உபதேசங்களுக்கு நமது இதயம் இடம் கொடுக்க வேண்டும்.
ஒரு பண்பட்ட அரசியல்வாதியாக எல்லோராலும் அதிகம் மதிக்கப்ப பட்ட அவர் தனது இயல்புகளுக்கு காரணமாக
அவருடைய சிறு பிராயத்தில் நடந்த ஒரு நிகழ்சியை குறிப்பிடுவார். அந்த நிகழ்வு தான் என்னை
உருவாக்கியது என்பார்.
நான் சிறு பிள்ளையாக இருந்தபோது மற்ற பிள்ளைகளுடன் பள்ளிக்கூடத்திற்கு போவேன். போற வழியில் ஒரு மாந்தோப்பு இருக்கும் அதில் மாங்காய் பறிக்கலாம் என்று உடன் இருப்பவர்கள் அழைப்பார்கள் நான் வரவில்லை என்று மறுத்துவிடுவேன் ஒரு தடவை கட்டாயப்படுத்தி தோப்பிற்குள் அழைத்து போய் விட்டார்கள் மாங்காய் பறித்துக் கொண்டிருந்த போது தோட்டக் கார்ர் வந்து விட்டார். மற்றவர்களெல்லாம் சுவர் ஏறி குதித்து ஓடிவிட்டனர் . என்னால் ஓடமுடியவில்லை. தோட்டக் காரர் என்னைப் பிடித்து அடித்தார். நான் சொன்னேன் நான் நான் ஏழை அப்பாவி , நான் நல்ல குடும்பத்தைச் சார்ந்தவன் என்றேன். அப்போது அடிப்பதை நிறுத்திய தோட்டக் காரன் சொன்னார். இந்தக் காரணங்களுக்காகவாவது நீ உள்ளே வராமல் இருந்திருக்க வேண்டும். இத்தகைய பிள்ளைகளுடன் சேராமல் இருந்திருக்க வேண்டும். அன்றைக்கு அவர் சொன்ன தத்துவம் என் வாழ்வில் ஆழமாக பதிந்து போயிருந்தது அதற்குப் பிறகு எந்த சந்தர்ப்பத்திலும் நான் அதை மறக்காவில்லை. என் வாழ்க்கையில் இந்த உயர்வை எட்டுவதற்கு அதுவே காரணம்
நல்லுபதேசம் கிடைக்கிற போது அதை ஆழமாக பற்றிக் கொண்டோம் என்றால் நம்முடைய வாழ்கை சிறப்பானதாக ஆகிவிடும்.
லுக்மான் அலை அவர்கள் தன் மகனுக்கு அறிவுரை கூறினார்கள்.
மகனே தொழுகையை நிலை நாட்டு! நல்ல விஷயங்களை மக்களுக்கு ஏவிக்கொண்டிரு! தீய விஷயங்களை விட்டும் மக்களை தடுத்திடு!
உனக்கு ஏற்படுகிற தீங்குகள் மீது நீ பொறுமையாக இரு! இந்தக் காரியங்கள் உறுதிவாய்ந்த மனிதனுடைய அடையாளங்கள் “
தொழுகையை நிலை நாட்டுதல் என்பது ஒவ்வொரு மனிதனின் சிறந்த லட்சியமாக இருக்க வேண்டும்.அல்லாஹ் நமக்கு இப்படி ஒரு பிறவியை கொடுத்ததற்கான நோக்கமே தொழுவதற்காகத் தான்.
தொழுகை மார்க்கத்தின் தூண். யார் தொழுகையை நிலைநாட்டுகிறாரோ அவர்கள் தீனை நிலை நாட்டிவிட்டார். யார் இத்தொழுகையை உடைத்து விடுகிறாரோ அவர் தீனை உடைத்து விட்டார்
என்ற பெருமானாரின்
கூற்று தொழுகையின் அசாதாரண முக்கியத்தை பறை சாற்ற போதுமானது.
தனது மரணப் படுக்கையில் மயக்கத்திலிருந்து கண் விழித்த
பெருமானார் (ஸல்) அவர்கள் அருகிலிருந்தவர்களை
ப் பார்த்து முதலில் கேட்டது மக்கள் தொழுதுவிட்டார்களா என்பது தான்.
அதே போல கத்தியால் குத்தப் பட்டு குற்றுயிராக கிடந்த உமர் ரலி அவர்கள் மயக்கம் தெளிந்து விழித்த்ததும் கேட்ட முதல் கேள்வி மக்கள் தொழுவிட்டார்கள் என்பது தான். அதற்குப் பிறகுதான் என்னைக் குத்தியது யார் என விசாரித்தார்கள்.
தொழுகை கடமையானது என்றாலும் அந்தக் கடமையை சரி வரச் செய்த்தற்காக அல்லாஹ் சிறப்பன பல கூலிகளை அதற்கு வழங்குகிறான்.
