வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 04, 2021

அவர்கள் சதி செய்கிறார்கள்

 وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال

பொதுவாக இஸ்லாமிற்கு எதிராக சதி செய்கிறவர்கள் காலம் முழுவதும் இருக்கிறார்கள்.

அந்த சதியை அல்லாஹ் வெல்லவிடுவதில்லை.

ஈஸா அலை அவர்களுக்கு எதிராக யூதர்கள் செய்த சதி குறித்தே அல்லாஹ் இப்படிக் கூறுகிறான.

ومكروا ومكر الله والله خير الماكرين 

யூதர்கள் என்ன செய்தார்கள் ?  அல்லாஹ் என்ன செய்தான்?

இப்னு அப்பாஸ் ரலி கருத்து.

குகைக்குள் நுழைந்த ஈஸா அலை அவர்களை அல்லாஹ் வானிற்கு உயர்த்தினான். அவரை காட்டிக் கொடுக்கவும் கொலை செய்யவும் அதே குகைக்குள் நுழைத எதிரியை யூதர்களே கொன்றனர்.

عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ عِيسَى اسْتَقْبَلَ رَهْطًا مِنَ الْيَهُودِ فَلَمَّا رَأَوْهُ قَالُوا: قَدْ جَاءَ السَّاحِرُ ابْنُ السَّاحِرَةِ وَالْفَاعِلُ ابْنُ الْفَاعِلَةِ، وَقَذَفُوهُ وَأَمَّهُ فَلَمَّا سَمِعَ ذَلِكَ عِيسَى عَلَيْهِ السَّلَامُ منهم دَعَا عَلَيْهِمْ، وَلَعَنَهُمْ فَمَسَخَهُمُ اللَّهُ خَنَازِيرَ، فَلَمَّا رَأَى ذَلِكَ يَهُوذَا رَأْسُ الْيَهُودِ وَأَمِيرُهُمْ، فَزِعَ لِذَلِكَ وَخَافَ دَعْوَتَهُ، فَاجْتَمَعَتْ كَلِمَةُ الْيَهُودِ عَلَى قَتْلِ عِيسَى عَلَيْهِ السَّلَامُ، فثاروا إليه؛ ليقتلوه فبعث الله جِبْرِيلَ فَأَدْخَلَهُ فِي خَوْخَةٍ فِي سقفها روزنة فرفعه إِلَى السَّمَاءِ مِنْ تِلْكَ الرَّوْزَنَةِ، فَأَمَرَ يَهُوذَا رَأْسُ الْيَهُودِ رَجُلًا مِنْ أَصْحَابِهِ يُقَالُ لَهُ: طَطْيَانُوسُ أَنْ يَدْخُلَ الْخَوْخَةَ وَيَقْتُلَهُ، فَلَمَّا دخل غرفته لَمْ يَرَ عِيسَى فَأَبْطَأَ عَلَيْهِمْ فَظَنُّوا أَنَّهُ يُقَاتِلُهُ فِيهَا فَأَلْقَى اللَّهُ عَلَيْهِ شِبْهَ عِيسَى عَلَيْهِ السلام، فلما خرج عليهم، ظَنُّوا أَنَّهُ عِيسَى عَلَيْهِ السَّلَامُ فَقَتَلُوهُ وَصَلَبُوهُ

அல்லாமா அலிமியான் abul hasan natwi தனது கஸ்ஸுன் னபிய்யீனில் இன்னொரு வகையாக இந்த வரலாற்றை எழுகிறார்

அப்போது ஜெரூசலம் ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. யூதர்கள் ஈஸா அலை அவர்களுக்கு எதிராக ரோமர்களிடம் புகார் செய்தனர். ரோம அரசாங்கத்திற்கு எதிராக ஈஸா கிளர்ச்சி செய்வதாகவும் தானே அரசர் என்று அவர் கூறுவதாகவும் குற்றம் சாட்டினர்.  

