வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 21, 2021

காலம் காத்திருக்கிறது

 இறுதி முடிவு குறித்து திருக்குர் ஆன் பல இடங்களில் கூறுகிறது

تِلْكَ الدَّارُ الْآخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِينَ لَا يُرِيدُونَ عُلُوًّا فِي الْأَرْضِ وَلَا فَسَادًا ۚ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ  سورة القصص

. "قَالَ مُوسَىٰ لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا إِنَّ الْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ"، -  سورة الأعراف

"تِلْكَ مِنْ أَنبَاءِ الْغَيْبِ نُوحِيهَا إِلَيْكَ مَا كُنتَ تَعْلَمُهَا أَنتَ وَلَا قَوْمُكَ مِن قَبْلِ هَـٰذَا فَاصْبِرْ‌ إِنَّ الْعَاقِبَةَ لِلْمُتَّقِين"، سورة هود

وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْأَلُكَ رِزْقًا ۖ نَّحْنُ نَرْزُقُكَ ۗ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَىٰ (132)  سورة طه

 அதில் மூன்று இடங்களில் பொறுமையை உபதேசிக்கிறது.

மனித சமுதயாத்திற்கான  இரண்டு முக்கியச் செய்திகள் இதில் உண்டு.

ஒன்று எந்த ஒரு விவகாரத்திலும் கடைசி முடிவு எப்படிப்பட்டது என்பது தான் முக்கியம். இரண்டாவது அதற்கு பொறுமை காக்க வேண்டும்

முடிவே முக்கியம்

அது ஒரு வியாபாரமாக இருந்தாலும் சரி. ஒரு போராட்டமாக இருந்தாலும் சரி.

கிங்க் பிஷர் ஏர்லைன்ஸும் விஜய் மல்லையாவும் ஒரு காலத்தில் எப்படி மீடியாக்களில் மின்னினர். இப்போது என்னவாயிற்று ? என்ன ஆட்டம் போட்டான் ? என்ன ஆனான் பார்த்தீங்களா ? எப்படா ஜெயிலுக்குப் போவோம்னு இப்ப காத்திருக்கிறான் என்று மக்கள் பேசிக் கொள்கிற நிலைக்கு ஆளாகிவிட்டார். விஜய் மல்லையாவிடம் முதலீடு செய்திருந்த பல ஆயிரம் சிறு முதலீட்டாளர்கள் தங்களது வாழ்வை இழந்தனர்.

விடுதலைப் புலிகளின் போராட்டம் எவ்வளவு போற்றப்பட்டது ? அதன் முடிவு என்னவாயிற்று ? மக்களுக்கு எந்த நன்மையும் தராத கடும் போராட்டத்தால் என்ன பயன் ?   ஒரு தலைமுறை சீரழிந்ததை தவிர.

எனவே எதிலும் இறுதி முடிவு குறித்து எச்சரிக்கையும் கவலையும் அவசியம் என்பதை திருக்குர் ஆனும் முஹம்மது நபிகள் நாயகம் (ஸ்ல) அவர்களும் பல வழிகளில் தொடர்ந்து அறிவுறுத்தி வந்துள்ளனர்.

அநீதியாக நடப்பவர்களை அவர்களது பகட்டில் அல்லாஹ் விட்டு வைக்கிறான்.

·         عن أبو موسى الأشعري أن رسول الله صلى الله عليه وسلم قال “إنَّ اللَّهَ عزَّ وجلَّ يُمْلِي لِلظّالِمِ، فإذا أخَذَهُ لَمْ يُفْلِتْهُ، ثُمَّ قَرَأَ (وَكَذلكَ أخْذُ رَبِّكَ إذا أخَذَ القُرَى وهي ظالِمَةٌ إنَّ أخْذَهُ ألِيمٌ شَدِيدٌ)”، حدثه مسلم في صحيحه.

 

عن سعيد بن زيد “من أخذ شِبرًا من الأرضِ ظُلمًا، طوَّقه اللهُ يومَ القيامةِ إلى سبعِ أرَضين”.

 

திருக்குர் ஆனின் இந்த வசனங்களுக்கு பொருள் கூறும் போது இது அக்கிரமம் செய்வோருக்கான எச்சரிக்கை என்று பல விரிவுரையாளர்களும் கூறுகிறார்கள்.

நீண்ட கால வாழ்வோ அதிகாரமோ கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிடைக்கிற செல்வாக்கோ நிரம்பி வழியும் செல்வமோ, எதையும் செய்துவிட்டு தப்பித்து விடும் சாதுரியமோ உங்களுக்கு திமிரை தந்து விட வேண்டாம். முடிவு அல்லாஹ்வின் கையில் இருக்கிறது.

இறுதி முடிவு குறித்து அற்புதமாக உபதேசிக்கிறது யூசுப் அத்தியாயம்.

யூசுப் அலை அவர்களின் சகோதரர்கள் ஓநாய் மீது பழிபோட நினைத்தார்கள். ஆனால் அவர்கள் யூசுப் அலை அவர்களின் சட்டையை கிழிக்காமல் விட்டதில் அல்லாஹ் அந்த ஓநாயை பாதுகாத்தான்.  

மிக கொடூரமாக தாங்கள் அநீதி இழைத்த ஒரு வரின் காலடியில் பணிந்து நிற்க வேண்டிய சூழ்நிலையை அல்லாஹ் யூசுப் அலை அவர்களின் சகோதர்ர்களுக்கு ஏற்படுத்தினான்.

அதனால் தான் திருக்குர் ஆனிய அறிஞர்கள் وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ க்கு விளக்கம் கூறுகிற போது

 إِنَّهَا قَاعِدَةٌ قُرآنِيَّةٌ تَحكِي سُنَّةً رَبَّانِيَّةً،

என்று கூறுவார்கள்

எனவே நாம் எப்போதும் முடிவுகள் குறித்து கவலைப்படனும்.

 கடைசி நேரத்தில் உமர் ரலியின் கவலை

- وكان يردد: «ويلي إن لم يغفر الله لي»،

 முடிவுகளை வைத்துத்தான் காரியங்களை மதிப்பிடனும்.

 ஏரேனும் புரட்சிகரமான சிந்தனை அல்லது செயல்பாடுகள் என்று எதையாவது கொண்டு வருகிற போது அதை ஆதரிப்பது அல்லது முன் முடிவு எப்படி இருக்கிறது என்பதை கவனிக்க முயற்சிக்க வேணும்.

 وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ வசன்ங்களின் தொடரில் அல்லாஹ் பொறுமைய உபதேசிக்கிறான்.

 ஒரு சில விவகாரங்களில் நல்லது கெட்டதை தீர்மாணிக்க சில ஆண்டுகள் பிடிக்கும். அதுவரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

அவ்வப்போதைய உணர்ச்சியில் முடிவு செய்து விடக்கூடாது.

இது வரலாறு கற்றுத்தருகிற பாடம் .

இங்கிலாந்தின் முன்னாள் இளவ்ரசி டயானா ஒரு கார் விபத்தில் இறந்து போன போது முழு உலகமும் கண்ணீர் வடித்தது. இலண்டன் நகரில் அவருக்கு ஆதரவான பெரும் பேரணிகள் நடந்தன. அப்போது டயானாவுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்தனர். அப்போது இங்கிலாந்திற்கு வருகை தந்திருந்த புகழ்பெற்ற ராஜதந்திரி  கிஸ்ஸிங்கரிடம் டயானாவுக்கு மணி மண்டபம் கட்டுமாறு எழுந்துள்ள கோரிக்கை குறிற்து நிருபர்கள் கேட்டனர். அவர் சொன்னார். இன்னும் இருபது வருடம் பொறுங்கள் அதற்கு பின்னரும் அவரை பாராட்ட தோன்றினால் மணிமண்டபம் கட்டலாம் என்றார்.

உணர்ச்சி வேகத்தில் முடிவெடுப்பதை விட காலம கடந்து போகிற கிடைக்கிற பக்குவத்தில் ஒரு முடிவை மேற்கொள்வது தான் சரியானது.

இந்த உண்மையை மக்கள் பெரும்பாலும் மறந்து விடுகிறார்கள். ஊடகங்களும் அரசியல்வாதிகளும் இதை சாதகமாக பயன்படுத்தி தங்களுடைய இலாபத்திற்கு பயனபடுத்திக் கொள்கிறார்கள்.

2003 ம் ஆண்டு அமெரிக்கா இராக்கை ஆகரமித்த போது அதை பெரும்பாலான மக்கள் ஆதரித்தார்கள். இராக்கிடம் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன என்ற அமெரிக்காவின் கூற்றை ஏதோ வேதச் செய்தி போல மக்கள் தங்களுடைய இதயங்களுக்குள் இறக்கிக் கொண்டனர். அமெரிக்க இதையே திரும்ப திரும்ப சொல்லி இராக்கை சல்லடையாக ஓட்டையிட்டது. 2011 வரை ஏரளமான இராக்கியர்களை கொன்றது. 10 இலட்சத்து 33 ஆயிரம் இராக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

உலகின் செல்வச் செழிப்பு மிக்க நாட்டில் வாழ்ந்த மக்கள் செல்லாக்காசாக ஆக்கப் பட்டார்கள். சதாம் ஹுசைன் காலத்தில் உலகில் தனிமனித வருவாயில் முதலிடத்தில் இருந்த்து இராக். அந்த நாட்டின் மக்கள் இன்று பரிதாபத்திற்குரியவர்களாக மாற்றப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் பல வருடங்கள் தொடர்ச்சியாக நடை பெற்ற ஆக்ரமிப்பு தேடலுக்குப் பிறகு உலகிற்கு உண்மை தெரிந்த்து.

பேரழிவு ஆயுதங்களை இராக் குவித்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டி யுத்தத்தை தொடர்ந்தவர்கள் 10  வருட தேடலுக்குப் பிறகு அத்தகைய ஆயுதம் எதுவும் அங்கில்லை என்று சொன்னார்கள்/

அதனால் அன்று ஹீரோக்களாக போற்றப்பட்டவர்கள் இன்று ஜீரோக்களாக தூற்றப்படுகிறார்கள்.

இராக் யுத்த்த்தின் போது அமெரிக்க வெளியுறவு அமைச்சராக இருந்த காலின் பவல் கடந்த திங்கட்கிழமை மரணமடைந்தார்.

ஒரு காலத்தில் அவருடைய பெயர் உலக அரசியலில் உச்ச நிலையில் இருந்தது. இப்போது அவர் இறந்த பிறகு அவரை போற்றுவோர் யாருமில்லை.

பத்ரிகைகள் தோறும் அவரை தூற்றிக் கொண்டிருக்கிறன.

அல்ஜசீராவின் ஒரு கட்டுரையில் ஐம்பத்தி ஒரு வயது மரியம் சொல்கிறார்

 

 

“He lied, lied and lied,” said Maryam, a 51-year-old Iraqi writer and mother of two in northern Iraq.

“He lied, and we are the ones who got stuck with never-ending wars,” she added.

 

அவர் திரும்ப திரும்ப பொய் சொன்னார். அந்தப் பொய்யினால் முடிவறாத யுத்ததின் பிடியில் நாங்கள் சிக்கித் தவிக்கிறோம்.

 

ஈராக்கின் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து விவாதித்த ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் காலின் பவல், ஒரு சிறு புட்டியை காண்பித்து இது போன்ற பல நூறு டன் கணக்கிலான அந்த்ராக்ஸ் நுண்கிருமி ஆயுதங்கள் இரக்கில் ஏரளமாக இருக்கின்றன என்று உண்மை போலவே அடித்துப்  பேசினார்.

 எல்லாம் பொய்யாய் போயிற்று. மாதிரிக்கு கூட இராக்கில் ஒரு துளி ரசாயண ஆயுதம் கிட்டவில்லை.

 அவர் ஐநாவில் காட்டியது கூட ஒரு அமெரிக்க தயாரிப்பு என்று இப்போது பேசப்படுகிறது.

 உலகின் தனிமனித வருவாயில் மிக உச்ச நிலையில் இருந்த ஈராக்கியர்கள் இப்போது பிச்சைக்காரர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எல்லாம் காலின் பவலின் புண்ணியம்.

 At one point, Powell brandished a small vial containing a teaspoon of simulated anthrax, warning that Iraq had not accounted for “tens upon tens upon tens of thousands of teaspoons” of the deadly pathogen.

 

2008 ஆம் ஆண்டு பக்தாதில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மீது செருப்பு வீசி புகழ்பெற்ற ஈராக்கிய பத்திரிக்கையாளர் முன்ததர் ஜைதி கூறுகிறார்.

தனது போர்க்குற்றங்களுக்கு மன்னிப்பு கேட்காமல் பவல் இறந்து போனது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இங்கே அவர் தப்பி இருக்கலாம். ஆனால் கடவுளின் நீதிமன்றம் அவருக்கு காத்திருக்கிறது. அங்கு அவர் தப்ப முடியாது. இது நிச்சயம்.

 “I am saddened by the death of Colin Powell without being tried for his crimes in Iraq … But I am sure that the court of God will be waiting for him,” tweeted Muntadher al-Zaidi, an Iraqi journalist who vented his outrage at the US by throwing his shoes at then-President George W Bush during a 2008 news conference in Baghdad.

 காலின் பவல் ஒருமுறை இறந்திருக்கிறார்.

 அவரை பற்றிய விமர்சனங்கள் பல தடவை அவரை தூக்கில் ஏற்றிக் கொண்டிருக்கின்றன.

 கவிஞர் வைரமுத்து கூறுவார்

 உங்களது பேனா

உங்களது காகிதம்

எதை வேண்டுமானாலும் எழுதுங்கள்

உங்களது நாவு

உங்களது மூச்சு

எதை வேண்டுமானாலும் பேசுங்கள்

ஒன்றை

மறந்து விடாதீர்கள்

வரலாறு

உங்கள் பிணங்களைக் கூட தூக்கிலிடும்.

 காலின் பவல் போட்ட ஆட்டம் என்ன ? இன்று அவருக்கு மக்கள் போடுகிற மதிப்பென்ன ? ஒரு நாட்டையே சீரழித்தார் என்கிற வார்த்தை எவ்வளவு கொடூரமானது !

இறுதி முடிவுகள் தான் முக்கியமானவை. ஆனால் அதற்கு கொஞ்சம் பொறுமையாக் காத்திருக்க வேண்டும்.

என்ற திருக்குர் ஆனிய வரிகள் எவ்வளவு சத்தியமானவை

இந்த அடிப்பட்டயான ஒரு வாழ்வியல் உண்மையை நாம் எப்போதும் மறந்து விடக் கூடாது.

நமக்கு கிடைக்கிற எந்த செல்வாக்கும் பலமும் நாம் நல்லவர்கள் என்பதற்கான உடனடி ஆதாரம் அல்ல. அதன் முடிவு எப்படி அமைகிறது என்பதை பொறுத்துத்தான் இருக்கிறது.

முடிவு நன்மையாக இருந்தால் தான் நல்லது. இல்லை எனில் இழிவுதான்.

அதே நேரத்தில் திருக்குர் ஆனிய வாசகம் அருமையான ஒரு ஆறுதலை தருகிறது.

  وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ  இறையச்சத்தோடு நடந்து கொள்பவர்களுக்கு இறுதி முடிவு நல்லதாக இருக்கும்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

No comments:

Post a Comment