நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இஸ்லாமிய பிரச்சாரத்தை தொடங்கிய கால கட்ட்த்தில் மக்காவின் மக்கள் பெருமானாரிடம் “நாங்கள் கஷ்ட வாழ்கை வாழ்கிறோம். இந்த சபாவையும் மர்வாவைவையும் தங்கமாக மாற்றிக்காட்டுங்கள் என்று கேட்டார்கள்.
அப்போது அல்லாஹ்
கேட்டான்
أَوَلَمْ
يَكْفِهِمْ أَنَّا أَنزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ يُتْلَىٰ عَلَيْهِمْ ۚ إِنَّ
فِي ذَٰلِكَ لَرَحْمَةً وَذِكْرَىٰ لِقَوْمٍ يُؤْمِنُونَ (51)
ஓதப்படுகிற வேதம் அவர்களுக்கு தரப்பட்டிருக்கிறதே அது போதாதா?
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللّهِ صلى الله عليه وسلم قَالَ: "مَا مِنَ الأَنْبِيَاءِ مِنْ نَبِيٍّ إِلاَّ قَدْ أُعْطِيَ مِنَ الآيَاتِ مَا مِثْلُهُ آمَنَ عَلَيْهِ الْبَشَرُ، وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْياً أَوْحَى الله إِلَيَّ، فَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تَابِعاً يَوْمَ الْقِيَامَةِ".
மற்ற அற்புதங்களை விட இந்த அற்புதம் உன்னதமானது என்பது இதன் கருத்து.
அது எப்படி ? இப்னு பத்தால்
விளக்குகிறார்.
,மற்ற நபிமார்களின் முஃஜிஸாக்களை அவர்களது காலத்தில் இருந்தவர்கள்
மட்டுமே கண்டனர். குர் ஆனின் முஃஜிஸா இன்று வரை இருக்கிறது. அதனால் இந்த முஃஜிஸாவை
பின் பற்றுவோர் எண்ணிக்கை பெருமானார் (ஸல்) அவர்கள் ஆசைப்பட்டது போல ஏராளமாக இருக்கிறது.
قال ابن بطال رحمه الله في حديث الباب: " صدق
بتلك الآيات لإعجازها لمن شاهدها، كقلب العصا حية، وفلق البحر لموسى عليه السلام،
وكإبراء الأكمه والأبرص وإحياء الموتى لعيسى عليه السلام، وكان الذي أعطيته أنا
وحياً أوحاه الله إليَّ فكان آية باقية دُعي إلى الإتيان بها أهل التعاطي له، ومن
نزل بلسانهم، فعجزوا عنه، ثم بقي آية ماثلة للعقول إلى من يأتي إلى يوم القيامة،
يرون إعجاز الناس عنه رأي العين والآيات التي أوتيها غيره من الأنبياء قبله رُئي
إعجازهم في زمانهم، ثم لم تصحبهم مدة إلا حياتهم، وانقطعت بوفاتهم، وكان القرآن باقياً
بعد وفاة النبي صلى الله عليه وسلم " [شرح صحيح البخاري لابن بطال (10/ 330)].
அன்றைய மக்காவின் மக்கள் கேட்டுக் கொண்ட்து போல சபா மர்வாவை தங்கமாக மாற்றிக் கொடுத்திருந்தால் அது என்ன நூறு வருடங்களுக்கு போதுமாக இருந்திருக்குமா ?
இந்தப் பட்டியலை பாருங்கள்!
1. அரபு மொழி இன்று உலகளாவிய மொழியாக இருக்கிறது.
ஐ நா சபையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்று அரபு
ஐ நா வில் அரபு மொழியில் அல்லது ஆங்கிலத்தில் பேசுவதாக இருந்தால் அதற்காக பணம் எதுவும் கட்ட தேவையில்லை; ஆனால் இந்தி மொழியில் பேசுவதானால் அதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டும்.
2 திருக்குர் ஆனை ஏற்றுக் கொண்ட மக்கள் இன்று சவூதி அரேபியாவுக்கு ஏராளமாக ஹஜ் உம்ரவிற்கு வருகிறார்கள். சுற்றுலா வருமாணம் இன்றளவும் சவூதியின் பிரதான வருமானமாக இருக்கிறது.
