வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 22, 2021

நெருக்கடி கால ஒழுங்குகள்

 இன்றைய நமது நாட்டின் நிலை மிக மோசமாக இருக்கிறது.

உலக நாடுகள் விமானங்களை ரத்து செய்கின்றன

மஹாராஷ்டிரா நாசிக்கில்  மருத்துவ மனையில் ஆக்ஸிஜன் டேங்கில் ஏற்பட்ட கசிவால் கொஞ்ச நேரத்தில் மூச்சுத்திணரலுக்கு ஆளாகி 24 பேர் இறந்து போய்விட்டனர்.

சிலநாட்களுக்கு முன் தமிழகத்தில் வேலூர் கேஸ் சிலிண்டர் மாற்றுவதில் ஏற்பட்ட தாதமத்தால் சட சட வென 7 பேர் பல்யாகினர்.

குஜராத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் 70 பேர் கொரோனாவால் மரணித்த்தாக அரசு சொல்ல 688 பேர் கோரானோ மரணங்கள் என அடக்கம் செய்யப்பட்ட்தாக் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.   .

ஒரு நாள் பாதிப்பு 3 இலட்சமாக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் 2 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.. தமிழகத்தில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலக ஊடகங்கள் இப்போது இந்திய மருத்துவ மனைகளையும்  மயானங்களையும் பயங்கரங்களின் அடையாளாமாக காட்டி வருகின்றன.

மருத்துவ மனைகளின் வாயில்களில் பெரும் பதட்டத்தோடு குவிந்து கிடக்கிற மக்களின் ஓலங்களை திகிலோடு அவ்வூடகங்கள் ஒலி ஒளிபரப்பி வருகின்றன.

மயானங்களில் வரிசையில் காத்திருக்கிற பிணங்களை , தங்களது உறவினர் இறந்து விட்டது தெரியாமல் பாலாஜி பாலாஜி என்று சத்தமாக கத்திக்கொண்டிருக்கிற சகோதரிகளை. என் அம்மாவை கொஞ்சம் வந்து பாருங்களேன் என்று கெஞ்சிக் கொண்டிடிருந்தவர் ஒரு வழியாக மருத்துவரை அழைத்து வந்து ஆஸ்பிடல் வராந்தாவில் ஆம்புலன்ஸீல் இருக்கிற அம்மாவை காட்டுகிறார். மருத்துவர் கையை விரிக்கிறார் களைப்பிலும் கவலையில் சத்தமே வராமல் கதறுகிறார்கள் பலர்.

இதுவரை 13 கோடிப் பேருக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்படுகிறது என்பது மட்டுமல்ல நமது மக்கள் தொகையில் இன்னும் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி இன்னும் போய்ச் சேரவில்லை

இதற்கிடையில் சில காலம் பம்மாத்து காட்டிய தடுப்பூசி நிறுவனங்கள் தடுப்பூசியின் விலையை வின்னை தொடும் அளவு உயர்த்தி விட்டன. 250 ரூபாய்க்கு தனியார் மருத்துவ மனைகளில் போடப்பட்ட தடுப்பூசி இப்போது 900 ரூபாய்.

நமது நாட்டின் பெரும் துயரம் கொரோனா அல்ல.

அதை சமாளிப்பதாக நாடகம் ஆடும் அரசுகளாகும்.

அரசியல் வாதிகளுக்கு தேவைப்படுகிற போது ஊரடங்கை தளர்த்துகிறார்கள். இப்போதும் பாருங்கள் நாடே பற்றி எறிகிற போது பிரதமரும் உள்துறை அமைச்சரும் மேற்கு வங்கத்தில் பிரம்மாண்டமான பேரணிகளை நட்த்து கிறார்கள்.

தங்களது தகுதிக்கு சிறிதும் பொருந்தாத வார்த்த்தகளை பேசுகிறார்கள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கு வங்க தொழிற்சாலைகளுக்கு இப்போது ஆகிஸஜன் அதிகமாக தேவைப்படுகிறது என்று தனது கட்சிக்கான பிரச்சாரத்தை செய்கிறார். மக்கள் மடிந்து கொண்டிருப்பதை பற்றிய துளியும் கவலையோ அக்கறையோ இல்லாமல்,

பிச்சை எடுங்கள், திருடுங்கள், எதையாவது செய்து உயிர்களைக் காப்பாற்றுங்கள் என்று மத்திய அரசை தில்லி உயர்நீதிமன்றம் கேட்டிருப்பது தற்போதைய டிரண்டாக உலா வருகிறது.

காற்றை கூட திருடி விடுவார்கள் என்று வேடிக்கையாக சொல்வார்கள் தில்லியிலிருந்து சென்ற் ஆக்ஸிஜன் லாரிகளை காவல் துறையினரும் பொதுமக்களும் கடத்திச் சென்றதாக செய்திகள் கூறுகின்றன.

மிக மோசமான அச்சம் தரும் ஒரு சூழ்நிலையை நாம் கடந்து கொண்டிருக்கிறோம்.

அல்லாஹ் இந்த ரமலானில் இப்பெரு நோய்த் தொற்றிலிருந்து உலக மக்களை காப்பற்றியருள்வானாக

மக்களை காக்கத் தவறி, வாய்ச்சவடால்களில் வாழ்ந்து கொண்டிருக்கிற அநாகரீகமான அரசுகளை அல்லாஹ் அழித்தொழிப்பானாக!

பணியாற்றுகிற ஊழியர்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பையும் பக்குவப்பட்ட மனதையும் தந்தருள்வானாக!

இந்தச் சூழலில் புனிதம் மிக்க ரமலானின் இரண்டாவது ஜும் ஆவில் பாவமன்னிப்பிற்குரிய பகுதியை எதிர் நோக்கி - அமர்ந்திருக்கிற நாம் இப்போது மற்றெதையும் விட  ஒரு நெருக்கடியான நேரத்தில் கடைபிடிக்க வேண்டிய ஒங்குகள் குறித்து சிந்திக்க கடமைப் பட்டிருக்கிறோம்.

முதலாவதாக அல்லாஹ்விடம் உதவி தேடுவது.

சோதனைகளிலிருந்து தப்பிப்பதற்கான முதல் உதவி என்பது இஸ்திக்பார் ஆகும்.

இந்த பெரிய சோதனைக்குள் நாமோ நம்மைச் சார்ந்தவர்களோ சிக்கிக் கொள்ளக் கூடாது. முழு உலகமும் இதிலிருந்து விடுபட வேண்டும் என்ற நிய்யத்தில் நாம் இஸ்திக்பார் அதிகமாக செய்வோம்.

நாம் பாக்கிற காட்சிகள் நம்மை அஸ்தஃபிருல்லா என்று அதிரவைக்கின்றன. அஸ்தஃபிருல்லாஹ் அதிகமாக கூறுகிற போது அப்படி ஒரு நிலை நமக்கு வராமல் அல்லாஹ் பாதுகாப்பான்.

நாம் ரமலானின் நடுப்பகுதியில் இருக்கிறோம். இஸ்திக்பார் தான் இதன் பிரதான அமலாகும்.

ரஹ்மத்தின் வழிகள் திறக்க இஸ்திக்பார்

لَوْلَا تَسْتَغْفِرُونَ اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ} } [النمل: 46]؛

عن قتادة رحمه الله قال: إن القرآن يدلُّكم على دائكم ودوائكم، أما داؤكم، فذنوبكم، وأما دواؤكم، فالاستغفار

 இஸ்திக்பாரினால் கிடைக்கும் நன்மைகள்

الاستغفار يُنقِّي القلبَ ويُطهِّره

 فعن أبي هريرة رضي الله عنه، عن رسول الله صلى الله عليه وسلم قال: ((إن العبد إذا أخطأ خطيئةً نُكِتَت في قلبه نكتةٌ سوداء، فإذا هو نزع واستغفر وتاب صقل قلبه، وإن عاد زِيدَ فيها حتى تعلوَ قلبَه،

 பாவங்களால் கிழிகிற தீனை இஸ்திக்பாரால் தைக்கிறேன்.

 وذكروا عن بعض السلف أنه قيل له: كيف أنت في دينك؟ قال: أُمزِّقه بالمعاصي، وأَرْقَعُه بالاستغفار.

 عن بكر المُزَني رحمه الله قال: إن أعمال بني آدم تُرفَع، فإذا رفعت صحيفةٌ فيها استغفار رُفِعَت بيضاء، وإذا رُفِعَت ليس فيها استغفارٌ رُفِعَت سوداءَ.

எத்தைகைய பாவியாக இருந்தாலும் இஸ்திக்பாரில் லாபமடையலாம்.

  وعن أبي هريرةَ رضي الله عنه، عن النبيِّ صلى الله عليه وسلم فيما يحكي عن ربِّه عز وجل، قال: ((أذنب عبدٌ ذنبًا، فقال: اللهم اغفِرْ لي ذنبي، فقال تبارك وتعالى: أذنب عبدي ذنبًا، فعلِم أن له ربًّا يغفِرُ الذنب ويأخذ بالذنب، ثم عاد فأذنَب، فقال: أي رب، اغفِرْ لي ذنبي، فقال تبارك وتعالى: عبدي أذنب ذنبًا فعلم أن له ربًّا يغفِرُ الذنب ويأخذ بالذنب، ثم عاد فأذنب، فقال: أي رب، اغفِرْ لي ذنبي، فقال تبارك وتعالى: أذنب عبدي ذنبًا فعلِم أن له ربًّا يغفر الذنب، ويأخذ بالذنب، اعمَلْ ما شئت، فقد غفرتُ لك))[4]. وتأمَّل في كلامه جل شأنه، قال: ((فعلِم أن له ربًّا يغفر الذنب ويأخذ بالذنب)).

 நமது ஏடு மணக்கும்.

 فعن عبدِالله بن بُسْر رضي الله عنه قال: قال النبيُّ صلى الله عليه وسلم: (( «طُوبَى لِمَن وَجَد في صحيفته استغفارًا كثيرًا» ))؛ أخرجه ابن ماجه بسند حسن.

 சொர்கம் செல்லாம்

 عن عبدالعزيز بن عمر بن عبدالعزيز، قال: رأيتُ أبي في النوم بعد موته كأنه في حديقةٍ، فرفع إليَّ تفاحات، فأوَّلتهن بالولد, فقلت: أي الأعمال وجدت أفضل؟ قال: الاستغفار يا بُنَي.

 இது போல எல்லாவற்றிற்கும் மேலாக சிக்கல்களிலிருந்து  விடுபட இஸ்திக்பார் பெரிதும் உதவக்கூடியது

 நூஹ் நபியை அவருடைய சமூகம் தொடர்ந்து புறக்கணித்த போது அல்லாஹ் அவர்களுக்கு மழையை தடுத்தான். நாற்பது ஆண்டுகளாக அவர்களில் ஒரு பெண்ணுக்கு கூட கர்ப்பம் தரிக்கவில்லை.கால் நடைகள் அழிந்தன. பயிர்கள் கருகின.

 மக்கள் அதற்கு தீர்வை தேடி நூஹ் நபியிடம் வந்தார்கள்.

 لَمَّا كذَّبوا نوحًا زمانًا طويلًا، حبَس الله عنهم المطر، وأعقَمَ أرحام نسائهم أربعين سنةً، فهَلَكت مواشِيهم وزُرُوعُهم، فصاروا إلى نوحٍ عليه السلام واستغاثوا به، فقال: استغفروا ربكم إنه كان غفارًا...".

அப்போது சொல்லப்பட்டது தான் இந்த வசனம்

 اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا * يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا * وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا} } [نوح: 10 - 12

 ஆது நபியின் மக்கள் தமது உடல்வலிமையை வைத்தே அக்கிரம்ம் செய்தனர். அவர்களை அல்லாஹ் சோதித்தான் அப்போது ஹூத் அலை கூறினார்கள். இஸ்திக்பார் செய்யுங்கள் உங்களுக்கு சக்தி வரும்.

 وقال هودٌ عليه السلام لقومه: { {وَيَا قَوْمِ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ثُمَّ تُوبُوا إِلَيْهِ يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيَزِدْكُمْ قُوَّةً إِلَى قُوَّتِكُمْ وَلَا تَتَوَلَّوْا مُجْرِمِينَ} } [هود: 52].

 قال العلماء: كانوا مِن أقوى الناس، ولهذا قالوا: { {مَنْ أَشَدُّ مِنَّا قُوَّةً} } [فصلت: 15]،

 இப்போது நமக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும் என்ரு நிய்யத் வைத்து இஸ்திக்பார் செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 ذكر القرطبي رحمه الله في تفسيرِه عن ابن صُبَيح قال: شكا رجلٌ إلى الحسن الجُدُوبةَ، فقال له: استغفِرِ الله، وشكا آخر إليه الفقر، فقال له: استغفِرِ الله، وقال له آخر: ادعُ الله أن يرزقني ولدًا، فقال له: استغفِرِ الله، وشكا إليه آخر جفافَ بستانه، فقال له: استغفِرِ الله، قال: فقلنا له في ذلك؟ فقال: ما قلتُ مِن عندي شيئًا، إن الله تعالى يقول: { {اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا * يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا * وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ} } [نوح: 10 - 12].

 எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு

 عن ابن عباسٍ، قال: قال رسولُ الله صلى الله عليه وسلم: (( «مَن لزِم الاستغفارَ جعَل اللهُ له مِن كلِّ ضيقٍ مخرجًا، ومِن كل همٍّ فرجًا، ورزقه مِن حيث لا يحتسب» ))

 பெரும் ஆபத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

  {وَمَا كَانَ اللَّهُ لِيُعَذِّبَهُمْ وَأَنْتَ فِيهِمْ وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ} } [الأنفال: 33].  

  وعن فضالة بن عُبَيد رضي الله عنه، عن النبي صلى الله عليه وسلم أنه قال: (( «العبدُ آمنٌ مِن عذاب الله ما استغفَرَ اللهَ» )) 

 ويذكُرُ عن عليٍّ رضي الله عنه قال: العَجَبُ ممَّن يَهلِكُ ومعه النجاة، قيل: وما هي؟ قال: الاستغفار.

 எனவே நெருக்கடியை சமாளிக்கும் முதல் வழியாக அல்லாஹ்விடம் இஸ்திக்பார் தேடுவோம். குறிப்பாக இந்த ரமலானில்.

 கொரோனா யாருக்கு வருகிறது எப்படி வருகிறது வந்து என்னமாதிரி ஆட்டம் போடுகிறது என்பதை எப்படியும் யூகிக்க முடியவில்லை.

யார் தப்பிக்கிறார் யார் சிக்குகிறார் எதுவும் புரியவில்லை

ஆரோக்கியத்தை பேணுகிற நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு இறந்து போனார்.

 எனவே எல்லாவற்றையும் அறிந்த அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருவோம்.

நாமும் மீளுவோம் இந்த உலகமும் மீளட்டும்.

இரண்டாவது தர்மம். –

நெருக்கடியான நேரத்தில் தான தர்மங்களை அதிகம் செய்வது .நம்மைக் காப்பாற்றும் என்பது மட்டுமல்ல மக்களை காப்பாற்றும்

நரகத்தில் அதிகமாக பெண்க்லை பார்த்தாக கூறிய பெருமானார் அடுத்துச் சொன்ன அறிவுரை

عن رسولِ الله صلى الله عليه وسلم أنه قال: (( «يا معشرَ النساءِ، تصدَّقْنَ وأكثِرْنَ الاستغفار

கொரோனா பரவி மருத்துவ மனைகளில் தட்டுப்பாடு மயானங்களில் தட்டுப்பாடு என சூழல் கடினமாகிவருகிற நிலையில் பலரும் தங்களது தயாளத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

ஒரு இளைஞர் தனது காரை விற்று 24 இலட்சரூபாய்க்கு ஆக்ஸிஜன் வாங்கி விநியோகித்திருக்கிறார்.

டாடா நிறுவனம் பல கோடி ரூபாய்களுக்கு வெளிநாட்டிலிருந்து விமானம் வழியாக கண்டெய்னர்கள் மூலம் ஆகிஸிஜன்களை தருவித்து தேவையான மாநிலங்களுக்கு அனுப்ப இருக்கிறது.

இன்றைய நெருக்கடிகளை சமாளிக்க தாராள தரமங்களுக்கு தயாராகவேண்டியதும் அவசியமாகும்.

மூன்றாவது பொதுச்சேவைகள்

தீன் என்றாலே பிறருக்கு நன்மை நாடுதல் என்றார்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்

கொரோனா நெருக்கடியின் சூழலில் மக்கள் தம்மால் இயன்ற பொது நலக் காரியங்களில் ஈடுபட வேண்டும்

·         தொற்று பாதித்தவர்களுக்கு தைரியம் கூறுதல்

·         சரியான மருத்துவ உதவி கிடைக்க ஏற்பாடு செய்தல்

·         உறவினர்களை தேற்றுதல்

·         இறந்தவர்களை அடக்கம் செய்தல்

·         பீதியையும் வதந்திகளை பரப்பி மக்களை பதட்டமடைய செய்யாம இருப்பது.  

·         தெரியாத செய்திகளை பேசாமல் இருத்தல். தெரியாத ஆலோசனைகளை தவிர்த்தல்

இது போன்ற நற்காரியங்களில் ஒரு முஃமின் ஈடுபடாமல் இருக்க முடியாது.

ஏனெனில் மக்களுக்கு இடையூறளிக்கிற முட்களை அப்புறப்படுத்துவது ஈமானின் மிக அடிப்படையானது என்றாற்கள் பெருமானார் (ஸல்) அவர்கள்

நான்காவது எச்சரிக்கைகளை கடைபிடித்தல்

நோய்த்தொற்றின் வேகம் பெருகிவருகிறது.

அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

மற்ற மாநிலங்களில் மருத்துவமனைகளில் காணப்படுகிற அளவு அவலம் தமிழகத்தில் இல்லை

ஏனெனில் இந்தியாவில் அதிக படுக்கைகளை கொண்ட மருத்துவ மனைகளில் 8 ல்  6 தமிழகத்தில் இருக்கிறது. என்றபோதும் அதுவும் நிரம்பி வழிகிறது என்று இன்றைய செய்திகள் கூறுகின்றன.நேற்று புதிதாக 12 ஆயிரம் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

அரசு மருத்துவ மனைகளை நம்பிச் செல்வதிலும் பெரிய தயக்கம் இருக்கிறது.

தனியார் மருத்துவ மனைகளுக்கு காசு கொடுக்க எல்லோராலும் முடியாது.

காசு கொடுத்தால் கூட சேர்த்துக் கொள்வதற்கு இப்போது தனியார் மருத்துவ மனைகளிலும் கூட இடம் கிடையாது.

எனவே நோய்த்தொற்று ஏற்பட்டு விடாதவமாரு நம்மை பாதுகாத்துக் கொள்ள மிக கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.

முகக்கவசம் அணிவோம்.

கைகளை அடிக்கடி சுத்தம் செய்வோம்

கண் முக்கு வாயை அடிக்கடி தொடுவதை தவிர்க்கவும்.

எதையும் தொடுகிற போது எச்சரிக்கையாக இருப்போம். சானிட்டைசர் பயன்படுத்துவோம்.

தேவையற்ற இடங்களுக்கு கூட்டங்களுக்கு செல்வதை தவிர்ப்போம்.

முதியவர்கள் நோயாளிகள் சிறுவர்களை பாதுகாப்போம். வீட்டிலேயே சுத்தமாக வைத்திருப்போம்.

நோய் அறிகுறி இருப்பவர்கள் பாதுகாப்பாக ஒதுங்கி இருப்போம். பள்ளிவாசல் போன்ற பொது இடங்களுக்கு வருவதை தவிர்ப்போம்.

பொதுவாக எல்லா இடத்திலும் சுத்தம் சுகாதாரத்தை கடைபிடிப்போம்.

அமெரிக்காவைச் சார்ந்த நியூஸ்வீக் பத்ரிக்கை கோரோனாவை தடுப்பதற்கான சக்தி தொழுகைக்கு இருக்கிறதா என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்த்து. அதில் இது மாதிரியான ஆட்கொல்லி நோய்களைப் பற்றி எதுவும் அறியாத 1300 வருடங்களுக்கு முன் முஹம்மது நபி சுத்தம் குறித்து சமூகத்திற்கு அறிவுறுத்தியுள்ள செய்திகள் ஆச்சரியமானவை என்று குறிப்பிட்டு விட்டு சில நபிமொழிகளை குறிப்பிட்டிருக்கிறது.

النظافة من الإيمان"

ـ "إذا استيقظ أحدكم من نومه، فلا يغمس يده في الإناء حتى يغسلها ثلاثا، فإنه لا يدري أين باتت يده".

ـ "بركة الطعام الوضوء قبله، والوضوء بعده".

 تداووا، فإن الله عز وجل لم يضع داء إلا وضع له دواء، إلا الهرم.

 

அரசு மற்றும் மருத்துவர்கள் கூறும் எச்சரிக்கைகளை மீறக்கூடாது. அதுவும் முக்கியமான கவனிக்கத்தக்கதாகும்.

அல்லாஹ் நம்மையும் இந்த உலகையும் கொரோனா தொற்றிலிரிந்து பாதுகாத்தருள்வானாக! நமது ஆட்சியாளர்களை அதிகாரிகளை மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களாக ஆக்கியருள்வானாக!

 

No comments:

Post a Comment