வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 08, 2022

நீட் தேர்வு அறிவின் முடிவல்ல

 நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

சிலர் எதிர்பார்த்த வெற்றியை பெற்றிருப்பார்கள். வாழ்த்துக்கள்.

சிலருக்கு எதிர்ப்பர்த்த வெற்றி கிடைத்திருக்காது. அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இன்னும் ஒரு முறை தேர்வு எழுதும் வாய்ப்பும் அதற்காக படிக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது.

நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களை உற்சாகப்படுத்த வேண்டியது பெற்றோர்களின் கடமை

ஒரு தேர்வு தான் வாழ்க்கையை தீர்மாணிக்கிறது என்று நினைக்க கூடாது.

இன்னும் பல முறை தேர்வு எழுதிக் கொள்ளலாம். இந்த தேர்வே இல்லை என்றாலும் வாழ்க்கையை வெல்லலாம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த தேர்விலும் வெற்றி பெற்றவர் அல்ல.

உம்மி நபி என்றால் ஒரு ஆசிரியரிடம் போய் படிக்காதவர் என்று தான் பொருள். தனது இறுதித் தூதர் இன்னொரு மனிதரால் சான்றளிக்கப்படத் தேவையில்லை என்று அல்லாஹ் கருதினான்.

தேர்வை ஒரு லாபமாக பார்க்கும் சிந்தனை தான் இன்று பெருவாரியான மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் இருக்கிறது.

இந்த நிலை மாற வேண்டும்.

தேர்வு என்பது அறிவைத் தேடவும் திடப்படுத்திக் கொள்ளலவும் ஆன ஒரு முயற்சி தான் என்ற ஒரு மனோ நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

அறிவைத்தேடுவதே மனித வாழ்வின் பிரதான அம்சமாகும்.

இறைவா அதிகமாக கொடு என்று திருக்குர் பிரார்த்திக்க சொன்ன ஒரு விசயம் அறிவு மட்டுமே!

فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ ۗ وَلَا تَعْجَلْ بِالْقُرْآنِ مِن قَبْلِ أَن يُقْضَىٰ إِلَيْكَ وَحْيُهُ ۖ وَقُل رَّبِّ زِدْنِي عِلْمًا (114)

உலகின் பேரறிவு பெற்ற பெருமானாருக்குஅறிஞர்களுக்கெல்லாம் அறிஞரான பெருமானாருக்கு அல்லாஹ் அறிவுறுத்துகிறான். இறைவன் என அறிவை மேம்படுத்து! என்று பிரார்த்திக்க கூறுகிறான்.

 காசு பணம் செல்வாக்கு அந்தஸ்த்து என எது குறித்தும் அதிகமாக கேட்க வேண்டியதில்லை. அவை தேவைக்கு இருந்தால் போதுமானது.

 கல்விக்கு மட்டும் எல்லை இல்லை. கிடைக்கும் மட்டும் பெற வேண்டும் என்பதே இந்த ஆயத்தின் வழிகாட்டுதலாகும்.

 சட்ட மேதையும் இமாம் அபூஹனீபா ரஹ் அவர்களின் பிரதான மாணவருமான இமாம் அபுயூசுப் (ரஹ்) உயிரின் இறுதிக் கட்ட்த்தில் இருந்தார்கள். அவரை சந்திக்க சிலர் வந்தனர். அவர்களிடம் இமாம் அபூயூசுப் கேட்டார், ஹஜ்ஜில் சைத்தானை கல்லெறியும் போது நடந்தவாறு கல்லெறிவது சிறந்த்தா ? வாகனத்தில் பயணித்தவாறு கல்லெறிவது சிறந்ததா ? சிலர் நடந்து என்றார்கள். சிலர் வாகனத்தில் என்றார்கள். இல்லை என்று இரண்டையும் அபூயூசுப் மறுத்தார்கள். அப்படியானால் விடையை தாங்களே கூற வேண்டும் என்று மக்கள் கேட்டனர்.  இமாம் அபூயூசுப் கூறினார். எந்த கல்லெறிதலுக்கு பிறகு துஆ இருக்கிறதோ அதை நடந்தவாறு எறுவதும், எதற்குப்பிறகு துஆ இல்லையோ அதை வாகனத்தவாறு எறிவதும் சிறப்பானது.

