திருக்குர் ஆனின் ரஃது அத்தியாயத்தில் 17 வது வசனம்
فَأَمَّا الزَّبَدُ فَيَذْهَبُ
جُفَاءً ۖ وَأَمَّا مَا يَنفَعُ النَّاسَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ}
[الرعد: 17]
ஒரு இடி போல நம்மை உலுக்குகிறது.
நாம்
எத்தகைய வாழ்கை வாழ்கிறோம்.
நுரையை
போல பட்டோபடமாக பொங்கி படம் காட்டி விட்டு சற்று நேரத்தில் காய்ந்து காணாமல் போய்விடுகிற
வாழ்கை வாழ்கிறோமா ? அல்லது சமூகத்திற்கு நிலையான பலன் தரக் கூடிய வாழ்கை வாழ்கிறோமா
என்று இந்த வசனம் நம்மை யோசிக்க வைக்கிறது.
நமது
அன்றாட செயல்பாடுகள் எப்படிப்பட்ட வை வெறும் நுரைகளா ?
அல்லது
நின்று நிலை பெறூம் கருங்கல் பாறைகள் போன்ன்றவையா ?
என்று
சிந்திக்க வைக்கிறது.
தனிமனிதர்களாகவும்
சமூகமாகவும் நாம் செய்கிற பல காரியங்களும்
பயனற்றவைகளாக உணர்ச்சிகளின் வேகத்தில் வெறும் அடையாளத்திற்கு செய்த காரியங்களாகவும்
இருக்கின்றன. அதனால் பயன்கள் எதுவும் ஏற்படுவதில்லை.
கல்யாணப்
பத்ரிகை மிகப்பெரிதாக அடிப்பதால் ஏதாவது நன்மை உண்டா ? அதில் செலவை குறைத்து ஒரு நூறு
ஏழைகளுக்கு மதிய உணவளிக்கலாம் அல்லவா ?
(உதாரணங்களை
சேர்த்துக் கொள்க!)
மக்கள்
வரிப்பணத்தில் இயங்குகிற அரசுகள் பயனற்ற காரியங்களை செய்கின்றன. பெரும் பொருட் செலவுகளையும்
உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி.
பல
யுத்தங்கள் பெரும் இழப்புக்களை ஏற்படுத்திய பிறகு பயனற்ற போர்களாக அறிவிக்கப்பட்டன.
1965
ல் பாகிஸ்தான் இந்தியா மீது படை எடுத்தது. ஏபரலில் இருந்து செப்டம்பர் வரை நடைபெற்ற அந்த
போரில் ஆயிரக்கணக்கானோர் இரு தரப்பிலும் பலியாயினர். இரண்டு தரப்பிலும் சுமார் 4000 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 8 ஆயிரம் பேர் காயமுற்றனர்.
ஏராளமான பொருட் செலவு ஏற்பட்டது.
கடைசியில்
வரலாறு என்ன சொல்கிறது என்றால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படவில்லை.
சோவியத்
ரஷயாவில் விரிவாக ஆய்வு செய்யாமல் நாங்கள் எதையும் சாதிப்போம் என்ற கோஷத்தோடு ஏரல்
கடல் என்ற சிறு கடலுக்கு வருகிற நீர்ப்பாதைகளை வேறுபணிகளுக்கு திருப்பி விட்டார்கள்.
சிறு கடல் காய்ந்தால் பரவாயில்லை என்று நினைத்தார்கள். அதனால் சில ஆயிரம் ஏக்கர் நிலம் செழிக்கும் என்றார்கள். நடந்ததோ வேறு.
ஏரல் கடல் வற்றியது. அதிலிந்து வெளிப்பட்ட உப்புப்படிவங்கள் காற்றில் பரவி அவர்கள்
செழிக்கும் என்று நினைத்த்தை விட பல ஆயிரம் ஏக்கர்களை வீணாக்கியது.
நம்முடைய
இந்திய நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கப் போகிறோம் என்று மார்தட்டி 500 ஆயிரம் ரூபாய்
நோட்டுக்களை திடீர் என தடை செய்தார்கள். இந்திய மக்கள் அனுபவித்த தொல்லைகள் எத்தனை
? எத்தனை உயிரழப்புகள் ஏற்பட்டன, கடைசியில் அச்சிடப்பட்ட தொகை எல்லாம் திரும்பி வந்த
போது அரசு கூறியது பொல ஒன்றும் நடக்க வில்லை.
நமது
வீடுகளில் வியாபார நிறுவன்ங்களில் மஹல்லா ஜமாத்துக்களில் பொது அமைப்புக்களில் நமது
பெறுமையை காட்டுவதற்காக அதிகபொருட் செலவில் இத்தகைய காரியங்களை செய்கிறோம்.
அவை
காலப்போக்கில் காய்ந்த நுரை போல காணாமல் போய்விடுகின்றன.
நாம்
சிறப்பான ஒரு வாழ்கையை விரும்புகிறோம் என்றால் நமது வாழ்வில் இப்படிப்பட்ட காரிய்ங்களில்
ஈடுபடக் கூடாது.
லுக்மான்
அல் ஹக்கீம் – உலகின் மாபெரும் த்த்துவ ஞானிகளில் ஒருவர்- அவரது பெயரில் குர் ஆனில்
ஒரு அத்தியாயம் இருக்கிறது .
மிகச்
சாதாரணமான் ஆடுமேய்ப்பாராக பார்ப்பதற்கு அழகற்ற தோற்றம் கொண்டவராக இருந்த லுக்மான்
(ரலி) அவர்கள் தனக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்த்து கிடைத்த்தற்கான காரணங்களில் ஒன்றாக
கூறியது
நான்
தேவையற்ற காரியங்களில் ஈடுபட மாட்டேன்.
இதை
தான் பெருமானார் (ஸல்) அவர்கள்
وعَنْ أَبِي هُرَيْرَةَ t قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: مِنْ حُسْنِ إِسْلَامِ الْمَرْءِ تَرْكُهُ مَا لَا
يَعْنِيهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ، وقَالَ: حَسَنٌ.
இந்த ஹதீஸிற்கு விளக்கம் கூறும்
அறிஞர்கள் இது ஈமானின் பரிபூரண நிலை என்கிறார்கள்
فالإنسان إذا ابتعد عمَّا لا يعنيه، ولم يدخل في
مشاكل الناس، ولا في سؤال فلانٍ وفلانٍ عمَّا لا يعنيه، فهذا هو من كمال إيمانه
பெரியவர்கள்
இளைஞர்கள் பெண்கள் என அனைத்து தரப்பினரும் நினைவில் வைத்து செயலாற்ற வேண்டிய ஒரு முக்கியமான
வாழ்வியல் த்த்தும் இது. பக்திமார்க்கமும் கூட
நாம்
செய்கிற ஒவ்வொரு காரியமும் வீட்டிற்கு நாட்டிற்கு சமுகத்திற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்
என்று நாம் சிந்தித்துச் செயல் பட் வேண்டும்.
வரலாற்றின்
பெரும் கதாயநகர்களாக ஆயிரமாண்டுகளை கடந்தும் வாழ்கிற பெருமக்கள் எத்தகைய காரியங்களை
ஆற்றினார்கள்/
உமர்
ரலி அவர்களிடம் சமூகத்திற்கு பயன்படும் வாழ்வு வாழ வேண்டும் என்ற சிந்தனை மிகைதிருந்த்து.
இப்படிச் செய்தால் என்ன? அப்படிச் செய்தால் என்ன என்று சதா யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
அதனால் அவர்களது கருத்துக்கள் பலதும் சட்டமாக மாறியது.
தவாப்
செய்த பிறகு மகாமே இபுறாகீமில் 2 ரகாத் தொழுவது உமர் ரலி அவர்களின் சிந்தனை தேடலின்
விளைவாகும்.
ஹிஜ்ரீ
7 ம் ஆண்டு பெருமானார் (ஸல்) அவர்கள் உம்ரத்துல் கழா வின் போது தவாபு செய்து கொண்டிருந்தார்கள்.
உடனிருந்த உமர் ரலி அவர்கள் மகாமே இபுறாகீற்கு அருகே வந்த போது இந்த இடத்தை தொழுகைக்கான
ஒரு அடையாளமாக ஆக்கினால் என்ன என்று கேட்டார்கள். பெருமானார் (ஸல்) சிறிது நேரம் மெளனமாக
இருந்தார்கள். ஆயத் இறங்கியது
واتخذوا من مقام إبراهيم مصلى
பெருமானார் (ஸல் அவர்கள் ஜைனப் அம்மையாரை திருமணம்
செய்த்தற்காக வலீமா விருந்து கொடுத்தார்கள் . அந்த அறையின் ஒரு மூளையில் தான் ஜைனப்
அம்மா அமர்ந்திருந்தார்கள். விருந்துண்ண வந்த தோழர்கள் பெருமானரிடம் அதிக நேரம் பேசிக்
கொண்டிருந்தாரகள். அது ஜைனப் அம்மாவுக்கு இடைஞசலாக இருந்த்து. உமர் ரலி அவர்கள் பெருமானாரிடம்
நீங்கள் ஒரு திரை போட்டுக் கொண்டால் என்ன என்று கேட்டார்கள். பெண்கள் திரைக்குள் இருக்க
வேண்டும் என்ற கருத்துடைய வசனம் அப்போது இறங்கியது.
قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ : قُلْتُ : " يَا
رَسُولَ اللَّهِ يَدْخُلُ عَلَيْكَ البَرُّ وَالفَاجِرُ ، فَلَوْ أَمَرْتَ أُمَّهَاتِ المُؤْمِنِينَ بِالحِجَابِ ،
فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الحِجَابِ
{لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام
غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث
إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا
فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله
ولا أن تنكحوا أزواجه من بعده أبدا إن ذلكم كان عند الله عظيما} [الأحزاب: 53] "
இன்று
பர்தா அணிந்து செல்லும் ஒவ்வொரு பெண்ணும் அதன் பலனை அனுபவிக்கும் உங்களுக்கு அருகில்
நல்லவர்களும் வரலாம் கெட்டவர்களும் வரலாம்; எப்போது எது நடக்கும் என்று சொல்ல முடியாது
என்று 1400 ஆண்டுகளுக்கு முன் எச்சரித்த உமர்
ரலி அவர்களுக்க் நன்றி சொல்ல வேண்டும்.
இது
போல ஒன்றல்ல இரண்டல்ல 33 சட்டங்களில் உமர் ரலி அவர்கள் இந்த சமூகத்தின் நன்மை குறித்து
சித்தித்து கருத்து கூறியதை மார்க்க அறிஞர்கள் பட்டியலிட்டுள்ளார்கள்.
அவற்றில்
ஒன்று தான் மதுவும். மது தடை செய்யப்ப்பட்தன் பின்னணியில் உமர் ரலி அவர்களின் பங்களிப்பும்
உண்டு. உமர் ரலி அவர்களும் முஆத் ரலி அவர்களும் முதன் முதலாக பெருமானாரிடம் சென்று
இந்த மது மது விசயத்தில் ஒரு கருத்துச் சொல்லுமாறு கேட்டார்கள். அப்போது தான்
يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ ۖ
قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِن
نَّفْعِهِمَا
என்ற வசனம் இறங்கியது,. இதுவே மது விசயத்தில் திருக்குர் ஆன் கூறிய முதல் கருத்து . இந்த
வசனத்திற்கு பிறகு சில சஹாபாக்கள் மது வை விட்டனர். இதன் தொடர்ச்சியாகவே மது ஹராமாக்கப்பட்டது.\
ஒரு
மனிதராக உமர் ரலி அவர்களின் பயன்பட வாழ்தலின் கனத்தை எண்ணிப்பாருங்கள்!
இதே
போல இமாம புகரரி ரஹ் அவர்களின் பயன்பாடு. இமாம் கஸ்ஸாலியின் (ரஹி) பயன்பாடு கள எப்படிப்பட்டவை
என்பதை சிந்தித்துப் பாருங்கள்
உமைய்யா
பேரரசார் உமர் பின் அபதுல் அஜீஸ் அவர்கள் அவர்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஜும் ஆ குத்பாவில்
நான்கு கலீபாக்களின் பெயர்களையும் ஒரு சேர கூறி துஆ செய்யும் ஏற்பாட்டை செய்தார்கள்.
எவ்வளவு
பய்னுள்ள பணி தெரியுமா அது ?
கலீபாக்களின்
பெயரைச் சொல்லி முஸ்லிம் சமூகம் பெரும் சண்டைகளுக்கு பிளவுகளுக்கு ஆட்பட்டிருந்த நேரத்தில்
இன்று சின்னக் குழந்தையை கேட்டாலும் கலீபாக்களின் பெயர்களை வித்தியாசம் இல்லாமல் ஒரே
மரியாதையோடு பேசவைத்த பெருமை உமர் பின் அப்துல் அஜீஸ் ரஹி அவர்களைச் சாரும்
நாம்
வாழும் காலத்தில் நமது குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கு இத்தகைய நற்பணிகளை செய்து
விட வேண்டும்.
இதெல்லாம்
பெருமக்களின் காரியம் சாதாரண நம்மால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கலம்.
நாம்
செய்யும் காரியம் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று சிந்தித்து செயல்பட்டாலே நாம் செய்கிற
ஒவ்வொரு காரியமும் நமக்கு நன்மையானதாகவும் சமுதாயத்திற்கு பயனுள்ளதாகவும் நிலை பெறூம்
நமது
பிள்ளைகளுக்கு காசு கொடுக்கிறோம். ஏதாவது அறிவுரை கூறுகிறோமா ?
ஜீலானி
ரஹி அவர்களின் அம்மா மகனுக்கு 40 தங்க காசுகளை கொடுத்தார்கள். ஒரு அறிவுரை சொன்னார்கள்
எப்போது உண்மை பேசு என்றார்கள் .\
அது
எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை நாம் பார்க்க வில்லையா ?
எனக்கு
தெரிந்து ஒரு பெரிய குடும்பத்தில் யாருடை நாவிலும் கெட்ட வார்த்த வராது. காரணம், கேட்டேன்.
அவர்களுடைய பாட்டனார் எந்த குறும்பையும் சகித்துக் கொள்வார் கெட்ட வார்த்தை பேசுவதையும்
அடிக்கடி சத்தியம் செய்து பேசுவதையும் சகித்துக் கொள்ளவே மாட்டார். அதன் காரணமாக அவர்களது
குடும்பத்தில் யாரும் கெட்ட வார்த்தை பேசுவதில்லை என்று சத்தியம் என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை
என்றும் கூறினார்.
இன்னொரு
குடும்பத்தை பார்த்தேன் அவர்கள் ஒரு யாசகன் ஏதாவது கேட்டு விட்டால் எந்த வேலையையும்
போட்டு விட்டு காசு கொண்டு வந்து கொடுப்பார்கள். சில நேரங்களில் சிகனல்களில் யாசகம்
கேபோரை தவிர்த்து விட்டு போகும் போது எனக்கு அவர்கள் நியாபகம் வரும், இவர் உடனிருந்திருந்தால்
எப்படியாவது வண்டியை நிறுத்தி காசு கொடுத்து விட்டுத்தானெ சென்றிருப்பார் என்று தோன்றும்
. அந்த அளவு கேட்பவர்களுக்கு கொடுப்பதில் அக்கறை செலுத்துவர் . அதற்கு காரனம் கேட்டேன்.
தங்களுடைய தாயாரிடமிருந்து இந்த நற்பழக்கத்தை கற்றதாக கூறினார்.
வாழ்கிற
காலம் குறைவு தான். நாம் இளைமைக்காளத்திலேயே பயனுள்ள நற்காரியங்களை மட்டும் செய்வேன்
என்று உறுதி எடுத்துச் செயல்படுவோம்.
நமது
பெருநாட்களை மார்க்கம் அந்த வகையில் தான் நமக்கு அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது.
ஒரு
பெருநாள் காசு கொடுக்கிற பெரு நாள்
மற்றொரு
பெருநாள் கறி கொடுக்கிற பெருநாள்.
மீலாது
விழாக்களை கூட பெரும்பாலும் நாம் சோறு கொடுக்கிற பெருநாளாகத்தான் கொண்டாடி மகிழ்கிறோம்.
பட்டாசு
வெடித்து வாணவேடிக்கை செய்து காசை வீணாக்கியல்ல.
ஒரு
இறப்பிற்கு பிறகு செய்யும் நற்காரியங்களையும் கூட அப்படித்தான் மார்க்கம் நமக்கு பழக்க
மாக்கியிருக்கிறது.
நிலையான
தான தர்மங்கள். உணவளித்தல், அனாதைகளை ஆதரித்தல், பள்ளிவாசல் மதரஸா மருத்துவமனைகள் கட்டுதல்
அதற்கு உதவி செய்தல் என்ற வகையிலான காரியங்களையே மார்க்கம் வழிகாட்டியிருக்கிறது.
வெளிநாட்டில்
ஒரு நண்பர் தனது தாயாரின் நினைவு நாளில் அவரது மண்ண்றையை சமன்படுத்த அதிக செலவு செய்து
விட்டு வந்து நான் இன்று இப்படி செய்தே என்று கூறினார். அது அங்கு அதிக செலவு பிடிக்கும்
காரியமாகும். நான் கூறினேன். இதைவிடச் சிறந்த்து நீங்கள் அந்தப் பணத்தில் 50 ஏழைகளுக்கு
ஒரு வேளை உணவளித்திருக்கலாம் என்றேன். இனிமேல் அப்படிச் செய்வதாக அவர் கூறினார்.
பயனுள்ள
காரியங்களை செய்வது எப்படி என்பதை நாம் அறிந்தவர்களிடம் அனுபவ சாலிகளிடம் கேட்டு தெரிந்து
செயல்பட வேண்டும்
அல்லாஹ்
தவ்பீக் செய்வானாக!
அல்லாஹ்
நமது வாழ்வை நுரை போல இல்லாமல் இரும்புத்திரை போல இவ்வுலகில் தங்கச் செய்யட்டும்.
Jazakallah.
ReplyDelete