வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 14, 2021

புனிதப் பாரம்பரியத்தின் பேராளுமை

لِإِيلَافِ قُرَيْشٍ (1)

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பெருமைகளை நினைவு கூறும் மீலாது விழாக்கள் உலகெங்கும் சிறப்பாக நடந்து வருகின்றன்.

மனித வரலாற்றின் மீது தொடர்ந்து மகத்தான தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிற தலைவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.

ஆளுமைத்திறன் மிக்க பல பெரும் தலைவர்களின் பாரம்பரியத்தில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். நபிமார்களிடம் இயற்கையாகவே ஆளுமை இருக்கும். பெருமானாரின் பாரம்பரியம் அந்த ஆளுமைக்கு மேலும் வலுச் சேர்ந்தது.

ولـمَّا كان محمَّد صلى الله عليه وسلم يُعَدُّ للنُّبوَّة، هيَّأ الله تعالى له شرف النَّسب؛ ليكون مساعداً له على التفاف النَّاس حوله.

وطيب المعدن، والنَّسب الرَّفيع يرفع صاحبه عن سفاسف الأمور

உலகில் மகத்தான தாக்கத்தை செலுத்தி தோற்கடிப்ப்ப் பட முடியாதவர் உலக வரலாற்றின் முக்கிய படைத்தலைவர். ராஜ தந்திரி என்று புகழப்படுகிற தைமூர் லன்க் “ நொண்டியாக இருந்தாலும் தனது பாரம்பரியத்தின் உந்துதாலால் மகத்தான் சாதனைகளை நிகழ்த்தினார் என்கிறது வரலாறு.

சிறையிலிருந்த மாமன்னர் பகதூர்ஷா ஜாபரிடம் ஆங்கிலேயர்கள் அவரது இரண்டு மகன்களின் தலையை ஒரு தட்டில் கொண்டு வந்து “ இது உங்களுக்கான காலை உபசரிப்பு “ என்று நீட்டினார்கள். பகதூர்ஷா சொன்னார். தைமூரின் வழித்தோன்றல்கள் இப்படித்தான் தங்களது முன்னோர்களுக்கு நன்றிக் கடன் செலுத்துவார்கள். உனக்கு அழுகை வரவில்லையா என்ற கேட்ட ஆங்கிலப்படை தளபதியிடம் பகதூர்ஷா கூறினார். அரசர்கள் அழுவதில்லை.

எனவே பாரம்பரியம் என்று அழுத்தமான உணர்வுகளை ஊட்டக் கூடியது. அதை ஜீன் என்று இன்றைய விஞ்ஞானம் வகைப்படுத்துகிறது.  

முஹம்மது நபி (ஸல்) தனது பாரமபரியம் குறித்து கூறினார்கள்.

ما رواه مسلمٌ: أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم قال: «إنَّ الله عزَّ وجلَّ اصطفى من ولد إبراهيم إسماعيل، واصطفى من بني إسماعيل كنانة، واصطفى من كنانة قريشاً، واصطفى من قريش بني هاشم، واصطفاني من بني هاشم

எது பெருமானாரின் பாரமபரியம். கருத்து வேறுபாடில்லாமல் அத்னான் வரை பெருமானாரின் பாரம்பரிய வரிசை பாதுகாக்கப் பட்டுள்ளது. அத்னான் இஸ்மாயீல் அலை அவர்களின் பாரம்பரியம் என்பது உறுதியான தகவல்.

وقد ذكر الإمام البخاريُّ -رحمه الله- نسب النَّبيِّ صلى الله عليه وسلم، فقال: «هو أبو القاسم، محمَّد بن عبد الله، بن عبد المطلب، بن هاشم، بن عبد مناف، بن قصَيِّ، بن كلاب، بن مُرَّةَ، بن كعب، بن لُؤَيِّ، بن غالب، بن فهر، بن مالك، بن النَّضر، بن كِنانة، بن خُزيمة، بن مُدْرِكة، بن إلياس، بن مضر، بن نِزارِ، بن مَعَدِّ، بن عدنان

وما فوق عدنان مختلفٌ فيه، ولا خلاف بينهم: أنَّ عدنان من ولد إسماعيل عليه السلام

وعن عروةَ بن الزُّبير: أنَّه قال: «ما وجدنا مَنْ يعرف وراء عدنان

وقال الذَّهبيُّ رحمه الله: «وعدنان من ولد إسماعيل بن إبراهيم عليهما السَّلام بإجماع النَّاس

பெருமானாரின் பாரம்பரியம் அரபுலகம் அதுவரை கண்டிராத மகத்தான பல ஆளுமைகளை கொண்டிருந்த்து.

பெருமானாரின் தந்தை அப்துல்லாஹ்.

அழகானவர். பண்பாளர் தனது பன்பால் குறைஷிகள் அனைவரின் அன்பை பெற்றிருந்தார்.. நூறு ஒட்டகங்களால் காப்பாற்றப்பட்டவர்.

وقد كان أفضل إخوته خلقا وأحسنهم وصفا ومن أصغرهم سنا حتى كانت تحبه قريش كلها

 

பெருமானாரின் தாயார் ஆமினா அம்மாவும் பெரிய குடும்பத்து பெண்மணி ஆவார். அவர்களது தந்தை வஹ்ப் குறைஷிகளின் பனூ ஜுஹ்ரா குடும்பத்தின் தலைவராக இருந்தார்.  அப்துல்லாஹ் வியாபாரத்திற்கு சிரியா சென்று திரும்பும் வழியில் மதீனாவில் அவரது உறவினர்களான பனூன்னஜ்ஜார் களிடம் தங்கியிருந்த போது உடல் நலக் குறைவால் உயிரிழந்தார். அங்கிருந்த நாபிஃகா எனும் இட்த்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார் அப்போது பெருமானார் (ஸல்) அவர்கள் தாய்வ்யிற்றில் ஆறுமாத கருவாக இருந்தார்கள். எனினும் மக்களை கவரும் அப்துல்லாஹ்வின் பண்புகள் முஹம்மது (ஸ்ல) அவர்களிடம் இளவயதிலேயே மிளிர்ந்தன.

 

பட்டனார் அப்துல் முத்தலிப்

அவரது இயற்பெயர் இது வல்ல. முத்தலிப் என்பது இவரது சகோதரர் பெயர். அதில் ஒரு செய்தி இருக்கிறது.

واسمه شيبة الحمد وذلك لبياض شعره

 

ஹாஷிம் மதீனாவில் சலமா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். அந்த அம்மையார் மதீனாவை விட்டு வெளியே வர மாட்டேன் என நிபந்தனை விதித்திருந்தார். அதனால் அவர் மதீனாவிலேயே இருந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த்து. அதற்கு ஷைபா என்று பெயர் வைத்தார். ஹாஷிம் இறந்த பிறகு அவரது மகன் முத்தலிபுக்கு இந்த செய்தி தெரிய வந்தது. அவர் மதீனாவுக்குச் சென்று தனது சகோதரனுக்கு உரிமை கோரினார். அவர்கள் சிறுவரை முத்தலிபோடு அனுப்பி வைத்தார்கள். தனியாளாக சென்ற முத்தலிப் தனது ஒட்டகத்தில் ஒரு சிறுவரை அழைத்து வருவதை பார்த்த மக்கா வாசிகள் உண்மை என்ன என்று தெரியாத நிலையில்  அவரை முத்தலிபின் அடிமை என்று அழைத்தார்கள். ஆனால் அவர் பின்னர் மக்காவின் புகழ்மிக்க தலைவராக உயர்ந்தார்.

 

அப்துல் முத்தலிபின் பெருஞ்சிறப்பு ஜம் ஜம் கிணற்றை தோண்டி எடுத்தார். எடுத்த காரியத்தை முடிக்கும் திறன் அவருக்கு இருந்தது. கஃபாவை இடிக்க வந்த ஆப்ரகா விடம் அவர் பேசிய விதம் அவரது ராஜதந்திரத்தை புலப்படுத்துகிறது. பலரும் ஒத்துழைக்காத போது தனது மகன்களோடு மட்டும் அவர் ஜம் ஜமைத் தோண்டினார். அப்போது கிடைத்த வாள்களில் இருந்த இரும்பை பயன்படுத்தி கஃபாவுக்கு ஒரு வாசல் செய்தார்.

 

ولقب عبد المطلب بالفيّاض.

كان أعظم رجال مكة والجزيرة العربية كان له مجلس عند الكعبة يجلس ويلتف من حوله رجال مكة وقريش يتكلم ويسمعون منه ويحترمونه فقد كان له كلمة على مكة كلها فكان فاتح بيوت لاطعام الحجاج والزائرين وعابري السبيل وكانو يلقبونه بمطعم الانس والوحش والطير وكان له من الإبل ما يخصصه في خدمة الكعبة بيت الله الحرام.

 

அப்துல் முத்தலிப் ஏகத்துவ கொள்க்க உடையவர்.

ஹிரா குகையில் தனித்திருக்கும் பழக்கத்தை பெருமானாருக்கு கற்பித்தவர்.  

.وكان عبد المطلب يرفض عبادة الأصنام ويعترف بوحدانية الله تعالى، وكان يختلي كثيراً بغار حراء ليتفكر في صفات الله وأفعاله، وكانت قريش إذا أصابها قحط شديد تأتي عبد المطلب فتستسقى به فيسقون.

ஆர்ப்பாட்டமில்லாத அவரது ஆளுமை அப்படியே பெருமானாரிடமும் இருந்தது.

 

அந்த அம்சங்களை தனித்தனியாக ஆராய்ந்தால் இன்னும் பல செய்திகள் கிடைக்கும்.

 

அப்துல் முத்தலிப் மக்கவிற்கு அருகிலிருந்த பனூகுஸாஆ எனும் மக்களோடு ஒரு நட்புறவு ஒப்பந்தம் செய்திருந்தார்.  முஹம்மது நபி (ஸ்ல) அவர்கள் ஹிஜ்ரீ 8 ம் ஆண்டு சண்டையில்லாமல் மக்காவை கைப்பற்றுவதற்கு அந்த ஒப்பந்தந்தால் கிடைத்த ஒரு உதவியும் காரணம் வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.

 

முப்பாட்டனார் ஹாஷிம்

பெருமானாரின் குடும்பம் குறைஷி குலத்தில் ஹாஷிம் குடும்பம் என்று அழைக்க்கப்படுகிறது.

அது ஹாஷிமுக்கான சிறப்பாகும்.

 

ஹாஷிம் என்றால் துண்டுபோடுபவர் என்று பொருள். அவர் தனது வீட்டுக்கு முன் ரொட்டியை பல துண்டுகளாக்கி சால்னாவில் அதை ஊற வைத்து வழிப்போக்கர்களுக்காக வைத்து விடுவார். அதனால் அவருக்கு ஹாஷிம் என்ற பெயர் வந்தது. அவரது இயற்பெயர்  அம்ரு என்பதாகும்.

 

ஹாஷிம் அந்த பிராந்தியத்தின் பெருந்தலைவராக இருந்தார். வாதீபுதுஹாவின் தலைவர் என அவர் அழைக்கப்பட்டார்.

 

وهو أول من سن الرحلتين لقريشرحلتي الشتاء والصيف إلى متجرتي اليمن والشام وأول من أطعم الثريد بمكة. يقول ابن إسحاق أن اسمه كان عمرو وأن تسميته هاشم كانت لهشمه الخبز لعمل الثريد بمكة لقومه سنة المجاعة.

அவர் தான் குறைஷிகளின் வியபார பாரம்பரியத்தை தொடங்கி வைத்தவர். இரண்டு பயணங்களில் தங்களது வாழ்கைக்கான வழி களை தேடிக் கொள்ள வழியமைத்துக் கொடுத்தவர்.

 

குறைஷிகளைத் தாண்டி சிந்திக்கிற தலைமைப் பண்பு ஹாஷிமிடமிருந்து பெருமானார் (ஸல்) அவர்களுக்கு கிடைதிருந்த்து..

 

 

முப்பாட்டனார் அப்து மனாப்

أحد سادة مكة وقريش

இவருக்குத்தான் குறைஷிகளின் வியாபாரத் திட்டம் தோன்றியது. ஆனால் அதை இவரது மகன் ஹாஷிம் செயல்படுத்தினார்.

 

முப்பாட்டனார் குஸை

 

பனூகுஸாஆ குலத்திடம் மக்காவை பறிகொடுத்து பல இடங்களிலும் சிதறிச் சென்று விட்ட குறைஷிகளை ஒன்றிணைத்து அவர்களுக்கு வெற்றி தேடிக் கொடுத்த.

குறைஷிகளின் மகத்தான தலைவர். மக்காவை ஆக்ரமிப்பாளர்களிடமிருந்து பேச்சுவார்த்தை மூலமே மீட்டுக் கொடுத்தவர்.  கஃபாவை சுற்றி அது வரை மக்கள் கூடாரங்களிலேயே தங்கியிருந்தனர். அவர்களை வீடமைத்து தங்க வழி வகுத்தவர். கஃபாவை கட்டியவர் அதற்கு கூறை அமைத்தவர்.

 

ويعتبر أشهر رئيس في قبيلة قريش في عصر ما قبل الإسلام حيث أنه انتصر لقريش على باقي قبائل كنانة وخزاعة حينما أخرجهم من مكة وجعل سكنى مكة خاصة لقريش.

 

அவரது இயற்பெயர் ஜைது. அவரது தந்தை இறந்த பிறகு தாயார் இன்னொரு திருமணம் செய்து சிரியாவிற்கு சென்று விட்டார்.  மக்காவிலிருந்து தொலைவான இடத்திற்கு சென்றுவிட்டவர் என்ற அர்தத்தில் அவரை மக்கள் குஸை என்று அழைத்தனர்.

 

குஸைய்யின் மகத்தான ஆர்கணைசிங்க் ஒருங்கிணைப்புத் திறன் முஹம்மது (ஸல்) அவர்களிடம் வெளிப்பட்டது.

 

குறைஷ் என்பது பெருமானாரின் 12 வது பாட்டனார் நழ்ர் பின் கினானாவின் பட்டப்பெயராகும்.

இப்னு அப்பாஸ் ரலி கூறுகிறார்கள்

நுழந் ஒரு கடல்பயணத்தில் திமிங்கலம் போன்ற ஒரு பெரும் பிராணியை எதிர் கொண்டு தனது ஆற்றலால் அதை கொன்று மக்காவிற்கு எடுத்து வந்தார். அதனால் அவருக்கு குறைஷ் என்று பெயர் வந்தது. கர்ஷ் என்றால் கடலை பிளந்து செல்லுதல் என்று பொருள்.  

 

أن النضر كان في سفينة فطلعت عليهم دابة من دواب البحر يقال لها قريش فخافها أهل السفينة فرماها بسهم فقتلها وقطع رأسها وحملها

 

இப்படி பெருமானாரின் பாரம்பரியம் பெரும் புகழுக்கும் தனித்திறமைகளுக்குமான பாரம்பரியமாக திகழ்ந்த்து. அந்த அம்சங்கள் ஒவ்வொன்றும் பெருமானாரிடம் வெளிப்பட்ட்து. இவற்றை அடிப்படையாக கொண்டு இவர்கள் அனைவரும் சாதித்த்தை விட மகத்தான சாதனைகளை முஹம்மது (ஸல்) அவர்கள் நிகழ்த்திக்காட்டினார்கள்.

 

No comments:

Post a Comment