ரோமர்களிடம் யூதர்களுக்கு இருந்த செல்வாக்கின் காரணமாக ரோம நீதிமன்றம் ஈஸா அலை அவர்களுக்கு மரண தண்டனை வழங்கியது. அந்த காலத்தில் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவது தான் மரண தண்டனை நிறைவேற்றப்படும் வழக்கும். குற்றவாளி அவர் கழுவிலேற்றப்படும் சிலுவை அவரே சுமந்து வரவேண்டும். அப்படி ஈஸா அலை அவர்கள் தனது சிலுவை சுமந்து வந்த போது மெதுவாக நடந்தார்கள், அவரை காட்டிக் கொடுத்தவன் அவசரப்படுத்தினான். ஒரு கட்டத்தில் தான் சிலுவையை சுமந்து கொள்வதாகவும் வேகமாக நடக்குமாறும் அவன் கூறினான். ஈஸா அலை, சிலுவையை அவனிடம் கொடுத்தார்கள். அப்போது அல்லாஹ் அவனது தோற்றத்தை மாற்றினான். தண்டனை நிறைவேற்றப்படுகிற இடம் வந்த போது சிலுவையை சுமந்து வருபவன் தான் குற்றவாளி என்ற வகையில் ஈஸா அலை அவர்களை காட்டிக் கொடுத்தவனையே சிலுவையில் அறைந்து கொன்றார்கள். நான் அவரில்லை என்று அவன் கதறிய போதும் ரோம வீர்ர்கள் அவனை பொருட்படுத்த வில்லை, அவன் தான் இறுதி நேரத்தில் ஏலி லாம சபக்தானி என் இறைவா என்னை ஏன் கைவிட்டாய் என்று அலறினான். ஈஸா அல்ல. அல்லாஹ் ஈஸா அவர்களை தன்னலவில் உயர்த்திக் கொண்டான்.

மதீனாவிற்கு முஸ்லிம்கள் செல்வதை தடுக்க மக்காவின் காபிர்கள் வகை வகையாக சதி செய்தனர்

ஒரு உதாரணம்

وتواعد عمر بن الخطاب، وعَيَّاش بن أبي ربيعة، وهشام بن العاص بن وائل موضعًا اسمه التَّنَاضُب فوق سَرِف يصبحون عنده، ثم يهاجرون إلى المدينة، فاجتمع عمر وعياش، وحبس عنهما هشام‏.‏

ولما قدما المدينة ونزلا بقباء قدم أبو جهل وأخوه الحارث إلى عياش ـ وأم الثلاثة واحدة، وهي أسماء بنت مُخَرِّبَة ـ فقالا له‏:‏ إن أمك قد نذرت ألا يمس رأسها مشط، ولا تستظل بشمس حتى تراك، فَرَقَّ لها‏.‏ فقال له عمر‏:‏ يا عياش، إنه والله إن يريدك القوم إلا ليفتنوك عن دينك فاحذرهم، فوالله لو آذى أمك القمل لامتشطت، ولو قد اشتد عليها حر مكة لاستظلت، فأبي عياش إلا الخروج معهما ليبر قسم أمه، فقال له عمر‏:‏ أما إذ قد فعلت ما فعلت فخذ ناقتى هذه، فإنها ناقة نجيبة ذلول، فالزم ظهرها، فإن رابك من القوم ريب فانج عليها‏.‏

فخرج عليها معهما، حتى إذا كانوا ببعض الطريق قال له أبو جهل‏:‏ يابن أمي، والله لقد استغلظت بعيري هذا، أفلا تعقبني على ناقتك هذه‏؟‏ قال‏:‏ بلى، فأناخ وأناخا ليتحول عليها، فلما استووا بالأرض عدوا عليه فأوثقاه وربطاه، ثم دخلا به مكة نهارًا موثقًا، وقالا‏:‏ يا أهل مكة، هكذا فافعلوا بسفهائكم، كما فعلنا بسفيهنا هذا‏.‏

ஆனால் முஸ்லிம்கள் மதீனாவிற்கு குடிபெயர்ந்தனர் , அருள் வாழ்வு பெற்றனர்,

 அதே போல பெருமானாருக்கு மதீனாவில் ஒரு ஆதரவு தளம் உருவாவதை அறிந்த மக்காவின் எதிர்கள்  முஹம்மது ரஸூல் (ஸல்) அவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டினர்.

