வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, September 29, 2022

பெருமானார் (ஸல்) அவர்களுக்கான முன்னேற்பாடுகள்

  இந்த உலகில் பிறந்த கோடானு கோடி மனிதர்களில் அரும் பெரும் காரியங்களை ஆற்றிய தலைவர் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

 ஒரு மதத்தலைவராக (நபி) ஒரு சமூக சீர்திருத்தவாதியாக (முஃபக்கிர்) ஒரு அரசியல் தலைவராக (காயித்) பெருமானார் அளவுக்கு வெற்றி கண்ட மனிதர் மனித வரலாற்றில் வேறெவரும் இல்லை.

 இந்த பூமியின் மேற்பரப்பில் கால்பதிந்து நடந்தவர்களில் முஹம்மதைப் போல் வெற்றி கண்டவர் எவரும் இல்லை என லீ மார்ட்டின் என்கிற பிரஞ்சு சிந்தனையாளர் கூறுகிறார்.

 அத்தகைய மகத்தான தலைவரின் வருகைக்கு முன்னதாகவே அவரது சாதனைகளுக்கு அடிப்படையாக பல காரியங்களை அல்லாஹ் ஏற்பாடு செய்திருந்தான்.

 மிகவும்வும் அற்புதமான அந்த ஏற்பாடுகள் கவனிக்கத்தக்கவை.

 அந்த ஏற்பாடுகளில் ஒன்று பெருமானாரின் பாட்டானர் குஸை மக்காவை கைப்பற்றியது.

 பெருமானாருக்கு முன் அரபகத்தில் சிலை வணக்கம் மேலோங்கியிருந்தது. அல்லாஹ்வை வணங்குவதற்கென்றே பூமியில் முதன் முதலாக கட்டப்பட்ட கஃபா ஆலயத்தில் 360 சிலைகள் வைக்கப் பட்டிருந்தன.

இந்தியாவில் இந்துதுத்துவ அமைப்பை சார்ந்தவர்கள் முஹம்மது நபிக்கு முன்னாள் கஃபாவில் சிலைகள் தான் இருந்தன. எனவே கஃபாவின் பூர்வீகமும் சிலை வழிபாடுதான் என்று பேசுகிறார்கள். இந்தியாவில் கோயிலை இடித்து விட்டு பள்ளிவாசலை கட்டியது போல மக்காவிலும் கோயிலை இடித்து விட்டுத்தான் பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கிறது என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

கஃபாவை பற்றிய உண்மை வரலாறு தெரியாமல்

கஃபாவிற்குள் சிலைகள்  எப்படி வந்தன ? இபுறாகீம் நபியின் வாரிசுகள் எப்படி சிலை வணங்கினார்கள் என்கிற வரலாற்றை நாம் அறிய வேண்டும்.

 இப்ராஹிம் நபி,  ஹாஜரா அம்மையாரையும் இஸ்மாயில்(அலை) அவர்களையும் மக்காவில் தனியாக விட்டு வந்தபோது அங்கு வந்து சேர்ந்த நாடோடிக் கூட்டத்தின்  பெயர் ஜுர்ஹும்.

 இவர்களில் ஒரு பெண்ணை இஸ்மாயில் (அலை) திருமணம் செய்து கொண்டார்கள் ஜுர்ஹும்களே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கஃபாவை கவனித்து வந்தார்கள்.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு 400 வருடங்களுக்கு முன் மக்காவின் செல்வ வளத்தில் பொறாமை கொண்ட பனூ ஃகுஸாஆ என்கிற நாடோடி கூட்டத்தினர் மக்காவை தாக்கினார்கள்.  அந்த நேரத்தில் ஜுர்ஹும்கள் ஜம்ஜம் கிணற்றை மூடி வைத்துவிட்டு வெளியேறி விட்டார்கள்.  

 பனுகுஸாஆக்களின் தலைவன் அம்ரு பின் லுஹைக்கு  ஒரு நாள் கடும் காய்ச்சல் வந்தது. சிரியாவின் பல்கா என்ற ஊரில் ஒரு சுடுதண்ணீர் கிணறு இருக்கிறது அதில் குளித்தால் சுகம் பெறலாம் என்று சொன்னார்கள்.  அம்ரு அங்கு சென்றான்.  அந்த ஊரில் மக்கள் ஒரு பெரும் சிலையை வைத்திருந்தார்கள் அதை பார்த்து அவன் ஆச்சரியப்பட்டுக் கொண்டு நின்றான் அம்மக்கள் அவனுக்கு அந்த சிலையை அன்பளிப்பாக கொண்டு கொடுத்தார்கள் அவன் கொண்டு வந்த அந்த சிலைக்குப் பெயர் தான் ஹூபல்.

 அதை அவன் காஃபாவிற்குள்ளே கொண்டு வந்து வைத்தான் இப்படித்தான் காபாவுக்கு உள்ளே சிலை வந்தது. அதற்குப் பிறகு சிலை வணக்கத்திற்கான வழிகளையும் அவனே கற்பனையாக சேர்த்துக் கொடுத்தான்.

 புனித மிகு மக்காவிற்குள் மானுடத்தின் பேர் அழுக்கான சிலை வணக்கத்தை கொண்டு வந்து சேர்தது இஸ்மாயில் நபியின் வாரிசுகள் அல்ல. அந்நியயான இந்த அம்ருதான் .

 அதனால் நபி (ஸல்) அவர்கள் அவனை சபித்தார்கள்.

அம்ரு தனது குடலை இழுத்துக் கொண்டு நரகிற்குள் செல்வதை நான் பார்த்தேன் என்றார்கள்.

 عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ( رأيت عمرو بن عامر الخزاعي يجر قصبه –أمعاءه- في النار، فكان أول من غيَّر دين إبراهيم

 ஒரு சிலை வந்த பிறகு மக்காவுக்கு வரக்கூடிய ஒவ்வொரு குடும்பத்தாரும் அவரவர்களது ஊர்களில் இருக்கிற தங்களது குல தெய்வங்களை கொண்டு வந்து அங்கே வைத்தார்கள். அப்போது அங்கே சிலைகளின் எண்ணிக்கை பெருகியது.

 அதுமட்டுமல்ல அரபு பிராந்தியம் முழுவதும் அந்த வழக்கமும் பரவியது.

 இப்போது கஃபா ஜூர்ஹும் அல்லாத அந்நிய ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.  இப்ராஹீம் நபி (அலை) அவர்களது கோட்பாடுகளுக்கு நேர்மாறான சிலை வணக்கத்தில் மூழ்கியிருந்தது

 இந்த நிலையை மாற்றுவதற்கு அல்லாஹ் செய்த முதல் ஏற்பாடு

 மீண்டும் ஜுர்ஹும்களிடம் வந்து சேர்ப்பதற்காக ஜுர்ஹும்களில் குஸய்யு என்கிற ஒரு தலைவரை அல்லாஹுத்தஆலா பிறக்கச் செய்தான்.  மிக அற்புதமான ஆளுமைகளில் ஒருவர் அவர் பானு குஸ ஆக்களோடு பழகி அவர்களின் அன்பை பெற்று அவரளில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு கடைசியில் சச்சரவுகள் எதுவுமில்லாமலே தங்களது பாரம்பரிய நிலத்தை திரும்பப் பெற்றார்.

 கஃபா குறைஷிகளின் வசம் வந்தது.  குறைஷிகள் ஜூர்ஹும்களில் ஒரு பிரிவினர் ஆவார்கள்.

 இஸ்மாயீல் (அலை) அவர்களின் வாரிசுகளிடம் மீண்டும் காபாவின் அதிகாரம் வந்தது.

 குஸய்யு பெருமானாருக்கு 170 வருடங்களுக்கு முன் பிறந்தவர்.  ஆக பெருமானார் (ஸல்) அவர்களுக்கு 130 வருடங்களுக்கு முன்னதாக கஃபா மீண்டும் இஸ்மாயீல் நபியின் வாரிசுகளிடம் திரும்பி வந்தது. ஆனால் சிலை வணக்கத்தின் அசுத்தத்தோடு.

 பெருமானாரின் வருகைக்கு முன் அல்லாஹ் செய்த மற்றொரு முன்னேற்பாடு ஜம் ஜம் கிணற்றை மீண்டும் திறந்ததாகும்.

 அப்துல் முத்தலிபும் ஜம் ஜம் கிணரும்

 மக்காவில் ஜம் ஜம் கிணறு இருப்பது ஒரு கதையாக மட்டுமே அப்போது அவர்களிடம் இருந்தது. அப்துல் முத்தலிபின் கனவில் அல்லாஹ் ஜம் ஜமின் இருப்பிடத்தை காட்டினான். பெரும் சிரமத்திற்கு பிறகு அப்துல் முத்தலிப் ஜம் ஜம் கிணற்றை மீண்டும் வெட்டி சமூகத்திற்கு அளித்தார். அதன் உரிமையையும் நிலை நாட்டிக் கொண்டார்.

يحدث علي بن أبي طالب حديث زمزم حين أمر عبد المطلب بحفرها.

قال: قال عبد المطلب: إني لنائم في الحجر، إذ أتاني آت فقال لي: احفر طيبة. قال: قلت وما طيبة؟ قال ثم ذهب عني. قال فلما كان الغد رجعت إلى مضجعي، فنمت فجاءني فقال: احفر برة. قال: قلت وما برة؟ قال ثم ذهب عني.

فلما كان الغد رجعت إلى مضجعي فنمت، فجاءني فقال: احفر المضنونة. قال: قلت وما المضنونة؟ قال ثم ذهب عني. فلما كان الغد رجعت إلى مضجعي فنمت فيه، فجاءني قال: احفر زمزم. قال: قلت وما زمزم؟

قال: لا تنزف أبدا ولا تزم، تسقي الحجيج الأعظم، وهي بين الفرث والدم عند نقرة الغراب الأعصم عند قرية النمل. قال: فلما بين لي شأنها، ودل على موضعها، وعرف أنه قد صدق، غدا بمعوله ومعه ابنه الحارث بن عبد المطلب، وليس له يومئذ ولد غيره، فحفر، فلما بدا لعبد المطلب الطمي كبَّر، فعرفت قريش أنه قد أدرك حاجته

 பெருமானாரின் வருகைக்கு முன் அல்லாஹ் செய்த மற்றொரு முன்னேற்பாடு யானை படை எடுப்பின் அழிவாகும்.

 யானை படையெடுப்பு

அப்ரஹா என்பவன் எமன் தேசத்த்தின் கவர்னராக இருந்தான். அபீசீனிய மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்தான்.

அவன் ஒரு பெரும் தேவாலயத்தை கட்டினான். அது மிக உயரமாக இருந்தது. அதை அரபுகள் கலீஸ் என்று அழைத்தனர். அதை அண்ணாந்து பார்க்கும் போது தொப்பி கழண்டு விடும் என்பதாக் இந்த பெயர் சூட்டினர். ஆப்ரஹா ஹஜ்ஜுக்கு செல்வதற்கு பதிலாக அங்கு வருமாறு மக்களை கேட்டுக் கொண்டான்.

கஃபாவின் மீது மரியாதை கொண்டிருந்த அரபுகளுக்கு அது கோபத்தை கொடுத்தது.

ஒரு அரபி அந்த தேவாலயத்தில் அசிங்கம் செய்தான்.

இதனால் கோபமடைந்த அப்ரஹா கஃபாவை செங்கல் செங்கலாக கஃபாவை பெயர்த்துவிடுவேன் என சபதமேற்றான். இதற்காக அபீசினிய மன்னரிடம் உதவி கோரினான்.

அவன் தனது தனிப்பட்ட யானை மஹ்மூதை கொடுத்தனுப்பினான். கூடவே எட்டு யானைகளையும் அனுப்பினான்.

கஃபாவின் தூண்களை கயிறுகளால் கட்டி அதை யானைகளை விட்டு இழுக்க வைத்து ஒரே அடியில் கஃபாவை சிதைத்துவிடுவது என்பது அப்ரஹாவின் திட்டம்.

அவனது படையை அரபுகள் எதிர்த்தனர். யமன் அரபுகளில் ஒருவரான தூநபர் அவனை எதிர்த்தார். அவர் கொல்லப்பட்டார்.

ஃகஸ்அன் குலத்து நுபைல் பின் ஹபீப் அவனை எதிர்த்தார். தோற்றுப்போனார். அவரை கைதியாக வைத்துக் கொண்டார்கள். வழி காட்டுவதற்காக.

அடுத்ததாக ஆப்ரஹா  தாயிபின் திசையில் சென்றான். தாயிபின் மக்களான அவனோடு சமாதானமாக சென்று விட முடிவு செய்தனர். தங்களுடைய லாத் கடவுளை விட்டு விட்டால் அவனுக்கு உடன்படுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். தங்களுடைய தலைவர்களில் ஒருவரான அபூரிகாலையும் அவனுடன் அனுப்புவதாக கூறினர். அப்ரஹா அதை ஏற்றுக் கொண்டான்.

மக்காவிற்கு அருகில் மஃமஸ் எண்ற இடத்தில் படை இறங்கினான்.

மக்காவாசிகளின் ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்த இடம் அது. ஒட்டகங்களை பிடித்துக் கொண்டான். அதில் இரு நூறு ஒட்டகைகள் அப்துல் முத்தலிபுக்கு சொந்தமானது.

அப்ரஹா, ஹனாத் ஹமீரி என்பவை மக்காவிற்கு தூதுவராக அனுப்பி வைத்தான்.

எனது நோக்கம் கஃபாவை உடைப்பதே இதில் நீங்கள் இடையூறு செய்யாவிட்டால் உங்களில் யாருக்கும் ஒன்றும் நேராது என்று சொல்லி அனுப்பினான்.

இப்னு இஸ்ஹாக் கூறுகிறார்.

அப்துல் முத்தலிப் அவனுக்கு இப்படி பதில் கூறினார். “எங்களுக்கு அப்ரஹாவை எதிர்க்கும் எண்ணம் எதுவும் இல்லை. அப்ராஹாவோடு சண்டையிடும் வலிமையும் எங்களுக்கு இல்லை. ஆனால் ஒன்று கஃபா அல்லாஹ்வுடைய வீடு. அல்லாஹ்வோடு சண்டையிட தயார் என்றால் அதை அழிக்க முயற்சிக்கட்டும் என்று கூறினார்.

இந்த வாசகம் தூதானை யோசிக்க வைத்த்து. அப்துல் முத்தலிப் அபரஹாவை சந்திக்க ஏற்பாடு செய்தான்.

அப்துல் முத்தலிபை கண்ட அப்ரஹா தனது இருக்கையிலிருந்து இறங்கி வந்து அவரை வரவேற்றான். உங்களது கோரிக்கை என்ன என்றான்.

அப்துல் முத்தலிப் எனது  நீங்கள் பிடித்துக் கொண்ட ஒட்டகைகளை தர வேண்டும் என்றார்.

அப்ரஹா அதிசயித்து சொன்னான். உங்களை மரியாதையானவர் என்று நினைத்தேன். ஒட்டகையை மட்டும் கேட்கிறீர்களே! கஃபாவை பற்றி பேசவில்லையே என்றான். அப்துல் முத்தலிப் கூறினார். ஒட்டகைகள் எனக்கு சொந்தமானவை அதனால் அவற்றைப் பற்றி நான் பேசினேன். கஃபா அல்லாஹ்வுக்கு சொந்தமானது. அவன் கஃபாவை பார்த்துக் கொள்வான் என்றார்.

அப்ரஹா எனது கையிலிருந்து கஃபா தப்ப முடியாது என்றான். ‘அப்படியான்ல் உங்கள் விருப்பம் என்று சொல்லி விட்டு ஒட்டகைகளை பெற்றுக் கொண்டு அப்துல் முத்தலிப் நகர்ந்தார்.

வரலாற்றின் மற்றொரு குறிப்பில் இப்படியும் இருக்கிறது.

அப்துல் முத்தலிபுடன் சென்ற குறைஷிகளில் சில அப்ரஹா திரும்பி சென்று விட்டால் தங்களது பிராந்தியமான திஹாமாவின் விளைச்சலில் மூன்றில் ஒருபகுதியை கப்பம் கட்டுவதாக் கூறினர். ஆனால் அப்ரஹா அதை ஏற்றுக் கொள்ள வில்லை.

அங்கிருந்த திரும்பிய அப்துல் முத்தலிப் குறைஷிகளின் ஒரு பெரும் கூட்டத்துடன் கஃபாவிற்கு வந்து மனமுருகி பிரார்த்தித்தார். இறைவா அப்ரஹாவை எதிர்க்கும் சக்தி எங்களுக்கு இல்லை. உனது வீட்டை நீ காப்பாற்றிக் கொள் என்ரு பிரார்த்தித்து விட்டு அரபுகளை அருகிலிருந்த மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

எப்படியும் அல்லாஹ் கஃபாவை காப்பான். அப்ரஹாவின் மீது ஒரு வேதனை இறங்கும் பட்சத்தில் அதில் தாங்கள் சிக்க் விடக் கூடாது என்கிற உறுதியான நம்பிக்கையினாலேயே அவர் அவ்வாறு செய்தார்

ஆப்ரஹா அடுத்த நாள் காலை புறப்பட தயாரானான். முதலில் மஹ்மூத் யானை தயாராக நின்றது. அதற்கு வழிகாட்டியாக நுபைல் பின் ஹபீப் இருந்தார் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. .

அவர் யானையின் காதில் கூறினார். நீ வந்த இட்த்திற்கு திரும்பிச் சென்று விடு! இது அல்லாஹ்வின் பாதுகாப்பு பிராந்தியம் என்று கூறினார். இதை கேட்ட்தும் யானை அமர்ந்து விட்டது. எப்படி கிளப்பியும் எழுந்திருக்க வில்லை. இந்தப் புறம் அந்தப்புறமாக நகர்ந்த்து. ஆனால் கஃபாவை நோக்கி ஒரு எட்டு வைக்கவில்லை.

இதற்குள் கடற்கரையின் திசையிலிருந்து புறாவைப் போன்ற ஆனால் அதை விட தோற்றத்தில் சிறிய அபாபீல் பறவைகளை கூட்டமாக வந்தன அவை ஒவ்வொன்றிடமும் மூன்று கற்கள் இருந்தன. அலகில் ஒன்று கால்களில் ஒவ்வொன்றாக அவை இருந்தன. அவற்றை அந்தப் படை மீது வீசின..

வாகிதி கூறுகிறார் அது போன்ற பறவைகளை இதற்கு முன் அவர்கள் பார்த்ததில்லை.

அப்பறைவைகள் எறிந்த கற்கள் துப்பாக்கி குண்டு களை விட வேகமாக யானை படடயினரின் உடலுக்கு புகுந்தன. அனைவரும் சிதறி ஓடினர். யானைகளும் சிதறி ஓடின. பலர் தப்பி ஓடினர். அப்ரஹாவை அவனது ஆட்கள் சன்ஆவுக்கு எடுத்து வந்தார்.கள் அங்கு அவனது உடலின் பாகங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாக கழண்டு விழுந்தன. அவன் இறந்தான்.

கஃபாவை செங்கல் செங்கலாக பெயர்த்தெடுப்பதாக சபதம் செய்தவன் அணு அணுவாக உடல் சிதைய இறந்தான். அதுவும் அவனது சொந்த ஊரிலேயே!

தீய திட்டங்களை போடுகிறவர்கள் அதற்கேற்பவே தோல்வியடைவார்கள் என்பதற்கு மிக அழுத்தமான ஒரு உதாரணம் இது. 

அப்ரஹாவின் மஹ்மூது யானையும் மற்ற இரண்டு யானைகளும் மக்காவிலேயே இருந்தன. ஆனால் அவற்றின் கண்கள் குருடாகியிருந்தன.

இப்னு இஸ்ஹாக் கூறுகிறார். ஆயிஷா ரலி கூறினார்கள். அந்த் இரண்டு யாணைகளை கண்கள் குருடான நிலையில் நான் பார்த்திருக்கிறேன்.

ஆயிஷா ரலி அவர்களின் சகோதரி அஸ்மா ரலி கூறினார். அவை மக்களிடம் யாசகம் கேட்பதை நான் பார்த்திருக்கிறேன்.

(மஆரிபுல் குர் ஆன்)

இந்த நிகழ்வின் மூலம் பெருமானாரின் பிறப்பிற்கு முன்னதாக கஃபாவின் மரியாதை உலகில் மிக உயரமான ஒரு இடத்தை பிடித்திருந்தது.

சில வரலாற்றாசிரியர்கள் இந்நிகழ்வு கிபி 571 ம் ஆண்டு ஏப்ரல் மாத்த்தில் நடந்த்து என்கிறார்கள்.

அதே மாதத்தில் தான் முஹம்மது நபிகள் நாய்கம் (ஸல்) அவர்களும் பிறந்தார்கள்.  571 ஏப்ரல் 20 ரப்புல் அவ்வல் 12  திங்கட்கிழமை அதிகாலையில் பெருமானார் ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.  

அல்லாஹ் பெருமானாரின் வரலாற்றை எவ்வளவு சிறப்பாக ஒரு பெரும் புரட்சிக்கு தயாராக அமைத்திருந்தான் .

வரலாற்றின் அந்த எதிர்ப்பார்பிற்கு சிறிதும் குறை வைக்காமல் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இபுறாகீம் அலை அவர்களின் மார்க்கத்தை நிலை நாட்டி சிலை வணக்கத்திலிருந்தும் அதன் தீமைகளிலிருந்தும் கியாம நாள் வரை மக்களை பாதுகாத்தார்கள்.

