வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 10, 2022

அடுத்தது என்ன ?

 ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் பாஜகவுக்கு சார்பாகவே அமைந்திருக்கின்றன.

ஓட்டு தான் ஜனநாயக நாட்டில் ஒரு பெரும் செல்வாக்கு. ஓட்டு யாரிடம் இருக்கிறதோ அவர்கள் மரியாதை பெறுவார்கள்.

ஒரு துரதிஷ்டம் பாருங்கள் நமது நாட்டில். கோட்ஸேக்கள் இப்போது மரியாதை பெற்று கொண்டிருக்கிறார்கள்.  

இன்னொரு வார்த்தையில், முஸ்லிம்களின் எதிர்களுக்கு செல்வாக்கு கூடிக் கொண்டே இருக்கிறது.

மணிப்பூரில் இதுவரை கூட்டணி ஆட்சி இருந்தது. இப்போது மணிப்பூர் மாநிலத்திலும் பாஜக தனித்து ஆட்சியைப் பிடித்திருக்கிறது. கோவாவில் இம்முறை ஆட்சி மாற்றம் ஏற்படும் அல்லது தொங்கு சட்டமன்றம் அமையும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் கோவா மாநிலத்திலும் பாஜக முன்பை விட அதிக செல்வாக்குப் பெற்றிருக்கிறது. உத்தரகாண்டிலும் உத்தரப் பிரதேசத்திலும் தனது நிலையை பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது.

அதுவும் பாஜகவினர் , அரசியல் களத்தில் வாய்ப்பேச்சை தவிர செயலாற்ற தெரியாதவர்கள் எனும் சூழலில்.  அறிஞர்கள், நல்லிணக்கத்தை விரும்புவோர் அவர்களை எதிர்க்கிற சூழலில். விவசாயிகள் போராட்டம், கொரோனோ காலத்தை சரியாக நிரிவகிக்க தவறியது, கடுமையான விலை வாசி உயர்வு ஆகியவை பாஜவுக்கு எதிராக இருந்த சூழலில்,

இந்தச் சூழலில் சிறுபான்மையின மக்கள் தமது நல்வாழ்வு, பாதுகாப்பு, மரியாதை ஆகியவற்றை தக்கவைத்துக் கொள்ள என்ன செய்யவது என்பது குறித்து ஒரு கவலையான சிந்தனைக்கு குள்ளாவது தவிர்க்க முடியாதது.

கவலைப் பட தேவையில்லை.

قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ [الزمر: 53]
 

அடுத்த வசனம் கூறுகிறது.

 

وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ [الزمر: 54]

அரசியலில் முஸ்லிம்கள் இதை விட மிக கடுமையான சூழல்களை எல்லாம் கடந்து வந்த்திருக்கிறார்கள்.

அரசியல் அதிகாரத்தை தேடிச் செல்லும் சிந்தனையை விட அல்லாஹ்வை அஞ்சிவாழும் சிந்தனையை நோக்கி அழுத்தமாக முன்னேறுவது முஸ்லிம்களுக்கு அமைதியையும் வெற்றியை கொண்டு வரும்.

இப்போது நமது சிந்தனை முழுக்க அரசியல் ஆக்ரமித்திருக்கிறது. அந்த இட்த்தில் இனி அல்லாஹ்வுக்கு இடம் கொடுப்போம்.

வணக்கம், வாழ்கை, சமூக செயல்பாடுகள் அனைத்திலும் அல்லாஹ்வை முன்னிறுத்துவோம்.  முன்பை விட அதிகமாக.

தோல்வி நிலையில் துவண்டு விடாமல் அல்லாஹ்வை தேடிச் செல்லும் வாழ்வுக்கு திருக்குர் ஆன் வழிகூறுகிறது.

مَا وَهَنُوا لِمَا أَصَابَهُمْ فِي سَبِيلِ اللَّهِ وَمَا ضَعُفُوا وَمَا اسْتَكَانُوا ۗ وَاللَّهُ يُحِبُّ الصَّابِرِينَ (146)مَا كَانَ قَوْلَهُمْ إِلَّا أَن قَالُوا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (147)

 

مَا وَهَنُوا  அவர்கள் முயற்சியை கை விட்டு வதில்லை.


وَمَا اسْتَكَانُوا அவர்கள் பணிந்து விடுவதுமில்லை. அதாவது தங்களை தாழ்வாக கருதிக் கொள்வதுமில்லை.

 

وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ (147) மிக அருமையான ஒரு வாசகம், அதிகம் சிந்திக்க தூண்டும் வாசகம்.

 

நம்மை நிராகரிப்பவர்களுக்கு எதிராக அல்லாஹ்வே உதவி செய்ய முடியும்.

 

அகழ் யுத்த்தின் போது தம்மை காப்பற்றிக் கொள்வதற்கு முஸ்லிம்கள் தோண்டிய குழி அவ்வளவு பாதுகாப்பனதல்ல.

ஒரு 90 வயது கிழவர் இந்த குழியை என்னால் தாண்டி விட முடியும் என்று கூறி குதிரையில் தாண்டினார்.

அல்லாஹ் நாடி, கீழே விழுந்து கழுத்து முறிந்து இறந்து போனார். அகழிக்குள் அவரது பிரதேம் கிடந்தது.

அவரது பிரதேத்தை எடுத்துக் கொள்ள பணம் தருகிறோம் என்று காபிர்கள் கூறினார்கள். பெருமானார் பணம் தேவையில்லை என்று கூறி பிரதேத்தை எடுத்துக் கொள்ள அனுமதித்தார்கள்.

இதில் கவனிக்க வேண்டியது.

ஒரு கிழவருக்கு துணிச்சல் தரும் அளவில் தான அந்த அகழி இருந்த்து.

அல்லாஹ் அந்த நேரத்தில் நுஐம் பின் மஸ்வூத் ரலி என்ற ஒருவரை எதிரிகளின் கூடாரத்திலிருந்து இஸ்லாமாக வைத்தான். அவர் எதிரிகளிடம் பலவீனத்தை ஏற்படுத்தினார்.

இன்னொரு புறம், கடும் பனிக் காற்று எதிரிகளுக்கு பெரும் சோதனையாக அமைந்தது. பலவீனமடைந்த எதிர்கள் பனிக்காற்றை தாங்கிக் கொள்ள முடியாமல் பின் வாங்கி ஓடினார்கள்

முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள்.

எந்த அளவுக்கு என்றால்

“இனி மதீனாவை நோக்கி யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள் என்று பெருமானார் (ஸ்ல) அவர்கள் கூறினார்கள்.

 

 

இதில் முதலில் செய்ய வேண்டியது. அல்லாஹ்வை நோக்கி உளப்பூர்வமாக திரும்பி அவனது உதவியை எதிர்பார்த்து வாழ்வது பிரார்த்திப்பது.

இரண்டாவது முயற்சியை கை விட்டு  விடக் கூடாது.

என்னென்ன முயற்சிகள்

நம்மை பலப்படுத்துவதும் காரியங்கள் என்னென்ன ?

·         பரஸ்பரம் உதவிகள் ஒத்துழைப்புக்கள்

ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் போதுதான் ஒருங்கிணைப்பு சாத்தியமாகும்.

அல்லாஹ்வுக்காக என்று மதீனா அன்சாரிகள் செய்த பரிசுத்தமான உதவிகள் தான் இஸ்லாமிற்கு அடிப்படை அமைத்துக் கொடுத்தன.

இன்று முஸ்லிம்களிடையே இருக்கிற விளம்பர மோகம் அவர்களது உதவும் மனப்பான்மையை கொச்சைப் படுத்தி விடுகிறது.

கிருத்துவ இந்துத்துவ அமைப்புக்கள் சமூகத்திற்கு செய்து கொண்டிருக்கிற உதவிகளோடு ஒப்பிடுகிற போது நாம் ஒன்றும் அதிகமாக செய்துவிடுவதில்லை,

ஆனால் சாதாரணமான உதவிகளை பெரிது படுத்தி அதில் அகமகிழ்கிறோம். அதில் அரசியல் இலாபம் அடை முயற்சிக்கிறோம்.   

·         கருத்து வேறுபாடுகளில் மோதல் உருவாகாமல் தவிர்ப்பது.

கருத்து வேறுபாடுகள் இல்லாத உலகம் இல்லை. ஆதம் அலை அவர்களின் மகன்களில் தோன்றிய கருத்து வேறுபாடு கியாமத் நாள் வரை இருக்கும்.

அதில் மோதல் போக்கை தவிர்க்கும் பக்கும் இருந்தால் மட்டுமே முஸ்லிம் சம்தாயம் ஓரளவிலாவது ஒன்று பட முடியும்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ் அவர்களின் மதிப்புக்கு பல காரணங்கள் உண்டு,

ஒன்றுக் கொன்று மோதிக் கொண்டிருந்த தரீக்காக் கார்ர்களை இணைத்து ஒருமுகப் படுத்தினார்.

இறுதியில் அவர்கள் எப்லோருமாக ஷைஹுகும் வஷைஹுனா என்று அவரை அழைத்தார்கள்.

மிகப்பெரிய அளவில் முஸ்லிம் சமூகத்தில் சச்சரவுகள் உருவாவதை ஜீலானி ரஹ் தடுத்தார்கள்.

முஸ்லிம் சமூகம் தேர்தலுக்குப் பின் சமூக அளவில் ஒன்றுபட்டு நிற்கிற விசயங்க குறித்து யோசிக்க வேண்டும்.

திருக்குர் ஆன் வழிகாட்டுகிறது.

تَعَالَوْا إِلَىٰ كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللَّهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِّن دُونِ اللَّهِ ۚ 

நாம் ஒன்றிணையலாம். ஆனால் ஷிர்க் வைக்க மாட்டோம். ஒருவரை ஒருவர் ஆதிக்க ம் செய்ய மாட்டோம். ரப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டோம். என்ற அளவில் ஒற்றுமைக்கான முயற்சிகள் இருக்க வேண்டும்.

·         எதிரிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

·         பொது மக்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிரான மனோபாவம் பெருகாமல் கவனித்துக் கொள்ள் வேண்டும்.

வீண் ஜமபம். பூணூல் அறுப்போம் என்பது போல

பெருமை ; நாங்கதான் சுத்தமான ஆளுங்க என்பது போல

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

1 comment:

  1. உலமா சமுதாயத்திற்க்கு இந்த பயானில் அதிக பங்கு இருக்கிறது நாம் உம்மத்தை ஒன்றுபடத்தான்் போராடனுமே தவிர பிளவுபடுத்த அல்ல என்பதை உணர வேண்டும்

    ReplyDelete