வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 15, 2022

யூடியூப் ஆசிரியர்கள்

இன்று மக்கள் யூடியூபில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையில்லை.

அதில் சில நன்மைகள் கிடைக்கின்றன. சமையல் முதல் மார்க்கம் வரை பல செய்திகளை அதில் நாம் தெரிந்து கொள்கிறோம்.

அது மட்டுமல்ல அது பொழுதுபோக்கு சாதனமாகவும் இருக்கிறது.  ஏராளமான பொழுதுபோக்கு வீடியோக்கள் நம்மை அதிலிருந்து விலகாதபடி பார்த்துக் கொள்கிறது.

அதன் ஸ்மார்ட்னஸ் . நாம் ஒரு வீடியோவை பார்த்து விட்டால், நமது ஆர்வத்தை கண்டு கொண்டு அது போலவுள்ள வீடியோக்களை அணிவகுக்க வைக்கிறது.  

அதில் சில வீடியோக்க்கள் வைரல் ஆகிவிடுகின்றன.

தன்னுடைய வீடியோவையும் வைரலாக்கி விட வேண்டும் என்பதற்காக சிலர் இப்போது என்னவேண்டுமானாலும் செய்யத் தொடங்குகிறார்கள்.

ஆபாசமாக நடிக்கிறார்கள். ஆபாச்சத்தை வெளிப்படையாக பேசுகிறார்கள். தன்னுடைய வாழ்க்கையின் அவலத்தை கூச்சமில்லாமல் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் சிலபேர் உபதேசம் செய்யவும் ஆரம்பிக்கிறார்கள்

நேற்று ஒரு யூடியூப் ஷார்ட் வீடியோ பார்க்க நேர்ந்த்து.

சமீபத்தில் ஒரு திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்திருந்த நடிகை பேட்டியளிக்கிறார். அவரை ஒரு இளம் பெண் பேட்டி காண்கிறார். அந்த இளம் பெண் மார்பை மறைத்தவாறு துப்பட்டா அணிந்திருக்கிறார். அந்த நடிகை மிரட்டும் தொனியில் அந்த இளம் பெண்ணிடம் கேட்கிறாள். நீ ஏன் மார்பை மறைத்து துப்பட்டா அணிந்திருக்கிறாய். ஒரு சைடை எடுத்து கீழே விடு! உன் அழகு வெளியே தெரியட்டும் அப்போதுதான் ரசிப்பார்கள் என்கிறாள். அந்த இளம் பெண்ணும் பழக்கமாகியிடுச்சு அதனால தான் என்று சொன்னபடி துப்பட்டாவை எடுத்து கீழே போட்டு விடுகிறார்.

இன்றைய அப்பட்டமான எதார்த்தம் இது.

அதிகமான சப்ஸ்கிரைபர்களையும் அதிகமான வியூவர்களையும் கொண்ட நிகழ்சியாளர்கள் வழிகாட்டிகளாக மாறிவருகிறார்கள். அவர்கள் பேசுவதை புரட்சிகரமான கருத்துக்கள் என்று பார்க்கப்படுகிறது.

யூடியூபில் அதிகம் பேர் பார்க்கிறார்கள் என்பது ஒரு பொது அங்கீகாரம் போல மாறிவருகிறது, யூடியூபில் ஒருவருடைய வீடியோவை பலர் பார்த்து விட்டால் அவர் செலிபிரட்டீ ஆகிவிடுகிறார்.

செலிபிரட்டீஸ் என்ற வார்த்தை ஒரு பெரும் மயக்கமாகிவருகிறது.

இந்த செலிபிரட்டீஸ் யாரென்று பார்த்தால் பெரும்பாலும் ஆபசமாகன் அசிங்கமான வாழ்கைக்கு பெயர் பெற்றவர்களே!

