வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, April 20, 2023

அமல்கள் மணம் வீசட்டும்.

 

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ

புனித மிக்க ரமலான் இதோ இன்னும் ஓரிரு நாட்களில் விடை பெற இருக்கிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் இந்த ரமலானை கபூல் செய்தருள்வானாக!

ரமலானில் வாழ்ந்தும் அதன் அருளை பெற்றுக் கொள்ளாதவர்கள் துரதிஷ்டவாளிகள் ஆவார்கள்.

கஃபாவிற்கு சென்றும் பாவங்கள் மன்னிக்கப்படாதவர்கள்.

பெற்றோர்கள் இருந்தும் சொர்க்கத்தை சொந்தமாக்கி கொள்ளாதவர்கள்.

பெருமானாருடைய பெயரை கேட்டும் சலவாத்து சொல்லாதவர்கள் துர்ப்பாக்கியசாலிகள் அல்லாஹ்வின் அருளிலிருந்து தூரமாக்கப்ப்ட்டர்கள்.

அல்லாஹ் நம்மையும் நமது சந்ததிகளையும் நம்மைச் சார்ந்தவர்களையும் உலக முஸ்லிம்கள் அனைவரையும் இந்த அவலத்தை விட்டும் பாதுகாத்தருள்வானாக!

அருமையானவர்களே துஆக்கள் அங்கீகரிக்கப்படும் ஒரு அற்புதமான வாய்ப்பு ரமலானில் தினந்தோறும் நமக்கு கிடைத்தது

قال رسول الله صلى الله عليه وسلَم: (ثلاثةٌ لا تُردُّ دعوتُهم الصَّائمُ حتَّى يُفطِرَ والإمامُ العادلُ ودعوةُ المظلومِ

அவ்வறு நோன்பு திறக்கும் போது கேட்ட பிரார்த்தனை பற்றி கொஞ்சம் சிந்திக்கிறோம்.

அல்லாஹும்ம லக சும்து வபிக ஆமன் து வ லைக்க தவக்கல்து வ அலா ரிஜ்கிக அப்தர்து பதகப்ல் மின்னீ!

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலி அறிவிக்கிற ஹதீஸ் ஜாதுல் ம் ஆதில் இடம் பெற்றுள்ளது.

 كانَ إذا أفطرَ قالَ : اللَّهمَّ لَكَ صُمتُ وعلَى رزقِكَ أفطَرتُ ، فتَقبَّلْ منِّي ، إنَّكَ أنتَ السَّميعُ العليمُ

الراويعبدالله بن عباس

 

இதில் இடம் பெற்றுள்ள கடைசி வார்த்தை குறித்து நாம் அதிகம் சிந்திக்க வேண்டும்.

நாம் செய்த அமல்கள் நிறைவேறி விடலாம் . அவை அல்லாஹ்வின் அங்கீகாரத்தை பெறும் போதுதான் அது மரியாதை உடையதாகும்.

ஒரு விருந்துக்கு போகிறோம். அங்கே நமக்கு சாப்பாடு கிடைத்து விட்டால் நோக்கம் நிறைவேறி விடும். அதே நேரத்தில் வீட்டுக்காரர் நமது வருகையை அங்கீகரித்டுஹ் கையைப் பிடித்து அழைத்து சென்று அமர வைத்தார் எனில் அது தானே உரிய மரியாதை . அத்தைகைய மரியாதையை நமது அமல்கள் பெற வேண்டும்.

இந்த ரமலானில் நாம் நிறைவேற்றிய அமல்கள் அனைத்துக்கும் அந்த மரியாதை கிடைக்க வேண்டும்.

இனி வாழ்வுல் நாம் செய்ய நினைக்கிற ஒவ்வொரு காரியத்த்திலும் இந்த மரியாதையை – தான் அதாவது கபூலிய்யத்த நாம் எதிர்பார்க்க வேண்டும்.

அல்லாஹ் அதற்கான சிந்த்னையையும் தவ்பீக்கையும் தருவானாக!

இது சாதாரண சிந்த்னை அல்ல. மார்க்கத்தின் மிக முக்கிய மான சிந்த்னையாகும்.

அல்லாஹ் கபூல் செய்கிற போதுதான் அதற்கான நன்மை மறுமையில் கிடைக்கும்.

இல்லை எனில் கடமையை நிறைவேற்ற வில்லை என்ற பழியிலிருந்தும் தண்டனையிலிருந்தும் தப்பிப்போம், அவ்வளவு தான்.

 

நாம் சரியாக நோன்பு வைத்து விட்டோம். தராவீஹ் தொழுவிட்டோம். ஜகாத் கொடுத்து விட்டோம் எனில் அது சிஹ்ஹத் ஆகிவிடும். அதாவது நிறைவேறி விடும்.

 

அது சரியாக இருக்கிறது என்பதனாலே அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது இல்லை./

 

நோன்பு திற்க்க ஒரு முழாம்பழம் வாங்குவதற்காக பழக்கடைக்கு செல்கிறோம். கடைக்காரர் நல்ல ஆப்பிள் வந்திருக்கிறது வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்கிறார். நாம் எட்டிப்பார்க்கிறோம். ஆப்பிள் நன்றாகவே இருக்கிறது. எனினும் அது எனக்கு தேவையில்லை என்று சொல்லி விட்டு திரும்பி விடுகிறோம் அல்லவா

 

அது போலவே நமது அமல்கள் நன்றாக இருந்தாலும் கூட அல்லாஹ் அதை வாங்கிக் கொள்ள வில்லையானால் அதற்கு என்ன மரியாதை இருக்கப்போகிறது ?

 

அதனால் தான்

·         நபி இபுறாகீம் அலை அவர்ர்கள் கஃபாவை கட்டி முடித்த பிறகு கூறினார்.

وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ (127

·         அல்லாஹ்வுக்காக தனது வயிற்றிலிருக்கும் குழந்தையை அர்ப்பணித்த போது இம்ரானின் மனைவி கவலைப் பட்டு கூறினார்.

 

.. رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ}[

 

·         முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குர் பான் கொடுத்த போது என்ன சொன்னார்கள் என்பதை ஆயிஷா ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

 

وَقَالَ بِسْمِ اللَّهِ اللَّهُمَّ تَقَبَّلْ مِنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏وَآلِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏وَمِنْ أُمَّةِ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏ثُمَّ ضَحَّى بِهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

·         காலையில் எழுந்த்தும் பெருமானார் கேட்கும் துஆ

 

كانَ يقولُ إذا صلَّى الصُّبحَ حينَ يسلِّمُ اللَّهمَّ إنِّي أسألُكَ عِلمًا نافعًا ورزقًا طيِّبًا وعملًا متقبَّلًا

 

அல்லாஹ் நமது ஒரு அமலையேனும் ஒப்புக் கொண்டு விட்டால் நமது புகழை நிலைக்கச் செய்துவிடுவான்,

 

இபுறாகீம் அலை அவர்கள் மகனை அறுக்க துணிந்த்தை அல்லாஹ் கபூல் செய்தான், அதன் பயன் என்ன என்று குர் ஆன் கூறுகிறது

 وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ (108سَلَامٌ عَلَىٰ إِبْرَاهِيمَ (109)

பிந்தைய சமூகங்களில் அவரது புகழை நிலைக்கச் செய்தான். இன்று அவர் அனைத்து மத்த்தவர்களாலும் புகழப்படுகிறார்.

புகழை நிலைக்க செய்வான் என்ற வார்த்தைக்குள் பல நற்செய்திகள்  புதைந்திருக்கின்றன.

நமது செயல் காலகாலத்திற்கும் நிலைத்திருக்கும்

இமாம் ஷாபி இமாம் மாலிக் இமாம் அபூஹனீபா இமாம் அஹ்ம்து ஆகிய நான்கு மத்ஹபுகள் மட்டுமே நிலை பெற்றன் என்றால் அதன் காரணம் என்ன தெரியுமா அல்லாஹ் இவற்றை கபூல் செய்தான் என்பதாகும்

இந்த இமாம்களுக்கு இருக்கிற சிறப்பை எண்ணிப்பாருங்கள். கோடானு கோடி மக்கள் இவர்களின் வழியில் இஸ்லாமை பின்பற்றுகிறார்கள்.

அதே போல ஸிஹாஹ் சித்தா எனப்படும் ஆறு ஹதீஸ் தொக்குப்புகளான ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்றும் புகழ் பெற்று திகழ்கின்றன என்றால் என்ன பொருள் அல்லாஹ் இவற்றை அங்கீகரித்துக் கொண்டான் என்று பொருள்  

மக்கள் இப்போதும் ஹதீஸ்கலை தெரிந்து கொள்வது இமாம் புகாரீ,. முஸ்லிம். திர்மிதி, நஸ்யி, அபூதாவூத் இப்னுமாஜா ஆகியோரை முதன்மையாக நாடுகிறார்கள் .

நமது தமிழகத்தில் வேலூரில் இருக்கிற அல்பாக்கியாத்துஸ்ஸாலிஹாத் அரபுக்கல்லூரி தென்னிந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஆலிம்களையும் பல நூறு மதராஸாக்களையும் உருவாக்கியிருக்கிறது என்றால் என்ன பொருள் அதை அல்லாஹ் அங்கீகரித்த் விட்டான் என்று பொருள்

அதன் நிறுவனர் அண்ணல அஃலா ஹழ்ரத் அவர்களது பணியை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு அப்பாலும் அவரது மாணவர்கள் உலகம் முழுமைக்கும் கொண்டு செல்கிறார்கள்.

அல்லாஹ் நமது அமல்கலை கபூல் செய்யாவிட்டால் அமல்கள் இடையில் நின்று போகும் அச்சம் இருக்கிறது.

அது மிக மோசமான ஒரு சூழ்நிலையாகும்.

இஸ்லாமிய வரலாற்றில் ஒரு அச்சமூட்டும் நிகழ்வு உண்டு.

அப்துல்லாஹ் அன் துலூஸீ என்ற பெரியவர் ஒரு இல்டசத்திற்கும் மேற்பட்ட ஹதீஸ்களை மன்னம் செய்தவர், குர்ஆனை மன்னம் செய்தவர், . ஆயிரக்கணக்கான மாணவர்களின் ஆசிரியர், அவரது அறிவைப் பற்றி அவருக்கு ஒரு பெருமை இருந்தது.

ஒரு நாள் மாணவர்கள் புடை சூழ அவர் ஒரு ஊருக்கு சென்று கொண்டிருந்தார். ஒரு கிருத்துவ கிராமத்தை கடக்கும் போது அவருடைய மனதில் “ என்ன் முட்டாள் பசங்க! அல்லாஹ்வுக்கு இணையாக ஒருவரை வச்சிக்கிட்டாங்களே. நமக்கு அறிவிருந்த்தால் நாம் தப்பித்தோம் என்று நினைத்தார்.

அல்லாஹ் நமக்கு ஹிதாயத்தை கொடுத்தான் என்று சிந்திக்கவில்லை.

சற்று தூரத்தில் அவர்கள் ஒழு செய்வதற்காக ஒரு கிணற்றடிக்கு சென்ற போது அங்கிருந்த ஒரு பெண்ணின் மீது அவருடைய பார்வை பட்டது மாணவர்களிடம் நீங்கள் செல்லுங்கள் என்று கூறிய அவர் அந்த பெண்ணின் வீட்டை தேடி அடைந்தார். அவளை திருமனம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார் . அவர்கள் சொன்னார்கள் நீங்கள் அன்னியராக் இருக்கிறீர்கள் ,எங்களுடன் சில காலம் நீங்கள் இருந்தால் உங்களை நாங்கள் தெரிந்து கொள்வோம் என்றனர். ஆனால் எங்களுடன் தங்கியிருப்பதானால் நாங்கள் கிருத்துவர்கள் எங்களது பன்றிகளை சில காலம் மேய்ப்க்க வேண்டும் என்று கூறினர். அதை ஏற்றுக் கொண்ட அவர் அவர்களோடு தங்கினார். அவர்களுடைய பன்றிகளை மேய்க ஆரம்பித்தார். பல மாதங்கள் கடந்தும் தங்களடு ஆசிரிர் வந்து சேர வில்லையே என்ற கவலையில் அவரது மாணவர் ஷிப்லீ (ரஹ்) அவரை தேடி அந்த கிராமத்திற்கு வந்து விசாரித்தார். அதொ அந்த மலையில் பன்றிகளை மேய்த்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. அவரை நேரில் ச்ந்தித்த போது ஷிப்லீ அதிர்ச்சியடைந்தார்,. பல்லாயிரம் மாணவர்களின் வழி காட்டி மிக பரிதாபமான கோலத்தில் இருந்தார்.

ஆசிரியருக்கு குர் ஆன் மறந்து போயிருந்த்து. ஒரே ஒரு வசனம் மட்டும் நினைவில் இருந்தது.

