வெள்ளிமேடை- வெள்ளி மேடை - vellimedai-velli medai- juma bayan- khuthuba --juma kuthuba -خطبة الجمعة கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி

Thursday, June 15, 2023

பொது சிவில் சட்டம் இந்தியாவின் நலனுக்கு எதிரானது.

 நமது நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில்

·         விலை வாசி மிக கடுமையாக உயர்ந்துள்ளது.

·         400 ரூபாயாக இருந்த  கேஸ் சிலிண்டர் விலை 1200 ரூபாய்கிவிட்டது. 60 ரூபாயிக்கு விற்ற பாமாயில் 250 ரூபாயாகிவிட்டது.

·         டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அதளபாதளத்தில் விழுந்து விட்டது. 

·         நமது நாட்டின் பெரும் செல்வங்களாக இருந்த ஏர் இந்தியா போன்ற நிறுவன்ங்களையும் கொச்சி போன்ற விமான நிலையங்களை தனியாருக்கு மத்திய அரசு விற்று விட்டது.  

·         எல்லைப்பகுதியில் சீனா பல நூறு மைலக்ளை தனது கட்டுப்பாட்டில் எடுத்த்துக் கொண்டிருக்கிரது.

இவை அனைத்திலும் செயலற்றுப் போன பாஜக அரசை பல மாநிலங்களிலும் மக்கள் தூக்கி எறிந்துவருகின்றன.

இவற்றிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப வழக்கப் போல மத்திய பாஜக அரசு தனது கைத்தடிகள் மூலம் மக்களிடையே மத ரீதியான பதற்றத்தை உருவாக்கி விட முயல்கிறது.

அதன ஒரு அங்கமாகவே தற்போது இந்திய சட்ட வாரியம் பொது சிவில் சட்டம் பற்றிய கருத்து கேட்பு முயற்சியில் இறங்கியிருக்கிறது. பொது சிவில் சட்டம் பற்றி கருத்து தெரிவிக்குமாறு பொது மக்களையும் மத அமைப்புக்களை இந்தி சட்ட வாரியம் கேண்டுக் கொள்ளது. சில வருடங்களுக்கு முன்னாலும் இது விவகாரத்தில் 16 கேள்விகள் அடங்கிய ஒரு ஆய்வை சட்ட வாரியம் மேற்கொண்ட்து. அதற்கான விடைகளோ பதிலோ இதுவரை வரவில்லை. இப்போது மீண்டு ஒரு ஆய்வில் தேவையற்று சட்ட வாரியம் இறங்கியுள்ளது.

ஒரு மரியாதையான அமைப்பு

திட்டமிட்டு நாட்டு மக்களை ஏமாற்றும் ஒரு கீழ்த்தரமான தந்திரவேலையில் இறங்கியுள்ளது.

இந்த தந்திரத்தை புரிந்து கொண்டு நம்மில் ஒவ்வொரு வரும் இதற்கு பதிலளிக்க முயற்சிக்க வேண்டும்.

அந்த பதிலில் பொது சிவில் சட்டம் அரசியல் சாசணத்திற்கு எதிரானது. என்றோ  பொது சிவில் சட்டம் இந்திய மக்களின் பெருமைக்கு எதிரானது என்றோ பொது சிவில் சட்டம் இந்தியாவின் இறையான்மையை பாதித்து விடும் என்றொ தெளிவான கருத்துக்களை முன் வைக்க வேண்டும்.

பொது சிவில் சட்டம் இந்தியாவிற்கு பொருந்தாது ஏன்? .

இங்கு பல மதங்களையும் சித்தாந்த்தங்களையும் பின்பற்றுபவர்கள் அவர்களது மத  நம்பிக்கைகளையும் வாழ்வில் நடைமுறைகளையும் சிதந்திரமாக பின் பற்றி வாழ்கிறார்க/. இதுவே இந்தியாவின் மாபெரும் சிற்பம்சமாக இன்று வரை திகழ்ந்து வருகிறது.

இதற்கு இந்திய ஆரசியல் சாசனம் பரிபூரண உரிமையை வழங்கியுள்ளது.

 

சாமாணிய மக்கள் நிர்வாணமாக செல்ல சட்டம் அனுமதிக்காது. அதே வேளையில் இந்து மதததில் நிர்வாணம் என்பது ஒரு துறவு நிலை என்பதால் துறவிகள் நிர்வாணமாக இருப்பதை சட்டம் அனுமதிக்கிறது. காசியில் நடை பெறுகிற கும்ப மேளாவின் போது சாமியார்கள் கூட்டம் கூட்டமாக நிர்வாணமாக இருப்பதையும் அந்த சாமியார்களிடம் பெண்கள் ஆசி வாங்கச் செல்வதை ஒரு கலாச்சாரமாக இந்திய ஊடகங்கள் காட்டுவதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

 ஜைன மதத்திலும் கிருத்துவ மதத்திலும் பெண்கள் திருமண உறவிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட அடையாளத்தோடு இருக்க வைக்கப்படுவதை சமய உரிமை என்ற வகையில் இந்திய அரசியல் ஏற்கிறது.

 இது போலவே இந்திய  அரசியலமைப்பு, சிவில் உரிமைகளில் - அதாவது திருமணம். விவாகரத்து வாரிசுரிமை போன்றவற்றில் - இஸ்லாமிய ஷரீஅத்தை பின்பற்ற முஸ்லிம்களுக்கு முழு உரிமை அளித்துள்ளது. அதே போல இந்த நாட்டில் வாழ்கிற ஒவ்வொரு மதத்தவரும் இவ்விவகாரங்களில் அவரது மத விதிகளின் படி வாழ்ந்து கொள்ள பூரண அனுமதி பெற்றவர் ஆவார். இது பெர்சனல் லா என்று அழைக்கப்படுகிறது. முஸ்லிம் பெர்சனல் லா. கிருஸ்டியன் பர்சனல் லா என பல மத்த்தவருக்கும் பர்சனல் லா இருக்கிறது.

 இந்த பர்சனல் லா என்பது இந்திய சுதந்திரத்திற்கு முன்பிருந்தே நடைமுறையில் உள்ளாதாகு.

 இந்தியாவை முஸ்லிம்கள் ஆட்சி செய்த போது இங்கும் அப்படியே மக்களது சிவில் விசயங்கள் அவர்களது சொந்த மதக் கோட்பாடுகளின் படியே தீர்க்கப்பட்டன.

 ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இங்கிலாந்தின் கிரிமினல் சட்டம் இங்கு நடை முறைப்பட்டுத்தப்பட்ட போது 1937 ல்  முஸ்லிம்  தனியார்  சட்டம்  ( MUSLIM PERSONAL LAW – Shariath Application Act – 1937 ) அமலுக்கு வந்தது. 

  அதனைத் தொடர்ந்து  1939-ல் முஸ்லிம் திருமணச் சட்டம் ( MUSLIM MARRIAGES ACT –1939  ஷரீஅத்  சட்டத்தின்  அடிப்படையில்  இயற்றப்பட்டு  நடைமுறைக்கு  வந்தது.

 இன்று வரை அது நடப்பில் இருக்கிறது.

 எனவே தனியார் சட்டம் என்பது இந்தியாவுக்குப் புதிதல்ல..பன்னூறு ஆண்டுகளாக இங்கே நடை முறையில் இருந்த வழக்கமாகும்.

 இத்தனை நூற்றாண்டுகளாக இதன் காரண்மாக நமது நாட்டின் பாதுகாப்புக்கோ பொது அமைதிக்கோ எந்த அச்சுறுத்தலும் ஏற்பட்ட்த்தில்லை

 இந்த தனியார் சட்ட அமைப்பானது இப்போது வரை இந்திய முஸ்லிம்களுக்கு பல வகையிலும் நிம்மதியளிக்கிற -  பிரச்சனைகளுக்கான  சரியான  தீர்வை விரைவாக அளிக்கிற நடைமுறையாக இருந்து வருகிறது.

 ஒவ்வொரு சமூகத்தவரும் அவரவர்களது மத வழி மூறைப்படி தனிப்பட்ட விவகாரங்களை அனுமதிப்பது தான் நாகரீகமான சட்ட அமைப்பாகும்.

 இவ்வாறு ஒவ்வொரு தனி நபரும் அவரது தனிப்பட்ட வாழ்வில் தங்களது சமயத்தின் சிவில் சட்டங்களின் படி வாழ் அனுமதிப்பதுதான் நாகரீக அரசியலின் அடையாளமாகும்.

 இஸ்லாமிய அரசு நடை பெறுகிற நாடுகளில் சிறுபான்மை இனத்தவர்களின் சிவில் உரிமைகளிலும் நம்பிக்கைகளிலும் குறுக்கீடுகள் செய்யப் படாது, செய்யப்படக் கூடாது என்பது இஸ்லாமின் வழிகாட்டுதலாகும்.

 முஹம்மது நபி (ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மஜூஸிகல் வாழ்ந்தார்கள், அவர்கள் நெருப்பை வணங்கினர். அதே போல சொந்த சகோதரிகளை திருமணம் செய்யும் நடைமுறையும் அவர்களிடம் இருந்தது. நபி (ஸல்) அவர்கள் அதை தடுக்க வில்லை. (மஆரிபு)

 பொது சிவில் சட்டம் ஏன் கூடாது.

 பொது சிவில் சட்டம் என்பது இந்திய மக்களின் ஒட்டு மொத்த உணர்வுகளுக்கும் சமாதி கட்டி விட்டு அந்த சமாதியின் மேல் எழுப்பப் பட முடியுமே தவிர மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒரு போதும் உருவாக்கப்பட முடியாது.

 ·         அக்கா மகளை திருமணம் செய்வது முறை என்கிறது தமிழ இந்துக்களின் வழக்கு அது கூடவே கூடாது என்கிறது இஸ்லாம்.

 ·         சித்தப்பா மகளை திருமணம் செய்யலாம் என்கிறது இஸ்லாம். அது கூடவே கூடாது என்கிறது தமிழக கலாச்சாரம்.

 ·         குடும்பத்தின் மூத்த ஆண் மகன் தான் சொத்துக்கு முழு வாரிசு என்கிறது சில இந்துச் சமூகங்கள்.

 ·         அனைத்து மகன்களுக்கு வாரிசுரிமை சமமானது என்கிறது இஸ்லாம்.

 ·         கேரளத்தில் சில சமூகங்கள் மருமகனுக்குத் தான் வாரிசுரிமை சேரும் என்று சொல்கின்றன.

 இராஜஸ்தானிலும் நாட்டின் மற்ற பல பகுதிகளிலும் புதிரான வழக்கங்களும் பழக்கங்களும் ஏராளமாக இருக்கின்றன.

 இவற்றை ஒன்றாக ஆக்குவது என்பது தேவையற்றது என்பது மட்டுமல்ல. நாட்டின் பல்லின சமூக சூழலுக்கு கேடு விளைவிப்பதுமாகும். மக்களை இயந்திரங்களாக கருதுவதுமாகும்.

 பொது சிவில் சட்டம் என்ற கோசம் இந்தியாவில் ஏற்பட்ட்தே ஒரு ஏமாற்றும் உத்தியாகும்.

 இந்துச் சமூகத்தில் ஜாதிய ஏற்றத்தாழ்வுகள் மிக கடுமையாக இருக்கின்றன. தலித்தகள் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னும் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவதில்லை,. தலித்துகள் இறந்து போனால் அவர்களை பொதுவான சுடுகாடுகளில் தகனம் செய்ய  அனுமதிக்கப்ப்பதில்லை. அதுமாத்திரமல்ல வேறும் ஏராளமான சமூக ஏற்ற தாழ்வுகள் இந்து சமயத்தில் இருந்தன.

 இவற்றை சரி செய்ய  1950 ல் அன்றைய சட்ட அமைச்சர் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில்  முன்மொழிந்தார் ..

 ஒரு  தார  மணம்ஜீவனாம்சம்பெண்ணுக்கும் சொத்துரிமைவாரிசுச் சட்ட திருத்தம் போன்ற சில திருத்தங்களை உள்ளடக்கிய இந்துச் சட்ட மசோதாவை  இந்துத்து சக்திகள் தீவிரமாக எதிர்த்தனர்.

 காங்கிரசுக்குள்ளிருந்து இந்து மகாசபையினரும் இந்துத்துவ வாதிகளும் சர்தார் பட்டேலின் தலைமையில் இம்மசோதாவை மூர்க்கமாக எதிர்த்தனர்இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் ராஜிநாமா செய்து விடுவதாக மிரட்டினார் இராசேந்திரப் பிரசாத்.

 இந்த சீர்திருத்த மசோதாவை எதிர்த்த இந்த பிற்போக்குவாதிகள் இதிலிருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக அப்போது எல்லோருக்கும்  பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்ற கோசத்தை எழுப்பினர்.

 இந்து சமூகத்தில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்களை செய்ய மறுத்து ஒரு திசை திருப்பும் உத்தியாக கொண்டு வரப்பட்ட சிந்தனைதான் பொது சிவில் சட்டம் என்ற தவறான கோஷமாகும்.

 பல மத நம்பிக்கை கொண்Dஅ மக்களையும் பல கலாச்சர பாரம்பரியத்தை கொண்டவர்களை ஒரே நடைமுறைக்குள் கட்டிப்போட முயற்சிப்பது சரியானது அல்ல. என்பது மட்டுமல்ல உண்மையில் பொது சிவில் சட்டம் என்பது சாத்திமானதே அல்ல என்பதை முஸ்லிம் தலைவர்கள் 30 வருடங்களுக்கு முன்னரே தெளிவு படுத்தி விட்டனர்.

 முஸ்லிம் தலைவர்கள் மட்டுமல்ல  இந்துத்துவா  தலைவர்களின்  ஒருவரான   கோல்வால்கர் 1972 ஆகஸ்ட் 20 ல்  தீனதயாள்  உபாத்யாயா  ஆராய்ச்சிக் கழகத்தைத்  துவக்கி வைத்துப்  பேசியபோது இதையே வலியுறுத்தினார் , ’பாரதத்தில்  தேசிய  ஒற்றுமையை  உருவாக்கப்  பொது சிவில்  சட்டம்தான்  கருவியாகும்  என்று  சொல்வது  தவறு;  இயற்கைக்கு விரோதமானது; விபரீத  விளைவுகள்  உண்டாக்கக்  கூடியது.’  என்று  அறிவுறுத்தி இருந்தார்(MOTHER LAND பத்திரிக்கை - 21/08/1972 )

 பொது சிவில் சட்டம் என்று பேசுபவர்களிடம் அனைத்து ஜாதியினரும் கோயிலுக்குள் நுழையலாம் என்று என்று சட்டம் கொண்டு வாருங்கள் என்றால் ஓடிப்போய்விடுவார்கள்.

 எனவே இந்திய சட்ட கமிஷனின் இந்த  முய்ற்சி நாட்டு மக்களை இன்ரைய எதார்த்த்தை சிந்திக்க விடாமல் திசை திருப்புகிற ஒரு வஞ்சக முயற்சியாகும்.

 ஆயினும் முஸ்லிம்கள் அரசாங்கத்தின் தீய திட்டத்தை தடுக்கும் ஒரு முயற்சியாக வாய்ப்பும் வசதியும் உள்ள ஒவ்வொருவரும் சட்ட கமிஷனிடம் பொது சிவில் சட்ட்த்திற்கு எதிராக கருத்து பதிவு செய்ய வேண்டும்.  

 முஸ்லிம் சமுதாயம் இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.

 அல்லாஹ் நமக்களித்த மாபெரும் நிஃமத் இது ஷரீஅத்.

 الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ﴾ [المائدة: 3

 ஷரீஅத்தின் சட்டங்கள் பரிபூரணமானவை,   இந்த உலகின் செயற்கையான எந்தச் சட்ட விதியும் இதற்கருகே கூட நிற்கும் தகுதியற்றது

 முஸ்லிம்களாகிய நாம் நமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும்  இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தை கடை பிடிக்க கடைமைப் பட்டிருக்கிறோம்

 وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَنْ يَكُونَ لَهُمْ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُبِينًا(36) الأحزاب

  அவ்வாறு கடைபிடிக்கிற போது தான் முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் தகுதி நமக்கு இருக்கிறதுஎன்பதையும் மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

 இஸ்லாமிய ஷரீஅத்திற்கு எதிராக இத்தகைய சூழ்ச்சிகள் செய்யப்படுகிற காலகட்ட்த்தில் அதை எதிர்த்து நாம் செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் ஷரீஅத்தின் மீதான நமது உறுதிப்பாட்டை வெளிப்படுத்து வதும் முக்கியமானது.

 ورد في الحديث "والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به"

 وورد في الحديث  كل أمتي يدخلون الجنة إلا من أبى، قيل: يا رسول الله ومن يأبى؟ قال: من أطاعني دخل الجنة، ومن عصاني فقد أبى))

 அல்லாஹ் தவ்பீக் செய்வானாக!

 

3 comments:

  1. Anonymous9:17 PM

    மாஷா அல்லாஹ் ஒவ்வொருவரும் குறிப்பாக ஆலிம்கள் அனைவரும் அவசியம் அறிந்து அனைத்து சமுதாய மக்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் சரியான தருணத்தில் சரியான தகவல்கள்

    ReplyDelete
  3. Anonymous8:23 AM

    வேண்டாம்

    ReplyDelete