நாளை அல்லது நாளை மறுதினம் ரமலான் பிறை பிறக்க இருக்கிறது.
பொருள் வளத்தோடும்
அருள் வளத்தோடும் நிம்மதியோடு ரமலானை பரிபூரணமாக அடைந்து கொள்ள அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
ஒரு ரமலான பெற்றுக்
கொள்வது பெரும் பாக்கியம்.
ஷஹீதின் அந்தஸ்தை
விட அதிக மதிப்பானது.
عن طلحة بن عبيد الله
أن رجلين قدما على رسول الله صلى الله عليه وسلم وكان إسلامهما جميعا وكان أحدهما
أشد اجتهادا من صاحبه فغزا المجتهد منهما فاستشهد ثم مكث الآخر بعده سنة ثم توفي
قال طلحة فرأيت فيما يرى النائم كأني عند باب الجنة إذا أنا بهما وقد خرج خارج من
الجنة فأذن للذي توفي الآخر منهما ثم خرج فأذن للذي استشهد ثم رجعا إلي فقالا لي
ارجع فإنه لم يأن لك بعد فأصبح طلحة يحدث به الناس فعجبوا لذلك فبلغ ذلك رسول الله
صلى الله عليه وسلم فقال من أي ذلك تعجبون قالوا يا رسول الله هذا كان أشد اجتهادا
ثم استشهد في سبيل الله ودخل هذا الجنة قبله فقال أليس قد مكث هذا بعده سنة قالوا
بلى وأدرك رمضان فصامه قالوا بلى وصلى كذا وكذا سجدة في السنة قالوا بلى قال رسول
الله فلما بينهما أبعد ما بين السماء والأرض - احمد
நல்லடியார்கள் சாமானிய மக்கள் பாவிகள் என
சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் நன்மையானது.
ரஹ்மத் நல்லடியார்களுக்காக
ம்ஃபிரத சாமானிய மக்களுக்காக
நரக விடுதலை பாவிகளுக்காக
இத்தகைய ரமலானை
நாம் ஒரு சிறு திட்டத்தைத்துடனாவது வரவேற்க வேண்டும்.
நமது எண்ணங்களே
செயல்களுக்கு ஊக்கம் தருபவை. அதுமட்டுமல்ல எண்ணங்களை பொறுத்து மரியாதை கிடைக்கும் .
செயல்கள் குறைநிதிருந்தாலும் கூட ஆகவே உயர்ந்த நிறைந்த செயல் திட்ட்த்தை மனதில் இருத்தி
அல்லாஹ்விடம் துஆ செய்து ரமலானை வரவேற்போம்.
நமது முன்னோர்கள்
பல் வேறு வகைகளில் திட்டம் வைத்துக் கொண்டார்கள்.
ஷிஹாபுத்தீன் அஸ்ஸுஹ்ரீ
ரஹ். ஹதீஸ் கலைவல்லுனர். முதன் முதலில் ஹதீஸ்களை
தொகுத்தவர் ரமலான் வந்து விட்டால் ஹதீஸ் பணியை நிறுத்தி விட்டு முழுக்க குர் ஆனில்
கவனம் செலுத்துவார்.
இப்னு உமர் ரலி
அவர்கள் ரமலானில் எதீம்களை அதிகம் கவனிப்பார்கல். எதீம்களுடனேயே நோன்பு திறப்பார்ர்கள்/
இன்றைய ஜும்ஆவில்ஒரு
எளிமையான திட்ட்த்தை அடையாளப்படுத்துகிறோம்.
சந்தைகளில் வியாபாரிகள்
கூவி கூவி பொருட்களை விற்பனை செய்வார்கள்.
இரண்டு காரணங்கள்
1.
விலை மலிவாகவும் இருக்கும்
2.
பொருள் அதிகமாகவும் கிடைக்கும்
அதே போல ரலமான்
மாத்த்தில் ஒரு வானவர் கூவிக் கூவி அழைத்துக் கொண்டிருக்கிறார்.
وَيُنَادِي مُنَادٍ يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ وَيَا بَاغِيَ الشَّرِّ
أَقْصِرْ
இது ஒரு நபிமொழியில்
வருகிறது,
عنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ صُفِّدَتْ
الشَّيَاطِينُ وَمَرَدَةُ الْجِنِّ وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ فَلَمْ
يُفْتَحْ مِنْهَا بَابٌ وَفُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا
بَابٌ وَيُنَادِي مُنَادٍ يَا بَاغِيَ الْخَيْرِ أَقْبِلْ وَيَا بَاغِيَ الشَّرِّ
أَقْصِرْ وَلِلَّهِ عُتَقَاءُ مِنْ النَّارِ وَذَلكَ كُلُّ لَيْلَةٍ – ترمذي
ரமலானை வரவேற்க
நமக்கு இந்த ஒரு வாசகம் போதும்
மற்ற 11 மாதங்களில்
நிறைவேற்றியதை விட அதிகம் நன்மைகளை செய்வோம். தீமைகளை குறைத்துக் கொள்வோம்.
என்ன விதமான நன்மைகளை
அதிகப்படுத்தலாம் என்று நீங்கள் உங்களுக்கு ஏற்ற வாறு முடிவு செய்து கொள்ளுங்கள்.
தராவீஹ் தொழவும்
திருக்குர்ஆன் ஓதவும் தானதர்மங்களை செய்யவும் திக்ரு இஸ்திஃபார்களை ஓதவும் நோன்பு திறக்க
சஹர் உணவளிக்க இஃதிகாபில் அமர என நமது திட்டங்கள் விரிவடையட்டும்.
இன்றைய ஜும் ஆவில்
நாம் தவிர்த்துக் கொள்ள வேண்டிய சில செய்திகளை மட்டும் நினைவு படுத்துகிறேன்.
பிறை விவகாரத்தில்
குழப்பம் வேண்டாம்.
ஒரு புனித மாத்த்தில்
பிறை விவகாரத்தைவை வைத்து குழப்பம் செய்வதெற்கென்றே சிலர் காத்திருக்கிறார்கள்.
பிறை விசயத்தில்
இஸ்லாமின் வழிகாடுதல் மிக எளிமையானது.
பெருமானார் (ஸல்)
கூறினார்கள்
மாதம் என்பது பெரும்பாலும்
29 தான். அன்றிரவில் பிறை தென்படாவிட்டார்ல் அதை 30 ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்
عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال الشهر تسع وعشرون ليلة فلا تصوموا حتى تروه فإن
غم عليكم فأكملوا العدة ثلاثين
இதையே இன்னொரு வார்த்தையில் சுருக்கமாக
இப்படி கூறினார்கள்.
صوموا لرؤيته وأفطروا لرؤيته؛ فإن غم عليكم فأكملوا
العدة ثلاثين
ஒரு மாநிலத்திற்கு
அல்லது ஒரே அதிகாரம் கொண்ட நிலப்பரப்பிற்கு இதை முடிவு செய்வது இதற்காக நிர்ணயிக்கப்
பட்டுள்ள அமைப்பாகும்.
ஒரு தனி நபர் பார்க்கும்
பிறையை அடுத்தவரை ஏற்க வைக்க இந்த அதிகாரம் மிக்க அறிவிப்பே காரனமாகும்.
என் பக்கத்து வீட்டுக்
காரன் என்ன சொன்னாலும் நான் ஏற்கமாட்டேன் என்று ஒருவர் கூறலாம் . ஆனால் பிறையை காஜி
அறிவிப்பு செய்யும் போது ஏற்க மாட்டேன் என்று அவர் கூற முடியாது
எனவே நாம் உறுதிபட
தெரிந்து கொள்ள வேண்டியது பிறை என்பது அதிகாரம் பெற்ற ஒருவர் மூலம் அறிவிப்பு செய்யப்படும்
போது தான் சமூதாயத்திற்கு நோன்போ பெருநாளோ அமையும்.
நீங்கள் வழிகெட்ட
போலி தவ்ஹீதிய அமைப்புக்களை கவனித்துப் பாருங்கள் உலகமே ஒன்றை ஏற்றுக் கொண்டாலும் அவர்களது தலைமையகத்திலிருந்து
அறிவிப்பு வரும் வரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தலைமை சொல்லிவிடும் என்றால் எந்த கேள்வியும்
இல்லாமல் ஒப்புக் கொள்வார்கள். காரணம் அவர்களது அதிகாரி சொல்லிவிட்டார், அவ்வளவு தான்.
ஜாக் அமைப்பு இந்தியா நேரத்திற்கு இரண்டரை மணி நேரம் பிந்தியிருக்கிற சவூதியின் பிறை
அறிவிப்பை பார்த்துவிட்டுத்தான் பீறை அறிவிப்பை வெளியிடுகிறது பெரும்பாலும்.
அல்லாஹ்வின் கிருபையால்
இந்த கேடுகெட்ட அமைப்புக்களை விட சுத்தமாக பிறை அறிவிப்புச் செய்ய ஒரு காழி இருக்கிறார்.
அவர் சொன்னால் நோன்பு அவர் சொன்னால் பெருநாள் என்று உறுதியாக முடிவு செய்து விட்டு
நிம்மதியாக இருங்கள்.
காஜியின் அறிவிப்பு
அல்லது ஜமாஅத்துல் உலமாவின் அறிவிப்பு உங்களுக்கு வந்து சேரும்.
நடு ஜாமத்தில்
குழப்பம் செய்கிற ஜென்மங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். அதைப் பற்றி பிரச்சாரம் செய்யவோ
மெசேஜ்களை பார்வோர்டு செய்யவே முயற்சிக்காதீர்கல்.
சில விஷமிகள் கடந்த
சில வருடங்களாக சத்தியம் செய்து பிறைபார்த்த்தாக வீடியோக்களை வெளியிடுகிறார்கள். அந்த
வீடியோக்களோ பிறை பார்த்த செய்திகளோ அல்ல. அதை ஏற்றுக் கொண்டு அல்லது ஏற்றுக் கொள்ளாத
காஜியின் அறிவிப்பே நமக்கு முக்கியமானது.
உலகளாவிய் அளவில்
முஸ்லிம் அறிஞர்கள் இமாம் நவ்வி ரஹ் அவர்களின் கூற்றான لكل أهل بلد رؤيتهم என்பதையே தங்களது இறுதி தீர்ப்பாக தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய சிந்தனை உளகில் பெரும்
குழப்பத்திற்கு காரணமான வஹாபிய சிந்தனைகளின் முப்திகளில் ஒருவரான பின் பாஜ் கொடுத்த
பதவாவா இது
الصواب أن لكل أهل بلد
رؤيتهم، كل بلد لهم رؤيتهم،
அவர் அதே பதவாவில் அடுத்துச் சொல்கிறார்
பிறை பார்ப்பது அன்றி கணக்கீடு செய்து பிறையை தீர்மாணிக்கும் முறை இஸ்லாம் அல்ல
أما العمل بالحساب فلا
يجوز، الواجب العمل بالرؤية؛ لأن الرسول ﷺ قال: صوموا لرؤيته، وأفطروا لرؤيته، فإن غم عليكم فأكملوا العدة ولا يجوز اعتماد الحساب في ثبوت رمضان لا دخولًا ولا خروجًا،
எனவே பிறை விசயத்தில்
குழப்பம் செய்யும் மூதேவிகள் உலகில் எந்த நாட்டின் அறிஞர்களை ஏற்றுக் கொள்ளாதவர்க என்பதை
சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்.
حديث كريب أن أم الفضل بنت الحارث بعثته إلى معاوية بالشام، قال: فقدمت الشام فقضيت حاجتها، واستهل علي رمضان وأنا بالشام، فرأيت
الهلال ليلة الجمعة، ثم قدمت المدينة في آخر الشهر، فسألني عبد الله بن عباس ثم ذكر الهلال، فقال: متى رأيته؟ فقلت: رأيته ليلة الجمعة،
فقال: أنت رأيته؟ فقلت: نعم، ورآه الناس وصاموا وصام معاوية فقال: لكنا رأيناه ليلة السبت، فلا نزال نصوم حتى نكمل ثلاثين
أو نراه، فقلت: ألا تكتفي برؤية معاوية ؟ فقال: لا، هكذا أمرنا رسول الله صلى
الله عليه وسلم. رواه مسلم.
ரமலானி தவிர்த்துக்
கொள்ள வேண்டிய பெரும் தீமை 2
நோன்பு முழுக்க
இறை தியானத்தோடு கழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
عن أَبي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ
عَنْهُ قال : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( قَالَ
اللَّهُ : كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا
أَجْزِي بِهِ
வீண் பேச்சுக்கள் புறம் பேசுதல் குறை பேசுதல் செவ்போன் விளையாட்டுக்கள்
பேஸ்புக் ஆன் லைன் சாட்டிங்க் யூ ட்யூப் ஆகிய வற்ற்றீல் பொழுதை கழிப்பதை தவிர்த்து
கொள்ள வேண்டும்.
மூன்றாவது தவிர்த்துக் கொள்ள வேண்டிய தவறு
சஹர் நேரத்தில் தஹஜ்ஜுத் தொழுகைக்கு இடையூறாக இருக்கிற டீ வியை தவிர்த்துக்
கொள்ள வேண்டும்.
4 அல்லது 8 ரகாஅத்த்துகள் தஹஜ்ஜுத் தொழுவது ஆகச் சிற்ந்த அமலாலாகும்.
பெருமானார் (ஸல் அவர்கள் தஹஜ்ஜுத் தொழுது விட்டு இப்படி துஆ கேட்பார்கள்
الدُّعاء الذي يرويه ابنُ عباسٍ عن النبي ﷺ: اللهم اجعل في قلبي نورًا، وفي بصري نورًا، وفي سمعي نورًا
இந்நபி மொழி தஹ்ஜ்ஜுத் தொழுவது வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வரும்
என்பதை குறிப்பிடுவதாக எடுத்துக் கொள்ளலாம்..
சஹர் நேரம் ம் துஆ இஸ்திகபார்களுக்குரியதாகும்
நபி யாகூப் அலை அவர்களிடம் அவரது மகன்கள் எங்களுக்காக பாவ மன்னிப்பு
கேளுங்கள் என்று கூறிய போது நான் பிறகு கேட்பேன் என்று கூறினார்கள்
அதன் பொருள் சஹர் நேரத்தில் கேட்பேன் என்பது என விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.
ரமலானில் முக்கியமாக தவிர்த்துக் கொள்ள வேண்டியது. தேவையற்ற விவாதம்
தராவீஹ் தொழுகையின் ரகாஅத்துகள், சஹர் இப்தார் துஆ க்கள் அதன் நேரங்களைப
பற்றிய் எந்த சர்ச்சையிலும் கவனம் செலுத்த வேண்டாம்.
பாரம்பரியமாக நமது முன்னோர்கள் மிக தெளிவாக தெரிந்தே மார்க்கத்தை
கடை பிடித்துள்ளனர். அதில் குறை காண்பவர்கள் யார் என்பதை கவனித்துப் பாருங்கள்!
போலி தவ்ஹீதிய அமைப்புக்களில் ஒருவரை ஒருவர் சரமாரியாக அயோக்கியர்கள்
என்று கூறிவருவதை நீங்கள் காண்பீர்கள்.
நமது முன்னோர்கள் இவர்களை விட நல்லவர்கள் என்பதை தெரிந்து கொள்ல
இது போதும்
ரமலானில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய செயல்
உறவினர்களுக்கும் வேண்டப்பட்ட வர்களுக்கு ஜகாத் கொடுப்பவர்கள் சற்று
முன்னதாகவே கொடுத்துவிடலாம். 27 ம் நாள் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
சில வருடங்களுக்கு முன் ஒரு பெண்மணி கணவரை இழந்தவர் கடன் வாங்கி
10 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தைகளுக்கு துணி எடுத்து விட்டார். அடுத்த இரண்டு நாளில்
27 நாள் பகலில் அவரது உறவினர் 15 ஆயிரம் ரூபாய் துணிய்யை கொண்டு வந்து கொடுத்தார்.
அந்தப் பெண் கூறினார். மகராசன் இரண்டு நாட்களுக்கு முன் கொடுத்திருந்தால் நான் கடனாளி
ஆகியிருக்க மாட்டேனே.
ஜகாத் என்பது பண்க்காரர்களின் கடமை. அதை விரைவாக நிறைவேற்றிவிடுவதே
சிறந்த்து.
அதே போல் ஜகாத் கொடுப்பதில் மார்க்கம் வலியுறுத்துகிற ஒரு அம்சம்
தம்லீக்
ஏழைகளுக்கு கொடுப்பதை அவர்கள் முழுமையாக சொந்தமாக்கி கொள்ளும் வகையில்
செய்வதே சிறப்பானது.
சிவப்புக்கலர் சாரி கொடுப்பதை விட அவர்களுக்கு விரும்பிய கலரில்
சாரி எடுத்துக் கொள்ள டோக்கன் கொடுத்துவிடுவது சிறப்பானதாக அமையும்.
தவிர்க்கப்பட வேண்டிய முக்கிய தீமைகள் வேறு இருப்பின் அதை ஆலிம்கள்
பட்டியலிடலாம்.
இறுதியாக நினைவு படுத்துகிறேன்
ரமலான் மாத்த்தில் வானத்திலிருந்து அந்த ஒலி பெருக்கிற எப்போதும்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
وَيَا بَاغِيَ الشَّرِّ
أَقْصِرْ
இந்த அறிவிப்புக்கு கட்டுப்படுவோம் என்ற உணர்வோடு
நாம் ரமலானை எதிர் கொள்வோம்.
அல்லாஹ் தவ்பீக்
செய்வானாக!
No comments:
Post a Comment