வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, February 09, 2023

பூகம்ப எச்சரிக்கைகள்

((اللَّهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ)) (الزمر:62) 

ஒரு ஆண்டுக்கு 10 லட்சம் நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன. 

நில நடுக்கத்தை ரிக்டர் அளவு கொண்டு கணக்கிடுகிறார்கள். பாதிப்பு 6 ரிக்டரை கடக்கும் போது  கட்டிடங்கள் இடியும்.

கடலுக்கு அடியில் ஏற்படும் பூகம்பங்களால் சுனாமி உருவாகும்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலை துருக்கியின் காஸியாண்டெக் நகரில் 7.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட்து. தொடர்ந்து மதியம் 12 மணியளவில் இரண்டாம் தடவையாக 7.5 என்ற அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு மிகப்பெரிய சேதங்களை விளைவித்துள்ளது.

துருக்கி அதிகம்நி லநடுக்கம் ஏற்படக்கூடிய நிலப்பரப்பாகும்

 துருக்கியில் 1900ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 76 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் மொத்தம் 90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் இது மிகவும் பயங்கரமானது

பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்திற்கு பலியாகியுள்ளனர். பல இலட்சக்கணக்கானோர் அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றன.

மைனஸ் 6 டிகிருக்கும் குறைவான உறைபனியின் காரணமாகவும் தொடர்மழை காரணமாகவும் மீட்பு பணிகள் தாமதமாகின்றன.

இழப்புகளின் எண்ணிக்கை இன்னும் எட்டு மடங்கு அதிகரிக்க கூடும் என்று ஐ நா கூறுகிறது.

ஏற்கெனவே உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் நிலமை இன்னும் மோசமாக இருக்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் இழப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் காக்க  வேண்டும். பாதிப்படைந்தோருக்கு அவனே தகுந்த ஆறுதலை தர வேண்டும்.

மீட்பு பணியில் ஈடுபட்டிருப்போருக்கு அல்லாஹ் வழிகாட்ட வேண்டும். உதவி செய்ய வேண்டும்.

பூகம்பங்கள் மிக்கடுமையானவை. நிமிஷ நேரத்தில் செழிப்பான நகரத்தை இருந்த இடம் தெரியாமல் உருக்குலைத்து விடக்கூடியவை. அதே போல முன்னெச்செரிக்கை இல்லாமல் வருபவை. 

பூமியின் ஒரு சிறு அசைவு பல லட்சம் பேர்களை பலி நிமிட நேரத்தில் கொள்ளை கொண்டுவிடுகிறது.

நமது முதல் பணி .

ஆறுதல் - உதவி -

نْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا رَأَى كَلْبًا يَأْكُلُ الثَّرَى مِنْ الْعَطَشِ فَأَخَذَ الرَّجُلُ خُفَّهُ فَجَعَلَ يَغْرِفُ لَهُ بِهِ حَتَّى أَرْوَاهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَأَدْخَلَهُ الْجَنَّةَ البخاري 174

 عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَمَا رَجُلٌ يَمْشِي بِطَرِيقٍ وَجَدَ غُصْنَ شَوْكٍ عَلَى الطَّرِيقِ فَأَخَّرَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَغَفَرَ لَهُ البخاري 

 

இரண்டாவது பணி

 

எச்சரிக்கை  அடைவது 

 

விபத்துக்கள் எந்த நேரத்திலும் யாருக்கும் நேரலாம் எதுவும் ஆகலாம்

 

இந்த நிலை நமக்கு ஏற்பட்டால் என்னாவது என்று அனைவரும் யோசிக்க வேண்டும்

 

சில புவியல் அறிஞர்கள் இந்தியாவும் அடுத்த பூகம்பத்திற்கு இலக்காக்கலாம் என்று சொல்லியிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

அவர்கள் சொல்லிவிட்டார்கள் என்பதற்காக அல்ல. அல்லாஹ் என்னவும் செய்யலாம் என்பதனால் இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

 

முஸ்லிம்கள் சைப்ரஸை வெற்றி கொண்ட போது அபுத்தர்தாஃ ரலி அழுதார்கள். நம்மை விட பலசாலிகளாக இருந்தவர்களை அல்லாஹ் இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான். நாம் அவனுக்கு கட்டுப்படாவிட்டால் இந்த நிலைக்கு நம்மை ஆளாக்க அவனுக்கு எவ்வளவு நேரமாகும். என்று கூறினார்கள்.

 

عن جبير بن نفير، قال: لما افتتح المسلمون قبرص وفرق بين أهلها، قعد بعضهم يبكي إلى بعض، وبكى أبو الدرداء، فقلت: ما يبكيك في يوم أعز الله فيه الإسلام وأذل الشرك وأهله؟! قال: دعنا منك يا جبير، ما أهون الخلق على الله -عز وجل- إذا تركوا أمره، بينا هم أمة قاهرة قادرة إذ تركوا أمر الله -عز وجل- فصاروا إلى ما ترى.

 

ஒருவேளை இத்தகைய விபத்துக்களின் சிக்க நேர்ந்தால் எது மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனம் செலுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வது நல்லது.

 

சிரியாவில் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்ட ஒரு சிறுவன் பதட்டப்படாமல்  டிக்டாக் செயலில் ஷஹாத்த் கலிமாவை ரிகார்ட் செய்து அனுப்பி தனது இருப்பிட்த்தை காட்டியிருக்கிறார். அதனால் அவன் காப்பாற்றப்பட்டான். இது போன்ற தகவல்களை வாசிப்பது தப்பிப்பதற்கான வழிகளை அடையாளப்படுத்தலாம்.   

 

நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்று கணிப்பதில் இருந்து இன்னும், ஆய்வில் வெகு தொலைவில் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 

லண்டன் இம்பீரியல் கல்லூரியின் நில அதிர்வு நிபுணர், டாக்டர் ஸ்டீபன் ஹிக்ஸ் ." பூகம்பம் ஏற்படும் போது அதை முன்னறிவிப்பதுதான் நம்மால் முடியும்.. அமெரிக்காவின் கலிபோர்னியா போன்ற இடங்களில் அல்லது ஜப்பானில் நிலநடுக்கத்தை முன்னறிவிக்கும் வேலை இப்போது அதிகரித்து வருகிறது" என  ஸ்டீபன் ஹிக்ஸ் தெரிவித்தார்.

முன் கூட்டியே கணிக்க முடியாது என்கிற போது நிலநடுக்க்ம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் நீங்கள் வசிக்கிறீர்கள் என்றால், எந்த அவசர தேவைக்கும் உங்கள் வீட்டில் எப்போதும் ஒரு பையை தயாராக வைத்திருக்க வேண்டும். அந்தப் பையில் தண்ணீர், டார்ச், முதலுதவி பெட்டி மற்றும் சில உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும்" என்றார். மேலும், செஞ்சிலுவைச் சங்கத்தின் கூற்றுப்படி, மக்கள் கொஞ்சம் பணம், மருத்துவப் பதிவுகள் போன்ற முக்கியமான ஆவணங்களின் நகலையும் பையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறது. 

கீழே படுத்து உங்களை மூடிக்கொள்ளுங்கள்

உங்களைப் பத்திரமாக வைத்துக் கொள்வதற்கான ஃபார்முலா இதுதான். 'கீழே படுத்து, உங்களை மூடிக்கொண்டு, இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்' என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

அறைக்கு அறை ஓடிக் கொண்டிருக்காதீர்கள். மேசைகள் இருந்தால் அதன் கீழ் ஒளிந்து கொள்ளுங்கள்

இல்லை எனில் தலையை ஒரு கையால் மறைத்துக் கொண்டு முழந்தாகாலி நகர்வதற்கு வசதியாக குணிந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்.

