வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, July 15, 2021

குர்பானியின் பலன்கள். அதை அடையும் வழிமுறைகள்.

  إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (2إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (3)

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று நிறைவேற்றப்படும் சிறப்பான வணக்கம் குர்பானி.

عن عائشة أن رسول الله صلى اللهم عليه وسلم قال ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم إنها لتأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وأن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا ترمذي

 ·عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَ قَالَ أَصْحَابُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا رَسُولَ اللَّهِ مَا هَذِهِ الْأَضَاحِيُّ قَالَ سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ قَالُوا فَمَا لَنَا فِيهَا يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ قَالُوا فَالصُّوفُ يَا رَسُولَ اللَّهِ قَالَ بِكُلِّ شَعَرَةٍ مِنْ الصُّوفِ حَسَنَةٌ  إبن ماجة 

 குர்பானி உலகின் தொன்மையான ஒரு வணக்கம்.

 وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ قَالَ لَأَقْتُلَنَّكَ ۖ قَالَ إِنَّمَا يَتَقَبَّلُ اللَّهُ مِنَ الْمُتَّقِينَ (27

 ஆதம் அலை எப்படி வணங்கினார்கள். நோன்பு வைத்தார்கள் என்று தெரியாது.

ஆதம் அலை அவர்களிலிருந்து இன்று வரை வரலாற்றில் அறியப்பட்ட தொன்மையான வணக்கம் குர்பானி

இந்த தொன்மையான வணக்கம் ஒரு சத்தியத்தை அடையாளப்படுத்துவதற்காக அறிமுகப் படுத்தப் பட்டது.

சத்தியத்தையும் அசத்தியத்தையும் வேறுபடுத்திக் காட்டிய ஒரு வணக்கம்.

குர்பானியின் முக்கியத்துவம்

 مَنْ وَجَد سَعَةً فلم يُضَحِّ فلا يَقْرَبَنَّ مُصَلاَّنا الراويأبو هريرة | مسند أحمد

9 வருடங்கள் மதீனாவில் பெருமானார் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள்.

فروى الإمامان أحمد والترمذي عَنِ ابْنِ عُمَرَ قَالَ: " أَقَامَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالمَدِينَةِ عَشْرَ سِنِينَ، يُضَحِّي كُلَّ سَنَةٍ

 ஹஜ்ஜத்துல் வதாவின் போது 100 ஹத்யு கொடுத்தார்கள். 63 ஐ தன் கைப்பட அறுத்தார்கள். மீதியை அலி ரலி யிடம் ஒப்படைத்தார்கள்.

  فقد روى الإمام أحمد بسند صحيح حديثَ جابر في حجة الوداع وفيهوكان جماعة الهدي الذي أتى به النبي صلى الله عليه وسلم والذي أتي به عَلِيٌّ مائةً، فنحر رسول الله صلى الله عليه وسلم بيده ثلاثة وستين، وأعطى عليا فنحر ما غبر وأشركه في هديه

 பெருமானார் (ஸல்) எப்படி தேர்ந்தெடுத்தார்கள். யாருக்காக கொடுத்தார்கள்.

ففي الحديث الثابت في بخاري ومسلم أنه صلى الله عليه وسلم ضحى بكبشين أملحين أقرنين،

الأملح أنه الأبيض الذي يشوبه شيء من السواد

الراويعائشة  المصدرصحيح ابن ماجه

كانَ إذا أرادَ أن يضحِّيَ، اشتَرى كبشينِ عظيمينِ، سَمينينِ، أقرَنَيْنِ، أملَحينِ موجوءَينِ، فذبحَ أحدَهُما عن أمَّتِهِ، لمن شَهِدَ للَّهِ، بالتَّوحيدِ، وشَهِدَ لَهُ بالبلاغِ، وذبحَ الآخرَ عن محمَّدٍ، وعن آلِ محمَّدٍ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ

 குர்பானி யார் கொடுக்க வேண்டும் ?

.கடன் மற்ற செலவுகள் போக ஹஜ்ஜுஒ பெருநாளின் போது 40 ஆயிரம் ரூபாயுக்கு மேல் பணம் பொருள் குடியிருக்கும் வீடு அல்லாத நிலம் வைத்திருப்பவர்கள் குர்பானியை நிறைவேற்ற வேண்டும்.

வசதியற்றவர்கள் கடன் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

 பெருமானார் (ஸல்) அவர்கள் கொடுத்த உள்ஹிய்யாவின் நன்மை உம்மத்தில் ஒவ்வொருவருக்கும் உண்டு.

எனவே கொடுக்க இயலாதவர்கள் வருத்தப் பட வேண்டிய அவசியம் இல்லை.

 எந்த எண்னத்தில் குர்பானி கொடுக்க வேண்டும் ؟

 நம்மிடம் இருப்பவை எல்லாம் அல்லாஹ் கொடுத்தவை. அல்லாஹ் கொடுத்த வற்றை அல்லாஹ் கூறிய வழியில் பயன்படுத்த வேண்டும். என்ற குர்பானியின் தத்துவத்தை உணர்ந்து நிறைவேற வேண்டும்.

لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَٰكِن يَنَالُهُ التَّقْوَىٰ مِنكُمْ ۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ ۗ وَبَشِّرِ الْمُحْسِنِينَ

   كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَىٰ مَا هَدَاكُمْ

என்ற வாசகம் இது அல்லாஹ் மற்றவர்களுக்கு தராமல் உங்களுக்கு கொடுத்த வாய்ப்பு என்ற உணர்வுடன் செயல் பட நம்மை தூண்டுகிறது.

இதில் குர்பாணி பிராணியின் அழகு வலிவு எதுவும் பிரதானமல்ல. எனவே புகைப்படங்களை பதிவேற்றுவதை தவிர்க்கவும்.  

ஏன் குர்பானி கொடுக்க வேண்டும். அதனால் என்ன நன்மை ?  

 திருக்குர் ஆனின் மிகச் சிறிய அத்தியாங்களில் ஒன்று

إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (2إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (3)

பெருமானார் (ஸல்) அவர்களுக்கு தரப்பட்ட அனைத்து நிஃமத்துக்களுக்கு பதிலாகவும் குர்பானி கொடுக்க அல்லாஹ் உத்தரவிடுகிறான்.

நமக்கு தரப்பட்டிருக்கிறஉயிர் உடமைகள்நிம்மதிஅந்தஸ்துசெல்வம்ஆரோக்கியம்போன்ற அனைத்து நிஃமத்துக்களுக்கும் நன்றி செலுத்தும் ஒரு ஏற்பாடுகுர்பானி

குர்பானி கொடுப்பதால் சந்த்திகள் வளரும்.

துல்ஹஜ் 10 நாளுடைய குர்பானிக்கு காரணம் இபுறாகீம் அலை ஆவார்.

அந்த குர்பானி அவருடைய சந்த்தியை காப்பாற்றியது.

{وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَىٰ رَبِّي سَيَهْدِينِ (99) رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ (100) فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ (101) فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ (102) فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ (103) وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ (104) قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا ۚ إِنَّا كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (105) إِنَّ هَٰذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ (106) وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ (107) وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ (108) سَلَامٌ عَلَىٰ إِبْرَاهِيمَ (109) كَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (110) إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ (111) وَبَشَّرْنَاهُ بِإِسْحَاقَ نَبِيًّا مِّنَ الصَّالِحِينَ (112) وَبَارَكْنَا عَلَيْهِ وَعَلَىٰ إِسْحَاقَ ۚ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِ مُبِينٌ (113)} [الصافات]

 இந்த ஆயத்து குர்பானியினால் இபுறாகீம் அலை நிம்மதி பெற்றார்கள் சந்த்திகளை பெற்றார்கள் என்கிறது.

எனவே குர்பானி கொடுத்தால்

1.   சோதனைகள் வேதனைகள் அகலும்.

2.   சந்த்திகள் பெரும்

நல்ல நிய்யத்தோடு குர்பானியை நிறைவேற்றுகிற அனைவருக்கும் இந்த நன்மை கிடைக்கும்.

 மெட்டீரியலிஸம் தவிர்க்கப் பட வேண்டும்.

 எனக்கு குர்பான் கொடுக்க பிடிக்கவில்லை. அல்லது அந்தப் பணத்தை இன்னொரு காரியத்திற்கு செலவு செய்தால் என்ன என்ற கேள்விகள் இஸ்லாமிற்கு புறம்பானவையாகும்.

 பெருமானார் (ஸல்) அவர்கள் நிறைவேற்றினார்கள் என்ற பிறகு இப்படி கூறுவது பொருத்தமா என்பதை சிந்திக்க வேண்டும்.  இது சுன்னத்து. ஹனபி மத்ஹபில் வாஜிபு. எனவே வசதி வாய்ப்பை பெற்றவர்கள் இந்த சுன்னத்தை நிராகரிக்க கூடாது. தேவையற்ற வாதங்களில் இறங்கவும் வேண்டாம்,

 அலட்சியம் தவிர்க்கப் பட வேண்டும்.

பக்திப்பூர்வமாக நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வணக்கம் குர்பானி.

ஹஜ்ஜின் போதும் மற்ற சமயங்களிலும் குர்பானி எனும் வணக்கத்தை பெருமானார் (ஸல்) நேரடியாக நிறைவேற்றினார்கள். நாம் இப்ப்து அதை ஒரு ஆன்லைன் பேமண்ட் அனுப்பும் ஒரு சடங்காக ஆக்கி விடக் கூடாது.

கூட்டுக் குர்பானி ஒரு மோசடி வர்த்தகமாக மாறிவருகிறது.

காசு கொடுத்துட்டா போதும் என்ற எண்ணம் தான் மகத்தான ஒரு வணக்கத்தை மோசடி வர்த்தகமாக மாற்றி வருகிறது.

சமீபத்தில் சென்னையில் ஒரு முஸ்லிம் அமைப்பின் இரண்டு போட்டிக் குழுக்களுக்கிடையே நடைபெற்ற கூட்டுக் குர்பானிக்கான விளம்பரத்தில் தொடங்கியது என்பதை நினைவில் வையுங்கள்.

கூட்டு சேருகிறீர்களா ?

குர்பானி பிராணியை பாருங்கள். விலை நிர்ணயம் செய்யுங்கள். அது நிறைவேற்றபடுகிறதா என்பதில் கவனம் செலுத்துங்கள்.

கண்டிப்பாக ஒரு இலாபம் இல்லாமல் யாரும் இந்தப் பணியை செய்வதில்லை. நமக்காக வேலை செய்பவர்கள் அதற்குரிய நன்மையை பெற்றுக் கொள்ளட்டும்.

ஆனால் ஒரு வணக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கார்ப்பரேட் வியாபாரமாக மாறிவருகிறது என்பதை பற்றி நாம் கவலைப்படாமல் இருக்க முடியாது.

நமக்கு அல்லாஹ் கொடுத்த அனைத்து நிஃமத்துக்களுக்கும் நன்றியாக அமைகிற ஒரு வணக்கம். நமது வாழ்வில் நிம்மதியையும் நமது சந்த்திகளில் பரக்கத்தையும் ஏற்படுத்துகிற ஒரு வணக்கம் அலட்சியமாக நிறைவேற்ற

மதரஸாக்களில் மார்க்கம் படிக்கிற மாணவர்களின் உணவுத்தேவைக்காக அல்லது அநாதைகளின் உணவுத்தேவைக்காக என்று தொடங்கப்பட்ட கூட்டு குர்பானி திட்டம் இப்போது அமைப்புக்கள் இயக்கங்களின் வளர்ச்சிக்காக மாறிவருகிறது என்பதையும் நாம் கவனத்தில் வைக்க வேண்டும். அது பல சர்ச்சைகளுக்கும் வழி வகுக்கிறது என்பதையும் நினைவில் வைக்க வேண்டும்.

ஹஜ் மாதிரியான நேரடியாக குர்பானியை நிறைவேற்ற வாய்ப்பு வசதியில்லாத இடங்களில் குர்பானியை பிறரிடம் ஒப்பட்டக்கும் போது அது நிர்பந்தம் என்ற அளவில் ஏற்றுக் கொள்ளத் தகுந்தது. ஏழு நண்பர்கள் சேர்ந்து ஒரு மாட்டை வாங்கி கொள்ள முடியும் என்ற நிலையில் அதற்கு முடிந்த வகையில் முன்னிற்பதே ஒரு வணக்கத்தை நிறைவேற்றும் சரியான அணுகுமுறையாகும். பிராணிகளை பராமரிப்பதற்கும் அறுப்பதற்கும் போதிய வசதி இல்லாத போது அதற்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு தகுந்த கூலியை கொடுத்து நிறைவேற்றிக் கொள்ளாலம்.

குர்பானிக்கு அடுத்து நன்மை சேர்த்துக் கொள்ளும் வழிகள்

அரபா நோன்பு

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ أَيَّامٍ أَحَبُّ إِلَى اللَّهِ أَنْ يُتَعَبَّدَ لَهُ فِيهَا مِنْ عَشْرِ ذِي الْحِجَّةِ يَعْدِلُ صِيَامُ كُلِّ يَوْمٍ مِنْهَا بِصِيَامِ سَنَةٍ وَقِيَامُ كُلِّ لَيْلَةٍ مِنْهَا بِقِيَامِ لَيْلَةِ – الترمذي

 عن أبي قتادة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم عرفة فقال: (يكفر السنة الماضية والسنة القابلة)- رواه مسلم

 அரபா நோன்பு என்பது நமது ஊரில் துல் ஹஜ் 9 அன்று நோன்பு வைப்பதாகும்.

ஹாஜிகள் அரபாவில் கூடும் நாள் அல்ல. ஹாஜிகள் அரபாவில் கூடியிருக்கும் நேரம் ஒவ்வொரு நாட்டின் நிலைக்கும் மாறுபடும். துல் ஹஜ் 9 எனும் போது எந்த மாறுபாடும் இருக்காது.

தக்பீர் முழக்கம்

     துல்ஹஜ் பிறை 9 ன் பஜ்ரு முதல் 13 ன் அஸர்வரை ஜமாத்தாக தனியாக ஆண்கள் பெண்கள் அதாவாக கழாவாக தொழும் அனைவரும் பர்ளு தொழுகைக்குப் பின் தக்பீர் சொல்ல வேண்டு,

·        الشافعية قالوا: التكبير سنة بعد الصلاة المفروضة، سواء صليت جماعة أو لا، وسواء كبر الإمام أم لا؛ وبعد النافلة وصلاة الجنازة، وكذا يسن بعد الفائتة التي تقضي في أيام التكبير، ووقته لغير الحاج من فجر يوم عرفة إلى غروب شمس اليوم الثالث من أيام التشريق-

 பெருநாள் தொழுகை

இன்ஷா அல்லாஹ் இந்த ஆண்டு வருகிற 21 ம் தேதி ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும். கட்ந்த வருடமும் இந்த வருடமும் ஹஜ்ஜிற்கான பாக்கியம் சிலரை தவிர உலகிலுள்ள மற்ற மக்களுக்கு கிடைக்கவில்லை.

இந்த ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நமது வழக்கமான மகிழ்ச்சியோடு நிறைவேற்றும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.

எனினும் சூழ்நிலைக்கேற்ப நாம் கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ள மறக்க வேண்டாம்.

துல்ஹஜ் மாத்த்தின் அனைத்து நன்மைகளையும் அல்லாஹ் நமக்கு தந்தருள்வானாக!

ஆலிம்கள் அனைவருக்கும் ஈது முபாரக்!

சோதனைகள் நீங்கள் மகிழ்ச்சி பொங்க அல்லாஹ் நமது இந்த குர்பானிப் பெருநாளை காரணமாக்கட்டும்.

7 comments:

  1. மாஷா அல்லாஹ் அருமை

    ReplyDelete
  2. Anonymous8:58 PM

    அருமை

    ReplyDelete
  3. தியாகத்தின் வாற்ப்பில் அல்லாஹ் உலமாக்களையும் கபூல் செய்யட்டுமாக ஆமீன் ...بارك الله مع العآفیۃ

    ReplyDelete
  4. மௌலவி. AJ. சீனி முஹ்யுதீன். ஃபைஜானி9:01 PM

    மாஷா அல்லாஹ் அருமையான தகவல்

    ReplyDelete
  5. Masha allah arumaiyaana thagaval

    ReplyDelete
  6. அருமையான பதிவு நன்றி

    ReplyDelete
  7. அருமையான பதிவு நன்றி

    ReplyDelete