வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, August 25, 2022

பெற்றோர்கள் கவனத்திற்கு

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا (74)

பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்திருக்கின்றன.

 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20-ஆம் தேதி மட்டும் தமிழகத்தில் ஒரே நாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். 28 பேர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.

ஜூலை 26 விழுப்புரம் "கண்டச்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள் மாணவி  411 மதிப்பெண் பெற்றுள்ளார். பொருளாதார சூழல் காரணமாக படிப்பை தொடர முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை கிராமத்தில் அருகே உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த

மாணவரால் சரிவர படிக்க முடியவில்லை. இதனால், பெற்றோர் திட்டியதால் மாணவன் தற்கொலை செய்து கொண்டார்

 சிவகாசி அருகே உள்ள அய்யம்பட்டி பகுதியில், பள்ளி சென்று வீடு திரும்பிய 11ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதற்கான காரணங்கள்

கல்விச்சூழலில் உள்ள கட்டண உயர்வு நீட் போன்ற நெருக்கடிகள்

கல்விக் கூடங்களில் ஏற்படும் தொல்லைகள்

பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அனுகுமுறைகளில் உள்ள குறைபாடுகள்

இத்தகைய சூழலில் நமது பிள்ளைகளை பாதுகாக்க நாம் சில கவன்ங்களை எடுத்தாக வேண்டும்.

முதலில் நிய்யத்.

நமது பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்ற நிய்யத்தில் பெற்றோருக்கு பெரும்பாலும் தெளிவு இருப்பதில்லை.

திருக்குர் ஆன் கற்றுக் கொடுக்கிறது.

நமது பிள்ளைகள் நமக்கு மகிழ்ச்சியளிப்பவர்களாக இருக்க வேண்டும்.

அதை قُرَّةَ أَعْيُنٍ என்ற அற்புதமான வார்த்தையால் திருக்குர் ஆன் அடையாளப்படுத்துகிறது.

 இது மகிழ்ச்சியிலும் பல படி மேலான நிலையாகும்.

 ஹஜ்ஜுக்கு செல்லும் போது ஹாஜிகள் பலரும் தங்களது பிள்ளைகளுக்கு துஆ செய்வதை முக்கிய இலக்காக வைத்திருப்பார்கள். அவர்கள் நன்றாக இருந்தால் போதும் என்ற சிந்தனையில் இருப்பார்கள்.

 பெற்றோர்களுக்கு நான் சொல்வது முதலில் நீங்கள் கேட்க வேண்டியது என்ன தெரியுமா

 என் பிள்ளை எனக்கு மகிழ்ச்சியளிக்க வேண்டும் என்பதாகும்.

 பிள்ளை அதிகம் படித்து அமெரிக்கா போனால் அது பிள்ளைக்கு மகிழ்ச்சியளிக்கும் உங்களுக்கு உதவுமா ?

 பிள்ளைகளின் எந்த வளர்ச்சியும் தங்களுக்கு மகிழ்ச்சியளிக்காவிட்டால் அப்படிப் பட்ட பிள்ளை வளர்ப்பால் என்ன லாபம் என்று பெற்றோர் யோசிக்க வேண்டும்.

 எனவே பிள்ளை வளர்ப்பின் முக்கிய அம்சம் அவர்களால் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி கிட்ட வேண்டும்.

 குர்ரது ஐன் என்றால்

 பிள்ளைகள் கட்டுப்படுபவர்களாக இருப்பது

பிள்ளைகள் உய்ர்ந்த அந்தஸ்தில் இருப்பது

பிள்ளைகள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுபவர்களாக இருப்பது

பிள்ளைகள் தீனில் நிலைத்திருப்பது

 என பல பொருள் உண்டு.

 இதில் எந்த வகையில் அவர்கள் அமைய வேண்டும் என்ற தேர்வு பெற்றோர்களிடம் இருக்கிறது.

என் பிள்ளை ஆங்கிலம் பேசவேண்டும்

ஊர் மெச்சும் படி வாழவேண்டும் .

கை நிறைய சம்பாதிக்க

குழந்தை குட்டிகள் பெற்று குடும்பத்தோடு வாழ்கிறான்

எங்களை கவனித்துக் கொள்ள வேண்டும்

 இதில் எதுவும் தப்பில்லை. ஆனால் அதற்கு முன் என் பிள்ளை சாலிஹானவராக என்ற ஒரு வார்த்தையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 திருக்குர் ஆன் இதை கற்பிக்கிறது.

இபுறாகீம் அலை குழந்தை வேண்டும் என்று பொதுவாக கேட்கவில்லை

  رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ என்று கேட்டார்கள்.

 அதற்கு அல்லாஹ் பதிலளித்தை குர் ஆன் கூறுகிறது.

 فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ  பெருந்தன்மையும் பொறுமையும் மிக்க குழந்தையை கொடுத்தோம்.

 ஜகரிய்யா அலை அவர்கள் குழந்தை வேண்டி இப்படி பிரார்த்தித்தார்கள்

வாரிசாக - பேர் சொல்ல ஒரு பிள்ளை வேண்டும் என்று மட்டும் கேட்கவில்லை.

 فَهَبْ لِي مِنْ لَدُنْكَ وَلِيًّا * يَرِثُنِي وَيَرِثُ مِنْ آلِ يَعْقُوبَ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا  [مريم: 5، 6]

அதற்கு அல்லாஹ் கொடுத்த பதில்

وَحَنَانًا مِنْ لَدُنَّا وَزَكَاةً وَكَانَ تَقِيًّا * وَبَرًّا بِوَالِدَيْهِ وَلَمْ يَكُنْ جَبَّارًا عَصِيًّا

முஹம்மது நபி (ஸல்) அவர்களும் திருக்குர் ஆனும் இதை கற்பிக்கிறார்கள்.

 عن أبي هريرة -رضي الله عنه- أن رسول الله -صلى الله عليه وسلم- قال: إذا مات ابن آدم انقطع عمله إلا من ثلاث: صدقة جارية، أو علم ينتفع به، أو ولد صالح يدعو له" رواه مسلم.

சாலிஹான குழந்தையை பற்றிய நிய்யத் திருமணத்திற்கு முன்பிருந்தே இருக்க வேண்டும் என மார்க்க அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்

அதனால் தான் உடலுறவின் போது இப்படி பிரார்த்தனை செய்ய சொன்னார்கள்

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( لَوْ أَنَّ أَحَدَهُمْ إِذَا أَرَادَ أَنْ يَأْتِيَ أَهْلَهُ قَالَ بِاسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبْ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا ، فَإِنَّهُ إِنْ يُقَدَّرْ بَيْنَهُمَا وَلَدٌ فِي ذَلِكَ لَمْ يَضُرَّهُ شَيْطَانٌ أَبَدًا - روى البخاري

 

குழந்தை பிறந்தால் அதன் காதுகளில் பாங்கு இகாமத்தை சொல்லி விட்டு இப்படி துஆ கேட்கணும்.

 وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ [آل عمران: 36].

பாங்கு சொல்லவும் குழந்தையின் உதடுகளில் இனிப்பை தடவ்வும் துஆ செய்யவும் சாலிஹான ஆட்களை அழைக்க் வேண்டும் என்பதும் இந்த நிய்யத்தை நோக்கி செயல்படுவதற்காகவே

குழந்தை பிறந்த பிற்கு தொடர்ந்து அல்லாஹ்விடம் கேடக வேண்டும்.

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا [الفرقان: 74]

நமக்கான எந்த பிரார்த்தனையிலும் பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 இது நபிமார்களின் வழி

 وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَنْ نَعْبُدَ الْأَصْنَامَ [إبراهيم: 35]، 

﴿ رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ [إبراهيم: 40].

 அவர்களது அறிவு வளர்சிக்காக துஆ செய்ய வேண்டும்

عن ابن عباس قال: ((ضمَّني رسول الله، وقال: اللهم علِّمْهُ الكتاب- البخاري 

பிள்ளைகளின் குடும்ப பொருளாதார வளர்ச்சிக்காக துஆ செய்ய வேண்டும்.

أن رسول الله صلى الله عليه وسلم دعا لأنس بن مالك فقال: ((اللهم أكْثِرْ ماله وولده - مسلم 

பிள்ளைகள் அறிவு பெற – அவர்களுக்காக காசு பனம் திரட்ட . அவர்கள் பெருளாதாரத்தில் மேலோங்க நாம் உழைக்கிறோம்.

ஆனால் துஆ செய்கிறோமா ? .

இஸ்லாமிய ஆன்மீக் உலகின் மிகப்பெரிய ஆளுமையான புழைல் இப்னு இயாழ் ரஹ் அவர்களின் துஆ கவனிக்கத்தக்கது.

فقد ورد أن الفضيل بن عياض كان يدعو لولده (عليٍّ)، وهو صغير؛ فيقول: "اللهم إنك تعلم إني اجتهدت في تأديب ولدي (علي)، فلم أستطع، اللهم فأدِّبه لي

பிள்ளைகளை நேர் பாதையில் செலுத்துவதில் பிரார்த்தானை பங்கு எத்தகையது என்பதை இது உணர்த்துகிறது.

புழைல் ரஹ் தனது பிள்ளையை சிறப்பாக வளர்க்கத் தெரியாதவர் அல்ல. ஆனால் பிரார்த்தனையின் மகிமை அவருக்கு புரிந்திருந்த்து. அதனால் அவர் இப்படி பிரார்த்தித்தா.

இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது.

இப்படி பிரார்த்திக்கிற சிந்தனையாவது இன்றைய பெற்றோர்களிடம் இருக்கிறதா ?

புழைல் ரலி அவர்களின் பிரார்த்தனைக்கு அல்லாஹ் பலனளித்தார். அவரது மகன் அலீ அவரை விடச் சிற்ந்து திகழ்ந்தார்.

சமீபத்தில் அரபு தொலைக்காட்சி ஒன்றில் நிறைய குழந்தை பெற்ற ஒரு தந்தையை பேட்டி கண்டார்கள்.

இத்தனை குழந்தைகள் இருந்தும் அவர்களை எப்படி உங்களால் சிறப்பாக உருவாக முடிந்த்து.

அந்த தந்தை சொன்னார்,

 ما سِرُّ صلاح أبنائك وهم كثير؟ فيقول: والله لا أترك الدعاء لهم.

நமக்கு மகிழ்ச்சியளிக்கிற சாலிஹான குழந்தைகள் என்ற சிந்தனை உறுதியாக  நமது மனதில் பதிந்து விடுமானால் பிள்ளை வளர்ப்பில் நமது கவனமும் நடைமுறைகளும் பல வகையிலும் சீராகி விடும்.

நமது நிய்யத்தும்

நமது துஆவும் இதில் முக்கியம்.

தற்போதைய அறிஞர்கள் பல வழிகாட்டுதல்களையும் கூறுகிறார்கள்

1.   குழந்தைகளுக்கு அவர்களால் முடியாத்தை திணிக்காதீர்கள்.

 நான் இதை விரும்புகிறேன். ஆனால் உன்னால் முடிந்த அளவு நீ முயற்சி செய் என்று பெற்றோர்கல் தங்களது ஆசைகளை கூற வேண்டும். முடியாவிட்டால் நாம் வேறு ஒரு பாதையை தேந்ர்ந்தெடுக்கலாம் என்று கூறவேண்டும்.  

 இதுவும் பெருமானாரின் வழிகாட்டுதல் தான்

தன்னிடம் பை அத் செய்ய வருகிறவர்களுக்கு அறிவுறை கூறுகிற பெருமானார் (ஸல்) அவர்கள் முடிந்தவரை கடைபிடிப்பேன் என்று சொல்லச் சொல்லுவார்கள்.

 2.   நண்பர்களாக பழ்குங்கள் அவர்களது பிரச்சனைகளை அப்போதுதான் கூறுவார்கள்.

இஸ்லாம் அதையும் தாண்டி அவர்களது நடவடிக்கைகளிலிருந்தே அவர்களது சிரமங்களை உணருமாறு வழிகாட்டுகிறது.

 சஹாபாக்கள் கூறுகிறார்கள்> நாங்கள் பெருமானாரிடம் கல்வி கற்க வந்தோம். நாட்கள் கடந்தன. நாங்கள் இளைஞர்களாக இருந்தோ. எங்களது சிரமத்தை புரிந்து கொண்ட பெருமானார். இது போதும் என்று கூறி அனுப்பிவிட்டார்கள்.

 குழந்தைகள் கூறும் பிரச்சனைகளை அலட்சியமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

 அவர்களது வாழ்கைதான் முக்கியம் என்பதை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும்.

 குழந்தைகளை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வீடுகளுக்கு அழைத்துச் சென்று அங்குள்ள குழந்தைகளோடு பழக விடுங்கள்.

 அவர்களை வெளியில் அழைத்துச் செல்லுங்கள். வெயில் படுவது கூட குழந்தைகளின் மன இறுக்கத்தை போக்கும்

 இப்படி ஏராளாமான அறிவுரைகள் கூறப்படுகின்றன.

 இவை எல்லாவற்றையும் விட முக்கியம்.

 குழந்தைகளைப் பற்றிய நமது நிய்யத்தும் அவர்களுக்கான துஆவும் மிக முக்கியமானவையாகும்

 இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

   

 

 

No comments:

Post a Comment