வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 24, 2022

நவயுக சர்வாதிகாரியாகிறார் புதின்

 நேற்று ரஷ்ய ராணுவம் தரை கடல் வான் என அனைத்து மார்க்கங்களிலும் உக்ரைன் நாட்டை ஆக்ரமித்திருக்கிறது.

இரு தரப்பிலும் பலர் பலியாகி உள்ளனர். உக்ரைனியர்கள் 140 பேர் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்கீ கூறியிருக்கிறார்.  

ஏராளமான மக்கள் இறந்திருக்க கூடும் என்றும் பல இலட்சக்கணக்கான மக்களது அன்றாட வாழ்வு சிதைந்து போயிருப்பதாகவும் பத்ரிகைகள் கூறுகின்றன.

உக்ரைன் ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு அடுத்த பெரிய நாடு. உலகின் மிக தொன்மையான கலாச்சார கட்டமைப்பை கொண்ட நாடுகளில் ஒன்று.  சுமார் 4 ½ கோடி மக்கள் வாழ்கிறார்கள். இயற்கை வளம் நிறைந்த நாடு. விரிவான வளமான விளைநிலங்கள் காரணமாக, உக்ரைன் உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகும். எனினும் கம்யூனிசத்தின் கோரப்பிடியில் பல ஆண்டுகள் சிக்கியிருந்த்தால் இப்போது ஏழை நாடாக இருக்கிறது.  ஐரோப்பிய் யூனியனுடன் இணைந்து எப்படியாவது பொருளாதாரத்தில் முன்னேறி விட வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தது.

இந்த உலகிற்கு கம்யூனிசம் என்ற தத்துவம் கொடுத்த்து என்ன என்பதை இந்தப் போர் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

பொருளாதாரம் தனிநபர் உரிமையாக இருக்கிற போது முதலாளி வர்க்கத்தின் ஆதிக்கம் தொழிலாளர்களை சுரண்டுகிறது துன்புறுத்துகிறது என்பது கம்யூனிசம் தோன்றியதன் பிரதான காரணிகளில் ஒன்று.

கம்யூனிசம் என்பது பொருளாதார வளத்தை தனிநபர்களிடமிருந்து பறித்து பொதுவானதாக்கி அனைத்து பிரிவினருக்கும் அதன் நன்மையை சேர்ப்பதை நோக்கமாக கொண்டது என்பது பொதுவாக சொல்லப்படும் தத்துவமாகும்.

இந்த தத்துவத்தை பிர்தானமாக வைத்தே உலகெங்கும் கம்யூனிச செயல்பாட்டாளர்கள் இயங்கி வருகிறார்கள்.

அடிப்படையில் இந்த  தத்துவம் தனிமனித உரிமைகளுக்கும் இயல்பான சமூக நீதிக்கும் எதிரானதாகும்.

அது மட்டுமல்ல வன்முறைக்கும் சர்வாதிகாரத்திற்கும் வித்திடக் கூடியதுமாகும்.

இந்த உலகில் பணக்காரர் ஏழை என்பது ஆண் பெண் என்பது போல தவிர்க்க முடியாத இயற்கை நியதியாகும். இதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு சாரார் மற்றொரு சாராரை பார்த்து பொறாமைப் படவோ ஆத்திரப் பட வோ கூடாது என்பது திருக்குரானிய வழிகாட்டுதலாகும்.

وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍ ۚ لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا اكْتَسَبُوا ۖ وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِّمَّا اكْتَسَبْنَ ۚ وَاسْأَلُوا اللَّهَ مِن فَضْلِهِ ۗ إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا (32)

திருக்குர் ஆனின் அந்நிஸா அத்தியாயத்தின் இந்த வசனம் பாலின வேறுபாட்டையும் பொருளாத வேறுபாட்டையும் சேர்த்தே பேசுகிறது.

 ஆண்கள் மீது பெண்களும் செல்வந்தர்கள் மீது வறியவரும் பொறாமை கொள்ளலாகாது என்பதை இவ்வசனம் புலப்படுத்துகிறது.

 அதே நேரத்தில் بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍ என்ற சொல்லாடல் யார் சிறந்தவர் என்று கூறாமல் ஒவ்வோர் சாராரிடம் ஒரு விசேச தன்மை இருக்கிறது என்பதை அற்புதமாக கூறுகிறது.

 போரிடுவதற்கு சிறந்தவன் ஆண். ஆனால் குடும்பத்தை கவனிக்கும் பொறுமை அவனிடம் இருக்குமா? நர்ஸ் பணிக்கு அவன் பொருந்துவானா?

