கடந்த மார்ச் இறுதியிலிருந்து பொதுமக்கள் கூட தடை செய்யப் பட்டிருந்த பள்ளிவாசல்கள் இப்போது சில மாவட்டங்களில் திறக்க அனுமதிக்கப் பட்டிருக்கின்றன.
அல்ஹம்து லில்லாஹ்.
நேற்று 819 பேர் இந்தியாவில் கொரோனோ தொற்றினால்
இறந்துள்ளார்கள். இதுவே ஏப்ரல் மாதத்திற்கு பிந்திய மிக குறைந்த அளவாகும்.
அல்லாஹ் இந்த கொடுமையான தொற்றிலிருர்ந்து
முற்றிலுமாக நம்மையும் உலக மக்களையும் காத்தருள்வானாக!
தடுப்பூசி போட்டுக் கொள்வதே பாதுகாப்பானது
என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது. அடுத்து வருகிற நாட்களில் தடுப்பூசி போட்டிருந்தால்
மட்டுமே சில அனுமதிகள் கிடைக்கும் என்ற சூழலில் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதில் அக்கறை
செலுத்த வேண்டும். ( மஸ்ஜிதுன்னபவீ மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசல்களில் தடுப்பூசி போட்டிருப்பவர்கள்
மட்டுமே அனுமதிக்கப் படுகிறார்கள். மஸ்ஜிதுன்னபவீ வாசலில் தடுப்பூசி போட்ட்தற்கான சான்றிதழை
காட்டினால் மட்டுமே உள்ளே அனுமதிக்கிறார்கள். மஸ்ஜிதுல் ஹராமில் தடுப்பூசி போட்டுக்
கொண்டு பதிவு செய்தவர்களை வரிசையாக அனுமதிக்கிறார்கள்.)
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் சில நாட்கள்
கவனகாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தடுப்பூசியின் விளைவாக
சிலருக்கு பிளட் க்ளாட்டிங்க் என்ற இரத்தம் உறைதல் ஏற்படலாம். அதனால் மாரடைப்பு ஏற்பட
வாய்ப்புண்டு என்றாலும் மிகச் சிலருக்கு மட்டுமே இந்த விளைவுகள் ஏற்படும் என்று மருத்துவர்கள்
அறிவுறுட்த்துவதாலும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பலர் ஆரோக்கியமாகவே இருப்பதாலும்
தடுப்பூசி போட்டுக் கொண்டு ஒரு சில நாட்கள் கவனகாக இருக்க வேண்டும். முன்னரே வேறு நோய்களுக்கு
ஆட்பட்டிருப்பவர்கள் தங்களது மருத்துவரின் ஆலோசனையை பெற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
தடுப்பூசிக்கு எதிரான கருத்துக்களை ஒதுக்கித்
தள்ளுமாறு இஸ்லாமிய அறிஞர்கள் மக்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
பிரபல இஸ்லாமிய அறிஞர் சேக் முஹம்மது தாஹிர்
அல் காதிரி சில சமூக ஊடகங்களிப் பரப்பப்படும் பொய்யான தகவல்களை செவியேற்க வேண்டாம்
என்று மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சோதனையான காலத்தில் உலகம் முழுவதிலும்
மனிதர் உயிர்களை பாதுகாப்பதிலும் நலிநத மக்களுக்கு உதவுவதிலும் முன்னணியில் இருக்கிற
முஸ்லிம்கள் தங்களது உயிர்களை பாதுகாத்துக் கொள்வதிலும் முன்னிற்குமாறு அவர் கூறினார்.
At the start of the pandemic, Muslims around the world were
among those in the forefront. They put their maximum efforts into saving lives,
providing people with food and every kind of necessary support. In the same
way, they should come forward now – அரப்
நியூஸ் 20.01.2021)
அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை கொண்டு
பதட்டமடையாமல் அதே நேரத்தில் எச்சரிக்கைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுவது
அனுமதிக்கப் பட்டது மல்ல. அது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் கடமை என்றும் சில அறிஞர்கள்
கூறுகின்றனர்.
எனவே
Ø வாய்ப்புக் கிடைக்கும் போது தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்
Ø தடுப்பூசிக்கு பிறகு சில நாட்கள் எச்சரிக்கையாக இருங்கள்
Ø இணை நோய்கள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்
தடுப்பூசியை அனுமதிக்கும் விசயத்திலும்
அவற்றி விநியோகிக்கும் விசயத்தில் ஒன்றிய அரசு தொடர்ந்து மக்கள் விரோதப் போக்கோடு நடந்து
வருகிறது.