ஆபாச நடிப்பிற்கு பெயர் பெற்ற ஒரு பெண் இன்னொரு பெண்ணிடம் கேட்கிறார். “ஆமா! உனக்கு எத்தனை புருஷன் தான் இருக்கான்? அந்தப் பெண்மணி சொல்கிறார். எனக்கு இரண்டு புருஷன் தான். ஆண்டனியை என் புருஷன்னு பல பேர் நினைச்சுக்கிறாங்க! ஆனால் இரண்டு வருஷம் நான் அவன் கூட ரிலேஷன் ஷிப்ல இருந்தேன். அவன் என் புருஷனல்லாம் இல்லை.

அதிகமான பார்வையாளர்கள் கிடைப்பார்கள் என்பதற்காக விபச்சாரிகளை பேச வைக்கிறார்கள். உங்களது அனுபவங்களை சொல்லுங்கள் என்கிறார்கள்.

ஏதோ பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களின் அவலத்தை வெளிக்கொண்டுவருகிறார்கள் என்ற போர்வையில் விகாரங்களை அம்பலப்படுத்துகிறார்கள். இதில் போலியாக மக்களை கவர்வதற்கான அம்சங்கள் திட்டமிட்டு பொய்யானவற்றை புனைந்து பரப்புகிறார்கள்.

இதில் பல வீடியோக்கள் போலியாக உருவாக்கப்படுபவை . சிலருக்கு இடையே சண்டை எழுவது போல காட்டி பார்வையாளர்களை உசுப்பேற்றுகிறார்கள். அடுத்து என்ன ஆச்சு என்பதை அறிந்து கொள்ள இன்னொரு வீடியோவை பார்க்கா வைக்கிறார்கள்.

இளைய தலைமுறையினர்  குறிப்பாக பெண்கள் இத்தகைய வீடியோக்களுக்கு பலியாகிவருகிறார்கள்.

இதுதான் வாழ்கை என்று நினைத்து ஏமாந்து போகிறார்கள்.

மனிதர்களுக்கு உல்லாசம் பொழுதுபோக்கு என்று சில தேவைகள் இருப்பது சகஜம் தான்.

ஆனால் இந்த பலவீனத்தை பயன்படுத்தி பொழுது போக்கு ஊடகங்கள் மக்களை

1.   முட்டாளாக்குவதாகவும்

2.   சமூகத்தில் விஷ விதைகளை பரப்புவதாகவும் அமைவது கவலைக்குரியது.

அறிவை வளர்க்க கல்விக் கூடங்களும் பண்பை வளர்க்க ஆலயங்களும் பாடுபட்டு உருவாக்கப் படும் போது மக்களை பாழடிக்கும் இது போன்ற சமூக உடகங்கள் கட்டுப்படுத்தப் பட வேண்டும்.

முஃமின்களின் வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்று திருக்குர் ஆன் வழிகாட்டுகிறது. அது சிறந்த மனித வாழ்க்கையை விரும்புவோர் அனைவருக்கும் தேவையானதாகும்.

குர் ஆன் கூறுகிறது.

 وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا

 

வீணானவற்றை கண்டால் மரியாதையாக நகர்ந்து போய்விட வேண்டும்

 

இரண்டு பேர் குடிச்சிட்டு ரோட்டுல சண்டை போட்டுக் கொண்டிருந்தால் மரியாதையான மனிதர்கள் இவனுகளுக்கு இது தான் வேலை என்று கூறி விட்டு நகர்ந்து விடுவார்கள். நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

 இன்றைய யூடியூப்களின் உலகில் நாம் மிக முக்கியமாக நினைவில் வைக்க வேண்டிய வழிகாட்டுதல் இது.

 நம் கைக்குள்ளேயே எல்லாம் அவலட்சணங்களும் அரங்கேறுகின்றன.  நம்மை கவரும் நோக்கில் செய்யப்படும் பெரும்பாலான வீடியோக்கள் பொய்யானவை – திட்டமிட்டு இழிவான உணர்ச்சிகளை தூண்டி விடக் கூடியவை. நமது உயர்ந்த குணங்களுக்கு வேட்டு வைக்க கூடியவை

 சமீப காலத்தில் தமிழில் அதிக பிரபலமான வீடியோ எது தெரியுமா ? ஒரு குண்டான பணக்காரன் அழகான ஒரு சிறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதுதான்.

 இதற்கு வந்த கமெண்டுகளில் அதிகம் எது தெரியுமா ? இவன் எப்படி அந்த பொண்ணு மேல படுப்பான்.

 இப்படி வருகிற கமெண்டுகளுக்காகத் தான் அந்த வீடியோவே உருவாக்கப்படுகிறது.

 மக்களின் வக்கிர புத்தியை தூண்டி அதில இலாபம் அடைவதே இன்றைய யூடிப்களீன் குறிக்கோள்

 எனவே அத்தகை வீடியோக்களில் விழுந்து விடாமல் நகர்ந்து விட  முக்கியமாக நாம் பழக வேண்டும்.  நம்மை பக்குவப்படுத்டிக் கொள்ள வேண்டும்.  

 இல்லை எனில் அத்தீய பழக்கத்திற்கு நாமும் அடிமையாகிவிடுவோம். நமது மரியாதையை மறந்து.

 நம்மை நாம் வக்கிரமாக்கிக் கொள்ளக் கூடாது.

 ஒரு சாணலை உருவாக்கி உன் திறமையை காட்டு என்று ஊக்கப் படுத்துகிறார்கள். இதில் மயங்கிப் போன பெண்கள் புர்கா அணிந்து நடனமாடுகிறார்கள்.

 இன்னொன்று பல பிரபல வீடியோ குழுமங்களும் நம்மை முட்டாள்களாக்குகின்றன.


ஒரு பிரபலமான  நடிகையிடம் சென்று அவரிடம் பிரச்சனை செய்வது போல படமாக்குகிறார்கள். கேமராக்கள் சரியாக செட் செய்யப்படுகின்றன. அந்த நடிகையும் பிரச்சனைகளுக்கு உள்ளாவது போல நடிக்கிறார். கடைசியில் எல்லாம் டூப்பு என்று நடிகைக்கு ஆச்சரியத்தை தருவது போல காட்டுகிறார்கள்.

 

உண்மையில் அவர்கள் அந்த வீடியோவைப் பார்க்கிற நம்மைத்தான் முட்டாளாக்குகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள தவறுகிறோம்.   

 இத்தகைய வீடியோக்களை காண்கிற போது ஒற்றை விரலால் அதை ஒதுக்கி தள்ளி விட்டு போய்விடுவதை தான் திருக்குர் ஆன்

  وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا

இதை எவ்வளவு விரையில் ஒதுக்கி விடுகிறோ அந்த அளவு நமது மரியாதையை நாம் தக்கவைத்துக் கொள்ளலாம்.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் ரலி இது போல ஒரு வீண் களியாட்டம் நடந்து கொண்டிருந்த இடத்தை விரைந்து கடந்து சென்றார்கள். இதை வஹியால் உணர்ந்த பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 “இப்னு மஸ்வூத் நிச்சயமாக மரியாதையானவர்

 مرّ ابن مسعود بلهو مسرعا فقال رسول الله صلى الله عليه وسلم" إنْ أصْبَحَ ابْنُ مَسْعُودٍ لَكَرِيما

 ஹஜ்ஜத்துல் விதாவின் போது பெருமானார் (ஸல்) அவர்களது ஒட்டகையில் அவருக்கு பின்னால் அப்பாஸ் ரலி அவர்களின் மகன் பழ்லு உட்கார்ந்திருந்தார். அப்போது பெருமானாரிடம் ஒரு பெண்மணி கேள்வி கேட்க வந்தார். இளைஞரான. பழ்லு ரலி அவர்களின் பார்வை அப்பெண்மணியின் மீது விழந்த்து. அப்பெண்மணியும் பழ்லை பார்த்தார். பெருமானார் (ஸல்) அவர்கள் பழ்லு ரலி அவர்களின் முகத்தைப் பிடித்து வேறு பக்கமாக திருப்பி விட்டார்கள்.

عن عبد الله بن عباس قال: كان الفضل رديف النبي صلى الله عليه وسلم، فجاءته امرأة من خثعم، فجعل الفضل ينظر إليها وتنظر إليه، فجعل النبي صلى الله عليه وسلم يصرف وجه الفضل إلى الشق الآخر

முஃமின்களின் இயல்புகளை கூறிவரும் அல்புர்கான் அத்தியாயத்தின் கடைசி வசனங்களில் وَإِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا என்ற வசனத்திற்கு முன்னதாக ஒரு வாசகம் இருக்கிறது. وَالَّذِينَ لَا يَشْهَدُونَ الزُّورَ

இந்த வாசகத்திற்கு முஃமின்கள் பொய்சாட்சி சொல்லமாட்டார்கள் என்று சில முபஸ்ஸிர்கள் விளக்கமளிக்கிறார்கள். இன்னும் சிலர் அற்புதமாக உண்மைக்கு மாற்றமாக சித்தரிக்கப்படும் இடங்களில் இருக்க மாட்டார்கள் என்று விளக்கம் அளிக்கின்றனர்.

وقال ابن مسعودٍ: وأصل الزور تحسين الشيء ووصفُه بخلاف صفته، فهو تمويه الباطل بما يوهم أنه حق.

مَرُّوا كِرَامًا என்ற வார்த்தைக்கு வேகமாக கடந்து சென்று விடுவார்கள் என்ற பொருள் யூடியூப்களின் உலகில் மிக முக்கியமாக கவனிக்கத்தக்கது.  

 ஏனெனில் வேகமாக ஸ்கிப் செய்யாவிட்டால். அது நம்மை இழுத்துவிடும்.

 مَرُّوا كِرَامًا என்ற வாசகத்து கோபம் கொண்டு புறக்கணித்தவர்களாக என்றும் தப்ஸீர் உண்டு

 இத்தகைய வீடியோக்கள் மீது = சானல்கள் மீது நமக்கு ஒரு தார்மீக கோபம் கூட வர வேண்டும் என்று அது உணர்த்துகிறது.

 நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒரு – வேல்வ்யூ -  மரியாதை இருக்கிறது. அந்த மரியாதையை முதலில் நாம் உணர வேண்டும்.

 நாம் மரியாதைக்குரிய்வர்கள் தானா என்பதை முதலில் தீர்மாணிக்க வேண்டியவர்கள் நாமே!

 அது நமது நடவடிக்கைகளில் வெளிப்படும்.

 இன்றைய யூடியூப்களின் உலகம் நமது மரியாதைக்கு பெரும் சவால்களை வைத்திருக்கிறது.

 நம் கைகளில் இருக்கிற விலை உயர்ந்த போன்கள் நமது விலையை தீர்மாணிக்கின்றன.

 நமது மரியாதையை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமல்ல நமது பாதுகாப்பையும் நிம்மதியையும் உறுதி செய்வதிலும் கூட நாம் கவனம் செலுத்த வேண்டும்.

 ஆபாசமான – பொய்யான  வீணான வீடியோக்களால் ஏற்படும் மற்ற பாதிப்புக்களையும் இப்னுல் கைய்யும் அல் ஜவ்ஸீ ரஹ் கூறுகிறார்.   

 قال العلامة ابن القيم رحمه الله: والذي شاهدناه نحن وغيرنا وعرفناه بالتجارب أنه ما ظهرت المعازف وآلات اللهو في قوم وفشت فيهم واشتغلوا بها إلا سُلط عليهم العدو, وبُلُوا بالقحط والجدب وولاة السوء, والعاقل يتأمل أحوال العالم وينظر.

யூடியூப் களிலிருந்து புரட்சிகரமான கருத்துக்களையும் அறிவுரைகளையும் கேட்கும் இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொல்லப்பட வேண்டிய ஒரு விசயமும் இங்குண்டு

 தப்பான ஆலோசனைகளுக்கும் அறிவுரைகளுக்கு செவி கொடுத்து விடாதீர்கள்!

 சிலர் மிக ஆவேசமாக உரிமைகளைப் பேசலாம் தூண்டி விடலாம்.

 அவர்களில் பலர் எல்லா சாக்கடைகளிலும் ஊறித்திழைத்து வந்தவர்கள் என்பதை மறந்து விடவேண்டாம்.

 அவர்களில் பலரது நிலை இப்போது எப்படி இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க மறந்து விடலாகாது.

 பிரபலத்திற்கும் ஆவேசப் போச்சிற்கும் அடிமையாகிவிடக் கூடாது.

 நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வீடியோவில் ஆபாச நடிகை  முந்தானைய எடு என்று சொன்னவுடன் கூச்சப்பட்டுக் கொண்டு அந்த இளம் பெண் முந்தானையை எடுத்து விட்டார்.

அந்த இளம் பெண்ணுக்கு இது என் சுதந்திரம் உனக்கேன் வலிக்கிறது. என்று கேட்க தோன்றவில்லை.

 நாம் சுயத்தை இழந்து விளம்பரங்களுக்கு பணிந்து கொண்டிருக்கிறோம்.

 நல்லவர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே நமக்கு அறிவுரை கூறவும் வழிகாட்டும் ஆலோசனைகளை கூறவும் அருகதை இருக்கிறது என்ற தெளிவும் உறுதியும் நம்மிடம் இருக்க வேண்டும். .

 யூடியூப்களின் உலகில் மிக முக்கியமாக நாபகத்தில் வைத்திருக்க வேண்டிய அம்சம் இது.

 நமது வாழ்க்கைக்கு ஆலோசனைகள் கேட்கவும் அறிவுரைகள் பெறவும் தகுதியான ஆசிரியர்களை தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்.

 தனக்கான ஆசிரியரை தேடிப்புறப்பட்ட இறைத்தூதர் மூஸா அலை அவர்களின் மன உறுதியை திருக்குர் ஆன் காட்டுகிறது.

 لَا أَبْرَحُ حَتَّىٰ أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا}[الكهف:60

பல ஆண்டுகள் நடந்து செல்ல வேண்டியிருந்தாலும் சரி! நான் சென்று கொண்டே இருப்பேன்.

 அந்த மனோ உறுதி அறிவின் மனோகரமான மற்றொரு பாகத்தை மூஸா அலை அவர்களுக்கு திறந்து காட்டியது.

 உடலின் கவர்ச்சியை திறந்து காட்டி அல்லது வார்த்தை ஜாலத்தில் வெளிச்சத்தில் இடம் பிடித்தவர்கள் அல்லது பொய்யாக  கண்டண்டுகளை உருவாக்கி திசை திருப்புகிறவர்களை நாம் ஆசிரியர்களைப் போல எடுத்துக் கொள்ளலாகாது.

 யூடியூப்களின் பயன்படுத்தும் மரியாதையான மனிதர்களுக்கு திருக்குர் ஆன் இன்னும் ஒரு அற்புதமான அறிவுரையை கூறுகிறது. அதை நிறைவாக கூறி முடிக்கிறேன்.

 وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ (40فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ (41)

அன்பான சகோதர் சகோதரிகளை கேட்டுக் கொள்வேன்.

நமது மனதை விகாரப்படுத்தும் வீடியோக்களை ஸ்கிப் செய்வோம்.

நம்மை முட்டாளாக்கும் வீடியோக்களை ஸ்கிப் செய்வோம்.

அறிவை பெறவும் சிந்தனை வளரவும் தகுந்தவர்களை தேடிச் செல்வோம்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!


 

3 comments:

  1. அருமையான தகவல்கள்

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் அற்புதம் நடைமுறைக்கு தேவையான தகவல்.

    ReplyDelete
  3. இன்றைய வலைதள உலகம் மனித குல ஒழுக்கத்தை தன் ஆக்டோபஸ் கரங்களால் அபகரித்து வருவதை ஷரீஅத் மேற்கோள்களோடு நயமாக எடுத்துரைத்துள்ளீர் ... ஜஸாகல்லாஹ் ஹள்ரத்

    ReplyDelete