 முதலாளி பணம் ஈட்டுவான். நெசவாளி துணி நெய்து தராவிட்டால் அவனால் ஆடை அணிய முடியுமா ? ஏன் குப்பை அள்ளுபவன் வராவிட்டால் மாளிகைகள் மணக்குமா ?

 எனவே ஒவ்வொரு சாராருக்கு ஒரு சிறப்பு தரப்பட்டிருக்கிறது. அது இறைவன் வழங்கியது. ஒரு சாராருக்கு கிடைத்துள்ள சிறப்பை கண்டு மற்ற சாரார் பொறாமை படக் கூடாது என்பதே அதே போல ஒரு சாரார் மற்ற சாரார் மீது அநீத் இழைக்க கூடாது என்பதே இஸ்லாமின் கருத்தாகும். இதுவே சரியான உலக நீதியுமாகும்.

 இந்த நீதிக்கு எதிராக முதலாளி என்றொரு வர்க்கம் தேவையற்றது என்ற சிந்தனையை கம்யூனிசம் கொண்டு வந்த்து. முதலாளிகளிடமிருந்த சொத்துக்களை பறித்து பொதுவுடமை என்ற சொல்லில் அரசுடமையாக்கியது.

 1917 ல் ரஷ்யாவில் கம்யூனிச புரட்சி ஏற்பட்ட்து. கம்யூனிஸ்டுகளின் அரசு விளாடிமிர் லெனின் தலைமையில் அமைந்த்து. அது அக்கம் பக்கத்திலிருந்த நாடுகள் அனைத்தையும் மூர்க்கத்தனமான இராணுவ பலத்தில் சோவியத் ரஷ்யா என்ற பெயரில் ஆக்ரமித்த்து.

 அப்படி அமைந்த அரசு இயற்கை எதிரானது எனவே கம்யூனிசம் தோன்றீய காலம் தொட்டு அது சர்வாதிகாரத்தின் மொத்த உருவமாக வெளிப்பட்ட்து. ரஷ்யாவானாலும் சரி சீனாவானாலும் சரி.

 தங்களது கோட்பாட்டை ஒத்துக் கொள்ளாதவர்களை கம்யூனிஸ்டுகள் மிக கொடூரமாக கொன்று குவித்தார்கள்.

 சோவியத் ரஷ்யாவில் கம்யூனிச எதிர்ப்பாளர்கள் பல இலட்சக்கணக்கானோர் லைபீரியாவின் பனி பள்ளத்தாக்குகளில் டிராக்குகளில் அடைத்துச் சென்று உண்வு தண்ணீர் இன்றி வீசி படுகொலை செய்யப் பட்டனர். மக்களின் அடிப்படையான உணர்வுகள் சிதைக்கப் பட்டன. அனைத்து மதங்களுக்கு நிராகரிக்கப் பட்டு கம்யூனிசம் ஒன்றே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய மதமாக மாறியது.

 சோவியத் ஆக்ரமித்த நாடுகளில் பல முஸ்லிம் நாடுகள் இருந்தன. அவை நடத்திய போராட்டங்களின் விளைவாக 1991 ல் உலக கம்யூனிஸ்டுகளின் கனவு பூமியாக இருந்த சோவியத் ரஷ்யா உடைந்து சிதறியது. அடைத்து வைக்கப் பட்டிருந்த கூட்டிலிருந்து பறவைகள் பறந்து செல்வது போல சோவியத் ஆக்ரமித்திருந்த நாடுகள் விடுதலை பெற்றன.

ஆனால் அந்த நாடுகள் சுமார் 70 ஆண்டுகால கம்யூனிசத்தின் பலனாக வறுமையையும் ஆயுதங்களையும் மட்டுமே மிச்சமாக வைத்திருந்தன

 ஏனெனில் கம்யூனிசம் இந்த உலகில் செய்த மிகப் பெரும் கொடுமை

 மக்களை சம்மானவர்களாக ஆக்கப் போகிறோம் என்று சொல்லி குடிசைகளை கோபுரங்களாக்குவதற்கு பதில் அனைத்து கோபுரங்களையும் குடிசைகளாக மாற்றினர். மக்கள் அனைவரையும் அரசு ரேசனில் வழங்குகிற ரொட்டித்துண்டுகளுக்காக அடிமைகளாக உழைக்க வைத்தனர்.

 மறுபுரத்தில் லெனில் ஸ்டாலின் குருஷேவ் என சர்வாதிகாரிகள் முளைத்தனர்.  

 அந்த வரிசையில் தான் இப்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செயல்பட ஆரம்பித்திருக்கிறார்.

