வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, November 11, 2021

காலம் தோறும் தேவைப்படும் ஜீலானி rah

நவீன வாழ்வியல் – வஹாபிஸத்தின் தோல்வி – ஆகியவை இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம் இளைஞர்களை இஸ்லாமிலிருந்து தூரப்படுத்திக் கொண்டிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியிலும் கம்யூனிஸத்திலும் திரடர்கழகத்திலும் இணைவோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

இது ஒரு வகையான அறிவுத்தேடலின் விளைவேயாகும். முஸ்லிம் பெயர் கொண்ட இயக்கங்களின் பத்தாம் பசலித்தனமான நடவடிக்கைகளில் ஏற்பட்டுட்ட அதிருப்தியே இப்படி வேறு திசையில் பயணிக்க இளைஞர்களை தூண்டி வருகிறது.  அத்தகையோர் தங்களை Ex முஸ்லிம் என்று கூறிக் கொள்கிறார்கள்.

லப்பைக்குடிக் காடு என்பது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர். அங்கிருந்து ஒரு இளைஞர் வெளியிட்ட வீடியோவில் தங்களது ஊரில் இப்போது 50 க்கும் மேற்பட்ட திராவிடர்கழக சிந்தாந்தம் கொண்டவர்கள் இருப்பதாகவும் . தமிழ் நாட்டில் இருக்கிற பெரியாரிஸ்டுகள் இந்து மத்த்திலிருக்கிற குறைகளை பேசுகிறார்கள். இஸ்லாம் மத்த்திலிருக்கிற குறைகளை பேசுவதில்லை என்று கூறியிருந்தார்.

ஒரு முஸ்லிமா இப்படி பேசுவது என்று பெரியாரிஸ்டுகளே ஆச்சரியப்பட்டிருப்பார்கள்.   

அறிவுரை கூறியோ, விளக்கம் சொல்லியோ இத்தகையோரை இஸ்லாமின் வழியில் கொண்டு வர முடியாது,

நபி (ஸல்) அவர்களின் நேசம், வலிமார்களின் மீதான பாசம் ஆகியவற்றை ஊட்டுவதன் மூலமே இவர்களை மீட்கவும் எஞ்சியுள்ள இளைஞர்களை தக்க வைக்கவும் முடியும்.

எனவே இன்றைய காலகட்டத்தில் மீலாது விழாக்கள் இறைநேசர்களின் நினைவு நாட்கள் கொண்டாடப்படவேண்டும். அவற்றில் சரியான அளவில் தெளிவான மொழியில் பெருமானார் மற்றும் இறைநேசர்களின் புரட்சிகள் பேசப்பட வேண்டும்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி உலக முஸ்லிம்களின் தனித்த மரியாதையை பெற்ற இறைநேசர் ஆவார்,

 

ஹிஜ்ரி 470 ம் ஆண்டு ரபீஉல் ஆகிர் பிறை 11 அன்று இன்றைய ஈரானின் காஸ்பியன் கடலுக்கு அருகே உள்ள ஜீலான் நகரில் பிறந்து ஹிஜ்ரீ 561 ம் ஆண்டு பஃதாதில் மறைந்த அந்தப் பெருந்தகையை உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் நேசிக்கிறார்கள்.

 

கொளதுல் அஃலம் என்று அழைக்கப்படுகிறார்கள், கெளது என்பது இறைநேசர்களின் ஒரு உயர்ந்த தரமாகும். இத் தரத்திலுள்ளவர்கள் ஒரு சாமானிய மனிதரை இறைநேசராக மாற்ற முடியும் சிறப்புப் பெற்றவராக இருப்பார்.

 

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்கள் தமது காலத்தில் ஏராளமானோர் இறை அருளைபெற உதவியவர் ஆவார். அதாவது வலிமார்களை உருவாக்கியவர்.

 

பஃதாது நகரம் இஸ்லாமிய உலகின் தலைநகராக நீண்ட காலம் இருந்ததால் உலக முஸ்லிம்களுக்கு பஃதாதுடன் தொடர்பு இருந்தது, அதனால் அங்கு மகத்தான சேவை செய்த ஜீலானி ரஹ் அவர்களின் சன்மார்க்க சீர்திருத்தப் பணியின் பலன்கள் உலகம் முழுவதும் சென்றன,

 

இதனாலேயே உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் ஜீலானி ரஹ் அவர்களை நினைவு கூறுகிறார்கள். அவரின் பெயரால் பள்ளிவாசல்கள் மதரஸாக்கள் நடத்துகிறார்கள், பல நற்காரியங்களை செய்கிறார்கள்

 

அவர் பிறந்த காலகட்டத்தில் அதவாவது ஹிஜ்ரீ 6 ம் நூற்றாண்டில் தான் ஜெரூசலத்தை மீட்டுக் கொடுத்த சலாஹுத்தீன் அய்யூபி வாழ்ந்தார்கள். (532 – 589) 

          

ஜீலானி ரஹ் அவர்களின் காலம் ஜெரூசலம் ஐரோப்பிய கிருத்துவர்களிடம் அடிமைப் பட்டு கீர்த்தி மிக்க இஸ்லாமிய உலகு குழப்பத்திற்குள்ளாகி யிருந்த காலகட்டமாகும்.

ஜீலானி ரஹ் அவர்கள் மறைந்து 20 வருடங்களுக்குப் பிறகு தான் ஹிஜ்ரி 581 ல் மிஃராஜுடைய நாளில் சலாஹுத்தீன் அய்யூபி பைத்துல் முகத்தஸைக் கைப்பற்றினார்.

 

முஸ்லிம் உலகு அரசியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் வளர்ந்து பின் ஒரு குழப்பத்திற்கு ஆட்பட்டிருந்த சூழ்நிலையில் தான் ஜீலானி ரஹ் பிறந்தார்கள்.

 

அவரது தந்தை அபூசாலிஹ் உலக வாழ்க்கையின் மீது பற்றற்றரவ்ராக இருந்தார். அவரது வமிசத்தொடர் ஹஸன் ரலி அவர்களில் சென்று முடிகிறது.

 

தாய் நாடான ஈரானில் உள்ள ஜீலானில் ஆரம்ப கல்வியைக் கற்ற பின் 18 வயதில் அப்பாஸிய கலீபா முஸ்தழ்ஹிர் பில்லாவின் ஆட்சிக் காலத்தில் பக்தாதிற்கு  வந்தார்.  

அங்கிருந்த அஷ்ஷைகு அபூஸஈதில் மக்ரமீ அவர்களுடைய மதரஸாவில் சேர்ந்து கல்வி பயின்றார். அந்த இடம் இப்போது பாபுஷ் ஷைகு என்று அழைக்கப்படுகிறது.

 

இந்த கால கட்டத்தில் கல்வி அறிவில் முன்னேறியிருந்த முஸ்லிம்கள் பக்தாதில் தான் தோற்றித்தனமாக போக்கில் சென்று கொண்டிருந்தனர்,

 

இன்றைக்கு இருப்பது போல அரசியல் குழப்பங்களின் அலைகழிப்பால் மக்களை சீர்திருத்தும் ஒரு தலைமை இல்லாமல் இருந்தது,

 

அரசியல் பெரும் தடுமாற்றத்தில் இருந்தது,  பாலஸ்தீனின் பைத்துல் முகத்தஸ் துருக்கியின் அந்தாக்கிய்யா போன்ற பல நகரங்களை ஐரோப்பிய சிலுவையுத்தக் காரர்கள் கைப்பற்றியிருந்தனர்.

 

முஸ்லிம்களின் மைய அரசு வலிமையற்று இருந்ததால் முஸ்லிம் நகரங்களில் அரசர்களும் வாரத்திற்கு வாரம் மாறிக் கொண்டிருந்தார்கள்.

 

கலீபாவுக்கு எதிராக துருக்கிய மன்னர் கொடிபிடித்தார். அவரை அடக்க மன்னர் துருக்கியர்களில் மற்றொரு பிரிவினரான் சல்ஜூக்கியர்களில் உதவியை நாடினார்,

ஜும் ஆவில் அரசர்களின் பெயர்கள் வாரத்திற்கு வாரம் மாறிக் கொண்டிருந்ததாக வரலாறு சொல்கிறது.

 

அரசியல் குழப்பத்திறு நடுவே மத ரீதியாக ஷியாக்களின் குழப்பமும் பக்தாதில் அதிகரித்திருந்தது, இதை சல்ஜூக் மன்னர் கட்டுப்படுத்தியிருந்தார்/

 

இந்தச் சூழலில் சுமார் முப்பது ஆண்டுகள் பக்தாதின் மதரஸாவில்  ஜீலானி ரஹ் மார்க்க கல்வியை கற்றுக் கொண்டிருந்தார். சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

 

அங்கிருந்து 50 கீமி தொலைவிலுள்ள பகூபா நகருக்கு பயணம்.

محمد البعقوبي இடம் சீடராக சேர்ந்தார்

 

அங்கே பல  விசயங்களை கற்றார், குறிப்பாக சத்தியப் பிரச்சாரம் செய்பவர்கள் யாரிடமும் எதையும் கேட்டுப் பெற மாட்டார்கள் என்ற பாடத்தைப் பெற்றார்.

 

பிறகு பக்தாதுக்கு மீண்டு வந்து அபூஸஈதில் மக்ரமீ உடைய மதரஸாவில் இணைந்தார். அவருடை ஷைகு, ஜீலானி ரஹ் அவர்களின் சொல்லில் இருந்த வலிமையை அறிந்து மதரஸாவுக்கு முன்புறமாகவே ஒரு மேடை அமைத்துக் கொடுத்து அங்கிருந்து பயான் செய்யுமாறு கூறினார். கூறினார்.

 

ஆரம்பத்தில் அதை மறுத்த ஷைகு ஜீலானி ரஹ் அவர்கள் பின்னர் அவர்களுடைய கனவில் பெருமானார் (ஸல்) தோன்றி பயான் செய்யுமாறு கூறவே அங்கு பயான் செய்யத் தொடங்கினார்,

 

ஞாயிற்றுக் கிழமை வெள்ளிக் கிழமை செவ்வாய்க் கிழமை என வாரத்திற்கு 3 நாள் பயான் செய்யத்த் தொடங்கினார்.

 

521 ம் வருடம் பயான் தொடங்கியது, அந்த சொற்பொழிவுக்கு பெரும் மனிதரகள் தூரப் பகுதிகளில் இருந்தெல்லாம் வந்தார்கள்.

 

இன்று பயான் செய்வதற்காக அறிஞர்கள் உலகெங்கும் பயணம் செய்கிறார்கள், அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் சொற்பொழுவை கேட்பதற்காக உலகமே பக்தாதுக்கு திரண்டது.

 

உணர்ச்சிமயமான அவரது சொற்பொழிவில் பலர் முஸ்லிம்களாயினர். ஏராளமானோ தம் தவற்றை உணர்ந்து திருந்தி நல்லவர்களானார்கள். ஒரு பெரிய மறுமலர்ச்சி மார்க்கப் புரட்சியும் ஏற்படலாயிற்று,

 

மக்கள் அவரது சொற்பொழிவை மெய் மறந்து கேட்டனர். அவரது தலைப்பாகை அவிழும் எனில் தமது தலைப்பாகையை அவிழ்த்துக் கொண்டனர். ஒவ்வொரு உரையின் போதும் மனமுருகி பலர் உயிர் துறந்தனர். பயானுக்குப் பின்னால் ஜனாஸாத் தொழுகைகள் நடத்தப்பட்டன.  

 

عقد الشيخ أبو سعيد المُخَرِمي لتلميذه عبد القادر مجالس الوعظ في مدرسته بباب الأزج في بداية 521 هـ، فصار يعظ فيها ثلاثة أيام من كل أسبوع، بكرة الأحد وبكرة الجمعة وعشية الثلاثاء.

 

حيث كان الوزراء والأمراء والأعيان يحضرون مجالسه، وكانت عامة الناس أشد تأثراً بوعظه، فقد تاب على يديه أكثر من مائة ألف من قطاع الطرق وأهل الشقاوة، وأسلم على يديه ما يزيد على خمسة الآف من اليهود والمسيحيينوبحسب بعض المؤرخين

 

فانحلت طية من عمامته وهو لا يدري فألقى الحاضرون عمائهم وطواقيهم تقليداً له وهم لايشعرون.

 

அபுஸஈதில் மக்ரமீ வபாத்தான் பிறகு மதரஸாவின் பெறுப்பு ஜீலானி ரஹ் அவர்களிடம் தரப்பட்டது,

ஜீலானி ரஹ் அவர்கள் 13 கலைகளில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்கள்.  ஷாபி ஹன்பலி மத்ஹபின் படு பத்வாக்களை வழங்கினார், சில சந்தர்ப்பங்களில் ஹனபி மத்ஹபின் படியும் பத்வாக்களை வழங்கினார்.

 

இந்தக் காலகட்டத்தில் மதரஸாக்களில் பாலஸ்தீன மீட்பு ஒரு பிரச்சாரமாகவே செய்யப்பட்டது.

 

பெண்களும் இக்கால கட்டத்தில் சிறப்பாக மார்க்க கல்வியை கற்றனர். ஜீலானி ரஹ அவர்கள் தொடர்புடைய மதரஸாக்களில் சட்டம் வழங்கும் முப்தீ பட்டம் பெற்ற 800 பெண்கள் சலாஹுத்தீன் அய்யூபியின் காலத்தில் அரசிதழில் பதிவு செய்யப்பட்டிருந்தனர்.

 

ஜீலானி ரஹ் அவர்களிடம் தான் தோன்றிகளாக போய்க் கொண்டிருந்த மக்களின் அல்லாஹ்வின் பாதைக்கு திருப்பி விட வேண்டிய கடமை இருந்தது, அதை அற்புதமாக செய்தார்கள்,

 

தனது உரையிலேயே மந்திரிகளின் தவறுகளை கண்டித்தார்கள், மந்திரிகள் திருந்தினர்,

அப்போதைய அரசர் பொருத்தமற்ற ஒருவரை நீதிபதியாக நியமித்த போது இதற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டியது வரும் என பயானில் எச்சரித்தார்கள், அரசர் அழுப படியே தன்னுடைய தவறை சரி செய்து கொண்டார்.

 

இன்றைய இளைஞர்கள் ஜீலானி ரஹ் அவர்களின் சேவையையும் துணிச்சலையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

எத்தகை மகத்தான காலத்திற்கு தேவையான சேவையை செய்து முஸ்லிம்களை இஸ்லாமிய வழிக்கு அவர் கொண்டு வந்தார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

அவ்வாறு அவர்கள் செய்த சேவையின் மரியாதை புரிந்து கொண்ட காரனத்தால் தான் உலகின் எந்தப் பகுதியிலும் அவர் ஷைகு என்று அழைக்கப்பட்டார்கள்.

 

சுமார் 35 க்கும் மேற்பட்ட நூல்களை ஷைகு எழுதியுள்ளார்கள் அதிலு குறிப்பிடத்தக்க மூன்று நூட்கள்

 

·         الغُنية لطالبي طريق الحقوهو من أشهر كتبه في الأخلاق والآداب الإسلامية وهو جزءان.

·         الفتح الرباني والفيض الرحمانيوهو من كتبه المشهورة وهو عبارة عن مجالس للشيوخ في الوعظ والإرشاد.

·         فتوح الغيب : وهو عبارة عن مقالات للشيخ في العقائدوالإرشاد ويتألف من 78 مقالة.

 

மக்களின் சிந்தனையை புடம் போட்ட பன்னூற்றுக் கணக்கான அறிவுரைகளை வழங்கினார்கள். அவற்றில் சில

 

குர் ஆன் ஹதீஸ் எனும் இரு சிறகுகளை கொண்டு சத்தியத்தை நோக்கிப் பற!

 

உலக ஆசையை உங்களது இதயத்திலிருந்து கைகளுக்கு வெளியேற்றினீர்கள் எனில் அது உங்களுக்கு இடையூறளிக்க முடியாது,

 

இஸ்முல் அஃலம் என்பது மற்றெந்த சிந்தனையும் இல்லாமல் அல்லாஹ் என்று சொல்லுவதாகும்/

 

உங்களின் இதய வாசலின் காவலாளியாக இருங்கள். அல்லாஹ் அனுமதித்த உள்ளே விடுங்கள். தடுத்தை வெளியேற்றி விடுங்கள். மனோ இச்சையை அனுமதிக்காதீர்கள், அழிந்து விடுவீர்கள்.

 

ஒருவரைப் பற்றி தப்பாக எண்ணம் கொண்டு கூட அவருக்கு அநீதி இழைத்து விடாதீர்கள் , அல்லாஹ் அநீதையை மன்னிப்பதில்லை.

 

தகுதியானவனுக்கு தகுதி அற்றவனுக்கும் உதவி செய்யுங்கள். கூலி தருவது அல்லாஹ்வே,

 

நன்மைகள் அனைத்தையும்  பரிசீலித்தேன், உணவு கொடுப்பதை விட சிறந்த நன்மையாக எதுவும் எனக்கு தெரியவில்லை. இந்த உலகம் என் கையில் இருந்தால் அதை வைத்து பசித்தவர்களுக்கு உணவளித்து விடுவேன்.

 

மூன்று விச்யங்கள் உனது நேரத்தை வீணடித்து விடும்

1.   தவறிப்போனதைப் பற்றி கவலைப் படுவது அது திரும்பவராது,

2.   பிறரோடு உன்னை ஒப்பிட்டுப் பார்ப்பது அது பயனளிக்காது

3.   எல்லா மனிதர்களை திருப்திப் படுத்த நினைப்பது அது நடக்காது

 

·          : طِر إلى الحق بجناحى الكتاب والسنة.

·         وقال: أخرجوا الدنيا من قلوبكم إلى أيديكم فإنها لا تضرُّكم.

·         وقال : الاسم الأعظم أن تقول الله وليس في قلبك سواه

·         وقال : كونوا بوَّابين على باب قلوبكم ، وأدخلوا ما يأمركم الله بإدخاله، وأخرجوا ما يأمركم الله بإخراجه، ولا تُخلوا الهوى قلوبكم فتهلكوا.

·         وقال : لا تظلموا أحداً ولو بسوء ظنِّكم فإنَّ ربَّكم لا يجاوز ظلم ظالم.

·         وقال : إعمل الخير لمن يستحق ولمن لا يستحق و الاجر على الله

·         وقال : فتشت الأعمال كلها ، فما وجدت فيها أفضل من إطعام الطعام ، أود لو أن الدنيا بيدي فأطعمها الجياع .

·         وقال : ثلاث امور تضيّع بها وقتك: التحسّر على ما فاتك لأنه لن يعود، ومقارنة نفسك بغيرك لأنه لن يفيد، ومحاولة إرضاء كل الناس لأنه لن يكون

 

இறை நேசர்களின் தலைவராக ஜீலானி ரஹ் கருதப்படுவதற்கு இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை

 

அவர்களது காலத்தில் தரீக்காக்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து தரீக்காக்களின் ஷைகு மார்களை வரவழைத்து பெரும் தரீக்கா மாநாடு நடத்தினார்கள்., அதில் தரீக்கத் என்ற பெயரில் மாக்கத்திற்கு முரணாக நடக்க கூடாது என்பதை வலியுறுத்திய பிறகு அனைத்து தரீக்காக்களும் பிற நடைமுறையை குறை கூறாமல் நடந்து கொள்ளும் வழி முறைக்கு வித்திட்டார்கள்,

 

இதனால் பல தரீக்காககள் ஒன்றினைந்தன, ஒருவர் பல தரீக்காகளின் நடைமுறையை பின்பற்றும் சுமூகமும் ஏற்பட்டது,

 

இந்த சூழ்நிலைக்குப் பிறகு அனைத்து தரப்பானும் ஜீலானி ரஹ் அவர்களை ஷைகுனா வ ஷைகு கும் என்று அழைத்தனர்.

 

இரண்டாவது அதிகமான கராமத்துக்கள் ஜீலானி ரஹ் அவர்களிடமிருந்து வெளிப்பட்டன. அது கண்ட மக்கள் அவரது சொல்லுக்கு கட்டுப்பட்டனர்.  

 

·         قال الإمام النووي : ما علمنا فيما بلغنا من التفات الناقلين وكرامات الأولياء أكثر مما وصل إلينا من كرامات القطب شيخ بغداد محيي الدين عبد القادر الجيلاني، كان شيخ السادة الشافعية والسادة الحنابلة ببغداد وانتهت إليه رياسة العلم في وقته, وتخرج بصحبته غير واحد من الأكابر وانتهى إليه أكثر أعيان مشايخ العراق وتتلمذ له خلق لا يحصون عدداً من أرباب المقامات الرفيعة,

·          وكان جميل الصفات شريف الأخلاق كامل الأدب والمروءة كثير التواضع دائم البشر وافر العلم والعقل شديد الاقتفاء لكلام الشرع وأحكامه معظما لأهل العلم مُكرِّماً لأرباب الدين والسنة, مبغضاً لأهل البدع والأهواء محبا لمريدي الحق مع دوام المجاهد ولزوم المراقبة إلى الموت. وكان له كلام عال في علوم المعارف شديد الغضب إذا انتهكت محارم الله سبحانه وتعالى سخي الكف كريم النفس على أجمل طريقة. وبالجملة لم يكن في زمنه مثله 

வபாத்து.

 

توفي الإمام الجيلاني ليلة السبت 10 ربيع الثاني سنة 561 هـ،جهزه وصلي عليه ولده عبد الوهّاب في جماعة من حضر من أولاده وأصحابه، ثم دفن في رواق مدرسته، ولم يفتح باب المدرسة حتى علا النهار

 

இன்றைய சூழலில் புரட்சிகரமான உரைகளில் மயங்கி மார்க்கத்தை இழக்கும் மக்களுக்கு அப்துல் காதிர் ஜீலானி ரஹி அவர்களின் புரட்சிகர வாழ்வு இன்னும் விரிவாக தெளிவாக எடுத்துச் செல்லப் பட வேண்டும்.

3 comments:

  1. காலத்திற்கு தேவையான செய்திகள். பாரகல்லாஹ்..

    ReplyDelete
  2. அருமையான பதிவு

    ReplyDelete
  3. அருமையான பதிவு

    ReplyDelete