ரமலான் மாதம் குறித்து திருக்குர் ஆன் ஒரே ஒரு வசனத்தில் மட்டுமே பேசுகிறது.
பகரா அத்தியாயத்தின் 185 வசனம் அது.
شَهْرُ رَمَضَانَ الَّذِيَ أُنزِلَ فِيهِ الْقُرْآنُ
هُدًى لِّلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَان".
அவர்கள் எல்லோருக்கும் திருக்குர் ஆனின் ஒரு வசனம் போதும்.
ثَانِیَ
اثْنَیْنِ اِذْ هُمَا فِی الْغَارِ
பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்த உலகம் அவர்களை சொந்த
ஊரை விட்டு விரட்டியது. உயிர்வாழ்வதையே கேள்விக்குள்ளாக்கியிருந்தது, எந்த நிமிடத்திலும்
எதுவும் நடக்கலாம் என்று சூழ்நிலை இருந்தது. தப்பித்து ஓட வழியில்லாத குகைக்குள்ளே
இரண்டுபேராக மட்டுமே எஞ்சியிருந்தார்கள்.
இவ்வாறு திருக்குர்
ஆனின் 77439 வார்த்தைகளும் அதிலுள்ள 323671 எழுத்துக்களும் மனித சமூகத்திற்கு
கிடைத்த மகத்தான வழிகாட்டுதல்களாகும்.
அதுவே ரமலான் மாதத்தின் பெருஞ்சிறப்பு.
ரமலானின் அருமையை பெருமைகளை பெருமானார் (ஸல்) அவர்களே ஏரளமாக நமக்கு
எடுத்துக் கூறியுள்ளார்கள்.
ரமலானைப் பற்றி பேசிய அளவுக்கு பெருமானார் (ஸல்) அவர்கள் வேறு எதைப்பற்றியும்
அதிகமாக பேசியதில்லை.
சான்றுக்கு ஒன்று.
حديث أبي هريرة رضي الله عنه: قال: قال رسول الله صلى
الله عليه وسلم: (إذا كان أول ليلة من رمضان صُفِّدَت الشياطين ومردة
الجن، وغُلِّقَت أبواب النار، فلم يفتح منها باب، وفتحت أبواب الجنة فلم يغلق منها
باب، وينادي مناد كل ليلة يا باغي الخير أقبل، ويا باغي الشر أقصر، ولله عتقاء من
النار وذلك كل ليلة) رواه البخاري
மிகச் சுருக்கமாக ஒன்று நிச்சயம்.
மற்ற நாட்களை விட ரமலான் மாத்த்தின் ஒவ்வொரு பொழுதையும் பெருமானார்
(ஸல்) அவர்கள் வணக்க வழிபாடுகளால் நிறைத்தார்கள்.
என்வே இந்த ரமலானை பெருமானாரின் சுன்னத்துக்களின் அடிப்படையில் அணுகுவோம்
என்று நாம் உறுதியேற்போம்.
இங்கு நமது அடிப்படை உணர்வு எப்படி இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட
ஒரு சின்ன நிகழ்வை எடுத்துக் கூறுகிறேன்.
அல்லாமா துல்ஃபிகார் சாஹிப் இதை குறிப்பிடுகிறார்கள்.
ஒரு பெரியவர் மினாவில் கையில் பையுடன் நடந்து கொண்டிருந்தார். ஒரு
இளைஞன் அதை திருடிக் கொண்டு ஓடினான். ஹஜ்ஜின் நீண்ட பயணத்திற்காக வைத்திருந்த அத்தனையும்
நிமிடத்தில் பறிபோய்விட்டது.
ஹஜ்ஜின் அடையாளங்களாக இருக்கிற புனித தலங்கள் மிகவும் எச்சரிக்கையாக
இருக்க வேண்டியவை; அங்கு குற்றங்களுக்கான தண்டனைகளை உடனுக்குடன் கிடைத்து விடும் என்பது
பலருடைய அனுபவமாகும்.
பெரியவரின் பையை திருடிக் கொண்டு ஓடியவனின் கண் பார்வை அவன் ஓடி
முடிப்பதற்குள்ளாக பறிபோனது. பதறினான் , கதறினான். திருடிக் கொண்டு வந்த பையை உரியவரிடம்
ஒப்படைத்து விட கெஞ்சினான். அவனைச் சார்ந்தவர்கள் பையை தொலைத்தவரை தேடி அந்த பையை ஒப்படைத்து
விட்டு பறித்துச் சென்ற இளைஞனை மன்னித்து விடுமாறு கோரினர்.
அப்போது அந்த பெரியவர். நான் அந்த இளைஞனை அப்போதே மன்னித்து விட்டேனே என்று சொன்னார்
!
அங்கிருந்தவர்கள் அவரிடம் ஆச்சரியத்தோடு இவ்வளவு பெரிய தவறை செய்திருக்கிறான்.
அவனை அப்போதே மன்னித்து விட்டேன் என்கிறீர்களே அதெப்படி என்று கேட்டனர்.
அதற்கவர் கூறினார். முஹம்மது நபி (ஸ்ல்) அவர்கள் நாளை மஹ்ஷரில் என்
சமூகத்தில் பாதிப்புக்குள்ளான எவருக்கும் நீதி பெற்றுக் கொடுத்த பிறகுதான் நான் சொற்கம்
செல்வேன் என்று கூறீயிருக்கிறார்கள். அதில் என் வழக்கும் ஒன்றாகி எனக்காக அந்த அளவு
நேரம் பெருமானார் (ஸல்) அவர்கள் காத்திருக்க கூடாது என நான் நினைத்தேன். எனவே தான்
நான் அந்த இளைஞனை அப்போதே மன்னித்தேன் என்றார்.
முஹம்மது நபி (ஸல்) என்ற வார்த்தை எல்லா அமல்களுக்கும் நம்மை தூண்டும்
சொல்லாக நாம் முன்னிறுத்தோம்.
அல்லாஹ் நமது ரமலானை அங்கீகரிப்பானக!
பிறை விசயத்தில், தராவீஹ் தொழுகை விசயத்தில், பயான்களை செவியேற்பதில,
ஜகாத் சதகத்துல் பித்ரு விசயத்தில் குழப்பவாதிகளை
தவிர்ப்போம். சுன்னத் ஜமாத்தின் ஆலிம்களின் வழியை பின் தொடர்வோம்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment