ரஜப் மாதம் பிறந்து விட்டது.
عَنْ
أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ
وَسَلَّمَ إِذَا دَخَلَ رَجَبٌ قَالَ: (اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ،
وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ)
ரமலானுக்காக தொடர்ந்து பிரார்த்திக்கும் பழக்கம் முன்னோர்களிடம்
இருந்தது.
قال الحافظ ابن رجب رحمه الله:
"قال معلى بن الفضل: كانوا يدعون الله تعالى ستة أشهر
أن يبلغهم رمضان، ويدعونه ستة أشهر أن يتقبل منهم.
ஒரு நெருக்கடியிலிருந்து மீண்டுவருகிற நாம் உளமுருக பிரார்த்திப்போம்.
பிப்ரவரி முதல் நாள் உலக ஹிஜாப் நாளாக கருதப் படுகிறது.
நாங்கள் ஹிஜாபி டா என பர்தா அணிந்த முஸ்லிம் பெண்கள் பாடும் பாடல்கள் சில நேற்றை முக நூல் பக்கங்களில் பிரபலமாகி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இதில் நாம் சிந்திப்பதற்கு பல செய்திகள் இருக்கின்றன.
பெண்கள் அணியும் பர்தா எனும் ஹிஜாப் உலக அளவில் முஸ்லிம்களை முதன்மையாக அடையாளப்படுத்தும் அம்சங்களில் ஒன்றாகும். இஸ்லாம் இந்த உலகில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கும அடையாளமுமாகும்
உலகின் எந்த மூலையிலும் ஒரு பர்தா அணிந்த முஸ்லிம் பெண் இருக்கிறார். அவர் இஸ்லாமை சிறப்பாக நினைவூட்டுகிறார்.
பர்தா அணியும் பெண்கள் இதை உணர வேண்டும். நமது வீட்டிலுள்ள பெண்களுக்கு இதை உணர்த்த வேண்டும்.
பர்தா ஒரு ஆடை
மட்டுமல்ல. அது ஒரு மகத்தான இயல்பு,
பெண் என்றால் தன் அழகை காட்டி மற்றவர்களை ஈர்ர்க்க கூடியவள் என்கிற ஒரு கேவலமான சிந்தனையிலிருந்து பெண்ணினத்தை மீட்டு என் அழகு நான் விரும்புகிறவர்களுக்கு மட்டுமே காட்டப்படும் என்கிற துணிச்சல் மிக்க மனோ நிலைக்கு பெண்களை இட்டுச் சென்ற அற்புதமான ஏற்பாடு.
ஒரு எதார்த்த்தில் இன்றைய உலகில் ஆடைகளை துறந்து வாழ்கிற பெண்கள் அல்ல. பர்தா அணிகிற பெண்களே அதிக சுதந்திர உணர்வு கொண்டவர்கள்.
இந்த செய்தியை உலகிற்கு உணர்ந்த்துவதற்காகவே உலக ஹிஜாப் நாளை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசிக்கும் நாளிமா கான் என்கிற பெண்மணி துவங்கினார்.
2001 செப்டம்பர் 11 இரட்டை கோபுரத் தகர்ப்பிற்கு பிறகு அமெரிக்காவில் இஸ்லாமி அடையாளங்கள் மீது அதிருப்தி ஏற்பட்டிருந்த சூழலில் பங்களாதேஷிலிருந்து தனது 11 வயதில் அமெரிக்காவில் குடியேறிய நாழிமா கான் தான் படித்த பள்ளிக் கூடம் கல்லூரி என அனைத்து இடங்களிலும் பர்தாவை பேணினார். அவரது அறிவார்த பண்புமிக்க பணிவான நடவடிக்கைகளால அவர் பலராலும் ஈர்க்கப்பட்டார். அவர் 2013 ஆண்டு பிப்ரவரி 1 ம் நாளை ஹிஜாப் நாளாக கொண்டாட முடிவு செய்து அன்றைய தினம முஸ்லிம் பெண்களும் மற்ற பெண்களும் பர்தாவை அணியும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தார். பல நிறுவன்ங்களுக்கும் இதைப் பற்றி எழுதினார். அவரது நிகழ்ச்சியில் பல வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உடலை திறந்து காட்டும் நிகழ்வைப் போல மூடிவைக்கும் முடிவும் சுதந்திரம் சார்ந்த்து என ஒப்புக் கொண்டனர். 2017 ம் ஆண்டு நியூயார் மாநில சட்டமன்றம் நாளிமா கானின் கோரிக்கையை ஏற்று பிப்ரவரி முதல் நாளை ஹிஜாப் நாளாக அறிவித்தது. அன்றைய தினம் நடைபெற்ற சட்டமன்ற கூட்ட்த்தில் இதற்காக ஒரு நிகழ்வு நடத்தப்பட்டது. அதில் அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் தெரஸா மே கலந்து கொண்டார். 2021 ம் ஆண்டு பிலிப்பைன் அரசு முஸ்லிம்களின் கலாச்சாரத்தை புரிந்து கொள்ளுதல் என்ற அடிப்படையில் பிப்ரவரி முதல் நாளை உலக ஹிஜாப் நாளாக கொண்டாட அங்கீகாரம் அளித்தது. இப்ப்பொது சுமார் 116 நாடுகளில் அது கொண்டாடப்படுகிறது.
இந்த புதிய உத்வேகத்தை கண்டு ஆத்திரமுற்ற பலர் தொடர்ந்து அதை எதிர் எழுதிக் கொண்டும் செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.
நேற்றைக்கு முன் தினம் கர்நாடக மாநிலத்தில் ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்த பெண்களை கல்லூரிக்குள் அனுமதிக்க கூடாது என இந்துத்துவ சக்திகள் மிரட்டியதால் கல்லூரி நிர்வாகம் பர்தா அணிய தடை செய்த்து அதை மீறி மாணவிகள் பர்தா அணிந்து வந்து கல்லூரி வாசலில் போராட்ட்த்தில் அமர்ந்தனர்
பர்தாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். எந்த வகையிலும் கல்லூரிகளின் ஒழுங்கு நடவடிக்கையை மீறாத பர்தாவை கல்லூரிகள் அனுமதிக்க வேண்டும்.
இதில் சில பேர் உங்களது உடை விவகாரத்திற்காக கல்வியை இழக்க வேண்டாம் என்று அறிவுரை கூறுகிறார்கள். அத்தகையோர் உடை விவகாரத்திற்காக கல்வியை தடுக்க வேண்டாம் என பர்தா எதிர்ப்பாளர்ளிடம் கூறும் துணிச்சல் அற்றவர்களாவர்.
பர்தாவின் உடையிலேயே டாகடர்களாக விஞ்ஞானிகளாக பைலட்டுகளாக விளையாட்டு வீராங்கனைகளாக சாதித்துக் காட்டும் பெண்கள் இன்று உலகம் முழுவதிலும் நிறைந்து காணப்படுகிறார்கள் .இன்று இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கல்வி தொழில்வாய்ப்புகள் அதிகாரப் பொறுப்புக்கள் அணைத்திலும் பர்தா அணிந்த பெண்கள் முன்னிற்கிறார்கள்.
பர்தாவுக்கு எதிரான பிஜேபி கட்சி கூட தனது கட்சியிலிருக்கிற இந்துப் பெண்களை பர்தா அணிய வைத்து கூட்டம் கூட்டுகிறது.
இன்றைய சூழலில் பர்தா அணிகிற ஒவ்வொரு பெண்ணும் உணர்ந்து கொள்ள வேண்டிய செய்தி இது
பர்தா பெண்ணின்
சுதந்திரத்தின் அடையாளம்.
அடுத்த பர்தா அணியும் பெண்கள் ஒவ்வொருவரும் நினைவில் வைக்க வேண்டி ஒரு செய்தி உண்டு.
பர்தா அணியப்படும் ஒவ்வொரு இடத்திலும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சாதனையை அவர் வெளிப்படுத்துகிறார். உமர் ரலி அவர்களை நினைவு கூறுகிறார்.
முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தனிப்பட்ட சாதனையாகும்.
பெண்கள் தம்மை மறைத்துக் கொள்ளுதல் என்பது காலம் காலமாக இருந்து வந்திருக்கிறது, அதற்கு சித்ருல் அவ்ரத் என்று பெயர். அதன் அளவுகளில் மாறுபாடு இருர்ந்தாலும் அந்த சிந்தனை பொதுவாகவே இருந்திருக்கிறது. பெண்கள் வரலாறு நெடுகிலும் எல்லா இடங்களிலும் ஆண்களைப் போல தங்களது உடலை பொது இட்த்தில் வெளிப்படுத்துகிறவர்களாக இருக்க வில்லை.
இஸ்லாமின் தொடக்க காலத்தில் பெண்களின் அவ்ரத் மறைக்கப்பட வேண்டிய பகுதி எது என்பது முடிவு செய்யப் பட்டது . பெண்களின் முகம் கை பாதம் தவிர அனைத்தும் அவ்ரத்தே என்று இஸ்லாம் தீர்மாணித்த்து, அதனடிப்படையிலேயே தொழுகைக்கான ஆடை ஒழுங்கு தீர்மாணிக்கப் பட்டிருந்தது,
ஹிஜ்ரீ 5 ம் ஆண்டில் முஹம்மது நபி (ஸல் அவர்கள் ஜைனப் பின் து ஜஹ்ஷ் அம்மையாரை திருமணம் செய்த போது அதற்காக வலீமா விருந்து கொடுத்தார்கள். அப்போது அவர்களது வீட்டிற்கு வந்த விருந்தினர்களால் ஜைனப் அம்மையார் சங்கடப் பட்டார்கள். அதைப் பார்த்து உமர் ரலி அவர்கள் பெருமானார் (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே உங்களிடம் நல்லவர்களும் வருகிறார்கள் கெட்டவர்களும் வருகிறார்கள் நீங்கள் ஏன் பெண்களை பர்தாவிற்குள் வைக்க கூடாது என்று ஆலோசனை கூறினார்கள், அதை ஏற்று அல்லாஹ் பெண்களிடம் திரைமறைவில் தான் அன்னியர்கள் பேச வேண்டும் என்ற சட்ட்த்தை அல்லாஹ் அருளினான். அதுவே பர்தாவின் தொடக்க நிலையும் பர்தா குறித்த முதல் வசனமும் ஆகும்.
حديث أنس في صحيح البخاري أن عمر بن الخطاب قال: يا رسول الله ! يدخل عليك البر والفاجر، فلو أمرت أمهات المؤمنين بالحجاب، فأنزل الله آية الحجاب. ولما نزلت حجب النبي نساءه عن الرجال الأجانب، وحجب المسلمون نساءهم عن الرجال
இந்த வசனம் பல செய்திகளை முக்கியத்துவப்படுத்துகிறது, ஆண்களும் பெண்களும் இதை கவனிக்க வேண்டும்.
முதலாவது பர்தா என்பது உடலை மறைக்க் அணிகிற ஆடைக்கு மேலே ஒரு போர்வை போர்த்திக் கொள்வதாகும். அதில் அவர்களது உடல் அவயவங்கள் வெளிப்படாது. ஜில்பாபு எனும் வார்த்தை இதை குறிக்கிறது.
அவர்கள் யார் என்பது வெளியே தெரியாத வகையில் இருக்க வேண்டும். ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ என்ற வார்த்தை இதை குறிக்கிறது.
யார் என்பது பொதுவாக வெளியே தெரியக் கூடாது என்று சொல்வதால் அவசியத்திற்கு அடையாளம் காட்டப் பட வேண்டிய இட்த்திலும் வெளிப்படக் கூடாது என்பது பொருளல்ல. உதாரணத்திற்கு ஆதார் பாஸ் போர்ட போன்றவற்றிற்கு அல்லது பணியாற்றும் இடங்களில் அவசியத்திற்கு வெளிப்படுத்துவதில் தவறில்லை.
அதே போல பர்தாவின் நோக்கம் பெண்கள் தொல்லைக்கு ஆளாக கூடாது எனபதாகும் , பர்தா அணியும் ஒவ்வொரு பெண்ணும் நினைவில் வைக்க வேண்டிய செய்தி இது. பெண்களை தீயவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவே பர்தா நடை முறை அமுல் படுத்தப்பட்டுள்ளது. அவர்கலை அடிமை படுத்தி வைப்பதற்கல்ல என்ற பிரகடணத்தை فَلَا يُؤْذَيْنَ என்ற வார்த்தை புலப்படுத்துகிறது.
இன்றைய ஒரு அப்பட்டமான எதார்த்தம் இது. அழகான பெண்கள் தங்களை மறைத்துக் கொண்டால் பல்வேறு வகையான இன்னல்களிலிருந்து தப்பிக்கலாம். பர்தா அணிந்திருக்கிற முஸ்லிம் பெண்களிடமிருந்து தீய சக்திகள் விலகிவிடுவதை நாம் பார்க்கலாம். .
பர்தா வில் வெற்றி அடைவதற்கு அடுத்து இஸ்லாம் கூறியது.
وَلا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا
يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعاً أَيُّهَا
الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ) النور/31
பெண்கள் நயந்து குலைந்து பேசுவதே கூட தவறானது.
பர்தா பெண்சுதந்திரத்தின் உண்மையான அடையாளம்.
பர்தா முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய
மார்க்கம் உமர் ரலி போன்றவர்களை உலகிற்கு நினைவூட்டும் அடையாளம். அது வெறும் ஆடை
மட்டுமல்ல.
பர்தா பெண்களின் அடையாளத்தை மற்றவர்களிடமிருந்து மறைத்து அவர்களை பாதுகாக்கிறது.
இந்த மூன்று விசயங்களை சரியாக புரிந்து கொள்ளும் போது பர்தாவின் பலமும் புரிய வரும் உண்மையான பர்தா எது என்பது தெரியவரும் .
அது புரிய வரும் போது இன்றைய பர்தாக்கள எப்படி இருக்கின்றன என்பதையும் இன்றைய பர்தாக்கள் உண்மையான ஹிஜாபா அல்லது ஹிஜாபின் பெயரிலான அழகு சாதனமா என்பதையும் இன்றைய ஹிஜாப் டேயில் நம்மை சிந்திக்க வைக்கும்.
அல்லாஹ் கிருபைசெய்வானாக!
No comments:
Post a Comment