பெருமானாருக்கு எதிரான அந்த சதியாலோசனையை ரஹீக்குள் மக்தூம் விவரிக்கிறது.

ولما جاءوا إلى دار الندوة حسب الميعاد، اعترضهم إبليس في هيئة شيخ جليل، عليه بَتٌّ له، ووقف على الباب، فقالوا‏:‏ من الشيخ‏؟‏ قال‏:‏ شيخ من أهل نجد سمع بالذي اتعدتم له فحضر معكم ليسمع ما تقولون، وعسى ألا يعدمكم منه رأيًا ونصحًا‏.‏ قالوا‏:‏ أجل، فادخل، فدخل معهم‏.‏
وبعد أن تكامل الاجتماع بدأ عرض الاقتراحات والحلول، ودار النقاش طويلًا‏.‏ قال أبو الأسود‏:‏ نخرجه من بين أظهرنا وننفيه من بلادنا، ولا نبالي أين ذهب، ولا حيث وقع، فقد أصلحنا أمرنا وألفتنا كما كانت‏.‏

قال الشيخ النجدى‏:‏ لا والله ما هذا لكم برأي، ألم تروا حسن حديثه، وحلاوة منطقه، وغلبته على قلوب الرجال بما يأتى به‏؟‏ والله لو فعلتم ذلك ما أمنتم أن يحل على حى من العرب، ثم يسير بهم إليكم ـ بعد أن يتابعوه ـ حتى يطأكم بهم في بلادكم، ثم يفعل بكم ما أراد، دبروا فيه رأيًا غير هذا‏.‏

قال أبو البخترى‏:‏ احبسوه في الحديد وأغلقوا عليه بابًا، ثم تربصوا به ما أصاب أمثاله من الشعراء الذين كانوا قبله ـ زهيرًا والنابغة ـ ومن مضى منهم، من هذا الموت، حتى يصيبه ما أصابهم‏.‏

قال الشيخ النجدى‏:‏ لا والله ما هذا لكم برأي، والله لئن حبستموه ـ كما تقولون ـ ليخرجن أمره من وراء الباب الذي أغلقتم دونه إلى أصحابه، فلأوشكوا أن يثبوا عليكم، فينزعوه من أيديكم، ثم يكاثروكم به حتى يغلبوكم على أمركم، ما هذا لكم برأي، فانظروا في غيره‏.‏

وبعد أن رفض البرلمان هذين الاقتراحين، قدم إليه اقتراح آثم وافق عليه جميع أعضائه، تقدم به كبير مجرمى مكة أبو جهل بن هشام‏.‏ قال أبو جهل‏:‏ والله إن لى فيه رأيًا ما أراكم وقعتم عليه بعد‏.‏ قالوا‏:‏ وما هو يا أبا الحكم‏؟‏ قال‏:‏ أرى أن نأخذ من كل قبيلة فتى شابًا جليدًا نَسِيبا وَسِيطًا فينا، ثم نعطى كل فتى منهم سيفًا صارمًا، ثم يعمدوا إليه، فيضربوه بها ضربة رجل واحد، فيقتلوه، فنستريح منه، فإنهم إذا فعلوا ذلك تفرق دمه في القبائل جميعًا، فلم يقدر بنو عبد مناف على حرب قومهم جميعًا، فرضوا منا بالعَقْل، فعقلناه لهم‏.‏

قال الشيخ النجدى‏:‏ القول ما قال الرجل، هذا الرأي الذي لا رأي غيره‏.‏

ووافق برلمان مكة على هذا الاقتراح الآثم بالإجماع، ورجع النواب إلى بيوتهم وقد صمموا على تنفيذ هذا القرار فورًا‏.‏

أما أكابر مجرمي قريش فقضوا نهارهم في الإعداد سرا لتنفيذ الخطة المرسومة التى أبرمها برلمان مكة ‏[‏دار الندوة‏]‏ صباحًا، واختير لذلك أحد عشر رئيسًا من هؤلاء الأكابر، وهم‏:‏

1ـ أبو جهل بن هشام‏.‏
2ـ الحَكَم بن أبي العاص‏.‏
3ـ عُقْبَة بن أبي مُعَيْط‏.‏
4ـ النَّضْر بن الحارث‏.‏
5ـ أُمية بن خَلَف‏.‏
6ـ زَمْعَة بن الأسود‏.‏
7ـ طُعَيْمة بن عَدِىّ‏.‏
8 ـ أبو لهب‏.‏
9ـ أبي بن خلف‏.‏
10ـ نُبَيْه بن الحجاج‏.‏
11ـ أخوه مُنَبِّه بن الحجاج‏.‏

وكان من عادة رسول الله صلى الله عليه وسلم أن ينام في أوائل الليل بعد صلاة العشاء، ويخرج بعد نصف الليل إلى المسجد الحرام، يصلي فيه قيام الليل، فأمر عليًا رضي الله عنه تلك الليلة أن يضطجع على فراشه، ويتسجى ببرده الحضرمي الأخضر، وأخبره أنه لا يصيبه مكروه‏.‏

فلما كانت عتمة من الليل وساد الهدوء، ونام عامة الناس جاء المذكورون إلى بيته صلى الله عليه وسلم سرًا، واجتمعوا على بابه يرصدونه، وهم يظنونه نائمًا حتى إذا قام وخرج وثبوا عليه، ونفذوا ما قرروا فيه‏.‏

وكانوا على ثقة ويقين جازم من نجاح هذه المؤامرة الدنية، حتى وقف أبو جهل وقفة الزهو والخيلاء، وقال مخاطبًا لأصحابه المطوقين في سخرية واستهزاء‏:‏ إن محمدًا يزعم أنكم إن تابعتموه على أمره كنتم ملوك العرب والعجم، ثم بعثتم من بعد موتكم، فجعلت لكم جنان كجنان الأردن، وإن لم تفعلوا كان له فيكم ذبح، ثم بعثتم من بعد موتكم، ثم جعلت لكم نار تحرقون فيها‏.‏

وقد كان ميعاد تنفيذ تلك المؤامرة بعد منتصف الليل في وقت خروجه صلى الله عليه وسلم من البيت، فباتوا متيقظين ينتظرون ساعة الصفر، ولكن الله غالب على أمره، بيده ملكوت السموات والأرض، يفعل ما يشاء، وهو يجير ولا يجـار عليه، فقـد فعـل مـا خاطب به الرسول صلى الله عليه وسلم فيما بعد‏:‏ ‏{‏وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُواْ لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ الله ُ وَالله ُ خَيْرُ الْمَاكِرِينَ‏}‏ ‏[‏الأنفال‏:‏30]‏‏.‏

وقد فشلت قريش في خطتهم فشلًا ذريعًا مع غاية التيقظ والتنبه؛ إذ خرج رسول الله صلى الله عليه وسلم من البيت، واخترق صفوفهم، وأخذ حفنة من البطحاء فجعل يذره على رءوسهم، وقد أخذ الله أبصارهم عنه فلا يرونه، وهو يتلو‏:‏ ‏{‏وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لاَ يُبْصِرُونَ‏}‏ ‏[‏يس‏:‏9‏]‏‏.‏ فلم يبق منهم رجل إلا وقد وضع على رأسه ترابًا، ومضى إلى بيت أبي بكر، فخرجا من خوخة في دار أبي بكر ليلًا حتى لحقا بغار ثَوْر في اتجاه اليمن‏.‏

அல்லாஹ்வின் திட்டம் நிச்சயம் வெல்லும்.  

ஆனால் எதிரிகளின் சதியின் தீமைகளிலிருந்து தற்காத்துக் கொள்வதும் அதற்காக திட்டமிடுவதும்  நமது கடமையாகும்  . சதிக்கு பலியாகிவிடக் கூடாது.


பெருமானார் (ஸ்ல) அவர்கள் ஹிஜ்ரத்தின் போது சவ்ரு குகையில் தங்கியதும் அது தொடர்பான நடவடிக்கைகளும் எதிரிகளின் சதிக்கு பலியாகிவிடாமல் பாதுகாத்துக் கொள்ளும் வழிவகைகளை சிறப்பாகவும் நுட்பமாகவும் திட்டமிடக் கற்றுத்தருகிறது ,

பாலை வனத்தில் புதிய பாதையில் செல்ல வழிகாட்டி தேவை.

உணவு கொண்டு வந்து தர ஏற்பாடு தேவை

தகவல்கள் வந்து சேர ஏற்பாடு தேவை

ஒட்டகைகளை மறைத்து வைக்க எற்பாடு தேவை

وكانا قد استأجرا عبد الله بن أُرَيْقِط الليثى، وكان هاديًا خِرِّيتًا ـ ماهرًا بالطريق ـ وكان على دين كفار قريش، وأمناه على ذلك، وسلما إليه راحلتيهما، وواعداه غار ثَوْر بعد ثلاث ليال براحلتيهما، فلما كانت ليلة الاثنين

நூறு ஒட்டகைகளுக்கு ஆசைப்பட்டு துரத்திக் கொண்டு வந்த சுராக்கா பின் மாலிக் பெருமானாரை காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்று சொல்லி அதற்கு பதிலாக பெருமானாரின் கை ஓங்கும் போது தனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்று கோரிப் பெற்றாலும் கூட அவரது ஆசைக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரு வாய்ப்புத்தர விரும்ப வில்லை. அதனால் அவருக்கு கிஸ்ராவின் தங்க காப்புக்களை தருவதாக வாக்களித்தார்கள். பெருமானாரின் வாக்கில் கொண்ட உறுதியினால் சுராக்கா பெருமானாரை காட்டிக் கொடுக்கவில்லை.  

ஒரு சதித்திட்டத்திலிருந்து வெளியேறும் உத்திகளில் ஒன்றாக அதை பார்க்க் வேண்டும்.

முஸ்லிம்களுக்கு எதிரான சதித்திட்ங்களின் வரிசை முடிந்து விட வில்லை.

இப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ராஜதந்திரத்தின் வடிவில். கலவரங்களின் வடிவில். மீடியா பிரச்சாரங்களின் வடிவில். சோஷியல் மீடியாக்களின் வடிவில், அரசியல் கூட்டணிகளின் வடிவில்.

இத்தகைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எதிரிகளின் திட்ட்த்தை அறிந்து அதற்கேற்ப சரியாக செயல்பட வேண்டியது முஸ்லிம்களின் கடமை.

பங்களாதேஷில் சுமார் 17 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அதில் 10 சதவீதம் பேர் இந்துக்கள். பங்களாதேஷ் இப்போது உலகில் கவனிக்கத்தக்க அளவில் முன்னேறி வருகிறது. தனி நபர்களின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவுக்கு சவால் விடும் வகையில் உயர்ந்துள்ளது. நிச்சயமாக இந்தியாவில் இருக்கிற ஆர் எஸ் எஸ் இந்துத்துவா சக்திகளுக்கு இதில் மகிழ்ச்சியில்லை. இதை குலைக்க திட்டமிட்டார்கள்.

அங்கு அக்டோபர் மாத்த்தின் இரண்டாம் வாரத்தில் துர்கா பூஜை விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு அக்டோபர் 13 ம் தேதி சுமில்லா என்ற ஊரில் ஒரு சிலையின் தொடையில் குர்ஆன் பிரதி வைக்கப்பட்டிருப்பதாக செய்தி பரவியது. அதன் பிறகு அங்கு கலவரம் மூண்டது. சுமார் 10 பேர் உயிரிழந்தனர். அதில் 7 பேர் இந்துக்கள். பங்களாதேஷில் நடந்த மிக மோசமான கலவரம் இது என நியூயார்க் டைம்ஸ் பத்ரிகை கூறியது.   பங்களாதேஷ் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து 4000 பேர் மீது வழக்கு பதிவு செய்து 400 பேரை கைது செய்து அமைதியை விரைவாக மீட்டெடுத்து விட்டது.

பங்களாதேஷின் உள்துறை அமைச்சர் அஸதுஸ்ஸமான் கான் , இது ஒரு திட்டமிட்ட வன்முறை. நாட்டை சீரழிக்கும் திட்டம் கொண்ட்து என்று கூறியிருக்கிறார். ஒரு கோயில் கூட சிதைக்கப் படவில்லை என்று பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சர் அப்துல் மஃமூன் கூறியிருக்கிறார்.

எப்படி இருந்தாலும் பங்களாதேஷிற்கு இது ஒரு கெட்ட அறிகுறியாகும். வளர்ச்சிக்கு பெரும் தடையாகும்.

துர்கா சிலையின் மடியில் குர் ஆன் வைக்கப்பட்டிருந்த்து என்றால் அது வழக்கு பதிவு செய்யப்பட்டால் உரிய நடவடிக்கையை அரசு எடுத்து விடும். ஆனால் சிலர் வெளிப்படுத்திய தேவையற்ற அதிகப்படியான உணர்ச்சி வளர்ந்து வரும் ஒரு நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டது. மட்டுமல்ல இதற்கு திட்டமிட்ட சக்திகள் பங்களாதேஷிலும் அண்டை நாடான இந்தியாவிலும் என்ன நன்மையை அடைய திட்டமிட்டார்களோ அது நிறைவேறிவிட்டது. இந்தியாவில் இந்துக்களிடையே இந்துத்துவா உணர்வு மேலோங்கவும். முஸ்லிம் விரோத மன்ப்போக்கு வளரவும் இது காரணமாகி விட்டது.

பங்களாதேஷில் நடைபெற்றது திட்ட மிட்ட ஒரு சர்வதேச சதி.

இதன் தொடர்ச்சியாக பங்களாதேஷிற்கு அருகிலுள்ள திரிபுரா மாநிலத்தில் அக்டோபர் 26 ம் தேதி விஷுவ ஹிந்து பரிஷ்த் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளும் ஒரு பள்ளிவாசலும் நொருக்கப்பட்டன. பல பள்ளிவாசல்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. ஜன்னல்கள் உடைக்கப் பட்டிருக்கின்றன். ஒரு பள்ளிவாசலில் கதவு உடைக்கப் பட்டது. ஒரு பள்ளிவாசலில் மைக் செட் சேதப்படுத்தப்பட்டுள்ளது . ஒரு பள்ளிவாசலுக்கு உள்ளே தீ வைக்கப் பட்டிருக்கிறது.

இதில் பி பி சி சொல்கிற ஒரு ஆச்சரியமான தகவல் என்ன வெனில் பங்களாதேஷில் அவ்வப்போது பிரச்சனை எழுந்தாலும் கூட இது வரை திரிபுராவில் எந்த கலவரமும் நடந்ததில்லை.

இப்போது திரிபுராவில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. எனினும் இதுவரை முஸ்லிம்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. முஸ்லிம்களுக்கு உயிரிழப்பு எதுவும் நடைபெற வில்லை, திரிபுரா மாநிலத்தின் உயர்நீதி மன்றம் இதுவிவகாரத்தில் தானாகவே தலையிட்டு விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது.

இதில் திரிபுரா அமைதியாகிவிட்டது. ஆனால் திரிபுராவின் பெயரைச் சொல்லி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.  

