வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, March 24, 2022

தத்தளிக்கும் இலங்கை தரும் பாடம்

 நமது அண்டை நாடான இலங்கை இப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

எந்த அளவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது?

பிபிசி ஒன்இண்டியா செய்தி நிறுவன்ங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

தமிழகத்திற்கு அகதியாக வந்துள்ள சிவரத்தினம் பிபிசி தமிழிடம் அங்கு சாமானிய மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது  என்று கூறுகிறார். 

அரிசி, பருப்பு, கோதுமை, சர்க்கரை, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரிசி 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. 300 ரூபாய் கொடுத்தாலும் போதிய அரிசி கிடைப்பதில்லை குழந்தைகளுக்கு கலந்து கொடுக்கும் பால் மாவு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

பால் பவுடர் விலை ஒரு லிட்டருக்கு 1400 ரூபாயக உயர்ந்துள்ளது.

கோழி ஒரு கிலோ ஆயிரம் ரூபாய். முட்டை ஒன்று 40 ரூபாய். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 250 ரூபாய், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 450 ரூபாய். தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் 900 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 250 ரூபாயை தாண்டி விற்கிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 159.00 ரூபாயாக உள்ளது.

10 கிராம் தங்கத்தின் விலை ஒண்ணரை இலட்சம் ரூபாயாக உள்ளது.

பேப்பர் தட்டுப்பாட்டால் தேர்வுகள் ஒத்திவைப்பு

சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் இலங்கையில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

கண்டியில் பெட்ரோல் நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை சுமாா் 6 மணி நேரம் வரிசையில் காத்திருந்த 70 வயது முதியவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

கேஸ்சிலிண்டர் விலை 4500 ரூபாயாக இருக்கிறது என்றாலும் அது கிடப்பதில்லை. மக்கள் மிக நீண்ட வரிசையில் சிலிண்டர்களுடன் காத்திருக்கிறார்கள்.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக  கடுமையான மின் தடை பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் பல லட்சம் பேர் அங்கு கடந்த 4 நாட்களுக்கும் மேலாக போராட்டம் செய்து வருகின்றன.

தமிழகத்திற்கு அகதியாக வந்துள்ள சிவசங்கரி பிபிசி தமிழிடம் பேசுகையில், "ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பாட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் வரை செலவாகிறது. அதுவே அசைவ உணவு சமைத்து சாப்பிட வேண்டும் என்றால் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை ஒரு வேலைக்கு செலவாகிறது." என்கிறார்.

அவர் மேலும் கூறுகையில்இலங்கையில் இருக்கும் மக்கள் மன அழுத்தத்தில் வாழ்ந்து வருகின்றனர். காரணம் காலை எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை ஒவ்வொரு மணி நேரத்தையும் கடப்பது கடும் சவாலாக உள்ளது. இன்னும் சில நாட்களில் தமிழகத்திற்கு அகதிகளாக அதிகமான இலங்கை தமிழர்கள் வர வாய்ப்புள்ளது" தமிழகத்திற்கு வருவதற்கு  பலர் தயாராகி வருகின்றனர். இருப்பினும் பைப்பர் படகிற்கு போதிய மண்ணெண்ணை கிடைக்காததாலும், மண்ணெண்ணெய் விலை உயர்வால் வாங்க இயலாததாலும் இலங்கையில் தங்கி உள்ளனர்.  என்கிறார் சிவசங்கரி.

கடந்த இரண்டு நாட்களில் 16 பேர் உயிரை பணயம் வைத்து நடுக்கடலி த்த்தளித்து தமிழகம் வந்து சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு வருகிறவர்களை கைது செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தாலும் கூட தமிழக அரசு அவர்களை அகதிகள் முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டிருக்கிறது.

இது பாராட்டிற்குரியது. நமது தொப்புள் கொடி உறவுகள் அவர்கள். வாழ்வா சாவா போராட்டத்தில் கடந்து வருகிறவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியது மனித இதயமுள்ள எந்த ஒரு அரசின் கடமையாகும்.

நமக்கு அருகிலிருக்கிற நாடு இலங்கை. தமிழகத்தின் தொண்டியிலிருந்து 20 நிமிடப் பயணத்தில் விரைவுப் படகில் இலங்கையை அடைந்து விடலாம். அங்கு வாழ்கிற மக்கள் இப்போது வரலாற் காணாத நெருக்கடியில் இருக்கிறார்கள்

நாம் எச்சரிக்கை அடைய வேண்டும்

நமது நாட்டிலும் விலை வாசி உயர்வு விண்ணை தொடுமளவு உயர்ந்து வருகிறது.

இலங்கையின் செய்திகளை கேள்விப்படும் போது உடனடியாக நாம் இஸ்திஃபார் சொல்ல வேண்டும்.

நூஹ் அலை அவர்கள் காலத்தில் மனிதர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி தான் உலக மக்களுக்கு ஏற்பட்ட மகா நெருக்கடி. முழு உலகும் அழிந்த்து. அந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க அல்லாஹ் சொல்லிக் கொடுத்த வழிகாட்டுதல் இது.

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا (10) يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُم مِّدْرَارًا (11وَيُمْدِدْكُم بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا (12)

 

சைய்யதுனா ஹஸன் ரலி அவரக்ள் ஒரு சபையில் அமர்ந்திருந்தார்கள் ஒரு இளைஞன் வந்து நான் பெரிய பாவி எனக்கு ஒரு அமலை கற்றுக் கொடுங்கள் என்றார். இஸ்திக்பார் செய் என பதிலளித்தார்கள். அதற்கடுத்து ஒருவர் எங்களூரில் மழையே இல்லை என்றார். இஸ்திக்பார் செய் என பதிலளித்தார்கள். அதற்கடுத்து ஒருவர் சாப்பாட்டுக்கு சிரமமாக இருக்கிறது என்றார். இஸ்திக்பார் செய் என பதிலளித்தார்கள். இன்னொருவர் வந்து தனக்கு குழந்தை இல்லை என்றார். இஸ்திக்பார் செய் என பதிலளித்தார்கள்

இன்னொருவர் வந்து எனது தோட்டத்தில் நல்ல விளைச்சலுக்கு  துஆ செய்யுங்கள் என்றார். இஸ்திக்பார் செய் என பதிலளித்தார்கள் இன்னொருவர் வந்து எனது வீட்டில் கிணறு தோண்டுகிறேன் நீரூற்று கிட்ட வேண்டும் துஆ செய்யுங்கள் என்றார். அவரிடமும் இஸ்திக்பார் செய் என பதிலளித்தார்கள்

சுற்றி இருந்தவர்கள ஆச்சரியரியத்தோடு எல்லாவற்றிற்கும்  ஒரே பதிலா என்றார்கள் . ஹழரத் ஹஸன் ரலி அவர்கள் கூறி இந்த ஆயத்தை ஓதிக் காட்டினார்கள்.

நாம் இஸ்திக்பார் செய்வோம்  

அல்லாஹ் நம்மையும் நமது நாட்டு மக்களையும் பாதுகாக்கட்டும்.

இலங்கையின் இப்போதைய பிரச்சனைக்கு கொரோனோ ஒரு காரனம் என்று சொல்லப்படுகிறது.

இலங்கையின் பிரதான வருவாய் மூன்று T கள் என்கிறார்கள்.

டீ ஏற்றுமதி , டெக்ஸ்டைல் ஏற்றுமதி, டூரிஸம்

கொரோனோ காலத்தில் இம்முன்றும் தடை பட்ட்தால் இந்த பாதிப்பு என்று சிலர் கூறுகிறார்கள்/

அது சரியானதல்ல. ஏனெனில் . கடந்த 4 வருடமாகவே.. அதாவது கொரோனாவிற்கு முன்பே அந்த நாட்டின் பொருளாதாரம் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியை நோக்கித்தான் சென்று கொண்டு இருந்தது

பொருளாதார அறிஞர்கள் பலரும் வித்தியாசமான வேறு இரண்டு காரணங்களை சொல்கிறார்கள்

1.   1 சிங்கள இனவெறி

2.   2 பிற்போக்குத்தனம்

தமிழகத்தை சேர்ந்த பிரபல பொருளாதார ஆலோசகர் ஆனந்த ஸ்ரீநிவாஸன் கூறுகிறார்.

பொருளாதாரத்தின் மீது கவனம் செலுத்தாமல் மதவாதம்  - இனவாதம் மீது கவனம் செலுத்தியதே இந்த சரிவிற்கு முக்கிய காரணமாகும்.

இலங்கையில் 2009 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பிறகு இலங்கையிலுள்ள புத்த ஃப்க்குகள் தமிழர்கள் முஸ்லிம்கள் மீது காண்டு மிராண்டித்தனமான தாக்குதல்களை தொடுத்தார்கள்.

இஸ்லாமியர்களின் சொத்துகளும் பள்ளிவாசல்களும் சிங்களக் குழுக்களால் சேதப்படுத்தப்பட்டன. வெறுப்புப் பேச்சுகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. இஸ்லாமிய சமூகத்தை சாத்தான்களாகச் சித்தரித்து, இஸ்லாமிய கடைகளைப் புறக்கணிக்க சிங்கள கடும்போக்காளர்கள் அழைப்பு விடுத்தனர்.

இலங்கையின் முஸ்லிம் சமூகம் 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இனப் பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் வன்முறையை அனுபவித்து வருவதாக சர்வதேச அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது

கோவிட் தொற்றில் இறந்த சிறுபான்மை இஸ்லாமிய மற்றும் கிறித்துவ சமூகங்களைச் சேர்ந்த அரசு கட்டாயமாக எரிந்த்து.

என்ன அக்கிரமம்.

முஸ்லிம்கள் அதை எதிர்த்த போது புத்த மத வெறி கொண்ட அதிகாரிகள் புதைகுழிகளால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக  வாதிட்டனர்.

.பர்தாவை தடை செய்யும் சட்டத்தை கொண்டுவரப்போவதாக அரசு அறிவித்த்து. இது சமீபத்தில் தோன்றிய மத தீவிர வாதம் என அங்குள்ள அமைச்சர் கூறினார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதரஸாக்களை மூடும் திட்ட்த்தை அரசு அறிவித்தது. இது தேசிய கல்விக் கொள்கையை மீறுவதாக அரசு கூறியது.

போருக்குப் பின் இஸ்லாமிய சமூகம் முற்றுகைக்கு ஆட்படுத்தப் பட்டுள்ளது என்று இலங்கையிலுள்ள மனித உரிமை வழக்கறிஞர் பவானி ஃபொன்சேகா கூறியுள்ளார்.

ஒரே மாதிரியான சிவில் சட்ட்த்திற்கான விதிகளை பரிந்துரைக்க அரசு ஒரு குழுவை அமைத்த்து. அந்தக் குழுவின் தலைவராக ஞானசார தேரோவை நியமித்தது அவர் மதவெறி மற்றும் இஸ்லாமிய விரோதப் பேச்சுகளைப் பரப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய பௌத்த பிக்கு என்பது பிரபலமானது. .

அவர் தலைமை ஏற்றிருக்கும் பொது பல சேனா என்ற அமைப்பின் நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களின் வீடுகளையும் கடைகளையும் பள்ளிவாசல்களையும் தீ வைத்துக் கொளுத்தியது. பலர் உயிருடன் கொளுத்தப்பட்டனர்.

ஆனால குற்றவாளிகள் எவரும் கைது செய்யப் படவில்லை.

ஏனெனில் அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோரும் ஒட்டு மொத்த அரசும் அவர்களுக்கு ஆதரவாக இருந்த்து.

இத்தைய அக்கிரமங்கள் எல்லை கடந்து சென்ற நிலையில் தான் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதனால் தான் பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள்

மக்களிடையே புத்த மத வெறியையும் சிங்கள இன வெறியையும் தூண்டி வெற்றி பெற்ற ராஜபக்ஷே குடும்பத்தினார் அவர்களுக்கு ஆட்சி யதிகாரத்தில் பெரு வெற்றி கிடைத்த பிறகு அந்த மம்மதையில் நாட்டின் முன்னேற்றம் பற்றி சிந்திக்காமல் மேலும் மதவெறியை தூண்டி விடுகிற வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தினர்.

போருக்குப் பிறகு மீட்கப்பட்ட தமிழர்களின் நிலங்களில் புத்தவிகாரங்களை அமைப்பதில் அரசு அக்கறை செலுத்தியது. அந்த பகுதியை முன்னேற்றும் திட்டங்கள் எதையும் செயல்படுத்த வில்லை.

அதே போல பல மூர்க்கத்தனமான பிற்போக்கு நடவடிக்கையை அரசு எடுத்த்து.

விவசாயிகள் செயற்கை உரம் போட அரசு தடை செய்த்து.

அதே போல பால் உற்பத்திக்கு தடை செய்து பால்மாவு இறக்குமதி செய்தது.

இவை ஒரு வகை மத மூர்க்கத்தினத்தின் விளைவுகளாகும். இதனால் இலங்கையின் தானிய உற்பத்தி வெகு வாக குறைந்த்து. முன்பு அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு பெற்றிருந்தது. இப்போது அரிசி விலை விண்ணை தொடுகிறது.

பால் மாவு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி ஆவதால் பால் மாவு ஒரு கிலோவின் விலை 1450 ரூபாயக ஒருக்கிறது.

எனவே இப்போதைய இலங்கையின் நிலைக்கு அங்குள்ள அரசு மற்றும் சிங்கள் இனவெறியர்களின் அக்கிரமப் போக்கும் பிற்போக்குத் தனமும் தான் பிரதான காரணமாகும்.

இத்தகைய போக்கை திருக்குர் ஆன் தகாவத் என்கிறது

நபிமார்களின் இரண்டாவது பெரிய அறிவுரை

وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَّسُولاً أَنِ اعْبُدُواْ اللّهَ وَاجْتَنِبُواْ الطَّاغُوتَ فَمِنْهُم مَّنْ هَدَى اللّهُ وَمِنْهُم مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلالَةُ فَسِيرُواْ فِي الأَرْضِ فَانظُرُواْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِين}

தகாவத் என்ற வார்த்தைகு குர் ஆனுக்குச் சொந்தமானது என அறிஞர்கள் கூறுவார்கள். ஒரு வார்த்தையில் அதை மொழிபெயர்ப்பது கடினம்

அதை எல்லை மீறும் செயல் என்று மொழிபெயர்த்தாலும் அது போதுமானதல்ல. 

அதிகார திமிரின் அனைத்துச் செயல்களும் அதில் அடக்கம்.

أما الدكتور "أحمد القديدي" في مقالاته الرائقة "الطُّغاة والطغيان في نص القرآن" المنشورة في نشرة تونس نيوز 05/01/2004م أن الطَّاغوت عبارة ليس لَها -على ما أعلم- رديفٌ أو نظير أو ترجمة في أيَّة لُغَة من لغات العالَم؛ فهي إشارةٌ من إشارات الإعجاز القرآني الفريد، حَمَّلها الله -سبحانه- كلَّ معاني الطُّغيان (وهو اسم المصدر) إلى جانب مفهوم الْمُبالغة والتضخيم؛ لأنَّ الطاغوت هو الطُّغيان المعظَّم، مع معنى الشمول؛ أيْ: إن الطَّاغوت هو الطُّغيان إذا ما استفحل؛ للتَّعميم على كلِّ سلوكيات الناس، وطمْسِ حُرِّياتِهم، وحَبْس أنفاسهم، وعَدِّ حركاتِهم، ومراقبة سكناتهم، (وضرَب القرآنُ مثَلاً لذلك بفرعون حين قال لقومه: {مَا أُرِيكُمْ إِلاَّ مَا أَرَى[غافر: 29]).

மனிதாபிமானத்தை அனைத்து நல்லியல்புகளையும் சிதைப்பது. மக்களின் உரிமைகளை ஒடுக்குவது, அவர்களை நியாயமற்று கைது செய்வது, அவர்களது நடமாட்டத்தை கட்டுப்படுத்துவது அவர்களது வாழ்விடங்களை கண்காணிப்பது இறுதியாக பிர் அவ்ன் கூறியது போல நான் என்ன நினைக்கிறேனோ அது தான் உங்களுக்கானது என்று சொல்வது தான் தகாவத்.

 அக்கிரமக்காரக்ரள் என்னவெல்லாம் செய்வார்கள்.

தமது மனோ இச்சைக்கேற்ப வாதிடுவார்கள் அதில் வெளிப்படையாக நீதியை எதார்தத்த்தை மீறுவார்கள்.

திருக்குர் ஆன் கூறுகிறது. நபிமார்களோடு சத்தியத்திற்கு எதிராக எப்படி வாதிட்டார்கள் . போலித்தனமான வாதங்கள்

وَقَالَ فِرْعَوْنُ يَا أَيُّهَا الْمَلَأُ مَا عَلِمْتُ لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرِي فَأَوْقِدْ لِي يَا هَامَانُ عَلَى الطِّينِ فَاجْعَلْ لِي صَرْحًا لَعَلِّي أَطَّلِعُ إِلَى إِلَهِ مُوسَى وَإِنِّي لَأَظُنُّهُ مِنَ الْكَاذِبِينَ} [القصص:38]..

أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللَّهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ

கொரோனாவில் இறந்த முஸ்லிம்களை மண்ணில் அடக்கம் செய்தால் நிலத்தடி நீர் கெட்டு போகும் என்று சொன்ன இலங்கையின் அதிகாரிகள்,

பர்தாவை தீவிரவாதம் என்று சொன்ன இலங்கை அமைச்சர்கள் இதற்கு குறைந்தவர்கள் அல்ல.

அக்கிரமக்கார்ர்களின் அடுத்த வேலை  பிளவு படுத்தித்துவது

وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا

மூன்றாவது வேலை.  ஒரு சார்ரை பலவீனப்படுத்துவார்கள்

يَسْتَضْعِفُ طَائِفَةً مِنْهُمْ.

நான்காவது சித்ரவதை செய்வார்கள் வெளிப்படையாக தீங்கிழைப்பார்கள்.

يُذَبِّحُ أَبْنَاءَهُمْ وَيَسْتَحْيِي نِسَاءَهُمْ إِنَّهُ كَانَ مِنَ الْمُفْسِدِينَ

உலகில் தோன்றிய எல்லா தாகூத்களிடமும் இப்படிப்பட்ட இயல்புகள் இருந்தன.

 நம்ரூதிலிருந்து ஹிட்லர் வரை  பிர் அவ்னிலுருந்து இன்றைய ஆர் எஸ் எஸ் கார்ர்கள் இலங்கை புத்த தீவிரவாதகள் வரை

சிலுவை யுத்தக் கார்ர்கள் முஸ்லிம்களை கொன்று குவித்தார்கள். பைத்துல் முகத்தைஸை அவர்கள் வெற்றி கொண்ட போது அங்கிருந்த புகழ்பெற்ற உமர் ரலி அவர்களின் பாறைக் கருகே முழங்கால் அளவு இரத்தம் தேங்கியிருந்த்தாக வரலாறு சொல்கிறது.

இப்படி எல்லாம் அக்கிரம்ம் செய்கிறவர்கள் ஒரு சந்தர்ப்ப வசத்தில் தங்களது தவ்றான வாதங்கள் மூலம் அதிகாரத்தை பெற்றிருப்பார்கள். அதில் அவர்களது செல்வாக்கு உயரவும் செய்திருக்கும்.

ஆனால் அத்தையோர் நெருக்கடிகளையும் தோல்விகளை திடீரென சந்திப்பார்கள்

நெருக்கடி முற்றுகிற போது திருந்த நினைப்பார்கள் ஆனால் வாய்ப்புக் கிடைக்காது. அவர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பெரும் அழிவை சந்திப்பார்கள். அப்போது பேரழிவை தவிர திருந்திக் கொள்ளும் வாய்ப்போ திருத்திக் கொள்ளும் வாய்ப்போ கிடைக்காது.

حَتَّى إِذَا أَدْرَكَهُ الْغَرَقُ قَالَ آمَنْتُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا الَّذِي آمَنَتْ بِهِ بَنُو إِسْرَائِيلَ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ} [يونس:90].

பிர் அவன் சற்றும் எதிர்பாராமல் தண்ணீரில் மூழ்கி அழிந்து போனான். அவனது அவனது ஆட்களும்.

திருக்குர் ஆன் அவனது ஆட்கலையும் சேர்த்தே சொல்கிறது.

 நம்ரூதின் வரலாற்றை இப்னு கஸீர் கூறுகிறார்.  

நம்ரூதின் பெயர் நம்ரூத் பின் கன்ஆன் பின் ஸாம்.

பாபிலோனாவை தலைமையிடமாக கொண்டு ஒரு பெரு நிலப்பரப்பை ஆட்சி செய்தான். 400 வருடங்கள் ஆட்சி செய்தான். மக்களை கட்டாயப் படுத்தி தன்னை வணங்கச் செய்தான். விளைச்சல் அனைத்தையும் பறித்துக் கொண்டான். தன்னை வணங்குபவர்களுக்கு மட்டுமே தானியங்களை வழங்கினான், இறுதியில் மலக்கு வந்து எச்சரிக்கை செய்தார். இறுதியில் நான் என் படையோடு வருகிறேன். நீ உன் படையோடு வா என்று அவர் கூறினார். நிலவரத்தை புரிந்து கொள்ளும் விவரம் அற்ற அவன் அதற்கு தயாரானான். தனது படைகள் அனைத்தையும் ஓரிட்த்தில் திரட்டினான் . மலக்கு கொசுக்களின் ஒரு படையோடு வந்தார். கொசுக்கள் அனது படை வீர்ர்களின் எலும்புகளை கூட சிதைக்கும் அளவு அழித்தன. நம்ரூதின் மூக்கிற்குள் புகுந்த கொசு அவனது மூளையை அரித்து அவனக்கு மரணத்தை கொடுத்தது. அற்ப கொசுவினால் அகம்பாவம் பிடித்த நம்ரூதை அல்லாஹ் அழித்தான்

ஹிட்லர் இறுதியில் ஒரு கப்பலில் தன்னைத் தானே சுட்டு இறந்து போனான்.

சிறிது காலம் அவர்கள் அதிகார திமிரில் மிதக்கலாம். ஆனால்

 وَلاَ تَحْسَبَنَّ اللّهَ غَافِلاً عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الأَبْصَارُ {إبراهيم:42

: وَلَوْ يُؤَاخِذُ اللَّهُ النَّاسَ بِمَا كَسَبُوا مَا تَرَكَ عَلَى ظَهْرِهَا مِن دَابَّةٍ وَلَكِن يُؤَخِّرُهُمْ إِلَى أَجَلٍ مُّسَمًّى {فاطر:45

 

அக்கிரமக்காரக்ரளுக்கு நாளை மறுமையில் நரகமே. அத்தையோர் எதிர் காலத்தில் எந்த புகழையும் பெற மாட்டார்கள்.

نَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا * لِلْطَّاغِينَ مَآبًا * لاَبِثِينَ فِيهَا أَحْقَابًا * لاَّ يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلاَ شَرَابًاإِلاَّ حَمِيمًا وَغَسَّاقًا

 இலங்கையின் ஆட்சியாளர்கள் அனைத்து மக்களின் நலனிலும் அக்கறை செலுத்தாமல் அதிகாரத் திமிரில் திழைத்து நின்றதன் விளைவை தான் இப்போது அவர்களும் அந்நாட்டு மக்களும் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள்.

இது இலங்கைக்கு மட்டுமல்ல. இந்திய நாட்டின் ஆட்சியாளர்களுக்கும் ஒரு பாடமே . மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் மதவாதப் போக்கை கையிலெடுத்து ஆணவப் பேச்சுக்களாலும் நடைமுறைகளாலும் காலம் கழித்து விடலாம் என்று நினைத்தால் அது நிச்சயம் வெற்றி பெறாது. அவர்களும் அழிவார்கள். மக்களையும் அழித்து விடுவார்கள்.

தனி நபர்களுக்கும் இது பொருந்தும் தான். எந்த செருக்கிலும் அதிகாரத் திமிரில் நடந்து கொண்டால் அது நிலைக்காது. மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.

அல்லாஹ் பாதுகாப்பானக!


 

1 comment:

  1. அருமையான பதிவு ஷேக் அல்லாஹ் அருள் செய்யட்டும்

    ReplyDelete