வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 28, 2021

வினையான விளையாட்டு

கொரோனோ காலத்திலிருந்து நாம் விடுபட்டு வருகிறோம்.

பணம் செல்வாக்கு இயற்கை வளம் அனைத்தின் மீதும் மனிதர்கள் வைத்திருந்த நம்பிக்கையை கொரோனா பெரும் கேள்விக் குள்ளாக்கி விட்டது.  என்ன இருந்து என்ன பயன் என்று பேசும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள்.

உடல் ஆரொக்கியம் மிக முக்கியம் என்பது கவனம் பெற்றது.

சவுகரியமான - அதிகமாக ஏசியில் வாழ்ந்த மக்கள் பலரும் ஏராளமான இறப்புகளை சந்தித்தனர். 

அமெரிக்காவில் தான் அதிபட்ச இழப்பு சுமார் 8 இலட்சம் பேர்.

அடுத்தாக பிரேசிலில் 6 ½ இலட்சம் பேர் , இந்தியாவில் 4 ½ இலட்சம் பேர் ,

பிரிட்டன் இத்தாலியில் சுமார் 1 ½ இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்,

 இதில் மக்கள் தொகை மற்றும் சுகாதார வசதியின் அடிப்படையில் பார்க்கும் போது இந்திய உயிரிழப்பு சதவீதம் குறைவானதே!   

 இது இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு பெரும் நற்சான்றை கொடுத்துள்ளது.

நாம் கொரோனோவிற்கு பிந்த்தைய வாழ்கை அமைப்பில் ஆரோக்கியத்திற்கு இன்னும் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இன்று நமது அன்றாட வாழ்வில் அதற்கு அதிக முக்கியத்துவம் இருப்பதில்லை.

ஆனால் திட்டமிடுதல்களில் மாற்றம் தேவை என்பதை கொரோனா உணர்த்தியிருக்கிறது.

ஆரோக்கியமான உடற்கூறு கொண்டவர்கள் சிரம்மான நிலையிலிருந்து மீண்டிருக்கிறார்கள்.

அதிகப் படியான உடல்பருமன், ஆரோக்கியத்தை கவனிக்காத பலர் எளிதாக தொற்றுக்கு பலியாகிவிட்டார்கள்.

உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் நாம் பல வழிகளில் கவனம் செலுத்த வேண்டும்

அதில் ஒன்று உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு

இஸ்லாம் எப்போதும் விழிப்பு நிலையில் இருக்க வலியுத்துகிறது.

وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل}(الأنفال

 உடற்பயிற்சியும் விளையாட்டும் அதற்கு துணை செய்யும்

·         பயிற்சிகளின் போது உடலில் உள்ள கழிவு உப்புகள் வியர்வையாக வெளியேறும்.

·         அதிக வியர்வை நீராவியாகும் போது நம் உடல் குளிர்ந்து உடல் வெப்பம் சீராகின்றது. வியர்வைச் சுரப்பிகள் நம் உடலின் ஓர் கூலகக் கருவியாகப் பயன்படுகின்றது.

·         நன்றாக பசியெடுத்து, நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது

·         நம் உடல் பருமனைக் குறைக்க உதவும் டாப்மைன்என்ற சுரக்கும் பொருள் மூளையில் சுரக்கின்றது.

·         உடலும் மனமும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையதால் மனமகிழ்ச்சியினால் உடல் புத்துணர்ச்சி அடைகின்றது.

·         கூட்டாக சேர்ந்து விளையாடுவதால் குழுஒற்றுமை, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, வெற்றி, தோல்வியை ஏற்றுக் கொள்ளும் சகிப்புத்தன்மை, நட்புணர்வு, வளரும்

எனவே பொதுவாக விளையாட்டை ஜாயிஸ் அனுமதிக்கப்பட்ட்து என்று கூறுகிற இஸ்லாம்

أن الأصل في الأشياء الإباحة، ولا يحرم شيء إلا بدليل قطعي 

1.   உடல் ஆரோக்கியம்

2.   உடல் பயிற்சி

3.   நேரத்தை செலவிடுதல்

4.   கட்டுப்பாடு, கூட்டுறவு போன்ற பண்பாடுகளை சீரமைத்தல்

ஆகிய காரணங்களுக்காக அமையுமெனில் அது ஜாயிஸ் என்ற நிலையிலிருந்து முஸ்தஹப்பு என்ற நிலைக்கு முக்கியத்துவம் பெறும் என்று கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிக அருமையான வாழ்கைக்கான பல வழிகாட்டுதல்களை கொண்ட ஒரு ஹதீஸ்

عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير احرص على ما ينفعك واستعن بالله ولا تعجز وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كان كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل فإن لو تفتح عمل الشيطان

\இமாம் முஸ்லிம் ரஹி இந்த நபி மொழியை கத்ர் பாடாத்தில்

 الأمر بالقوة وترك العجز والاستعانة بالله وتفويض المقادير لله எனும் தலைப்பின் கீழ் இந்த ஹதீஸை இடம் பெறச் செய்துள்ளார்கள்.

விதியின் மீது பழிபோட்டு சும்மா இருக்க கூடாது, ஆர்வமும் ஆற்றலும் முயற்சியும் முடிந்தவரை செய்ய வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் சுட்டிக் காட்டி நிற்கீறது .

வணக்க வழிபாடுகளை மட்டுமே வாழ்வாக கொண்டு உடல் நிலையில் அக்கறை செலுத்தாமல் இருப்பதை பெருமானார் (ஸ்ல) அவர்கள் ஏற்க வில்லை.

وقد قال النبى لعبد الله بن عمرو بن العاص، وقد أرهق نفسه بالعبادة صياماً وقياماً:صم وأفطر، وقم ونم، فإن لبدنك عليك حقاً، وإن لعينك عليك حقاً[متفق عليه عن عبد الله بن عمرو بن العاص]

 பெருமானார் (ஸல்) அவர்கள் பல்வேறு பயிற்சிகளையும் விளையாட்டுக்களை அனுமதிக்கவும் ஆதரிக்கவும் ஆர்வமூட்டவும் செய்துள்ளார்கள்.

 பயணங்களின் போது போட்டி போட்டுக் கொண்டு நடப்பதை பெருமானார் (ஸல்) ஆதரித்தார்கள்

 வில் வித்தையை பெருமானார் (ஸல்) ஆதரித்தார்கள்

 ألا إن القوة الرمي".(صحيح مسلم، كتاب الإمارة، باب فضل الرمي.)

 பாரம்பரியத்தை சுட்டிக்காட்டி ஆதரித்த பெருமானார்

 فمر يوما على جماعة من الأنصار يرمون فقال: [ارموا بني إسماعيل فإن أباكم كان راميا](رواه البخاري )

 ஈட்டி எறிதல் துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட பல வகை போட்டிகளை இது எடுத்துக் கொள்ளும்

 சவூதியில் ஒரு பலகலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் எனது நண்பர் ஒருவர் பெருமானார் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள் என்பதற்காகவே பெங்களூரில் வில் வித்டை பயிற்சி மேற்கொண்டார்.

 குதிரையேற்றம்

 عن أبي هريرة قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: «لا سَبَقَ إلا في خُفٍّ أو في حَافِرٍ أو نَصْلٍ». أبي داوود،

 ஒட்டகை குதிரை வில்வித்தையில் மட்டுமே போட்டி கூடும் என்பதன் கருத்து இதுமாதிரியா வாழ்க்கைக்கு பயன்படுகிற போட்டிகளில் மட்டுமே பரிசுகள் அளிக்கலாம் என்பதாகும். என விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.

               பெருமானார் (ஸல்) நடத்திய போட்டிகள்

 وقد روى البخاري ومسلم أن النبي صلى الله عليه وسلم كان يقيم السباقات بين الخيل المضمرة وغير المضمرة.. فعن ابن عمر رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: أَجْرَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا ضُمِّرَ مِنْ الْخَيْلِ مِنْ الْحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ، وَأَجْرَى مَا لَمْ يُضَمَّرْ مِنْ الثَّنِيَّةِ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ.

قَالَ سُفْيَانُ: بَيْنَ الْحَفْيَاءِ إِلَى ثَنِيَّةِ الْوَدَاعِ خَمْسَةُ أَمْيَالٍ أَوْ سِتَّةٌ، وَبَيْنَ ثَنِيَّةَ إِلَى مَسْجِدِ بَنِي زُرَيْقٍ مِيلٌ.
قَالَ اِبْن عُمَر وَكُنْت فِيمَنْ أَجْرَى فَوَثَبَ بِي فَرَسِي جِدَارًا"، "فَسَبَقْتُ اَلنَّاسَ".

நீச்சல்

 قال عمر بن الخطاب (علموا أولادكم السباحة والرماية، ومروهم فليثبوا على ظهور الخيل وثبا.

 மல்யுத்தம்

 وقد روى أبو داود والترمذي من حديث أبي الحسن العسقلاني عن أبي جعفر بن محمد بن ركانة عن أبيه ، أن ركانة صارع النبي - صلى الله عليه وسلم - فصرعه النبي - صلى الله عليه وسلم

 நடைப்பயிற்சி

 وقد كان النبي من أسرع الناس مشيا.(السلسلة الصحيحة).

 பெண்களும் போட்டிகளில் பங்கேற்கலாம்

 السيدة عائشة ـ رضي الله عنها ـ كانت مع النبي ـ عليه الصلاة والسلام ـ في سفر قالت : فسابقته فسبقته فلما حملت اللحم ـ ازداد وزنها ـ سابقته فسبقني، فقال: يا عائشة هذه بتلك[أبو داود عن عائشة] .

 சிறுவர்களை ஆர்வப்படுத்திய பெருமானார் (ஸல்)

 அப்பாஸ் ரலி அவர்களின் பிள்ளைகளிடம் பெருமானார் நீ ஜெயித்தால் உனக்கு இன்னது தருவேன் என்று கூறி ஆர்வப்படுத்தியிருக்கிறார்கள்.

  ففي مسند أحمد عن عبد الله بن الحارث رضي الله عليه عنه قال: [كان رسول الله صلى الله عليه وسلم يصف عبد الله وعبيد الله وكثير بني العباس رضي الله عنهم ثم يقول: من سبق فله كذا وكذا... قال فيسبقون إليه، فيقعون على ظهره وصدره، ويقبلهم ويلتزمهم

 وأقام مصارعة بين رافع بن خديج وسمرة بن جندب وهما ابنا أربعة عشر عاما، فصرع سمرة رافعا وقبلهما النبي في الغزوة بعد ما رأى قوتهما، وكان رافع راميا، وسمرة مصارعا بطلا.

  விளையாட்டுப் போட்டிகளில் இஸ்லாமின் நிபந்தனைகள்

     ·         விளையாட்டுக்கான உடைகளை அணியலாம், கவர்ச்சிகரமான உடை தேவையில்லை

·         டென்னிஸ் விளையாடும் பெண்கள் ஜட்டி தெரிய ஆடை அணிய வேண்டும் என்பது ஆண்களின் வக்கிரம் அல்லது ஆண்களை வசீகரிக்கும் பெண்களின் தந்திரம் என்பதை தவிர வேறில்லை.

     ·         பாலின வேறுபாடு அனைத்து விவகாரங்களிலும் கவனிக்கப் பட வேண்டும்.

·         இன்றைய ஒரு ஆய்வு பெண்கள் சந்திக்கு ஈவ்டீஸிங்கில் பெரும்பாலானவை ஸ்போட்ர்ஸில் நடக்கிறது.  கோச்சுகள் மேனேஜர்கள் சீனியர் பிளேயர்ஸ் பெண்களை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்குகிறார்கள் என்பது உலகம் முழுவதிலும் இருக்கிற முக்கியக் குற்றச் சாட்டாகும்.

     ·         சூதாட்டம் கூடாது. ஹராமான வழியில் சம்பாதிக்க காரணமாக கூடாது.

·         ஐபிஎல் லில் விளையாடிய இரண்டு முஸ்லிம் வீர்ர்கள் மது விற்பனை செய்யும் ஸ்பான்ஸர் கம்பனியின் விளம்பரத்தை தங்களது உடையில் அணிந்து கொள்ள மறுத்துவிட்டனர்.

     ·             சக மனிதனையோ மிருகங்க்களையீ சித்ரவதை செய்யக் கூடாது.

     ·         மனித உயிருக்கு ஆபத்தை தேடிக் கொள்வதாக இருக்க கூடாது.

     ·         விளையாட்டில் வெற்றி தோல்வியை சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

 இந்த நிபந்தனைகள் சரியாக பராமரிக்கப் படாத போது விளையாட்டு வினையாகி விடுகிறது.

இந்த கடைசி நிபந்தனை மிக முக்கியமானது,  பெருமானார் (ஸல்) அவர்கள் இதை மிக அற்புதமாக புரிய வைத்தார்கள்.

 أعرابي سبق بجمله ناقة النبي ـ عليه الصلاة والسلام ـ التي كانت لا تسبق، وشقّ على المسلمين ذلك، فتمثلت في النبي ـ عليه الصلاة والسلام ـ الروح الرياضية الصحيحة كما يعبر عنها المحدثون، فقال النبي عليه الصلاة والسلام:إن حقاً على الله ألا يرفع شيئاً من الدنيا إلا وضعه

 அன்னை ஆயிஷா அம்மாவிடம் தோற்று கம்பீரம் காட்டிய பெருமானார் (;ல்)

قالت عائشة: تسابقت أنا ورسول الله فسبقته، فلما ركبني اللحم سبقني، فقال: يا عائشة هذه بتلك. تعادل.

 விளையாட்டில் வெற்றி தோல்வியை சகஜமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் இல்லாதவர்கள் விளையாட்டிற்கே தகுதியற்றவர்கள் என்பது தான் விளையாட்டுலகின் நியதி.

 அப்படிப் பார்த்தால் நமது நாடு எந்த விளையாட்டிற்கு தகுதி யற்றதோ என்ற அச்சம் தரும் சூழல் இப்போது உருவாகி உள்ளது.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியா பாக்கிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி துபாயில் நடைபெற்றது.

இந்த விளையாட்டுப் போட்டியில் விளையாடுபவர்கள் காசுக்காக விளையாடுகிறார்கள். போட்டியை நடத்துகிறவரகளும் காசுக்காகவே நடத்துகிறார்கள். விளையாட்டுக்கான விளையாட்டல்ல இது. இந்த விளையாட்டுப் போட்டியை ஒட்டி நடக்கும் சூதாட்டமும் பெரிய அளவில் நடக்கிறது. மொத்தத்தில் யாரோ சம்பாதிப்பதற்காக நடத்தப்படுகிற இந்த மேட்சுகளில் ரசிகர்கள் அதிக உணர்ச்சி வசப்ப்பட்டு பிரச்சனையை உருவாக்கிக் கொண்டார்கள். இதில் வேதனை என்ன வென்றால் பல மாநில அரசுகளும் இந்த விளையாட்டை பெரும் வினையாக்கி வருகின்றனர்.

ஞாயிரன்று நடைபெற்ற போட்டியில் பாக்கிஸ்தான் வென்றது. இந்தியாவிலுள்ள பல முஸ்லிம்களுக்கு அது பெரும் தலைவலியாகிவிட்டது.

பாக்கிஸ்தானின் வெற்றியை கொண்டாடினார்கள் என்ற குற்றச்சாட்டின் போரில் உ, பி அரசு ஆக்ராவிலுள்ள ராஜா பல்வந்த் சிங் படிக்கிற 3 இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது. கல்லூரியிலிருந்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பரேலியில் மூன்று இளைஞர்களும் லக்னோவில் ஒரு இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீநகரில் இரண்டு மருத்துவக் கல்லூரியில் சில மாணவர்கள் மீது காஷ்மீர் மாநில அரசும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

பாக்கிஸ்தானின் வெற்றியை கொண்டாடுபவர்கள் மீது தேச துரேக வழக்கு பதிவு செய்யப்படும் என்று பி முதல்வர் கூறியிருக்கிறார்.

இது அனைத்திற்கும் மேலாக இந்திய அணியின் பந்து வீச்சாளர் முஹம்மது ஷமீ யை இந்துத்துவா அமைபுக்கள் மிக மோசமாக விமர்ச்சித்துள்ளனர். ஆனால் அத்தகையோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை

ஷமீ க்கு ஆதராவக் ச்ச்சின் டெண்டுல்கர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் ஆதரவாக பேசியபிறகு நிலமை ஓரளவு சீரானது.

ஒரு விளையாட்டுப் போட்டி விவகாரத்தில் நாடு முழுவதிலும் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிற நிலையில் இது ஒரு விளையாட்டுதான் இதில் அதிக உணர்ச்சி வசப்பட வேண்டாம் என்ற ஒரு வார்த்தை பிரதமரிடமிருந்தோ உள்துறை அமைச்சரிடமிருந்தோ வரவில்லை. எவ்வளவு தூரம் மக்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்களோ அந்த அளவு நமக்கு நன்மை என்று யோசிக்கிறார்கள் போல.

இந்த சூழ்நிலை விரைவாக மாற்றப்பட வேண்டும்.

முதலில் நம்மில் ஒவ்வொருவரும் விளையாட்டை விளையாட்டாக பார்க்க பழகவேண்டும்

உணவை தவிர்த்து, மற்ற அவசியமான வேலைகளை ஒதுக்கி விட்டு இத்தகைய விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை தவிர்க்க வேண்டும்.

தனி நபர்களிடம் ஏற்படும் மாற்றம் நிச்சயம் சமூகத்தில் பிரதிபலிக்கும்.

விளையாட்டின் பெயரால் வெறுப்புணர்வு உருவாவதை முடிந்த வகையில் தவிர்க்க வேண்டும். பொதுவாக கொண்டாட்டங்களே இத்தகைய பிரச்சனைகளுக்கு காரணம். தன்க்கு பிடித்த அணி வென்றால் அதில் மகிழ்ச்சி அடைவதில் தவறில்லை. அதை தேவையற்று பொது அரங்கில் வெளிப்படுத்துகிற போது அது தீய விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது. இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய வெற்றி நிரந்தரமல்ல என்பதை நினைவில் கொள்வது இதற்கு துனை செய்யும்

இந்திய அணி தோல்வியுற்றிருக்கும் போது மற்றொரு அணி வென்றதற்காக இங்கு கொண்டாட்ட்ம் நடைபெறும் எனில் அது பிரச்சனைகள் உருவாக்கவே செய்யும்.

எந்த அணிக்கும் ஆதரவு தெரிவிப்பது என்பது தனி மனித சுதந்திரம் சார்த விசயம் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமை இந்தியா தோற்று பாக்கிஸ்தான் வென்றதற்காக இந்தியாவில ஏறேனும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி இருப்பார்கள் எனில் நிச்சயம் தேவையற்று பிரச்சனையை உருவாக்கும் வேலைதான்.

அப்படி யாராவது செய்திருந்தால் அது தார்மீக அடிப்படையில்  கண்டிப்பிற்குரியதே!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் வழக்கு பதிவு செய்யப் பட்டிருப்பதும் பல இடங்களில் தாக்குதல் நடைபெற்றிருப்பதும் உண்மையில் இத்தகைய காரணத்திற்காகத்தான் நடந்த்தா என்பது பெரும் கேள்விக்குரிய செய்தியாகும்.

பஞ்சாப் மாநிலத்தில் ஒரு கல்லூரி விடுதியில் தங்கியிருந்த காஷ்மீரைச் சாந்த முஸ்லிம் மாணவர்கள் அல்ஜஸீராவிற்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்கள்.

போட்டி நடந்து கொண்டிருந்த போதே எங்களது விடுதி வளாகத்தில் சம்பந்தமில்லாத பலர் நுழைந்தனர். போட்டி முடிந்த்தும் தாக்க தொடங்கினர்.

நாடு முழுவதும் இத்தகைய முன்னேற்பாட்டோடு முஸ்ளிம்கள் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். பிரதமரும் உள்துறை அமைச்சரும் இத்தகைய நடை முறையை கண்டு கொள்ளாமல் இருப்பது கேவலமானது.

அதே போல் விளையாட்டு வீரர் முஹம்மது ஷமீக்கு எதிரான கருத்துப் பதிவுகளும் ஒரு வகை தீண்டாமையே. அவருக்கு எதிராக இனவாத கருத்துக்களை பதிவிட்டவர்கள் மீதும் வன்கொடுமை சட்ட்த்தின் கீழ் அரசுகள்  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய மக்களின் இதயத்தில் இடம் பிடித்திருக்கிற கிரிக்கெட் விளையாட்டு மக்களை பிளவு படுத்திவிட அரசுகள் அனுமதிக்க கூடாது.

அல்லாஹ் போதுமானவன.

  

No comments:

Post a Comment