 அப்போது பாங்கு சொல்லப்பட்ட்து இமாம் அபூயூசுபிற்கு அருகிலிருந்தவர்கள் அங்கிருந்து எழுந்தனர். அவர்கள் வீட்டு வாசலை எட்டுவதற்குள் இன்னாலில்லாஹ் எனும் சப்தம் கேட்டது. இமாம் அபூயூசுப் மரணித்து விட்டிருந்தார்கள்.

 அதே போல இமாம் அபூதர்ஆ  பெரும் ஹதீஸ் கலை அறீஞர் இறுதிக் கட்டத்தில் இருந்தார். அவருக்கு கலிமா சொல்லிக் கொடுக்க வேண்டும். அவ்வளவு பெரிய மனிதருக்கு அதை நினைவூட்டுவது எப்படி என்று மாணவர்கள் யோசித்தார்கள். இது பற்றிய ஹதீஸின் அறிவிப்பாளர்கள் தொடரை படிக்க ஆரம்பித்தால் ஹழ்ரத் அந்த ஹதீஸை நிறைவு செய்துவிடுவார்கள் என்ற முடிவுக்கு வந்து அந்த தொடரை படிக்க ஆரம்பித்தனர். படுத்திருந்த அபூஜ்ர் ஆ ரஹ் சட்டென உற்சாகம் பெற்று

  من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة. رواه أبوداود

 என்று கூறி முடித்த்தும் அவரது உயிர் பிரிந்த்து

 இமாம் நவ்வியை யாராவது விருந்துக்கு அழைத்தால் ஒரு நிபந்தனை சொல்வார்கள். நான் புத்தகம் படிக்க ஒரு அறையை ஒதுக்கி தர வேண்டும் என்பார்கள். விருந்து தயாராகும் வரை படித்துக் கொண்டிருக்க நூல்களை எடுத்துச் செல்வார்கள்.

 இப்னு ஜவ்ஸி இருபதாயிரம் நூல்களை படித்துள்ளார். இரண்டாயிரம் நூல்களை எழுதியுள்ளார்.

 இப்னு ஜரீர் அத்தப்ரீ மூன்று இலட்சத்து ஐம்பத்தி எட்டாயிரம் பக்கங்கள் எழுதியுள்ளார். அவரது வாழ்நாளை கழித்துப் பார்த்தால வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் 18 பக்கங்கள் எழுதியுள்ளார்.

 அல்லாமா ஆலூஸி பக்தாதி நாளென்றுக்கு 13 பாடங்களை நடத்துவார்.

 இந்த பெருமக்களின் வாழ்க்கை எதை சுட்டி நிற்கிறது என்றால் அறிவை பெருக்கி கொள்வது என்பது வாழ்க்கையின் இலட்சியமாக இருந்தால் உயர்ந்த அந்தஸ்தை பெற முடியும்.

 இன்றைய கால கட்ட்ட்தில் கூட வெற்றி பெற்ற பலரும் தேர்வில் ஜெயித்தவர்கள் அல்ல. அறிவை தேடுவதிலும் அதில் முயற்சிகளை கைவிடாமல் இருந்த்திலும் வெற்றி பெற்றவர்களே!

 உலகின் பெரும் செல்வந்வரான பில்கேட்ஸ் பள்ளிப்படிப்படை கடந்தவரல்ல.

ஆனால் இன்று அவர் உருவாக்கிய விண்டோஸ் சாப்ட்வேரைத்தான் அத்தனை மாணவர்களும் பயன்படுத்துகிறார்கள்.

 முதல் விமானத்தை கண்டு பிடித்த ரைட் சகோதர்ர்கள் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை கூட தாண்டாதவர்கள்

 உலகின் புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான மைக்கேல் ஃபாரடே பட்டம் எதுவும் பெற்றவரல்ல. புத்தக் பைண்டராக பணியாற்றிவர்.

 வின் வெளிக்குச் சென்ற அமெரிக்கர் ஜான் கிளின் கல்லூரிகளில் பட்டம் பெற்றவர் அல்ல.

உலகின் பெரும் தொழிலதிபராக திகழ்ந்த ராக் பெல்லர் பட்ட்தாரி அல்ல.

மரபணுக்கூறுகளை கண்டுபிடித்த ஆய்வாளர் ஜார்ஜ் மெண்டல் பட்டதாரி அல்ல.

அமெரிக்கா சுதந்திரம் பெற்ற போது அதன் பிரகடணத்தை எழுதிக் கொடுடுத்த பென்ஞமின் பிராங்க்ளின் 10 வகுப்பை இடை நிறுத்தியவர் ஆவார்,

உலகின் பிரபல வாகன உற்பத்தியாளரான ஹென்றி ஃபோர்டு கல்லூரி தேர்வுகளில் வென்றவர்  அல்ல.  சாதாரண பள்ளிப் படிப்பை முடித்தவர் மட்டுமே!

இந்த உலகில் வெற்றிக்கான வழிகள் உயர் நிலை தேர்வுகளை தவிர வேறு பலவும் உண்டு.

அறிவை பெருக்கிக் கொள்வதும் தொடர் முயற்சிகளை செய்வதுமே வாழ்கையில் பிரதானமானது.

இந்த சிந்தனையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் நமது பிள்ளைகளுக்கு தர வேண்டும்.

எக்காரணம் கொண்டும் தேர்வுகளில் ஏற்படுகிற தோல்வியில் மனம் தளரக் கூடாது. தவறான முடிவுகளுக்கு செல்லக் கூடாது.

அது அவர்களது வாழ்க்கையையும் அவர்களைச் சார்ந்தவர்களது வாழ்கையை பாழாக்கி விடும்.

தற்கொலைகள் எதையும் சாதித்து விடாது.  

இராபர்ட் கிளைவ் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள துப்பாக்கியை நெற்றியில் வைத்துச் சுட்டான். இரண்டு முறை அவனது துப்பாக்கி வெடிக்க வில்லை. மூன்றாம் முறை கோபத்தில் வானத்தை நோக்கி சுட்டான், அப்போது துப்பாக்கி வெடித்த்து. ராப்ர்ட் கிளைவ் முடிவு செய்தான். எனக்கு கடவுள் வேறு வேலை வைத்திருக்கிறான்.

சாதாரண கிளார்க் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் அதை இராஜினாமா செய்து விட்டு ராணுவத்தில் சேர்ந்தான். கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்தியாவை வென்று கொடுத்தான்.

வாழ்ந்தால் பலதையும் சாதிக்கலாம்.

தீய முடிவு எடுத்தால் இழிவு மேலும் அதிகரிக்கும்.

தற்கொலை செய்தவருக்கு நான் தொழ வைக்க மாட்டேன் என பெருமானார் (ஸல்) அவர்கள் விலகிக் கொண்டார்கள். மற்ற சஹாபாக்களே தொழ வைத்தார்கள்.

எவ்வளவு பெரிய இழப்பு பாருங்கள்!

தவறான முடிவுகளுக்கு பிள்ளைகல் சென்று விடாதவாறு ஆறுதலையும் பாதுகாப்பையும் கண்காணிப்பையும் தொடர்ந்த் வழங்க வேண்டியது பெற்றோர்களின் பொறுப்பாகும்.

அல்லாஹ் நமது இளைந்தலைமுறையினர் அனைவருக்கும் கல்வியை பற்றிய தெளிந்த சிந்தனையை தந்தருள்வானாக! தீய எண்ணங்களிலிருதும் முடிவுகளிலிருந்தும் பாதுகாப்பானக!


No comments:

Post a Comment