வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, October 27, 2022

சந்தேக நிழல் ஒரு சாபம்

 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اجْتَنِبُوا كَثِيرًا مِّنَ الظَّنِّ إِنَّ بَعْضَ الظَّنِّ إِثْمٌ ۖ وَلَا تَجَسَّسُوا –الحجرات 12

 கோவையில் கடந்த 23 ம் தேதி அதிகாலை 4 மணியளவில் ஒரு மாருதி 800 கார் தீ விபத்துக்குள்ளானது. அது இப்போது தமிழகத்தில் ஒரு பெரும் சர்ச்சையாக உருவாகிவருகிறது. ஒரு சரியான விசாரணைக்கான காலம் எடுத்துக் கொள்ளாமலே இது முஸ்லிம் தற்கொலைப் படையினர் நடத்திய திட்டமிட்ட குண்டு வெடிப்பு என்ற ரீதியில் அதிகாரிகளும் அரசியல் கட்சித்தலைவர்களும் கருத்து  கூறிவிட்டனர். இச்செயலில் ஈடுபட்டவர்களுடைய திட்டம் என்ன ? குண்டு வைப்பதா?  தற்கொலை தாக்குதல் நடத்துவதா ? அதை எதற்காக செய்கிறார்கள் ? என்பது போன்ற பல முக்கியமான கேள்விகளுக்கு பதில தெரியாமலே கோவையில் குண்டு வெடிப்பு நடத்த முயற்சி என்ற செய்தி பரவலாக்கப்பட்டு விட்டது.

இது 5 நபர்கள் உபா எனப்படும் கடும் சட்ட்த்தின் கீழ் கைது செய்யப்பட காரணமாகிவிட்ட்து என்பது மட்டுமல்ல. தமிழகம் முழுக்க கோவை நகரின் இமேஜ் கெடுவதற்கு காரணமாகிவிட்டது. தன்னுடைய மகனை இங்குள்ள பிரபல கல்லூரி ஒன்றில் சேர்த்திருந்த ஒரு வெளியூர் வாசி, ஹஜ்ரத் அங்குவருவது சேப்டி தானா என்று விசாரிக்கும் அளவு நிலைமை ஆகிவிட்டது, இனி நிலமை சீராக பல நாட்களாகலாம்.

இந்த நிகழ்வில் முஸ்லிம் உம்மத்திற்கான ஒரு பெரும் பாடம் இருக்கிறது.

தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் சந்தேகத்திற்கு  அப்பாற்பட்டவர்களாக வாழ வேண்டும்.

திருக்குர் ஆன் முஸ்லிம்களுக்கு கற்றுக் கொடுக்கிற ஒரு முக்கியமாமன வாழ்க்கை முறை இது.

நாம் சந்தேகப்பிராணியாக எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுபவராக இருக்க கூடாது. நம்மீது பிறர் சந்தேகப்படும் நிலையிலும் வாழக் கூடாது.

திருக்குரான் தன்னைப்பற்றி சொன்ன முதல் செய்தி

ذلک الکتاب لا ریب فیه 

 இது உலகை வென்றெடுத்த இறைவேதத்தின் முதல் இயல்பு.

 முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முதல் பணி மக்களிடம் தான் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டதாகும்.

 حديث ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: «لَمَّا نَزَلَتْ: ﴿وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ﴾ [الشعراء: 214]، صَعِدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الصَّفَا، فَجَعَلَ يُنَادِييَا بَنِي فِهْرٍ، يَا بَنِي عَدِيٍّ - لِبُطُونِ قُرَيْشٍ - حَتَّى اجْتَمَعُوا فَجَعَلَ الرَّجُلُ إِذَا لَمْ يَسْتَطِعْ أَنْ يَخْرُجَ أَرْسَلَ رَسُولًا لِيَنْظُرَ مَا هُوَ، فَجَاءَ أَبُو لَهَبٍ وَقُرَيْشٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَأَرَأَيْتَكُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلًا بِالوَادِي تُرِيدُ أَنْ تُغِيرَ عَلَيْكُمْ، أَكُنْتُمْ مُصَدِّقِيَّ؟ قَالُوا: نَعَمْ، مَا جَرَّبْنَا عَلَيْكَ إِلَّا صِدْقًا، قَالَفَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ،

 முஸ்லிம்களின் முதல் பணி சந்தேகமின்றி அல்லாஹ்வை ரஸூலை வேதங்களை மறுமை நாளை சொர்க்கம் நரகத்தை நம்ப வேண்டும். இதில் துளியளவும் சந்தாகம் கொள்ளக் கூடாது.

 சந்தேகம் என்பது ஆறாத, ஒரு புற்று நோய். இது வளர்ந்த கொண்டே இருக்கும். மற்றொரு புறம், நமது மகிழ்ச்சியை அழித்துக் கொண்டே இருக்கும்.

 இந்த சந்தேகம் ஒவ்வொரு மனிதனையும் மரணக் குழிவரை அழைத்துச் சென்ற உண்மைச் சம்பவங்களும் நிறைய உண்டுஎன்பதை நமது அன்றாட வாழ்வில் காண்கிறோம்.

 சந்தேகப்பட்டு உணர்ச்சி வேகத்தில், தவறு செய்து விட்டு, வாழ்க்கையையும் தொலைத்து விட்டு, வாழ் நாள் முழுதும் வருந்திக் கொண்டு நிற்பவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

 ஒரு பெண் கணவரின் அலுவலகத்துக்கு வேகமகாக வந்தாள் கணவன் கேட்டான்.

ஏம்மா, அப்படி என்ன தலைபோகிற அவசரம். அடிச்சு, பிடிச்சு, மூச்சு இறைக்க என் ஆஃபீஸ்க்கே வந்து விட்டாய் என மனைவியிடம் விசாரிக்க, அதற்கு மனைவியோ, இல்லீங்கநம்ம வீட்டு வேலைக்காரியை காலைலேர்ந்து காணோமாம். எனக்கு சந்தேகமாய் போச்சு.நீங்களாவது ஆஃபீஸ்ல இருக்கீங்களான்னு பார்க்க வந்தேன் என்றாளாம்.

அலுவலகம் முழுக்க சிரியாய் சிரித்த்து. அந்த கணவன் அதன் பிறகு அங்கு வேலை செய்ய முடியுமா ?

 இந்த ஆண்டு அக்டோபர் நாலாம் தேதி கோவையில் நடந்த ஒரு சம்பவம்

கோவை குப்புசாமி மருத்துவ மனையில் நர்சாக வேலை செய்யும் தனது மனைவி நான்சியை (வயது 27)

அவரது நட்த்தையில் சந்தேகம் கொண்ட கணவன் வினோத் வயது (32) மருத்துவமனைக்கே சென்று வெட்டிக் கொலை செய்தார் என்ற செய்தி தினமலர் செய்தியில் வந்த்து. தம்பதியருக்கு 8 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.

 எந்த ஒரு விசயத்தையும் உறுதிப் படுத்திக் கொள்ளும் நடைமுறையை வழக்கமாக்கிக் கொண்டால் சந்தேக எண்ணத்தை தவிர்த்து விடலாம்.

 பெருமானார் (ஸல்) அவர்கள் வழிகாட்டுகிறர்கள்

தொழுது கொண்டிருக்கும் போது காற்று பிரிந்து விட்ட்து போல சந்தேகம் வந்தால் என்ன செய்வது என்று தோழர்கள் கேட்ட போது சப்தமோ நாற்றமோ வராதவரை தொழுகையிலிருந்து திரும்ப தேவையில்லை என்றார்கள் பெருமானார். (ஸல்)

 عن عبد الله بن زَيد بن عاصم: أنَّه شكا إلى رسولِ الله صلَّى اللهُ عليه وسلَّم: الرَّجُل الذي يُخيَّلُ إليه أنَّه يجِدُ الشيءَ في الصَّلاة، فقال((لا يَنفتِل- أو لا ينصَرِف- حتى يسمعَ صوتًا، أو يجِدَ رِيحًا

 அதே போல ஏற்கெனவே உறுதியாக இருக்கிற ஒரு செய்தியை சந்தேகப்ப்படுவதற்கு முன்  சந்தேகத்தை தவிர்க்கும் வழிகளை ஆராயவேண்டும்.

வள்ளுவப் பெருந்தகை சொல்கிறார்

''தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்.. (.குறள்:510..)

ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவு அடைந்த ஒருவனிடம் சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும். என்கின்றார்.

சந்தேகத்தை தவிர்க்கும் வழிகள்

 சில விசயங்களில் அதிக ஆராய்ச்சி கூடாது என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் ஏனெனில்

 أن الشيطان لا يزال بالإنسان يوسوس له، ثم يقولهذا خلقه الله وهذا خلق الله، فمن خلق الله؟! فإذا وجد ذلك فليستعذ بالله ولينته

 சந்தேகத்தை தவிர்க்கும் வழிகளில் முக்கியமானது அது பற்றி பேசாமல் இருப்பது. மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் வரத்தான் செய்யும் அது எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருக்க கூடாது. பேசத் தொடங்கும் போது சந்தேக ஷைத்தானுக்கு நாம் வழி திறந்து வைக்கிறோம் என்று பொருளாகிவிடும்.

பெருமானாரின் அற்புதமான கூற்று

 சில எண்ணங்கள் தோன்றுகின்றன. அவை வானமே இடிந்து விழும் அளவு பயங்கரமாக தெரிகின்றன. அது பற்றி பேச முடிவதில்லை என்ன செய்வது என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். பெருமானார் (ஸல்) கூறினார்கள். பேச முடியாமல் போவது தான் சந்தேகம் என்பது எனவே பேசக் கூடாது என்று தோன்றுவதே ஈமான் என்றார்கள்.

 قالوا للنبي صلى الله عليه وسلم: (يا رسول الله! إن أحدنا يجد في نفسه شيئاً لا يستطيع أن يتكلم به -يعنيمن عظمه- لأن يخر من السماء خير له من أن يتكلم فقال النبي صلى الله عليه وسلموقد وجدتموه؟! ذاك صريح الإيمان

 மற்றொரு வழி

மனதிற்குள்  தோன்று எந்த ஒரு சந்தேக விவகாரத்திலும் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்து விடக் கூடாது.

 ஒருவர் மீது உங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறதென்றால் அவரை மன்னிப்பதற்கான எழுபது காரணங்களை ஆராயுங்கள் என்று முன்னோர்கள் கூறுவார்கள்.

 كما يقال في الأثر : التمس لأخيك سبعين عذراً 

 சந்தேக எண்ணாம் தோன்றாதிருக்க உமர் ரலி கூறும் அற்புதமான அறிவுரை

 உன் சகோதரன் பேசிய ஒரு வார்த்தையில் நீ நல்லதையே தேடு! அப்படியும் அதற்கு ஒரு அர்த்தம் இருக்க வாய்ப்புண்டு..

 قال سيدنا عمر ابن الخطاب رضي الله عنه, : ولا تظنن بكلمة خرجت من أخيك المؤمن إلا خيرا وأنت تجد لها في الخير محملا (تفسير ابن كثير

 இதற்கு மேலும் சந்தேகமா ?

 சந்தேகத்தை சரி செய்து கொள்ள மற்றொரு வழி

சரியான ஆட்களிடம் உங்களது சந்தேகத்தை தெரிவியுங்கள்.

 وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ ۖ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَىٰ أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ ۗ

 எச்சரிக்கை! இங்கிருந்துதான் சந்தேகம் வெளியே கிளம்பும்.  அது பெரும் பாதிப்புக்கு காரணமாகலாம். அதனால் சரியான நம்பிக்கையான தகுதியான நபரை தேர்ந்தெடுத்து இப்படி எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது என்று விசாரித்து அறிய முயலலாம.

  சந்தேகத்தை தவிர்க்கும் மற்றொரு வழி சம்பந்தப்பட்டவரிடமே நாசூக்காக விசாரித்து விடுவது

எச்சரிக்கை இதிலும்  கவனம் அவசியம்.

பெருமானாரின் ரகசியத்தை மக்காவாசிகளுக்கு தெரிவிக்க கடிதம் எழுதிய காதிப் பின் அபீபல்தஆ ரலி என்ற சஹாபியை பெருமானார் விசாரித்தார்கள்.

 அப்போது அவர் தான் முனாபிக் அல்ல என்றும். அல்லாஹ் பெருமானாருக்கு வெற்றியை கொடுத்துவிடுவான் என்று தான் நம்பியதாகவும் மக்காவிலுள்ள தனது குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்காக இவ்வாறு செய்துவிட்ட்தாகவுக் கூறினா.

 பெருமானார் (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

 சந்தேக நிலையில் நமக்கு வேண்டியவர்கள் கூறும் காரணங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அருமையான வழிகாட்டுதல்கள் இதிலுண்டு.

 நாம் சந்தேகப்படவும் கூடாது.

சந்தேகத்திற்கு ஆளாகவும் கூடாது.

இதுவும் ஈமானிய வாழ்வில் மிக முக்கியமானது.

 நம்மைச் சார்ந்து இருப்பவர்கள் நம்மீது நம்பிக்கையற்று விடுவார்கள் எனில் அதை விட இழிவு வேறு கிடையாது.

 ஈமானிய வாழ்வுக்கு பெருமானார் இலக்கணம் கூறினார்கள்

  وعن أَبي هريرة t: أَن النَّبيَّ ﷺ قَالَواللَّهِ لا يُؤْمِنُ، واللَّهِ لا يُؤْمِنُ، واللَّهِ لا يُؤْمِنُ، قِيلَ: مَنْ يا رسولَ اللَّهِ؟ قَالَالَّذي لا يأْمنُ جارُهُ بَوَائِقَهُ مُتَّفَقٌ عَلَيهِ.

وفي روايةٍ لمسلمٍلا يَدْخُلُ الجنَّة مَنْ لا يأْمَنُ جارُهُ بوَائِقَهُ.

 எங்கும் சாத்தானிய வலை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள் வேண்டும்.

 பெருமானார் (ஸல்) அவர்கள் இஃதிகாபில் இருந்தார்கள், பெருமானாரின் மனைவி பார்த்து விட்டு செல்ல வந்தார்கள். அவரை வழியனுப்பி வைக்க வந்த பெருமானார் இரண்டு தோழர்கள் அவ்வழியே செல்வதை கண்டார்கள். அவர்களை அழைத்து இவர் எனது மனைவி சும்மா பேசிவிட்டு விடை பெறுகிறார் என்றார்கள். அதிர்ச்சியடைந்த தோழர்களிடம் பெருமானார் கூறினார்கள் சைத்தான் இரத்த நாளமெங்கும் ஓடுகிறான்.

 قالت صفية  وضي الله عنها

أنَّهَا جَاءَتْ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ تَزُورُهُ وهو مُعْتَكِفٌ في المَسْجِدِ، في العَشْرِ الأوَاخِرِ مِن رَمَضَانَ، ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ، فَقَامَ معهَا رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، حتَّى إذَا بَلَغَ قَرِيبًا مِن بَابِ المَسْجِدِ عِنْدَ بَابِ أُمِّ سَلَمَةَ زَوْجِ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ، مَرَّ بهِما رَجُلَانِ مِنَ الأنْصَارِ، فَسَلَّما علَى رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، ثُمَّ نَفَذَا، فَقالَ لهما رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: علَى رِسْلِكُمَا، قالَا: سُبْحَانَ اللَّهِ يا رَسولَ اللَّهِ! وكَبُرَ عليهما ذلكَ، فَقالَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ: إنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنَ الإنْسَانِ مَبْلَغَ الدَّمِ، وإنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ في قُلُوبِكُما شيئًا.

صحيح البخاري

 முஸ்லிம் சமூகம் குறிப்பாக முஸ்லிம் இளைஞர்கள் தங்களது அனைத்து நடவடிக்கைகளிலும் சந்தேகத்தின் நிழல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

 சந்தேகத்திற்குரிய கருத்துக்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது. சந்தேக நபர்களிடமும் சிக்கிக் கொள்ளக்கூடாது.

 இன்றைய சமூக ஊடகங்கள் பப்பள்ஸ் ஊதி விளையாடும் ஒரு விளையாடு போன்றவை தான், அதை பெரிய நம்பிக்கையாகவும் வீரம் பேசுகிற களமாகவும் பலர் கருதிக் கொள்கிறார்கள். அதனலாலே பல வினைகளை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.   

 எந்த ஒரு தேவையும் ஒரு சிறு பயனும் இல்லாமல் அநாவசியமாக ஈடுபடும் சில காரியங்கள் பெரிய பாதிப்புக்களை தந்து விடக் கூடும்.

அல்லாஹ் பாதுகாபானாக!

கோவை மாந்கரின் அமைதியை குலைக்க திட்டமிடும் சக்திகளை அல்லாஹ் முறியடிப்பானாக!   

 

 

 

 

 

2 comments:

  1. சிக்கலான நிலையில் தக்க கருத்துகளை சமூகத்துக்கு வழங்கிய கோவை பாகவியாருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Anonymous6:07 AM

    மிக அருமையான பதிவு ஹஜ்ரத் பாரக்கல்லாஹ் லக்கும்

    ReplyDelete