தமிழக உள்ளாட்சித் தேர்தல் 10 வருடங்களுக்கு பிறகு இப்போது நடைபெறுகிறது.
தமிழக அரசை பாராட்டுகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளாக
மக்களுக்கான உள்ளாட்சி அதிகாரத்தை தங்களது சொந்த இலாபத்திற்காக தொகுதி வரை - வாக்களர்
சேர்ப்பு என்ற காரணங்களை சொல்லி அப்போதை ஆளும் கட்சி தடுத்து வைதிதிருந்து.
ஒரு எதார்த்த்த்தி
அந்த கட்சியை சார்ந்தோர் இந்த தேர்தலில் ஓட்டுக் கேட்டு வருகிற போது கடந்த 10 ஆண்டுகளாக
இந்த ஜனநாயக உரிமையை தடுத்து வைத்திருந்தீர்களே ஏன் ? இப்போது ஏன் வருகிறீர்கள் என்று
மக்கள் கேட்க வேண்டும். ஆனால் மக்கள் எதையும் கேட்பதில்லை. தேர்தல் வரும் போது ஓட்டுப்
போடுவதை மட்டும் ஒரு இயந்திரப் பணியாக செய்து விட்டு வந்து விடுகிறார்கள்.
உள்ளாட்சி மன்ற
நிர்வாகிகள் என்போர் நமக்கு மிக நெருக்கமாக
தேவைப்படக் கூடிய மக்கள் பிரதிநிதிகள் ஆவர்.
வீட்டில் தண்ணீர்
வரவில்லை என்றாலோ தெரு விளக்கு எரியவில்லை என்றாலோ சாக்க்டை அல்லது குப்பை பிரச்சனை
என்றாலோ ஏழை எளிய மக்கள்ளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் உதவித் தொகைகளை பெறுவது என்றாலோ
அதில் வீட்டுப் பிள்ளையைப் போல உதவி செய்ய வேண்டியவர் ஆவார்.
பொறுப்பிள்ளாத
இலட்சப் பேர்வழிகளை நாம் தேர்ந்தெடுத்து விட்டால் இந்த ஒவ்வொரு காரியத்திற்காகவும்
நாம் அதிகம் சிரமப்பட வேண்டியதாகிவிடும். சென்னையில் ஒரு வீட்டு உரிமையாளர் சொன்னார்.
ஒரு மராமத்து பணிக்காக கொஞசம் செங்கல்லையும் மண்லையும் வீட்டு முன் இறக்கி வைத்தான்.
எப்படித்தான் கவுன்சிலிருக்கு மூக்கு வேர்த்த்தோ தெரிர்யவில்லை. அதெப்படி என்னிடம்
தெரிவிக்காமல் நீங்கள் வேலை செய்யலாம் என்று சண்டைக்கு வந்து பிச்சை காசை பெற்றுக்
கொண்டுதான் வேலையை பார்க்க விட்டான் என்றார்.
ஆகவே உள்ளாட்சித்
தேர்தலுக்கான வேட்பாளைர்களை தேர்வு செய்யும் போது நமக்கு நன்கு அறிமுகமான மக்கள் பணி செய்யக் கூடியவரா என்பதை பார்த்தே தேர்வு
செய்ய வேண்டு.
கட்சி இயக்கம்
என்பதை எல்லாம் இந்த தேர்தலிலாவது ஓரங்க கட்டி வைக்க ஜனநாயகத்தின் காவலர்களான பொதுமக்களுக்கு
தெரிந்திருக்க வேண்டும்.
இல்லை எனில் இலஞ்சப்
பேர்வழிகள் அதிகாரத்திற்கு வந்து விடுவார்கள். அவர்கள் மக்களின் பொதுக் காசை மட்டுமல்ல.
நமடு பாக்கெட்டில் இருக்கிற சொந்தக் காசை கூட பறித்து விடுவார்கள்.
ஒரு காலத்தில்
மக்களின் தனிப்பட்ட விவகாரங்களை அரசர்கள் அதிபர்களே நேரடியாக கவனித்துக் கொண்டார்கள்.
மக்கள் தங்களது
பிரச்சனையை அரசரிடம் சொல்ல வேண்டுமானால் ஜும் ஆ தொழுகைக்கு வரும் போது ஒரு குறிப்பிட்ட
அடையாளத்துடன் வந்தால் போதுமானது என மாமன்னர் இல்துமிஷ் டில்லியில் நடை முறை வைத்திருந்தார்.
பல மன்னர்களுக்கு
வீட்டு முற்றத்தில் ஆராய்ச்சி மணி வைத்திருந்தார்கள். தேவை உடையோர் அந்த மணியை அடித்தால்
அரசரே நேரடியாக பிரச்ச்னைகளை கேட்டறிவார்.
தமிழ் மன்னர்கள்
முரசு கட்டில் (நகரா) வைத்திருந்தார்கள் என்று
தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
பார்வையற்ற கிழவிக்கு
தினமும் உதவி செய்த கலீபாகள்
فروى الحافظ ابن عساكر في "تاريخه" (30/
322) من طريق رشدين عن الحجاج بن شداد عن أبي صالح الغفاري
:
أن عمر بن الخطاب كان يتعاهد عجوزا كبيرة عمياء في
بعض حواشي المدينة من الليل ، فيستقي لها ويقوم بأمرها، فكان إذا جاءها وجد غيره
قد سبقه إليها، فأصلح ما أرادت، فجاءها غير مرة كيلا يسبق إليها، فرصده عمر، فإذا
هو بأبي بكر الصديق الذي يأتيها، وهو يومئذ خليفة ، فقال عمر : " أنت هو
لعمري " .
மக்களின் தேவையை நேரில் கண்டிட்ட முயற்சியடித்த கலீபா
உமர் ரலி அவர்கள் இரவில் மக்களின் நிலையை அறிய நகர்வலம் செல்வார்கள். ஒரு நாள்
ஒரு குடிசையில் பாலி தண்ணீரை களக்குமாறு ஒரு தாய் கூறிய போது அம்மா உமரின் ஆட்சியில்
அப்படி செய்யலாமா என்று அவரது மகள் கேட்டார். உமர் என்ன பார்த்துக் கொண்டா இருக்கிறார்
என்று அம்மா சொல்ல உமரின் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று மகள்
இதில் மகிழ்ச்சியடைந்த உமர் ரலி அந்தப் பெண்ணை தனது மகனுக்கு திருமணம் செய்து
கொடுத்தார்கள்.
ஒவ்வொரு நாள் வெளியே புறப்படும் போதும் வாசலி நின்று “ உமரின் இறைவன் பார்த்துக்
கொண்டிருக்கிறார்ன் என்று கூறும் ஒரு நடைமுறை வைத்திருந்தார்கள்.
إن
كان عمر لا يراناِِ فإن رب عمر يراناِِ
قال
أسلم: بينما أمير المؤمنين عمر رضي الله عنه، يعس في بعض الليالي إذ عيي فاتكأ على
جانب جدار في جوف الليل، وإذا بامرأة تقول لابنة لها: قومي إلى ذاك اللبن فامذقيه
بالماء ـ أي اخلطيه بالماء ـ فقالت لها: يا أماه أو ما قد علمت بما كان من عزمة
أمير المؤمنين؟ قالت: وما كان من عزمته يا بنية؟ قالت: انه أمر مناديه فنادى: لا
يشاب اللبن بالماء، فقالت لها: يا بنية قومي إلى اللبن فامذقيه بالماء فإنك بموضع
لا يراك فيه عمر ولا منادي عمر ـ وعمر يسمع هذه المحاورة بين الأم وابنتها ـ فقالت
البنت: يا أماه ان كان عمر لا يرانا ولا يعلم، فإله عمر يرانا ويعلم، والله ما كنت
لأطيعه في الملأ وأعصيه في الخلاءِ
وأعجب
عمر بجواب الفتاة ووقعت مقالتها منه موقعا عظيما، فقال: يا أسلم علم الباب وأعرف
الموضع، ثم مضى في عسه، فلما أصبح قال: يا أسلم امض إلى الموضع فانظر من القائلة،
ومن المقول لها، وهل لهما من بعل؟ قال أسلم: فأتيت الموضع فنظرت فإذا الجارية من
بني هلال أيم لا بعل لها، وإذا تيك أمها ليس لها بعل، فأتيت عمر وأخبرته، فدعا عمر
ولده عبدالله وعبدالرحمن وعاصما وقال: هل فيكم من يحتاج إلى امرأة فأزوجه؟ لو كان
بأبيكم حركة إلى النساء ما سبقه منكم أحد إلى هذه الجارية، فقال عبدالله: لي زوجة،
وقال عبدالرحمن: لي زوجة، وقال عاصم: يا أبتاه لا زوجة لي فزوجني، فبعث إلى
الجارية، فزوجها عاصم، فولدت له محمدا وبنتا هي أم عاصم، فتزوجها عبدالعزيز بن
مروان بن الحكم فولدت له عمر بن عبدالعزيز رضي الله عنه،
மதீனா நகருக்குள்
வருபவர்களுக்கு ஒத்தாசையாக இருந்த உமார் (ரலி)
மதீனாவிற்கு
வெளியூரிலிருந்து வருகிற வியாபாரிகள் ஊருக்கு வெளியே கூடாரமடித்து தங்கியிருப்பார்கள்.
உமர் ரலி அவர்கள் அவர்களிடம் சென்று நீங்கள் நிம்மதியாக உறங்குங்கள் உங்களை நான் காவல்
காக்கிறேன் என்று சொல்வார்கள். குர் ஆன் ஓதிக் கொண்டு காவல் பணி செய்வார்கள். தஹஜ்ஜுதுடைய நேரம் வரும்
போது அஸ்ஸலா அஸ்ஸலா என்று குரல் கொடுத்து அவர்களை எழுப்பி விட்டு செல்வார்கள்.
மக்களுக்கு
நேரிட்டு உதவுவதின் நன்மையை இப்பெருமக்கள் புரிந்திருந்தார்கள் . அதனால் தான் வேலைக்கார்ர்களை
கூட ஏவாமல் தாங்களே மக்கள் பணியாற்றினர்.
மக்களுக்கு
உதவுகிறவர்களுக்கு மகத்தான நன்மைகள் காத்திருக்கின்றன.
رُوِي عن رسول الله (ص): "... مَن كان في
حاجة أخيه كان الله في حاجته، ومَن فَرَّجَ عن مسلم كربة فَرَّج الله عنه بها كربة
من كرب يوم القيامة، ومَن سَرَّ مسلماً ستره الله يوم القيامة"
மக்கள் பணியாற்றுவோர் மேலும் மக்கள் வெற்றி பெறுவர்.
وَافْعَلُوا الْخَيْرَ என்ற வார்த்தை உறவுகளுக்கும் நெருங்கியவர்களுக்கும் நன்மை செய்வோ என்ற கருத்தை கொண்ட்து என்கிறார்கள் விரிவுரையாளர்கள்.
இந்த நன்மைகள் தங்களுக்கும் வேண்டும் என்று ஆசைப்பட்ட தால் தான் அரசர்களே குட இறங்கி மக்கள் பணி செய்தார்கள்.
அஜ்மீர் காஜா நாயம்க் அவர்கள் ஒரு குடியானவனின் வீட்டு பிரச்சனைக்காக தில்லி வரை நடந்தே சென்றார்கள் தில்லியின் பாதுஷா இல்துமிஷ் “ எல்லைக்கே வந்து இதற்காக நீங்கள் வரவேண்டுமா ? யாராவது ஒருவரிடம் கூறி அனுப்பியிருக்கலாமே என்றார். அஜ்மீர் நாயகம் சொன்னார்கள். எனக்கு இந்த நன்மை வேண்டுமல்லவார் ?
மக்கள் பணியை மகத்தான அருட்பணியாக நினைத்து செய்வார்கள் பெரும் பாக்கியங்களை பெறுவார்கள்.
காசு பணத்தால் ஓட்டு வாங்கி ஜெயித்த் பதவியின் பெறுமையை அனுபவிக்கலாம் என்று நினைப்பவர்கள்
மக்களுக்கும்
நன்மை செய்ய மாட்டர்கள். அவர்கள் சொந்த வாழ்விலும் உயர மாட்டார்கள்.
இந்த தேர்தலில் கூட ஆயிரம் இரண்டாயிரம் என ஓட்டுக்கு காசு கொடுக்கிறார்கள்.
அந்த பணம் ஆகாத பணம் ‘ அதை விட பெரும்பாவம் காசி வாங்கி விட்டு ஓட்டுப் போடுவது.
முஃமின்கள் கவனிக்க வேண்டும்.
இவர்கள் அதிகாரத்திற்கு
வந்து செய்கிற ஒவ்வொரு பாவத்திலும் நாம் பங்கு பெற வேண்டியதாகி விடும்.
ஓட்டு என்பதும் ஒரு வகை ஷபா அத்துதான்
அல்லாஹ் கூறுகிறார்ன்.
مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ
يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى
كُلِّ شَيْءٍ مُقِيتًا ﴾ [النساء: 85].
எனவே உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கிற போது இவர் மக்கள் பணி செய்வார் என்று யார் தோன்றுகிறாரோ அவருக்கு வாக்களியுங்கள்.
ஏனெனில் பக்கும் பெறாத இயக்க தொண்டர்கள் இப்போது தாங்கள் செய்கீற ஒரு சில நன்மைகளை அரசியல் ஆதிக்க சிந்தனைக்காகவே செய்கிறார்கள் என்ற குற்றச் சாட்டு பரவலாக இருக்கிறது.
ஓட்டுப் போடுகிற போது இவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டுட்ம்.
வாக்களிங்கள் அது கடமை . மார்க்கத்திலும் கூட
நல்ல வேட்பாளருக்கு
வாக்களியுங்கள் அது நன்மை . அவர் உங்களுடை தளம் அல்லாத வேறு தளத்தில் இருந்தாலும் கூட.
அல்லாஹ் நமது ஊராட்சி மன்றங்களுக்கு உண்மையான மக்கள் நலப் பணியாளர்களை தந்தருள்வானாக!.
No comments:
Post a Comment