முஸ்லிம் சமூகத்து ஆண்களிடம் பர்முடாஸ் எனும் தொடை தெரிய ஆடைய அணியும் கலாச்சாரம் பெருகிவருகிறது. இது குறித்து மார்க்கத்தின் கருத்தை மக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வூட்ட இந்த ஜும் ஆவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோவை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை முடிவு செய்த்து. அதற்காக திரட்டப்பட்ட தொகுப்பு இது. இந்த பிரச்சனை பொதுவானது எனவே இதையே வெள்ளிமேடையிலும் வழங்குகிறேன். )
ஆடை அணிவதில் தற்கால இளைஞர்களிடம் இஸ்லாம் – ஏற்றுக்கொள்ளாத சில அநாகரீகமான –நடைமுறைகள் பெருகிவருகின்றன . இது விசயத்தில் இஸ்லாம் கூறும் அறிவுரைகளை நினைவு படுத்தினால் மக்கள் தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்த ஜும் ஆவில் இஸ்லாம் கூறும் ஆண்களின் ஆடை ஒழுங்குகள் என்ற தலைப்பில் சில செய்திகளை பரிமாறுகிறோம்.
ஆதம் அலை அவர்களுக்கும் ஹவ்வா அம்மா அவர்களுக்கும் சொர்க்கத்தில் அல்லாஹ் ஒளியால் ஆன ஆடை அணிவித்திருந்தான் . அவ்விருவரும் தடை செய்யப்பட்ட பழத்தை சாப்பிட்ட போது அவர்களது ஒளியால் ஆன ஆடை விலகி உடல் பாகங்கள் வெளிப்படத் தொடங்கின என்கிறது குர்ஆன்.
فَأَكَلَا مِنْهَا فَبَدَتْ لَهُمَا سَوْآتُهُمَا
وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِن وَرَقِ الْجَنَّةِ ۚ
மனிதகுல வரலாற்றில் ஏற்பட்ட முதல் பாதிப்பு ஆடை விலகியதே என்ற செய்தி ஒவ்வொரு தனி மனிதனும் சமூகமும் நினைவில் வைக்க வேண்டிய ஒன்றாகும்.
திருக்குர் ஆன் ஆடை என்பதை இறைவனின் தனிப்பட்ட ஒரு அருளாக உணருமாறு மக்களுக்கு அறிவுறுத்துகிறது.
يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ
لِبَاساً يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشاً
வசதியான அழகான ஆடை அணிகிற நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
நமது நாட்டில் 30 சதவீதம் பேருக்கு உடலை மறைக்க போதுமான ஆடைகள் இல்லை.
பல கோடி மக்கள் அடுத்தவர்கள் உடுத்திக் கிழித்த பழைய ஆடைகளையே உடுத்துகிறார்கள்.
இஸ்லாமிய வரலாற்றில் மகத்தான மனிதர்களில் ஒருவரான முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் உஹது யுத்தத்தில் ஷஹீதான போது அவரை அடக்கம் செய்ய அவரிடம் போதுமான துணி இருக்க வில்லை. முகத்தை துணியால் மூடி கால் பாகத்தை இலை தழைகளால் மறைத்து அடக்கம் செய்தார்கள் என்று வரலாறு கூறுகிறது.
لم يترك مصعب عند مقتله إلا نمرة، أرادوا تكفينه بها، فكانوا إذا غطوا رأسه بدت رجلاه، وإذا غطوا رجليه بدا
رأسه، فقال النبي محمد: «غطوا رأسه، واجعلوا على رجليه من الإذخر»،
இதை நினைத்து உஸ்மான் (ரலி) அவர்கள் நல்ல சாப்பாடு சாப்பிடும் போதெல்லாம் அழுவார்கள்
மாஷா அல்லாஹ் மாஷா அல்லாஹ்.
عمر بن الخطاب يقول : قال رسول الله
صلى الله عليه وسلم : " من استجد ثوبا فلبسه فقال حين يبلغ ترقوته : الحمد لله الذي
كساني ما أواري به عورتي ، وأتجمل به في حياتي ثم عمد إلى الثوب الذي خلق أو ألقى
فتصدق به ، كان في ذمة الله ، وفي جوار الله ، وفي كنف الله حيا وميتا ، حيا وميتا
، حيا وميتا
இந்த நிஃமத்தை உணர்ந்து நாம் ஆடை அணிய வேண்டும்
அந்த ஆடை எப்படி இருக்க வேண்டும்.
ஆடைக்கான இரண்டு நோக்கத்தை இந்த வசனம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது.
يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاساً يُوَارِي
سَوْآتِكُمْ وَرِيشاً
முதலாவது மானத்தை மறைத்தல்
இரண்டாவது அலங்காரம்.
நாம் அணியும் ஆடை நமது மானத்தை மறைக்க வேண்டும்
நம்மை அழகாக காட்ட வேண்டும். .
ஆணகளுக்கு மானம் என்பது என்ன ?
ஹள்ரத் அப்துல்லாஹிப்னு ஜஃபர் இப்னு அபீதாலிப் (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) தொப்புளுக்கும் முட்டுக்காலுக்கும் மத்தியிலுள்ள பகுதி (ஆண்களுக்கு) கட்டாயமாக மறைக்கப்பட வேண்டிய (அவ்ரத்) பகுதியாகும்” என்று கூறினார்கள்.
இன்றைய நவீன கலாச்சாரத்தில் பெர்முடாஸ் என்கிற சிற்றாடையின் மோகம் இளைஞர்களிடம் பரவியிருக்கிறது.
இளைஞர்கள் மட்டுமல்ல நடு வயதுக்காரர்கள் ஏன் முதியவர்களிடம் கூட இவ்வகை ஆடையின் மீது ஒரு கிரேஸ் ஏற்பட்டுள்ளது.
சாதாரானமாக அணிகிறார்கள்.
ல் இவ்வாறு ஆடை அணிந்தார்கள்.
இப்போது வீடுகளில் சாதாரணமாக தொடை தெரிய பெர்முடாஸ் அணிகிறார்கள்.
அதை நாகரீகமாகவும் பணக்காரத்தனத்தின் அடையாளமாகவும் சில இடங்களில் வெளிநாட்டில் வசிப்பவர்கள் என்று காட்டுவதற்காகவும் இவ்வாறு தொடை தெரியுமாறு அணிகிறார்கள்.
மருமகளுக்கு முன் மாமனார் இந்த ஆடைகளோடு திரிகிறார். சகோதரர்களுடைய மனைவிமார்களுக்கிடையே பல ஆண்களும்
இந்த ஆடையோடு உலாவருகிறார்கள்.
இளைஞர்களே பெரியோர்களே பெருமானார் (ஸல்) அவர்கள் இப்படி கூறியுள்ளார்கள்.
நபி ஸல் அவர்கள் மஃமர் ரலி அவர்களை கடந்து சென்றார்கள். அவரது தொடைகள் இரண்டும் தெரிந்தன. பெருமானார் *ஸல்) அவர்கள் கூறினார்கள். மஃமரே! உமது தொடைகளை மறைத்துக் கொள்வீராக! அவை மறைக்கப்பட வேண்டியவையாகும்.என்றார்கள்.
நம்மில் யார் அவ்வாறு தொடை தெரிய நடக்கிறோமோ அவர்களில் ஒவ்வொருவரைப் பார்த்தும் பெருமானார் *ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவதாகவே பொருளாகும்.
பெருமானாரின் இன்னொரு ஹதீஸ் இப்னு மாஜாவில் வருகிறது.
عن علي أن النبي -صلى الله عليه وسلم- قال له: لا تبرز فخذك، ولا تنظر إلى فخذ حي ولا
ميت.
