வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 03, 2022

திலாவத் அரும் பாரம்பரியம்

 தமிழ்கமெங்கும் குர் ஆன் மதரஸாக்களில் ஆண்டுவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

அதை முன்னிட்டு ஒரு சிந்தனை

குர் ஆன் ஓதுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியது முஸ்லிம் உம்மத்தின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.

பெருமானாரின் முதல் பணி ஓதிக் காட்டுவது.

هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ

 الْأُمِّيِّين என்றால் வேதம் எதுவும் தரப்படாத மக்கள் என்று பொருள்.

 مِّنْهُمْ என்பதற்கு அவர்களால் அறியப்பட்ட ஒருவர் என்று பொருள்

 يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ  திலாவத் என்றால் தொடர்ச்சியாக ஓதுதல் என்று பொருள்

குர் ஆனை ஓதும் போது நிறுத்தி அல் ஹம்து – என்று ஓதி இடைவெளி விட்டு லில்லாஹி என்று ஓதுவதல்ல –தொடர்ச்சியாக அல்ஹமது லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று ஓதுவதாகும்.

 இப்படித்தான் ஓத வேண்டும் என்று சொல்லித் தரப்பட்டி ஓதுவதே திலாவத் ஆகும்,

 இது மாபெரும் பாரமபரியம் ஆகும்.

ஜிபரயீல் அலை அவர்கள் பெருமானாருக்கு சொல்லிக் கொடுக்க பெருமானார் (ஸல்) அவர்கள் சில சஹாபாக்களுக்கு தனி கவனம் எடுத்து சொல்லிக் கொடுக்க அந்த சஹாபாக்கள் வழியாக முஸ்லிம் உம்மத் கற்றுக் கொண்ட கலையாகும்.

  وقال أنس بن مالك«قال النبي  لأبي بن كعب«إن الله أمرني أن أقرأ عليك القرآن»، قال«الله سماني لك؟»، قال«نعم». قال«وذُكرت عند رب العالمين؟»، قال«نعم». فذرفت عيناه»

 

குர் ஆன் அருளப்பட்ட அரபுச் சமூகத்திற்கு அரபு மொழியில் உள்ள குர் ஆனை ஓதக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களை பெருமானார் (ஸல்) அறிமுகப் படுத்தினார்கள்.

 روى عبد الله بن عمرو بن العاص عن النبي  أنه قال«خُذُوا القرآن من أربعة: من ابن مسعود، وأبي بن كعب، ومعاذ بن جبل، وسالم مولى أبي حذيفة.[

 உபைய்யு ரலி யிடமிருந்து ஒரு பாரம்பரியம் குர் ஆன் ஓதக் கற்றுக் கொண்டது.

 وقد عرض عبد الله بن عباس وأبو هريرة وعبد الله بن السائب وعبد الله بن عياش بن أبي ربيعة وأبو عبد الرحمن السُلمي وأبو العالية الرياحي القرآن على أبي بن كعب، فأجازهم.

 மஸ்ஜிதுன்னபிவியில் தொடங்கிய அந்த பாரம்பரியத்தை தான் ஒவ்வொரு மஸ்ஜித்களும் இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிருக்கின்றன.

 இந்தியாவில் இப்போதும் கூட ஆரம்ப பள்ளிக் கூடங்கள் இல்லாத கிராமங்கள் உண்டு. ஆனால் மதரஸாக்கள் இல்லாத பள்ளிவாசல்கள் இல்லை.

 இப்போதும் மக்காவில் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலிலும் மதீனாவில் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலிலும் குர் ஆன் ஓதிக் கொடுக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.  உம்ராவிற்கும் ஹஜ்ஜுக்கும் வருகிற பயணிகளுக்கும் கூட ஓதிக் கொடுக்கிறார்கள். ஓதுதலை சரி செய்தும் கொடுக்கிறார்கள்.

 இந்த மகத்தான பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிற ஆசிரியர்களும் நிர்வாகிகளும் பாரட்டிற்கும் துஆ விற்கும் நன்றிக்கும் உரியவர்கள். இதில் ஆர்வம் செலுத்தி தங்களது பிள்ளைகளை அனுப்பி வைக்கிற பெற்றோர்களும் கூட துஆ விற்கு உரிய்வர்கள்.

 இந்த தீனை நிலை நிறுத்துவதற்கு முஹம்மது (ஸல்) அவர்கள் கையாண்ட முதல் பணியை அத்தகையோர் தம் தொடர்ந்து செய்கின்றனர்.

 குர் ஆன் மதரஸாக்களில் பிள்ளைகளுக்கு ஓதிக் கொடுக்கும் முறையில் சில முன்னேற்ற நடவடிக்கை அவசிய்ம்\

 குழந்தைகள் ஆரம்பம் முதலே சுத்தமான உச்சரிப்பில் திலாவத்தன் குர் ஆனை ஓதப் பழக்கி கொடுக்க வேண்டும்.

 தினத்தந்தி பேப்பர் வாசிக்கிற நடை முறையில் குர் ஆன் ஓதப் படக்கூடாது.

 அதே போல இன்றுள்ள சூழலில் மதரஸாவிற்கு இணைகிற ஐந்து வயது குழந்தை அல்லது அதற்கு அதிகமான வயதுள்ளவர்கள் மூன்று வருட்த்திற்குள் குர் ஆனை ஓதி முடித்து விட வேண்டும் என்று இலக்கு தீர்மாணிக்கப் பட வேண்டும். இதற்கு மேல் குர் ஆனை ஓது வதற்கு கால அவகாசம் தேவையே இல்லை;

 பள்ளிவாசலின் நிர்வாகிகளும் குர் ஆன் மதரஸாக்கள் விசயத்தில் கூடுதல் ஆர்வம் காட்ட வேண்டும்.

 இது வே தீனை நிலைநாட்டும் முதல் பணியாக பெருமானார் (ஸல்) செய்த பணியாகும்.

 இளம் பிஞ்சு உள்ளங்களில் அல்லாஹ்வின் வேதத்தை இட்டு நிரப்புவதை விட பெருஞ் செல்வம் என்ன இருக்கிறது ? அரும் பணி வேறென்ன /

 இமாம் அபூஹனீபா ரஹ் தனது மகனுக்கு ஓதிக் கொடுத்த உஸ்தாதுக்கு நூறு திர்ஹ்மகள் கொடுத்தார்கள்.  அந்த காலத்தில் ஒரு திர்ஹமிற்கு ஒரு ஆடு வாங்க முடியும். ஆசிரியர் இது அதிகம் என்றார். இமாம் அபூ ஹனீபா ரஹ் கூறினார்கள். நீங்கள் எனது மகனுக்கு கற்றுக் கொடுத்த்தற்கு இது எதுவும் நிகராகாது என்பது உங்களுக்கு தெரியும். ஆகவே இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள்.

 மதரஸாக்களை நடத்துவோர் எத்தகை அரும்பணியை ஆற்றுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள இது சிறு உதாரணம்.

 மஹல்லா வாசிகளும் பெற்றோர்களும் கூட இந்த பணியின் மகத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

 பிள்ளைகளை பெரிய பட்டதாரிகளாக்குவது சிறப்புதான், ஆனால் அடிப்படையில் குர் ஆன் ஓதக் கற்றுக் கொடுக்காவிட்டால் அந்த வாழ்வில் நல்ல முஃமின்களுக்கு என்ன நன்மை என்பதை யோசிக்க வேண்டும்.

 முஃமின்களூடைய  வாழ்வில் “நீ பிள்ளையை டாக்டராக்கினாயா என்ற கேள்வியை விட நீ குர் ஆன் ஓதக் கற்றுக் கொடுத்தாயா என்ற கேள்வி தான் பிரதானமானது என்பதை நாம் உணர்ந்தே இருக்கிறோம்.

 திருக்குர் ஆனின் ஆரம்ப வசனமான இக்ரஃ பிஸ்மி ரப்பிக் என்ற வசனம்  என்ன உத்தரவிடுகிறது என்ற கேள்விக்கு

 பலகலைகழக பாடங்களை படி என்றல்ல மக்தப் மதராஸாவில் குர் ஆனை ஓது என்றே உத்தரவிடுகிறது.

 ஹிரா குகைகளில் ஜிப்ரயீல் அலை அவர்களை பார்த்து நடுங்கிய பெருமானார் (ஸல்) அவர்களிடம் பிஸ்மில்லாஹ்ன்னு ஓதுங்க என்று சொல்லியே இஸ்லாமிய புரட்சி தொட்ங்கியது,

 ஓது என்பதே இக்ரஃ என்பதன் கருத்தாகும்

 நாம் நமது ஒவ்வொரு நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் அதனால்  தான் கிர ஆத் நிகழ்ச்சியை முதல் நிகழ்வாக வைத்திருக்கிறோம்.

 கிர் அத் என்பது குர் ஆனை ஓதுவதாகும் எந்த ஒன்றிலும்  கிராஅத் ஓதி தொடங்குவது வெற்றியை தரும் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கையாகும்.

 சஹாபாக்கள் யுத்த கால இரவுகளில் குர் ஆன் ஓதிக் கொண்டிருப்பார்கள் என்று வரலாறு சொல்கிறது.

 இப்போது சில பேர் கிராஆத் ஓதி விட்டு மொழி பெயர்ப்பை படிக்கிறார்கள்.

அவர்கள் கிராத் ஓதுதலில் நம்பிக்கை அற்றவர்கள் அல்லது கிராஅத்தின் மேன்மையை புரிந்து கொள்ளாதவர்கள் என்றே பொருளாகும்.

 இது இஸ்லாமை புரிந்து கொள்ளாத ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் நடைமுறையாக தமிழகத்தில் பரவிவருகிறது. அது தவிர்க்கப் பட வேண்டும், எந்த நிகழ்விலும் திருக்குர் ஆன் அழகுற திலாவத்தன் ஓதப் படுதலே பிரதானமாகும்.

 தானும் ஓதி தன் பிள்ளையையும் குர் ஆன் ஓத வைக்கும் பெற்றோரும் ஆசிரியர்களும் தங்களை  இக்ரஃ ன் பாரமபரியத்தில் இணைத்துக் கொண்டார்கள் என்பதே பெருளாகும்.

 மதரஸாக்களில் கற்றுக் கொள்ளும் குர் ஆனை தொடர்ந்து ஓதினால் அல்லாஹ்வுடன் எப்போதும் இணைந்திருக்கலாம்.

 அல்லாஹ்வை நெருங்க வழி தேடிய இமாம் அஹ்மது பின் ஹன்பல்

 قَالَ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ:

رَأَيْتُ رَبَّ الْعِزَّةِ عَزَّ وَجَلَّ فِي الْمَنَامِ فَقُلْتُ يَا رَبِّ: مَا أَفْضَلُ مَا يَتَقَرَّبُ بِهِ الْمُتَقَرِّبُونَ إِلَيْكَ؛ فَقَالَ: بِكَلامِي يَا أَحْمَدُ. فَقُلْتُ: يَا رَبِّ بِفَهْمٍ أَوْ بِغَيْرِ فَهْمٍ؟ فَقَالَ: بِفَهْمٍ وَبِغَيْرِ فَهْمٍ.

 புரிந்து ஓதினாலும் சரி. புரியாது ஓதினாலும் சரி.

 புரிந்து ஓதினால் தான் குர் ஆன் ஓதியதாக அர்த்தம் என்று சிலர் கூறுவது புரட்சி போல தோன்றினாலும் உண்மையில் அது வேதங்களைப் பற்றி புரியாத தன்மையாகும்.

 தொழுகையில் திருக்குர் ஆனை ஓதியே ஆகவேண்டும். அர்த்தம் புரியாவிட்டாலும் கூட அல்லவா ?

 புரிந்து ஓதினால் தான் பலன் என்று கூறுவது ஒரு வகை பிதற்றல் ஆகும்.  

 அரபு மொழி அறிந்த சஹாபாக்களே கூட சில குர் ஆனிய வசன்ங்களின் கருத்துக்களை பிற்காலத்திலேயே புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

மாற்று இயக்கங்களில் இருக்கும் பேச்சாளர்களே கூட குர் ஆனை முழுமையாக புரிந்தவர்கள் அல்ல.

குர் ஆனை தொடர்ந்து ஓதி வருவது அல்லாஹ்வை நெருங்கும் வழி.

நமது வீட்டிற்கு வெளியிலிருந்து எத்தனையோ கேபிள்கள் வருகின்றன.

 கரண்ட் கேபிள்

டெலிபோன் கேபிள்

இண்டர் நெட் கேபிள்

டீ வி கேபிள்

திருக்குர் ஆன் அல்லாஹ்வையும் நம்மையும் இணைக்கும் கேபிலாகும்.  وهو حبل الله المتين

ن علي بن أبي طالب -رضي الله عنه- قال، سمعت رسول الله -صلى الله عليه وسلم- يقول: "ألا إنها ستكون فتنة

قلت: وما المخرج منها يا رسول الله؟، قال: كتاب الله.. فيه نبأ من قبلكم، وخبر من بعدكم، وحكم ما بينكم..

هو الفصل ليس بالهزل، من تركه من جبار قصمه الله، ومن ابتغى الهدى في غيره أضله الله

 وهو حبل الله المتين، وهو الذكر الحكيم، وهو الصراط المستقيم

  هو الذي لا تزيغ به الأهواء، ولا تلبس به الألسنة، ولا يشبع منه العلماء

ولا يخلق عن كثرة الرد، ولا تنقضي عجائبه 

  هو الذي لم تنتـــه الجن إذ سمعت به

حتى قالت: "إنا سمعـــــنا قرآنا عجبا  ،  يهدي إلى الرشــــد فآمنا به"

 

திருக்குர் ஆனை சத்தமாக ஓதுகிற எந்த ஒரு வீடும் அல்லாஹ்வின் கேபிளோடு இணைந்திருக்கிறது.

 அவர்கள் அல்லா வாசிகளாகிறார்கள்

عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إِنَّ لِلَّهِ أَهْلِينَ مِنْ النَّاسِ». قَالُوا : يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ ؟ قَالَ: «هُمْ أَهْلُ الْقُرْآنِ، أَهْلُ اللَّهِ وَخَاصَّتُهُ» رواه النسائي وابن ماجة.

 இன்னுமுள்ள நன்மைகள்

அமைதி நிம்மதி மலக்குகள் சூழ வாழுதல்

 فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال :«ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه فيما بينهم إلا نزلت عليهم السكينة، وغشيتهم الرحمة، وحفتهم الملائكة، وذكرهم الله فيمن عنده» رواه مسلم

 فعن أَبي أُمَامَةَ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ رسولَ اللهِ صلى الله عليه وسلم يقول: «اقْرَؤُوا القُرْآنَ ؛ فَإنَّهُ يَأتِي يَوْمَ القِيَامَةِ شَفِيعاً لأَصْحَابِهِ» رواه مسلم.

ن النَّوَّاسِ بنِ سَمْعَانَ رضي الله عنه قَالَ: سَمِعْتُ رسولَ الله صلى الله عليه وسلم يقولُ: «يُؤْتَى يَوْمَ القِيَامَةِ بِالقُرْآنِ وَأهْلِهِ الذينَ كَانُوا يَعْمَلُونَ بِهِ في الدُّنْيَا تَقْدُمُه سورَةُ البَقَرَةِ وَآلِ عِمْرَانَ، تُحَاجَّانِ عَنْ صَاحِبِهِمَا» رواه مسلم.

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ: يَا رَبِّ حَلِّهِ –يريد صاحبه- فَيُلْبَسُ تَاجَ الْكَرَامَةِ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ زِدْهُ، فَيُلْبَسُ حُلَّةَ الْكَرَامَةِ، ثُمَّ يَقُولُ: يَا رَبِّ ارْضَ عَنْهُ، فَيَرْضَى عَنْهُ، فَيُقَالُ لَهُ: اقْرَأْ وَارْقَ وَتُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً» [الترمذي].

 அல்லாஹ் திருக்குர் ஆனின் பாரமப்ரியத்தில் நம்மை இணைப்பானாக! அந்த பாரம்பரியத்தை பாதுகாக்க முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் பெருங்கருனை செய்தருளவானாக!

No comments:

Post a Comment