிக்கும் உரிமை பெற்றவர் தனது கடமையை நிறைவேற்றாவிட்டால் தவறான மனிதர்களிடம் சமூகத்தை ஒப்புக் கொடுத்த பிழையை செய்தவிட்டவர் ஆவார்.
தீயவர்கள்
ஆட்சிப் பொறுப்புகு வந்து விடாமல் தடுக்கிற கடமையை ஓட்டுப்போடுகிற வாக்காளர்
நிறைவேற்றுகிறார்.
தங்களது தேர்தல் கடமையை (வாஜிபல் இன்திகாபி) நிறைவேற்றாத
முஸ்லிம்கள் தீயவர்கள் ஆட்சிக்கு வர அனுமதிக்கிறார்கள் என்றே அர்த்தம் என யூசுப் அல்கர்ழாவி கூறுகிறார்.
பெருமானார்(ஸல்)
அவர்கள் சொன்னார்கள்.
إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا
الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ
بِعِقَابٍ
مَا
مِنْ قَوْمٍ يُعْمَلُ فِيهِمْ بِالْمَعَاصِي ثُمَّ يَقْدِرُونَ عَلَى أَنْ
يُغَيِّرُوا ثُمَّ لَا يُغَيِّرُوا إِلَّا يُوشِكُ أَنْ يَعُمَّهُمْ اللَّهُ
مِنْهُ بِعِقَابٍ - أَبُو دَاوُد 3775
மக்கள் அநியாயக்காரனை பார்த்து விட்டு
அவன் கையையைப்பிடித்து தடுக்காவிட்டால் அதற்கான தண்டனையை அல்லாஹ் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் தருவான்.
பாவங்கள்
ஒரு சமூகத்தில் அதிகரித்து , அதை மாற்றும் ச்கதி அவர்களிடம் இருந்தும் அவர்கள்
அதை மாற்றாவிட்டால் அல்லாஹ்வின் த்ண்டனை அவர்களை மொத்தமாக வந்தடையும்
தற்காலத்தில்
தேர்தலைப் பற்றி ஒரு அவநம்பிக்கை பரவிவருகிறது. யாருக்கு
ஓட்டு போட்டு என்ன பயன் ? எல்லோரும் திருட்டுப் பயல்கள் ஒருத்தனும் நமக்கு நல்லத்
பன்றதில்லை என்ற விரக்தி பலரிடமும் இருக்கிறது.
திருட்டுக்
குற்றத்திற்காக ஒரு ஆசாமியை சிறையில் அடைத்தார்கள். அங்கேயும்
அவன் சும்மா இருக்கவில்லை. சிறைக்கூடத்தின் கம்பிகளையே திருடிவிட்டான். அவனை எந்த செல்லில் போடுவது ஜெயிலர்
யோசித்தக் கொண்டிருந்த போது ஒரு அனுபவ சாலி சார் இவனை சட்டசபையில் போடுங்கள்
என்று சொன்னாராம்.
இத்தகைய போக்கினால் அரசியலில் பங்கேற்பதையும் தேர்தலில் நிற்பதை ஓட்டுப் போடுவதையும் சிலர் தவிர்க்கிறார்கள்
இது
தவறான போக்கு.
இதன் விளைவு சமூகத்திறகு தீங்கு
விளைவிக்கக் கூடியது.
தேர்தலில்
நாம் செய்ய வேண்டிய கடமையை நாம் நிறைவேற்ற வேண்டும்.
மக்கள்
பிரதிநிதிகள் கடமையை செய்வதில்லை, அல்லது அக்கிரம்ம் செய்கிறார்கள் என்றால்
அதற்கு பதில் சொல்ல கடமைப் பட்டவர்கள் அவர்களே!.
அடுத்தவர்கள்
தமது க்டமையை செய்வதில்லை என்பது நாம் நமது கடமையை நிறைவேற்றுவதற்கு தடையாக
அமைந்து விடக்கூடாது. அது அறிவார்த்தமும் பொறுப்புணர்ச்சியும் அல்ல.