 சோவியத் ரஷ்யா ஆக்ரமித்திருந்த நாடுகளில் ஒன்று தான் உக்ரைன்.

 இயற்கை வளம் நிறைந்த நாடு. ஆனால் கம்யூனிசத்தால் வளமிழந்த நாடு.

 சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகள் பலவும் ஆரம்பத்தில் ரஷ்யாவோடு பல வகையான கூட்டணியில் இருந்தன. காலப் போக்கில் அந்த கூட்டணியால் பலனில்லை என்று அவை உணர்ந்தன. அந்த வகையில் தான் உக்ரைன் 2014 ம் ஆண்டு ரஷ்யா ஆதரவு நிலையிலிருந்து ஐரோப்பாவின் முதலாளித்துவ கூட்டணியான நேட்டோ கூட்டணியில் இணைய முறபட்டது. ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த அதிபரை போராட்ட்த்தின் மூலம் அகற்றிய மக்கள் இப்போதைய அதிபரை தேர்ந்தெடுத்தனர்.  இதில் கோபமடைந்த ரஷ்யா அப்போதிருந்தே உக்ரைன் மீது வெறுப்பு காட்டி வந்தது. உக்ரைனை பிளக்க முயற்சித்த்து. உக்ரைன் எல்லையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த சிலரை பயன்படுத்தி உக்ரைனின் சில பகுதிகளை சுதந்திர நாடாக அறிவித்தது.

 மறு புரம் நெட்டோ நாடுகள் உக்ரைனை தங்களது அணியில் சேர்க்கலாமா வேண்டாமா என தொடர்ந்து சஞ்சலத்தில் இருந்தன. ரஷ்யாவிடமிருந்து விலகி வருகிறது என்ற வகையில் ஓரளவில் உக்ரைனுக்கு ஆதரவாகவும். உக்ரைனின் ஏழ்மையை கண்டு அதை சேர்ந்த்துக் கொள்ள அக்கறை செலுத்தாலும் நேட்டோ நாடுகள் இருந்தன. முதலாளித்துவத்தின் படு மோசமான சுயநலம் இது.

 இந்த சூழ்நிலையில் தான் உக்ரைனை விட்டும் தனது கட்டுப்பாட்டை விட்டுக் கொடுக்காத வகையில் புதின் உக்ரைனை கைப்பற்றி உள்ளார்.

 புடின் உக்ரைனை கைப்பற்றி விடுவார் என்பதில் சந்தேகமில்லை. காரணம் உக்ரைனிடமோ ஐரோப்பிய நாடுகளிடமோ ரஷ்யாவை எதிர் கொள்ளும் அளவு வலிமை கிடையாது. அமெரிக்க இதில் எளிதில் தலையிடவும் செய்யாது. ஏனெனில் மற்ற ஏழை நாடுகளுக்காக செலவளிக்கும் முட்டாள் தனத்தில் அது ஒரு போதும் இறங்காது.

 உக்ரைன் இப்போது தனியாக போராடிக் கொண்டிருக்கிறது. நேட்டோ நாடுகள் உடனடியாக உதவிக்கு வராத நிலையில், தான் தனிமை படுத்த படுத்தப் பட்ட போதும் தொடர்ந்து போராடப்போவதாக உக்ரைன் அதிபர் அறிவித்திருக்கிறார்.

 புதினின் ஆக்ரமிப்பு யுத்தம் எத்தனை மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தப் போகிறதோ தெரியாது. ஆனால் கோரோனோ காலத்தின் நெருக்கடியிலிருந்து மீண்டு வருகிற உலகில் புதின் தொடங்கியிருக்கிர யுத்தம் உலகில் நடைபெறும் ஒரு கொடூர நடவடிக்கை என்பதே அனைவரின் கருத்துமாகும்.

 போலாந்து லித்துவேனியா போன்ற நாடுகளில் உக்ரைன் அகதிகள் தஞ்சம் தேடி நுழைந்துள்ளனர். உக்ரைனிய மக்கள் அங்கிருந்து வெளியேற அலை மோதுகின்றனர்.

 உக்ரைனிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் தடை படுவதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பிரச்சனை ஏற்படும். பெட்ரோல் விலை அதிகரிக்க கூடும்.

 எந்த ஒரு அவசிய தேவையுமின்றி தனது அதிகாரத்தை நிலை நாட்டிக் கொள்வதற்காக அதிபர் புதின் இந்த யுத்தத்தை தொடங்கியுள்ளதன் மூலம் அதிபர் புதின் நவ யுக சர்வாதிகாரியாக

 அக்கிரமங்கள் ஆகிரமிப்புகள் ஒரு போதும் வெற்றியடையாது. அது ரஷ்யாவை மேலும் சிதைத்து விடும்.

 திருக்குர் ஆன் காரூனுக்கு கூறியது

 وَلا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لا يُحِبُّ الْمُفْسِدِينَ [القصص:77].

அவன் செவிசாய்க்க வில்லை , இனி ஒரு போதும் எழ முடியாத பள்ளத்தில் அவன் விழுந்தான்

 திருக்குர் ஆன் ஒவ்வொரு சர்வாதிகாரியையும் எச்சரிக்கிறது .

 وَلاَ تَعْتَدُواْ إِنَّ اللّهَ لاَ يُحِبُّ الْمُعْتَدِينَ

மக்களில் ஒவ்வொருடய் உயிரும் உடமையும் மானமும் பெரும் போற்றுதலுக்குரியது. புனிதமானது.

 قال صلى الله عليه وسلمفإن دماءكم وأموالكم وأعراضكم بينكم حرام، كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا.... رواه البخاري.

 உன்னால் எனக்கு தொல்லை இல்லை என்றால் என்னால் உனக்கு ஒரு தொல்லை ஏற்படாது என்பதே அரசுகளின் அடிப்பை கோட்பாடாக இருக்க வேண்டும்.

 

قد قال النبي صلى الله عليه وسلملا ضرر ولا ضراررواه ابن ماجه وغيره، 

 அதிபர் புதின் எல்லை மீறுகிறார். அவர் தாற்காலிகமாக வெற்றி பெறலாம்.  ஆனால் மேலும் அதிகமாக ரஷ்யாவை சிக்கலுக்குள்ளாக்குகிறார் என்பதே அதன் பொருள்.

 ஏனெனில் சர்வாதிகாரம் எந்த ஒரு நாட்டுக்கும் நன்மை செய்த்த்தில்லை.  

 உக்ரைனில் முஸ்லிம்களை ஆர்வப்படுத்தும் ஒரு செய்தி இருக்கிறது. அதுவும் ஒரு வரலாற்றுப் பாடம் தான்

 உக்ரைனில் கிரிமியா எனும் ஒரு பகுதி இருக்கிறது. அதையும் இப்பொது ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

 அங்கே தாதாரி வமிசாவளி முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்/

 உக்ரைன் 87 சதவீதம் கிருத்துவர்கள் வாழும் நாடு என்றாலும் அங்கே    

 5 இலட்சம் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள். அவர்களில் 3 இலட்சம் பேர் தாதாரி இன முஸ்லிம்கள்.

 இது ஒரு அற்புதமான தகவலுக்கானது.

 இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்கள் எதிர் கொண்ட எதிரிகளில் மிக மோசமானோர் தாதாரியர்கள். கீ பி 13 ம் நூற்றாண்டில் செங்கிஸ்கான் மற்றும் அவருடைய மகன் தலைமையிலான மங்கோலியப் படையினரால் இஸ்லாமிய உலகு மிக கொடூரமான நாசங்களை சந்தித்த்த. பக்தாதில் கூட பாங்கு சொல்லப் படாத ஒரு நிலை உருவானது.

 ஆனால் அல்லாஹ் செங்கிஸ்கானில் வமிசத்திலேயே பரகத் கான் என்பவரை இஸ்லாமாக வைத்தான். தாத்தாரிகள் முஸ்லிம்களாயினர்.

 அந்த பாரம்பரியத்தில் வந்தவர்களில் ஒரு சாரார் தான் இப்போது உக்ரைனின் கிரீமியா பகுதியில் இருக்கின்றனர்.

 உலகில் சர்வாதிகாரிகளின் திட்டங்கள் வெற்றி பெறுவதில்லை என்பதற்கான ஒரு சாட்சி அது.

 இந்தியா ரஷ்யாவுடனான தனது நட்பின் காரணமாக வெளிப்படையாக ரஷ்யாவை எதிர்க்காமல் மெளனம் காத்து வருகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மாணத்தின் போது வாக்களிக்காமல் வெளியேறிவிட்டது.

 இது நீதியை தாமீக சிந்தனையாக கொண்ட நாட்டிற்கு அழகல்ல.

 அல்லாஹ் இந்த உலகையும் உலகில் உள்ள மக்கள் அனைவரையும் போர் அபாயத்திலிருந்து பாதுகாப்பானாக! மக்களுக்கு நீதியான நிம்மதியான ஆட்சியை தந்தருள்வானாக!

 

 

 

 

2 comments: