வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 17, 2022

பர்தா கர்நாடக உயர் நீதிமன்றம் செய்தது சரியா

 

نَّ ٱلْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ ۖ وَٱلْعَٰقِبَةُ لِلْمُتَّقِينَ

கர்நாடக உயர்நீதிமன்றம் பர்தா இஸ்லாமிய அடிப்படை சட்ட மல்ல என்று கூறியிருக்கிறது.

ஒரு மதத்தின் நம்பிக்கை சட்டங்கள் விவகாரத்தில் இப்படி தன்னிஸ்ட்த்திற்கு விளக்கம்  கூறுவதற்கான அதிகாரமோ தகுதியோ  எந்த நீதிமன்றத்திற்கும் இல்லை

இஸ்லாமிய விவகாரம் குறித்து சட்டம் பேசுவதானால் இஸ்லாமிய சட்ட நூல்களிலிருந்து மேற்கோள் காட்டி இன்ன இஸ்லாமிய சமய சட்ட நூலில் இப்படி ஒரு செய்தி இருக்கிறது என்று கூறி தீர்ப்பளித்திருக்க வேண்டும். அத்தான் சட்ட நடை முறை. அதை விடுத்து நீதிபதிகள் தம்மிஷ்ட்த்திற்கு கருத்துக் கூறி தீர்ப்பளிப்பது இந்திய நீதித்துறை மீது மிகுந்த அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

இது ஆக்ரமிப்பாளர்களின் இயல்பாகும்.

கம்யூனிஸ்டுகள் இஸ்லாமிய நாடுகளை ஆக்ரமித்த போது இஸ்லாம் கம்யூனிஸத்தை தான் கூறுகிறது என்று வாதிட்டு திருக்குர் ஆனுக்கும் நபி மொழிகளுக்கும் வித்தியாயமான விளக்கங்களை கூறினார்கள்.

கம்யூனிஸம் பொதுவுடமை சித்தாந்தத்தை வலியுறுத்தி தனி நபர்களிடமிருந்த சொத்துக்களை எல்லாம் எடுத்துக் கொண்டது.  அதை வலியுறுத்த திருக்குர் ஆனின் அஃராப் அத்தியாயத்தின் 128 வசனத்தின் ஒரு பகுதி வாசகத்தை பயன்படுத்தினார்கள்.

إِنَّ ٱلْأَرْضَ لِلَّهِ

அல்லாஹ்வுக்குரியது என்றால் தனி நபர்களுக்கு உரியது என்று அர்த்தமல்ல தானே என்றார்கள்.

ஒரு மிருக காட்சி சாலையில் சிங்கத்தின் கூண்டு அருகே “ உணவுப் பொருள் எதையும் போட வேண்டாம் என்று எழுதி வைத்திருந்தார்கள். அது அனைவருக்குமானதல்ல. பார்வையாளர்களுக்குரியது. மிருக காட்சி சாலையின் பொறுப்பாளர்களும் அந்த வாசகம் தங்களுக்கு சொல்லப் பட்ட்து என்று கருதுவார்களானால் பிறகு அங்கே உயிருள்ள சிங்கம் இருக்காது.

அது போலத் தான் இன்னல் அர்ழ லில்லாஹ் என்ற வாசகமும். இது படைப்புக்கள் அனைவரையும் ஒரு தளத்தில் நிறுத்தி அல்லாஹ்வை மறு தரப்பில் நிறுத்தி பேசப்பட்ட வார்தையாகும். மனிதர்களுக்கு இடையிலான பிரச்சனைகளுக்கான தீர்வு அல்ல.

இந்த வாசகத்திற்கு அடுத்து يُورِثُهَا مَن يَشَآءُ مِنْ عِبَادِهِۦ  என்று தெளிவு கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ் கொடுப்பவர்களுக்கு நிலம் சொந்தமாகும் என்ற தெளிவு அதில் இருக்கிறது.

திருக்குர் ஆனுக்கும் நபி மொழிகளுக்கும் தம்மிஷ்ட்த்திற்கு விளக்கம் சொல்லும் போக்கு கண்டிக்கத்தக்கதாகும்.

இப்படித்தான் முன்னாள்  உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் என்பவர்  ஷாபானு வழக்கில் விவாகரத்து சொல்லப் பட்ட பெண்ணுக்கு அவள் வாழும் காலம் வரை அல்லது அவள் இன்னொரு திருமணம் செய்யும் காலம் வரை  ஜீவானாம்சம் கொடுக்க வேண்டும் அது தான் குர்ஆன் கூறும் சட்டம் என்று தீர்ப்பு கூறீனார். இந்தியாவை பற்றி எரிய வைத்த தீர்ப்பு அது.

அவர் பயனபடுத்தி திருக்குர் ஆனிய வசனம்

وَلِلْمُطَلَّقَاتِ مَتَاعٌ بِالْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى الْمُتَّقِينَ (241)

 

இந்த வசனத்தில் உள்ள மதாஃ என்ற வார்த்தைக்கு “மெயிண்டனன்ஸ்” என்று அவர் அர்த்தம் வைத்துக் கொண்டார், உண்மையில் இந்த வார்த்தைக்கு கிப்ட் என்பதே பொருளாகும்.

அதாவது திருமணமான தம்பதிகள் பிரிய நேருகிற போது அதில் வழக்கில் யார் பக்கம் தவறு இருந்தாலும் பெண்ணுக்கான பாதிப்பு அதிகம் என்பதால் அவளுக்கு மன்ச் சமாதானத்தை அளிக்கும் வகையிலான ஒரு அன்பளிப்பை கொடுக்குமாறு ஆணகளுக்கு திருக்குர் ஆன் வழிகாட்டுகிறது. அதுவெ இந்த வசனத்தின் பொருளாகும்.

வேத நூல்களுக்கு விளக்கம் சொல்லும் அதிகாரத்தை நீதிபதிகள் எடுத்துக் கொள்வது அதற்கான படிப்பறீயாத நீதிபதிகள் எடுத்துக் கொள்வது எந்த வகியில் நீதியாகும்.

நீதிமன்றங்களே இப்படி வரம்பு மீறி நடக்கலாமா

கர்நாடக அரசு முன் வைத்த வாத்த்தை அப்படியே நீதிபதிகள் பிரதி பலித்த்திருக்கிறார்கள். 

ஆனால் இந்தியாவில் பாரம்பரியமாக முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து கல்விக் கூடங்களுக்கு செல்வது நாடை முறையில் இருந்திருக்கிறது. நாங்களும் அவ்வாறுதான் அணிந்து வந்து கொண்டிருந்தோம், இப்போது திடீரென யூனிபார் என்று குறி தடை விதிக்கிறார்கள்  என்று வாதாடிய மாணவிகளின் வாதத்தை நீதிபதிகள் கண்டு கொள்ளவே இல்லை,

எனவே நீதிமன்றங்கள் முஸ்லிம்களின் விவகாரத்தில் தேவையின்றி திட்டமிட்டு மூக்கை நுழைக்கின்றன என்றே அர்த்தமாகும்.

இத்தைய போக்கு உருவாவதற்கு முஸ்லிம்களே கூட ஒரு காரனம் என்று சொன்னால் மிகையாகாது.

முன்பெல்லாம் முஸ்லிம்களின் விவகாரங்களில் தீர்ப்பு சொல்கிற நீதிபதிகள் ஹிதாயா போன்ற இஸ்லாமிய சட்ட நூல்களைத் தான் மேற்கோள் காட்டுவார்கள்.. இந்த மரபை நிராகரித்து குர் ஆன் ஹதீஸ் என்ற போரைச் சொல்லிக் கொண்டு முஸ்லிம் அமைப்புக்களே நீதிமன்றத்தை நாடத் தொடங்கிய சூழலில் தான் குர் ஆனுக்கு ஹதீஸூக்கும் நீதிபதிகளே பொருத்தமற்று அல்லது தன்னிஷ்ட்த்திற்கு பொருள் சொல்கிற சூழ்நிலை உருவானது.

பர்தா விசயத்தில் இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் தீர்ப்பு தெளிவாக சட்ட நூல்களில் இருக்கிறது.

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِن جَلَابِيبِهِنَّ ۚ ذَٰلِكَ أَدْنَىٰ أَن يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ ۗ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا (59)


இந்த வாசகம் உத்தரவிடுகிற வாசகமாகும். அறிவுறுத்டுகிற வாசகம் அல்ல

 இப்னு கஸீரில் இந்த வசனத்திற்கு இப்னு அப்பாஸ் ரலி கூறும் விளக்கம் இருக்கிறது.

 عن ابن عباس : أمر الله نساء المؤمنين إذا خرجن من بيوتهن في حاجة أن يغطين وجوههن من فوق رؤوسهن بالجلابيب ، ويبدين عينا واحدة .

 والجلباب هو : الرداء فوق الخمار என்ற விளக்கம் ஆயிரமாண்டுகளாக திருக்குர் ஆன் விரிவுரைகளில் இருக்கிறது. இஸ்லாமிய சட்ட அறிஞர்களின் ஏகோபித்த கருத்து இது.

 பர்தா என்பது என்ன ? அதன் அளவுகள் என்ன என்பதை அதை ஆயிரமாண்டுகளாக கடைபிடித்து வருகிற முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் தெளிவாக வே சொல்லி இருக்கிறாரகள்  

பெண்கள் எதை மறைக்க வேண்டும் என்பதற்கான  தெளிவான வழிகாட்டுதல் சட்ட நூல்களில் கூறப்பட்டிருக்கிறது.

அதில்  குழப்பம் எதிலும் இல்லை

அல்பிகுஹு அலல் மதாஹிபில் அர்பா வில்

 قال الجزيري:«عورة المرأة عند الشافعية والحنابلة جميع بدنها، ولا يصح لها أن تكشف أي جزء من جسدها أمام الرجال الأجانب، إلا إذا دعت لذلك ضرو كالطبيب المعالج، والخاطب للزواج، والشهادة أمام القضاء، والمعاملة في حالة البيع والشراء، فيجوز أن تكشف وجهها و كفيها. وعورة المرأة عند الحنفية والمالكية جميع بدن المرأة إلا الوجه والكفين، فيباح للمرأة أن تكشف وجهها وكفيها في الطرقات، وأمام الرجال الأجانب. ولكنهم قيدوا هذه الإباحة بشرط أمن الفتنة. أما إذا كان كشف الوجه واليدين يثير الفتنة لجمالها الطبيعي، أو لما فيهما من الزينة كالأصباغ و المساحيق التي توضع عادة للتجمل أنواع الحلي فإنه يجب سترهم

முகத்தை மற்றக்க் வேண்டும் என்பது ஹனபி மத்ஹபில் கட்டாயம் இல்லை என்று சொல்லப் பட்டாலும். பென்களுக்கு சூழ்நிலை பாதுகாப்பானதாக இல்லை என்றால் ஹனபி மத்ஹபின் படியும் முகத்தை மறைத்தே ஆகவேண்டும்

பர்தா விவகாரத்தில் இஸ்லாமிய வழிகாட்டுதல் என்ன என்பதற்கு இதற்கே மேல் விளக்கங்கள் தேவையில்லை 

 இந்தியாவிலோ அல்லது மற்ற எந்த நாடுகளிலுமோ உள்ள உயர்நீதிமன்றங்கள் உச்சநீதிமன்றங்கள் இதற்கு மேல் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

கர்நாட்க உயர்நீதிமன்ற பர்தா இஸ்லின் அவசிய சட்ட மல்ல என்று நிறுவுவதற்கு மிக சாதுர்யமாக இன்னொரு காரணத்தையும் கூறியிருக்கிறது.

இது கட்டாயமானதாக இருந்திருக்குமானால் இதை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை என்பது கூறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் கூறப்பட வில்லை என்றும் அது கூறியிருக்கிறது

இதுவும் தவறான ஒரு வாதமாகும்.

குற்றங்களுக்கான தண்டனை என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதே கவனிக்கப் பட வேண்டும். ஒரு வணக்கதை விடுவதற்கான தண்டனை என்பதை கவனிக்க தேவையில்லை.  

இஸ்லாமிய தண்டனைகளில் சில வற்றை குர்ஆனும் ஹதீஸும் இஸ்லாமிய சட்ட நூல்களும் வரையறை செய்திருக்கின்றன, மற்ற சிலவற்றை நீதிபதிகளின் பொறுப்பில் விடப்பட்டிருக்கிறது.

திருட்டு விபச்சாரம் போன்ற குற்றங்களுக்கான அதிகப்  தண்டனை குறிப்பிட்டு கூறப்பட்டிருக்கிறது. தொழுகையை விடுதல் நோன்பை விடுதல் ஹஜ் செய்யாமலிருந்தல் போன்றவற்றிற்கான தண்டனை என்பத நீதிபதிகள் சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு முடிவு செய்து கொள்ள முடியும். இதற்கான சில வழிகாட்டுதல்கள் சட்ட நூல்களில் கூறப்பட்டிருக்கின்றன.

எனவே பர்தா அணியாத பெண்ணுக்கு என்ன தண்டனை என்று கூறப்பட வில்லை என்று கூறி பர்தா அவசியமல்ல என்று கூறுவது ஆரோக்கியத்தை பேணாதவர்களுக்கு என்ன தண்டனை என்று கூறப்பட வில்லை என்று கூறி ஆரோக்கியம் பேணுவது தேவையில்லை என்று கூறுவதை போன்றதாகும்.

நமது நீதிபதிகள் மிக சாதாரணமாக மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்.

நம் நாட்டில் இந்துத்துவ ஆக்ரமிப்பு விஷம் அனைத்து அமைப்புக்களிலும் ஊடுறுவி நிற்கிற சூழலில் மிக எச்சரிக்கையாக இந்த விசயத்தை அணுக வேண்டிய பொறுப்பு முஸ்லிம்களுக்கு இருக்கிறது.

தமது அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக வேடிக்கையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முஸ்லிம் அமைப்புகள் தவிர்த்துக் கொள்வது நலம்.

இந்த விவகாரத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட பென்ஞ் தீர்ப்பளித்திருக்கிறது, இத்தகை பெஞ்சுகளின் தீர்ப்பு ஒரு மாநிலத்தில் சொல்லப் பட்டிருந்தாலும் அது நாடு முழுக்க பொருந்தும். உச்சநீதிமன்றங்கள் கூட அதற்கு மாற்றுக் கருத்து கூறாது என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்,

எனவே சரியான சட்ட வழிகளை ஆராய்ந்து உரிமைகளுக்கான ஒரு சரியான ஒரு சட்டப் போராட்டமே வெற்றியை தரும். அது போல பர்தா மறுக்கப்படுகிற இடங்களுக்கு மாற்று ஏற்பாடுகளை கண்டு கொள்ள முயற்சிப்பதும் ஒரு சரியான நடவடிக்கையாக அமையும்.

ஆளும் வர்க்கம் முஸ்லிம்கள் விவகாரத்தில் தொடர்ந்து ஆக்ரமிப்புச் சிந்தனையை கைவிடுவதற்கு வேறு என்ன வழிமுறைகளை கையாளலாம் என்று யோசிப்பதும் பொருத்தமானதாகும்.

இன்று பராஅத் இரவு

 

நீண்ட ஆயுள். போதிய ரிஜ்கு, சோதனைகள் அற்ற வாழ்விற்காக பிரார்த்தனை செய்கிற நாளாகும்.

 

عن أبي موسى الأشعري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال : (( إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن )) رواه ابن ماجة وحسنه الألباني في السلسلة الصحيحة 1144 

 

கொரோனோ காலகட்ட்த்திற்கு பின்னுன்ண்டான சூழலில் இவற்றிற்கான அவசியம் எப்படி பட்ட்து என்பது நமக்கு தெரியும். எனவே இன்றைய இரவை பயன்படுத்திக் கொள்வொம்.

 

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

2 comments:

  1. வேறு வழிமுறைகள் என்ன என்பதையும் அதாவது தீர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டு இருக்கலாமே ஷைக்

    ReplyDelete
  2. அதற்கான மாற்று தீர்வு எப்படி கையாள்வது என்பதையும் விளக்கி சொல்லி இருக்கலாமே ஷைக்

    ReplyDelete