நமது பெண்கள் நமது கண்கள்
கண்களைக் காப்பது
போல் நமது பெண்களை பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமை.
இன்றைய உலகின்
எல்லா சமூகங்களையும் பீடித்திருப்பது போல செல்போனில் வீழ்ந்து கிடக்கும் வியாதி நம்முடைய
சமுதாயப் பெண்க்களையும் பீடித்திருக்கிறது. படித்த, வேலைக்குச் செல்கிற- முதிர்ந்த
- தேவைகள் இருக்கிறவர்களுக்கு மட்டும் என்றில்லாமல் வீட்டிலேயே இருக்கிற குடும்பப்
பெண்கள் வயதானவர்கள் கூட இப்போது ஸ்மார்ட் போன் கையில் வைத்திருக்கிறார்கள். மாதந்தோறும்
அவர்களுக்கான டேடா கட்டணத்தை நாம் செலுத்துகிறோம். இப்போது ஆன் லைன் வகுப்புக்கள் வேறு
நடைபெறுவதால் பெற்றோர்களிடம் இருக்கிறதோ இல்லையோ பிள்ளைகளிடம் டேடா வசதியோடு ஸமார்ட்
போன்கள் இருக்கின்றன.
நமது பெண்கள் சில
வருடங்களில் வெறுமே பயன்படுத்திக் கொள்ள மட்டும் போனை பயன்படுத்தினார்கள். அவர்களது
பர்தா உணர்வு பொது வெளியில் அவர்களை முகங்காட்ட விடாமல் தயக்கம் கொள்ளச் செய்து வந்தது.
கடந்த சில வருடங்களாக
தங்கு தடையின்றி செல்போன் நடவடிக்கைகளில் பங்கேற்பதிலும் தாராளமாக ஈடுபடுகிறார்கள்.
வீட்டுக்குள் தானே என்று பார்தாவை துறந்து விட்டு அவர்கள் வீடியோக்கள் போட்டோக்களை
பதிவு செய்து ஆன்லைனில் பதிவேற்றவும் செய்ய ஆரம்பித்தார்கள்.
டிக்டாக் என்ற
செயலி அவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுத்தது.
தங்களது அழகு திறமையை வெளிப்படுத்தும் சிரிப்பு – நடனம் – பாட்டு போன்ற கலைகளை
சிறு வீடியோக்களாக மாற்றி இன்ஸ்டாகிராம் பேஸ்புக் யூடியூப் போன்ற ஊடகங்களில் வெளியிட
ஆரம்பித்தார்கள். குடும்பத்தில் இருப்போரும் நண்பர்களும் அதை உற்சாகப்படுத்தினார்கள்.
இதிலே ஒரு பெரும்
விபத்து சத்தமில்லாமல் நடந்தேறியது வீட்டுக்கு வெளியே பர்தா அணிந்து வரும் பெண்கள்
சமூக ஊடகங்களில் அதை வின்னில் பறக்க விட்டார்கள். இதுவெல்லாம் நமது சமூகத்தின் சம்மதத்துடனேயே
நடந்து வந்தது வருகிறது.
அருமையானவர்களே! பர்தா மீறப்படும் போது வெளியுலகில் என்ன தீய விளைவுகளை
சந்திக்க வேண்டியது வருமோ அதே தீய விளைவுகள் ஆன்லைன் உலகத்திலும் ஏற்படும். இன்னும்
சொல்வதானால் வெளியுலகில் தாமதமாக ஏற்படும் என்றால் ஆன்லைன் உலகில் மிகவும் வேகமாக ஏற்படும்
என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு நிகழு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னாள்
இந்தியாவில் நடந்துள்ளது.
அது குறித்து எச்சரிப்பதற்காகவே
நமது கண்களை பாதுகாப்போம் என்ற இந்த ஜும்ஆ உரை பேசப்படுகிறது.
15 நாட்களுக்கு
முன்னால் Sulli Deals சுல்லி டீல்ஸ்
என்ற ஒரு இணையப் பக்கம்
உலாவ விடப்பட்டது. கிட்ஹப் GitHub
என்ற கம்பெணியின் வழியாக அது வெளிவந்தது.
அந்த இணையப் பக்கத்தில் deals of the day
இன்றைய ஏலம் என்று தலைப்பிட்டு அழகான பல நூற்றுக்கணக்கான
பெண்களின் புகைப் படம் வெளியாகி
இருந்தது. ஆபாச அழைப்புக்களுக்கு பயன்படுத்தப்
படும் இணைய தளம் அது.
அந்த
புகைப்படங்கள அனைத்தும் முஸ்லிம் பெண்களுடையவை.
ஹனா கான் என்ற முஸ்லிம் பெண் விமானிக்கு அவருடை தோழி அனுப்பிய ஒரு டிவீட்டர் செய்தியின் வழியாக இது வெளியுலகிற்கு தெரிய வந்து இனையத்தில் இருக்கும் முஸ்லிம் பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
ஹனா கான் அந்த இனைய தளத்திற்கு சென்று பார்த்த போது அவருடைய போட்டோவையும் பெயரையும் பதிவிட்டு “சுல்லி இன்றைய ஏலத்திலிருக்கும் சுல்லி ” என்று தலைப்புச் செய்தி வெளியிட்டிருந்தனர்.
அதிர்ச்சியும்
கூச்சமும் அடைந்த ஹனா கான் சொல்கிறார். (பிபிசி)
I counted 83 names. There
could be more," she told the BBC. "They'd taken my photo from Twitter
and it had my user name. This app was running for 20 days and we didn't even
know about it. It sent chills down my spine."
நான் 83 பேருடைய பெயர்களை அதில் எண்ணினேன். இன்னும் அதிகம் இருக்கலாம். எனது போட்டோவையும் பெயரையும் டிவிட்டர் பக்கத்திலிருந்து எடுத்துள்ளனர். இந்த செயலி 20 நாட்களாக நடப்பில் இருந்திருக்கிறது. ஆனால் இதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை. அந்த தளத்தில் என் புகைப்படத்தை பார்த்ததும் என் முதுகந்தண்டு சில்லிட்டு விட்டது.
பிபிசி பல பெண்களுடைய கருத்துக்களையும் பதிவு செய்திருக்கிறது. ஆனால் இது ஒன்று போதுமானது.
யார் என்று கவனியுங்கள் – முஸ்லிம் பெண் விமானி (Hana Khan, a commercial pilot )
படித்து ஒரு உயர்ந்த
வேலைக்குச் சென்றுள்ள விழிப்புணர்வு கொண்ட பெண்மணிக்கு இந்த அனுபவம் நடந்துள்ளது,
இதில் பல குடும்ப்ப்
பெண்கள் உயர்ந்த நிலையில் பணியாற்றும் பெண்களுடைய புகைப்படங்களும் இடம் பெறவே தில்லி
காவல் துறையில் சில முஸ்லிம் பெண்கள் தில்லி காவல்துறையில் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன் பிறகு காவல் துறை விசாரனையில் மட்டும் இறங்கியது. பிரச்சனை உருவானதை அறிந்த்து.
கிட் ஹப் நிறுவனம் அந்த இணையப் பக்கத்தை தடை செய்து விட்டது. காவல் துறை வழக்குப் பதிவு
செய்ததே தவிர யார் மீது நடவடிக்கை எடுக்க வில்லை.
காரணம் என்னவென்றால்
இதன் பின்னணியில் ஆர் எஸ் எஸ் அமைப்பு இருக்கிறது. முஸ்லிம் பெண்களை சுல்லி என்று அழைப்பது
அவர்களது பழக்கம்.
"Sulli"
- a derogatory slang term used by right-wing Hindu trolls for Muslim women. சுல்லி என்ற வார்த்தைக்கு கேவலமான பொருள்.
இந்த தளத்தில்
தங்களது புகைப்படத்தை பார்த்த முஸ்லிம் பெண்கள் வெளிப்படுத்தும் வலிகள் ஏராளம்.
இன்று பல பெண்கள்
படிப்பும் சம்பாத்தியமும் கொடுத்த தைரியத்தில் சமூகத்தை மதிப்பதில்லை. தங்களது வாழ்க்கை
தங்களுடையது என்று முழங்குகிறார்கள். சமூக ஊடங்களில் மிக அலட்சியமாக தங்களை வெளிப்படுத்திக்
கொள்கிறார்கள்.
அப்படிப்பட்ட பெண்களுக்கு
என்ன நடந்த்து என்பதை கேளுங்கள்!
பாதிக்கப்பட்ட
ஒரு பெண் மணி சொல்கிறார்.
No matter how strong
you are, but if your picture and other personal information is made public, it
scares you, it disturbs you," another woman told the BBC Hindi service.
நீங்கள் எவ்வளவு உறுதியானவர் என்பது பிரச்சனை அல்ல. உங்களது புகைப்படமும் தனிப்பட்ட விபரங்களும் பொதுவில் வைக்கப்படும் போது அது உன்னை அச்சுறுத்தும். உனக்கு தொல்லயாகும்.
அருமையானவர்களே ! இந்த செய்தி நமது பெண்களுக்கு சரியாக கொண்டு செல்லப் பட வேண்டும். குறிப்பாக படிக்கிற – வேலையில் இருக்கிற – சுயமரியாதையோடு வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிற – சமூக ஊடகங்களில் சஞ்சரிக்கிற பெண்கள் அனைவருக்கும் இந்த செய்தி கொண்டு செல்லப் பட வேண்டும்.
இதில் வெளிப்படுத்தப் பட்ட நமது பெண்கள் தவறானவர்கள் அல்ல. ஆபாசமாக புகைப்பட்ததையோ வீடியோக்களையோ வெளியிட்டவர்கள் அல்ல. நல்ல உயர்ந்த நிலையில் இருப்பவர்கள்.
இவர்கள் செய்த தவறு என்ன வென்றால்
தங்களுடைய அழகான புகைப்படங்களை டிவிட்டர் வாட்ஸப் பேஸ்புக் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது. டி பி ஆக வைத்தது.
இதற்கே இந்த நிலை என்றால் இன்னும் கொஞ்சம் அதிகமாக வெளிப்பட்டு டிக் டாக் போன்ற நடவடிக்கையில் ஈடுபடும் போது அது என்ன மாதிரி விளைவுக்ளை ஏற்படுத்தக் கூடும் என்பத்த முதலில் நாம் சிந்திக்க வேண்டும். அடுத்து நமது பெண்களுக்கு அழுத்தமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.
இத்தகைய தொல்லைகளிலிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இஸ்லாம் பர்தா என்ற நடை முறையை கொண்டு வந்தது.
நாமும் உணர்ந்து நமது தாய் மார்க்களுக்கும் உணர்த்த வேண்டிய செய்தி இது.
இஸ்லாமிய பர்தா என்பது பெண்களை அடிமைப்படுத்தவோ முடக்கி வைக்கவோ அல்ல. அவர்கள்
தொல்லைக்கு ஆளாகமல் பாதுகாக்கவே!
திருக்குர் ஆன் தெள்வுபடுத்துகிறது.
ا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا (
ஆபத்து தினசரி ஏற்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எல்லோருக்கு ஏற்பட வேண்டும்
என்ற அவசியமும் இல்லை. ஆனால் யாருக்காவது ஏற்பட்டு விட்டால் அதன்பிறகு ஏற்படுகிற விளைவு
மொத்த வாழ்க்கையையும் பாதித்து விடும்.
நமது சமூகத்தில் சற்று முன்பு வரை பெண்கள் ஆண்களின் கண்களில் படாமல் கடந்து
போய்விடுவார்கள், இன்றும் காயல் பட்டினம் போன்ற முஸ்லிம் ஊர்களில் பெண்களுக்கு தனியாக
தெருக்கல் இருக்கின்றன. ஆம்பூர் வாணியம்பாடி வேலூர் போன்ற பெண்களில் அரசாங்கமே கோஷா
பூங்காக்களை அமைத்துக் கொடுத்திருக்கிறது. சென்னையில் கோஷா ஆஸ்பத்திரி இப்போதும் பிரபலமாக
இருக்கிறது. காவல் துறையில் ஆண்கள் முஸ்லிம்களின் வீடுகளுக்கு நுழைவதை கோஷா பெண்கள்
இருக்கிறார்கள் என்று சொல்லி தடுக்க முடியும்.
அது பெண்களின் முன்னேற்றத்தை எந்த வகையிலும் தடுப்பதில்லை.
இஸ்லாமிய வரலாற்றில் பேரறிஞர்களாக மருத்துவர்களாக திறமை மிக்க நிர்வாகிகளாக
கோஷா பெண்கள் திகழ்ந்திருக்கிறார்கள்.
நாம் மிக எச்சரிக்கையாக இருக்கவும் எச்சரிக்கை செய்யவும் ஒரு முக்கிய செய்தி
இது தான்.
தொழுகிற போது முகம் தெரிந்தால் தொழுகை முறியாது என்பது வாஸ்த்தவம், அதன் பொருள்
முகம் அவ்ரத் அல்ல என்பது தான்.
அவ்ரத் என்பது வேறு பர்தா என்பது வேறு
அவரத்தை மறைத்தல் என்பது கால காலமாக இருக்கிறது. இஸ்லாம் ஹிஜ்ரீ 5 ல் அமுல்
படுத்திய சட்டம் பர்தா ஆகும். அவ்ரத்தை மறைத்துக் கொண்ட ஆடைக்கு மேல் அணிகிற பர்தா
ஆகும். அது அவர்களை தீய எண்ணம் கொண்ட அந்நிய ஆண்களின் தொல்லையிலிருந்து அவர்களை பாதுகாக்க
வேண்டும்.
முகத்தை காட்டுவதே ஆபத்தை கொண்டு வரும் என்றால் உடல் முழுக்க மறைத்து விட்டு
முகத்தை காட்டுவது எப்படி பர்தாவின் நோக்கத்தை நிறைவேற்றும் ?
பேஸ்புக்
இன்ஸ்டாகிராம் போன்ற வை புகைப்படங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கிற ஊடகங்களாகும்.
இவற்றில்
முஸ்லிம் சகோதரிகள் தங்களது புகைப்படங்களை பதிவேற்றுவது குறித்து எச்சர்க்கையாக இருக்க
வேண்டும்.
ஒரு புகைப்படம்
நம்மிடம் இருக்கும் வரை தான் பாதுகாப்பானது. ஆன்லைனில் பதிவேற்றி விட்டால் அதை உலகின்
எந்த மூலையிலாதுவது இருக்கிற சைத்தான் தனது தீய நோக்கத்திற்கு அதைப் பயன்படுத்திக்
கொள்ள முடியும்.
وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ
وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ
مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ
زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ
بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ
إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ
نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي
الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ
عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا
يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ
الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (31)
முந்தானை அணிய வேண்டும். இப்போது முந்தானையின் தெருக்கலில் நடமாடுவதும்
அதிகரித்திருக்கிறது.
சபதம் எழ நடக்க வேண்டாம். மறைக்கப்பட வேண்டிய வற்றை அந்நிய் ஆண்களுக்கு
அறியத்தர வேண்டாம்.
இப்படி நடந்தால் அல்லாஹ் திருப்தி அடைவான் என்றல்ல குர் ஆன் கூறுகிறது.
நீங்கள் ஜெயிக்கலாம் என்கிறது.
இது உங்களது வாழ்க்கைக்கான உத்தரவாதம் என்கிறது.
இதை நாம் கவனப்படுத்த வேண்டும்.
சரி இந்த விவகாரத்தை இதை பெண்களுக்கு அல்லவா சொல்ல வேண்டும் என்று நாம் நினைக்கலாம். அந்த பெண்கள் நமது கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் என்பதாலும் அன்பு செல்லம் ஆகியவற்றை கடந்து ஒழுக்கம் பாதுகாப்பு என்ற விசயத்தில் அவர்கள் விசயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்பதாலும் இன்னொருவகையில் பெண்களுக்கான செல்போன்களையும் அவர்களுக்கான டேட்டாக்களையும் நாமே பெரும்பாலும் வாங்கிக் கொடுக்கிறோம் என்பதும் நமது பொறுப்புணர்வை அதிகப்படுத்துகிறது.
இன்னொன்று பெருமானார்
(ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ففي الحديث الصحيح أن النبي صلى الله عليه وسلم
قال: «ثلاثة لا ينظر الله عز وجل إليهم يوم القيامة: العاق لوالديه، والمرأة
المترجلة، والديوث»
அதை படித்த
வேலைக்குச் செல்கிற சோஷியல் மீடியாக்களில் ஈடுபடுகிற விவறமறிந்த நமது பெண்களுக்குச்
சொல்லுங்கள்.
மார்க்கத்தின் உன்னதமான வழிமுறைகளை
கடைபிடித்து வாழ அல்லாஹ் தவ்பீக் செய்வானாக! ஆமீன்.
No comments:
Post a Comment