هذه قصة أصحاب الفيل على وجه الإيجاز والاختصار والتقريب

 وأرسل أبرهة يقول للنجاشي : إني سأبني لك كنيسة بأرض اليمن لم يبن قبلها مثلها . فشرع في بناء كنيسة هائلة بصنعاء رفيعة البناء ، عالية الفناء ، مزخرفة الأرجاء . سمتها العرب القليس ; لارتفاعها ; لأن الناظر إليها تكاد تسقط قلنسوته عن رأسه من ارتفاع بنائها . وعزم أبرهة الأشرم على أن يصرف حج العرب إليها كما يحج إلى الكعبة بمكة ، ونادى بذلك في مملكته ، فكرهت العرب العدنانية والقحطانية ذلك ، وغضبت قريش لذلك غضبا شديدا ، حتى قصدها بعضهم ، وتوصل إلى أن دخلها ليلا . فأحدث فيها وكر راجعا . فلما رأى السدنة ذلك الحدث ، رفعوا أمرهم إلى ملكهم أبرهة وقالوا له : إنما صنع هذا بعض قريش غضبا لبيتهم الذي ضاهيت هذا به ، فأقسم أبرهة ليسيرن إلى بيت مكة ، وليخربنه حجرا حجرا .
وذكر مقاتل بن سليمان أن فتية من قريش دخلوها فأججوا فيها نارا ، وكان يوما فيه هواء شديد فأحرقته ، وسقطت إلى الأرض .
فتأهب أبرهة لذلك ، وصار في جيش كثيف عرمرم ; لئلا يصده أحد عنه ، واستصحب معه فيلا عظيما كبير الجثة لم ير مثله ، يقال له : محمود ، وكان قد بعثه إليه النجاشي ملك الحبشة لذلك . ويقال : كان معه أيضا ثمانية أفيال . وقيل : اثنا عشر فيلا . وقيل غيره ، والله أعلم . يعني ليهدم به الكعبة بأن يجعل السلاسل في الأركان ، وتوضع في عنق الفيل ، ثم يزجر ليلقي الحائط جملة واحدة . فلما سمعت العرب بمسيره أعظموا ذلك جدا ، ورأوا أن حقا عليهم المحاجبة دون البيت ، ورد من أراده بكيد . فخرج إليه رجل [ كان ] من أشراف أهل اليمن وملوكهم ، يقال له " ذو نفر " فدعا قومه ومن أجابه من سائر العرب إلى حرب أبرهة وجهاده عن بيت الله ، وما يريد من هدمه وخرابه . فأجابوه وقاتلوا أبرهة فهزمهم لما يريده الله عز وجل من كرامة البيت وتعظيمه ، وأسر " ذو نفر " فاستصحبه معه . ثم مضى لوجهه حتى إذا كان بأرض خثعم عرض له نفيل بن حبيب الخشعمي في قومه : شهران وناهس فقاتلوه ، فهزمهم أبرهة ، وأسر نفيل بن حبيب ، فأراد قتله ثم عفا عنه ، واستصحبه معه ليدله في بلاد الحجاز . فلما اقترب من أرض الطائف خرج إليه أهلها ثقيف وصانعوه خيفة على بيتهم ، الذي عندهم ، الذي يسمونه اللات . فأكرمهم وبعثوا معه " أبا رغال " دليلا . فلما انتهى أبرهة إلى المغمس - وهو قريب من مكة - نزل به وأغار جيشه على سرح أهل مكة من الإبل وغيرها ، فأخذوه . وكان في السرح مائتا بعير لعبد المطلب . وكان الذي أغار على السرح بأمر أبرهة أمير المقدمة ، وكان يقال له" الأسود بن مفصود " فهجاه بعض العرب - فيما ذكره ابن إسحاق - وبعث أبرهة حناطة الحميري إلى مكة ، وأمره أن يأتيه بأشرف قريش ، وأن يخبره أن الملك لم يجئ لقتالكم إلا أن تصدوه عن البيت . فجاء حناطة فدل على عبد المطلب بن هاشم ، وبلغه عن أبرهة ما قال ، فقال له عبد المطلب : والله ما نريد حربه ، وما لنا بذلك من طاقة ، هذا بيت الله الحرام ، وبيت خليله إبراهيم فإن يمنعه منه فهو بيته وحرمه ، وإن يخلي بينه وبينه ، فوالله ما عندنا دفع عنه . فقال له حناطة : فاذهب معي إليه . فذهب معه ، فلما رآه أبرهة أجله ، وكان عبد المطلب رجلا جميلا حسن المنظر ، ونزل أبرهة عن سريره ، وجلس معه على البساط ، وقال لترجمانه : قل له : حاجتك ؟ فقال للترجمان : إن حاجتي أن يرد علي الملك مائتي بعير أصابها لي . فقال أبرهة لترجمانه : قل له : لقد كنت أعجبتني حين رأيتك ، ثم قد زهدت فيك حين كلمتني ، أتكلمني في مائتي بعير أصبتها لك ، وتترك بيتا هو دينك ودين آبائك قد جئت لهدمه ، لا تكلمني فيه ؟! فقال له عبد المطلب : إني أنا رب الإبل ، وإن للبيت ربا سيمنعه . قال : ما كان ليمتنع مني ! قال : أنت وذاك .
ويقال : إنه ذهب مع عبد المطلب جماعة من أشراف العرب فعرضوا على أبرهة ثلث أموال تهامة على أن يرجع عن البيت ، فأبى عليهم ، ورد أبرهة على عبد المطلب إبله ، ورجع عبد المطلب إلى قريش فأمرهم بالخروج من مكة والتحصن في رءوس الجبال ، تخوفا عليهم من معرة الجيش . ثم قام عبد المطلب فأخذ بحلقة باب الكعبة ، وقام معه نفر من قريش يدعون الله ويستنصرونه على أبرهة وجنده ، وقال عبد المطلب وهو آخذ بحلقة باب الكعبة :
لاهم إن المرء يمنع رحله فامنع حلالك لا يغلبن صليبهم ومحالهم غدوا محالك
قال ابن إسحاق : ثم أرسل عبد المطلب حلقة الباب ، ثم خرجوا إلى رءوس الجبال .
وذكر مقاتل بن سليمان أنهم تركوا عند البيت مائة بدنة مقلدة ، لعل بعض الجيش ينال منها شيئا بغير حق ، فينتقم الله منه .
فلما أصبح أبرهة تهيأ لدخول مكة وهيأ فيله - وكان اسمه محمودا - وعبأ جيشه ، فلما وجهوا الفيل نحو مكة أقبل نفيل بن حبيب حتى قام إلى جنبه ثم أخذ بأذنه وقال ابرك محمود ، وارجع راشدا من حيث جئت ، فإنك في بلد الله الحرام " . ثم أرسل أذنه ، فبرك الفيل . وخرج نفيل بن حبيب يشتد حتى أصعد في الجبل . وضربوا الفيل ليقوم فأبى . فضربوا في رأسه بالطبرزين وأدخلوا محاجن لهم في مراقه فبزغوه بها ليقوم ، فأبى ; فوجهوه راجعا إلى اليمن فقام يهرول . ووجهوه إلى الشام ففعل مثل ذلك . ووجهوه إلى المشرق ففعل مثل ذلك ووجهوه إلى مكة فبرك .

. فبينما هم كذلك ، إذ بعث الله عليهم طيرا أبابيل ، أي قطعا قطعا صفرا دون الحمام ، وأرجلها حمر ، ومع كل طائر ثلاث أحجار ، وجاءت فحلقت عليهم ، وأرسلت تلك الأحجار عليهم فهلكوا .

 مع كل طائر منها ثلاثة أحجار يحملها : حجر في منقاره ، وحجران في رجليه ، أمثال الحمص والعدس ، لا تصيب منهم أحدا إلا هلك ، وليس كلهم أصابت . وخرجوا هاربين يبتدرون الطريق ، ويسألون عن نفيل ليدلهم على الطريق هذا . ونفيل على رأس الجبل مع قريش وعرب الحجاز ، ينظرون ماذا أنزل الله بأصحاب الفيل من النقمة ، وجعل نفيل يقول :

أين المفر ؟ والإله الطالب والأشرم المغلوب غير الغالب

وقال عطاء بن يسار ، وغيره : ليس كلهم أصابه العذاب في الساعة الراهنة ، بل منهم من هلك سريعا ، ومنهم من جعل يتساقط عضوا عضوا وهم هاربون ، وكان أبرهة ممن يتساقط عضوا عضوا ، حتى مات ببلاد خثعم

  

 

4 comments: