ரம்லானுடைய இந்த ஜும்ஆவில் ஒரு முக்கியமான கருத்தை உங்களது கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
தமிழ்நாட்டிலும் நமக்கு பக்கத்து மாநிலமான கேரளாவிலும் முஸ்லிம் சமூகத்தை உலுக்கி வருகிற ஒரு பெரும் பிரச்சனை முஸ்லிம்களில் சிலர் இஸ்லாமிய கொள்கைகளுக்கு எதிராகவும் சட்டங்களுக்கு எதிராகவும் பகிரங்கமாக கருத்து பேசுவதும் தங்களை இஸ்லாமை துறந்தவர்கள் என்று அறிவித்துக் கொள்வதுமாகும்
அல்லாஹ் நம்மையும்
நமது சந்த்திகளையும் பாதுகாத்தருள்வானக!
கொரோனோ கால கட்ட்த்தில்
வளைகுடாவில் வசித்து வந்த கேரளாவைச் சார்ந்த அப்துல் காதிர் புதியங்காடி என்பவர் சமூக
ஊடகங்களில் மத்த்திற்கு எதிரான கருத்துக்களை
பதிவிட்டார். பலரும் அங்குள்ள காவல் துறையில் இது பற்றி முறையிடவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதே போன்ற குற்றத்திற்காக
சைய்யத் முஹம்மது ஸீஸான் என்பவருக்கு பாகிஸ்தானில் தண்டனை வழங்க்கப்பட்டது.
நமது நாட்டில்
பேச்சு சுதந்திரம் என்ற பெயரிலும் இஸ்லாமின் மீது வெறுப்புக்காட்டுதல் என்ற வகையிலும்
இது போல கருத்துப் பேசுகிறவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இத்தகையோர் உருவாவதற்கு
என்ன காரணம்.
1.
பொதுவாக வளர்ந்துள்ள சுதந்திர சிந்தனை – எதற்கும் கட்டுப்பட
மாட்டோம் என்கிற உணர்வு – புரட்சியாக கருதப்படுகிறது.
2.
மதச் சிந்தனைக்கு அப்பாற்பட்ட குழு உணர்வு- உதாரணத்திற்கு தமிழ்
தேசிய உணர்வு – தமிழர் என்பதே பெரிது- தமிழரின் கலாச்சாரத்தை பின்பற்றுவோம் என்ற சிந்தனையை
தருகிறது. அதில் முரண்டுபடுகீற மதத்தை புறக்கணிக்கிறது.
3.
பொது மானுட உணர் வு
என்ற பிரச்சாரம். மனிதர்களாக வாழ்வோம். இதிலென்ன மத வித்தியாசங்கள் என்பது போன்ற கோஷங்கள்.
4.
விளம்பர மோகம் – இஸ்லாமிற்கு எதிராக கருத்துச் சொல்லும் போது
– அதுவும் முஸ்லிமாக இருந்து கொண்டு கருத்துச் சொல்லும் போது கிடைக்கிற விளம்பரம்,
மற்றும் வசதிகள்.
இது போன்ற சூழலில்
நாம் நமது ஈமானையும் ஹிதாயத்தையும் பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்தியாக வேண்டும்.
புனிதம் மிக்க
இந்த ரமலானில் இது பற்றிய நமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்வோம். அல்லாஹ் பரிபூரண
ஈமானை நம் அனைவருக்கும் வழங்கியருள்வானாக!
இதற்காகத்தான்
ஒரு நாளைக்கு குறைந்த்து பதினேழு தடவை இஹ்தினஸ்ஸிராதல் முஸ்தகீம் என்று கேட்கிறோம்.
இதன் பொருள் யா
அல்லாஹ் எங்களை ஹிதாயத்தில் அதாவது சத்திய இஸ்லாத்தில் நிலைக்கச் செய்வாயாக என்பதாகும்.
நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். ஈமானை ஏற்றுக் கொண்ட பிறகும் அதை பறிக்கிற குழப்பங்கள்
பலது உண்டாகும்
قَالَ أبي موسى الأشعري
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ بَيْنَ أَيْدِيكُمْ فِتَنًا كَقِطَعِ اللَّيْلِ
الْمُظْلِمِ يُصْبِحُ الرَّجُلُ فِيهَا مُؤْمِنًا وَيُمْسِي كَافِرًا
وَيُمْسِي مُؤْمِنًا وَيُصْبِحُ كَافِرًا الْقَاعِدُ فِيهَا خَيْرٌ مِنْ
الْقَائِمِ وَالْقَائِمُ فِيهَا خَيْرٌ مِنْ الْمَاشِي وَالْمَاشِي فِيهَا خَيْرٌ
مِنْ السَّاعِي قَالُوا فَمَا تَأْمُرُنَا قَالَ كُونُوا أَحْلَاسَ
بُيُوتِكُمْ " (رواه : أحمد وأبو داود)
أَحْلَاسَ குதிரையின் மேலிக்கிற இருக்கை.
அதன் பெருள் வீட்டை பற்றி இருந்து கொள்ளுங்கள் என்பதாகும்.
الراوي
: أنس بن مالك | المحدث
: البخاري |
-أنَّ أعرابيًّا بايعَ النَّبيَّ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ علَى الإسلامِ فأصابَهُ وعَكٌ بالمدينةِ فَجاءَ الأعرابيُّ، إلى رسولِ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ، فقالَ أقِلني بيعَتي، فأبى رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ، فَخرجَ الأعرابيُّ ثمَّ جاءَهُ فقالَ: أقِلني بيعتي، فأبَى، فخرجَ الأعرابيُّ، فقالَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليهِ وسلَّمَ: إنَّها المدينةُ كالكيرِ تَنفي خبثَها وتُنصِّعُ طيِّبَها
الراوي
: جابر بن عبدالله المصدر
: صحيح الترمذي
அதை விட அதிக
எண்ணிக்கையில் மக்கள் இஸ்லாமை நோக்கி விரைந்து வருகிறார்கள்
இஸ்லாத்தை ஏற்றுக்
கொள்வதும் மறுப்பதும் அவரவரது விருப்பம்.
யாரும் நிர்பந்தப்படுத்த
படக் கூடாது என்பது திருக்குர் ஆனின் பிரகடணமாகும்
لَا إِكْرَاهَ فِي الدِّينِ ۖ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ ۚ فَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَىٰ لَا انفِصَامَ لَهَا ۗ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ
நாம் இஸ்லாமை உணர்ந்து
தெளிந்து ஏற்றுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
நாம் சிந்திக்க
வேண்டும்.
இந்த உலகில் நமக்கு
சிறப்பான ஒரு கொள்கை வழியை – வழிபாட்டு முறையை – கலாச்சர மரபுகளை சொல்லித்தருவதற்கு
இஸ்லால் அளவிற்கு வெற்றிகரமான ஒரு மார்க்கம் இருக்கிறதா என்பதை சிந்திக்க வேண்டும்.
நிச்சயம் கிடையாது.
பெருமானார் (ஸ்ல)
அவர்களை போல ஈருலகிலும் வெற்றி பெற வழிகாட்டும் ஒரு தலைவர் இந்த உலகில் வேறு யாரும்
உண்டா என்பதை விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டுச் சிந்திக்க வேண்டும்.
நியாயமாக சிந்தித்தால்
பெருமானார் (ஸல்) அவர்களைப் போன்ற வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழி காட்டிக் கொண்டிருக்கிற
ஒரு நல்ல சிறந்த தலைவர் வேறு எவரும் இல்லை என்பதை நாம் உணர்வோம்.
இப்படியாக இஸ்லாமிய
மார்க்கத்தின் அருமை பெருமையை உணர்ந்து நாம் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டுவிட்டால் மார்க்கத்திற்கு
முழுமையாக நாம் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.
திருக்குர் ஆன்
கூறுகிறது,
முஸ்லிமான பிறகு
இஸ்லாமிற்கு மாற்றாக கருத்துச் சொல்ல எந்த அதிகாரமும் முஸ்லிமுக்கு இல்லை.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا
قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ
أَمْرِهِمْ ۗ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا
(36)
·
வட்டி என்பதை எல்லா இடத்திலும் தவிர்க முடியாது,
பழங்கால வட்டி தான் தவிர்க்கப் பட வேண்டியது.