திரிபுராவில் நடைபெற்றிருப்பதும் ஒரு சதித்திட்டமே! திரிபுராவில் 42 இலட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்களில் 9 சதவீதம் பேர் முஸ்லிம்கள். ஒரு பெரிய கலவரம் என்றால் அதை தாக்குப் பிடிக்கும் அளவில் மக்கள் இல்லை. இப்போது மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன்.

விஷுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புக்கள் திரிபுராவிலும் நாட்டின் மற்ற பகுதியிலும் முஸ்லிம்களை பாதிப்புக்குள்ளாக்க வேண்டும். அமைதியாக வாழ விடக்கூடாது முஸ்லிம்களை அச்சத்தின் பிடியிலேயே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றன.

முஸ்லிம்கள் இந்த சதித்திட்டத்தை எதிர் கொள்வதற்கு  மிகச் சரியான வழிகளை கண்டறிய வேண்டியது அவசியம்.

எதிரிகள் நினைக்கிற படியே தொடர்ந்து சமூகத்தை பதட்டப்படுத்தும் காரியங்களில் ஈடுபடுவது பொருத்தமானதல்ல.  

முதலில் திரிபுராவில் இருக்கிற மக்களுக்கு ஆறுதலும் தைரியமும் தரப்பட வேண்டும்.  சட்ட ரீதியாக அம்மாநில அரசே மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் ஈடுபட நிர்பந்திக்கும் வழிகள் யோசிக்கப்பட வேண்டும். பாதிப்புக்குள்ளானோருக்கு உதவ வேண்டும்.

அங்கு பாதிக்கப்பட்டோருக்கு உதவிக் கொண்டிருக்கும் களப்பணியாளர்களோடு  தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை கைகோர்த்து நிற்கிறது.

திரிபுராவில் மட்டுமல்ல நாட்டின் பிற பகுதிகளிலும் எதிரிகளின் சூழ்ச்சி சரியாக அடையாளம் காணப்பட வேண்டும்.

இன்றைய நிலையில் முஸ்லிம்கள் தைரியத்தோடும் தந்திரத்தோடும் செயல்பட கடமைப் பட்டிருக்கிறார்கள்.

இல்லை எனில் எதிரிகள் விரிக்கும் சதி வலையில் நாம் சிக்கிக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

இந்துத்துவ அமைப்பு ஏற்படுத்தும் ஒவ்வொரு பிரச்சனையின் போதும்  இதில் எதிரிகளின் திட்டம் என்ன என்பது துல்லியமாக ஆராயப்பட வேண்டும்.

அந்த வலைக்குள் சிக்கி விடாமல் சமுதாயத்தை காக்கவேண்டும்.

ஒரு ஊரின் பதட்டத்தை அடுத்த ஊருக்கு கொண்டு செல்வதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஒரு ஊர் பிரச்சனை மாநிலப் பிரச்சனையாகிற போது மாநில அளவிலான நமது பலமும் எதிரிகளின் பலமும் மோதிக்கொள்ள நேரிடும். அது போலவே தேசிய அளவிலும். இது மாதிரியான் சூழ்நிலையில் சிறுபான்மை சமூகத்தினர் குறைவாக வசிக்கிற பகுதிகளில் நிர்க்கதியான நிலைக்கு ஆளாகிவிடுவார்கள்.

தார்மீக ரீதியான ஆதரவை வெளிப்படுத்த தயங்க கூடாது. அது உணர்வு கெட்ட குணமாகிவிடும். அதே நேரத்தில் ஒரு இடத்தில் நடந்த அமைதிக் குலைவை எல்லா இட்த்திற்கும் நாமே கொண்டு போய் விடக் கூடாது.

அல்லாஹ் சதித்திடங்களிலிருந்து நம்மை மீட்பான். ஆனால் நாமே அதில் விழுந்துவிடக்கூடாது.

அவர்கள் சதி செய்கிறார்கள்; நாம் சிக்கிக் கொள்ளக் கூடாது

அல்லாப் பாதுகாப்பானாக! 

No comments:

Post a Comment