வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 11, 2022

இந்தியச் சுதந்திரமும் சாவர்க்கரும்

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءَكُمْ فَاسِقٌ بِنَبَإٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَىٰ مَا فَعَلْتُمْ نَادِمِينَ (6)

புதுச்சேரி மாநிலத்தில் பாண்டிச்சேரி கடற்கரையில் காந்தி திடல் அருகே நிறுவப்பட்டுள்ள தியாக சுவரில் சாவர்கர் பெயரை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறித்துள்ளார்.

அது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் வீறு கொண்டு எழுந்த காலகட்டத்தில் நாட்டின் ஒவ்வொரு குடிம்கனும் தங்கள் உடல் பொருள் ஆவியால் ஆன அத்தனை பங்களிப்புகளையும் செய்து வந்தனர்.

காந்தியடிகள் அன்னிய துணிகளுக்கு எதிரான போராட்ட்த்தில் இறங்கியிருந்த போது மும்பையில் ஓரிடத்தில் இங்கிலாந்தில் தயாரிக்கப் பட்ட துணிகளை ஏற்றிய் ஒரு லாரிக்கு முன்னாள் மக்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். லாரியை கிளப்புமாறு ஆங்கில அதிகாரி உத்தரவிட்டான். லாரி கிளம்பிய போது ஒரு இளைஞன் அதன் டயர்களுக்கு அடியில் சென்று படுத்துக் கொண்டான். அவன் மீது ஏற்றுமாறு அதிகாரி உத்தரவிட்டான். அந்த போராளியின் இதயத்தின் மீது ஏறி லாரி  ஏற்றி கொன்றார்கள் ஆங்கிலேயர்கள்.

காந்தியடிகள் விடுதலைப் போராட்ட்த்திற்கு நிதி திரட்ட இந்தியாவிற்கு வந்த போது ஒரு செல்வந்தரின் வீட்டில் தங்கியிருந்தார். அந்த வீட்டிலுள்ள வேலைக்காரப் பெண் ஒரு நாள் அவரைச் சந்தித்தார். தன்னுடைய முந்தானையில் முடிந்திருந்த அரையணா நாணயத்தை  காந்தியிடம் கொடுத்து ஐயா என் குழந்தைக்கு பால் வாங்குவதற்காக நான் வைத்திருக்கும் காசு. நான் குழந்தையை சமாளித்துக் கொள்வேன். இந்த காசை உங்களது நிதியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தாள். அடுத்த நாள் தஞ்சாவூரில் பொதுக் கூட்டம் நடைபெற்ற போது அங்கு தன்னிடம் தரப்பட்ட தொகையை இதற்கான பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்த காந்தியடிகள் என்னிடம் தரப்பட்ட இந்த அரையாணாவை மட்டும் நான் மடியில் முடிந்து வைத்துக் கொள்ள நீங்கள் அனுமதிக்க வேண்டும் இந்த தேசத்தின் ஒரு ஏழைத்தா தாய் தன் அரையணாவை கொடுத்து விடுதலைப் போருக்கு உதவி செய்துள்ளார் என்பது எனது போராட்ட குணத்தை பலப்படுத்தும் என்று கூறி அனுமதி பெற்றார்.

இந்திய சுதந்த்திரப் போராட்ட வரலாற்றில் இரத்தமும் சதையுமாக உலாவருகிற ஏரளமான இது போன்ற வரலாறுகள் உண்டு.

அவர்களில் பலரது பெயர்கள் அறியப்படாமலேயே போய்விட்டது.

 இன்னும் சிலருண்டு.

 1857 சிப்பாய்க்கலகம் நடை பெற்ற காலகட்டத்தில் இரவு 9 மணிக்கு மேல் யாரும் வெளியே நடமாடக் கூடாது என்ற தடை உத்தரவு இருந்த்து.  பாடலுபுத்திரம் நகரில் பீர் அலி என்கிற இளைஞன் 200 முஸ்லிம் இளைஞர்களை திரட்டி ஆங்கில அரசுக்கு எதிராக ஒரு ஊர்வலம் நடத்தினார். அந்த ஊர்வலத்தை தடுக்க வந்த ஆங்கிலப்படையின் அதிகாரி லாயல் கொல்லப்பட்டார்.

 அதற்காக அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்ட போது கலவரத்தில் ஈடுபட்ட நபர்களின் பெயரை குறிப்பிட்டால் அவரை விடுதலை செய்துவிடுவதாக அதிகாரிகள் கூறினார்கள். யாருடைய பெயரையும் கூற மறுத்த பீர் அலி கூறினார். நீங்கள் என்னை தூக்கிலிடலாம். என்னோடு பலரையும் தூக்கிலிடலாம். ஆனால் பற்றிக் கொண்டிருக்கிற சுதந்திரத்தின் நெருப்பை ஒரு போதும் உங்களால் அணைக்க முடியாது. என்றார். அந்த ஆண்டு ஜூலை 25 ம் தேதி அவர் தூக்கிலப்பட்டார். அப்போது பெரும் கிளர்ச்சி ஏற்பட்ட்து.  

(இந்த வரலாற்றை சாவர்கர் அவரது எரிமலை நூலின் 272 முதல் 274 வரையான பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார். )  

 இப்படி அறியப்பட்ட வரலாற்றில் சுதந்திரத்தின் பரிசுத்தமான  சொந்தக்காரரக்ள் பலருடைய பெயரையும் இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் நினைவு கூறுவதில்லை.

 சாவர்கரின் பெயரை நிலை நாட்ட முயற்சிக்கிக்கிறார்கள் .

 ஆனால் சாவர்க்கரின் வரலாறு எப்படிப்பட்டது ?

 தாமோதர் சாவர்காரின் வரலாறு பலத்த சர்ச்சைகளுக்கு சந்தேகங்களுக்கும் உரியது

 அவர் கவர்ச்சி மிக்க எழுத்தாளராகவும் கவிஞராகவும் ஒரு பகாட்டாக  செயல்படக் கூடியவராகவும் இருந்தார். குறிப்பாக பிராமண சமூகத்தை சார்ந்த அறிஞராக இருந்தார். அந்த வகையில் அவருக்கு ஒரு அந்தஸ்த்தும் பெயரும் கிடைத்திருந்தது.

 அவரை சுதந்திரப் போராட்ட்த்திற்கு இழுத்துவர காந்தியடிகள் முயன்றார். அவரது பிரச்சார வேகம் நாட்டிற்கு பயன்படும் என்று காந்தி நினைத்தார்.

 இங்கிலாதிலுள்ள இந்தியா ஹவுஸில் காந்தியடிகள் சாவர்க்கரை சந்திக்க வந்த போது பிராமணரான சாவர்கர் காந்தியடிகளை குஷிப்படுத்த நினைத்து அவருக்கு விருந்தளிக்க இரால்களை வறுத்து கொடுத்தார் என சாவர்கரின் வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதிய நீலஞ்சன் முகோபாத்யாய் The RSS-Icons of the Indian Right') கூறுகிறார்

 அவர் தொடர்ந்து கூறுகிறார்.

 காந்தி அசைவம் சாப்பிடுவதில்லை என்றார். "இறைச்சி சாப்பிடாமல் ஆங்கிலேயர்களின் வலிமைக்கு சவால் விடுவது எப்படி" என்று சாவர்க்கர் அவரைக் கேலி செய்தார். அன்று இரவு காந்தி தனது சத்தியாகிரக இயக்கத்திற்கு ஆதரவு ஏதும் பெறாமல் வெறும் வயிற்றுடன் சாவர்க்கரின் அறையை விட்டு வெளியே வந்தார்.

 அதே காந்தி, 1948ஆம் ஆண்டு, மகாத்மா காந்தியாக படுகொலை செய்யப்பட்ட ஆறாவது நாளில், விநாயக் தாமோதர் சாவர்க்கர், காந்தியைக் கொன்ற சதியில் ஈடுபட்டதற்காக மும்பையிலிருந்து கைது செய்யப்பட்டார். கோட்ஸே உள்ளிட்ட குற்றவாளிகள் பலருடனும் சாவர்கர் இருப்பது போன்ற புகைப்படங்கள் பலவும் பத்ரிகைகளில் வந்தன. இப்போதும் இருக்கின்றன.

 இருப்பினும், 1949ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவர் விடுவிக்கப்பட்டார்.

 "நான் சாவர்க்கரின் வாழ்க்கையைப் பல பகுதிகளாகப் பார்க்கிறேன். அவரது வாழ்க்கையின் முதல் பகுதியில் அவர் புரட்சியை நேசிப்பவராக இருந்தார். அப்போது அவர் 1857 விடுதலைப் போர் பற்றிய புத்தகத்தை எழுதினார். இதில் அவர் மதச்சார்பின்மையை மிகவும் நல்ல வார்த்தைகளில் ஆதரித்தார்," என்று நிரஞ்சன் தக்லே கூறுகிறார்.

 இலண்டனில் இருந்த சாவர்கரை இந்தியாவில் நடைபெற்ற ஒரு கொலைக் குற்றத்தில் தொடர்பிருப்பதாக கூறி ஆங்கில அரசு அவரை கைது செய்து இந்தியாவிற்கு அழைத்து வந்த்து.

வரும் வழியில் கப்பலின் குளியளைறை ஓட்டை வழியாக அவர் தப்பினார். அவரை விரட்டிய ஆங்கில அரசு அவரை கைது செய்து 25 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி அந்தமான சிறையில் அடைத்த்து.

சாவர்கர் சிறைசென்றது அதுவும் அந்த மான சிறையில் அடைக்கப் பட்ட்தற்கான காரணம் .இது தான்.

அவர் சுதந்திரத்திறகான போராட்ட்த்தில் ஈடுபட்டார் என்பதற்காக அல்ல.

நிரஞ்சன் கூறுகீறார்.

"கைது செய்யப்பட்ட பிறகு அவர் யதார்த்தத்தை நேருக்கு நேர் சந்தித்தார். 1911, ஜூலை 11 ஆம் தேதி, சாவர்க்கர் அந்தமானை அடைந்தார். ஆகஸ்ட் 29 ஆம் தேதி அதாவது அவர் அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் தனது முதல் மன்னிப்பை எழுதினார். இதற்குப் பிறகு 9 ஆண்டுகளில் அவர் ஆங்கிலேயர்களிடம் 6 முறை மன்னிப்புக் கடிதம் கொடுத்தார்.

அவருக்கு சிறையில் ஆங்கில அதிகாரிகள் தனிச் சலுகைகளை அளித்தனர்.

"ஒவ்வொரு 15 நாட்களிலும் கைதியின் எடை பார்க்கப்பட்டது. சாவர்க்கர் செல்லுலார் சிறைக்கு வந்தபோது, ​​​​அவர் 112 பவுண்டுகள் இருந்தார். இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு, சர் ரெஜினால்ட் கிராடாக்கிடம் தனது நான்காவது மன்னிப்பு கடிதத்தை அளித்தபோது, ​​​​அவரது எடை 126 பவுண்டுகளாக இருந்தது. அவர் சிறையில் இருந்தபோது 14 பவுண்டுகள் எடை கூடினார்," என்று நிரஞ்சன் தக்லே கூறுகிறார்.

கடைசியாக அவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் தன்னிடம் இரக்கம் காட்டுமாறும், தன்னை இந்தியாவில் உள்ள ஏதாவது ஒரு சிறைக்கு அனுப்புமாறும் அவர் அரசை கேட்டுக் கொண்டார். அதற்கு ஈடாக, எந்த மட்டத்திலும் அரசுக்காகப் பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்."

ன்னிப்பு கேட்கும் வழி பகத் சிங்குக்கும் இருந்தது, ஆனால் அவர் மன்னிப்பு கேட்கவில்லை. 

1924 ஆம் ஆண்டு, சாவர்க்கர் புனேவிலுள்ள ஏரவாடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆங்கிலேயர்கள் அவருக்கு மாதம் அறுபது ரூபாய் ஓய்வூதியமாக வழங்கினர். இதுபோல ஓய்வூதியம் பெற்ற ஒரே நபர் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறையிலிருந்து வெளியேறிய பிறகு ஆங்கில அரசுக்கு அவர் பல சேவகம் புரிந்தார். அதற்காக அவருக்கு மாதம் 60 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்பட்ட்து.

இந்த காலகட்ட்த்திற்கு பிறகு அவர் தீவிர இந்துத்துவா கருத்துக்களை பரப்ப ஆரம்பித்தார்.

"காந்தி, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம்களை எதிர்ப்பதே தங்கள் இருவருக்கும் உள்ள பொதுவான நோக்கம் என்று வைஸ்ராய் லின்லித்கோவுடன் சாவர்க்கர் எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் செய்தார்," என்று நிரஞ்சன் தக்லே விளக்குகிறார்.

"தந்தை, தாய் பூமி யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் புண்ணிய பூமி என்பது இந்துகள், சீக்கியர், பௌத்தர் மற்றும் ஜைனர்களுக்கு மட்டுமே சொந்தமானது. இதன் அடிப்படையில் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்த நாட்டின் குடிமகனாக இருக்கமுடியாது  என்று . சாவர்க்கர் எழுதினார். ;

காந்தி படுகொலையில் சம்மந்தப்பட்ட குற்றச்சாட்டின்பேரில் 1949ஆம் ஆண்டு வேறு எட்டு பேருடன் சாவர்க்கரும் கைது செய்யப்பட்டபோது அவரது பிம்பம் வெளிப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப் படவில்லை என்று சாவர்கர் விடுவிக்கப் பட்ட போதும் கூட காந்தி படுகொலையை விசாரிக்க அமைக்கப்பட்ட கபூர் கமிட்டி சாவர்கரின் மீதான் சந்தேகத்தை உறிதிப்படுத்தவே செய்த்து..

சாவர்க்கருக்குத் தெரியாமல் காந்தி படுகொலை நடந்திருக்கும் என்பதை நம்ப முடியவில்லை என்று கபூர் கமிஷன் அறிக்கை தெளிவாகக் கூறியுள்ளது."

2000 ஆம் ஆண்டில், வாஜ்பாய் அரசு சாவர்க்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான 'பாரத ரத்னா'வை வழங்க அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர். நாராயணனுக்கு முன்மொழிவு அனுப்பியது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.

2014 ,மே 26 ஆம் தேதி நரேந்திர மோதி, பிரதமராகப் பதவியேற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு வீர் சாவர்க்கரின் 131வது பிறந்த ஆண்டு தினம் வந்தது. அவர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சாவர்க்கரின் உருவப்படத்தின் முன் தலை வணங்கி அஞ்சலி செலுத்தினார்.

அப்போது ஊடகங்கள் அதை விமர்ச்சித்தன.

காந்தி படுகொலையில் சாவர்க்கர் மீது ஒரு வழக்கு இருந்ததை நாம் மறந்துவிட முடியாது. அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் காந்தி கொலையை விசாரிக்க, கபூர் கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷன் சமர்ப்பித்த அறிக்கையில் சாவர்க்கர் மீதான சந்தேகம் தீரவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மோதி இதுபோன்ற ஒரு தலைவருக்கு பொதுவில் மரியாதை வழங்கியது, மிகவும் அடையாளப்பூர்வமான நடவடிக்கையாகும்."

2014இல் பிரதமர் நரேந்திர மோதி, நாடாளுமன்றத்தில் சென்ட்ரல் ஹாலில் சாவர்க்கரின் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்தியபோது, அவருக்கே தெரியாமல் காந்திக்கு முதுகை காட்டினார். ஏனென்றால் காந்திஜியின் உருவப்படம் சாவர்க்கரின் படத்திற்கு நேரே இருந்தது," என்று நிரஞ்சன் தக்லே குறிப்பிட்டார்.

"இதுதான் இன்றைய அரசியலின் யதார்த்தம். சாவர்க்கருக்கு மரியாதை கொடுக்க வேண்டுமானால் காந்தியின் சித்தாந்தத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். காந்தியை ஏற்க வேண்டுமானால் சாவர்க்கரின் சித்தாந்தத்தை முழுவதும் நிராகரிக்க வேண்டும். ஆகவேதான் சாவர்க்கர் இன்றும் இந்தியாவில் ஒரு 'துருவமுனைப்பு உருவமாக' இருக்கிறார்," என்று அவர் குறிப்பிட்டார்.

 சாவர்க்கராலேயே வீர மறவர்களாக அடையாளம் காட்டப்பட்ட பீர் அலியை போன்ற எண்ணற்ற தியாகிகள் கண்டு கொள்ளப்படாமல் இருக்கும் போது ஆங்கில அரசிடம் மன்னிப்புக் கேட்டு ஓய்வூதியம் பெற்று காந்தி படுகொலையில் இணைத்துப் பேசப்பட்ட ஒருவரை கொண்டாடுவது புதுச்சேரி அரசின் துணை நிலை ஆளுநர் முயற்சி செய்வது சுதந்திரத்தி அருமை தெரியாத செயலாகவே பார்க்கப் படுகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்திய சுதந்திரத்த்தையும் அதன் பன்முக இயல்பையும் கியாமத் நாள் வரை பாதுகாப்பானாக!

 

மேலதிக விவரங்களுக்கு

சாவர்க்கர் வரலாறு

தியாகச்சுவரில்சாவர்கர் பெயர்


1 comment:

  1. Anonymous8:26 PM

    மாஷா அல்லாஹ். எல்லா கட்டுரையும் சிறப்பாக உள்ளது. ஆனால் ஒரு நாளுக்கு முன்னதாக பதிவிட்டல் இன்னும் சிறப்பாக இருக்கும். Alhamdulillah..

    ReplyDelete