·
இஸ்லாத்தை மற்றவர்கள் தப்பாக புரிந்து கொள்ளாமல் இருக்க சில
மார்க்க சட்டங்களை மாற்றிக் கொள்ளலாம். உதாரணத்திற்கு பலதாரமணம்.
·
முஹம்மது நபி (ஸல்) அவர்களை எல்லா விதத்திலும் உயர்ந்தவராக கருத
வேண்டியதில்லை.
·
பெருமானார் (ஸல்) அவர்கள் பல பெண்களை திருமணம் செய்த்தை ஏற்றுக்
கொள்ள முடியாது, குறிப்பாக ஆயிஷா ரலி அவர்களை திருமணம் செய்த்தை
யூத மத்தில்
கடவுள்ளின் சில பெயர்களை மிக புனிதமானவை என்று வைத்திருக்கிறார்கள். அப்பெயர்களை எழுதி
விட்டு அழிப்பதை குற்றம் என்கிறார்கள்.
people
will be forgiven for every sin and blasphemy, but blasphemy against the Spirit
will not be forgiven
எனவே எல்லா மத்த்திலும் மத நிந்தனை செய்வது , அதாவது மதம் எதை புனிதமாக கருதுகிறதோ
அதை குறை பேசுவது வன்மையாக கண்டிக்கத்த்தாக இருக்கிறது. இஸ்லாமும் அப்படியே கூறுகிறது.
இது எதார்த்தமான ஒன்றாகும். ஒன்றை ஒப்புக் கொண்ட பிறகு அதற்கு கீழ் பணிந்தே ஆக
வேண்டும்.
மத்த்தை மீறுவது தனிப்பட்ட குற்றம் என்றால் மத்த்தின் நம்பிக்கையை பாழ்படுத்துவது-
நம்பிக்கை கொண்ட மக்களை இழிவுபடுத்துவது அல்லது மதத்தை இழிவு படுத்துவதன் மூலம் அதை
ஏற்றுக் கொணட கோடானு கோடி மக்களை புன்படுத்துவது மிகவும் வன்மையான குற்றமாகும்.
நம்முடைய நாட்டில் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இதை பலரும் ஆதரிக்கிறார்கள்.
உண்மையில் அது நியாயமானதல்ல்.
முஸ்லிம் சமூகத்தின்
தற்போதைய மிக முக்கியமான கடமை என்ன வெனில்
وَقَدْ نَزَّلَ عَلَيْكُمْ فِي الْكِتَابِ أَنْ
إِذَا سَمِعْتُمْ آيَاتِ اللّهِ يُكَفَرُ بِهَا وَيُسْتَهْزَأُ بِهَا فَلاَ
تَقْعُدُواْ مَعَهُمْ حَتَّى يَخُوضُواْ فِي حَدِيثٍ غَيْرِهِ إِنَّكُمْ إِذًا
مِّثْلُهُمْ إِنَّ اللّهَ جَامِعُ الْمُنَافِقِينَ وَالْكَافِرِينَ فِي جَهَنَّمَ
جَمِيعًا}[النساء:140]
பெருமானார்
(ஸல்) அவர்கள் கூறினார்கள்
மற்றொரு ஹதீஸ்
– குழப்ப கால நிலையை எச்சரிக்கிறது. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வை
ஊட்டுகிறது.
قالَ حُذَيْفَةُ
كُنَّا عِنْدَ عُمَرَ، فقالَ: أيُّكُمْ سَمِعَ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ يَذْكُرُ الفِتَنَ؟ فقالَ قوْمٌ: نَحْنُ سَمِعْناهُ، فقالَ: لَعَلَّكُمْ تَعْنُونَ فِتْنَةَ الرَّجُلِ في أهْلِهِ وجارِهِ؟ قالوا: أجَلْ، قالَ: تِلكَ تُكَفِّرُها الصَّلاةُ والصِّيامُ والصَّدَقَةُ، ولَكِنْ أيُّكُمْ سَمِعَ النبيَّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ يَذْكُرُ الَّتي تَمُوجُ مَوْجَ البَحْرِ؟ قالَ حُذَيْفَةُ: فأسْكَتَ القَوْمُ، فَقُلتُ: أنا، قالَ: أنْتَ لِلَّهِ أبُوكَ. قالَ حُذَيْفَةُ: سَمِعْتُ رَسولَ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ يقولُ: تُعْرَضُ الفِتَنُ علَى القُلُوبِ كالْحَصِيرِ عُودًا عُودًا، فأيُّ قَلْبٍ أُشْرِبَها، نُكِتَ فيه نُكْتَةٌ سَوْداءُ، وأَيُّ قَلْبٍ أنْكَرَها، نُكِتَ فيه نُكْتَةٌ بَيْضاءُ، حتَّى تَصِيرَ علَى قَلْبَيْنِ، علَى أبْيَضَ مِثْلِ الصَّفا فلا تَضُرُّهُ فِتْنَةٌ ما دامَتِ السَّمَواتُ والأرْضُ، والآخَرُ أسْوَدُ مُرْبادًّا كالْكُوزِ، مُجَخِّيًا لا يَعْرِفُ مَعْرُوفًا، ولا يُنْكِرُ مُنْكَرًا، إلَّا ما أُشْرِبَ مِن هَواهُ. رواه : مسلم )
பேச்சுக் கவர்ச்சி , அல்லது மொழி தேசிய அல்லது சுதந்திர சிந்தனை என்பது போன்ற மாயங்களில் மயங்கி விடக்கூடாது.
இத்தகைய நபர்கள்
மற்றும் ஊடகங்கள் குறித்து இளையவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்.
இது போன்ற தொனியிலான
கருத்து பரிமாற்றங்கள் ஏற்படும் எனில் சரியான எச்சரிக்கைகள் தரப்பட வேண்டும்.
கருத்துச் சிக்கல்களுக்கு
ஆளாகும் இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் தகுந்த கவுன்சிலிங்க் கிடைக்க முயற்சி
செய்ய வேண்டும்.
இதுமாதிரியானவர்களிடம்
கோபம் காட்டுவதை விட பரிதாபம் கொள்வதே சரியான உத்தியாகும்.
மதீனாவின் காய்ச்சலை
பொருத்துக் கொள்ள முடியாமல் ஒருவர் இஸ்லாமை விட்டு போகிறேன் என்கிறார். பெருமானார்
(ஸல்) அமைதியாக அதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனா ஒரு துருத்தியை போல கெட்டதை
நீக்கி நல்லதை வைத்துக் கொள்ளும் என்கிறார்கள். மதீனாவின் காய்ச்சலை தாங்கிக் கொள்ள
முடியாதவர்கள் மார்க்கத்தின் கட்டளைகளை எப்படி ஏற்றுச் செயல்படுவார்கள் என்ற தத்துவம்
அதில் அடங்கியிருக்கிறது.
ஆக பொறுமையான கவுன்சிலிங்க்
முயற்சிகளிலேயே நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
நமது இளவல்களில்
யாரேனும் இத்தகை கருத்துச் சிக்கல்களுக்கு ஆளாகியிருக்கிறார்களா என்பதை கண்காணிக்க
வேண்டும். அதற்கான அறிகுறிகள் தெரிய வருமெனில் தயக்கம் காட்டாமல் அவருக்கு விளக்கம்
தருவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும்.
அதையும் மீறிச்
சிலர் சென்று விடுகிற போது அல்லாஹ் அவர்களை கை விட்டு விட்டான் என்று பரிதாப்படுதும்
அவர்களுக்காக துஆ செய்வதும் தான் இன்றைய கால கட்டத்தில் நம்மால் செய்ய முடிந்த வழியாகும்.
இத்தகைய சிந்தனைகள் மற்றும் கருத்துக்களிலிருந்து நம்மையும் நம்முடைய
சந்த்திகளை பாதுகாத்துக் கொள்ள நாம் மிக விழிப்போடு செயல்பட வேண்டும்
எந்த வகையிலும்
மார்க்கத்திற்கு முரண்படாமல் வாழ இப்புனித மிகு ரமலானில் நாம் உறுதி ஏற்போம்.
அல்லாஹ் தவ்பீக
செய்தருள்வானாக!
No comments:
Post a Comment