அமெரிக்கன் ரெஸ்க்யூ டீம் இன்டர்நேஷனல் (ARTI) இன் மீட்புத் தலைவர் டக் கோப். கூறுகிறா.

1985 பூகம்பத்தின் போது மெக்சிகோ நகரத்தில் உள்ள ஒரு பள்ளியை நான் உடைத்த போது எல்லா குழந்தைகளும் பாதுகாப்பாக இருந்தனர். ஏனெனில் அவர்கள் தங்கள் மேசையின் கீழ் இருந்தனர் மேசைகளுக்குப் கீழ் படுத்திருந்தார்கள் மெக்சிகன் பள்ளிகளில், அத்தகைய அறிவுறுத்தல் இன்னும் உள்ளது

 

கதவுக்கு அருகில் நில்லுங்கள்

நிலநடுக்கம் காரணமாக, வீட்டின் ஜன்னல்கள் மற்றும் பால்கனிதான் பெரும்பாலும் முதலில் விழுகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆபத்தான இடங்களில் இருந்து நீங்கள் விலகி இருங்கள்

பூமி நடுங்குவதை நிறுத்தினால், இடிந்து விழும் அபாயத்தில் இருக்கும் கட்டடத்தில் இருந்து வெளியே வருவது உங்களுக்கு பாதுகாப்பானது.

நிலநடுக்கத்தின் போது வெளியில் இருந்தால்  

நீங்கள் இருக்கும் இடத்தில் இருங்கள்  ஏனெனில் கட்டடங்கள், மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்களில் இருந்து தப்பித்து ஓடுவது உங்களுக்கு காயம் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கிறது.

காரில் இருந்தால் காரை நிறுத்தி விட்டு நடுக்கம் நிற்கும் வரை அதிலிருங்கள். நடுக்கம் நின்றவுடன் வெளியேறிவிடுங்கள்.

யாஹய்யு யா கய்யூம் என்ற திக்ரு இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும். நடுக்கத்தை அகற்றும் ஹஸ்புனல்லா வநிஃமல் வகீல் என்ற திக்ரு தப்பிக்கும் வழிகளை காட்டித்தரும்.

மூன்றாவது பணி  இந்த துஆ வை நாம் அதிகமாக கேட்போம்.

·        عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعَاذَ مِنْ سَبْعِ مَوْتَاتٍ مَوْتِ الْفَجْأَةِ وَمِنْ لَدْغِ الْحَيَّةِ وَمِنْ السَّبُعِ وَمِنْ الْحَرَقِ وَمِنْ الْغَرَقِ وَمِنْ أَنْ يَخِرَّ عَلَى شَيْءٍ أَوْ يَخِرَّ عَلَيْهِ شَيْءٌ وَمِنْ الْقَتْلِ عِنْدَ فِرَارِ الزَّحْفِ  - احمد – 6306

துருக்கி மற்றும் சிரியாவிலுள்ள மக்கள் என்ன பாவம் செய்தார்களோ என்ற கோணத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.

ஆபத்துகள் அல்லாஹ்வின் நாட்டப்படி ஏற்படுபவை . அல்லாஹ்விற்கு அதற்கு பின்னணியில் பல நோக்கங்கள் இருக்கலாம், அதை அறிந்தது போல நாம் பேசக் கூடாது.

அல்லாஹ் பாதிப்புகளின் அளவு மேலும் அதிகரிக்காமல் காப்பானாக!

பாதிப்புக்குள்ளானோருக்கு தகுந்த அறுதலை தருவானாக!

சிக்கிக் கொண்டிருப்போர். காயமடைந்திருப்போர் விரைவில் நிவாரணம் பெற தவ்பீக் செய்வானாக!

மீட்பு பணியிலிருப்போருக்கு அல்லாஹ் உதவியாக இருப்பானாக!

இது போன்ற விபத்துக்கள் அனைத்தை விட்டும் நம் அனைவரையும் இந்த உலகையும் அல்லாஹ் பாதுகாத்தருள்வானாக!

 

No comments:

Post a Comment