وَمَن يُهِنِ اللَّهُ فَمَا لَهُ مِن مُّكْرِمٍ ۚ

ஒரே ஒரு ஹதீஸ் அவருக்கு நினைவிருந்த்து  

 

من بدل دينه فاقتلوه

 

ஆசிரியரின் நிலை கண்டு ஷிப்லீ ரஹ் அழுதார். அப்துல்லாஹ் அந்துலூஸியும் அழுதார். அழுகைக்கு இடையே அவர் இப்படி கூறினார். யா அல்லாஹ் என்னை இந்த நிலைக்கு ஆளாக்குவாய் என்று நினைக்க வில்லை என்று கூறி அழுதார்.

அல்லாஹ் அவருக்கு மீண்டும் ஹிதாயத்தை வழங்கினான். அவர் மீண்டு வந்தார்.

நாம் செய்கிற அமல்களை அல்லாஹ் அங்கீகரிக்கமல் போகிற போது இத்தகைய ஆபத்து எங்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது.

அல்லாஹ் பாதுகாப்பானாக!

 அதனால் தான் அமல்கள் செய்யும் போது அது நிலைக்க அல்லாஹ் அல்லாஹ் அதை கபூல் செய்ய வேண்டும்.

மன நிம்மதி

அமல்கள் கபூலாகிற போது மன நிம்மதி கிடைக்கும்

ஹிஜ்ரீ 12 ம் நூற்றாண்டில் மொரோக்கோவில் வாழ்ந்த அஹ்மது பின் அஜீபா என்கிற சுன்னத் ஜமாத்தை சேர்ந்த மிகப்பெரிய சூபி அறிஞர் கூறூகிறார்

مَنْ وَجَدَ ثَمَرَةَ عَمَلِهِ عاجِلاً فَهُوَ دَليلٌ عَلى وُجودِ القَبولِ آجلاً

 

தனது அமல்களின் இன்பத்தை இப்போதே ஒரு மனிதர் அடை ந்து கொண்டால் அது நிச்சயம் கபூல் ஆகிவிட்ட்து என்று பொருளாகும்.

فمن علائم قبول الصلوه  ان يشعر المصلي فيها بلذه الاقبال علي االله

தொழுது கொண்டிருக்கும் போது நான் அல்லாஹ்வின் முன்னிலையில் இருக்கிறேன் என்ற சிந்தனை வருவது தொழுகை அங்கீகர்க்கப்படுவதின் அடையாளமாகும்.

فمن علائم قبول االله لمناسك الحج ان تقطعه عن مشاغل الدنيا وهمومها

ஹஜ்ஜுக்குப் பின் உலகைப்பற்றிய கவலை குறைந்து விடுவது ஹஜ் அங்கிகரிக்கப்படுவதன் அடையாளமாகும்.

فمن علائم قبول الله لتلاوه القرآن  ان يشعر انه واصل بين يدي الله

குர் ஆன் ஓதிக் கொண்டிருக்கும் போது அல்லாஹ்வோடு தொடர்பில் இருப்பதாக உணர்வது அது அங்கீகரிக்கப்படுவதின் அடையாளமாகும்.

فمن علائم قبول الله لذكر الذاكرين ان تبعث اليقظة بمراقبة الله بقلوبهم

திக்ரு செய்யும் போது அல்லாஹ்வின் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறான் என்று உணர்வது அது அங்கீகரிக்கப்படுவதன் அடையாலமாகும்

அமல்களை இவ்வாறு அது அங்கீகரிக்கப்படுவதன் நிம்மதியை உணர்ந்து நிறைவேற்றுமாறு அறிஞர்கள் கூறுவார்கள்.

சில விச்யங்கள் நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இது வெல்லாம் சாத்தியமா என்று தோன்றலாம்.

ஆனால் அல்லாஹ் கருணை மிக்கவன்,

அல்லாஹ் அங்கீகரிக்க வேண்டுமே என்ற ஒரு சிந்தன்னயும் அல்லாஹ்வுக்காகவே செய்கிறேன் என்ற உளத்தூய்மையும் இருந்தால் இந்த மன நிம்மதி நமக்கு கிடைத்து விடும்.

அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

பெருநாள் பிறை – பித்ரு சதகா – ஆறூ நொன்பு ஆகியவற்றை பற்றிய்ம் இதில் இயக்க வாதிகளின் குழப்பத்தை பற்றீயும் ஆலிம்கள் சு ருக்கமாக எடுத்துக் கூறுவேண்டும். அதற்கு முந்தைய பதிவுகளை பார்வையிடலாம்.

No comments:

Post a Comment