மட்டுமல்ல
நாம் ஒட்டுப் போடும் போடும் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொண்டால் நல்ல மாற்றங்கள்
நிகழும் வாய்ப்புண்டு அல்லவா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்
كما تكونوا يولى
عليكم . رواه البيهقي عن أبي إسحاق
நம்மை தேடி வந்து வாக்கு கேட்க யாரும் வராவிட்டாலும் கூட நாம் தேடிச் சென்று வாக்களிப்பது கடமை
عن زيد بن خالد الجهني - رضي الله عنه - أنه سمع رسول الله - صلى الله
عليه وسلم - يقول: " خير الشهداء من أدى شهادته قبل أن
يسألها – ترمذي
இந்த நபி மொழிக்கு இமாம நவவி அவர்கள் தருகிற விளக்கத்தை கவனித்துப் பாருங்கள்
قال النوويوفي
المراد بهذا الحديث تأويلان أصحهما وأشهرهما أنه محمول على من عنده شهادة لإنسان
بحق ولا يعلم ذلك الإنسان أنه شاهد فيأتي إليه فيخبره بأنه شاهد له ،
ஆனால் இப்போது தேர்தல் கமிஷன் வாக்களிக்க வருமாறு மக்களை அழைக்கிறது. விடுமுறை அளிக்கிறது. தேவையான ஏற்பாடுகளை செய்கிறது. வாக்குப்பதிவு மையங்களில் படி ஏற முடியாதவர்களுக்காக சாய்தள பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், சக்கர நாற்காலிகளும் அவற்றுக்கான பணியாளர்களும் கூட நியமிக்கப்பட்டிருப்பதாகவும் , பேச முடியாத காது கேளாதவர்களுக்கு சைகை முறையில் தேவையான முறையில் விளக்கங்கள் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரிகள் கூறி ஓட்டுப்போட வருமாறு மக்களை அழைக்கின்றனர்.
இப்படி ஒரு சூழலில் சாட்சியளிக்காமல் இருப்பது பாவம் .
لَا تَكْتُمُوا
الشَّهَادَةَ ۚ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ ۗ وَاللَّهُ بِمَا
تَعْمَلُونَ عَلِيمٌ (283
இப்போதைய தேர்தலில் வாக்களிப்பது ஒரு ஜனநாயக் கடமை என்ற வகையில் மட்டும் அல்லாது மக்களின் நலனில் அக்கறை செலுத்தாத அரசுகளிடமிருந்து நாட்டை
காக்க வேண்டியது அவசியம் என்ற வகையிலும் இந்த தேர்தலில் வாக்களிக்கக வேண்டியது அதிகப்பட்ச கடமையாகிறது.
தீய ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
وقال
صلى الله عليه وسلم: «ألا إنها ستكون بعدي أمراء يظلمون ويكذبون فمن صدقهم بكذبهم
ومالأهم على ظلمهم فليس مني ولا أنا منه، ومن لم يصدقهم بكذبهم ولم يمالئهم على
ظلمهم فهو مني وأنا منه» (حسن لغيره صحيح الترغيب والترهيب).
وعن
عبد الله بن خباب خرج علينا النبي صلى الله عليه وسلم فقال: «إنه سيكون بعدي
أمراء فلا تصدقوهم بكذبهم ولا تعينوهم على ظلمهم، فإن من صدقهم بكذبهم وأعانهم على
ظلمهم لم يرد على الحوض» (صحيح لغيره صحيح الترغيب والترهيب).
قال صلى الله عليه وسلم: «من أعان ظالمًا بباطل
ليدحض بباطله حقا فقد برئ من ذمة الله عز وجل وذمة رسوله» (
நமதுமுன்னோர்கள் அநீதிக்கு எதிராக துணிவு மிக்க செயல்பாடு கொண்டவர்களாக இருந்தார்கள்.
وروي أن حطيطًا الزيات جيء به إلى الحجاج، فلما دخل عليه قال: أنت
حطيط؟ قال: نعم، سل عما بدا لك، فإني عاهدت الله عند المقام على ثلاث خصال: إن
سُئلت لأصدقن، وإن ابتليت لأصبرن، وإن عوفيت لأشكرن. قال: فما
تقول فيًَّ؟ قال: أقول إنك من أعداء الله في الأرض، تنتهك المحارم وتقتل
بالظِّنَّة
அப்பாஸிய சக்ரவர்த்தியை எதிர்த்த சுப்யான் அஸ் ஸவ்ரீ ரஹ்
وعن سفيان الثوري قال:
أُدخلت على أبي جعفر المنصور بمنى، فقال لي: ارفع إلينا حاجتك. فقلت له: اتق الله،
فقد ملأت الأرض ظلمًا وجورًا. قال: فطأطأ رأسه ثم رفعه، فقال: ارفع إلينا حاجتك.
فقلتُ: إنما أُنزلت هذه المنزلة بسيوف المهاجرين والأنصار، وأبناؤهم يموتون جوعًا،
فاتق الله وأوصل إليهم حقوقهم. فطأطأ رأسه ثم رفعه فقال: ارفع إلينا حاجتك. فقلت:
حج عمر بن الخطاب رضي الله عنه، فقال لخازنه: كم أنفقت؟ قال: بضعة عشر درهمًا،
وأرى ها هنا أموالاً لا تطيق الجمال حملها.. وخرج.
எனவே இந்த தேர்தலில் ஜனநாயக கடமை என்று மட்டும் அல்லாத அநியாயக்கார அரசை வீட்டுக்கு அனுப்ப , நியாயத்தை நிலைநாட்ட நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டியது நம்முடைய கடமையாகும்.
நம்முடைய
பெண்கள், இளைஞர்களை வாக்களிக்க தூண்ட வேண்டும். யாருக்கு
வாக்களிப்பது , எந்த சின்னத்தில் வாக்களிப்பது எப்படி வாக்களிப்பது
போன்ற விவரங்களை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
வெயில், வேலை, என்று சொல்லிக்கெண்டும், இதனால் எனக்கென்ன நன்மை என்ற அலட்சியப் போக்கிலும் யாரும் ஒதுங்கியிருக்க கூடாது.
முடக்குவாத்ததால் பாதிக்கப்பட்டுள்ள தேனி யை சேர்ந்த ஏ.பி.பழனிவேல் (57) என்ற முதியவர் சொல்வதைக் கேளுங்கள்
முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்தாலும், ஆட்டோவில் சென்றாவது, தவறாமல் ஓட்டுரிமையை செலுத்தி விடுவேன். பணம் பெற்றுக்கொண்டு வாக்களிப்பது குற்றம். வாக்குரிமையை விற்க கூடாது. நான் பாதிக்கப்பட்டவன் என்பதால் பணத்தை அருகில் வைத்து விட்டு சென்று விடுகின்றனர். அந்த பணத்தை நான் எனது சொந்த செலவுக்கு பயன்படுத்த மாட்டேன். நான் நினைக்கும் வேட்பாளருக்கே ஓட்டு போடுவேன்.:
வாக்கு கேட்டுவரும்
உரிமை அனைவருக்கும் உண்டு. நமது பகுதியில் இன்னார் தான் வாக்கு கேட்க வேண்டும் என்று
கருதுவது ஜனநாயக நெறிகளுக்கு எதிரான வன்முறையாகும். நமக்கு எதிரானவர்கள் வாக்கு கேட்டு
வருகிற போது அவர்களைப் பார்த்த்து புன்னகை செய்யுங்கள். முடிந்தால் ஒரு பாட்டில் தண்ணீர்
அல்லது ஒரு கப் தேநீர் கொடுத்து உபசரியுங்கள். நமது பண்பாடு அவர்களுக்கு தெரியட்டும்
. நமக்கு எதிராக இருப்பது குறித்து அவர்கள் வெட்கப் படட்ட்டும்.
நாம் கடை வைத்தாலும் ரிஜ்கு தருகிறவன் அல்லாஹ்,
நாம் உழவு செய்தாலும் விளைச்சலைத் தருகிறவன் அல்லாஹ்.
நாம் ஓட்டுப்போட்டாலும் ஆட்சியதிகாரம் அல்லாஹ்விற்கே
உரியது.
அவனே நல்ல தீய ஆட்சியாளர்களைத்தருகிறான்.
எனவே
அவனிடமும் கையேந்துவோம்.
ربنا لا تسلط علينا من لا
يخافك فينا ولا يرحمنا
அல்லாஹ்
நம் விசய்த்தில் இறைவனை பயந்து கொள்ள்க் குடிய நம் மீது அன்பு காட்டக் கூடிய
ஆட்சியாளர்களை தந்தருளவானாகா!
(இன்றைய சூழ்நிலையில் யாருக்கு வாக்களிப்பது? இன்ஷா அல்லாஹ் அடுத்த வாரம்)
நல்ல பதிவு
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDelete