முஸ்லிம் பெண்கள்
அன்னிய ஆண்களின் முன்னிலையில் பர்தா அணிந்து கொள்ள வேண்டும் என இஸ்லாம் உத்தரவிடுகிறது.
﴿يَا أَيُّهَا
النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ
عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ﴾59 من سورة
الأحزاب :
சொந்தமாக இல்லை என்றால் இரவலாகவேனும்
அணியட்டும்.
عن أم عطية رضي الله عنها قالت: أمرنا رسول الله ﷺ أن نخرجهن في الفطر والأضحى، العواتق، والحُيَّض، وذوات الخدور،
أمَّا الحيض فيعتزلن الصلاة ويشهدن الخير ودعوة المسلمين، قلت: يا رسول الله!
إحدانا لا يكون لها جلباب؟ قال: لتلبسها أختها من جلبابها.
ஹிஜாப் என்பது பாதுகாப்பு
يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ
وَنِسَاء الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ذَلِكَ
أَدْنَى أَن يُعْرَفْنَ﴾ فَلَا يُؤْذَيْنَ﴾
ஹிஜாப் என்பது
பரிசுத்தம்
الحجاب طهارة : يقول
الله تعالى : ﴿وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِن وَرَاء
حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ﴾
ஹிஜாப் என்பது
ஈமானிய குணம்
الحجاب من الإيمان : لأن الله لم يخاطب بالحجاب إلا المؤمنات، ﴿وَقُل لِّلْمُؤْمِنَاتِ﴾ . ولما دخل نسوة من بني تميم على أم المؤمنين عائشة رضي الله عنها، عليهن ثياب رِقاق، قالت: «إن كنتن مؤمنات فليس هذا بلباس المؤمنات ، وإن كنتن غير مؤمناتٍ
فتمتعن به»
அது ஆபாசத்தை பரப்பும் வழி என்று குர் ஆன் எச்சரிக்கிறது.
அல்பிகுஹு அலல் மதாஹிபில் அர்பா வில்
قال الجزيري:[]«عورة المرأة عند الشافعية والحنابلة جميع بدنها، ولا يصح لها أن تكشف أي جزء من جسدها أمام الرجال الأجانب، إلا إذا دعت لذلك ضرورة كالطبيب المعالج، والخاطب للزواج، والشهادة أمام القضاء، والمعاملة في حالة البيع والشراء، فيجوز أن تكشف وجهها و كفيها. وعورة المرأة عند الحنفية والمالكية جميع بدن المرأة إلا الوجه والكفين، فيباح للمرأة أن تكشف وجهها وكفيها في الطرقات، وأمام الرجال الأجانب. ولكنهم قيدوا هذه الإباحة بشرط أمن الفتنة. أما إذا كان كشف الوجه واليدين يثير الفتنة لجمالها الطبيعي، أو لما فيهما من الزينة كالأصباغ و المساحيق التي توضع عادة للتجمل أنواع الحلي فإنه يجب سترهما
பர்தா விவகாரத்தில் இஸ்லாமிய வழிகாட்டுதல் என்ன என்பதற்கு இதற்கே மேல் வழிகாட்டுதல்கள் தேவையில்லை என்பதே காலகாலமாக முஸ்லிம் உம்மத் கடைபிடித்து வருகிற நடைமுறையாகும்
கர்நாடக மாநிலத்தில் உடுப்பியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 6 பெண்கள் ஹிஜாப் அணிந்து சென்ற போது தடுக்கப் பட்டார்கள். அவர்கள் தனியறையில் அமர வைக்கப் பட்டார்கள்.
அந்தப் பள்ளிக்கூட்த்தின்
நிர்வாக குழுவில் ஆளும் பாஜக பிரமுகர் ஒருவர்
இருந்தார். அவரே இந்த தடையுத்தரவுக்கு காரணம் .
அதன் பிறகு உடுப்பியிலிருந்த ஒரு அரசு கல்லூரியில் பர்தா அணிந்து வந்த பெண்களை அக்கல்லூரியின் முதல்வரே வாசலில் தடுத்து கேட்டை பூட்டினார்.
அதன் பிறகு கடந்த வியாழன் அன்று மாண்டியாவிலுள்ள ஒரு கல்லூரிக்கு பர்தா அணிந்து வந்த பி காம் இரண்டாம் வகுப்பு மாணவியான பீபி முஸ்கான் கானை வழி மறித்தும் எதிர்த்தும் காவித் துண்டு அணிந்த மாணவர்கள் என்ற போர்வையில் சிலர் ஜெய்ஷிரீ ராம் கோஷமிட்டு அச்சுறுத்த முய்றச்சி செய்தனர். ஒரு கட்டத்தில் அந்த இளம் பெண் அவர்களை தன்னந்தனியாக எதிர்த்து அல்லாஹ் அக்பர் என்று கோஷமிட்டார். அவரை கல்லூரி ஆசிரியர்கள் பாதுகாப்பாக கல்லூரிக்கி அழைத்துச் சென்றனர்.
இது மிகப்பெரிய செய்தியாக இன்று உலகம் முழுவதிலும் பேசப்படுகிறது. புர்கா அணிந்த நிலையில் கையை உயர்த்தி நிற்கும் முஸ்கான் கானின் புகைப்படம் இப்போது உலக போஸ்டர் புகைப்படமாக மாறியிருக்கிறது. அந்தப் பெண்மணிக்கு பலர் விருதுகளையும் பரிசுகளை அறிவித்துள்ளனர். நாடாளுமன்றம் உள்ளிட்ட பல அவைகளிலும் அவரது பெயர் நினைவு கூறப்படுகிறது.
உலக முஸ்லிம் சமுதாயமும் அதை கொண்டாடி வருகிறது.
இதில் முஸ்லிம்கள் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் என்ன வெனில்
ஆட்சியதிகாரம் தமது கையில் இருப்பதால் நமது நாட்டில் இந்துத்துவ சக்திகள் எந்நேரமும் எதாவது ஒரு வகையில் முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கு முயற்ச் செய்து கொண்டே இருப்பார்கள். அந்த நேரத்தில் அதை முழு தீரத்தோடு எதிர்க்க வேண்டும். அச்சப்படக் கூடாது. நடுங்கி நிற்கக் கூடாது. நமது தரப்பில் அநீதி எதுவும் இல்லை என்றால் உலகம் நம் பக்கமே நிற்கும். அல்லாஹ்வின் உதவியும் நிச்சயம் கிடைக்கும்.
தம்மை சுற்றி வெறியூட்டப்பட்ட ஆணகள் கூக்குரலிட்ட போது அதை எதிர்த்து அல்லாஹ் அக்பர் என்று முஸ்கான் குரல் எழுப்பியதே சரியான ஜிஹாதாகும்.
عَنْ أبي سعيدٍ الخدري - رضي الله عنه- عنِ النَّبي صلَّى اللهُ عليه وسلَّم قال: «أفضلُ الجهادِ كلمةُ عدلٍ عند سلطان جائرٍ" رواه أبو داود،
நமது உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடும் இயல்பும் எப்போதும் நம்மிடம் இருக்க வேண்டும் என்பதை தான் பெருமானார் (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்.
أن النبي صلى الله عليه وسلم قال الخيل معقود في نواصيها الخير إلى يوم القيامة
நமது நாட்டில் முஸ்லிம் பெண்களுக்காகவே கோஷா ஹாஸ்பிடல் கோஷா பார்க்குகள் கூட
உண்டு.
கர்நாடக அமைச்சர் ஒருவர் நடந்தது என்ன என்பதை வஞசகமாக மறைத்து ஒன்றும் தெரியாதவர் போல் இப்படி பேசியிருப்பது பத்ரிகைகளில் வெளியானது.
முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து வருவது வழமையானது. ஆனால் இந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து வருவது திட்டமிட்ட ஒரு வன்முறை நடவடிக்கை.
அஸதுத்தீன் உவைசி அருமையாக கேட்டார்
எனது மகளுக்கு நான் பர்தா அணிவித்து அனுப்புகிறேன். இந்து மாணவர்களுக்கு காவி துண்டு அணிவித்தது யார் ? விசாரித்துச் சொல்லுங்கள்!
கிருத்துவர்களிடம்
வெறுப்புணர்வை விதைக்கும் முகமாக பிரான்ஸ் அரசு முஸ்லிம் பெண்கள் நிகாப் எனும் முகத்திரை அணிவரை தடை செய்த்து.
பிரான்ஸில் பர்தா அணிந்து சென்ற பெண் கத்திக் குத்துக்கு ஆளானார். நிகாப் அணிந்த்தற்காக
முஸ்லிம் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்ட்து. இப்போது அல்லாஹ் எல்லோரையும் முகத்திரை
அணியச் செய்துவிட்டான். மருத்துவர்களும் கொரோனா பணியாளர்களும் இப்போது முழு பர்தா அணிந்து
தான் பணி செய்கிறார்கள். மாஸ்க் அணிந்து ஈபில் டவருக்கு கீழ் நிற்கிற ஒரு பெண்ணின்
புகைப்பட்த்தை சமீபத்தில் ஓரு ஆங்லப்பத்ரிகை வெளியிட்டிருந்த்து. அது அர்த்தம் நிறைந்த்து.
முஸ்தபா கமால்
போன்ற பல முஸ்லிம்களே கூட பர்தாவுக்கு எதிராக தங்ளது அதிகாரத்தை பயன்படுத்தி யிருக்கிறர்கள்.
வரலாறு என்ன காட்டுகிறது என்றால் அத்தகையோர் தோல்வியை சந்தித்திருக்கீறார்கள்
ஏனெனில் பர்தா
என்பது பெண்களின் உரிமைகளையும் உடலையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதற்கான ஆடை .அறிவுள்ளவர்கள்
இதை புரிந்து கொள்ள அதிக காலம் பிடிக்காது.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
Masha Allah
ReplyDeleteகாலத்திற்கேற்ற சிந்தனை
ReplyDelete