இது பாவமன்னிப்பு கேட்பதற்கான காலம்.
இப்புனிதமான காலத்தில் நாம் பாவங்களில் மிகப் பெரிய பாவமாக திருக்குர் ஆன் குறிப்பிடும்
ஒன்றை பற்றி இன்று சிந்திக்கிறோம்.
وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ ۚ
குழப்பம் செய்வது
கொலை செய்வதை விட கொடியது.
எந்த இடத்திலும்
எப்போதும் முஸ்லிம்களான நாம் நினைவில் வைத்திருக்கிற வேண்டிய ஒரு திருவாக்கியம் இது.
குழப்பம் செய்வது
மிகப்பெரிய பாவம் என்பதால் திருக்குர் ஆன் நமக்கு அறிவுறுத்துகிறது.
وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ
“பூமியில் குழப்பம் செய்து திரியாதீர்
நாம்
சிறப்பான ஒரு மனிதாக வாழ
அசைப்பட்டால் அதற்கு அவசியமாக நாம்
கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் இது
நாம்
எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு
பிரதான உறுதி மொழி இது.
நம்மால் இந்த உலகில் ஒரு சிறு குழப்பமும் ஏற்பட்டு விடக் கூடாது
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
முஸ்லிம் சமுதாயம் குழப்பங்களை கண்டு அஞ்சி நடுங்க வேண்டிய சமுதாயம் அதற்கான
பலத்த எச்சரிக்கைகளை பெருமானார் (ஸல்) அவர்கள் செய்தி.ருக்கிறார்கள்
يكونُ بينَ يدَيِ
السَّاعةِ فِتنًا كأنَّها قِطعُ
اللَّيلِ المُظلِمِ، يُصبِحُ الرَّجُلُ فيها مؤمنًا، ثُمَّ يُمسي كافرًا، ويُمسي
مؤمنًا، ثُمَّ يُصبِحُ كافرًا، يبيعُ أقوامٌ دينَهم بعرضٍ منَ الدُّنيا
الراوي
: أنس بن مالك
குழப்பம் செய்கிற இயல்பின் மிக மோசமான விளைவு என்ண வெனில் ஈமான் - . பக்தி பறிபோய்விடும்.
கடந்த வாரம் நமது நாட்டில் இராம நவமி கொண்டாடப்பட்டது. இராமரை கொண்டாட வேண்டிய
இந்துதுதுவ அமைப்பைச் சார்ந்தவர்களில் சிலர் என்ன செய்தார்கள் ?
பள்ளிவாசல்களை அவமதித்தார்கள். தொழுகையை தடை செய்தார்கள். தொழுகிறவர்களுக்கு
இடையூறு செய்தார்கள். முஸ்லிம்களை துன்புறுத்தினார்கள். தர்காக்களுக்கு முன்பு நின்று
கொண்டு இந்துத்துவ கோஷங்களை எழுப்பினார்கள்.
மத்திய அரசு இத்தகையோர் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை. சில இடங்களில்
காவல்துறை இத்தகையோருக்கு துணையாக இருந்தது.
அடுத்த நாள் ஊடகங்களில் வெளியாகிய மிகவும் பிரபலம் அடைந்த மீம்ஸ்களை பார்த்திருப்பீர்கள்.
ஒரு மீம்ஸில் ராமர் சொல்கிறார்! பக்தர்களா என்னுடைய நாளில் என்னுடைய கோயிலுக்கு
வராமல் ஏனடா அல்லா கோயிலுக்கு போகிறீர்கள்
இதுதான் எதார்த்தம் எங்கே குழப்பம் செய்கிற எண்ணம் வருகிறதோ அங்கே பக்தி இருக்காது.
நன்மையும் நடக்காது. அவ்வாறு நடந்து கொள்வோர் நல்லவர்களாகவும் இருக்க மாட்டார்கள்.
அதனால் தான் அல்லாஹ்வை வணங்குங்கள் கட்டளைக்கு அடுத்து பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்
என்று கூறுகிற்து.
ادْعُوا رَبَّكُمْ تَضَرُّعًا وَخُفْيَةً ۚ إِنَّهُ لَا
يُحِبُّ الْمُعْتَدِينَ (55) وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ
إِصْلَاحِهَا وَادْعُوهُ خَوْفًا وَطَمَعًا ۚ
குழப்பம் செய்வதை தவிர்த்துக் கொள்வது ஈமானின் பிரதான கடமைகளில் ஒன்றாகும்.
இந்தப் புனிதமிகு ரமலானில் நாம் உறுதி ஏற்போம்.
நான் எந்த இட்த்திலிமும் எந்த சந்தர்ப்பத்திலும் குழப்பம் செய்கிற காரியத்தில்
ஈடுபட மாட்டேன் என்று உறுதி ஏற்போம்.
இன்றைய நாம் வாழ்கிற சூழலில் எங்கும் எதிலும் குழப்பங்களே தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிற
நிலையில் நாம் குழப்பம் செய்ய மாட்டோம் என்று உறுதி ஏற்பது அளப்பெரிய நன்மையை தரும்.
நாம் செய்யக்கூடாது குழப்பங்கள்
1.
ஷிர்க்
நமது ஈமானில் குழப்பத்தை ஏற்படுத்தும் எந்த செயலையும் நாம் செய்துவிடக் கூடாது
அதனால் ஷிர்கின் சாயலில் அமைந்த எந்த காரியத்தையும் செய்து விடவோ பேசிவிடவோ
கூடாது.
الَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ
مِيثَاقِهِ وَيَقْطَعُونَ مَا أَمَرَ اللَّهُ بِهِ أَنْ يُوصَلَ وَيُفْسِدُونَ فِي
الْأَرْضِ أُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ ﴾ [البقرة: ٢٧]
உன்னைச் சொல்லிக் குற்றமில்ல. என்னைச் சொல்லி குற்றமில்லை என்ற சினிமா பாடலை
பாடினால் கூட கடைசியில் ஷிர்க் வந்து சேர்ந்து விட வாய்ப்பிருக்கிறது.
ஜோஸீயம் – சகுணம் பாத்தல் வாஸ்து போன்ற
நமது ஒவ்வொரு பேச்சிலும் செயலிலும் ஷிர்க வந்து விடக் கூடாது என்று என்று நாம்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
2.
வஞ்சகம்
வஞ்சகமான பேச்சும் செயலும் பெரும் குழப்பச் செயலாகும்.
மதீனாவிலிருந்த நயவஞ்சகள் பெருமானாரிடம் வந்து ராஇனா என்று சொல்வார்கள்.
எங்களை கவனியுங்கள் என்று அதற்கு பொருள். ஆனால் அவர்கள் உச்சரிக்கும் போது கொஞ்சம்
இழுத்து ராயீனா என்று கூறுவார்கள். எங்களுடைய ஆடுகளை மேய்ப்பவரே என்று அதற்கு பொருள்
வரும். இந்த தீய எண்னத்தை தெரியாமல் சஹாபாக்களில் சிலரும் கூட அப்படி சொல்ல ஆரம்பித்தார்கள்.
அப்போதுதான் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வஞ்சகர்களின் திட்டத்தை புரியவைத்தான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقُولُوا
رَاعِنَا وَقُولُوا انظُرْنَا
நாம் நம்மை நாடி வருகிறவர்களிடம் என்ன பேசுகிறோமோ எப்படி நடந்து கொள்கிறோமோ அதில் வஞ்சகம் இல்லாதவாறு எதிரில் இருப்பவர்கள் நம்மிடம் எந்த நம்பிக்கையில் இருப்பார்களோ
அதே நம்பிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும்
பேச்சு,
தொழில் – வியாபாரம் – கொடுக்கல் வாங்கல். உறவு கொள்ளுதல் அனைத்திலும் இந்த சுத்த்தை
கடைபிடிக்க வேண்டும். இல்லை எனில் அதுவும் பூமியில் குழப்பம் செய்வதேயாகும்.
அல்லாஹ்
நம்மை பாதுகாப்பானாக!
3 பாவங்கள்
திருட்டு கொளை – கொள்ளை மது அருந்துதல் – ஏமாற்றுதல் சூதாடுதல் போன்ற அனைத்து
பாவங்களும் கூட குழப்பம் செய்வதேயாகும்.
4 தேவையற்ற ஆடம்பரமும் வீட்டில் வீண்விரயம் செய்வதுக் கூட குழப்பம்
செய்வதாகும்.
فعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ:
قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «إِذَا أَنْفَقَت الْمَرْأَةُ مِنْ
طَعَامِ بَيْتِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا بِمَا أَنْفَقَتْ
وَلِزَوْجِهَا أَجْرُهُ بِمَا كَسَبَ وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ لَا يَنْقُصُ
بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ شَيْئًا
رواه جابر بن عبد الله رضي الله عنهما عن رسول الله
صلى الله عليه وسلم أنَّه قال: «أمسِكُوا عَلَيْكُم أَمْوَالَكُم ولا
تُفْسِدُوْهَا..» وفي الحديث: حضٌّ على المحافظة
5 குடும்பத்திலும் வியாபாரத்திலும் குழப்பம் செய்வதில் மற்றொரு முறை
வியாபாரத்தில் சம்பந்தப்பேசுவதில் குழப்பம்
செய்வது,
عن عبدِ اللهِ بنِ عُمَرَ رَضِيَ الله عنهما قال: ((نهَى النَّبيُّ صلَّى اللهُ علَيه وسلَّم أن يَبيعَ
بَعضُكم على بيْعِ بَعضٍ، ولا يَخطُبَ الرَّجلُ على خِطبَةِ أخيه، حتَّى يَترُكَ
الخاطِبُ قَبلَه أو يَأذَنَ له الخاطِبُ
நமக்குரியதில் அல்லாஹ் பரக்கத்தை வைத்திருப்பான் அடுத்தவருக்குரியதை நமதாக்கி கொள்ள
முயற்சிப்பதும் குழப்பம் செய்வதாகும்.
இந்தக் குழப்பம் இப்போது நமது சமூகத்தில் சகஜமாக நடக்கிறது. அல்லாஹ் நம்மை பாதுகாக்கட்டும்
.நாம் தவிர்த்துக் கொள்வோமாக!
6 ஒரு நிர்வாகத்திற்குள் தலைமைக்கு கட்டுப்படாமையும் குழப்பமே!
(அது குடும்பமாகவோ
அல்லது ஜமாத் போன்ற சமூக அமைப்பாகவோ – வியாபர நிருவனமாகவோ இருக்கலாம்.)
நண்பர்களே! நம்மில்
ஒவ்வொருவருக்கும் கருத்துச் சொல்ல உரிமை இருக்கிறது. ஆனால் முடிவு எடுக்கும் அதிகாரம்
தலைமையுடையது.
وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ என்று கூறுகிற
அல்லாஹ் فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ என்று
முடிவின் அதிகாரத்தை தலைவரிடமே கொடுத்துள்ளான்
அதனால் ஆலோசனைகள்
கூறுவோம். அதை ஏற்க வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது. அது குழப்பம் செய்வதாகிவிடும்.
நாம் சீர்திருத்தவாதியாக
இருந்தாலும் சமூக கட்டுப்பாட்டை உடைக்கும் போது அது குழப்பமாகிவிடும்.
இதைதான் அல்லாஹ்
மிக தெளிவாக கூறுகிறான்.
وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا
إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ (11) أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَٰكِن
لَّا يَشْعُرُونَ
இன்று
நம் சமூகத்தில் எல்லா இட்த்திலும் எனக்கென்ன
மரியாதை என்று கேள்வி எழுப்பி
பிரச்சனை செய்வது ஏரளாம நடக்கிறது.
இன்ஷா அல்லாஹ்
நாம் இனி அவ்வறு எந்த பிரச்சினையையும் செய்யக் கூடாது என்று உறுதி ஏற்போம். குழப்பத்தை
தவிர்ப்போம்.
7 நம்மில் சிலபேர் அவர்களிடம் உள்ள செல்வத்தாலும் அதிகாரத்தினாலும் நற்செயல்களுக்கும்
நல்லோர்களுக்கும் எதிராக நடந்து கொள்வார்கள். சவால் விடுவார்கள். அதுவும் குழப்பமே!
மூஸா அலை அவர்களை எதிர்த்து அன்றைய பெரும் பணக்காரணான காரூன் அவ்வாறு நடந்து கொண்டான்.
அதைப் பற்றி திருக்குர் ஆன் கூறும் போது நீ உனது செல்வத்தால் குழப்பம் செய்யாதே என்று
கூறுகிறது
قَالَ لَهُ قَوْمُهُ لَا تَفْرَحْ إِنَّ اللَّهَ لَا
يُحِبُّ الْفَرِحِينَ * وَابْتَغِ فِيمَا آَتَاكَ اللَّهُ الدَّارَ الْآَخِرَةَ
وَلَا تَنْسَ نَصِيبَكَ مِنَ الدُّنْيَا وَأَحْسِنْ كَمَا أَحْسَنَ اللَّهُ إِلَيْكَ
وَلَا تَبْغِ الْفَسَادَ فِي الْأَرْضِ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْمُفْسِدِينَ
8 மக்களிடைய சண்டையை மூட்டிவிடுகிற – பகைமைய வளர்க்கிற காரியங்களை செய்வதும் குழப்பம்
செய்வதேயாகும்.
காட்டிக் கொடுப்பது, கோள் சொல்வது- ஒரு பக்க சார்பாக நடந்து கொள்வது ஆகியவை சமூக
குழங்களில் அடங்கும்
فعَنْ أَسْمَاءَ بِنْتِ
يَزِيدَ رضي الله عنها أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ: «أَلَا
أُخْبِرُكُمْ بِشِرَارِكُمْ؟ الْمَشَّاءُونَ بِالنَّمِيمَةِ، الْمُفْسِدُونَ
بَيْنَ الْأَحِبَّةِ
9 சக மனிதரின் மானத்தை பங்கப்படுத்துவது. அச்சுறுத்துவது , ஆயுத்த்தை காட்டி மிரட்டுவது ஆகியவையும் பூமியில் குழப்பம் செய்யும் காரியங்களாகும்
பணம். அரசியல் அதிகாரம், அல்லது ஆள்பலம் ஆகிய எதை வைத்தும் இத்தகைய குழப்பத்தை
நாம் செய்து விடக் கூடாது.
பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
لَزَوَالُ الدُّنْيَا أَهْوَنُ عَلَى اللَّهِ
مِنْ قَتْلِ رَجُلٍ مُسْلِمٍ»
«لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُرَوِّعَ
مُسْلِمًا
مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلاَحَ فَلَيْسَ
مِنَّا» رواه البخاري ومسلم
10 பொது அமைதியை குலைக்கும் எந்த செயலும் குழப்பம் செய்வதேயேகும்.
கியூ வில் நியாயமின்றி முன்னே செல்வது, நீர் நிலைகளை ஆக்ரமிப்பது, இரண்டு குடம்
தண்ணீர் பிடிக்க வேண்டிய இட்த்தில் நாலு குடம் பிடிப்பது போன்ற பொதுப் பயன்பாட்டிற்குரிய
இடங்களில் முறையற்ற நாட்டாண்மை செய்வது ஆகியவை அனைத்தும் பூமியில் குழப்பம் செய்வதேயேகும்.
சில சகோதர்ர்கள் மஹல்லாவின் பிரச்சனையை ஜும் ஆ நேரத்தில் சொல்வார்கள். அது. தொழுது விட்டு செல்பவர்கள் அனைவரின் அமைதியையும்
கெடுத்து விடும். ஜும் ஆவின் கம்பீரத்தையும் கெடுக்கும்.
இது போல இன்னும் பல இருக்கின்றன. நாம் இந்தப் புனித மிகு ரமலானில் தெளிவாக ஒரு
உறுதி மொழியை நான் குழப்பம் செய்ய மாட்டேன் என்ற ஒரு உறுதி மொழியை ஏற்போம்.
ஏனெனில் وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ﴾
நமக்கு சொர்க்கம்
வேண்டும் எனில்
تِلْكَ الدَّارُ الآخِرَةُ نَجْعَلُهَا
لِلَّذِينَ لا يُرِيدُونَ عُلُوًّا فِي الأَرْضِ وَلا فَسَادًا وَالْعَاقِبَةُ
لِلْمُتَّقِينَ
பள்ளிவாசலில்
குழப்பம் செய்ய மாட்டேன்
பள்ளிக்கூடங்களில் குழப்பம் செய்ய மாட்டேன்
வியாபாரத்தில் குழப்பம் செய்ய மாட்டேன்
குடும்பத்தில் குழப்பம் செய்ய மாட்டேன்
உறவுகளுக்குள் குழப்பம் செய்ய மாட்டேன்
சமூக அமைப்புக்களில் குழப்பம் செய்ய மாட்டேன்
சமுதாயத வெளியில் குழப்பம் செய்ய மாட்டேன்
அரசியலில் குழப்பம் செய்ய செய்ய மாட்டேன்
அறிவு பணம் பதவி எது கொண்டும் குழப்பம் செய்ய மாட்டேன்
என ஒரு உறுதி மொழியை நாம் எடுத்துக் கொண்டால் ரமலானில் சீதேவிகள் கூட்டத்த்டில்
நாமும் ஒருவராகி விடுவோம்.
அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!
No comments:
Post a Comment