(கொரோனா இரண்டாம் கட்ட பரவலின் காலகட்ட்த்தில் ரமலான் நோன்பை வைத்து முஸ்லிம் சமூகத்தை மலிவு படுத்த சிலர் நினைத்தனர். ஆனால் நோன்பு வென்றது . இந்த உரையின் பின்பகுதியில் அதறகான விளக்கம் இருக்கிறது. நேரம் குறைவாக இருப்பவர்கள் அதை மட்டுமே பேசலாம். முஸ்லிம் முன்னோடிகளின் வரலாறுகளை மற்ற ஒரு நேரத்தில் பேசிக் கொள்ளலாம்.
கொரோனோ நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. அரசு சொல்வதை நாம் நம்பாவிட்டாலும் ஆஸ்பத்திரிகள் சொல்வதை நம்பாமல் இருக்க முடியாது . மருத்துவ மனைகளில் படுக்கைகள் இல்லை. உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கூட மீண்டும் நோய்த்தொற்று ஏற்படுகிறது. எனவே புனித ரமலானில் சஹர் இப்தார் தராவீஹ் ஷாப்பிங்க் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் போதுமான எச்சரிக்கைகளை பேணுமாறு மக்களுக்கு அறிவுறுத்தவும் வேண்டும். )
அல்லாஹ் கூற்கிறான். நோன்பு வையுங்கள் அது நல்லது.
மற்ற வணக்கங்களில் ஜன்னத் கிடைக்கிறது,
நோன்பில்
ஜன்னத்திற்கு சொந்தக்காரனான ரப்பு கிடைக்கிறான்,
நோன்பு
பற்றிய ஒரு ஹதீஸில் அல்லாஹ் கூறுகிறான்.
வ
அன உஜ்ஸா பிஹி (நானே அதற்கு கூலி)
كلُ عملِ بنِ آدمَ له إلا
الصيامُ فإنه لي وأنا أجزي به" رواه البخاري
அடியார்களுக்கு இதை விட மரியாதை வேறென்ன இருக்கிறது ? இதைவிட நற்கூலி வேறென்ன இருக்க முடியும் ?
அதனால்
தான் நபிமார்கள் நோன்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள்
· நூஹ் அலை பெரும்பாலும் நோன்பாளியாக
இருந்தார்கள்
· தாவுத் அலை ஒரு நாள் விட்டு மறுநாள் நோன்பு
வைப்பவராக இருந்தார்கள்
· ஈஸா அலை மூன்று நாளைக்கு ஒரு நாள் நோன்று வைப்பவராக இருந்தார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் முன்னோடிகள் பலர் தடுக்கப்பட்ட
நாட்களைத் தவிர்த்து வாழ்நாள் முழுவதும் நோன்பாளிகளாக இருந்துள்ளனர்.
الإمام الحافظ الثقة داود بن أبي هند دينار بن عُذافر, البصري. حافظ للحديث، مفسر، من أهل البصرة ,
عن ابن أبي عدي قال : " صام داودبن أبي هند أربعين سنة لا يعلم به أهله ، وكان خرازا يحمل معه
غداءه من عندهم ، فيتصدق به في الطريق ، ويرجع عشيا فيفطر معهم " . يقول
الحافظ ابن الجوزي معلقا : " يظن أهل السوق أنه قد أكل في البيت ،
ويظن أهله أنه قد أكل في السوق ") سير أعلام النبلاء (
அவரிடமிருந்து வெளிப்பட்ட அற்புதங்களைப் பற்றி பேசுவதற்கு தனியாக ஒரு பகுதியை ஒதுக்கினார். இப்னுல் ஜவ்ஸீ
அவரது நோன்பு எப்படி ?
وسئل معروف الكرخي : " كيف تصوم ؟ " ، فغالط السائل
وقال : " صوم نبينا صلى الله عليه وسلم كان كذا وكذا ، وصوم داود عليه السلام كذا وكذا " ، فألحّ عليه ، فقال
: " أُصبح دهري صائما ، فمن دعاني أكلت ، ولم أقل إني صائم "
நான் ஒரு ஹிந்து . இந்து மத்த்தில் பல விரதங்கள் உண்டு. திங்கட்கிழமை விரதம் ச்ஷ்டி
விரதம் சபரி மலைக்கு மாலை அணிந்தவர்கள் நாலுமாதம் அல்லது நாற்பது நாட்கள் கடைபிடிக்கிற
விரதம் என பலவிரதங்கள் உண்டு. கிருத்துவ மத்த்திலும் கூட ஈஸ்டர் சமயத்தில் 40 நாட்கள்
நோன்பு உண்டு. இந்தக் கால கட்டத்தில் மாமிச உணவு வகைகளை அவர்கள் தவிர்த்துக் கொள்கிறார்கள்.
முழுக்க உணவு வகைகளை தவிர்த்துக் கொள்வதில்லை. முஸ்லிம்களின் நோன்பு இதில் விசேஷமானது.
அவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பு நோற்கிறார்கள். இந்த வெயில் காலத்தில் அப்படியிருக்கிற
சிரமம் எப்படிப்பட்டது என்பது நமக்கு தெரியும். அதுவும் ஒரு மாத காலம் முழுவதும் தொடர்ச்சியாக
நோன்பு வைக்க வேண்டும். அவர்களது நோன்பில் ஒரு தியாகமும் சமரசம் செய்து கொள்ளாத ஆழமான
நம்பிக்கையும் இருக்கிறது. நோன்பை கடைபிடிக்கிற பல நண்பர்கள் எனக்கு உண்டு. அவர்கள்
அனைவரிடமும் நான் நோன்பை பற்றி பேசுகிற போது அவர்கள் அது பற்றி மிகுந்த மகிழ்ச்சியுடனேயே
பேசுகிறார்கள். இவ்வளவு நேரம் பசியோடு காத்திருப்பது பற்றி அவர்களிடம் எந்த சங்கடமும்
இல்லை. ஒரு அழுத்தமான மானசீக பிடிப்பு இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
முஸ்லிம்கள் எந்த போராட்டத்திலும் ஜெயிப்பார்கள். அவர்களிடம் நல்ல உறுதி இருக்கிறது
என்று பேசப்படுவதை நான் கேட்டிருக்கிறேன். எந்த ரிஸ்க்கையும் எதிர் கொள்கிற மன தைரியம்
அவர்களுக்கு இருப்பதே கூட இந்த நோன்பின் காரணமாக இருக்கலாம்.
இப்படி ஒரு நோன்பை கடைபிடிப்பதற்கு உடல் ரீதியான சிரமங்களை தாங்கிக் கொள்வது என்பதை
தாண்டி நோன்பை பற்றிய ஒரு ஆழமான மத நம்பிக்கை காரணம் இருக்கலாம்.
என்று அந்த சகோதரி கூறூகிறார்.
ஒரு கட்டுரை உண்டு. அதில் பல தகவல் கிடைக்கின்றன.
Muslims were commanded to fast during Ramadan more than 1,400 years ago, the ancient Greeks recommended fasting to heal the body, and today some scientists are advocating a modified fast for its mental and physical benefits.
உடல் நலனை காப்பதற்கு intermittent fasting என்று ஒரு முறை இருக்கிறது. 14 முதல் 24 மணிநேரம் வரை தொடர்ச்சியாக எதையும் சாப்பிடாமல் இருப்பது.
மருத்துவர்கள் 5:2 என்றொரு நடை முறையை வைத்திருக்கிறார்கள். வாரத்திற்கு இரண்டு முறை 36 மணி நேர இடைவெளியில் 500 அல்லது 600 கலோரி அளவுகளில் மட்டும் சாப்பிடுவது.
Eat Stop Eat, a book by Brad Pilon published in 2007, recommended
abstaining from eating for 24 hours once or twice a week, giving individuals
the freedom to decide when to start and end their fast.
In 2012, Michael Mosley released his TV documentary Eat, Fast and
Live Longer and published his best-selling book The Fast Diet, both based on
the 5:2 concept of intermittent fasting.
“In The Fast Diet I advocate a form of fasting called
‘time-restricted eating’,” Mosley told Al Jazeera
அல் ஜஸீரா தொடர்கிறது;
Experts have also found that restricting food intake during the day can help prevent health problems such as high cholesterol, heart disease and obesity, as well as improve mental health and wellbeing.
By not consuming any food, our body is able to
concentrate on removing toxins, as we give the digestive system a rest.
மூளைக்கு அழுத்தம் குறைகிறது.
Scientists have also been studying the link between diet, gut health and mental wellbeing and, as Mosley explained, fasting can lead to the release of BDNF (brain-derived neurotrophic factor) in the brain.