உனது தொடையை வெளியே காட்டாதே! உயிரோடு இருந்தாலும் செத்துப்போயிருந்தாலும் மற்றவரின் தொடைய பார்க்கதே என்றார்கள்.
பெருமானார் ஸல் அவர்கள் என்னை கடந்து சென்றார்கள் என்மீது ஒரு போர்வை மட்டுமே இருந்தது. அதில் எனது தொடை வெளியே தெரிந்தது. பெருமானார் (ஸல்) கூறினார்கள். உனது தொடையை மூடு. அது அவ்ரத் என்றார்கள்.
عن أبي موسى t: "أنه كان إذا نام لبس تُبّاناً؛ مخافة أن تنكشف عورته"[1]، والتُّبَّان سراويل قصيرة تستر العورة
المغلظة
இருட்டு அறையில்தான்
குளிப்பேன் என்கிறார் அவர்
وأيضاً
كان يقول: "إني لأغتسل في البيت المظلم فأحني ظهري حياء من ربي"
عن ابن
عباس y أنه
لم يكن يدخل الحمام إلا وحده، وعليه ثوب صفيق، أي غليظ ويقول: "إني لأستحي من
الله أن يراني في الحمام متجرد
ويقول أبو العباس الأزهري: سمعت خادمة محمد بن يحيى
وهو على السرير يغسل -يعني مات- تقول: "خدمته ثلاثين سنة، وكنت أضع له الماء
-يعني ليغتسل، فما رأيت ساقه قط، وأنا ملك له
நமது முன்னோர்கள் மானத்தை மறைப்பதில் காட்டிய அக்கறைக்கு காரணம் அல்லாஹ்விடம் வெட்கம் கொண்ட்தே!
நமக்கு அந்த வெட்கம் வேண்ட்டமா ?
முழங்கால் மறைக்கப்பட வேண்டிய பகுதியாகும்
ஹனபி மத்ஹபின் படி முழங்காலும் மறைக்கப்பட வேண்டிய பகுதியே ஆகும். ஷாபி மதஹதின் அறிஞர்களும் கூட தொடைப்பகுதி வெளியே தெரியவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முழங்காலின் ஒரு பகுதியேனும் மறைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
الفقه على المذاهب الأربعة
وإنما
العورة ما بينهما، ولكن لا بدّ من ستر جزء منهما ليتحقق من ستر الجزء المجاور لهما
من العورة،
கிழித்து விடப்பட்ட ஆடைகள்
அதன் வகைகளையும் விதங்களையும் என்ன சொல்ல?
அதை அணிய விரும்பும் இளைஞர்கள் பெரியவர்களின் மோகத்தை என்ன சொல்ல ?
இதை கூத்து என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல?
ஆறறிவு படைத்த மனிதன் எங்கே திசைமாறுகிறான் என்றே தெரியவில்லை.
அதுவும் அதிக விலை கொடுத்து.
அருமை இஸ்லாமிய சகோதரா ! தொழுகைகைக்கு அனுமதியில்லாத ஆடையை நல் ஆடை என்று எப்படி ஏற்றுக் கொள்கிறாய் ?
ஆடையை கிழித்து விட்டு நடப்பவனை பைத்தியக்காரன் என்றல்லவா உலகம் சொல்லும்.
இதைத்தான் பெருமைக்காக ஆடைவது என்று மார்க்கம் சொல்கிறது.
عن ابن عمر قال: قال رسول الله صلى الله عليه وسلم: " من
لبس ثوب شهرة في الدنيا، ألبسه الله ثوب مذلة يوم القيامة" رواه أحمد وأبو
داود وابن ماجه،
قال الشوكاني في نيل الأوطار: "والمراد أن ثوبه يشتهر به
بين الناس لمخالفة لونه لألوان ثيابهم، فيرفع الناس إليه أبصارهم، ويختال عليهم بالعجب
والتكبر.
இன்றைய இந்த கிழிந்து தொங்கும் ஆடை கலாச்சாரத்தின் முதல் குணம். சமூகத்தில் யார் என்ன சொல்வார்கள் என்பதில் எனக்கு யாரும் பொருட்டல்ல என்ற இயல்பாகும். இதுவே உஜுப் ஆகும்.
இழிவின் ஆடையை அல்லாஹ் மறுமையில் போர்த்துவான் என்பதை லாயிலாக இல்லல்லா சொன்ன நாம் சிந்திக்க வேண்டாமா ?
அதே போல கடும் நிறங்களில் ஆடை அணிவது, எழுத்துக்கள் உருவப்படங்களை பொதிந்த ஆடைகள் அணிவதிலும் இஸ்லாமின் வழிகாட்டுதலை கவனத்தில் கொள்ள வேண்டும். என்னை யார் கேட்க முடியும் என்பதே அதை தான மற்றவர்கள் அதிச்யமாக பார்ப்பார்கள் என்பதோ நமது எண்ணமாக இருந்து விடக் கூடாது.
ஹள்ரத் அப்துல்லாஹிப்னு ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “என் மீது குங்குமச் சிவப்பு நிற ஆடையைப் பார்த்த நபி ஸல்லல்லாலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன இது? என்று வினவினார்கள். (அந்த கேள்வியின் தோரணையிலேயே) இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறுக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். உடனே திரும்பிச் சென்று அதை எரித்துவிட்டேன். பிறகு “அந்த ஆடையை என்ன செய்தீர்”? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வினவ. அதை எரித்து விட்டதைக் கூறினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஏன்? உமது வீட்டில் (பெண்களுக்கு) அதை அணியக் கொடுத்திருக்கலாமே” என்று கூறினார்கள். (நூல் : அபூதாவூத்)
فعن عبد الله بن عمرو قال: رأى رسول الله عليَّ ثوبين معصفرين
فقال:" إن هذه من ثياب الكفار فلا تلبسها"
உருவமுள்ள ஆடைகள்
அதே போல அழகான ஆடைகளை தேர்ந்தெடுக்கிற இடத்தில் பெருமைகாக கிழிந்து தொங்கும் ஆடைகளை அணிவதை தவிர்ப்போம்
மறுமையின் இழிவிலிருந்து அல்லாஹ் பாதுகாப்பானாக!
மார்க்கம் தடை செய்த விசயங்களை தவிர்த்துக் கொள்வோம் , அதுவே மரியாத ஆடையாகும். அதையே நமது விருப்பத் தேர்வாக ஆக்கிக் கொள்வோம்.
நல்லவிசயங்களை கடைபிடிக்க அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
நிறைவாக ஒரு ஹதீஸை நினைவூட்டுகிறேன் . நமது ஆடைகளை தேர்ந்தெடுக்க நாம் நினைவில் வைத்துக் கொள்ள் சிறந்த் அளவு கோல் இது.
ஹள்ரத் முஆத் இப்னு அனஸ் (ரலி) அவர்கள் தனது தந்தை கூறியதை கூறினார்கள் : “யார் வசதியிருந்தும் அல்லாஹ்விற்காக பணிவாக இருக்கவேண்டும் என்று (பெருமையான பகட்டான) ஆடைகளை அணிவதை தவிர்த்துக் கொள்கிறாரோ மறுமை நாளில் இறைவன் அனைத்து படைப்பினங்கள் முன்னிலையில் அவரை அழைத்து அவர் விரும்பும் ஆடையை அவருக்கு அணிவிப்பான்” என்று நபி (ஸல்) லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதி)
காலத்திற்கேற்ப மிகவும் அருமையான பதிவு எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் வளமான வாழ்க்கையையும் வழங்குவானாக !
ReplyDeleteகாலத்திற்கேற்ப மிகவும் அருமையான பதிவு எல்லாம் வல்ல அல்லாஹு தஆலா ஹழ்ரத் பெருந்தகை அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் நீண்ட ஆயுளையும் வளமான வாழ்க்கையையும் வழங்குவானாக!!!
ReplyDelete