லாக்டவுன் காலத்திற்கு பிறகு உலகின் பிரபல சுற்றுலா தளங்கள் எழுந்து நிற்க தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.
மொரீஷியஸ் தீவில்
ஒரு காலத்தில் சில இலட்சங்களை கட்டணமாக வசூலித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது அதே
வசதிகளை சில ஆயிரங்களுக்கு தருகிறார்கள் என்று சுற்றுலாத் துறையினர் கூறுகின்றனர்.
ஆனால் லாக்டவுனுக்குப்
பிறகு சவூதிஅரேபியாவிற்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது, விலைகளும்
கூடி இருக்கிறது.
ஓதப்படுகிற ஒரு வேதம் உங்களுக்கு போதுமானது அல்லவா என்று கேட்ட்தன் நியாயத்தை இதில் புரிந்து கொள்ளலாம்.
2. ஓதுதல் மக்களை ஒருங்கிணைக்கிறது.
பெருமானார் (ஸல்) அவர்களுக்கு ஓதப்படுகிற ஒரு வேதம் வழங்கப்பட்ட்து என்பது சாதாரண காரியம் அல்ல.
இந்த ஓதும் பாக்கியம் மற்ற வேதங்களுக்கு கிட்ட வில்லை, ஏனெனில் அவற்றில் எதுவும் அவை அருளப்பட்ட மூல மொழியில் இப்போது இல்லை.
ஓதுதல் என்றால் அது அருளப்பட்ட வடிவத்தில் படிப்பது என்று பொருளாகும்.
மஜ்ரீஹா என்று எழுத்தில் இருக்கும் அதை மஜ்ரேஹா என்று ஓத பெருமானார் கற்றுத்தந்தர்கள் எனில் கியாமத் நாள் வரை அதை மஜ்ரேஹா என்று தான் ஓத வேண்டும்.
இந்த ஒதுதல் செய்த மகத்தான மிகப்பெரிய காரியம் என்ன தெரியுமா?
உலக மக்களை
அது சத்தமில்லாமல் ஒன்றினைக்கிறது.
முதலில் அது அன்றைய அரபு மக்களை எப்படி ஒருங்கிணத்த்து என்பதை பாருங்கள்!
அரபு குடும்பங்கள் அரபு மொழியை பேசுவதில் ஒவ்வொரு குடும்பமும் தமக்கென ஒரு பாணியை வைத்திருந்தன
தமிழ் உச்சரிப்பில் சென்னைக்கும் மதுரைக்கும் கோவை மக்களுக்கும் என தனி வித்தியாசம் இருப்பது போல.
இதில் அரபுகள்
எப்படி இருந்தார்கள் எனில் தங்களது குடும்ப உச்சரிப்பை மட்டுமே ஏற்றுக் கொள்வார்கள்,
மற்ற தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று ஆரம்பத்தில் எழுதக் கூறிய போது மக்காவின் பிரதிநிதி,”ரஹ்மான் என்றால் எங்களுக்கு தெரியாது” என்று கூறி அதை எழுதக் கூடாது என்று சொல்லி விட்டார், பிறகு பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம என்று எழுதப்பட்டது என்பது வரலாறு.
ரஹ்மான் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்பதல்ல. அந்த வார்த்தையை பயன்படுத்துவது தங்களது வழக்கில் இல்லை என்பதே அதன் பொருளாகும்.
எமன் நாடு ஒரு அரபு நாடு தான். சொல்லப்போனால் அரபுகளின் பூர்வீகமே எமன் நாடு தான். அங்குள்ள ஒரு குடும் ஹமீர் குடும்பம்.
மக்கா வாசிகள் கூறுவார்கள்
"ما لغة حمير بلغتنا
ولا عربيتهم كعربيتنا".
ஹமீர்கள் பேசும் பாஷை எங்கள் பாஷை அல்ல. அது எங்களது அரபு அல்ல.
வார்தைகளை உச்சரிப்பதில் வேறு பாடு காட்டிய அரபுகள் அதில் கூட குப்பெருமை அடித்து உயர்வு தாழ்வு காட்டி விலகி நின்றனர்.
திருக்குர் ஆன் ஓதப்படுகிற வித்த்தில் அனைத்டு அரபு குழுக்களையும் ஒன்றினைத்த்து.
அரபுகளின் பல்வேறு குழுவினர் பேசும் பாஷைகளை திருக்குர் ஆன் பயன்படுத்திக் கொண்ட்து.
குறைஷிகளின் பாஷையில் குர் ஆன் பிரதானமாக இறக்கப்பட்டாலும் கூட அக்கம் பக்கத்திலிருந்த பல குழுக்களுக்களுடைய பாஷைகளையும் குர் ஆன் பயன்படுத்தியது.
உதாரணத்திற்கு
குறைஷிகள் பய்படுத்தாத பனூ தமீம் குடும்பத்தினர் பயன்படுத்தும் பல வார்த்தைகளும் குர்
ஆனில் இடம் பெற்றன.
لَكُمْ فِي رَسُولِ الله أُسْوَةٌ حَسَنَة
குறைஷிகள் இஸ்வத் என்று தான் சொல்வார்கள் அவர்களை உஸ்வத் என்று ஓத வைத்தது குர்ஆன்
تميم وبعض قيس يقولون: أُسوة بضم الألف وأهل الحجاز وأسد يقولون إِسوة بكسر الألف (
குர் ஆனில் 11 இடங்களில்
وبئس المصير
என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு அருளப்பட்ட்ட போது
ஒவ்வொரு குடும்பமும் அதை ஏற்றுக் கொள்ளும் நிலையை பெருமானார் (ஸல்) அவர்கள் ஏற்படுத்தினார்கள்.
New Jerusalem Bible
(1985),
the New Revised
Standard Version (1989),
the Revised English
Bible (1989),
Today's New
International Version (2005).
القرآن إسم للنظم والمعني جميعا
எனவே குர் ஆனின் கருத்துக்களுக்கு மட்டுமல்ல அதற்கு நிகராக அதன் எழுத்துக்களுக்கும் முக்கியத்துவம் பெற்றவையாகும்.
அதை
ஓதுவதும் பாதுகாப்பதும் ஒரு முக்கிய வணக்கமாகும்.
அதனால் அரபுகளிடம்
அரபு மொழி நூலான குர் ஆனை கொடுத்தால் போதும் என்று மட்டும் பெருமானாரை அல்லாஹ் அனுப்பி
வைக்க வில்லை. ஓதிக்காட்டுவதை முதல் பணியாக கூறினான்.
هُوَ ٱلَّذِى بَعَثَ فِى ٱلْأُمِّيِّۦنَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُواْ
عَلَيْهِمْ ءَايَٰتِهِ
குர் ஆனின் எழுத்துக்கள் இரண்டாம் பட்சமானவை அல்லை.
மற்ற நூல்களைப் பொறுத்து அதன் கருத்துக்கள் தான் முக்கியமானவையாக இருக்கும் அதன் வார்த்தைகளை மாற்றினால் பெரிது படுத்த மாட்டார்கள்.
குர் ஆன் அப்படி
அல்ல.
குர் ஆனின் கருத்தை
சரியாக அரபியில் சொல்லி அதன் வார்த்தைகளை மாற்றினால் அது ஏற்றுக்க்ள்ளத்தக்கதல்ல.
இஸ்லாமிய சட்ட
அறிஞர்கள் அதனால் தான் குர்
ஆனின் கருத்துதுக்களை மட்டும் எழுதுவதை தடை செய்தார்ர்கள்.
நமது முன்னோர்கள்
குர் ஆனுக்கு உயிர் கொடுக்க என்ன செய்தார்கள் என்பதை கவனித்துப் பாருங்கள்.
இந்தியாவை ஆண்ட
முஸ்லிம் மன்னர்கள் அவர்கள் உருவாக்கிய கட்டிடங்களில் எல்லாம் குர் ஆன் வசன்ங்களை எழுதி
வைத்தார்கள். எப்படி அதன் ஒரிஜினல் வடிவத்தில் மொழி பெயர்ப்பை அல்ல.
தாஜ்மஹாலில் திருக்குர்
ஆன் அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது
கீழிருந்து மேலே
செல்லச் செல்ல வாசிக்கும் போது ஒரே அளவில் தெரியும் வண்ணம் மேலே செல்ல செல்ல எழுத்துக்களின்
அளவை பெரிதாக்கி எழுதியிருப்பார்கள்.
இது தான் உம்மத்தின்
பழக்கம். திருக்குர் ஆனின் கருத்துக்களை மட்டும் எழுதுவதில்லை.
ஏனெனில் திருக்குர்
ஆன் ஓதப்படுகிற வேதம் அதற்கான மரியாதையை ஒவ்வொரு கட்டத்திலும் கவனத்தில் வைத்திருக்கிறார்கள்.
திருக்குர் ஆன்
ஓதுவது தனி மரியாதைக்குரிய அமலாகும்.
நீ ஓதுமளவு சொர்க்கத்தில்
உயர்ந்து கொண்டே இரு என்று ஓதுபவரை பார்த்து சொல்லப்படும் என்றார்கள் பெருமானார் (ஸல்)
அதனால் சஹாபாக்கள் ஒரு நாளில் முழு குர் ஆனை ஓதினார்கள்.
சிலர்
மூன்று நாளில் ஓதினார்கள். முஸ்லிம்
உம்மத்தின் பல பெருமக்களும் 7
நாளில் அதாவது ஒரு வாரத்தில் ஒரு குர்
அன் கத்தம் செய்துள்ளனர். அதனால் தான் குர் ஆன் ஏழு மன் ஜில்களாக
பிரிக்கப்பட்டிருக்கிறது. அது சாத்தியமில்லை என்கிறவர்கள் ஒரு மாத்த்திலாவது குர் ஆனை
ஓதி முடித்தார்கள். அது தான் குர் ஆன் 30 ஜுஸ்வுகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு மாத்திற்கு
ஒரு குர் ஆன் என்ற அளவிலாவது சமுதாயம் குர் ஆனை ஓதி விட வேண்டும் என்பதே இதற்கு காரணம்.
திருக்குர் ஆனின்
கருத்துக்களை அறிந்து கொள்வது முஸ்லிம் உம்மத்தின் கடமை. ஏனெனில் அவர்களுக்கு வழிகாட்டுவதற்காகத்தான்
திருக்குர் ஆன் அருளப்பட்டுள்ளடு.
அதனால் திருக்குர்
ஆனின் கருத்த்துகளை புரிந்து கொள்ள சமுதாயம் முயற்சி செய்ய வேண்டும்.
அல்லாமா
இக்பால் சொன்னார்
சீரா
யாசீன் சிர்ப் இஸ்காம் கே லியே ந ஸம்ஜே! கே இஸ்கே பட்னேஸே மர்னே வாலே கீ ரூஹ் சஹூலத் ஸே நிகல் ஜாதீஹே
சூரா
யாசீன் ஓதினால் ஒரு மனிதரின் உயிர் இலேசாக வெளியேறும் என்று மட்டுமே நினைக்காதீர்கள்.
அதில் நமக்கான
என்ன வழிகாட்டுதல் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் போதுதான் வேதத்தை
நாம் சரியாக பயன்படுத்தியவர்களாக முடியும்.
ஆனால் திருக்குர் ஆனின் அர்த்த்தை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு - பாமர்ர்களுக்கு
அதன் பாக்கியம் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதற்கு அல்லாஹ் செய்த அற்புதமான ஏற்பாடு
தான் ஓதுதல் ஆகும்.
இன்றைக்கு சில சமயங்களில் வேதங்கள் படித்த அறிஞர்களுக்கு மட்டுமே சொந்தமான சொத்தாக
இருக்கிறது.
ஆனால் இஸ்லாமின் வேதமோ அனைத்து மக்களின் சொத்தாக இருக்கிறது என்றால் அதற்கு ஓதுதல்
தான் காரணமாகும்.
இதை சிந்திக்கும்
போது ஓதுதல் என்பது எத்தகைய பெரும் சமூக புரட்சிக்கு காரணமாக இருக்கிறது என்பதை நாம்
உணரலாம்.
பெருமானாரின் பிறந்த
தின விழாவை கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிற நாம் பெருமானாரின் முதல் பணியான ஓதிக்காட்டுதல்
என்ற பணியை உணர்ந்து திருக்குர் ஆனை ஓதிக் கொள்ளும் சபதம் ஏற்போம்.
ஓதப்படும் வேதம்
என்ற அவர்களது புரட்சியில் பங்கேற்ற ஒரு முதன்மையான பாக்கியம் நமக்கு கிடைக்கும்
அல்லாஹ் தவ்பீக்
செய்வானாக!
No comments:
Post a Comment