வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 18, 2022

பல்கீஸ்பானு வழக்கு குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட்து சுதந்திரத்திற்கு நேர்ந்த அவமானம்

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (2)

இந்தியநாடு தனது 75 வது சுதந்திர தினத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் நாட்டு மக்களை மிகவும் கவலைக்கும் தலை குனிவுக்கும் உள்ளாக்கும் ஒரு செயலில் குஜராத அரசு ஈடுப்பட்டுள்ளது.

200ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான பெரும் கலவரத்தில் பல்கீஸ் பானு என்ற 20 வயது இளம் பெண்ணை கூட்டு பலாத்தாரம் செய்து அவரது குழந்தையையும் தாயையும் மற்ற குடுமத்தினர் 14 பேரையுக் கொலை செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு மும்பை நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை  வழங்கப்பட்ட 11 பேரை குஜராத் அரசு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்டவர்களை விடுவிக்க கூடாது என்ற உச்சநீதிமன்றம் வழிகாட்டி இருக்க குஜராத அரசு சட்ட்த்தை தவறாக பயன்படுத்தப்ப்ட்டுள்ளது என்று வழக்கறிஞர்கள் கருத்த்துக் கூறியுள்ளனர்.

குஜராத் அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவின் மகத்தான சுதந்திரத்திற்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என ஜனநாயக விரும்பிகள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது என்ன விவகாரம் என்பதை இன்றைய உரையில் நாம் பார்க்க்லாம்..

002 ம் ஆண்டு கோத்ரா நகரில் பயணியர் ரயில் ஒன்று தீ வைக்கப்பட்டதில் 60 இந்து புனிதப் பயணியர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, முஸ்லிம்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. 

ரயிலுக்கு தீ வைத்த குற்றத்தை முஸ்லிம்களின் மீது சுமத்திவிட்டு இந்து மத கும்பல், முஸ்லிம்களின் சுற்றுப்புறங்களை தாக்கியும், உடைமைகளை சேதப்படுத்தியும் வன்முறை தாக்குதலில் ஈடுப்பட்டது.

 அரசு நிர்வாகமும், போலிஸூம் கண்டுகொள்ளாத நிலையில், மூன்று நாட்கள் கலவரக்காரர்கள் எந்தவித தடையுமில்லாமல் சுதந்திரமாக செயல்பட்டனர். ஆயிரத்துக்கும் மேலாலான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

 2002 பிப்ரவரி 28ஆம் நாளில் குல்பர்க் சொஸைட்டியில் நிகழ்ந்த படுகொலையில் முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்ஸான் ஜாஃப்ரி உள்பட 70 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். 31 பேரை இன்னும் காணவில்லை. மாநில காவல்துறை ஆணையர் பி.சி.பாண்டே நிலைமையை கட்டுப்படுத்தாததோடு வெறியர்களை சம்பவ இடத்துக்கு சப்ளை செய்தார் என்ற குற்றச் சாட்டு இருக்கிறது.

 நரோடாபாட்டியா வில் நூரானி மஸ்ஜிதில் 91 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பெண் களும் குழந்தைகளுமாக உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

 அப்போது குஜராத்தில் முதலமைச்சராக இருந்த, தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோதி மீது இந்த வன்முறையை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. என்று விமர்சனம் இன்று வரை இருக்கிறது.

 குற்றங்களை தடுக்கவில்லை என்பது மட்டுமல்ல. பல குற்றங்களையும் பதிவு செய்யவே குஜராத் காவல்துறை மறுத்துவிட்டது.

 சுமார் 4500 குற்ற வழக்குகள் அப்போது பதிவு செய்யப்பட்டன. அவற்றில் சுமார் 2000 வழக்குகளை போதுமான ஆதரம் இல்லை என்று கூறி குஜராத் காவல்துறை மூடிவிட்டது. உச்சநீதிமன்றம் தலையிட்ட்தை தொடர்ந்து சுமார் 2000 வழக்குகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

 மிகப்பெரிய குற்றங்கள் நடைபெற்ற சுமார் 13 வழக்குகள் குஜராத்தில் விசாரிக்கப் பட்டால் நீதி கிடைக்காது என்ற காரணத்திற்காக வெளிமாநிலங்களில் விசாரிக்க அனுமதிக்கப் பட்டன.

 அப்படி ஒரு வழக்குதான் பல்கீஸ் பானுவின் வழக்கு

 இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார். அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொல்லப்பட்டனர்.

 அப்போது 20 வயதான பானு கர்ப்பமாக இருந்தார். பில்கிஸின் 3 வயது மகள், பில்கிஸ் பானுவின் கண்முனே கொல்லப்பட்டார்.

 இந்த சம்பவத்திற்கு பிறகு காவல்துறையை சேர்ந்த சிலர் பில்கிஸ் பானுவை அச்சுறுத்தி ஆதாரங்களை அழித்தனர்.

 இந்த நிகழ்வை பிபிசி தமிழ் இப்படி விவரிக்கிறது.

(https://www.bbc.com/tamil/global-39858459)

 

அவர் ரான்திக்பூர் கிராமத்தில் வாழ்ந்து வந்த தன்னுடைய பெற்றோரை சந்திக்க வந்திருந்தார். இந்த கிராமம் கோத்ராவில் இருந்து வெகுதொலைவில் இல்லை.

 அப்போது 19 வயதாக இருந்த அவர் 3 வயது குழந்தைக்கு தாயாகவும், இரண்டாவது குழந்தையை வயிற்றில் சுமந்தபடி இருந்தார்.

 "அப்போது ரயில் தீ வைக்கப்பட்ட பின்னர் காலை நேரம். நான் சமையலறையில் மதிய உணவு சமைத்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய அத்தையும், அவருடைய குழந்தைகளும் ஓடி வந்தனர். அவர்களுடைய வீடுகள் தீ வைத்து கொளுத்தப்படுவதாகவும், உடனடியாக இவ்விடத்தைவிட்டு வெளியேற வேண்டும்" என்றும் அவர்கள் கூறினர்.

"உடுத்தியிருந்த துணிகளோடு உடனடியாக கிளம்பினோம். எங்களுடைய செருப்புகளை அணிந்துகொள்ள கூட எங்களுக்கு நேரம் இருக்கவில்லை".

சில நிமிடங்களில், சுற்றுப்புறங்களிலுள்ள எல்லா முஸ்லிம்களின் வீடுகளும் வெறுமையாகிவிட்டன. சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களை தேடிச் சென்றுவிட்டன.

தன்னுடைய மூன்று வயது மகள், தாய், கர்ப்பிணி உறவினர், அவருடைய இளையோர், உடன் பிறந்தவர் மகன்கள் மற்றும் மகள்கள், வயது வந்த ஆண்கள் இருவர் என மொத்தம் 17 பேர் குழுவில் பில்கிஸ் பானு இருந்தார்.

அடைக்கலம் தேடி

"பாதுகாப்பு அளிக்ககி கோரி முதலில் இந்து மதத்தை சேர்ந்த கிராம கவுன்சில் தலைவரிடம் சென்றோம். ஆனால், முஸ்லிம்களுக்கு அடைக்கலம் கொடுத்தால் அவரையும் கொலை செய்வதாக அந்த கும்பல் மிரட்டியதால். நாங்கள் அவ்விடத்தைவிட்டு செல்ல வேண்டியதாயிற்று".

அடுத்த சில நாட்கள், இந்த 17 பேர் குழு, மசூதி, அல்லது இந்த மதத்தவரின் இரக்கத்தால் வாழ்வதற்காக கிராமம் கிராமமாக பயணித்து அடைக்கலம் தேடியது.ஆனால் நேரங்கடந்துவிட்டது. மார்ச் 3ஆம் நாள் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று அவர்கள் எண்ணிய அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு புறப்பட தயாரானபோது, இரண்டு ஜீப்புகளில் வந்த குழுவினர், அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அரங்கேறிய கொடூரம்

"அவர்கள் எங்களை வாளாலும், தடியாலும் தாக்கினர். என்னுடைய மடியில் இருந்து எனது மகளை பறித்து கொண்ட ஒருவர், ஒரு கல்லில் நன்றாக மோதும்படியாக தரையில் வீசி எறிந்தார்".

பில்கிஸ் பானுவின் கைகளிலும், கால்களிலும் வெட்டுகாயங்கள்.. அவர்களை தாக்கியோர் சிறு வயதில் அவர் வளருகின்றபோதே ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் பார்த்து வளர்ந்த கிரமத்திலுள்ள அண்டைவீட்டுக்காரர்கள்தான்.

அவருடைய ஆடைகளை கிழித்தெறிந்து, அவரை கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர்.

தான் ஐந்து மாத கர்ப்பிணி என்றும், இரக்கம் காட்டுமாறும் பில்கிஸ் பானு அவர்களிடம் மன்றாடினார். அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிப்போனது.

தாங்கள் பாதுகாப்பான இடத்தை தேடி செல்கிறபோது, இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தை பெற்றேடுத்த இவருடைய உறவினரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். அந்த இரண்டு நாள் பச்சிளம் குழந்தையும் கொல்லப்பட்டது.

பில்கிஸ் பானு சுயநினைவிழந்து போனதால், அவர் இறந்துவிட்டார் என்று நம்பி தாக்குதலாளர்கள் சென்றுவிட்டதால், இவர் பிழைத்துகொண்டார்.

பில்கிஸ் பானு சுயநினைவிழந்து போனதால், அவர் இறந்துவிட்டார் என்று நம்பி தாக்குதலாளர்கள் சென்றுவிட்டதால், இவர் பிழைத்துகொண்டார். ஏழு மற்றும் நான்கு வயது இரு சிறுவர்கள் மட்டுமே இந்த படுகொலையில் இருந்து தப்பித்தவர்கள்.சுயநினைவுக்கு வந்தபோது, ரத்தம் தோய்ந்த தன்னுடைய உடலை உள்ளாடையால் மூடிக்கொண்டு பக்கத்திலுள்ள குன்றில் ஏறி, ஒரு குகையில் ஒருநாள் மறைந்து இருந்தார்.

"அடுத்த நாள், தாகம் எடுத்ததால், கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா என்று பார்க்க பக்கத்திலுள்ள பழங்குடியின கிராமத்திற்கு கீழிறங்கி வந்தார்.

முதலில் என்னை கண்டு சந்தேகமாக பார்த்த அந்த கிராமத்தினர் தடிகளோடு வந்தனர். ஆனால், பின்னர் அவர்கள் எனக்கு உதவினர். என்னுடைய உடலை மூடிக்கொள்ள பிளவுஸ் மற்றும் துப்பட்டா ஒன்றையும் வழங்கினர்.

 

குற்றவாளிகளுக்கு துணைபோன போலீஸார்

ஒரு போலீஸ் ஜீப்பை பானு கண்டார். அவர்கள் பானுவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தனக்கு நேர்ந்த அவலம் அனைத்தையும் போலீஸிடம் பானு விளக்கினார்.

"நான் படிக்காதவர். அவர்கள் எழுதிய புகாரை வாசித்து காட்ட கேட்டுகொண்டதை அவர்கள் மறுத்துவிட்டனர். என்னுடைய கைரேகையை வாங்கிகொண்ட அவர்கள், தாங்கள் நினைத்ததை எல்லாம் அதில் எழுதி கொண்டனர். எங்களை தாக்கிய அனைவரையும் எனக்கு தெரியும். பெயர்களை சொல்லி புகார் எழுத சொன்னேன். ஆனால், அந்த பெயரில் ஒன்றைகூட அவர்கள் புகாரில் சேர்க்கவில்லை" என்று அவர் கூறினார்.

அடுத்த நாள் இந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களுக்காக கோத்ராவில் அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கு அனுப்பப்பட்டார். அங்கு வைத்து 15 நாட்களுக்கு பின்னர் அவருடைய கணவர் அவரோடு சேர்ந்துகொண்டார். அங்கு அடுத்த நான்கு மாதங்களை கழித்தனர்.

 அவருடைய வயிற்றில் இருந்த குழந்தை இந்த பாலியல் வல்லுறவு மற்றும் தாக்குதல்களிலும் தப்பித்து கொண்டது. பின்னர் அவர் பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

 பில்கிஸ் பானுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என தெரிவித்தனர். பில்கிஸ் பானுவிற்கு கொலை மிரட்டல்களும் வந்தன.

பில்கிஸ் பானுவின் குடும்பத்தினரின் உடல்கள் எந்த பரிசோதனைக்கும் உட்படுத்தப்படாமல் எரியூட்டப்பட்டன.

 

இருப்பினும் பில்கிஸ் பானு தொடர்ந்து போராடினார். தாக்குதல்தாரிகளை அடையாளம் கண்டார். இதுகுறித்த முதல் கைது கடந்த 2004ஆம் ஆண்டு நடைபெற்றது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைத்தது.

 

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியோடு, பில்கிஸ் பானுவின் வழக்கு மகராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது

 

இவ்வழக்கில் மும்பை சிறப்பு நீதிமன்றம், 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21ஆம் தேதியன்று, பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது, அவரின் குடும்பத்தினர் 14 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளிகளான 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

 

 

இந்த நீதி மன்ற தீர்ப்பு வெளியான அதே காலகட்டத்தில் டில்லியில் கூட்டு கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஏன் அந்த தண்டனை வழங்கப்பட வில்லை என்ற கேள்வி எழுந்த்து.

எனினும் அப்பொது இந்த தீர்ப்பில் திருப்தியடைந்த பல்கீஸ் பானு இக்குற்றவாளிகள் ஆயுள் முழுவதிலும் தாங்கள் இழைத்த குற்றத்தை நினைத்து வருந்தினால் போதுமானாது என்றார்.

ஆனால் அவரது அந்த திருப்தி  நிலைக்கவில்லை

குற்றவாளிகள் 15 ஆண்டுகாலம் சிறையில் கழித்த பிறகு, தங்களை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். அவர்களுக்கான தண்டனைக்குறைப்பு குறித்து பரிசீலிக்குமாறு குஜராத் மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

அதையடுத்து, இவ்விஷயம் தொடர்பாக பரிசீலிக்க பஞ்ச்மகால் மாவட்ட கலெக்டர் சுஜால் மாயாத்ரா தலைமையில் ஒரு குழுவை குஜராத் அரசு அமைத்தது. அந்த குழு, குறிப்பிட்ட கைதிகளின் ஆயுள் தண்டனையைக் குறைப்பதற்கு பரிந்துரைத்து மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பியது.

அதன் அடிப்படையில் 11 ஆயுள் தண்டனை கைதிகளையும் விடுதலை செய்வதற்கு குஜராத் அரசு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து 11 பேரும் கோத்ரா கிளைச் சிறையில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டனர்

இந்தியாவை தலைக்குனிவுக்கு உள்ளாக்கிய மனித குலத்தின் அந்த மாபதகர்களை குஜராத் அரசு விடுவித்த்து என்றால் அந்த குற்றவாளிகள் கோத்ரா சிறையிலிருந்து வெளியேறிய போது இந்துத்துவ அமைப்புகள் அவர்களுக்கு மாலையும் திலகமும் இட்டு வரவேற்றுள்ளனர்.

இந்திய ஜனநாயக்த்தின் மீது அக்கறை கொண்ட அனைவரையும் இந்நிகழ்ச்சி மிகவும் பாதித்துள்ளது.

இத்தகைய கடும் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை தான் வழங்க்கப்பட வேண்டும் என்பதற்கு இது தான் காரணம். கூட்டு கற்பழிப்பில் ஈடுபட்டு சிறு குழந்தைகளை படுகொலை செய்தவர்கள் இனிப்பு கொடுத்து வரவேகப்படுகிறார்கள் என்பதை விட வெட்க்க் கேடானது வேறெதுவும் இல்லை என்று கூறுகிறார் சமூக செயல்பாட்டளரான கஸ்தூரி சங்கர்.

ரேப்பிஸ்டுகளை இப்படி இனிப்பு கொடுத்து வரவேற்கும் நிகழ்வு உலகில் வேறெந்த நாட்டிலும் நடக்காது என்று கூறுகிறார் நாகேஸ்வர் ராவ்

ஆனால் அதிகாரத்தில் இப்பவர்கள் இதை எல்லாம் கண்டு கொள்வதில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்காதவர்கள் குற்றவாளிகளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த உலகில் உறுதியான ஒரு தத்துவம் இருக்கிறது.

அநீதிக்கு ஆதரவு தெரிவிப்பது அழிவிற்கே வழிவகுக்கும்.

திருக்குர் ஆன் கூறுகிறது

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلا تَعَاوَنُوا عَلَى الإثْمِ وَالْعُدْوَانِ

 

அடுத்த வாசகம் கூறுகிறது

وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ (2)

பெருமானார் ஸல் கூறினார்கள்

مَن دعا إلى هدًى كان له من الأجر مثل أجور مَن اتَّبعه إلى يوم القيامة، لا ينقص ذلك من أجورهم شيئًا، ومَن دعا إلى ضلالةٍ كان عليه من الإثم مثل آثام مَن اتَّبعه إلى يوم القيامة، لا ينقص ذلك من آثامهم شيئًا.

 

வரலாற்றில் ஏராளமான நிகழ்வுகள் இதற்கு முன்னுதாரணம்  உண்டு.

காலம் காலமாக பாதுகாக்கப்பட்ட மக்கா நகரில் வசித்த மக்காவின்  காபிர்கள் அழிவை சந்தித்தித்தது அநீதிக்கு உதவிய காரணத்தால் தான்.

முஹ்ம்மது நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரீ 6 ம் வருடம் கஃபாவை வலம் வருவது போல ஒரு கனவு கண்டார்கள்.

உம்ரா செய்யலாம் என நினைத்தார்கள்.

அப்போது மக்காவாசிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு சீராக இருக்கவில்லை. மக்காவில் காபிர்கல் பத்று யுத்த்த்தில் தோற்று, உஹது யுத்த்ததில் அதற்கு பழி தீர்த்த பிறகு அகழி யுத்தத்தில் மீண்டும் தோற்றுப் போயிருந்தார்கள்.  எனவே மக்காவின் காபிர்கள் பலவீனப்பட்டிருந்தாலும் கூட பெருமானாரின் மீது காழ்ப்புணர்வுடனேயே இருந்தார்கள்.

எனினும் மக்காவை கண்ணியப்படுத்தும் எண்ணத்தோடு வருகிற எவரையும் தடுக்கும் வழக்கம் இல்லை என்பதால் மக்காவாசிகள் தனது எண்ணத்தை புரிந்து கொண்டால் தடை சொல்ல மாட்டார்கள் என பெருமானார் (ஸல்) அவர்கள் நினைத்தார்கள்.

உமராவிற்கு புறப்பட்டார்கள். 1400 நபித்தோழர்கள் உடன் வந்தார்கள்.

ஆனால் மக்காவின் எல்லையில் காலித் பின் வலீத் ரலி அவர்களின் குதிரைப்படை பெருமானாரை வழிமறித்த்து.

வேறு மார்க்கமாக ஜித்தாவிலிருந்து வரும் வழியாக மக்காவிற்கு செல்ல பெருமானார் (ஸல்) அவர்கள் திட்டமிட்ட போது ஹுதைபிய்யா என்ற இடத்தில் பெருமானார் (ஸல்) அவர்களின் புகழ்பெற்ற கஸ்வா என்ற ஒட்டகை படுத்துக் கொண்டது. எவ்வளவோ முயன்றும் எழுந்திருக்க மறுதத்து.

தான் இப்போது மக்காவிற்குள் வலுவில் செல்வதை அல்லாஹ் விரும்பவில்லை என்று புரிந்து கொண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவாசிகள் எந்த ஒரு உடன்படிக்கைகு அழைத்தாலும் நான் உடன்படுவேன் என்றார்கள்.

இறுதியில் முஸ்லிம்களுக்கும் மக்காவின் காபிர்களுக்கும் இடையே ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்டது.

அந்த உடன்படிக்கையின் ஒரு அம்சமாக இரு சாராரும் 10 வருடங்கள் சண்டையிட்டுக் கொள்வதில்லை என்று தங்களது பகைவர்களுக்கு உதவுவதில்லை என்றும் ஒரு முடிவு செய்தனர். அதன்பிறகு இந்த உடன்படிக்கையில் ஹிஜாஸ் பகுதியில் உள்ள மற்ற எவரும் சேர்ந்து கொள்ள விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கேற்ப பனூ பிக்ரு எனும் குடும்பத்தினர் மக்கா வாசிகளின் தரப்பிலிருந்தும் பனூ குஸாஆ எனும் குலத்தினர் முஸ்லிம்களின் தரப்பிலிருந்தும் அந்த உடன்படிக்கையில் சேர்ந்து கொண்டனர்.

لما كان صلح الحديبية بين رسول الله صلى الله عليه وسلم وبين قريش كان فيما شرطوا لرسول الله صلى الله عليه وسلم وشرط لهم أن من أحب أن يدخل في عقد رسول الله صلى الله عليه وسلم وعهده فليدخل فيه، ومن أحب أن يدخل في عقد قريش وعهدهم فليدخل فيه، فدخلت بنو بكر في عقد قريش وعهدهم ودخلت خزاعة في عقد رسول الله صلى الله عليه وسلم وعهده.

வரலாற்று சிறப்பு மிகு இந்த உடன்படிக்கை உரிய வகையில் கடைபிடிக்கப் பட்டிருக்குமானால் மக்காவின் காபிர்கள் இன்னும் 10 வருடங்கள் நிம்மதியாக வாழ்ந்திருக்க முடியும்.

ஆனால்

அவர்களுடைய நண்பர்களான பனூபிக்ருகள் முஸ்லிம்களின் நண்பர்களான பனூ குஸாஆக்களை தாக்கினர். கடும் சேதங்களை ஏற்படுத்தினர். அவர்களில் 23 பேரை கொலை செய்தனர்.  இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு மக்காவின் காபிர்கள் இரகசியமாக ஆதரவு தெரிவித்தார்கள். பல மக்காவின் குறைஷித்தலைவர்கள் இரக்சியமாக இத்தாக்குதலில் பங்கேற்றனர்.

இந்த செய்தியை கிழிந்து தொங்கும் ஆடைகளோடும் வழிந்தோடும் இரத்தக் கறைகளோடும் மதீனாவிற்கு வந்து சொன்னார் பனூ குஸா ஆக்களின் தலைவர்/

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்காவாசிகள் ஒப்பந்த்த்தை முறித்துவிட்டனர். இனி அந்த ஒப்பந்தம் நம்மை கட்டுப்படுத்தாது என்றார்கள்.

அடுத்த இரண்டு வருடத்தில் அதாவது ஹிஜ்ரி 8 ம் வருடத்தில் மக்காவின் மீது படையெடுப்பு நடத்தினார்கள். பெருமானாரை எதிர்க்கும் வலுவில்லாத மக்காவின் காபிர்கள் சரணடைந்தார்கள். மக்கா வெற்றி கிடைத்தது. தன் உயிருக்கு அச்சத்தை ஏற்படுத்தி வெளியேற்றிய மக்காவாசிகளை எட்டே வருட்த்தில் பெருமானார் (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்கள். மக்காவின் காபிர்கள் நிரந்தர தோல்வியை சந்தித்தார்கள்.

அநீதிக்கு துணை நிற்போம் நிச்சயம் நிரந்தர தோல்வியை சந்திப்பார்கள் என்ற அழுத்தமான பாடத்தை இந்த வரலாற்றுச் செய்தி மக்களுக்கு தருகிறது.

அநீதிக்கு துணை நிற்போர் அரசியல் அதிகாரத்தில் அல்லது ஆணவத்தில் கொட்டம் அடிக்கலாம். ஆனால் காலத்தின் கரங்களில் எந்ந்த பெரிய சாம்ராஜ்யமும் சருகுகளைப் போல சரிந்து விடும்.

அல்லாஹ் நமது நாட்டை தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பானாக!


1 comment:

  1. Aameen Aameen.... அற்புதமான கட்டுரை... கடைசி வரிகள் கனல்....


    பாரகல்லாஹ் ஹள்ரத்

    ReplyDelete