“This has been shown to protect brain cells and could reduce depression and anxiety, as well as the risk of developing dementia,” Mosley added.
சில பாதிப்புக்கள்
இது பெரிய அளவில் எல்லோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது. பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு நோன்பிலிருந்து விலக்கு உண்டு.
நோன்பு வைப்பதால் உடல் எடை குறையும் என்று சொல்லப்படுவதுண்டு. அது அடுத்த சில நாட்களில் முன்பு போல ஆகிவிடும்.
மருத்துவர்கள் இறுதியாக கூறுவது
இருப்பினும், நன்மைகள் தீமைகளை விட அதிகம். நீண்ட காலமாக, உண்ணாவிரதம் சரியாகச் செய்தால், ஒருவரின் செரிமான அமைப்பையும் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்த முடியும்
However, the benefits outweigh the cons. In the
long run, fasting, if done correctly, can improve one’s digestive system and
overall metabolism
அல்லாஹ்வை நெருங்கும் வழி இது என்பதும் இது மார்க்கத்தின் கட்டளை என்பதுமே முஸ்லிம்களை எந்த
எனவே நோன்பின் ஆன்மீக பலனை எண்ணி முஸ்லிம்கள் நோன்பு வைக்கிறார்கள். அல்லாஹ் அதிலே
மக்களுக்கு உடல் ரீதியான நன்மைகளையும் வழங்குகிறான்.
நோன்பு முஸ்லிம்களுக்கு நன்மையானது என்பது மட்டுமல்ல. ஆரோக்கியமான எந்த ஒரு மனிதனுக்கு
நன்மையானது என்பதே உலகம் கண்டுவருகிற உண்மையாகும்.
அதனாலேயே முஸ்லிம் அல்லாத பலரும் இந்த ரமலானில் முஸ்லிம்களுடன் சேர்ந்து நொன்பு
நோற்று வருகிறார்கள்.
லாலா லஜ்பதி ராயின் குடும்பம் ரமலானில் நோன்பு நோற்கும் வழக்கத்தை கொண்டிருந்த்து
என்கிறது இந்திய வரலாறு.
இன்றும் நம்மைச் சுற்றி பல மாற்றுமத சகோதரர்கள் ரமலான் காலங்களில் முஸ்லிம்களைப்
போலவே நோன்பை கடைபிடிக்கிறார்கள்.
நோன்பு மதங்கடந்த நல்லிணக்கத்திற்கு வழிவகுத்திருக்கிறது.
ஆனாலும் அவ்வப்போது வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் முஸ்லிம்களை
குறைகூறத் தவராத சிலர் மேல் நாடுகளில் முஸ்ளிம்கள் நோன்பு நாட்களில் தடுப்பூசி போட்டுக்
கொள்ள மாட்டார்கள் என்றும் நோன்பு நோற்பதால் முஸ்லிம்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்
என்றும் இதனால் கொரோனா பரவல் அதிகரிக்க கூடும் என்று பொது ஊடகங்களில் விசமத்தனமான பிரச்சாரத்தில்
ஈடுபட்டார்கள்.
அல்லாஹ்வின் கிருபையால் இஸ்லாமிய சட்டங்களில் காணப்படும் அல்லாஹ் ரஸூலின் ஞானம்
மிக்க கட்டுப்பாடுகளும் தளர்வுகளும் இந்த சூழலிலும் முஸ்லிம்களை காத்து நின்றன.
உலகம் முழுவதிலும் குறிப்பாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் முஸ்லிம் அறிஞர்கள் ஒரே
குரலில் :”நோன்பாளிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்” என்றதோடு தடுப்பூசி
போட்டுக் கொள்ள அறிவுறுத்தவும் செய்தனர். ஒரு வேளை காய்ச்சல் ஏதும் வருமானால் தேவை
எனில் ஒரிரு நோன்பை தற்போதைக்கு விட்டு விட்டு பிறகு நோற்றுக் கொள்ளலாம் என அறிவுறுத்தினர்.
இஸ்லாத்தில் அதற்கு தாராள அனுமதி உண்டு என்பதை விளக்கிக் கூறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு உட்பட்ட ஒரு பள்ளிவாசலில் வியாழன் வெள்ளி ஆகிய
இரு நாட்களில் ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டதாக ABC நியூஸ் கூறுகிறது. உயிர்களை காப்பது
கடமை என்பதை முஸ்லிம்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்கிறார் இமாம் தாஹிர் குகஜ்.
On New York's Staten Island,
imam Tahir Kukaj, whose mosque was administering 1,000 vaccines on Thursday and Friday, said “Muslims
are taught to do whatever they can to save lives. Getting vaccinated is a way
to do that: “Of course, we have to save our own life first.
அதே நேரத்தில் நோன்பினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதில்லை என்பதையும் மருத்துவர்கள்
விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள்
அமெரிக்க ஆய்வு முடிவு என்ன சொல்கிறது ?
Research published by the University of Southern California has shown that
prolonged fasting can lead to regeneration of the cells of your immune system
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக்குறிப்பில் தொடக்கமாக
,
தொடர்
நோன்பு நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செல்களை மீளுருவாக்கம்
செய்ய வழிவகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
அடுத்த வரிகளில் இதை மேலும் விவரிக்கிறது.
When we begin to fast, the body initially breaks down a number of immune
fighting white blood cells. It instinctively knows to start saving energy and
one way it does this is by killing off old or damaged immune cells. But it
quickly adjusts and triggers the regeneration of new cells, therefore
increasing the number of immune boosting cells that we have.
நமது இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் தான் நோயை எதிர்த்து போராடக் கூடியவை நோன்பு
வைக்க தொடங்கும் போது வெள்ளை அணுக்களில் சில இழப்புக்கள் ஏற்படுகின்றன. ஆனால் விரைவாகவே இது தானாக சரியாகி வெள்ளை அனுக்களை
மீண்டும் உருவாக்குகிறது. அது முன்பிருந்த்தை விட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
(அதாவது ரீ ஆயிலிங்க் செய்வது போல)
மருத்துவ அறிஞர்கள் நோன்பு திறக்கும் போது நாம் உண்ணும் உணவுகளால் உடலில் தேவையற்ற
பிரச்சனைகள் உருவாக கூடாது என்பதற்காக பல நல்ல அறிவுரைகளை கூறுகிறார்கள்
இன்றயை விரைவு உணவு கலாச்சாரத்தில் இவற்றை நாம் நினைவில் கொள்வது நல்லது.
அதிகம் தண்ணீர் குடியுங்கள்
வைட்டமின் சி உள்ள ஆரஞ்சு போன்ற நீர்ச்சத்துள்ள உணவுகள், மிளகு உள்ளிட்ட காரவகைகளை
உடல் ஏற்றுக் கொள்ளுமளவு சேர்த்துக் கொள்ளுதல்
வைட்டமின் பி உள்ள வாழைப்பழங்கள் – காய்கறிகள் -பாதாம் பிஸ்தா போன்ற சத்தான கொட்டைகள்.,தேவையான
அளவு இறைச்சி ஆகியவை உணவில் சேர்க்கப்பட வேண்டும்.
கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
வறுத்த மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பொதுவாகவே முஸ்லிம்களின் பாரம்பரியத்தில் காய்ந்து கிடக்கும் வயிற்றின் சூழலுக்கு
ஏற்ப உணவருந்தும் பழக்கமே உலகம் முழுவதிலும் இருக்கிறது.
இதனால் நோன்பினால் அடையக் கூடிய நன்மைகளையே முஸ்லிம்கள் அனுபவிக்கிறார்கள்.
எனவே உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தை பேணுகிற எந்த நிலையிலும் நோன்பு முஸ்லிம்களுக்கு
நன்மையாகவே இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேல் அல்லாஹ் அல்லவா கூறுகிறான்.
وَأَن
تَصُومُوا خَيْرٌ لَّكُمْ ۖ إِن كُنتُمْ تَعْلَمُونَ.
அல்லாஹ்
நமது நோன்பை அங்கீகரித்து அதற்கு
உரிய கூலியை தந்தருள்வானாக! உலகில்
காணப்படும் அனைத்து வகையான நோய்
நொடிகளிலிருந்தும் நம்மையும் இந்த உலகையும் பாதுகாத்தருளவானாக!
ரமலான் காலத்தில் முஸ்லீம்களிடம் அடியோடு குறைந்த கொரோனா மரணங்கள்!இங்கிலாந்து சுகாதார ஆய்வறிக்கையில் ஆச்சர்யம்… https://tamilbreaking.com/impact-ramadan-fasting-low-covid19-morality-in-uk/
ReplyDelete