ஒன்றிய அரசு பாரபட்ச மில்லாமல் மக்களுக்கான
தடுப்பூசிகள் விலையின்றி கிடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்.
قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ ۛ
أَرْبَعِينَ سَنَةً ۛ يَتِيهُونَ فِى ٱلْأَرْضِ ۚ فَلَا تَأْسَ عَلَى ٱلْقَوْمِ
ٱلْفَٰسِقِينَ
காவலர்கள் இல்லாமல், கம்பிகள் இல்லாமல்,
தடுப்புச் சுவர்கள் இல்லாமல் யூதர்களை 40 ஆண்டுகள் தீஹ் மைதானத்தில் சிறை வைத்த அல்லாஹ்
அதே போல் யுத்தங்களோ இயற்கை சீற்றங்களோ வேறு வகையான நெருக்கடிகளோ எதுவுமே இல்லாமல்
கண்ணுக்குத் தெரியாத வைரஸின் மூலம் பல மாதங்கள் உலக மக்களை சிறை வைத்தான்.
அப்படு ஒரு சிறையிலிருந்து மீண்டிருப்பது
பாக்கியமாகும்.
இதற்கிடையே தங்களுடைய இன்னுயிரை பறிகொடுத்த
பலர் – தங்களில் ஒருவரை இழந்த பல குடும்பங்களை நாம் கண்முன்னே பார்க்கிறோம்.
அல்லாஹ் அவர்களுக்கு தகுந்த பதிலை தரட்டும்.
நம்மை காப்பற்றிய அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லு வோம்.
ஊரடங்குகள் தளர்த்தப் பட்ட நிலையில் இன்னும்
வழக்கமான செயல்பாடுகளுக்கு திரும்ப வில்லை எனினும் நமக்கு ஒரு புதிய வாழ்வு கிடைத்த
உணர்வு தோன்றுகிறது.
இந்த கொரோனோவுக்கு பிந்தைய வாழ்வை நல்ல
நிய்யத்தோடு தொடங்குவோம்.
நமது மார்க்கம் நிய்யத்திற்கு அதிக முக்கியத்துவம்
அளித்திருக்கிறது.
عن عُمَرَ بْن الْخَطَّابِ - رَضِيَ اللَّهُ عَنْهُ- قَالَ:
سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ:
«إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى،
فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ
وَرَسُولِهِ، وَمَنْ كَانَتْ هِجْرَتُهُ لدُنْيَا يُصِيبُهَا أَوْ امْرَأَةٍ
يَنْكِحُهَا فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»، (أخرجه الشيخان
(இமாம் புகாரி ரஹ் அவர்கள் தனது
மகத்தான பெரு நூலை இந்த ஹதீஸை கொண்டுதான் தொடங்கியிருக்கீறார்கள் )
நாம் நமது புதிய வாழ்வை இந்த ஹதீஸை கொண்டு
தொடங்குவோம்.
இனி வரும் நாட்களைப் பற்றிய நமது நிய்யத்
- எண்ணம் நல்லதாக இருக்கட்டும்.
நிம்மதி கிடைக்கும் - விடிவு பிறக்கும் - சிரமங்கள் தீரும் –
நம்மில் சிலருக்கு ஏராளமான கேள்விகள் இருக்கலாம்.
கடைக்கு வாடகை எப்படி கொடுப்பேன். தவனைகளை
எப்படிக் கட்டுவேன். தொழிலாளர்களுக்கு சமபளம் எப்படி கொடுப்பேன். பிள்ளைகளின் படிப்புக்கு
எப்படி பணம் கட்டுவேன். எப்போது நான் விரும்பும் காரியங்கள் நடக்கும். என ஏராளமான கேள்விகள்
நம்முன் நிற்கலாம். சிலநேரங்களில் இது போன்ற கேள்விகள் திகைப்பை தரலாம்.
எல்லாம் நல்ல படி நடக்கும் வாழ்வு சிறக்கும்
என்று நாம் நல்லேண்ணம் கொள்வோம்.
மனித எண்ணத்திற்கு இஸ்லாம் அதிக முக்கியத்துவம்
அளித்திருக்கிறது.
ஒரு புதிய இட்த்தில் தொழுபவர் கிப்லாவின்
திசையை அறிய முடியாவிட்டால் அவரது எண்ணத்தில் எத்திசை கிப்லா என்று தோன்றுகிறதோ அதை
நோக்கி அவர் தொழுலாம் . தொழுகை செல்லுபடியாகும். தொழுத பிறகு முன்னோக்கிய திசை தவறு
என்று தெரிய வந்தாலும் அதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஒரு ரக் அத் தை ஒரு திசையில்
தொழுத பிறகு கிப்லா எதிர் திசையில் இருக்கிறது என்ற எண்ணம் அவருக்கு வருமானால் இரண்டாம்
ரகாஅத்தை அவர் எதிர் திசை நோக்கி தொழலாம். அது செல்லுபடியாகும்.
அதே நேரத்தில் ஒரு தனது சரக்குகள் பாதுகாப்பாக
இருக்கிற தா என்று பார்ப்பதற்காக திரும்புவார் எனில் அவரது தொழுகை முறிந்து விடும்.
திருப்பம் ஒன்றுதான் அது எந்த எண்ணத்தில்
அமைந்த்து என்பது முக்கியமானது.
எண்ணத்தில் ஏற்படுகிற வித்தியாசம் நற்கூலியிலும்
ஏற்படும்.
ஒரு செயல் வணக்கமாக மாறுவது நமது எண்ணத்தை
பொறுத்தே.
நாம் எல்லோரும் இரவில் வேறு ஆடை மாற்றிக்
கொள்கிறோம். இது வழக்கம் என நாம் செய்தால் அது ஒரு சாதாரண செயலே . மாறாக முஹம்மது நபி
(ஸல்) அவர்கள் உறக்கத்திற்கு என்று ஒரு ஆடை வைத்திருந்தார்கள் அதனால் நானும் அணிகிறேன்
என்று செய்தால் அது சுன்னத்தைப் பின்பற்றிய வணக்கமாகும்.
தினமும் பல் விளக்குகிறோம். இது முஹம்மது
நபியின் சுன்னத்து என்று எண்ணிக் கொண்டு செய்தால் அது சுன்னத்தாகிவிடும்.
தினமும் எழுந்த்தும் பைபை திறந்து கைகளை
கழுவுவோம். படுக்கையிலிருந்து எழுந்த்தும் கைகளை மணிக்கட்டு வரை கழுவுங்கள் என்று பெருமானார்
சொன்னார்கள் என்று எண்ணிச் செய்தால் அந்த பைப்பை திருப்பியது கூட வணக்கமாகிவிடும்.
எண்ணத்திற்கேற்ப செயல்கள் மதிப்புறும்.
உமர் ரலி கொண்டு வந்தது அபூபக்கர் ரலி
கொண்டு வந்த்தை விட அதிகம் தான் என்றாலும்…
عن عمر رضي الله عنه قال: "أمرنا رسول الله -
صلى الله عليه وسلم - أن نتصدق، ووافق ذلك عندي مالاً، فقلت: اليوم أسبق أبا بكر
إن سبقته يومًا، قال: فجئت بنصف مالي.. فقال رسول الله - صلى الله عليه وسلم - :
ما أبقيت لأهلك؟) قلت: مثله.. وأتى أبو بكر بكل ما عنده.. فقال: يا أبا بكر؟ ما
أبقيت لأهلك؟، فقال: أبقيت لهم الله ورسوله، قلت: لا أسبقه إلى شيء أبدًا"،
رواه الترمذي، وأبو داود.
சில பெரிய செயல்கள் எண்ணம் சரியில்லாத
போது சிறுமையுற்றுவிடும்.
قال عبد الله بن المبارك : رُبَّ عمل صغير تعظمه النية، ورب عمل كبير
تصغره النية
நாம் இந்த நெருக்கடி காலத்தில் பலவற்றையும்
பார்த்தோம்.
விளம்பரத்திற்காக பெரிய காரியங்களை
செய்தவர்களுக்கு உரிய மதிப்பு கிடைக்கவில்லை. மக்களுக்காக என்று சிறிதாக நற்காரியம்
செய்தவர்கள் பெரும் புகழ் பெற்றார்கள்.
நல்ல எண்ணம் நமக்கு சிறந்த நற்கூலிகளை
தரக்கூடியது மட்டுமல்ல. நமது வாழ்வை எல்லா நிலையிலும் சிறப்பிக்கக் கூடியது
இனிவரும் நாட்களை சிறப்பான எண்ணங்களை கொண்டு
தொடங்குவோம்.
எப்படிப் பட்ட எண்ணங்கள்
1. என்ன தான் இந்த உலகம் உல்லாசமாக தெரிந்தாலும் கொஞ்சம் ஆகிஸிஜன்
குறைந்தால் அவ்வளவுதான். நமது பிரதான இலக்கு
மறுமையாக இருக்கட்டும்.
وَالْآخِرَةُ
خَيْرٌ وَأَبْقَىٰ
2.
நல்ல வாழ்கையை எப்படி முக்கியமோ நல்ல
மரணமும் அதே அளவு முக்கியமானது. கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை உரிய முறையில் அடக்கம்
செய்ய முடியவில்லை என்பதே உண்மை. மய்யித்தின் முகத்தை கிப்லாவை நோக்கி திருப்பி வைக்க
வேண்டும். ஒரு வேளை அதை மறந்து அடக்கம் செய்து விட்டால் கப்ரை தோண்டி கிப்லாவை நோக்கி
முகத்தை திருப்பி அடக்கம் செய்ய வேண்டும் என்ற அளவில் சட்டம் இருக்க அதெற்கெல்லாம்
சாத்தியமே இல்லாமல் போனது. சில பேர் மட்டுமே ஜனாஸா தொழ முடிந்த்து. வாழ்வையும் மரணத்தையும்
தருபவன் அல்லாஹ் மட்டுமே. யா அல்லாஹ் எனது மரணத்தை நல்ல முறையிலாக்கு என்று பிரார்த்திக்காத
முஸ்லிம் இருக்க முடியாது. அல்லாஹ்வின் ஆற்றல் மரணத்தின் நிச்சயம் ஆகிய இயல்புகளை உணர்ந்து
வாழ்வேன் என்று எண்ணம் கொள்வோம்.
3. தேவையற்ற
செலவுகள் பல குறைந்தன. அதே போல சேமிப்பின் தேவையும் புரிந்தது. எனவே இனி வரும் நாட்களில்
தேவைக்கு செலவு செய்ய எண்ணம் கொள்வோம்.
4. ஆடம்பரம்
தவிர்ப்போம். பல திருமணங்கள் விழாக்கள் ஆடம்பரம் இன்றி நடந்தன . அதனால் மகிழ்ச்சிக்கு
எந்தக் குறையும் வரவில்லை. ஒரு திருமணத்திற்கு இத்தனை பேரை கூப்பிட்டால் போதும் என்று
முடிவெடுத்தோம். போனில் அழைத்தால் போதும் என்று திருப்தியடைந்தோம். பெரிய பெரிய அழைப்பிதழ்கள்
கடந்த இரண்டுமாதங்களாக வரவில்லை.
5. சக
மக்களுக்கு உதவி செய்து வாழ எண்ணம் கொள்வோம். மலேசியாவை சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.
வாரத்திற்கு இரண்டு தடவையாவது காஸ்ட்லியாலான உணவகத்திற்கு செல்வோம். பல நூறு வெள்ளிகள்
செலவாகும். இந்த கொரோனோ காலத்தில் அந்தப் பணத்தை பல ஏழைகளுக்கு கொடுத்தோம். இனி கொரோனா
முடிந்த்தும் காஸ்ட்லியான உணவை வாரத்திற்கு ஒன்று என்று வைத்துக் கொண்டு மற்றொரு நாளுக்கான
செலவை ஒரு ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுப்பது என முடிவு செய்தோம்.
6. நம்மில்
சில அதுவரை கிடைத்திருக்கிற வாய்ப்பை குறை பேசிக் கொண்டிருந்தோம். ஊரடங்கு காலம் நமக்கு கிடைத்த வாய்ப்புக்களின் மரியாதையை
புரிய வைத்து விட்டது. வாழ்கையின் மரியாதையை காற்றின் மரியாதையை சுதந்திரத்தின் மரியாதையை
ஆரோக்கியத்தின் மரியாதையை நமக்கு புரிய வைத்திருக்கிறது. நமக்கு கிடைத்திருக்கிற வாய்ப்புக்களில்
நல்லெண்ணம் கொள்வோம்.
வள்ளுவன் சொன்னான்.
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து
உயர்வாகவே நினைப்போம். எண்ணியது நடக்க வில்லை எனினும் அந்த உயர்ந்த எண்ணத்தை தள்ளிவிடவேண்டாம்.
கொரோனாவுக்குப் பிந்தைய காலத்தை நல்லெண்ணத்தோடு எதிர் கொள்வோம். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
.
No comments:
Post a Comment