இந்து சகோதரர்கள்
விநாயக சதுர்த்தி விழாவை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதில் அரசியல் செய்யும்
சிலர் ஆங்காங்கே முஸ்லிம்களும் பிரச்சனைகளை உண்டு பண்ன முயற்சி செய்வார்கள்.
முஸ்லிம் சமுதாயம்
எச்சரிக்கையாகவும் பிரச்சனைகள் ஏதும் ஏற்பட்டால் சட்ட ரீதியாகவும் சமாளிக்க வேண்டும்.
அரசியல் ரீதியாக
இந்துத்துவ சக்திகளின் கை ஓங்கியிருப்பதால் காவல்துறையினர் கூட அவர்களுக்கு சார்பாக
சில இடங்களில் நடந்து கொள்ள கூடும். முடிந்தால் அது போன்ற சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்களின்
உதவியை நாடலாம்.
நீதிமன்றங்களே கூட
சில இடங்களில் அவர்களுக்கு சார்பாக செயல்படலாம் . அது போன்ற சந்தர்பங்களில் அல்லாஹ்வின்
உதவியை நாடி துஆ செய்துவிட்டு. காவல்துறையினரின் வேண்டுகோள்படி நடந்து கொள்வதே நல்லது.
பொதுப்பாதைகளில்
இருக்கும் பள்ளிவாசல்களில் சிசிடிவி கேம்ராக்களை வைத்துக் கொள்வது பள்ளிவாசலிலிருந்து
கல் வீசினார்கள் என்பது போன்ற அபாண்டமான குற்றச் சாட்டுகள் எழுவதிலிருந்து பாதுகாக்கும்.
தேவையற்று பிரச்சனை
செய்ய நினைக்கும் வம்பர்களை சந்திக்கிற போது அமைதியை பரமாரிக்கிற வழிமுறையை கையாள வேண்டும்
என்று திருக்குர்ஆன் கற்பிக்கிறது.
وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا
سَلَامًا (63)
அரபுகளிடம் ஒரு பழமொழி இருக்கிறது.
"إنَّ مِن ابتغاءِ الخيرِ اتقاءَ الشر
தீமைகளை கண்டு விலகிக் கொள்வது நன்மைகளை தேடிக் கொள்ளும் வழியாகும்.
முன்னோர்கள் இந்தப் பண்பாட்டில் மிகப் பெருந்தனமையாக தங்களை தற்காத்துக் கொண்டார்கள்.
தனது அனுபவத்தை அஸ்மஈ கூறுகிறார்.
قال
الأصمعي: «بَلَغَني أنّ رَجُلا قال لآخَرَ: واللهِ لَئِن قُلتَ واحدةً
لَتَسْمَعَنَّ عشرًا. فقال الآخرُ: لكنَّك إنْ قلتَ عشرًا لم تَسمعْ مني واحدة".
ஹஸன் பஸரீ
ரஹ் அவர்களை ஒரு மனிதன் அநியாயமாக திட்டினான்.
எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்து விட்டு ஹஸன் ரலி கூறினார்கள். நீ எதையும்
விட்டு வைக்கவில்லை. ஆனால் அல்லாஹ்விற்கு இதைவிட அதிகமாக தெரியும்.
وشَتَمَ
رجُلٌ الحسنَ، ، فقال له الحسنُ: "أَمّا أنت فما أَبقَيتَ شيئًا، وما يَعلمُ
اللهُ أكثر".
நம்மிடம் பிரச்ச்னை செய்பவர்களிடம் இந்த அளவில் அன்பொழுக பேசுவது
எல்லோராலும் முடியாமல் போகலாம்.
ஆனால் பிரச்சனைகளுக்கு
உள்ளாக்கப்படும்போது எல்லோரும் கவனிக்க வேண்டிய ஒரு ஆலோசனையை அஹனப் பின்
கைஸ் ரஹ் அற்புதமாக கூறூகிறார்கள்.
உனது கோபங்களை
தவிர்த்துக் கொள். அதை விட அதிகப்படியான சிரமங்கள் ஏற்படுவதை அஞ்சிக்கொள்
قال الأحنفُ بن قيس: مَن لم يَصبر على كلمةٍ
سَمِعَ كلمات، وَرُبَّ غَيظٍ تجرعته مخافة ما هو أشدُّ منه
எனவே அற்பமானவர்கள்
நமது அன்றாட அமைதியில் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடாதவாறு சாதுரியமாக நடந்து கொள்ள
வேண்டியது நமது பொறுப்பாகும்.
அல்லாஹ் இந்திய நாடெங்கும் இந்த பண்டிகையின் காரணமாக கலவரங்களோ
சர்ச்சைகளோ ஏற்படாமல் பாதுகாத்தருள்வானாக!
இந்த சந்தர்ப்பத்தில்
முஸ்லிம்கள் மனதில் நிலை நிறுத்த வேண்டிய ஒரு கருத்தை இந்த ஜும் ஆவில் உங்கள் மனதில்
பதிய வைக்கிறேன். அல்லாஹ் அதற்கு உரிய பலனை தந்தருள்வானாக!
உருவமற்ற இறைவனை
வணங்குதல் என்று கற்றுக் கொடுத்து இஸ்லாமின் கடவுட் கோட்பாடு எத்தகைய உன்னதமானது என்பதை
இந்த நோரத்தில் நாம் சிந்திக்க வேண்டும்.
கடவுளுக்கு
நாம் நெய்வேத்தியம் செய்ய வேண்டியதில்லை ஒரு பைசா கூட செலவழிக்க தேவையில்லை
உடலை வருத்திக்
கொள்ள் வேண்டியதில்லை.
பாதயாத்திரை
இல்லை. அலகு குத்திக் கொள்ளல் இல்லை. தீமித்திதல் இல்லை. வண்ண வண்ணமாய் சிற்பங்களை வாங்கி
அதை கடலிலோ குளத்திலோ கரைக்க வேண்டும் எனற தேவையில்லை.
சூரத்துல் இக்லாஹ்
இஸ்லாமின் கடவுட் கோட்பாட்டை மிக எளிதாக தெளிவாக புரிய வைக்கிறது.
அல்லாஹ் அவன்
ஒருவன். அவன் தேவையற்றவன். (ஆராதனைகளோ அபிஷேகங்களோ பலிகளோ அவனுக்கு தேவையில்லை.) அவன்
யாருக்கும் பிள்ளை அல்ல. அவனுக்கு எந்த பிள்ளையும் இல்லை. அவனைப் போல எதுவுமில்லை.
கடவுட் கோட்பாட்டில்
இந்த உலகில் என்னவெல்லாம் தப்பான புரிதல்கள் இருக்கிறதோ அவை அனைத்தையும் இந்த வசனம்
விலக்கி வைத்து விடுகிறது.
நம்மை படைத்து
, நாம் வணங்கக்க கூடிய ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திக்க கூடிய அறிவாளிகள்
பலரும் இந்த ஒரு அத்தியாயத்தின் கருத்தை சிந்தித்தே தங்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏக இறைவனை புரியாமல்
தங்களுக்கு பிடித்தமானதை எல்லாம் கடவுள் என்று கொண்டாடக் கூடிய சிந்தனை எவ்வளவு பலவீனமானது.
அத்தகைய கடவுளின்
மீது எத்தகைய அச்சம் இருக்கும் ?
சிலைகளை கடவுள் என்பது
அப்பட்டமான மனித கறபனை. வடிகட்டிய பொய்.
وَمَا يَتَّبِعُ الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ شُرَكَاءَ إِنْ
يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ(66யூனுஸ்
சிலைகள் மொத்தமுமே மனித
கறபனைகளும் அவர்கள் விரும்ப்ச் சூடிக் கொள்ளும் பெயர்கள் தான்
إِنْ هِىَ إِلَّآ أَسْمَآءٌ
سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم
இன்று சதுர்த்தி
கொண்டாடப்படுகிற விநாயகருக்கு முப்பத்தி இரண்டு உருவங்கள் சமய ரீதியாக சொல்லப்
படுகிற ஆனால் மக்கள் உருவாக்கி வைத்திருக்கிற உருவங்கள் எத்தனை
சில
வருடங்களுக்கு முன் சென்னை குரோம்பேட்டை ராதா நகர்
கிருஷ்ணமாச்சாரி தெருவை சேர்ந்த கட்டிட கலை நிபுணர் சீனிவாசன் சென்னை அஸ்தினாபுரத்தில்
வெவ்வேறு வகையான 5000 விநாயகர் சிலைகளை வைத்து ஒரு கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
அதில் 100 கண்ணாடி பிள்ளையார் சிலைகள் , பெண்
உருவத்தில் உள்ள பிள்ளையார், , கேரம் ஆடும் பிள்ளையார், பாகவதர் கோலத்தில் பிள்ளையார், கர்நாடக மற்றும் மேற்கத்திய இசை கலைஞர்களாக பிள்ளையார், செஸ் ,கிரிக்கெட் ஆடும் பிள்ளையார் என்று ஏராளமான உருவத்தில் விநாயகர் சிலைகள்
கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தது. .
