வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 08, 2021

ரமலான் கண்ணியம் காத்தலே பிரதானம்

  وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ

மற்ற காலங்களை விட அதிகமாக அமல்களை செய்வதற்காக நாம் ரமலானை எதிர்ப்பார்த்திருக்கிறோம்.

நமது மார்க்கம் அமல்களை விட கண்ணியப்படுத்தலுக்கு அதிக முக்கியத்தும்வம் வழங்கியிருக்கிறது.

கண்ணியப்படுத்துதல் முதன்மையானது . அடுத்தது அமல்.

கண்ணியப்படுத்துதல் இல்லாத அமல் உயிரற்ற வெறும் கூடு.

மதித்தலே மார்க்கம் என்று சொன்னாலும் அது மிகையாகாது.

யூதர்கள் அல்லாஹ்வை அல்லாஹ்வின் தூதர் முஸா அலை அவர்களை மதிக்க வில்லை. நிர்பந்தமாக அல்லாஹ்வின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டார்கள். அவர்கள் கோபத்திற்குரியவர்கள் ஆனார்கள்.

கிருத்துவர்கள் ஈஸாவை நேசித்தார்கள். மதிப்பதாக கூறினார்கள். ஆனால் அவர் சொல்படி நடக்கவில்லை . அதனால் அவர்கள் வழிதவறியவர்கள் ஆனார்கள்.

எனவேதான் இஸ்லாம் எனும் சத்திய மார்க்கத்தில் மதித்தலுக்கும் அமல்களுக்கும் ஒரு சேர முக்கியத்துவம் அளிக்கப் பட்டிருக்கிறது.

இரண்டில் ஒரு படி உயர்ந்து மதித்தல் இஸ்லாத்தில் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

காரணம் அதுதான் இதய பூர்வமானது.   

 وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ

எல்லோரும் ஹஜ்ஜுக்குப் போகிறார்கள். கஃபாவை காணும் போதெல்லாம் ஒரு பரவசம் ஏற்பட்டால் தான். அது உளப்பூர்வமான ஹஜ், அதுவே கண்ணியப் படுத்தலின் அடையாளம். அரபா மைதானத்தில் சும்மா தங்கியிருப்பதல்ல. அந்த நேரம் அந்த இடம் ஆகியவற்றின் கண்ணியத்தை நினைவில் நிறுத்தினால் தான் அந்த அருமை புரியும்.

இந்த வசனம் ஹஜ்ஜின் போது கொண்டு வரப்படுகிற பிராணிகளை (ஹத்யி) மதிக்க வேண்டும் என்று பேசக்கூடியதாகும்.

ரமலான் விசயத்தில் நமது முதல் கடமை நாம் ரமலான் முழுவதையும் கண்ணியப்படுத்த தயாராவதாகும்.

நோன்பு, இரவுத்தொழுகை, திலாவத், இஃதிகாப் என தொடரும் அனைத்து அமல்களும் அந்த கண்ணியத்தின் வெளிப்பாடாக அமையவே அமைய வேண்டும்.

இந்த மாத்த்தை அல்லாஹ் கண்ணியப்படுத்தியிருக்கிறான். அதை நாம் கண்ணியப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் நமது சிந்தனை முழுக்க் நிறைந்திருக்க வேண்டும், அதுவே உண்மையாக ரமலானை வரவேற்றலாகும்.

ரமலானில் ஒரு நிமிடத்தை கூட நாம் மதிப்பிழக்கச் செய்து விடக் கூடாது.

தொடர் தூக்கம். உணவுத்தயாரிப்பு ஷாப்பிங்க்  பொழுது போக்குகள் நாம் ரமலானை மதிக்கிறோமா என்ற கேள்வியை ஏற்படுத்தி விடக் கூடாது.

நமது இதயத்திலும் நமது குடும்பத்தார் இதயத்திலும் இந்த எண்ணத்தை ஆழப்பதிக்க வேண்டும்.

அருமையானவர்களே!

ஒன்றை கண்ணியப்படுத்தலே அதை அடைந்து கொள்ளும் சரியான வழியாகும்.

ஒருவரது நேசம் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் முதலில் நாம் அவரை மதிக்க வேண்டும் என்பது எதார்த்த விதி.

நபி (ஸல்) அவர்களுக்கு பக்க்த்து வீடுகளில் இரண்டு பேர் வசித்தனர்.

ஒருவன் : அபூலஹ்பு

இன்னொருவன் :  உக்பா பின் அபீ முஈத்

عن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: كنت بين شر جارين: بين أبي لهب وعقبة بن أبي معيط،  

இந்த இருவருக்கும் ஈமானுக்கான வாய்ப்பு கிடைக்க வில்லை.

பல் நூறு மைல்களுக்கு அப்பாலிருந்த உவைஸ் அல் கர்னீ (ரஹ்) ஈமானிய வாய்ப்பை பெற்றார்கள்.

உவைஸ் (ரஹ்) நபி (ஸல்) அவர்கள் மீது ஏராளமான அனபையும் மரியாதையையும் வைத்திருந்தார்.

யமனில் உள்ள கர்னு நகரத்துக்கு மதீனாவிலிருந்து வியாபாரிகள் வந்திருப்பதாக கேள்விப்பட்டால் , அவர்களில் பெருமானாரை பார்த்தவர்கள் யார் எனக் கேட்டறிந்து பெருமானாரைப் பார்த்தவர்களை கட்டி அணைத்துக் கொள்வார். அவர்களுடைய இரு கண்களுக்கு இடையே முத்தமிடுவார்.

இந்த அன்பும் மரியாதையும் உவைஸூல் கர்னீ ரலி அவர்களின் ஈமானுக்கும் அந்தஸ்திற்கும் காரணமாக இருந்தது.

கண்ணியப்படுத்த வேண்டிய பொருட்களை வைத்திருப்பதையே யூதர்களின் தலைமையை நிரூபிக்கும் ஒரு அடையாளமாக அல்லாஹ் ஆக்கினான் என்கிறது திருக்குர் ஆன்.

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا ۚ قَالُوا أَنَّىٰ يَكُونُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ الْمَالِ ۚ قَالَ إِنَّ اللَّهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وَزَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ وَالْجِسْمِ ۖ وَاللَّهُ يُؤْتِي مُلْكَهُ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ (247وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ آيَةَ مُلْكِهِ أَن يَأْتِيَكُمُ التَّابُوتُ فِيهِ سَكِينَةٌ مِّن رَّبِّكُمْ وَبَقِيَّةٌ مِّمَّا تَرَكَ آلُ مُوسَىٰ وَآلُ هَارُونَ تَحْمِلُهُ الْمَلَائِكَةُ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ   

 அந்தப் பெட்டியில் என்ன இருந்த்து ?

. وقال ابن عطية : والصحيح أن التابوت كانت فيه أشياء فاضلة من بقايا الأنبياء وآثارهم ، فكانت النفوس تسكن إلى ذلك وتأنس به وتقوى 

فقيل : عصا موسى وعصا هارون ورضاض الألواح ؛ لأنها انكسرت حين ألقاها موسى ، قاله ابن عباس 

 மதித்தலே மார்க்கம் என்ற செய்தி மிக ஆழ்ந்த கவனத்திற்குரியதாகும்

 நமது முன்னோர்கள் ஒரு அரபு எழுத்து கீழே கிடந்தால் எடுத்து கண்ணில் ஒத்திக் கொள்வார்கள். குர் ஆனாக இருக்கலாம் என்ற எண்ணத்தில்.

பெண்கள் பள்ளிவாசல்கள் வழியாக நடப்பதை கூட தவிர்ப்பார்கள்.

பெரியோர்கள் ஆலிம்கள் நேசிக்கப் பட்டார்கள். உபசரிக்கப் பட்டார்கள்.

கிப்லாவுக்கு நேரே கால் நீட்டி அமர மாட்டார்கள்.

குர் ஆனை நெஞ்சுக்கு மேலே தான் வைப்பார்கள். சாதாரண புத்தகத்தைப் போல பிடிக்க மாட்டார்கள்.

ஷாஹ் வலியுல்லாஹ் தஹ்லவியிடம் ஒருவர் கேட்டார் : நீங்கள் எப்படி ஷாஹ் வலியுல்லாஹ் வாக ஆனீர்கள்.

ஷாஹ் வலியுல்லாஹ் தஹ்லவீ கூறினார். நான் கிதாபுகளை மதித்தேன். அதில் எழுதப்பட்டுள்ல ஓரக்க்குறிப்புக்களை படிப்பதற்காக மற்றவர்கள் கிதாபை திருப்புவார்கள் . நான் கிதாபை திருப்ப மாட்டேன், நான் எழுந்து திரும்பி அமர்ந்து படிப்பேன்”

தற்காலத்தில் இந்த மரியாதைகளில் வெளிப்பட்ட தட்டுப்பாடும் தடுமாற்றமும் தான் சமுதாயத்தை இந்த அளவில் பிரச்சனைகளுக்குரியதாக் ஆக்கியிருக்கிறது.

மார்க்கம் இல்லாமல் வெறும் கூச்சல் மட்டுமே மிகைத்திருக்கிறது.

எனவே ரமலானை கண்ணியப்படுத்துவதே பிரதானமானது என்பதை உணர்வோ. அதன் ஒவ்வொரு நிமிட்த்திலும் அந்த கண்ணியத்தை பேணுவதற்கு முயற்சி செய்வோம்.

பேஸ்புக்,-  யூ டியூப் – வாட்ஸப் - சாட்டிங் – ஷாப்பிங்க் – தெரு அரட்டை. தெருக்கலில் இரவு நேரத்தில் கேரம் போர் ஆடுவதுபோன்றவை நமது பொழுதை ஆக்ரமித்துக் கொண்டிருக்கிற காலத்தில் இந்த ரமலானை நாம் எதிர்பார்க்கிறோம்.

ரமலானை கண்ணியப்படுத்துவது எப்படி என்பதை நாமாக சிந்தித்து முடுவெடுத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த் ஆண்டு ரமலானை முழுமையா அனுபவிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைக்க வில்லை.

இந்த வருடம் சில கட்டுப்பாடுகள் நம்மை அச்சுறுத்தி நிற்கின்றன.

இந்த கட்டுப்பாடுகள் நியாயாமானவை என்கிற போது அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.

தேர்தல் நடந்து முடியும் வரை இந்தப் பரவல் இல்லையா ? இன்று தான் இது துவங்கியதா என்ற  கேள்வி நியாயமானது தான். எனினும் இப்போதைக்கு நம்மையும் நமது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான ஒரு ஏற்பாடாக இந்த கட்டுப்பாடுகளை நாம் ஏற்றுக் கொள்வோம்.

அதே நேரத்தில் இந்தக் கட்டுப்பாடுகள் ரமலான கண்ணியப்படுத்தும் நமது மோகத்தை அதிகப்படுத்தட்டும்.

ரமலானின் ஒவ்வொரு இழையையும் நேசித்து அதனை அழகு படுத்துவோம்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

3 comments:

  1. முத்தான சிந்தனைகள்
    தரமான கருத்துக்கள்
    ஹழ்ரத் அவர்களே தங்களின் சேவைகளை இறைவன் பொருந்திக் கொள்வானாக ஆமீன்
    ப்ரியமுடன்
    சுக்கூர் ரியாஜி

    ReplyDelete
  2. Anonymous10:41 PM

    Mashaallah

    ReplyDelete