· அல்லாஹ்வின் நெருங்குவதற்கு சிறப்பான வழி தொழுகை
·
அல்லாஹ்வின் பரக்கத்தை பெற்றுக்கொள்வதற்கு சிறந்த வழி தொழுகை
வீட்டில் தொழுகை நடக்கும் என்றால் வீட்டில் பரக்கத் கிடைக்கும் மாணவர்கள் தொழுகையை கடைபிடித்தார்கள் என்றால் கல்வியில் பரக்கத் கிடைக்கும்
வியாபாரிகள் தொழிலாளர்கள் தொழுதார்கள் என்றால் வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் தருவான்
·
தொழுகை எதிரிகளை வீழ்த்தும்
கவுசர் என்கிற அத்தியாயத்தில் தொழுங்கள் என்று சொல்லி விட்டு
அல்லாஹ் சொல்லுகிறான் உங்களுடைய எதிரிகள் நாதியற்றவர்கள் . தொழுகை எதிரிகளை வலுவிழக்கச் செய்யும்
அபூஜஹ்ல் ஒருமுறை வியாபாரத்திற்கு சென்று திரும்பும்போது நிறைய காசு கொண்டு வந்தான் . பெருமானார் அவர்கள் காபாவில் தொழுது கொண்டிருந்தார்கள் அபூ ஜஹ்ல் பெருமை தலைக்கேற இன்னொரு தடவை முஹம்மத் இங்கு தொழுவதை நான் பார்த்தால் அவரின் முகத்தில் காலை வைத்து மிதித்து விடுவேன்
என்றான். மற்றொரு தடவை நபி ஸல் அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள் முகத்தில் காலை வைப்பதற்கு அபூஜஹல் பெருமானாரை நோக்கி நகர்ந்தான். பெருமானாரை நெருங்கியபோது ஏதோ ஒன்றை கண்டு பயந்து நடுங்கியவாறு திரும்பினான். ஏன் உன் சபத்த்தை நிறைவேற்றாமல்
திரும்பி விட்டாய் என நண்பர்கள் கேட்டார்கள். அபூ ஜஹ்ல் சொன்னான்
. நான் அவரை நெருங்கிய போது பெரிய நெருப்புக்குளி அங்கே இருந்த்து அவரை நெருங்க விடாமல் தடுத்து விட்ட்து
என்றான்.
· அவுரங்கசீப் ஒரு யுத்தகளத்தில் ஒரு யானையின் நிழலில் தொழுது கொண்டிருந்தார் எதிரிப்படைகளின் அரசன் அந்த காட்சியை பார்த்துவிட்டு இவரிடத்தில் நாம் ஜெயிக்க முடியாது என்று திரும்பிச் சென்றார் என்று இந்திய வரலாறு சொல்லுகிறது
நம் வாழ்கையில் அருவப்பான செயல்கள் இருக்கும் எனில்
நிலையான தொழுகை அந்த அருவருப்பை
கலைந்து விடும்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு நபித் தோழரைப் பற்றி பலரும் குறை கூறினார்கள். இவர் தொழுகிறார் அதே நேரத்தில் எல்லா தவறுகளையும் செய்கிறார் என்றார்கள். அதற்கு பெருமானார் (ஸல்) அவர்கள் ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்கள் “ தொழுகை அவற்றை தடுத்துவிடும்.”
· தொழுகையை உத்தரவிடுகிற எந்த இடத்திலும் தொழுங்கள் என்று அல்லாஹ் கூறுவதில்லை. அகிமிஸ்ஸலாத – தொழுகையை நிலை நிறுத்துங்கள் என்றே கூறியுள்ளான்.
· தொழுகை விசயத்தில் நமது கடமை அதை நிலை நிறுத்துவதாகும்.
· நிலை நிறுத்துவது என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு.
· ஒன்று முழுமையாக தொழுங்கள் என்பது , இன்னொரு பொருள் நிலையாக தொழுங்கள் என்பது.
அர்த்த முள்ள வாழ்க்கைக்குச் சொந்தக் காரர்கள் தொழுகையுடைய சட்டங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். . எது பர்ளு எது சுன்னத் என்பதை புரிந்து கொண்டிருக்க வேண்டு, எது தொழுகையை முறிக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் . ஷாபி மத்ஹபின் சட்டப் படி தொழுகையில் பாத்திகா சூராவை சரியான உச்சரிப்புடன் ஓதத்தெரியாவிட்டால் தொழுகை செல்லாது. எனது தொழுகை சரியான தொழுகை என்பது புத்திசாலிகளின் ஒரு முக்கிய இலக்காக இருக்க வேண்டும். அடுத்த்தாக நிலையான தொழுகையாளி என்ற அந்தஸ்தை பெற முயல வேண்டும்.
தாஜ்மஹாலை கட்டி முடித்த ஷாஜகான் அங்கு முதன் முதலாக தொழ வைப்பதற்கு பருவ வயதை அடைந்த்தில் இருந்து யார் ஒரு தொழுகையை தவற விட வில்லையோ அவர் வரட்டும் என்றார். யாருமே முன்வரவில்லை . அப்போது போது எனக்கு அந்த தகுதி யிருக்கிறது என்று சொல்லி ஷாஜஹானே தொழுவைத்தார் என்று வரலாறு கூறுகிறது. பிரம்மாண்டமான பள்ளிவாசலைக் கட்டியதை விட அவருடைய இந்த தகுதி பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது.
நன்மை தீமைய எடுத்துரைத்தல்
அறிவார்த்தமாக வாழ நினைக்கிற யாரும் நல்ல விஷயங்களை பிறருக்கு சொல்வதில் தயக்கம் காட்டக்கூடாது. உங்கள் குடும்பம் , உங்களது பணியாளர்கள். உங்களது உறவுகள் எதுவும் உங்களுடையது என்ற அக்கறை இந்த செயலின் மூலமே உறுதிப் படுகிறது.
பெருமானார் அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகைக்காக வீட்டிலிருந்து வெளியேறுகிற போது பாத்திமா ரலி அவர்களின் வீட்டின கதவைத் தட்டி தொழுகைக்கு வாருங்கள் என்று அழைத்து விட்டு செல்வார்கள் . என் செல்ல மக்ளுக்கு இந்த நன்மை தவறிப் போய்விடக்
கூடாது என்ற எண்ணமே அதற்கு காரணம் .
தொழுகை, குர்ஆன் ஓதுதல், பெரியவர்களுக்கு மரியாதை செய்தல் ஆகிய நன்மையின் அம்சங்கள் எதிலும்
நல்லதை சொல்ல தயக்கம் கூடாது. நம்மிடம் நன்மை இருக்கிறத்
என்பதற்கான அத்தாட்சி இது.
உமர் ரலி அவர்கள் ஆட்சியில் இருக்கிற போது ஒரு மனிதர் எழுந்து உமரே நீர் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்றார். அருகில் இருந்தவர்கள் கோபத்தோடு அவரை பிடிக்க சென்றார்கள். உமர் ரலி அவர்கள் அதை தடுத்து , “அவரை விடுங்கள் இப்படி நீங்கள் எனக்கு உபதேசம் செய்யாவிட்டால் உங்களிடத்தில் எந்த நன்மையும் இல்லை அதை நான் கேட்டுக் கொள்ளாவிட்டால் என்னிடம் எந்த நன்மையும் இல்லை என்றார்கள் .
இதற்கு அடுத்த முக்கிய கடமை தீமையை தடுத்தல்.
தீமையை கண்டு காணாமல் சென்றுவிடுவது முஃமின்களுக்கு அழகல்ல
பெருமானார் சொன்னார்கள் “ நீங்கள் தீமையை பார்த்தால் கையால் தடுங்கள் அல்லது நாவால் தடுங்கள் அல்லது அது தடுக்கப்பட வேண்டும் என்று மனதளவில் நினைத்துக்கொள்ளுங்கள்
மர்வான் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக இருந்த போது பெருநாள் தொழுக வந்தார் முதலில் தொழுகை பிறகு குத்பா வழக்கத்திற்கு மாற்றமாக முதலில் குத்பா ஓத தொடங்கினார். அப்போது அங்கிருந்த ஒரு மனிதர் “முதலில் தொழுகைதான்
முறையை மாற்றாதீர் இதுதான் பெருமானார் கற்றுக் கொடுத்த வழக்கம் “ என்று சொன்னார் . பேர்ரசர் மர்வான் தனது செயலை திருத்திக் கொண்டார்.
தீமைகளை தடுக்கும்
உள்ளத்தை பெறுகிற போது சாமாணியர்களும் அரசர்களுக்கு உத்தரவிட முடியும்.
பொறுமை
பொறுமை ஞான வாழ்வின் இன்னொரு முக்கிய அடையாளமாகும். அவசரப் படுதல் அல்லது ஆத்திரப்படுதல் கோபப்படுதல் ஆகிய குணங்கள் மடமையின் அடையாளங்களாகும். அவை வாழ்கையை மேலும் மேலும் சிரமத்திற்குள்ளாக்கும் .
பொருமை இருந்தால் வாழ்க்கையில் எல்லாம் வந்து சேரும்
திருக்குர்ஆன் சொல்கிறது. அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்
பொறுமைக்கு இதை விட வேறு பலன் தேவையில்லை.
அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக
ReplyDeleteஅருமையான பதிவு