தக்காளி, பச்சை மிளகாய், பப்பாளி, தென்னை மரம், வாழை மரம், தேங்காய், பசுவின் முதுகு, உத்தராட்ச கொட்டை
ஆகியவற்றில் தோன்றிய விநாயகர் உருவங்கள் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் சொல்கின்றன,
இந்த ஆண்டு பணக்கட்டுகளாக வைத்து ஒரு பிள்ளையார் சிலை
வைத்திருக்கிறார்கள்.
சிலைக் கடவுள்கள் முழுக்க
முழ்க்க மனிதக் கறபனைகள் என்பதற்கான அடையாளம் இது. மக்கள் தமது சொந்த
விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் கடவுள் நாமகரணம் செய்து விட்டார்கள் என்பதற்கான
சாட்சி இது.
படைத்த ரப்பு விசயத்தில்
இத்தகைய அவதூறை துணிந்து செய்வதை பெரும அநீதி என திருக்குர் ஆன் திரும்பத்
திருமபக் கூறுகிறது.
فَمَنْ
أَظْلَمُ مِمَّنْ افْتَرَى عَلَى اللَّهِ
இத்தகைய செயலுக்கு மன்னிப்பே
இல்லை என திருக்குர் ஆன் பிரகடணப்படுத்துகிறது,
إِناللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ
لِمَنْ يَشَاءُ وَمَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ افْتَرَى إِثْمًا عَظِيمًا(48)
إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ
الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَار
சிலைகள் அனைத்தும் பொய்யான கறபனைகள் என்பதற்கு அப்பால் கவனிக்க வேண்டிய இன்னொரு செய்தியும் இருக்கிறது.
இந்த சாமிக்கு பிடித்தது என்ன
வென்று கேட்டால் பச்சை அல்லது மஞ்சள் என்று நிரத்தை சொல்கிறார்கள். அல்லது மாவிலை
வேப்பிலை என்று தாவரங்களை சொல்கிறார்கள். அல்லது வெண்பொங்கல் சர்க்கரை பொங்கள் என
உணவுகளைச் சொல்கிறார்கள்.
இந்த சாமி என்னை எப்படி வாழுமாறு
கூறியது என யாரும் சொல்வதில்லை.
எனவே
இந்த சிலைகள் அநீதியானவை என்ற மனோ உணர்வை முஸ்லிம்கள் அழுத்தமாகவே நினைவு
படுத்திக் கொள்ள வேண்டும்.
வணக்கம் என்ற அநீதியிலிருந்து சத்திய இறைவனை வணங்குதல் என்ற நீதியின் நடை முறைக்கு
மக்கள் மாற வேண்டும் என்ற கவலை நமக்கு வரவேண்டும்.
விநாயகர்
சதுர்த்தியை முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு அரசியல் நடவடிக்கையாகவே நாம் பாக்கிறோம்.
அதனாலேயே இந்த நிகழ்வின் மீது நமக்கு ஒரு பயமும் பதற்றமும் ஏற்படுகிறது.
உண்மையில்
விநாயகசதுர்த்தி ஊர்வலங்கள் என்ற தற்போதைய நிகழ்வு மத தூண்டுதல்களை விட அரசியல்
தூண்டுதல்களாலே ஏற்பட்டது.
இந்த
நிகழ்வையும் இது போன்ற நிகழ்வுகளையும் நமக்கு எதிரான அரசியல் நகர்வு என்று
சிந்திப்பதை விட்டு விட்டு இது அல்லாஹ்வுக்கு எதிரான – சத்தியத்திற்கு எதிரான ஒரு
அநீதி – இந்த அநீதி தவிர்க்கப் பட வேண்டும் என்ற கோணத்தில் நாம் சிந்திக்க
வேண்டும்.
அடிப்படையிலான
இந்த சிந்தனை மாற்றம் ஏற்பட்ட பிறகு,
நண்பர்கள்
தெரிந்தவர்களிடம் சமயங்கள் கற்பிக்கும் சரியான கடவுட் கோட்பாடுகளை பற்றி பேச
வேண்டும் அதில் ஒரு சிந்தனை மாற்றம்
உருவாவதை எதிர்பார்க்க வேண்டும்.
இந்து
மதம் உட்பட எந்த மதமும் விவேகமற்ற உருவ வழிபாட்டை ஏற்கவே இல்லை.
பகவத்கீதை அத்யாயம்:7 வசனம்: 20 கூறுகிறது.
பொருளாசையின் காரணமாக சிலர் பல கடவுள்களை உருவாக்கி வணங்குவார்கள்
யஜூர் வேதம்அத்தியாயம்:32 வசனம்: 3 கூறுகிறது.
இறைவனுக்கு இணை இல்லை உருவமில்லை
யஜூர்வேதம் அத்தியாயம்:40 வசனம்: 9 கூறுகிறது.
எவன்கடவுளை விட்டு கடவுளின்படைப்புகளை வணங்கிரானோ
அவன்
அறியாமை இருளில் நுழைகிறான்
இது
போல ஏராளமான வழிகாட்டுதல்கள் உண்டு. முடிந்தால் அவற்றை பற்றி தெளிவாக படித்து சக
சகோதரர்களிடம் பரிமாற வேண்டும்
எச்சரிக்கை!
எந்த
ஒரு கட்டத்திலும் கேலி கிண்டலோ குறை கூறுதலோ அதில் வெளிப்படக் கூடாது.
அது
சிந்தனை மாற்றம் ஏற்பட உதவாது. பிரச்சனைகளைத் தான் உருவாக்கும். நீங்கள் என்ன
யோக்கியமா என்ற வாதப் பிரதிவாதங்களை உருவாக்கும்.
وَلَا
تَسُبُّوا الَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ فَيَسُبُّوا اللَّهَ عَدْوًا
بِغَيْرِ عِلْمٍ ۗ كَذَٰلِكَ زَيَّنَّا لِكُلِّ أُمَّةٍ عَمَلَهُمْ ثُمَّ إِلَىٰ
رَبِّهِمْ مَرْجِعُهُمْ فَيُنَبِّئُهُمْ بِمَا كَانُوا يَعْمَلُونَ
விரிவுரையாளர்கள் அருமையாக வழிகாட்டுகிறார்கள்’
· قال القرطبي فنهى سبحانه المؤمنين أن يسبوا أوثانهم؛ لأنه علم إذا
سبوها نفر الكفار وازدادوا كفرا
நீங்கள் சிலைகளை கேலி
பேசினால் அல்லது ஏசினால் அவர்கள் சிலைகள் மீது அதிக பற்று கொள்வார்கள்.
எனவே
பக்குவமாகவும் நிதானமாகவும் ஒரு சிந்தனை மாற்றம் ஏற்பட நாம் சிந்திக்க வேண்டும்.
நமது
கவலைகள் அந்த திசையில் அமையுமானால் அதில் அல்லாஹ் வெற்றியை தருவான்.
இன்னொன்றையும்
நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அண்ணல் பெருமானார் ஸல் அவர்கள்
செய்த மிகப் பெரிய கிருபயினால் ஷிர்கிலிருந்து தப்பித்துக் கொண்ட நாம் அந்த
நடைமுறைகளின் திசைகளை கூட திரும்பிப் பார்க்காது நடக்க தொடர்ந்து முயற்சிக்க
வேண்டும். நமது சந்த்திகளை பாதுகாக வேண்டும்.
· சிலை வணங்கப்படும் இடங்கள் பூஜை புணஷ்காரத்திற்கான உதவிகள் – பங்களிப்புகள் – தவிர்த்துக் கொள்ள வேண்டும். தவிர்க்க இயலாத
சந்தர்ப்பங்களில் அன்னதானம் போன்ற மக்களுக்கு பயன்படும் வழிகளில் செலவழிக்கலாம்.
· நமது வீடுகளில் உருவப்படங்களை மாட்டிவைப்பதை தவிர்க்க வேண்டும். அம்மாவின் படமாக இருந்தாலும் சரி. உஸ்தாதுகளின் படமாக இருந்தாலும் சரி.
· உயிருள்ள வற்றின் சிலைகளை எக்காரணத்தை கொண்டும். அன்பளிப்பு பொருட்களாகவோ – சாதனைகளுக்கான அடையாளங்களாகவோ கூட வைக்க கூடாது.
· லாப்டிங்க் புத்தா சிலைகள் வைக்க கூடாது.
· அம்மை நோயை மாரியாத்தா என்று கருதக் கூடாது
· மந்திரித்தலுக்காக கோயில்களுக்கு செல்லக் கூடாது
· ஜோஸியக்காரகள் மந்திரவாதிகளை அணுகக் கூடாது
அல்லாஹ்
தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment